Friday, March 25, 2011

இந்தியா V ஆஸ்திரேலியா : இத‌ற்குப் பெய‌ர் வெற்றி!!!

" Unless you feel the pressure, there is no pressure!!"

- டாஸில் தோற்று "சேஸிங்"என்று தெரிந்த‌பின் தோணி நேற்று உதிர்த்த‌ வார்த்தைகள் இவை!! சாதாரணமாகச் சொன்னாலும் இது Typical Dhoni!! நெஞ்சம் நிறைந்திருந்தது நேற்றைய ஆட்டம் நிறைவடைந்தபோது!

இடமின்றி நிரம்பியிருந்த பிரம்மாண்ட அரங்கு மகிழ்ச்சி அலையோங்கி மேலும் பொங்கி வழிந்தது! வட்டப் புல்வெளிக் களத்தில் வீரனின் ஒவ்வொரு அசைவிற்கும் ஒட்டுமொத்த தேசமே கோரஸ் பாடும் ஹார்மணியே இந்திய கிரிக்கெட்டிற்குத் தவமின்றி கிடைக்கும் பெருவரம்! எண்ணிப்பார்க்கும் விரல்நுனிக்கு மகுடம்போல்  சின்னச் சின்ன வெற்றிகள் இதுவரைக்கும் கண்டிருந்தாலும் இருபத்தியிரண்டு கைகள் விசைகூட்டி வினைதீர்த்த இதுவே முதல் அசல் வெற்றி!



"A picture is worth a thousand words"னு சொல்லுவாங்களே அது இதானா?!!!

தேசமெங்கும் பாஸிடிவ் க்ளைமேட்... அரையிறுதியில் அணுகுண்டுசோதனை.... பாகிஸ்தானுடன் பரமபதம்...!! ஏணிகளை வசப்படுத்திப் பாம்புகளாய் பாக்.கைக் கொத்தி பலிபோட்டுவிட்டால் இறுதியில் "தாயம்" விழப்போவது கிட்டத்தட்ட நமக்குத்தான்! என்று நம்பிக்"கை" ரேகைகள் ஜோசியம் சொல்கிறது.... நேற்றைய மேட்சின் ஒரு Detailed ரவுண்ட் அப்!!

அஷ்வின் - The Name that made the difference!

"அஷ்வின்" தோணியின் "சர்ப்ரைஸ் வெப்பன்" என்று சென்ற போட்டியின் முடிவில் வெளியிட்டப் பதிவிற்குப் பின்னூட்டத்தில் நண்பர் எல்.கே குறிப்பிட்டிருந்தார்.... அதனை ஏற்றுக்கொண்டு வழிமொழிகிறேன்! :)
அஷ்வின் வீசிய முதல் ஓவர்தான் மழுங்கத் தேய்த்து பண்படுத்தப்பட்ட மோட்டேரா ஆடுகள மண்ணில் சுழலுக்கான வாய்ப்புகள் கண்டெடுக்கப்பட்டன.... அஷ்வினின் மனஉறுதியும், கம்மிட்மெண்டும், பேட்ஸ்மேனின் மைண்ட் ரீடிங்கும் அபாரம்... அற்புதம்!

அஷ்வின் வீசிய ஆட்டத்தின் 49வது ஓவரை நுணுக்கமாக உற்றுநோக்க வேண்டும்....

48வது ஓவருடன் முடிவடைந்த பேட்டிங் பவர்ப்ளேயில் விக்கெட் எதுவுமே இழக்காமல் (!) எடுத்த 44 ரன்களுக்கு மத்தியில் சதத்தையும் கடந்திருந்த பாண்டிங் அஷ்வினின் மூன்றாவது பந்தில்தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார்!

இதில் கவனிக்க வேண்டிய அம்சங்கள் உண்டு...

* இந்த ஓவரை அஷ்வின் வீச வரும்முன் தோணியிடம் சில ஃபீல்டிங் மாற்றங்களைக் கேட்டு வாங்கினார்!

