Saturday, November 02, 2013

ஆரம்பம் [U] (2013)



மேக் இட் ஸிம்பிள்!.... இதுதான் "ஆரம்பம்" அஜித் படத்தில்  வில்லன்களுக்கு அடிக்கடி கொடுக்கும் கூல் அட்வைஸ்!

அதையேதான் அல்டிமேட் ஸ்டார் விஷ்ணுவர்தனுக்கும்  சொல்லியிருக்கிறார் போல அவர் "ஆரம்பம்" கதையெழுதுவதற்கு முன்! .....அதே  அட்வைஸ் படம் பார்க்கும் நமக்கும் நன்றாக  பொருந்தும்! So... Let's also KEEP IT SIMPLE! :-)

ஸ்டைல், ரிச்னஸ், ஃப்ரெஷ்னஸ் இதெல்லாம் இல்லாம அஜித் படமா?..... இதெல்லாம் இருந்தாலே அந்த ஏரியா பக்கம் லாஜிக், ரியாலிட்டி எல்லாம் இருக்க முடியுமா?!! இந்த புரிதலுடன்தான் இந்தப் பதிவே ஆரம்பம்! ;-)

குண்டு வைப்பதற்கு தீவிரவாதிகளுக்கும்..... குண்டுவெடிப்பு சீன் வைக்க இந்திய சினிமாவுக்கும் மும்பையைத் தவிர வேறு இடம் இல்லாத காரணத்தினால் இந்தப் படமும் மும்பையில்தான் ஆரம்பிக்கிறது.......! ஆனால் அந்த பாம்களையெல்லாம் வைத்துவிட்டு ஸ்டைலாக நடந்துவந்து போலீசுக்கு இன்னும் இருபது நிமிஷத்துல குண்டுவெடிக்கப்போகுது என்று இன்ஃபர்மேஷன் சொல்வது யார் தெரியுமா?? ... அதான் சொல்லிட்டேனே " நடந்து வந்து"ன்னு.... அப்புறம் என்ன சஸ்பென்ஸ்......யெஸ்.... சாட்சாத் நம்ம தலதான்!!!! பாம் ஸ்க்வாடாலேயே டிஃப்யூஸ் பண்ண முடியாத இன்டெலிஜெண்ட் பாம் என்பதால் பொதுமக்களை மட்டும் காப்பாற்றிவிட்டு பாம் வெடிப்பதை வேடிக்கை பார்க்கிறார்கள்........... !

அடுத்த ஸீனில்........ உலகத்தின் எந்தவொரு நெட்வொர்க்கையுமே ஜஸ்ட் தனது லேப்டாப் கீ-போர்டில் தடதடவென எதையோ தட்டி 'ஹேக்' செய்துவிடும் ஓர் இன்னொசண்ட் ஹேக்கர் பாய் அறிமுகாகிறார் அவர்தான் ஆர்யா!

இத்தனை மூளைக்கார ஆர்யாவை அஜித் அப்படியே அலேக்காக அபேஸ் செய்கிறார் அவர் காதலி டாப்ஸியைப் பகடையாக்கி! தன்னுடைய‌ ஸ்டைலிஷ், வில்லனிக், ரிவெஞ்ச் எபிஸோடுக்கு ஆர்யாவின் ஹேக்கிங் மூளையை ஃப்ரீயாக ரெக்ர்யூட் செய்து  தன் அடுத்தடுத்த நகர்வுகளால்  தேசத்தையே உலுக்குகிறார் அஜித்...... இந்த ஆபரேஷனில் அஜீத்துக்கு ஒரே ஒரு போல்ட் அன்டு ப்யூட்டிஃபுல் அஸிஸ்டெண்ட் நயன்தாரா! அஜீத் யார்? நயன் தாரா யார்? அஜீத் எதற்காக "ஃப்ளாஷ் நியூஸ்" சேனல் அதிபரைக் குறிவைக்கிறார்? எதற்காகக் கொலைகள் செய்கிறார்? இந்தியாவின் ஹோம் மினிஸ்டருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்??  என்று சஸ்பென்சுடன் உண்மையிலேயே விருவிருவெனப் போகிறது முதல்பாதி..... இன்டெர்வெலின் ஆக்ஷன் ப்ளாக் ஒரு மினி க்ளைமேக்ஸ்! இன்டெர்வெல் வரைக்கும் படம் செம இண்டரெஸ்டிங்ங்ங்!!!

