எழுதும் ஆர்வம்தான் என்னை இந்த வலைப்பூ தொடுக்க வைத்தது. உங்கள் வாசிப்பினாலும், விமர்சனங்களாலும், நட்பினாலும் மெருகேறக் காத்திருக்கும் என் எழுத்துகள்..
Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts
Monday, April 23, 2018
மெர்க்குரி [U/A] (2018)
தெர்மோமீட்டர் திரவத்தின் கோரமுகத்தை வசனங்களைத் தவிர்த்துவிட்டு அலறும் பின்னணி இசையுடன் வழங்கியிருக்கும் சத்தமான “சைலண்ட்” ஃபில்ம்! படத்தில் உள்ளும் புறமும் அவ்வளவு சத்தம்! (இசையைப் பற்றிப் பிறகு பார்ப்போம்.)
அட்டகாசமான கதைக்களம் அமைத்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்!
நாயகர்கள் மற்றும் நாயகியின் உலகம் நிசப்த மயமானது... அவர்களைத் துரத்தும் “பேய்” வில்லனின் உலகமோ முழு இருட்டானது! இந்த வாழ்நாள் இருளையும் நித்திய நிசப்தத்தையும் ஏற்படுத்திவிட்டு, அந்த ஊரில் 84 உயிர்களையும் காவுவாங்கிவிட்டு, முழு அமைதியில் மரண ஓலங்களை உள்ளடக்கிய, சிதலமடைந்த நரகமாய் எழுந்து நிற்கும் அந்த ”கார்பரேட் எர்த்” ஃபேக்டரிதான் கதையில் அரங்கேறும் “Wrong War"-ன் பெர்ஃபெக்ட் போர்க்களம்!
”மெர்க்குரி” எனும் பெயரையும் Mercury poisoning எனும் படம் சொல்லும் மைய விஷயத்தையும் கார்த்திக் சுப்பராஜைப் போலவே பார்வையாளர்களும் ஒதுக்கி அப்புறப்படுத்திவிட்டு, ஹாலிவுட் சாயலில் ஒரு சாதாரண ஹாரர் படத்தைப் பார்ப்பதற்கான மன அமைப்புடன் கரை ஒதுங்கிவிடுவது மிகவும் நலம்...! தலைப்பையும் கருவையும் வைத்துக்கொண்டு சராசரி ரசிகன் கற்பனை செய்துகொள்ளக்கூடிய ஃபேக்டரியின் அவலங்களைச் சொல்லப்போகும் க்ளிஷே ஃப்ளாஷ்பேக் சீக்வென்ஸ் படத்தில் வரவே வராது! பாத்திரங்கள் பேசாமல் படம் பேசுவதுதான் மௌனப் படம் என்றால் படம் மௌனமாகப் பேசியிருக்கும் முக்கியமான விஷயம் இந்தப் படத்தில் இதுதான்! (மற்றபடி சைகை மொழியில் வசனங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!)
சல்லைத் தனமான சேட்டைகளால் ஒரு கொலையைச் செய்துவிட்டு சட்டத்திடமிருந்து தப்பிக்கக் காய் நகர்த்துகிறார்கள் நாயகர்களும் நாயகியும்..... அடுத்த நாளில், தங்களால் கொலை செய்யப்பட்டவரிடமே அந்த ஃபேக்டரிக்குள் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறார்கள்.... அடித்துத் துவைக்கும் அந்த ”ஆவி”யிடம் கதை மாந்தர்களோடு சேர்ந்து நாமும் மாட்டிக்கொள்ள முக்கால் வாசிப் படத்தில் சுவாரஸ்யமே இல்லாத ”ஒருதலை மோதல்” (அதாவது சண்டையில் ஒருவர் மட்டுமே அடித்துக்கொண்டிருப்பார் அடிவாங்குபவர்கள் கடைசிவரை அகிம்சையைக் கடைபிடித்து செம்ம அடி வாங்கிச் சாகிறார்கள்!) மட்டுமே நிகழ்கிறது... ஆனால் அடித்து அடித்து டயர்டாகிப் போகிற ”பேயி”ன் கோபம் தீரும் கணத்தில் வெளிப்படும் நெகிழ்ச்சியான காட்சிகளும், அருமையான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தப்படும் அழகான ஈர உணர்வுகளும்தான் முடிவுரையை மட்டும் முழு நிறைவாய் எழுதி முடித்திருக்கின்றன!
கடைசிக் காட்சிகளை உணர்ச்சிப் பூர்வமாக எழுதியிருப்பது போலவே ஆரம்பக் காட்சிகளை ரசிக்கும்விதமாக அமைத்திருந்தால் இதமான அனுபவம் தந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகம்... ஆனால் கதாநாயகர்களின் சல்லித் தனமான செய்கைகளை ரசிக்கமுடியவில்லை.....
வசனங்கள் இல்லாத படத்தில் முக்கியமான சில காட்சிகளை சைன் லாங்குவேஜ் மற்றும் புத்திசாலித்தனமான காட்சியமைப்புகளால் சிறப்பாக நகர்த்தியிருக்கும் சாமர்த்தியத்துக்குக் கார்த்திக் சுப்பராஜை நிச்சியம் பாராட்ட வேண்டும். (”மொழி” படத்தில் நமக்கு ஏற்கெனவே கொடுக்கப் பட்டிருக்கும் சைகை மொழிக்கான பேஸிக் ட்ரெயினிங் இந்தப் படத்திற்கு நன்கு உதவியிருக்கிறது!) தமிழ் வெர்ஷனில் சப்-டைட்டில்கள் போடுகிறார்களாமே?? (எதுக்கு!) நான் பார்த்த பிராந்திய மொழி வெர்ஷனில் சப்-டைட்டிலும் “ஒரு மர நிழலில்...” பாடலும் இல்லை... இல்லாததே நலம்.... சப்-டைட்டில் போடுவது நிஜமென்றால் படத்துல பேசிட்டுப் போயிடலாமே....! எதுக்கு வீண் பிடிவாதம்??!
காட்சிகளில் கவிதை வாசிக்கவும் கார்த்திக் சுப்பராஜ் தவறவில்லை...... “மான்கள் நடமாடுமிடம்” என்று ஒரு சைன் போர்டு ஓர் இடத்தில் வரும்.... படத்தின் மனிதர்கள் ஒரு குற்றத்தை செய்துகொண்டிருக்கும்போது, குற்ற உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் ஒரு முற்றிலும் குற்றமற்ற கண்களிடமிருந்து விழும் ஒரு பார்வை! அது நம்மையும் சேர்த்து சில்லிட வைக்கும்... அந்தக் காட்சியில் சாந்தமே சர்வமுமாய் வாழும் கொம்புகள் கொண்ட மான் ஒன்று மிரட்சியுடன் குத்திப் பார்த்துக்கொண்டிருக்கும் கதை நாயகர்களை.... சிலிர்ப்பேர்ப்படுத்தும் காட்சிக் கவிதை அது!
ஆங்காங்கே வெளிப்படும் இதுபோன்ற திரைமொழி மெனக்கிடல்களை ஏன் படம் முழுக்க பரப்பவில்லை என்பதுதான் நியாயமாக மனதில் எழும் கேள்வி.
நடிப்பைப் பொறுத்தவரை மொத்தமே 10-12 பேர்தான் படத்தில். அதில் பிரபுதேவாவின் நடிப்புக்கு இரண்டாமிடம் தான் கதையிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அவர் வேறு யாருக்கும் விட்டுக்கொடுத்துவிடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அம்சமாக நடித்திருக்கிறார்..... முதலிடம் வெல்வது அழகான கதை நாயகியான இந்துஜாதான்....
ஸ்கோப்பும் அவருக்குத்தான் அதிகம் ஆனால் அதைவிட மொத்தப் படத்தையும் சுமக்கப் போகும் பொறுப்புணர்வை சரியாகப் புரிந்து கடைசி காட்சிகளில் வெளிப்பட வேண்டிய அளவில்லாத எமோஷனை அளவறிந்து கொடுத்து அப்ளாஸ் அள்ளியிருக்கிறார் இந்துஜா! மற்றவர்களின் நடிப்பு நன்றாக இருந்தாலும் சைலண்ட் ஃபில்ம் என்பதற்காக சற்று மீட்டரை ஏற்றிவைத்தே ரியாக்ஷன்களை வழங்குகிறார்கள் அது சில இடங்களில் செயற்கையாகத் தெரிவது மட்டுமின்றி நடிகர்களின் அனுபவமின்மையையும் காட்டுகிறது!
ஒளிப்பதிவாளர் திரு வின் கேமரா எப்பொழுதுமே இயக்குனரின் கண்களாகச் சுழன்று 360 டிகிரியில் திரையைத் தத்ரூபக் காட்சிகளால் நிரப்பக்க்கூடியது. இந்தப் படத்தில் மிகவும் அதிகமான சவால்களை நிச்சியம் சந்தித்திருக்கிறார் திரு.... படத்தில் உரையாடல்கள் இல்லாததினால் வழக்கமான மாஸ்டர் ஷார்ட்... க்ளோஸ்-அப், ஓவர் தி ஷோல்டர் என்று சிம்பிளாக முடித்துவிட முடியாது, ஒவ்வொரு அணுக்கத்திற்கும் ஓர் ஆங்கிள் பிடித்தாக வேண்டும்... மேலும் மௌனப் படங்களில், எந்த இடத்தில் “கட்” சொல்வதென்பது இயக்குனருக்கே சவாலான விஷயம் அதற்கு ஈடுகொடுத்துத் தன் டிஜிட்டல் கேமராவில் படத்தை அழகாக அள்ளியிருக்கிறார் திரு...!
எவ்வளவு காட்சிகளை அள்ளிச்சென்று எடிட்டிங் டேபிளில் கொட்டினார்களோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் ஆனால் படத்தின் எந்தக் குறையும் பார்வையாளனுக்கு க்ளைமேக்ஸ் நெகிழ்ச்சிக்குப் பிறகு உருத்தலாகவே இருக்காததற்கு ஒரே காரணம் மெரிக்குரியைக் கடைந்து குறுகத் தரித்துக் கொடுத்த விவேக் ஹர்ஷனின் எடிட்டிங்தான்.... கத்திரி விழுந்த காயங்களின்றி கச்சிதமாய்த் தவழ்ந்து செல்கின்றன காட்சிகள்!