* மீதமிருக்கும் இரண்டு ஓவர்களிலும் டார்கெட்டை மேக்ஸிமைஸ் செய்யக் காத்திருக்கும் பாண்டிங் அவுட் ஆனது "ரிவர்ஸ் ஹிட்" ஆடமுயன்று...! பேட்ஸ்மேனின் வாய்ப்புகளைத் துல்லியமான ஃபீல்டிங் வியூகம் முடக்கிப்போட்டிருக்கத் துணிந்து இறங்கிவந்தாலும் பாண்டிங்கிற்கு பவுண்டரிக்குப் பந்தை அனுப்பமுடியாத ஆற்றாமைதான் ரிவர்ஸ் ஹிட்டிற்கு அவர் முயன்றது... அஷ்வின் பந்துகளை வெளியிடும் வேகத்தை மாற்றி மாற்றி ரிக்கி பாண்டிங்கை நிதானமிழக்கச் செய்ததெல்லாம் கண்கொள்ளாக் காட்சிகள்....

* ஃபைன் பொஸிஷனில் ஷார்ட் 3rd man ஜாஹிரிடம் பந்து அகப்பட்டது... பாண்டிங் வெளியேற்றப்பட்டார்... நன்றாகக் கவனிக்க வேண்டும்.... வலதுகை பேட்ஸ்மேன் ரிக்கிக்கு ஆஃப் சைடில் ஷார்ட் 3rd மேன் ஜாஹிர் என்பதை... இதுதான் தோணியின் பிரத்யேக ஃபீல்டிங் ஸ்டைல்.... தனது பவுலிங்கிற்கு பேட்ஸ்மேனின் ரியாக்ஷன்களை வரையறுத்து ஃபீல்டிங் செட் செய்துகொள்ளும் பக்குவம் இளம்வீரர் அஷ்வினிற்கு வாய்த்திருப்பது மிகப் பெரிய விஷயம்!

You made the difference Ashwin!!

ஜாஹிர்கான் : Now he's the best!

அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்போர் பட்டியலில் 7 போட்டிகளில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இப்போதைய இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார் ஜாஹிர்... நேற்றைய போட்டியில் ஜாஹிரின் சாதுர்யங்களை விளக்கித் தனிப் பதிவே போடலாம் அவ்வளவு கச்சிதமான பவுலிங்.... 28 ஓவர்களுக்குப் பிறகு "ரிவர்ஸ் ஸ்விங்"கிற்கு ஆடுகளம் ஒத்துழைக்கும் என்னும் ஆரூடத்தை நம்பி 32 ஓவரை வீச வந்த ஜாஹிர் ஹஸ்ஸியின் விக்கெட்டை வீழ்த்தியது Absolute Cricketing Beauty! (34வது ஓவர்) முந்தைய பந்துகளில் ஸ்விங் மாற்றங்களை நிகழ்த்தியவர் சரியான அளவில் வீசிய 33.2வது பந்தின் வேகம் 135Kmph
அதே அளவில் வெட்டி ஒட்டியதைப்போல் வீசிய அடுத்த பந்தின் வேகமோ 119Kmph!! and that made the differnce.... ஹஸ்ஸியின் பேட்டை ஏமாற்றி ஸ்டம்பைத் தகர்த்தது பந்து! நுட்பத்திலும் வேகத்திலும் ஸ்டெயின், ப்ரெட் லீ போன்ற பலர் ஜாஹிரைவிட முன்னணியில் இருந்தாலும் சாதுர்யத்தில் என் கண்களுக்கு இப்பொழுது ஜாஹிரைவிட வேறுயாரும் தெரியவில்லை!

கேப்டன் தோணி : Back to Excellence!