அதான் ஃபர்ஸ்ட் ஹாஃப் முடிஞ்சிடுச்சே..... இப்போ ஒரு ஃப்ளாஷ்பேக் வெச்சு எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்கன்னுதான் பாப்-கார்ன் கவரை வெடிச்சிட்டு ஸீட்டுக்குத் திரும்புகிறோம்..... ஃப்ளாஷ்பேக்கில் தெலுங்கின் யங் ஸ்டார் ராணா வருகிறார்.....! அஜித்தும் ராணாவும் மும்பை ஆண்டி-டெரரிஸ்ட் ஃபோர்ஸின் இன்டெலிஜெண்ட் ஆஃபீஸர்ஸ்......... இருவரும் உயிர் நண்பர்கள்! அப்புறம்தான் நமக்கே தெரியுமே...... ஒரு ஆபரேஷனில் ராணா உயிரிழக்கிறார்....... புல்லட் ப்ரூஃப் அணிந்தும் புல்லட்டுகள் துளைத்து ராணா இறந்திருக்க...... புல்லட் ப்ரூஃப் அப்ரூவலில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது! அதை நியாயப்படி அஜீத்தாலும்,  ராணாவின் தங்கை நயன் தாராவாலும் எதுவுமே செய்யமுடியாமல் போகத்தான் இந்த மெகா ரிவெஞ்ச் ஆரம்பம்!!

அதன்பிறகு படத்தில்...... ஸ்விஸ் பேங்க், துபாய் பேங்க் அக்கௌண்ட்டுகள் எல்லாம் ஹேக் ஆகும்..... மும்பை போலீசிடம் அரெஸ்ட்டாகித் தப்பித்த அஜித் அடுத்த ஸீனில் துபாய் ஏர்-போர்ட்டில் அடுத்த ப்ளான் போட்டுக்கொண்டிருப்பார்...... ஹை-ப்ரொஃபைல் கார்கள், டுகாடி பைக், ஸ்பீட் போட் என்று பறப்பார்..... ஹோம் மினிஸ்டரைத் தூக்குவார்...... நாமும் பார்த்துக்கொண்டே இருக்கும் டெம்போவில் ஒருமாதிரி நல்லாத்தான் இருக்கும் என்று வைத்துக்கொள்ளலாம்! :))

ஸிம்பிளாக சொன்னால்..... துபாய்ல வெச்சு டுகாட்டி பைக் தல கிட்ட எப்படி கிடைச்சுச்சு?ன்னு யோசிச்சா உங்களுக்கு உங்க 200 ரூபாய் வேஸ்ட்.... அதே.... "தல என்னமா பைக் ஓட்டுறாரு!!" ன்னு சிலாகிச்சா... இந்த தீபாவளி "தல" தீபாவளிதான்!!!! ......

அஜித், நயன், ஆர்யா, கிஷோர், அதுல் குல்கர்னி, மஞ்ச்ரேக்கர்,  யுவன், விஷ்ணு வர்தன் என்று பெரிய பெரிய பெயர்கள் இருந்தாலும் மேன் ஆஃப் தி மேட்ச் அவார்டை சற்றும் யோசிக்காமல் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்குக் கொடுத்துவிடலாம்...... இத்தனை அட்வான்ஸ்மென்ட்களுக்குப் பிறகும் இத்தனை ஃப்ரெஷ்ஷாக  அயல்நாட்டு அழகை அள்ளிக் கொடுத்திருப்பது ஓசியில் ஓர் ஆன்ஸைட் ட்ரிப் கிடைத்ததுபோல் இருக்கும்! அழகியல் படம்தான் இது...... கலை இயக்கம், காஸ்ட்யூம் டிசைனிங், ஒளிப்பதிவாளர், இயக்குனர் அனைவரும் அணுக்கமாக செதுக்கியிருக்கிறார்கள் படத்தின் அழகியலை!