இது சைலண்ட் ஃபில்ம் அல்ல “சப்தப் படம்” என்கிற ரீதியில் முதல் பத்தியில் சொல்லியிருந்தேன்... அதற்காக படத்தின் சத்தத்தை அதாவது இசையைக் குறை சொல்ல்விடக்கூடாது.....சந்தோஷ் நாராயணனின் இசை இந்தப் படத்திற்கு சில முக்கியமான காட்சிகளில் இல்லாத உணர்வுகளையெல்லாம் சேர்த்துக் கொடுத்திருக்கிறது...... நட்புக்குள் ஒளிந்திருக்கும் மௌனக் காதல் சொல்லும் தீமில் (Theme) மென்மையாகக் கடத்தும் இசை கடைசிக் காட்சியில் கண்ணீர் கசியவைக்கும் வயலின் இசையாக மனதைப் பிடித்து உலுக்கியெடுக்கவும் தவறவில்லை.... படத்தின் நடுப்பகுதியில்தான் இசை மொத்தமும் வெறும் சத்தமாய் கேட்கிறது ஆனால் அந்தக் காட்சிகளே இரைச்சலானவைதான் திரைக்கதையில்.... உலகத் தரத்திலான இசையை மீண்டுமொருமுறை வழங்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
சிதலமடைந்த அந்த ஃபேக்டரியின் புரடக்ஷன் டிசைனிங்கில் கார்த்திக் சுப்புராஜின் கற்பனையின் கருப்பொருளில் நுணுக்கம் தெறிக்கின்றது....! அதை அப்படியே கண்முன் கொண்டுவந்த ஆர்ட் டிபார்ட்மெண்டுக்கும் கணிணி கட்டுமானர்களுக்கும் அவார்டு நிச்சியம் கிடைக்கும்....! அந்த நீளமான ஃபேக்டரி “ஒருதலை மோதலில்” அணுக்கம் அணுக்கமாக ஒவ்வொரு ப்ராபர்டியும் உபயோகப்படுத்தப் பட்டிருக்கின்றது.... (ஆனால் அடிவாங்கும் இளைஞர்களுக்குத் தங்களைத் தாக்குபவரை அடிக்கவும் இரும்புக் கம்பிகள் தொடங்கி ஏகப்பட்ட சாதனங்கள் கையில் கிடைத்துக்கொண்டே இருக்கிறது ஆனால் சாகும் தருவாயிலும் எதிரியைத் தாக்கக்கூடாது என்று இயக்குனருக்கு செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றி அடிவாக்கிச் சாகிறார்கள்!)
டெக்னிக்கலாக “மெர்க்குரி” வேறொரு தளத்தில் கம்பீரமாக நிற்கின்றது. உலகுக்கே பொதுமொழியான மௌனம் பேசும் இந்த “மெர்க்குரி” ஒரு தமிழ்ப்படமாக எந்தளவு ஈர்க்கிறது என்பதுதான் விவாதத்துக் குரியதே தவிர, மற்றபடி திரைப்பட விழாக்களிலெல்லாம் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளில் விரிவடையும் மனிதம் பேசும் உணர்வுகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத்தான் செய்யும்..... அந்தளவு தரமான படைப்பாகக் கடைசி பத்து நிமிடங்களில் நிலை நிறுத்திவிடுகிறார்கள்.
எந்தவொரு இண்டஸ்ட்ரியிலும் செய்யப்படும் பரிசோதனைகளானது இறுதியில் வெளிவரும் ப்ராடக்டின் (Product) மேம்பாட்டில்தான் முழுமையடைகிறதே தவிர, ” இது ஒரு பரிசோதனை முயற்சி” என்று லேபிள் ஒட்டி விற்பதினால் எந்தப் பொருளையும் நுகர்வோர் எவரும் காம்ப்ரமைஸ் செய்துகொண்டு வாங்க ஆர்வம் காட்டமாட்டார்கள் எனும் நிதர்சனத்தைப் பரிசோதனைப் படைப்பாளிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்று மட்டும் தோன்றியது எனக்கு! அந்த வகையில் “மெர்க்குரி” பெர்ஃபெக்டான திரைப்படம் இல்லை.... ”நல்ல முயற்சி” என்னும் விமர்சனமும் வெறும் ஆறுதல் பரிசாக அமைந்துவிடும்.... ஆனால் மெர்க்குரியின் கலரிலேயே இருக்கும் வெள்ளிப் பதக்கம் பெரும் அளவுக்குப் படம் நிச்சியமாய் இருக்கிறது.... தங்கத்துக்கு சத்தியமாக வாய்ப்பில்லை!
வேதியியிலின் ஒரே திரவ உலோகமான (Liquid metal) ”மெர்க்குரி” அதற்கேற்ற கணத்துடன் இருந்தாலும் வழுக்கிச் சென்றுவிடுகிறது ஓரங்களில் ஒட்டாமல்!
அன்புடன்,
பிரபு எம்
Labels:
கார்த்திக் சுப்புராஜ்,
திரைப்படம்,
திரைவிமர்சனம்,
பிரபுதேவா,
விமர்சனம்
Wednesday, October 11, 2017
The Butterfly Effect [18+] (2004) - ஹாலிவுட் திரைப்படம்
முன்குறிப்பு: தலைப்பில் [18+] என்று குறிப்பிட்டிருப்பது படத்திற்குத்தான் இந்தப் பதிவுக்கு இல்லை :-))
Cast: Ashton Kutcher
The Butterfly Effect (2004)
Cast: Ashton Kutcher
Amy Smart
Written & Directed by : Eric Bress & J. Mackye Gruber
கிட்டத்தட்ட இந்தப் படம் வெளிவந்த வருடமான 2004ம் ஆண்டுதான் என்று நினைக்கிறேன்... அன்றைய "“ஆனந்த விகட”னில் அமரர் சுஜாதா Chaos Theory பற்றி எழுதியிருந்தார். “குழப்பம்” என்று பொருள் படும் “Chaos" தியரியைக் குழப்பமின்றிப் பின்வருமாறு எளிமையாக அறிமுகம் செய்திருந்தார்!
”ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஒரேயொரு சிறகடிப்பு காற்றுமண்டலத்தில் ஏற்படுத்தும் மிகச் சிறிய மாற்றமானது கால ஓட்டத்தில் சற்றுதூரத்தில் வீசப்போகும் ஒரு பெரும்புயலுக்குக் காரணமாகலாம் (ஆகாமலும் போகலாம்!)” - கேயோஸ் தியரியை எளிதில் விளக்கப் பயன்படும் புகழ்பெற்றதொரு Metaphor இது!
அதாவது ஒரு பெரும் சம்பவம்/அவலம் நடந்தேறும்போது அதன் மூலகாரணங்களைத்தேடிக் காலவோட்டத்தில் பின்னோக்கிச் சென்று ஆராய்ந்தோம் என்றால் அது என்றோ நிகழ்ந்த ஏதோவொரு சர்வ சாதாரணமான (ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஒற்றை சிறகடிப்பை ஒத்த) மிகச்சிறியதான ஒரு நிகழ்வைத் தொட்டுத் துவங்கியிருக்கலாம் என்பதுதான் விஷயம்!
”12 பி” திரைப்படத்தில் ஷாம் வாழ்க்கையில் நிகழும் முக்கிய சம்பவங்கள் அனைத்துமே படத்தின் 12-வது நிமிடத்தில் அவர் சிட்டிபஸ்ஸில் பயணிக்கும்/அல்லது தவறவிடும் ஒரு சர்வசாதாரணமான நிகழ்வை மையமாக வைத்து நடப்பதாக இருந்ததல்லவா இதையும் “கேயோஸ்” அடிப்படையில் மேற்கண்டவாறு வகைப்படுத்தலாம்!
”தசாவதாரம்” திரைப்படத்தில் 12ம் நூற்றாண்டில் கடலுக்குள் அமிழ்த்தப்படும் விக்ரஹம் காலவோட்டத்தில் 2004ஆம் ஆண்டு சென்னையில் மாபெரும் சுனாமிக்கு மூலகாரணமாக அமைவதாகக் காட்டப்பட்டது “கேயோஸ் தியரி”யின் படி!
சுஜாதாவும் ஷங்கரும் இணைந்து எழுதிய “அந்நியன்” திரைக்கதையில் ”கேயோஸ் தியரி”யைக் கதைக்கு ஏற்றவாறு மிகவும் நுணுக்கமாகப் பயன்படுத்தியிருந்தார்கள்! இந்தியக் குடிமகன்களின் சமூக அலட்சியங்களை மையமாகக் கொண்ட திரைக்கதையில், அதிமுக்கியமானதொரு ஃப்ளாஷ்பேக் காட்சியை வைத்திருப்பார்கள்... பள்ளிக் குழந்தைகளை சுமந்து வரும் ஒரு சைக்கிள் ரிக்ஷா நோ-எண்ட்ரியில் நுழைகிறது அங்கே வரும் ஒரு வண்டியில் மோதி கட்டுப்பாடு இழந்து ரிக்ஷா தடுமாறும்போது உள்ளே இருக்கும் ஒரு குட்டிச் சிறுமி நிலைதடுமாறி ரிக்ஷாவிலிருந்து கீழே விழுகிறாள். மழை தண்ணீர் தேங்கி இருக்கும் அந்தத் தெருவில் ஏற்கெனவே ஒரு மின்கம்பி அறுந்து விழுந்திருக்க, தேங்கிக் கிடக்கும் அந்தத் தண்ணியில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கின்றது. ரிக்ஷாவிலிருந்து கீழே விழும் அந்தச் சிறுமி சரியாக அந்தத் தண்ணீர்த் தேக்கத்திலேயே விழ மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக அந்த இடத்திலேயே உயிரிழக்கிறாள்.... அழுத்தமான இந்தக் காட்சியில் ஷங்கர், அளவுக்கதிகமான சுமையேற்றும் ரிக்ஷா, நோ-எண்ட்ரியில் செல்வது, மின்கம்பி அஜாக்கிரதை, மழைநீர் தெருவில் தேங்குவது என நிறைய சமூக அலட்சியங்களை நிரப்பி வைத்திருப்பார்.... காரணம் இந்த அலட்சியங்களில் ஏதாவது ஒன்று நிகழாமல் தவிர்க்கப்பட்டிருந்தால் கூட அந்தச் சிறுமி உயிரிழந்திருக்க மாட்டாள் என்னும் உண்மையைப் பார்வையாளர்களின் மனதில் உணர்ச்சிப்பூர்வமாக அழுத்தி ஒட்டவைப்பதற்காக!.... ஒரு பெரும் அவல விளைவு (சிறுமியின் மரணம்) சம்பவத்ததின் தொடக்கப் புள்ளி மின்கம்பிகளைப் பராமறிக்காமல் விட்டதோ அல்லது அந்த சிறு தெருவில் சரியானமுறையில் ரோடுபோடாததோ என ஒரு சாதாரன நிகழ்வுதான் அதற்குத் தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கமுடியும் - இதுதான் “ அந்நியன்” சொல்லும் கேயோஸ் தியரி!
சரி... இந்தப் படத்துக்கு வருவோம்!
ஹாலிவுட்டில் 2004-ஆம் ஆண்டு Eric Bress மற்றும் Mackye Gruber எழுதி இயக்கிய “தி பட்டர்ஃப்ளை எஃபெக்ட்” திரைப்படமும் முழுக்க முழுக்க கேயோஸ் தியரியின் அடிப்படையில் பின்னப்பட்ட படுசிக்கலான திரைக்கதையால் உருவானது!
மேலே குறிப்பிடப்பட்ட இந்தியப் படைப்புகள் கேயோஸ் தியரியின் அறிவுப்பூர்வமான யதார்த்தப் பதிவுகள் என்றால் இந்த ஹாலிவுட் படமோ அதே தியரியின் அடிப்படையில் உணர்வுப்பூர்வமான ஒரு ஃபேண்டஸி!
கதை நாயகனான எவான்(Evan)-ன் வாழ்வில், பிறக்கும்போதே ரெடிமேட் குழப்பங்கள் சூழ்ந்திருக்கின்றன... அவனது தந்தை ஒரு மனநோய் காரணமாக மனநலக் காப்பகத்தில் இருப்பவர்.... இன்னும் சொல்லப்போனால் அவனது தாத்தாவும் (அப்பாவின் அப்பா) உயிர் நீத்தது ஒரு மனநலக் காப்பகத்தில்தான்! மேலும் எவானுக்கு முன்னதாக இரண்டு குழந்தைகள் அவன் அம்மாவின் வயிற்றிலேயே மரணித்து still babies-ஆகப் பிறந்த மெடிக்கல் ஹிஸ்ட்ரி வேறு!
