Wednesday, January 09, 2013

"விஸ்வரூபம்" - வடபோச்சே!!!


நாங்க "விஸ்வரூபம்"  டி.வில பாக்க‌ புக் பண்ணிட்டோம்ல!! ஹா ஹாஹா.....



என்னது??? டிவி லயே ரிலீஸா!! அப்டீனா படம் புஸ்ஸ்ஸாகிட்டா தியேட்டர்காரங்களுக்குப் பணம் திருப்பித்தர வேணாமா?!!


டிடிஎச்-ல ரிலீஸ்னு புக் பண்ணவங்களுக்குக் கூடப் பணம் திருப்பித் தரத் தேவையில்ல ரஜினி..!!!


என்னாது???? "விஸ்வரூபம்" டிடிஎச் ரிலீஸ் ப்ளானை மாத்திட்டாகளா?!!!! ஐயோ ஐயோ வடபோச்சே... ராஸ்கோலு.. ராஸ்கோலு!!!

ஹஹ.....கண்ணா..... நான் எஸ்கேப்பு பா!! புக் பண்ணப்போறேன் பண்ணப்போறேன்னு சொல்லிட்டேதான் இருந்தேன் ஆனா... நான்.... பண்ணல்ல!!!!

நான் அப்பவே சொன்னேன்...........!!!


குழப்பங்கள் கூடிக் கும்மியடித்ததுபோல வந்திருக்கின்றது கமலின் விளக்கம்.....

தியேட்டரில்தான் படம் முதலில் ரிலீஸாகிறதாம்..... இருந்தாலும் கமல் மனம்தளராமல் கூறுகிறார் டிடிஎச் சிலும் ரிலீஸாகும் என்று! எது எப்படியோ இவை அனைத்தையும் ஜனங்களிடம் பணம் வசூலிக்கும் முன்பே முடிவுக்குக் கொண்டுவந்திருக்க வேண்டும்.... தற்சமயம் பணத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளும் வசதியும் டிடிஎச் நேயர்களுக்கு இல்லை.....!

தியேட்டர்களுக்கு  முன்பாக டிடிஎச்-சில் ரிலீஸ் என்றுசொல்லி விற்ற விலையில் படம் வந்து நான்கு நாட்களுக்குப் பிறகு படத்தை ஆறிய சோறாகப் பரிமாறுவது நியாயமாகாது....!

அன்புடன்,
பிரபு எம்