தோணியின் கேப்டன்ஸியை நேற்று கமெண்ட்ரியில் புகழ்ந்து தள்ளிய கவாஸ்கரின் கருத்துகளை மேஜை தட்டி ஆமோதிக்கிறேன்... சின்னச் சின்ன விஷயங்களை வேகமாக முடிவெடுக்க முடிந்தது நேற்று தோணியால்...!
யூசுஃபை அதிரடியாக நீக்கிவிட்டு ரெய்னாவுடன் களமிறங்கியது பெரிய முடிவு!
பவுலிங்கைப் பொறுத்தவரை ஜாஹிர், அஷ்வின், ஹர்பஜன், ஆளுக்குப் பத்து என்று 30 + யுவ்ராஜின் 5 என்று 35 ஓவருக்குப் பிரச்னையிருக்கவில்லை... பிரச்னை முனாஃபின் 10 மற்றும் யூசுஃப் இல்லாத 5ம் சேர்ந்த முக்கியமான 15 ஓவர்கள்தான்! இதனை அற்புதமாகக் கையாண்டார் தோணி.... யுவ்ராஜ் 10 ஓவர்கள் வீசி பெஸ்ட் பவுலராக ஸ்பெல்லை முடித்தது எக்கச்சக்க ஆக்ஸிஜனை வாரியிரைக்கப் புத்துணர்வு பெற்றவராக சச்சினுக்கு இரண்டு ஓவரும்(!) கோஹ்லிக்கு ஓர் ஓவரும் கொடுத்து பிரச்னைக்குரிய முனாஃபின் க்வோட்டாவைக் குறைத்து வெற்றி கண்டார்.... கோஹ்லிக்கு ஓவர் கொடுத்தது நல்லவேளை பெரிய டேமேஜ் ஏற்படவில்லை என்றுதான் பட்டது.... தோணியின் அத்தனை வியூகத்திற்கும் நேற்றுப் பலன் இருந்ததில் அதிர்ஷ்டத்தின் பங்கும் கணிசமானது... ஒரு வெற்றிக்கு இவ்வளவு அதிர்ஷ்டமும் வேண்டும்தான்! :)

யுவ்ராஜ் சிங் : THE INDIAN OF THE SERIES!!

இந்தியா கோப்பையை வெல்வது ஒருபுறமென்றால் மேன் ஆஃப் தி சீரீஸ் யுவ்ராஜுக்குத்தான் கிடைக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பும் வயிற்றில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிடுகிறது!! 341 ரன்களும் 11 விக்கெட்டுகளும் தன் கணக்கில் கொடுத்திருக்கும் யுவ்ராஜைத்தான் தொடர்ந்து சாடிப் புறக்கணித்து வைத்திருந்தோம்!
எனக்கு யுவ்ராஜின் கம்மிட்மெண்டில் என்றுமே சந்தேகம் இருந்ததில்லை.... கைஃபுடன் இணைந்து நாட்வெஸ்ட் சீரீஸ் ஃபைனலில் (கங்குலி சட்டையைக் கழற்றிச் சுழற்றினாரே!) சரித்திரம் படைத்துக் கொண்டிருந்தபோது நம்பிக்கைத் துளிர்விட்ட சரியான வேளையில் விக்கெட்டை இழந்தார் யுவ்ராஜ்.. அப்போது வெள்ளை மனதாய்க் கண்ணீர் விட்டு குழந்தைத்தனமாய் அழுதுகொண்டே போகமனமின்றி வெளியேறிய யுவ்ராஜை என்றும் என்னால் என்றும் மறக்கமுடியாது... ப்ரீத்தி ஜிந்தா ஓடிவந்து கட்டியணைத்தாலும் சரி... மந்த்ரா பேடியுடன் டிஸ்கோத்தே சென்றாலும் சரி ஆடுகளத்தில் யுவ்ராஜின் செயல்பாடுகள் வெற்றி என்னும் ஒற்றை வார்த்தையை வசப்படுத்துவதில் மட்டும்தான் இருக்கும் என்பதே என் நம்பிக்கை.... ஃபார்ம் இல்லாத கஷ்டகாலத்தில் உங்களுக்குப் பக்கபலமாக ஒரு பெயரைக் குறிப்பிடுங்கள் என்று இன்று ஆட்டம் ஆரம்பிக்குமுன் கேட்டபோது யோசிக்காமல் பதில்சொன்ன யுவ்ராஜ் "என் தாய்தந்தையருக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர்தான் வலிமிகுந்த அந்த நாட்களில் ஒவ்வொரு போட்டியின்போதும் இந்த நிலை மாறிவிடும் என்று விடாமல் சொல்லிச் சொல்லியே என்னைத் தேற்றியவர்" என்று சொன்னார்!!

சச்சின் ரெய்னா மற்றும் பலர்!! : Its a Team Effort!

நேற்று பேட்டிங்கில் சேவக்கைப் பார்த்தவுடனேயே தெரிந்தது அவர் இன்னும் முழு ஃபிட்னஸுடன் இல்லையென்று... இருப்பினும் அவரை விளையாடப் பணித்தது சரியே.. இல்லாவிட்டால் "கான்ஃபிடன்ஸ் இஷ்யூ" தேவையில்லாமல் ஒரு மேகமூட்டத்தைக் கிளப்பியிருக்கும்... 44 ரன்கள் பார்ட்னர்ஷிப் சச்சினுடன் போட்டு சிறப்பாகவே ஆடினார்....