மிகமிக மோசமான இளம்பருவத்தைக் கடக்கிறான் சிறுவன் எவான். ஆறு வயதிலிருந்தே எவானின் அன்புக்குரிய தோழியான கேய்லீ (Kay Leigh), கேய்லீயின் மூர்க்கத்தனமான அண்ணன் டாமி (Tommy) மற்றும் இவர்களின் அப்பாவி obese நண்பன் லெனி (Lenny) மூவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பவர்கள்..... எவானுக்கு கேய்லீயின் மீது சிறுவயதுமுதலே நட்பைத் தாண்டிய நெருக்கமான உறவு உண்டு... அவளுடைய அண்னன் டாமி சிறுவயதிலேயே கொடூரமான இயல்புடையவன். டாமி மற்றும் கேய்லீயின் தந்தை மில்லர், சிறுவர்களை வைத்து தகாத வீடியோக்கள் எடுக்கும் ஓர் ஈனத்தனமான பாத்திரம். தன் ஆறு வயது மகள் கேய்லீயையும், சிறுவன் எவானையும் வைத்தே அப்படியானதொரு வீடியோவை மில்லர் எடுக்க முயல்வதாக ஒரு horrible காட்சி ஒன்று இருக்கிறது படத்தில். தனது தங்கையுடன் எவான் நெருங்கிப் பழகுவது சிறுவயது முதலே டாமிக்குப் பிடிக்காது..... ஒருமுறை தன் தந்தையால் காயப்படுத்தப் பட்டிருக்கும் கேய்லீக்கு எவான் முத்தம் கொடுக்கும்போது (மருத்துவ முத்தம் அல்ல!) டாமி பார்த்துவிட அந்தக் கோபத்தில் எவானின் வீட்டிற்கு சென்று அவனையும் லெனியையும் மூர்க்கமாகத் தாக்கி எவானின் நாய்க்குட்டியை உயிருடன் ஒரு சாக்குப் பைக்குள் போட்டு எரித்துக் கொன்றுவிடுகிறான். அதே பதின்மப் பருவத் தொடக்கத்தில் விபரீதமான ஒரு விளையாட்டாக டாமியின் வீட்டிலிருக்கும் ஒரு டைனமைட்டைப் பற்ற வைத்து அருகிலிருக்கும் ஒரு வீட்டின் தபால்பெட்டியில் லெனியை வற்புறுத்தி டாமி போடவைப்பான் அது வெடித்துவிட எதிர்பாராதவிதமாக அந்த வீட்டில் பிறந்து சில நாட்களே ஆன ஒரு குழந்தை மரணிக்கின்றது அந்தக் காட்சி அழியாத குற்ற உணர்வாக லெனி, எவான் மற்றும் கேய்லீயின் கண்கள் முன்பே நிகழ்கிறது.... இதனையொட்டி டாமி சிறுவர் ஜெயிலுக்கு செல்ல, எவானை அவன் அம்மா அந்த ஏரியாவை விட்டு வேறு இடத்துக்குப் பெயர்ந்து சென்றுவிடுவார்.... கேய்லீ தனிமையடைகிறாள் லெனி மன நலம் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகிறான்.....
எவான் வாழ்க்கையில் இந்த சம்பவங்கள் நடக்கும் பருவத்தில், அவனுக்குக் கிட்டத்தட்ட ஆறு வயதிலிருந்தே அவ்வப்போது “Black-out" ஆகிவிடும் பிரச்னை உண்டு.... அதாவது திடீரென்று அவன் மனம் ஒருவிதமான வெறுமை நிலையை அடைந்துவிட அவன் நினைவுகளில் ஒரு புள்ளிக்கு மேல் அந்த சூழ்நிலைகளில் என்ன நடந்தது என்று சுத்தமாக நினைவிருக்காது! மேலே சொன்ன ஒவ்வொரு மோசமான நிகழ்ச்சியிலும் ஒரு கட்டம்வரைதான் எவானுக்கு நினைவிருக்கும். சம்பந்தப்பட்ட அந்த காட்சிகளும் பாதியில் “கட்”டாகிப் பிறகு எவான் நினைவுக்குத் திரும்பிய பிறகுதான் தொடர்வதாய் திரைக்கதை அமைத்திருப்பார்கள்..... பாட்டன், தகப்பன் வழியில் எவானுக்கும் எந்த மனநோய் வந்துவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையுடன் முதன்முறை ப்ளாக்-அவுட் ஆனபோதே மன நல மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவார் எவானின் அம்மா.... ஆனால் தெளிவாக எவ்விதக் குறைபாடும் கண்டுபிடிக்க முடியாமல் எவானை ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்களை சிறு குறிப்பேடுகளில் தவறாது Journal எழுதிவருமாறு அறிவுறுத்துகிறார் மருத்துவர்..... எவானும் அவனுக்கு நினைவிழப்பு நேரும்வரையிலான சம்பவங்களைத் தொடர்ந்து Journal-லாக எழுதிவருகிறான்!
கேய்லீ, டாமி, லெனி ஆகியோரது வாழ்க்கை ஒவ்வொரு திசையில் பிரச்னைகளில் தேங்கிவிட கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றுவிடும் அளவு வளர்ந்துவிடுகிறான் எவான். அப்படியானதொரு வெற்றிகரமான சூழலில் எவானின் அம்மா எவானின் கையை ஒரு கைரேகை பார்க்கும் பெண்ணிடம் காட்டுவார்.... அதிர்ச்சியடையும் அந்தப் பெண்ணோ, எவானுக்குக் கையில் ஆயுள் ரேகையே இல்லை என்றும் அவனுக்கென்று ஓர் ஆன்மா (soul) இருக்கவே இருக்காது என்று சொல்கிறார்.... எவான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லையென்றாலும் அவனது அம்மா கோபப்பட்டு அந்த இடத்திலிருந்து தன் மகனுடன் வெளியேறிவிடுவார்......
கிட்டத்தட்ட படம் ஆரம்பித்து முதல் ஒரு மணி நேரத்துக்கு மேலே சொன்ன காட்சிகள்தான் சற்றே குழப்பித் தெளிவான கோர்வையின்றி நான் - லீனியராகத் திரையில் விரியும். அதன்பின்பு, கல்லூரி விடுதியிலிருக்கும் எவான் தன்னுடைய சிறுவயது நண்பர்களின் நினைவு வந்து தன்னுடைய சிறுவயது ஜர்னல்களை வாசிப்பான்...... அவ்வப்போது black-out ஆகிவிடும் பிரச்னை காரணமாக ஒவ்வொரு மோசமான சம்பவமும் பாதிவரைதான் பதியப்பட்டிருக்கும் எவானின் டைரிகளில்... அச்சம்பவங்களை அவன் வாசிக்கும்போது திடீரென்று எழுத்துக்கள் ஆடத்துவங்கி அவனுக்கு மட்டும் ஏதோ நில நடுக்கம் வந்ததுபோல் உடல்ரீதியாகக் கஷ்டப்பட்டு மூக்கிலிருந்து ரத்தம் வழியத் துவங்கும் எவானுக்கு! அப்போதுதான் ஒருவழியாகத் தெரியவரும் நமக்கு..... அதாவது, எவானுடைய பழைய டைரிகளை அவன் படிக்கும்போது அந்த எழுத்துகள் அல்லது அந்த நினைவுகள் வழியே அவன் அந்தச் சம்பவம் நடக்கும் காலத்துக்கு சென்றுவிடுகிறான் என்று! (தன் டைரிக் குறிப்பு நினைவுகளின் வழியே கிட்டத்தட்ட ஒரு டைம்-டிராவல்).
நிகழ்காலத்தில் தான் நல்லவிதமாக வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட்டாலும் தன்னுடன் வளர்ந்த நண்பர்கள் யாருமே நன்றாக வாழவில்லை என்னும் நிஜம் எவானை மிகவும் மனரீதியாகத் துன்புறுத்துகிறது.... அவர்களின் இந்த நிலைக்குத் தானும் ஒரு காரணம் என்னும் எண்ணம் அவனை மேலும் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது! தன் நண்பர்களின் வாழ்க்கையைக் காவு வாங்கிவிட்ட அப்படியான மூலகாரணமான சம்பவங்களை எல்லாம் தன்னுடைய டைரிக்குறிப்புகள் மூலம் கடந்த காலத்துக்கு சென்று மாற்றியமைக்க முனைகிறான்! (கேயோஸ் தியரியின் படி!)....
டாமி, எவானின் வீட்டில் லெனியைத் தாக்கி எவானின் நாய்க்குட்டியை எரித்துக் கொல்லும் காட்சிக்குச் சென்று அந்த சம்பவத்தை மாற்றுகிறான் அதன்படி அப்போதே டாமி போலீஸிடம் பிடிபட்டு கேய்லீ மற்றும் லெனி சற்று சந்தோஷமாய் எவானுடன் கல்லூரிப் படிப்பிலும் உடன் வருகிறார்கள்... எல்லாம் நன்றாகப் போனாலும் டாமியின் வாழ்க்கை வீணானதை கேய்லீயால் தாங்கிக்கொள்ள முடியவில்லை... அதனை சரிசெய்ய மீண்டும் ஒரு கடந்தகால சம்பவத்துக்குள் சென்று இம்முறை இவர்களின் விபரீத விளையாட்டால் மரணிக்கும் கைக்குழந்தையைக் காப்பாற்றுகிறான்,.... அந்த முயற்சியில் எவான் தன்னுடைய கை, கால்களை இழந்து சக்கர நாற்காலியில் கல்லூரி பயில்கிறான்..... லெனியும் கேய்லீயும் தன்னை நட்புடன் கவனித்துக் கொள்கிறார்கள், டாமியும் மிகவும் பண்பட்ட இளைஞனாக ஏதோ வேலை செய்கிறான்.... லெனியும் கேய்லீயும் காதலிக்கிறார்கள்! எவானுக்கு அந்த ஏமாற்றம் வலித்தாலும் ஒருவகையில் இந்த முடிவு அவனுக்குப் பிடித்திருக்கிறது.... ஆனால் அதிலும் ஒரு பிரச்னை இருக்கின்றது..... எவானின் விபத்திற்குப் பிறகு அதிகமாகப் புகை பிடித்து நுரையீரல் புற்று நோய்க்கு ஆளாகி மரணப்படுக்கையில் இருக்கிறார் எவானின் அம்மா...... !
இப்படி ஒருவர் பிரச்னையை சரிசெய்யக் கடந்தகாலத்துக்கு சென்று மோசமான சம்பவங்களை எல்லாம் எவான் மாற்றியமைத்தால், அது இன்னொருவரின் வாழ்க்கையை முற்றிலும் காவு வாங்குவதாகவே அமைகிறது! இதனால் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டவனாய் ஒரு கட்டத்தில் எவான் பிறந்த மருத்துவமனையில் தன் தாயின் மருத்துவக் குறிப்புகளை வாசித்து தன் பிறந்த நாளுக்குப் பயணமாகிக் கருவிலேயே எவான் தன்னை மாய்த்துக்கொள்வான்! (தனது தாயின் மெடிக்கல் ஹிஸ்ட்ரி படியே மூன்றாவது கருவில் மாய்ந்த குழந்தையாகித் தன் வாழ்வே இல்லாமல் செய்துகொள்கிறான்!)