அஜித்தை அணுஅணுவாக ரசித்து உடை வழங்கி மீண்டுமொருமுறை அசத்தியிருக்கிறார் அனு வர்தன்!  நூறு படம் முடித்துவிட்ட யுவனுக்கு  படத்தின் வியாபாரத் தேவைகளையும் ரசிகனின் அப்ளாஸ் தருணங்களையும் கரெக்டாக மேட்ச் செய்து இசையமைக்கத் தெரியாதா என்ன?! கரெண்ட் ட்ரெண்டின் "Passing Cloud" நம்பர்களால் தன் பங்கை முடித்திருக்கிறார்!

ஆர்யாவுக்குத்தான் படத்தில் Dramatic Priority அதிகம்..... அந்த "குண்டுப்பையன்" கான்செப்ட் செம இளமை புதுமை! அதையும் மீறி அஜித் அடித்து விளையாடுவதுதான் அல்டிமேட்! அஜித்..... சிம்ப்ளி சூப்பர்ப்ப்ப்ப்ப்......

நயன் முகத்தில் தெரியும் முதிர்ச்சி நடிப்பிலும் தெரியும்போது என்ன பிரச்னை!...... அஜித்தோட சேர்ந்து வரும்போது நயன் இன்னும் அழகாகத் தெரிவது நேச்சுரல் ப்யூட்டி!.... அஜித்- நயன் இடையே "காதல்" இல்லாதது மெச்சூரிட்டி...... தேங்க்யூ டைரக்டர் சார்.......

டாப்ஸி..... ஸாரி...... பாப்பாவுக்கு நியூஸ் வாசிக்கவே தெரியல அப்புறம் நடிக்கிறதப் பத்தியெல்லாம் பேசலாம்......

ஆர்யா அவர் ஏரியாவில் செமையாக‌ ஸ்கோர் செய்கிறார்....... அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்ச்ரேக்கர் எல்லாம் பெரிய ஆளுங்க.... பாவம் இந்த இந்த காஸ்ட்லி மீலில் அவர்களெல்லாம் ஊறுகாய்கள்தான்....... கிஷோர்... வழக்கம்போல ஷார்ப் ஆனால் "ஆரம்பத்"திற்குப் புதிதாக எதுவுமே தரவில்லை....... "ஹரிதாஸ்" கிஷோர் இந்தப் பகுதியை நடித்துக்கொடுத்திருப்பதுபோலத்தான் இருந்தது!

பஞ்ச் டயலாக் ஹீரோக்கள் எல்லாம் ஹிட் கொடுக்கத் திணறும் இந்த "விஜய சேதுபதி" ட்ரெண்டில் ஒரு ஸ்டார் வேல்யூ மூவி என்று மீண்டும் முதலிலிருந்து தொடங்கும் "ஆரம்பம்" இது என்று சொல்லலாம் ஆனால் இருந்தும் படத்தின் ரிசல்ட் வேற மாதிரி வந்தால் தமிழ் சினிமா ஆடியன்ஸ் மாறியிருக்கிறார்கள் என்று ஊர்ஜிதமாகிவிடும்!! பார்ப்போம......

என்ன ஒண்ணூ..... ஒரு சேஞ்சுக்கு அஜித் அவர் கால்ஷீட் வாங்குவதற்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு கதையில் நடித்தால் அழகான அந்த "நடிகனின்" ரசிகன் இன்னும் குதூகலிப்பான்! மற்றபடி ஆல் இஸ் வெல்!

ஆரம்பம் - டேக் இட் ஈஸி!! :-)


அன்புடன்
பிரபு எம்