காம்பீர் அவுட் ஆனபோது அலுவலகத்தில் காஃபி பிரேக் ( நேற்று ஏழுமுறை காஃபி பிரேக் எடுத்தேன் காரணம் மேட்ச் ஒளிபரப்பானது கேஃப்டீரியாவில்!!) அந்த ரன்அவுட்டைப் பார்த்தபோது கொதிக்கின்ற காஃபியை கம்பீரின் முகத்தில் ஊற்றவேண்டும்போல இருந்தது... யுவ்ராஜ் அடித்த அந்த பந்தில் நிச்சியம் ரன் இல்லை..விக்கெட் கீப்பருக்கு முத்தம் கொடுக்க ஓடியதைப் போல் இருந்தது கம்பீர் ஓடியது... ஐம்பது ரன்கள் சேர்த்துவிட்டு கம்பீர் விக்கெட்டைப் பறிகொடுத்ததுதான் பாண்டிங்கிற்கு உற்சாகம் மீண்டும்வந்து நாம் சீட் நுனிக்கு சென்று நகம் கடித்த பொழுதுகளுக்கு ஆரம்பப்புள்ளி.... கம்பீரிடம் இன்னும் எதிர்பார்க்கிறோம்....

கோஹ்லியின் மூவ்மெண்டை ரசித்தேன்... ஃப்ரண்ட் ஃபுட் மற்றும் அட்டாக்கிங் தவிர வேறு வழியே இல்லை ஏகத்துக்கும் ஸ்லோவான மோட்டேரா ட்ராக்கில் லாவகமாக பவுல் செய்த க்ரெஜாவின் பந்துவீச்சைக் கையாண்டது சூப்பர்ப் என்றாலும் விக்கெட்டைப் பறிகொடுத்ததை ரசிக்க முடியவில்லை....

சச்சின்.... 53 ரன்களுடன் 1996, 2003 ஐத் தொடர்ந்து இந்த உலகக்கோப்பையிலும் தற்போதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைத் தன்வசப் படுத்தியுள்ளார்.. மேலும் 18000 ரன்கள் கடந்த வரலாற்றின் முதல் வீரராகவும் நேற்று ஜொலித்தார்... சச்சினின் விக்கெட் வீழ்ந்தவரை ஆட்டத்தைத் தனியாளகத்தான் நகர்த்திக்கொண்டிருந்தார் சச்சின்... ஒவ்வொரு பவுண்டரியும் தடைகளைத் தாண்டிப் பந்தைக் கடத்திய அற்புத கிரிக்கெட் ஷாட்கள்.... சச்சின்... சச்சின்தான்....!! நேற்று சச்சின் நல்லவேளை சதமடிக்கவில்லை அடித்திருந்தால் தோற்றிருப்போம் என்று ஒருவன் சொன்னான் அவன்மீது நான் பாயுமுன்னே அதே கருத்தை அத்தனை பேரும் ஆமோதிக்க "ஆண்டவா.. இவனுங்கள ஒண்ணும் பண்ண முடியாதுடா!" என்று அமைதியாகிவிட்டேன்.....

ரெய்னா... திறமை, நுட்பம், ஸ்டாட்டிஸ்டிக்ஸ் எல்லாம் வரலாறைத் திருத்தியெழுதிக்கொண்டிருக்கும் போது ஒரு காரணியே அல்ல.. துணிச்சலும் துடிப்பும்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் என்று போன பதிவில் எழுதியிருந்தேன் அதையே நேற்றுத் தன் பேட்டால் எழுதிக்காட்டினார் அபார தன்னம்பிக்கையுடன்... வெல்கம் பேக் சுரேஷ்!! :))

நேற்று தோற்றுப்போய் வெளியேறிய பாண்டிங்கைப் பார்க்க சந்தோஷமாய் இருந்தது!!
கம்பீர் அடித்த பந்தை "bump ball" கேட்ச் செய்து அம்பயரிடம் அவுட் கோரினார் பாண்டிங்.... அம்பயர் ரிவ்யூ வரை சென்றபோதும் பாண்டிங் விட்டுக்கொடுக்கவில்லை... தெள்ளத் தெளிவாக அவுட் இல்லை என்று தெரிந்தவுடன் ஓகே பேக் டு கேம் என்று நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்.... முந்தைய போட்டியில் அவுட் இல்லை என்று கேமராக்களும் ரீப்ளேக்களும் சத்தியம் செய்தும் தன் மனசு சொன்னதைக் கேட்டு வாக் அவுட் செய்தவர் சச்சின்.... ஸோ மீண்டும் ஒருமுறை..... சச்சின் சச்சின்தான்!!!