எவான் கருவிலேயே இறந்து பிறக்க, எவானின் தந்தை முழு மன நலமுடன் தன் மனைவியுடனே வாழ்கிறார்.... கேய்லீ, லெனி மற்றும் டாமி எவானின் பெற்றோரின் அரவணைப்பில் நல்லவிதமாக வளர்வார்கள்.... நன்றாகப் படித்து ஆளாளுக்கு சந்தோஷமாகத் திருமணம் நடைபெற்று எல்லாரும் இன்புற்றிருக்கப் படம் முடிவடையும்.... எவான் என்று ஒருவன் உலகத்திலேயே இல்லாதவனாகிப் போகிறான்.... அப்போது அந்த கைரேகை பார்க்கும் பெண் சொன்னதை ஒருமுறை ரீகால் செய்து முடிகின்றது படம்!
படுகுழப்பமான திரைக்கதை..... மிகமிக சிக்கலான கதையமைப்பு..... முக்கியப் பாத்திரங்களான எவான், கேய்லீ, டாமி மற்றும் லெனி என நான்கு பேருக்கும் ஆறு வயதும் பதின்மூன்று வயது பிறகு இருபதுகளில் என்று ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உருவ ஒற்றுமையுடன் கூடிய மூன்று நடிகர்களை நடிக்கவைத்திருப்பது என அளவுக்கும் அதிகமாகக் கடினமாக உழைத்துத்தான் இந்தப் படத்தைத் திரையில் பதிந்திருக்கிறார்கள்....... வித்தியாசமான திரைக்கதை வடிவங்களை விரும்பும் பார்வையாளர்கள் நிச்சியம் இந்தப் படத்தைப் பார்க்கலாம்!
பதிவின் அதிக நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்! உங்கள் கருத்துக்களை மறுமொழியில் தெரிவியுங்கள்....... பேசுவோம்! :-)

Chaos theory,
கேயஸ் தியரி,
சினிமா,
திரைப்படம்,
திரைவிமர்சனம்,
விமர்சனம்,
ஹாலிவுட்
Thursday, September 14, 2017
துப்பறிவாளன் [U/A] (2017) - விமர்சனம்
வில்லன் எகிறுவதற்கு முன்பாகவே ஷோல்டரைத் தூக்கி சண்டைக்குத் தயாராகிவிடும் விஷாலை ஷெர்லாக் ஹோல்ம்ஸாக்கித் துப்பறிய வைத்திருக்கிறார் மிஷ்கின்!
தனியார் துப்பறிவாளர் கணியன்பூங்குன்றனாக விஷால், அவரது உதவியாளர்/ நண்பர் மனோவாக பிரசன்னா.... ஷேர்லக்ஹோம்ஸ் - வாட்ஸன் மாடலிலேயே ஒரு க்ளாஸிக்கல் ஸ்டைலில் ஆஃபீஸ், பல அடுக்குப் புத்தகங்கள், ட்ரேட்மார்க் இருக்கை என ஹோம்ஸ் படங்களைப் பார்த்தவர்களும் கதைகள் படித்தவர்களும் மிக எளிதில் கனெக்ட் ஆகிவிடுமாறு நேரடியாகக் கதைசொல்லத் துவங்கியிருக்கிறார் மிஷ்கின்!
அதற்கு முன்னமே படம் ஓபன் ஆன வேகத்திலேயே திரையில் இரண்டு மரணங்கள்! இடிமின்னல் (இதே ஆர்டரில்தான் முதல்ல இடி அப்புறம் மின்னல்!) தாக்கி ஒரு பொறியாளர் உயிரிழக்கிறார் பிறகு ஒரு கான்ஃபிரன்ஸில் வைத்து ஒரு காவல்துறை அதிகாரி வியர்த்துக்கொட்டி இரத்தம் உறையாமல் ஊற்றி உயிரழக்கிறார்!
தனது அதீதமான துப்புறியும் மூளைக்குச் சரியான தீணி போடும் கேஸ் கிடைக்காமல் விஷால் எரிச்சலின் உச்சத்தில் இருக்கிறார்.... ஒரு மாபெரும் செல்வந்தர் காணாமல் போன மகளைக் கண்டுபிடிக்க லட்சங்களில் விலை பேசி ஒரு கட்டத்தில் ப்ளான்க் செக்கையே நீட்டுகிறார் ஆனால் விஷால் அந்தக் கேஸை டச்சிங்கான காரணம் சொல்லித் தட்டிக்கழிக்கிறார்......
அடுத்த ஸீனிலேயே ஸ்கூல் யுனிஃபார்ம் குட்டிப்பையன் இறந்துபோன தன்னுடைய நாயின் உடலில் இருந்து எடுத்த ஒரு புல்லட் தடயத்துடன் விஷாலை அணுக, விஷால் அந்த கேஸில் சீரியஸாகக் கமிட் ஆகிறார்......
பொம்மரேனியன் நாய் உடலில் புல்லட் என்கிற ஒற்றை லீடை வைத்துக்கொண்டு துப்பறிவாளர் துப்புத்துலக்க பல விபத்து போன்ற காரணங்களால் மூடப்பட்டப் பல மர்டர் கேஸ்களில் தூசு பறக்கிறது....
கொடூரமான வில்லன் குரூப்.... கொடூரத்தில் புதுமை காட்டுவது மிஷ்கின் ஸ்பெஷல்! நல்ல உயரமான ஓங்குதாங்கு ஆசாமிகள்.. டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க தனது வலுவான புஜங்கள் புடைக்கும் கரங்களால் பக்குவமாக உணவைத் தயாரித்து ஒவ்வொரு தட்டிலும் மெயின் வில்லன் வினய் பரிமாறப் பொறுமையாக சாப்பிடுகிறது கில்லர் டீம்.... படு அமைதியான அந்த சீனில் ஆண்ட்ரியா ஃப்ரிட்ஜைத் திறந்து ஜூஸ் பாட்டிலை எடுத்து மூடும்போது நமக்கு அந்த ஃப்ரிட்ஜுக்குள் ஒருவன் உட்கார்ந்த நிலையில் இருப்பது தெரியும் பகீரென்று!
விவரிப்பதில் இருக்கும் கொடூரம் திரையில் அப்படி Raw-வாகத் தெரியாது மாறாக அந்த உணர்வுகளை மட்டுமே கடத்துவதாகத்தான் சீன் வைத்திருக்கிறார் மிஷ்கின்..... கண்கள் மையம் கொள்ளாத இடங்களில்தான் சடலங்களையும் கொலைகளுக்கான contact point-டும் இருக்குமாறு பொறுப்புடன் காட்சியமைத்திருக்கிறார் மிஷ்கின், அப்படியிருந்தும் அக்மார்க் த்ரில்லுக்கு 100% கியாரண்டி கொடுப்பது அர்ரோல் கொலேரியின் பின்னணி இசைதான்! ஸ்ட்ரிங் இன்ஸ்ட்ருமெண்டுகளால் இந்தப் படத்துக்காக அர்ரோல் வடிவமைத்திருக்கும் தீம்களை வைத்து ஏதாவது ஒரு மேலை நாட்டிற்குச் சென்று சிம்பொனியே நடத்திக்காட்டலாம் அவ்வளவு கிரியேட்டிவ் மியூசிக் படத்துக்கு! தரமான Taste-ல் சரியான Mood-ஐத் துல்லியமாகக் கடத்துகிற பின்னணி இசை அத்தனை எளிதில் அமைந்து வந்துவிடுவதில்லை! குறிப்பாகப் படத்தின் விறுவிறு சண்டைக் காட்சிகளுக்குப் பின்னணியில் அமைத்திருக்கும் அர்த்தமுள்ள Theme இசைக்கோர்வைகள் நம்மைச் சுற்றியிருக்கும் சூழலையே, சீன் கடத்தும் எண்ண ஓட்டத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிவிடுகிறது! அற்புதமான இசையை வழங்கியிருக்கிறார் அர்ரோல் கொலேரி!
கார்த்திக்கின் கேமரா கோணங்கள் பெரும்பாலும் கதாபாத்திரங்களின் Point-of-view-வில்தான் காட்சிகளை சேகரித்திருக்கிறது. விஷாலின் பாத்திரம் தன் மனதுக்குள் தோன்றும் ரேண்டம் புள்ளிகளை இணைத்து இணைத்துப் பார்த்துதான் விஷயங்களை கிரஹிப்பதாய் அமைத்திருக்கிறார் மிஷ்கின் அந்த துப்பறிவாளனின் தவிப்பை விஷுவலாக இவ்வளவு candid-ஆகக் கொடுத்ததற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக்கும் இயக்குனர் மிஷ்கினும் பாராட்டுக்குரியவர்கள் ஆகிறார்கள். படுவேகமான துப்பறிவாளனின் மனம் ஒரு விஷயத்தை முழுமையாகக் கணித்துவிட்ட அந்த நொடியிலேயே, யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கிடைத்த க்ளூவை நோக்கி தடதடவென ஓடிவிடுவார் விஷால் கேமரா அவர் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து எல்லா திசைகளிலும் ரெடியாகக் கோணம் பார்த்து நிற்கும்! கார்த்திக்கின் கேமரா பாத்திரங்களின் கண்களாகவும் ரசிகர்களின் பார்வையாகவும் வேலை செய்திருப்பது படத்துக்கு பலம் சேர்க்கிறது.
அதிகமான ஐ.க்யூ (IQ) கொண்ட கதாநாயகன், குற்றத்தையும் செய்துவிட்டு துப்பறிவாளன் துப்பறிவதையும் விடாமல் பின்தொடர்ந்து முட்டுக்கட்டை போடும் வில்லன்கள் என ரொம்பவே இண்ட்ராக்டிவ்வான திரைக்கதை அமைத்திருக்கும் மிஷ்கின் முதல்பாதியை டெய்லர் மேடாகக் (Tailor -made) கொடுத்திருக்கிறார். அத்தனை திருத்தமான திரைக்கதை மற்றும் நேர்த்தியான ஆக்கமும் கூட. ஆனால் இரண்டாம் பாதியில் கதையோட்டத்துக்குத் தொய்வை உண்டாக்கும் ஒன்றிரண்டு விஷயங்களில் தன் இயல்பான வேகத்தைக் கணிசமாகக் குறைத்துக்கொண்டு ஏறி இறங்கித்தான் க்ளைமேக்ஸை நெருங்கி வந்து சேர்கிறது திரைக்கதை! எடிட்டிங்கிலும் இரண்டாம் பாதியில் ஓர் அவசரம் தெரிவது மெல்லியதொரு மைனஸ் படத்துக்கு.
மிஷ்கினின் signature காட்சிகளும், clarity குறைந்த அனு இம்மானுவேல்-விஷால் காம்பினேஷன் காட்சிகளும் தனியாக நன்றாக இருந்தாலும் பட ஓட்டத்துக்குத் வேகத்தடை போடுகின்றன.
