எழுதும் ஆர்வம்தான் என்னை இந்த வலைப்பூ தொடுக்க வைத்தது. உங்கள் வாசிப்பினாலும், விமர்சனங்களாலும், நட்பினாலும் மெருகேறக் காத்திருக்கும் என் எழுத்துகள்..
Tuesday, February 05, 2013
விஸ்வரூபம் [U/A ] (2013)
"தக தக தக.....
தின தின தின....
னாகனாக தகிடதகிட......" வென கச்சிதமான "கதக்" வெட்டுக்களுடன் அபிநயக் கமல் திரையில் தோன்ற ஆர்ப்பரிப்பது இந்தமுறை கமல் ரசிகர்கள் மட்டுமல்ல...... அவரைப் படுத்தியெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் புண்ணியத்தில ஆதரவுமொழியில் அரங்கமே கைதட்டி வரவேற்கிறது கமலை....... மரியாதையுடன்!! :-))
தகிட தகிடவெனக் குறும்பாகக் குழையும் விஸ்வநாத எபிஸோட் சட்டென முடியும்வேகத்தில் படம் தடதடக்க ஆரம்பித்து நிற்காமல் தொடரும் ஜாலத்தில் தாமதமாகத்தான் நினைவுக்கு வருகிறது "தடை பண்ண இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்று?!"
தடைகளை மட்டுமல்ல...... தமிழ் சினிமா இயங்கிவரும் தளங்களையும் உடைத்து விஸ்ஸ்ஸ்ஸ் எனக் கிளம்பியிருக்கும் "விஸ்வரூபத்"தின் முதல் அத்தியாயம் இது!!!!
பொதுவாகவே பயங்கரவாதத்தைத் (Terrorism) தீவிரவாதம் (Extremism) என்று அழைக்கும் தவறான வார்த்தைப்பிரயோகம் தமிழில் சகஜம்!
பூமியில் பயங்கரங்களை விதைப்பவர்களின் பெயர் பயங்கரவாதிகளே! அந்த பயங்கரவாதம் ஓரளவு நியாயப்படுவதுபோல் தெரியும் (இன்றைய மீடியா/சோஷியல் நெட்வொர்க்கிங் நியதிகளின்படி!) "தீவிரவாதிகள்"அல்லது இன்னும் சிறப்பாகப் "போராளிகள்"என்று அழைக்கப்படும்போது!!! இந்த பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதங்களை உள்ளும் புறமுமாக அணுகுவது விஸ்வரூபத்தின் புதுமை என்றால் அதற்கு இத்தனை வேகமான திரைக்கதையும் விவேகமான காட்சியமைப்பும் சாத்தியமா(க்)கியிருப்பது நிச்சியமாக அத்தனை சாதாரணமான காரியமில்லை!
நியூயார்க் நகரில் ஒரு நியூக்ளியர் குண்டுவெடிப்பை நிகழ்த்த தாலிபான்களின் தலைவர் ஓமர் (ராகுல் போஸ்) ஒரு மெகா மகா திட்டம் தீட்டுகிறார்...... "திட்டம்" என்றால் ஒரு டெரர் ப்ளான் என்று கடைசி சீனில் துப்பறியும் அதிகாரி சிரித்துக்கொண்டே விளக்கிச் சொல்வதுபோல் இல்லாமல்..... நுணுக்கமாக, மிக மிக நுட்பமாக...... பயங்கரவாத சம்பவங்களில் இதுவரை வெளிவந்திருக்கும் ஒவ்வொரு ஃபுட்டேஜும் எப்படித் தயாராகியிருக்கும் என்கிற ரீதியிலெல்லாம் செல்லும் அசுரத்தனமான கற்பனை...... அமெரிக்க மற்றும் உலக நாடுகளின் கோணத்தில் திரைக்கதையின் பார்வை வைக்கப்படும்போது தாலிபான்களின் அனைத்து செயல்பாடுகளும் உணர்வுகளும் மொத்தமாகவே "பயங்கரவாதம்" என்று நமது மனங்களால் லேபிள் குத்தப்படும்! அதே திரைக்கதை அடுத்த தளத்தில் அந்த ஆஃப்கன் மண்ணிலேயே கால்பதித்து ரத்தமும் யுத்தமுமாய் கோணத்தை மாற்றும்போது...... "பயங்கரவாதம்" என்னும் வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் ஜிஹாதியில் தொடங்கி..... பாசம், தியாகம், புனிதம் என்றெல்லாம் நவரசமும் வெளிவந்து பதைபதைக்க வைத்திருப்பதுதான் திரைக்கதையின் விஸ்வரூபம்!