அரையிறுதியில் பாகிஸ்தான்... Nothing does get bigger than this...!!
உலகக்கோப்பையில் எப்போதுமே பாகிஸ்தானை வென்றிடுவோம் என்பது ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆகிவிடாமல் பாதுகாத்து வெற்றியைப் பறிப்பது தோணியின் முக்கிய சவால்.... நம்பிக்கையுடன் காத்திருப்போம்!

அரையிறுதியில் சந்திப்போம்....

அன்புடன்,
பிரபு எம்

29 comments:

  1. நண்பா! நேத்து நான் மேட்ச் பாக்கல.. இப்ப மேட்ச் பார்த்த திருப்தி உங்கள் அலசல் மூலமாக...வாழ்த்துக்கள் உங்களுக்கும், இந்திய அணிக்கும்...


    எனது வலைபூவில் இன்று: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்

    ReplyDelete
  2. அருமையான நடை. அற்புதமான விமர்சனம். இதுபோன்ற அலசல்கள் வெகு சிலருக்கே வாய்க்கும். உங்களுக்கு வாய்த்திருக்கிறது. அடுத்த வரக்கூடிய அனைத்து மேட்சுகளையும் இதே போல அலசி எடுங்கள்.

    ஒரு லட்சத்தி எண்பதாயிரம் எனப் போட்டிருக்கிறீர்கள். அதை பதினெட்டாயிரம் என மாற்றி விடுங்கள். ஸ்பெக்ட்ரம் ஜுரம் உங்களைப் பிடிக்கவில்லை என நம்புகிறேன் :-)

    ReplyDelete
  3. சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.. அற்புதமாக கண்முன்னே மீண்டும் அந்த மேட்சை பார்த்து போல இருந்தது..

    ReplyDelete
  4. ரொம்ப நன்றி பிரகாஷ்...
    தமிழ்மணத்தில் பதிவை சமர்ப்பித்ததற்கும் நன்றிகள் :)

    ReplyDelete
  5. வணக்கம் ரிஷி...

    ரொம்ப ரொம்ப நன்றி நண்பா... நிச்சியம் அடுத்தடுத்த போட்டிகள் பற்றியும் எழுதுகிறேன்...
    18000 - திருத்திவிட்டேன்... மிக்க நன்றி... ஸ்பெக்ட்ரம் ஜுரம்தான் காரணமோ என்று நானும் யோசித்துப்பார்த்தேன் உங்கள் கருத்துரை படித்தபின்பு!! நல்ல டைமிங்... ரசித்தேன்.. :)

    ReplyDelete
  6. ரொம்ப நன்றி தம்பி கூர்மதியன்...

    ReplyDelete
  7. Anonymous5:19 PM

    Awesome review dude. It bought each and every moments of the match in front of the eyes. Great work

    ReplyDelete
  8. Excellent review like yesterday's match.

    Keep it up.

    I enjoyed very much

    ReplyDelete
  9. //Awesome review dude. It bought each and every moments of the match in front of the eyes. Great work //

    Thank you so much dear friend.. :)

    ReplyDelete
  10. @ வரதராஜலு .பூ

    Thank you so much Friend :)
    It gives me immense pleasure that you enjoyed reading it..
    Thanks again..

    ReplyDelete
  11. கிரிக்கெட் ல Ph.D. பட்டம் வாங்கியாச்சே! சூப்பர்!

    ReplyDelete
  12. அற்புதமான அலசல்...

    இந்தப் படம் எங்கு கிடைத்தது?

    ஃபோட்டோகிராபரின் கற்பனை படத்தில் பதிந்திருக்கிறது,உண்மையில் யுவராஜ் பாண்டிங்கை விளாச எண்ணியிருக்கா விட்டாலும் !

    ReplyDelete
  13. நன்றி சித்ரா அக்கா....
    மக்கள்தொகையில் எண்பது சதவிகிதம் பேர் கிரிக்கெட் பிஹெச் டி தானே இந்தியாவில்!! ஹிஹி...