இம்பாஸிபிளாகச் சிந்திக்கும் ஹீரோவின் அறிவாற்றலை ஆரம்பம் முதலே சரியாகக் கணிக்கிறது வில்லன் கும்பல். அவர்களும் அசாதாரணமான உள்ளுணர்வுடன்தான் விஷாலின் அடுத்தடுத்த நகர்வுகளைத் தடயங்களின்றி சிதைக்க முனைகிறார்கள். ஆனால் கமலேஷ் பாத்திரம் (ஜான் விஜய்) அவசரப்பட்டு விஷாலைக் கொல்ல professionals அனுப்பும் அந்த சைனா ரெஸ்டாரெண்ட் சண்டைக் காட்சிக்குப் பிறகு வில்லன்களின் கை சரியத் தொடங்கிவிடுகிறது அதன்பிறகு ஒரு வலுவான கம்-பேக் வில்லன்கள் சைடில் இல்லவே இல்லை! மேலும் அவ்வளவு careful-ஆக நகரும் வில்லன்கள் கண்டிப்பாக மாட்டிக்கொள்ளும் ரிஸ்க்கில்தான் பைக் சேஸிங்கில் தப்பிக்கப் பார்க்கிறார்கள்! அதிலும் ஆண்ட்ரியா தப்பித்துவிடுவதில் நம்பகத்தன்மை இல்லை.... பாக்கியராஜ் (சத்தியமாகக் கண்டே பிடிக்கமுடியாத கெட்-அப்) வீட்டில் நடக்கும் காட்சியிலும் திடீரென்று தோன்றும் படுத்த படுக்கையான பெண் கதாபாத்திரமும் அந்தத் தலையணைக் கொலையும் எதற்கென்று புரியவில்லை.
குறைகளையெல்லாம் மறக்கடிக்கச் செய்கிற சூப்பர் க்ளைமேக்ஸ் அமைத்திருக்கிறார்கள்.... ஆனால் அதிலும், எப்போதும் விஷாலுடனேயே நிழல்போல் தொடரும் பிரசன்னா வெளியே இருப்பதை உணராமல் வினய் எச்சரிக்கையில்லாமல் இருப்பது சற்று உறுத்துகிறது. அதைவிட க்ளைமேக்ஸில் விஷாலையும், அந்த போலீஸ் அதிகாரியையும் கொன்றுவிட்டுத் தப்பித்து செல்லும் அவசரத்தில் வினய் காட்டும் casualஆன உடல்மொழியும் கட்டிப்போட்டுவிட்டு உள்ளே சென்று packing செய்வதும் த்ரில்லைக் குறைப்பதாய் இருக்கிறது. இருந்தாலும் விஷால் வினய்யுடன் நடத்தும் சுவாரஸ்யமான பேச்சுவார்த்தைகளும் இடையிடையே இடம்பெறும் சாதுர்யமான hintகளும் சூப்பர்!
ஒட்டுமொத்தத்தில் இரண்டாம் பாதியில் திரைக்கதையிலேயே ஓர் அவசரம் தென்படுகிறது.. இலங்கைத் தூதரகத்தில் ஒரு அவுட்டோர் ஷாட் மற்றும் வில்லன் தப்பிக்கப் போகும் ப்ளானை வங்காள வரைகுடாவிலேயே மேப் போட்டுக் காட்டிவிட்டுப் பிறகு அதையெல்லாம் கோர்த்து க்ளைமேக்ஸில் விஷால் விளக்கிச் சொல்வதும் சற்றே பழமையான உக்தியாகத் தெரிகிறது.
விஷால் நடிப்பில் ஜீவனுள்ள ஒரு துப்பறிவாளன் படம் முழுக்க துடிப்புடன் துள்ளித் தீர்த்திருக்கிறான்! ஷெர்லாக் ஹோம்ஸைக் காப்பியடிக்காமல் தன் பாணியிலேயே டயலாக் டெலிவரி மற்றும் உடல்மொழியை வெளிப்படுத்தியுள்ளது சிறப்பு! பிரசன்னாவுக்கு Dr.Watson பாத்திரம் அளவுக்கு screen space கிடையாது! பழைய படங்களைப் போன்ற side-kick பாத்திரமாகத்தான் இருக்கிறது (க்ளைமேக்ஸ் தவிர்த்து) ஆனால் அதிலும் நிறைவாகச் செய்திருக்கிறார் பிரசன்னா. வினய்யின் ஆஜானபாகு தோற்றமும் கடுமையான குரலும் டெவில் பாத்திரத்தை ஒரிஜினல் டெவிலிஷாக நிலை நிறுத்திவிடுகிறது... ஆண்ட்ரியா, பாக்யராஜ், தீரஜ் ரத்னம் அனைவருமே பக்குவமான வில்லத்தனம் காட்டுகின்றனர். அனு இம்மானுவேலுக்கு வித்தியாசமான பாத்திரம் அளவாக நடித்திருக்கிறார்.
ஒட்டுமொத்தத்தில் தரமான ஒரு துப்பறிவாளத் திரைப்படம் கொடுத்திருக்கிறார் மிஷ்கின்.... ஆங்காங்கே வெள்ளைப் பின்புலத்தில் தெரியும் சின்னச் சின்ன நெருடல்களையும் சரிசெய்து இன்னும் துப்புரவாகக் கொடுத்திருந்தால் மறக்கமுடியாத பதிவாக இருந்திருக்கும் என்கிற ஆதங்கம் தவிர எல்லாம் நலமே!
அன்புடன்,
பிரபு. எம்

துப்பறிவாளன்,
மிஷ்கின்,
விமர்சனம்,
விஷால்
Sunday, October 30, 2016
காஷ்மோரா [U/A] (2016)
விருந்துக்கென்று ஒரு வீட்டிற்குச் செல்லும்போதுஉணவைப் பரிமாறுவதற்கு முன்பு வீட்டைச் சுற்றிக்காட்டுவதும் ஒரு வழக்கம் (ரொம்ப சீக்கிரம் போய்விட்டோம் என்றால்..!) அப்படி சென்ற ஒரு வீட்டின் அதி நவீனத்துவம் வாய்ந்த, பிரம்மாண்டமான மாடர்ன் கிச்சன் ஒன்று உங்களை வசீகரிக்கின்றது..... சாதாரணமான சமையல் உபகரணங்கள்கூட அதிநுட்பமான வடிவமைப்பில் அதிசயிக்க வைக்கின்றது..... மாடுலார் கான்செப்ட்.... புகையை உள்வாங்கிக்கொள்ள நவீன சிம்னி என்று அந்த கிச்சன் உங்களை பிரம்மிக்கவே வைக்கின்றது என்று வைத்துக்கொள்வோம்! அந்த பிரம்மிப்பு உச்சம்பெற உத்தேசிப்பது என்னவோ சமையலறைக்குப் பெரும்பாலும் அடுத்திருக்கும் டைனிங் டேபிளில்தானே.... அப்பேர்ப்பட்ட கிச்சனில் சமைக்கப்பட்ட "மல்டி-குசின்" உணவுவகைகளை எச்சில் துளிர்த்துத் தயார் நிலையில் இருக்கும் நாக்கில் எடுத்து வைத்ததும் உணவு "சப்"பென்று இருந்தால் எந்தமாதிரியான உணர்வு எழும்?? ரிலீஸான தீபாவளி அன்று ஃபர்ஸ்ட் லுக், ட்ரெயிலர் எல்லாம் பார்த்துவிட்டு என்னன்னவோ கற்பனை செய்துகொண்டு தியேட்டரில் "காஷ்மோரா" பார்த்தவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கும் முந்தைய கேள்விக்கான பதில்! படு காஸ்ட்லி கிச்சனில் தனது அரைவேக்காட்டு உணவை சமைத்து கான்ஃபிடன்டாகப் பரிமாறியிருக்கிறார் இயக்குனர் கோகுல்!
"மல்டி-ஜானர்" படங்கள் பொதுவாக பிரியாணிக் கடைகளைப் போன்றவை.... எம்.ஜி.ஆர், ரஜினி மாதிரி மாஸ் ஹீரோக்கள் தங்கள் ரசிகர்களுக்கு பெரும்பாலும் காமெடி, ஆக்ஷன், மியூசிக்கல், ஃபேமிலி, ரொமான்ஸ் என்று கலந்துகட்டி மல்டி ஜானர் விருந்து படைக்கவே அதிகம் முனைவார்கள்.... இங்கு முன்னணி நடிகரான கார்த்தியின் வியாபாரத்தையும் மீறிய பட்ஜெட்டில் ஆக்ஷன், அட்வென்ச்சர், ஃபேண்டஸி,காமெடி, என ஒரு மல்டி-ஜானர் படமென்று எதிர்பார்ப்புகளை எகிறவிட்டு வெளியிறங்கியிருக்கும் "காஷ்மோரா"வில் காமெடி மட்டும்தான் வொர்க்-அவுட் ஆகியிருக்கின்றது.
ஏழுஜென்மங்களாக சாபவிமோசனம் தேடி ஒரு பிரம்மாண்டமான அரண்மனையில் அடைபட்டுக்கிடக்கும் குரூரமான படைத் தளபதியான ராஜ் நாயக்கின் (மொட்டைத்தலை கார்த்தி) ஆத்மாவொன்று ஆயிரம் ஆண்டுகளுக்கொருமுறை நிகழும் விசேஷமான பவுர்ணமியன்று யாகம் மற்றும் நரபலி மூலம் வெளிவர வெறிகொண்டிருக்கிறது.... அதனைத் தடுத்திடத் தனது ஏழாவது ஜென்மத்திலும் முனைப்புடன் காத்திருக்கும் ரத்னமகாதேவி ( நயன்தாரா)..... இந்தப் பின்னணியில், நிகழ்காலத்தில் ஆவிகள், செய்வினை, பில்லிசூனியம் என்று படு நம்பகமாகத் தில்லுமுல்லு செய்யும் காஷ்மோரா ( நார்மல் கார்த்தி) ராஜ் நாயக்கின் ஆவியால் தனது குடும்பத்துடன் (விவேக் அன் கோ) பலிகொடுக்கப்படத் தேர்வாகிறார்... மறுபுறம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அரசரான தனது தந்தையையும், ஒட்டுமொத்த ராஜ்ஜியத்தையுடன் தன் உயிரையும் தளபதி ராஜ் நாயக்கின் மூர்க்கத்தனத்துக்கு இழந்துவிட்ட இளவரசி ரத்னமகாதேவியோ அதே காஷ்மோராவைத்தான் ராஜ் நாயக்கின் சாபவிமோசனத்தை வீழ்த்துவதற்கு ஆயுதமாகத் தேர்வுசெய்கிறார்.
ஆவிகளுடன் பேசுவதும் பேய்களை ஓட்டுவதும் செய்வினை எடுப்பதுமாய் மீடியா வெளிச்சத்தில் ஆன்-டிமாண்டில் இருக்கும் காஷ்மோரா கார்த்தி அடிக்கும் லூட்டிகள், நிஜத்திலும் செம கல்லாகட்டும் இதுமாதிரி சூப்பர் நாச்சுரல் தில்லாலங்கடிகளை "சதுரங்க வேட்டை" ரேஞ்சுக்கு தோலுரிக்கின்றன. இது உண்மையில் பாராட்டத்தக்க பகுதி படத்தில்... மிகவும் சுவாரஸ்யமான பகுதியும் கூட... அந்தப் போர்ஷனில் காமெடி நன்றாக எடுபடுகின்றது திரைக்கதையில்...! ஒரு கட்டத்தில் ராஜ் நாயக்கின் சதியால் அந்த அரண்மனையில் குடும்பத்தோடு காஷ்மோரா அடைபட இல்லாத பேய்களை வைத்தே பிழைப்பு நடத்தும் பக்கா ஃப்ராடு கார்த்தி ரியல் பேயையும் அதேபோல அணுகுவது நன்றாகவே சிரிப்பு வரவைகின்றது திரையில். அக்மார்க் கார்த்தி ஃப்ளேவர் காமெடி சீன்கள் இவை! அப்போதுதான் ஓபனாகிறது ட்ரெயிலரில் காட்டும் "பாகுபலி" ரக ஃப்ளாஷ் பேக்..... பாகுபலி என்று டைப் செய்ததற்கே கையைக் கழுவிவிட்டு வரவேண்டும்! அத்தனை அலட்சியமாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் கோகுல் மொத்தத் தொழில்நுட்ப மெனக்கிடல்களையும் மொன்னையாக்கிவிட்டு! ஒரு போர்ப்படையின் வியூகங்களையே தனி ஆளாக (!) வீழ்த்திவிடும் மகாதீரராம் இந்த ராஜ் நாயக்.... கொஞ்சம்கூட ஒட்டாத காட்சிகள்..... புதுமை தென்படாத நடிப்பு.... க்ராபிக்ஸை மட்டுமே நம்பும் ஆக்ஷன் கோரியோக்ராஃபி என்று அநியாயத்திற்கு வீணடிக்கப்பட்ட முக்கியப் பகுதியாகிறது படத்தின் இந்த ஃபேண்டஸி ஃப்ளாஷ்பேக்.....!