இப்படித் தீவிரவாதத்தை "உள்ளும் புறமுமாக" அணுகியிருப்பது எப்படி சாத்தியமானது என்று கமல் ஒருநாள் விளக்கிச்சொல்ல வேண்டும்...... என்னைப் பொறுத்தவரை தீவிர/பயங்கரவாதங்களை உலகம் அணுகவேண்டிய மாற்றுக் கோணத்தில் உலக நாயகன் அணுகியிருக்கிறார்! (செகண்ட் பார்ட்டில் என்ன சொல்லப்போகிறார் என்று ஆர்வம் பெருகுகிறது!)
ஆஃப்கானிஸ்தானின் யுத்தக்கள மண்ணைப் பரிசோதித்து அம்மனிதர்களின் ரத்த ரசாயணங்களை அளந்துபார்த்தபின் தன் கதைக்கான விதைகளைத் தூவியிருப்பது அறுவடையில் யதார்த்தமாய் அழகாக மட்டுமின்றி அழுத்தமாகவும் வந்திருக்கிறது!
ஒரு பட்டனில் உடல்சிதறி உயிர்விடப்போகும் சிறுவனின் முந்தைய இரவின் இருநிமிட கடைசி ஆசையாக ஊஞ்சலில் கண்மூடிக் காற்று வெளியில் அவன் மிதக்கும் ஏகாந்தம் அடுத்தகாட்சியில் அவன் உயிர்விடும்போது அந்த "மனித வெடிகுண்டின்" உயிரிழப்புக்கூட உஷ்ணப்படுத்துகிறது! ரேடியோ ஆக்டிவ் சீசியத்தை வெறும் விரல்களால் சுரண்டி கேன்ஸரை அன்புடன் வரவழைத்து ஸ்லோ டெத்துக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டவர்களை பயங்கரவாதிகள் என்பதா இல்லை தீவிரவாதிகள் என்பதா இல்லை என்னவென்று அழைப்பது?!! கால்படாத இடங்களில் நம்கண்பட வைப்பதைத்தான் கடல்தாண்டிய தமிழ்சினிமா செய்திருக்கும் சாதனை....... விஸ்வரூபம் கண்படா இடங்களை மனதில் விழவைத்திருப்பது அபூர்வம்!
வெல்....இந்தப் படத்தை ரசிக்கக் கொஞ்சம் பொதுவிஷய தரிசனமும் உலகத்திரை பரிச்சியமும் இருப்பது நலம்..... ஜஸ்ட் பார்த்துவிட்டு உவ்வே.... மொக்கபடம்னு யார் சொன்னாலும் " நோ கமெண்ட்ஸ்"தான்....... எப்படி தடை செய்யப் படத்தில் என்ன இருக்கின்றது என யோசித்தபோது புரியவில்லையோ அதேபோலத்தான் படத்தை மொக்கை, சப்பையென்று தூற்றுவதற்கும் எதுவுமில்லை........ விஸ்வரூபம் தருவது ஒரு திரைஅனுபவத்தை......! அனுபவத்தில் நல்ல அனுபவம்..... மொக்கை அனுபவம் என்று பகுத்துப்பார்ப்பதற்கெல்லாம் ஏழறிவு வேண்டும்....அதனால... வெரி சாரி..... எனக்கு ஆறுதான் இருக்கு! ;-)
கமல் நடிப்பு.......... "பாட்ஷா"வில் மாணிக்கம் திடீரென்று பாட்ஷாவாகும் சீனைப்போன்று இதிலும் ஒரு பவர்ஃபுல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீன் உண்டு...... அதில் கமல் மாற்றிக்காட்டும் இரண்டு பாத்திரங்களுக்கும் இடையேயான டிஃப்ளெக்ஷன் கோணத்தை அளப்பதற்கு நடிப்புலகில் ஏதேனும் மெட்ரிக் அளவு இருந்தால் எல்லா மொழிகளிலும் திரைநடிப்புப் பள்ளிகளில் பாடமாக்கிவைக்கலாம்! இத்தனை ஆழமான கதையமைப்பிலும், காட்சியமைப்பிலும் கமல் தன் நடிப்பையும் இயக்க ஸ்பேஸ் எடுத்துக்கொண்டதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்! காரணம் "விருமாண்டி"யில் அந்த விஷயத்தில் எனது ஏமாற்றத்தைப் பதிவுசெய்திருந்தேன்! கமல் அபாரம்!