    ReplyDelete
  14. @ அறிவன்

    ரொம்ப நன்றி நண்பா.. :)

    //இந்தப் படம் எங்கு கிடைத்தது?

    ஃபோட்டோகிராபரின் கற்பனை படத்தில் பதிந்திருக்கிறது,உண்மையில் யுவராஜ் பாண்டிங்கை விளாச எண்ணியிருக்கா விட்டாலும் !
    //

    உண்மை!!! ஃபோட்டோகிராஃபரின் கோணம் படு சேட்டை!!! :))
    அலுவலக நண்பன் ஒருவனின் ஃபேஸ்புக்கில் பார்த்தேன் அடுத்த நிமிடமே சுடச் சுட சுட்டு விட்டேன்!!! :))

    ReplyDelete
  15. Anonymous5:09 AM

    veri good review

    ReplyDelete
  16. //veri good review //

    Thank you Friend!

    ReplyDelete
  17. அருமையான எழுத்து நடை.. விளக்கமாக விரிவாக விவரித்துள்ளீர்கள்.
    இந்தியா வென்ற பரவசம் ஒவ்வொரு சொல்லிலும் தெரிகிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. @ LOSHAN

    ரொம்ப நன்றி லோஷன்...
    இன்னும்கூட இந்தியா வெற்றிபெற்ற பரவசம் உணர்வில் இருந்துகொண்டேதான் இருக்கின்றது :)
    மிகச் சிறப்பான கூட்டுமுயற்சி சரியான வேளையில் கைகூடி வந்திருப்பது நம்பிக்கையையும் சந்தோஷத்தையும் விரிவுபடுத்துகிறது.... எனினும் பொறுத்திருப்போம்!! :))
    மிக்க நன்றி நண்பா...

    ReplyDelete
  19. ரொம்ப நன்றி பாலா சார்.. :)

    ReplyDelete
  20. நல்ல கிரிக்கெட் விமர்சனம்பா.

    ReplyDelete
  21. @Jey

    ரொம்ப நன்றிங்க :)

    ReplyDelete
  22. அருமையான துள்ளல் நடை (ஓட்டம்ன்னு கூட சொல்லலாம்) எழுத்துக்கள் ....வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  23. Dhoni should work on his bat...
    Anh heard tat there might be place for yusuf in next match.... my personnel opinion is its better if he s in rest instead of Raina... Raina gives us a better fielding too...

    ReplyDelete
  24. Anonymous11:26 PM

    This comment has been removed by the author.

    ReplyDelete
  25. Anonymous11:29 PM

    வணக்கம் பிரபு சார் உங்களுடைய இந்தியா V ஆஸ்திரேலியா : இத‌ற்குப் பெய‌ர் வெற்றி!!! பதிவு படித்தேன்.ரொம்ப அருமையாக எழுதிருக்கீங்க.உங்க எழுத்துக்கு இன்று முதல் நானும் ஒரு ரசிகன், என்னை உங்க ரசிகனாக ஏத்துக்கோங்க ப்ளீஸ்.உங்கள் எழுத்து பயணம் தொடர என் வாழ்த்துக்கள். எத்தனையோ பேர் மேட்ச் பார்க்குறாங்க.ஆனால் மேட்ச் பார்த்தல் உங்கள மாறி ரசனையோட பார்க்கணும்னு இன்னைக்குத்தான் புரிஞ்சுக்கிட்டேன்.நன்றி.

    ReplyDelete
  26. // அருமையான துள்ளல் நடை (ஓட்டம்ன்னு கூட சொல்லலாம்) எழுத்துக்கள் ....வாழ்த்துகள் நண்பரே//

    மிகவும் நன்றி நண்பரே..... மகிழ்ச்சி!

    ReplyDelete
  27. @ Sribathy

    //Dhoni should work on his bat...
    Anh heard tat there might be place for yusuf in next match.... my personnel opinion is its better if he s in rest instead of Raina... Raina gives us a better fielding too..//

    Hi Sri.. Thanks for your comments :)
    Dhoni's batting's under trouble no doubt but happy that he had come back with his captaincy... Me too go with you Raina's technically better than Yousuf and could stretch the innings also if needed.. Let's see and hope for the best.. :)

    ReplyDelete
  28. @RAMAKRISHNAN

    நன்றி ராமகிருஷ்ணன் சார்....
    உங்கள் நட்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி....

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)