அதிலும் தன்னைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் சதிவரலாறுகளை அரண்மனையில் மாட்டிக்கொண்ட காஷ்மோரா கார்த்தி எப்படிக் கண்டுபிடிக்கப்போகிறார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தால், படு சப்பையாக, நிகழ்கால "தினமலர்" தமிழில் எழுதப்பட்டிருக்கும் ஓர் ஓலைச்சுவடியில் (!) மொத்தக் கதையையும் படித்துத் தெரிந்துகொள்கிறாராம்......!
க்ளைமேக்ஸ் நெருங்கும் நேரத்திலும் காமெடிதான் செய்கிறார் காஷ்மோரா கார்த்தி ஆனால் ரத்னமகாதேவி தன்னுடலில் புகுந்ததாக நடித்து வில்லன் ஆவியைக் கலாய்க்கும் அந்தக் காட்சி படத்தில் காமெடியின் உச்சம்! செம்ம சிரிப்பு சத்தம் கேட்கின்றது தியேட்டரில்! அப்படியே தொடர்ந்து எல்லாருக்கும் ஏற்கெனவே தெரியும் க்ளைமேக்ஸுடன் சப் பென்று முடிகிறது படம்!
கார்த்தி....... காஷ்மோரா, ராஜ் நாயக் மற்றும் அவனது ஆவி என்று மூன்று ரோல்களில் வித்தியாசம் நன்றாகக் காட்டுகிறார் ஆனால் தனக்கு நன்கு பழக்கப்பட்ட காஷ்மோரா ரோலில் மட்டும்தான் செமத்தியாக ஸ்கோர் செய்கிறார் புதிதாக ஏற்றிருக்கும் வரலாற்று ராஜ் நாயக் ரோலில் கரகரவென்று கமலஹாசனை நினைவுபடுத்தும் குரலில் பேசுகிறார்.... ரத்தவெறியையும், காம பலவீனத்தையும் ஒருசேர வெளிப்படுத்தும் ஸ்கோப்பில் படு சாதாரணமாகத்தான் எடுபடுகிறது கார்த்தியின் நடிப்பு பிரத்யேகமான பாடி லாங்குவேஜும், மாடுலேஷனும் மொத்தமாக மிஸ்ஸாவது ஏமாற்றம்...! ராஜ் நாயக்கின் ஆவி பாத்திரத்தில் துண்டிக்கப்பட்ட தலையாக முகபாவனையிலும் வசன உச்சரிப்பிலும் நன்றாக செய்திருக்கிறார்! இருபது நிமிடமே வரும் நயன் தாரா ஏஞ்சலிக் லுக்கில் அழகால் கவர்கிறார் நடிப்பிலும் மிடுக்கிலும் கம்பீரம்காட்டி தனது பங்கை சிறப்புற வழங்கியிருக்கிறார்....... சிம்பிளான ரோலில் ஸ்ரீதிவ்யா வீணடிக்கப்பட்டிருக்கிறார்! கார்த்தியின் அப்பாவாக விவேக்கிற்கு இது அல்வா ரோல் அஸால்ட்டாக அள்ளுகிறார் விவேக் என்றாலும் அவருக்கு ஸ்கோப் குறைவே!
இத்தனை காலம் படப்பிடிப்பில் இருந்த படம் அரைவேக்காடான திரைக்கதை அமைப்பில் அல்லாடுவது பரிதாபத்துக்குரியதாகிறது! பிரம்மாண்டமான கேன்வாஸ்..... பலமாய் ஒலிக்கும் பின்னணி இசை..... முன்னணி நட்சத்திரங்கள்...... நவீன தொழில்நுட்பம்.... இவற்றையெல்லம் வைத்துவிட்டு படம்பார்க்கும் அத்தனை ரக ஆடியன்ஸையும் நான்கைந்து முறை விழுந்து சிரிக்கவைத்துவிட்டால் போதும் போட்ட காசுக்கு லாபம் பார்த்துவிடலாம் என்கிறரீதியிலான மற்றுமொரு சமகால தமிழ்சினிமா முயற்சிதான் இது...!
ப்ளூ ஸ்க்ரீனில் (blue screen) ஷுட் செய்துவிட்டு க்ராஃபிக்ஸில் பிரம்மாண்டமான பேக்-ட்ராப்களை க்ரியேட் செய்யும் நுட்பத்தில் இந்தப்படமும் ஒரு டெக்னிக்கல் ட்ரீட் தான் ஆனாலும் பேப்பரில் எதுவும் இல்லாத காரணத்தினால் எல்லாம் வீணாய்ப்போகிறது..... ஒரு ஹை-பட்ஜெட் படத்தின் சாத்தியங்களைப் பல்வேறு கோணங்களில் ஒளிப்பதிவு செய்யப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஓம்குமாரின் கேமரா அற்புதமாய் இயங்கியிருக்கின்றது! சாபு ஜோசப்பின் படத்தொகுப்பு தடுமாறும் திரைக்கதைக்கு எந்தவித பின்பலத்தையும் சேர்த்ததாகத் தெரியவில்லை. அதிகம் எதிர்பார்க்கவைத்த சந்தோஷ் நாரயணனின் இசையும் படத்தின் வீச்சைத் தாண்டி எவ்வித விருந்தும் படைக்கவில்லை.... "ஓயா ஓயா" பாடல் மட்டுமே மனதில் தங்குகின்றது... பின்னணி "சப்தங்கள்" வழக்கம்போல நன்றாக இருக்கின்றன ஆனால் இளையராஜா காலத்தில் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்தது "இசை" என்றல்லவா அழைக்கப்பட்டு வந்தது!
"காஷ்மோரா" - More Cash invested to make More and More Crap! Crapmora!!!
Sunday, May 08, 2016
24 [U] (2016) - (குறிப்பு: கதையின் எந்தவோர் அம்சமும் இங்கு வெளிப்படுத்தப்படவில்லை!!)
டிக்....
டிக்....
டிக்....
இதயத்தின் “லப்..டப்” கடிகாரத்தின் “டிக்..டிக்”குடன் ஒத்திசைத்திடும் காலகட்டமே நமது வாழ்க்கை! லப்...டப் நின்றாலும் டிக்...டிக் நிற்கப்போவதில்லை.... மனித வாழ்வின் ஆதாரஸ்ருதியான, கடிகாரத்தின் நொடிமுள் தட்டிடும் இந்த ஓயாத தாளத்தை அதாவது காலத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ”டைம்-மிஷின்”- உலகளவில் புனைவுகளில் ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் ஃபேமஸ் ஃபேண்டஸி கேட்ஜெட் தான்...! அதே டைம்-மெஷின் கேட்ஜெட்டைத்தான் தாராளமான பட்ஜெட்டுடன் திரைக்கதையென்னும் அதிவேக ஜெட்பிடித்துப் பறக்கவிட்டிருக்கிறார்கள்..... அடித்துத் தூள் கிளப்பியிருக்கிறது விக்ரம் கே குமார் கூட்டணி! விமர்சனத்தையெல்லாம் அப்புறம் வந்து படித்துக்கொள்ளலாம் இன்னும் படத்தைப் பார்க்கவில்லையென்றால் இங்கேயே அப்படியே "Time-Freeze" செய்துவிட்டுப் படத்தைப் பார்த்துவிட்டுவந்து மீதியைப் படியுங்கள்! நான் அசையாமல் காத்திருக்கிறேன்! :-))
சயிண்டிஸ்ட் சேதுராமன், “வாட்ச்-மெக்கானிக்” மணிகண்டன், மற்றும் அதகள வில்லன் ஆத்ரேயா என மொத்தம் மூன்று சூர்யாக்கள்.... அதாவது சூர்யா... சூர்யா... சூர்யா.....! மூன்று பங்காகப் பிரித்துக்கொண்ட ஒப்பற்ற ஓர் “ஒன் மேன் ஷோ”தான் “24”...! ஒரு நடிகராக சூர்யாவுக்கு இது ட்ரிபிள் தமாக்கா.... கச்சிதமாக ஸ்கோர் செய்திருக்கிறார்.... அதுவும் அந்த ஆத்ரேயாஆஆஆஆ..!!! அம்மாடியோவ்... திரையில் ஒரு வில்லன் தோன்றும்போது இவன் எந்தமாதிரியான சீர்குலைவை ஏற்படுத்தப்போகிறானோ??!! என்று பார்வையாளனுக்கு அடிவயிற்றில் புளியைக் கரைக்கவேண்டும் என்று சொல்வார்கள் இங்கு இந்த சூர்யா திரையில் தோன்றும்போதெல்லாம் புளிக் கரைசலையும் தாண்டி சூடான கொதிநிலையில் ஒரு காரமான மிளகுரசமே தயாராகிறது வயிற்றுக்குள்! இடுப்புக்குக் கீழே செயலிழந்த நிலையில் 26 வருட கோமாவிலிருந்து கண்விழித்த கணமே “மித்ரா..... மித்ரா...”வென மிருகக் குரலில் உருமுவதில் தொடங்கி.... டைம் ட்ராவல் வாட்ச்சைத் தனதாக்கிக்கொள்ளத் துடித்து ஒவ்வொரு சூழ்நிலையையும் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் சாடிஸ (Sadism) சாதுர்யம்.... இறுதிக்காட்சிகளில் மீண்டுவரும் மிருகவெறி என ஆத்ரேயா...... மார்க் ஆண்டனி, சித்தார்த் அபிமன்யு ரேஞ்சில் செட்டில் ஆகும் சூப்பர் வில்லன்!
”பேஸிக்கலி ஐம் எ வாட்ச்-மெக்கானிக்” என்னும் வாக்கியத்தைத் தொடர்ந்து மூன்றுமுறைக்குமேல் (படத்தில் முப்பது முறையையும் தாண்டும்...!) பயன்படுத்தித் தொடர்ந்து ஆட்டத்தில் பங்குபெறும் வாய்ப்பை “மணி” சூர்யா இழந்திருக்கவே கூடும் அந்த ஆரம்பக்காட்சிகள் இன்னும் சற்றே சளைத்திருந்தால். அத்தனைமுறை ரிப்பீட் அடிக்கும் டயலாக் அது! பொதுவாகவே டைம்-மிஷின் கதைகளில் அதனைக் கண்டுபிடிக்கும் சயிண்டிஸ்ட் அதைப் பயன்படுத்த மாட்டார் முறையானதொரு User manual-ஐக் கூடப் படிக்காமல் கதாநாயகர்கள் காலப்பயணத்தைக் கையிலெடுப்பதாகத்தான் ஹாலிவுட்-ன் "Back to the future" முதல் கோலிவுட்டில் நேற்று வெளியான ”24” வரை என அத்தனை டைம்-மெஷின் திரைக்கதைகளின் மாறாத டெம்ப்ளேட் இது! அப்படித் திடீரென்று கையில் கிடைக்கும் டைம் மெஷினை வைத்து ஆரம்பத்தில் விளையாட்டாக அலம்பல் செய்வதாகச் சில காட்சிகளை வைத்தாக வேண்டுமல்லவா?! அந்த எபிஸோடுகளில்தான் “பேஸிக்கலி ஐம் எ வாட்ச்-மெக்கானிக்” என்று சூர்யா கிட்டத்தட்ட ”புரியாத புதிர்” ரகுவரனின் “ஐ நோ” ("I know") சாதனையையே முறியடிப்பார் "திரும்பத் திரும்பப் பேசுற நீ..!" என்று ஆடியன்ஸ் அலறும் வரை!