பூஜாகுமார்... பாத்திரம்..... என்னைப்பொறுத்தவரை பளிச் சென்று திரைக்கதையில் தெரியும் ஒரு லெட்-டவுன்...
கமல் படத்து 'பொம்மனாட்டிகள்' எல்லாரும் எப்போதும் இப்படித்தான் இருப்பார்கள் என்று எல்லாருக்கும் தெரிகின்ற அளவுக்கு அதே பேட்டர்ன்..! இதில் அவர் ந்யூக்ளியர் ஆன்காலஜியில் பி.ஹெச்.டி முடித்தவர்வேறு... சூழ்நிலை கைமீறிப்போய்..... டெரரிஸம்..... கொலை....அம்மாஞ்சிக் கணவனின் "விஸ்வரூபம்"என சர்வகொடூரத்தையும் சாதாரணமாகக் கண்முன்னே பார்த்தபின்னும்கூட அவ்ளோ அறிவாளிப்பொண்ணு "தசாவதாரம்" அசின் மாதிரி மொன்னத்தனமாக கேள்விகேட்பதும் கதறுவதுமாக இருப்பது இத்தனை அசாத்தியமான முயற்சியில் அசட்டுத்தனமாகத் தெரிந்தது....
ஆனால் க்ளைமேக்ஸின் மைக்ரோவேவ் கான்செப்ட்.....வாவ்!!
ஆண்ட்ரியா, சேகர் கபூர்..... திரைக்கதை போகும்போக்கில் பொருந்திக்கொண்டு கோ-ஆப்பரேட் செய்திருக்கிறார்கள்.......
ராகுல் போஸின் "விஸ்வரூபத்தை"ப் பார்க்கவாய்ப்பில்லை...... ஆனால் ஒரு சூடான சந்தர்ப்பத்தில் விரல்களால் துப்பாக்கி சுடும் காட்சியில் "இவன் யாரென்று தெரிகின்றதா?!" என்று பாட்டு கேட்கும் அவர் யாரென்று தெரிந்தவர்களுக்கு!
"அல்லா ஏன் இப்படிச் செய்யறாரு ?" என்று ஃபுல்டைம் டெரரிஸ்ட் (ராகுல்தான்!) ஆற்றாமையில் அழுவதாக ஒரு காட்சி வரும்..... ரொம்ப ரொம்ப சென்ஸிடிவ்வான காட்சியது...... திரையில் பாருங்கள்!
நாசர்..... அடப்போங்க சார்..... நீங்க எல்லா பாலும் சிக்ஸர் அடிப்பீங்கன்னு நான் வேற சொல்லணுமா!!
சானு வர்கீஸின் ஒளிப்பதிவில்..... தாலிபான் தீவிரவாதிகளே தமிழ்ல பேசினாலும்கூட தமிழ்ப்படம்னு நம்பமுடியல அத்தனை சாகசாமான சர்வதேசத்தரம்! இந்தப் படத்துக்கு இவ்ளோ வேணும்தான்.... கொஞ்சம்கூட காம்ப்ரமைஸ் செய்துகொள்ள முடியாத பொறுப்பை ஏற்றுத் தானும் இம்மியளவு காம்பரமைஸ் செய்துகொள்ளாமல் மிரட்டியிருக்கிறார் மனிதர்......
படம் போன வேகத்தில் மகேஷ் நாராயணனின் எடிட்டிங்கை நிதானித்து கவனிக்கமுடியவில்லை.... இதுக்குமேல என்ன சொல்லணும்!
ஷங்கர்-லாய்-எகாஸனின் இசை மிரட்டுகிறது பின்னணியில்!
தொழில்நுட்பம் அபாரம்.... எனக்கு ஆரோ 3டியில் காணும் வாய்ப்பு கிட்டவில்லை..... எனினும் டால்பி-க்யூபிலேயே மிரட்டிய சவுண்ட் எஞ்சினியரிங் ஆரோ 3டியில் அதிரடித்திருக்கும் என்று நம்புகிறேன்!
ரொம்பவே ஹை-ஃபை தொழில்நுட்பத்தில் கலக்கியிருக்கிறார்கள்.......
"வில்லன்" என்று யாரும் இல்லாததும் "வில்லத்தனம்" என்பது நாயகன் உட்பட எல்லாரிடமும் இருப்பதும் நான் ரசித்த மிகமுக்கியமான பொதுப்பொருள் "விஸ்வரூபத்தில்"!
இது வேறுமாதிரியான முயற்சி....... பொத்தாம்பொதுவான பொதுப்பொருளாகிவிட்ட சர்வதேச தீவிரவாதத்தின் கருப்பொருள் சிதையாது வந்திருக்கும் மிகவும் ப்ரோடோடைப் இந்தியப் பதிவிது உலகசினிமாவில்!
இன்னும் ஹோம்-க்ரவுண்டிலேயே படம் ரிலீஸாகத காரணத்தால் கதையையும், சிலாகித்த பல காட்சிகளையும் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறேன்..... படம் பார்த்தவர்களுக்கு ஸாரி!
விஸ்வரூபம் - விஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......வ்ர்ர்ர்ர்ரரூரூம்ம்ம்ம்!!!!
நல்ல வித்தியாசமான விஸ்தீரணமான திரை அனுபவத்திற்காக விஸ்வரூபம் பாருங்க!
அன்புடன்,
பிரபு எம்
Subscribe to:
Post Comments (Atom)

அட :-))உன் விமர்சனத்தை உள்வாங்கவாவது படம் பார்க்கணும் போலே.:-)) ராகுல் போஸ்;-) இன் தீவிர பேன் நான் mr&mrs ஐயர் படம் பார்த்ததில் இருந்தே...பார்க்கோணும்...--
ReplyDeleteராகுல் போஸ் செமையா இருக்காரு படத்துல....
Deleteபட் மேலே சொன்ன மாதிரி அவருடைய விஸ்வரூபத்தை முதல் அத்தியாயத்தில் காண வாய்ப்பில்லைதான்!
//கமல் படத்து 'பொம்மனாட்டிகள்' எல்லாரும் எப்போதும் இப்படித்தான் இருப்பார்கள் என்று எல்லாருக்கும் தெரிகின்ற அளவுக்கு அதே பேட்டர்ன்..//
ReplyDeleteதிரும்ப திரும்ப பேசுற நீ..திரும்ப திரும்ப பேசுற நீ...:-))
என்ன...... திரும்ப திரும்ப பேசுற நீ..திரும்ப திரும்ப பேசுற நீ..!! :-))
Delete//இந்தப் படத்தை ரசிக்கக் கொஞ்சம் விஸ்தீரணமான பொதுவிஷய தரிசனமும் உலகத்திரை பரிச்சியமும் நிச்சியம் தேவை..... ஜஸ்ட் பார்த்துவிட்டு உவ்வே.... மொக்கபடம்னு யார் சொன்னாலும் " நோ கமெண்ட்ஸ்"தான்.//
ReplyDeleteஐயையோ...கணம் பிரபு அவர்களே:-))..மேல்நோக்கிய தங்கள் வார்த்தை குறிப்புகள் எம்மை போன்ற சாமானிய மக்களுக்காகவே ஆன குறியீடுகள் என்று எண்ணி...அப்டிக்கா அப்பீட் ஆகிக்கிக்கிறேன்...:-))
ஒரு குறைந்தபட்ச புரிதல் அவசியம்தான்!