படத்தில் சூர்யாவைத் தவிர..... தமிழ்சினிமாவின் சூப்பர் அம்மா சரண்யா, சமந்தா, சத்யன் மூவருக்கும் இந்த சென்சேஷனல் தீபாவளியில் அவ்வப்போது சின்னச் சின்ன மத்தாப்பூ கொளுத்தத்தான் வாய்ப்பு.....இதில் சரண்யா சூர்யாவிடம் ஃப்ளாஷ்பேக் சொல்லும் ஒற்றை டயலாக் சீன் ஓர் எமோஷனல் கிஃப்ட் பேக்! நித்யா மேனனுக்கு அழகும் பாந்தமும் காட்டும் ஜஸ்ட் ஒரு சுருக்கமான கேமியோ அதிலும் ஈர்க்கிறார்....சூர்யா-சமந்தா வின் “இமாஜினோ-ரொமான்ஸோஃபிலியா”காதல் நோயையும் டைம்-மெஷின் கொண்டே செதுக்கியிருப்பது அழகு என்றால் அந்தக் காட்சிகளை அழகியலோடு அணுகுவதுதான் ஆடியன்ஸுக்கு அழகு என்று நினைக்கிறேன் .... பக்கத்தில் இருந்த இரண்டு பேர் அந்தக் காட்சிகளின்போது உஸ்ஸ்... உஸ்ஸ்ஸ்... என்று நெழிந்தது அவர்களின் ரசனைக் கோளாறாகத்தான் தெரிந்தது எனக்கு! சமந்தாவின் பங்களிப்பு ரொம்பவே க்ளீன்.... மெனக்கிடமலேயே மெருகேரும் அழகில் மெழுகுச்சிலையாகக் கவர்கிறார் ப்ரொஜக்டரிலிருந்து புறப்பட்டு திரையில் விழும் ஒளியானது சமந்தாமீது படும்போதெல்லாம் பளிச்சென்று பிரதிபலிக்கிறது நம் விழித்திரையில்! செல்ஃபி வித் எம்.எஸ் தோனி போன்ற செல்லச் சேட்டைகள்.... சத்யனின் subtle காமெடி எனக் கலவையான முதல்பாதி என்றால் ஒரு சூர்யாவை இன்னொரு சூர்யா பொசுக்கெனக் கொன்றுவிடும் எதிர்பாராத அதிர்ச்சி ட்விஸ்டுடன் இண்டர்வெல் ப்ளாக்! செகண்ட் ஹாஃபில் திடீரென்று கிராமத்தில் கூட்டுக்குடும்பம் என்று வேறுதளத்தில் கால்பதித்து கதை டர்ன் அடித்தாலும் அதிலும் ஆத்ரேயாவின் அசாத்திய வில்லத்தனம் படத்தின் டெம்போவை ஆடியன்ஸுக்குக் கடத்திக்கொண்டேதான் இருக்கும்.....! எல்லாத்திற்கும் சிகரம் வைக்கும் அந்தக் கடைசி இருபது நிமிடங்கள்...... மூச்!! அதைப் பற்றி நான் எதுவும் சொல்லல..... தியேட்டரில் கொண்டாடுங்கள்!
தொழில்நுட்பரீதியாக ஒளிப்பதிவாளர் திருவின் கேமராவும் மற்றும் மேக்கிங்கில் 70%க்கும் மேலான VFX-ன் பங்களிப்பும் படத்தை முழுக்க முழுக்கத் தமிழில் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு ஹாலிவுட் திரைப்படமாகத் தந்திருக்கிறது! ஒளிப்பதிவாளர் திரு..... நீண்ட இடைவெளிக்குப்பின் தமிழுக்குத் திரும்பியிருக்கிறார் (கடைசிப் படம் “கிரீடம்” என்று நினைவு!) ஒரே படத்தில் அத்தனைக் கண்களையும் தன்பக்கம் திருப்பியுமிருக்கிறார்! திரையில் மூன்று சூர்யாவென்றால் திரைக்குப் பின்னால் ஒரே திரு தான் ஹீரோ! ஆக்ஷன் அதகளங்கள், தேர்ந்த வண்ணங்கள், க்ளோஸான கோணங்கள் இவற்றை எல்லாம் திரு போன்ற ஜாம்பவான்களிடம் சிலாகிப்பது க்ளிஷேயாகிவிட்ட ஒன்று! 24-ன் ஒளிப்பதிவில் நான் மிகவும் ரசித்தது “பாய்ண்ட்-ஆஃப் வ்யூ” ஷாட்களை! (Point-of-view shots) அதாவது ஒரு கதாபாத்திரத்தின் கண்களாகக் கேமரா பரிமாணித்து அந்தப் பாத்திரத்தின் கண் பார்வையாகவே காட்சிகளைக் காணக் கொடுப்பது! இந்தப் படத்தில் அதில் கூட ஒவ்வொரு பாய்ண்ட் ஆஃப் வ்யூவுக்கும் நுணுக்கமாக லென்ஸ் மற்றும் கோணம் பிடித்திருக்கிறார்..... குறிப்பாக.... 26 வருடங்கள் கழித்துக் கோமாவிலிருந்து கண்விழிக்கும் ஆத்ரேயாவின் பார்வையில் மித்ரா கேரக்டரைத் (அஜய்) திரையில் காண்பிக்கும்போது ஆத்ரேயாவின் நிலைகொள்ளாத கருவிழி அசைவுகளையும், கண்பார்வை மங்கலையும் அத்தனைத் துல்லியமாக நாம் உணர்வோம்.....! கதையில் வரும் டைம்-மிஷின் வாட்ச்-சிலேயே ஓர் ஐந்து வருடம் முன்னோக்கிப்போய் எடுத்துவந்த டெக்னாலஜியில் செய்த படம் இது என்று சொன்னால் கிட்டத்தட்ட நம்பிவிடலாம் அத்தனை மேஜிக்கல் மேக்கிங்...... அந்தரத்தில் freeze ஆகும் மழைத்துளிகளையெல்லாம் திரையில் கண்டுகளியுங்கள்! விக்ரம் கே குமாரின் முந்தைய தெலுங்குப் படத்தின் (”மனம்”) எடிட்டரான பிரவின் புடிதான் இந்தப் படத்துக்கும் கத்திரி பிடித்திருக்கிறார்...... பாடல்களுடன் சேர்த்து மொத்தம் 164 நிமிடங்கள் படம் ஓடுகிறது (மூன்று மணிக்கு கால்மணியே குறைவு!) ஸோ எடிட்டர் கத்திரி பிடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட நீண்ட சிகையை சீப்பு வைத்து அழகாக சீவித் தந்திருக்கிறார் என்று சொன்னால் பொருந்தும் என்று நினைக்கிறேன்....! எனக்கு நீளம் உருத்தவில்லை பிடித்தேயிருந்தது.... சொல்லப்போனால் நான் பிரமித்துதான் இருந்தேன் முக்கால்வாசி காட்சிகளில்!
”அவதார்”, “இண்டெர்ஸ்டெல்லர்”, “டார்க் நைட்” போன்ற படங்களில் திரைக்கதைக்கு இடையே நான்கு பாடல்களை வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அப்படித்தான் இருந்தது இந்தப் படத்திலும் பாடல்கள்! இயக்குனர் இதை அறியாமலில்லை அதனால்தான் ஏ ஆர் ரஹ்மான் தேவைப்பட்டிருக்கிறார் படத்துக்கு....! ரஹ்மானின் ராயல் ட்யூன்களுக்கு அதிசிரத்தையாக பிரம்மாண்ட மேக்கிங் செய்தும் பாடல்களைக் காப்பாற்றமுடியவில்லை! இந்தப் படத்துக்குப் பாடல்கள் மார்க்கெட்டிங் ஸ்ட்ராடெஜி மட்டுமே...... ரஹ்மானும் வெறும் பாஸிங் நம்பர்கள்தான் வழங்கியிருக்கிறார்... ஆனால் பின்னணி இசையில் ஆஸ்கார் நாயகன் எல்லாப் புகழையும் அள்ளிச்செல்கிறார்...! அபாரமான பின்னணி இசை குறிப்பாக ஆத்ரேயாவின் மனவோட்டத்தை வெளிப்படுத்தும் தீம்கள்!
விக்ரம் கே குமார்....எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்! “யாவரும் நலம்” மூலம் ஏற்கெனவே தமிழில் ஒரு ஹாலிவுட் படத்தை இவர் கொடுத்திருப்பதை நாம் அறிவோம்! அந்தப் படத்தில் ஒரு ஹாரர் ஜானருக்கு ஏற்ற கருப்பு-வெள்ளை ஷேடைப் பயன்படுத்தியிருந்ததாக பி.சி ஸ்ரீராம் சொல்லியிருந்தார் இதோ இந்தப் படத்துக்கு Sci-Fi & period ஜானருக்கு ஏற்ற வண்ணங்களுடன் திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்... விக்ரம் கே குமாரின் வண்ண ஞானத்தையும்... வண்ணமயமான கற்பனைவளத்தையும் ஒவ்வொரு கணமும் கண்குளிர சிலாகித்தேன்! இம்மியளவில் பிசகாகிவிடும் திரைக்கதை.... இஞ்ச் விட்டாலும் சொதப்பிவிடக்கூடிய மேக்கிங் ரிஸ்க்...... விஸ்தீரண பட்ஜெட்.... சூர்யாவின் தொடர் தோல்விப்படங்கள்..... “மனம்” தந்த மாபெரும் வெற்றியைத் தொடரும் கட்டாயம்... என அத்தனை சுமைகளையும் அனாயசமாக தூக்கியெறிந்து ஷாட்-புட் ஆடியிருக்கிறார் விகேகே..! சாம்பியன் பட்டம் உங்களுக்குத்தான் சார்!
குறைகள்..... ஹ்ம்ம்ம்.... மேஜிக் ஷோவுக்குப் போய்விட்டு லாஜிக் இடிக்குதே என்று சொல்லுமளவு அதிமேதாவிகள் நம்மிடையே இருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்..... இருப்பினும் முக்கியமான குறையென்றால் ஆத்ரேயாவுக்கும் அவரது ட்வின் ப்ரதரான சயிண்டிஸ்ட் சேதுராமனுக்கும் இடையேயான உறவு-பகை பற்றிய எந்தவொரு டீடெயிலிங்கும் இல்லாதது! சொல்லாத ஒரு ஃப்ளாஷ்பேக்கை வைத்து அதற்கு சமந்தாவின் குடும்பம் தரும் ரியாக்ஷனை வைத்து பின்னணி ஃப்ளாஷ் பேக்குகளையெல்லாம் நம் யூகத்துக்கே விட்டிருப்பதை ஒரு புதிய உக்தியாக எடுத்துக்கொள்ளலாம்தான் ஆனாலும் நம்மவர்கள் கதையோடு ஒன்றிப் பார்க்கும் பழக்கமுடையவர்கள் அல்லவா.... அதனால் நன்றாகவே இடிக்கின்றது... மற்றபடி எல்லாம் ஓகே... ஸாரி... ட்ரிபிள் ஓகே!!