DeleteI decided to watch. You made me. Sathi
ReplyDeleteAm honored Samy....
DeleteHope you would like the movie...
அருமையான விமர்சனம்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ.....
DeleteHi Ramesh.....
ReplyDeleteநான் அமெரிக்காவில் இல்லை! :-)
"அமெரிக்காவைக் காப்பத்துறதுக்காக...... ப்ளா ப்ளா ப்ளா... சுயமரியாதையை இழக்கிறார்"
எனக்கு அப்படித் தோணல..... மேரேஜ் ஆஃப் கன்வீனியன்ஸுக்கான காரணம் பூஜாவின் பிஹெச்டியில் புரிகிறது!
கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் .... சீசியம் தொடர்பான அறிவுக்காக ஆபரேஷனில் தொடுக்கப்பட்டிருக்கும் பூஜா தன் உயிரை இழக்கவேண்டாம் என்பதற்காக கடைசி சூழ்நிலையில்கூட கருத்தாய் முயற்சி செய்கிறார் கமல்!
மேலும்......
இதில் கமல் அமெரிக்க ஏஜெண்ட் அல்ல இந்திய ஏஜெண்ட்! அமிரிக்காவோ ஜப்பானோ கூடங்குளமோ ஒரு பேரழிவைத் தடுக்கிறார் என்றுதான் நான் பார்க்கிறேன்! சோரம் போறது போன்ற வார்த்தைகளெல்லாம் தமிழில் ஆண்பால் சொற்கள் இல்லாதவை! :-) அதனால் அதையெல்லாம் பயன்படுத்துவதில்லை! உங்களுடைய கோணமும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றது........
ஆனால் எனது கோணத்தில் நான் பார்த்ததைத்தான் பகிர்ந்திருக்கிறேன்......
FBI/CIA இரண்டும் அமெரிக்க உளவு நிறுவனங்கள்...... அவர்களிடம் RAW எதற்குத் தங்கள் ரகசியங்களைப் பகிரவேண்டும்......
ReplyDeleteதேவையேற்படும்போது..... இந்தியாவிலிருந்து அதிகாரப்பூர்வமாகத் தகவல்கள் யுடன் பகிரப்படுகிறதே ஒரு காட்சியில்! when a singh and Shekar Kapoor comes for Kamal's rescue!
Also a scene says Hilary officially thanking India for the same.....
Boss...ஒரு நாட்டில் பொய்யான பெயருடன் தங்கியிருக்கும் இன்னொரு நாட்டுடைய உளவுத்துறை நிபுணர்...... அந்த நாட்டிடம் ஜஸ்ட் வாக்-இன் செய்து.... நான் ஒரு ரா நிபுணர்..... உங்க நாட்டுல பொய்யான பேர்ல தங்கியிருக்கேன்....etc etc... என்று எடுத்துச்சொல்லி அந்த நாட்டுக்கு ஏற்படப்போகும் அச்சுருத்தலை சொல்லியிருக்கலாமே என்று நம்ம சொல்ல முடியாது!! :-)
ReplyDeleteஓமரும் அதே அமெரிக்காவில்தான் இருக்கிறார்(as per the story!)...... கமல் "விஸ்ஸ்"ஸாக ஒளிந்துதன் வாழ்கிறார்.....
தவிர கமல் எதற்காக இந்த ஆபரேஷனில் இந்திய ஏஜெண்டாகத் தலையிடவேண்டும் என்று இரண்டாம் பாகம்தான் சொல்லவேண்டும்..... கடைசி ட்ரெய்லரில் காட்டுகிறார்களில்லையா... சேகர் கபூர் சொல்வதுபோல.......
படம் சத்தியமா புரியலைங்க , புரியாத கேள்விங்க பல இருக்குது..புரியாம பார்ததால மண்டை இடிதான் மிச்சம்..
ReplyDeleteஇன்னொரு தடவ பாருங்க... கோகுல் சரியாகிடும்! ;-)
Deleteபார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி விட்டு விட்டீர்கள்
ReplyDeleteநன்றி குட்டன்...... பாத்துட்டு சொல்லுங்க :)
DeleteSuper review!
ReplyDeleteThank you very much boss.. :)
Delete