மொத்ததில் படம் முடிந்தவுடன் என் வாட்ச்சை வைத்து ஒரு மூன்றுமணி நேரத்தைப் பின்னால் தள்ளப்பார்த்தேன் மீண்டும் அதே 200 ரூபாயில் படத்தைத் திரும்பவும் ஒரு மூன்றுமுறை பார்க்கலாமே என்று...... முடியவில்லை!! ஆனால் நிச்சியம் படத்தை மீண்டும் பார்ப்பேன்....!
24 - I will go for my watch again!... ஆயுஷ்மான் பவ...!!!
அன்புடன்,
பிரபு எம்
Labels:
24,
ஏ ஆர் ரஹ்மான்,
சமந்தா,
சூர்யா,
திரைப்படம்,
விமர்சனம்
Friday, April 15, 2016
தெறி [U] (2016)
படு கலர்ஃபுல்லாக ஒரு காக்கிச்சட்டையை விஜய் சைஸுக்கு ஃபிட்டாகத் தைக்க முயன்றிருக்கிறார் அட்லீ..... அளவெடுத்துத் தைக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவசரத்துக்கு அங்கங்கே சில ரெடிமேட் பிட்டுகளை சொருகியிருப்பதுதான் உருத்தல்!
அழகான கேரளாவில் ஒரு மழை நாளில் அழகுக் குட்டிச் செல்லம் நைனிகாவோடு மென்மையான விஜய் அறிமுகத்தில் இருந்து தூறலாகத் துவங்கும் திரைக்கதை மெல்ல மெல்ல வேகமெடுக்கும் ஒரு மழையைப் போல இதமாகக் கதாபாத்திரங்களையும் அவர்களுக்கு இடையிலான பிணைப்புகளையும் குழப்பமின்றிக் கூறிவிட்டு சட சடவென வேகமெடுக்கத் துவங்குகிறது..... இடையே பாட்ஷா ஸ்டைலில் ஒரு ட்ரான்ஸ்ஃபார்மேஷன் சீனில் ஆக்ஷன் இடிமுழங்க ஃப்ளாஷ்பேக்கில் படம் கனமழையாக உருவெடுத்து போலீஸ் அவுட்ஃபிட்டில் அடித்து ஊற்றுகின்றது.....! இடைவேளை வரை இடைவிடாது பெய்யும் கோடைமழையாக மகிழ்விக்கும் திரைக்கதை செகண்ட் ஹாஃபில் வெறும் மேகமூட்டமாகிப் போய்விடுவதுதான் பிரச்னையென்றால் ஒருகட்டத்தில் அதுவும் விலகி வெயில் அடிக்கத்துவங்கும்போது கூட திரைக்கதையை ரிப்பேர் செய்ய ஆளே இல்லாமல் ஆவரேஜ் படமாக முடிந்துவிடுவதுதான் மைனஸ்!
மிடுக்கும் துடிப்புமான துருதுரு டெபுடி கமிஷ்னர் கதாபாத்திரத்தில் விஜய்....... கம்பீர மிடுக்கில் மிரட்டினாலும் சட்டெனக் கண்ணீர் துளிர்த்திடும் ஓர் அலாதியான கேரக்டர் விஜய்க்கு..... விஜய் புகுந்து விளையாடியிருக்கிறார் ....... பிரம்ம்ம்மாத பெர்ஃபார்மென்ஸ் விஜயிடமிருந்து! விஜய்க்கு இணையாக அடுத்த முனையில் அனாயசமாக பவுண்டரிகளை விளாசி ஸ்கோர் அள்ளுகிறார் ஜாலி அம்மாவாக வலம்வரும் ராதிகா! சுனைனாவைப் பெண் பார்க்கப் போகும் காட்சியில் தனுஷ் ஸ்டைலில் விஜய் ஆடும் லுங்கி டான்ஸெல்லாம் செம ரகம் என்றால் அதைத் தொடர்ந்து சிக்னலில் பிள்ளைகளைப் பிச்சையெடுக்க வைக்கும் ரவுடிகளை விஜய் மெட்ராஸ் ட்ராஃபிக்கில் புகுந்து அடிப்பது சூப்பர் த்ரில்..... அப்படியே சமந்தா செக்மண்ட் ஸ்டார்ட் எடுக்க படு ஃப்ரெஷ்ஷாக ஜில்லென்று ஒரு காதல்..... சிலகாலம் முன்பு பிரபல ஐடி கம்பெனியில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தைப் பிரதிபலிப்பது போல ஒரு பிரச்னை சரியான நேரத்தில் வந்து முட்டுகிறது..... திடீரென மாயமாகும் ஒரு சாஃப்ட்வேர் பெண்ணைத் தேடத் துவங்குகிறார் விஜய்.... பத்து மணி நேரத்தில் அக்யூஸ்ட் யாரென விஜய் கண்டுபிடித்துவிட்டாலும் அடுத்த நாள் காலை மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்ட நிலையில் அந்தப் பெண் மீட்டெடுக்கப் படுகிறாள்..... அவளது மரண வாக்குமூலத்தை மையமாக வைத்துக்கொண்டு விஜய் எடுக்கும் ஷார்ப் ஆக்ஷன் படத்தில் சர்ப்ரைஸ் பேக்கேஜ்...... விளைவு மோசமான வில்லன் மகேந்திரனுடன் மூக்கு உரசல் துவங்குகிறது! காக்கிச்சட்டை கான்ஃபிடன்ஸில் மகேந்திரனைப் படு அலட்சியமாக விஜய் அணுகுகினாலும் நேரம் பார்த்து அடிக்கும் வில்லன் கும்பல் விஜய்யின் வாழ்வையே சின்னாபிண்ணமாக்கிவிடுகின்றது! சாந்தமான ஜோசஃபாக உருமாறும் விஜய் அழகு மகளுடன் அமைதியாய் ஓர் ஆனந்தப் பயணம் துவங்குகிறார்........ வில்லன் மீண்டும் வர ரிவெஞ்ச் படலம் துவக்குகிறார்! பழிவாங்கல் படலத்தில் விஜய் எடுக்கும் "கோஸ்ட்" அவதாரம்தான் போதுமான டீடெயிலிங்கோ லாஜிக் மெனக்கெடல்களோ இல்லாமல் எடுபடாமல் போய்விடுகிறது....!
கதையில் புதுமை இல்லாதது சறுக்கல்தான் என்றாலும் முதல் பாதியில் தெளிவான திரைக்கதை மற்றும் சுவாரஸ்யமான வசனங்களுடன் படம் நன்றாகவே ஈர்க்கின்றது.... விஜய், சமந்தா, ராதிகா, ஏமி, மொட்டை ராஜேந்திரன் எனப் பாத்திரங்களின் பெர்ஃபெக்ட் பங்களிப்பு "தெறி"க்கு அசுரபலம் சேர்க்கிறது....... இவர்களையும் தாண்டி சர்ப்ரைஸ் தருவது இரண்டு பேர்..... டெரர் வில்லன் இயக்குனர் மகேந்திரன் மற்றும் குட்டி டார்லிங் நைனிகா!
மழலை மாறாத பேச்சால் காண்போரைக் கட்டிப் போட்டுவிடுகிறாள் குட்டி மீனா....... உதட்டோரப் புன்னகைச் சுழிப்பும் கள்ளம் கலக்காத கண்களும் அள்ள அள்ளக் குறையாத அழகுமாய் அத்தனையையும் தாண்டித் தனி விருந்து படைத்திருக்கிறாள் க்யூட் பேபி நைனிகா! நைனிகாவுக்காகவே ஒருமுறை தனியாக பார்க்கலாம் "தெறி"யை என்றால் அது மிகையில்லாத வாக்கியமே! இத்தனை இயல்பாக ஓர் அரசியல் வில்லனா என அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறார் மகேந்திரன்.... வில்லாதி வில்லத்தனத்திற்கு ராயல் சல்யூட் ஆனால் மிகக் குறைந்த காட்சிகளே வருவது ஏமாற்றம்! சமந்தாவின் அழகும் யதார்த்த நடிப்பும் சிம்ப்ளி சூப்பர்ப்!
ரவுடிகளுக்கு விஜய் ஸ்கூலில் வைத்துக்கொடுக்கும் ட்ரீட்மெண்ட்...... குட்டிப் பாப்பா முகத்தில் தண்ணீரை அடித்துவிடும் இன்னோவாவை விரட்டிப் பிடிக்கும் ஓபனிங் காட்சி....... பாடல்களில் வரும் மான்டேஜ் காட்சிகள் என குட்டி குட்டி சுவாரஸ்யங்கள் படம் முழுக்க நிரப்பியதற்கு அட்லீயைப் பாராட்டவேண்டும்..... குடும்பம் மற்றும் காதல் காட்சிகளில் அட்லீயின் அபார வீச்சு படம் முழுக்க ரசிக்கவைக்கிறது.... பாதிக்கப்படும் சாதாரண மக்களின் வேதனைகளுக்கு ஒரு போலீஸாக விஜய் கலங்குவதாய் அமைத்திருக்கும் காட்சிகளும் அழகானவையே.... ஆனாலும் மகேந்திரன் போல ஒரு வலுவான வில்லன் கதையில் இருந்தும் விஜய்-மகேந்திரன் மோதல் எபிசோடுகள் சுமார் ரகமாகிப் போய்விட்டதுதான் ஏமாற்றம்......!
டெக்னிகலாக "தெறி"ஒரு ஸ்பெஷல் ட்ரீட்...... உலகின் மூலை முடுக்கெல்லாம் தேடி சொர்க்கலோக லொகேஷன்களைக் கவர்ந்துவருவது ஷங்கர் ஸ்டைல் என்றால் அதையே சிஜி (CG) மூலமும் செட்டிங் மூலமும் சற்றும் குறைவின்றிப் படம்பிடித்து கண்களைக் குளிர்வித்திருக்கிறார் சிஷ்யன் அட்லீ! ஜார்ஜின் ஒளிப்பதிவு பஞ்சபூதங்களிலும் புகுந்து புறப்பட்டு காட்சிகளைக் கேப்சர் செய்திருக்கிறது.... ரூபனின் எடிட்டிங் படத்தின் வேகத்துக்கு உதவியிருந்தாலும் திரைக்கதையில் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்க உதவவில்லை......! ஜிவி பிரகாஷின் 50வது படத்தில் பாடல்களில் ஸ்பெஷல் என்று எதுவும் இல்லை..... பின்னணி இசை மாஸ் பட டெம்ப்ளேட்டில் ட்யூன் பிடிக்கிறது! கலர் கரெக்ஷனும் காஸ்ட்யூம் டிஸைனிங்கும் "தெறி"யின் கண்கவர் ப்ரெசன்ட்டேஷனுக்கு பெரிய சப்போர்ட்! மேக்கிங்கில் கவனம் சிதறாது கடினமாய் உழைத்திருக்கும் அட்லீ திரைக்கதையில் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் போதும் படம் தெறிக்கவிட்டிருக்கும்..... அந்தவகையில் ஏமாற்றம்தான் அட்லீ!
தெறியாகத் துவங்கி வெறியாடித் தீர்த்திருக்க வேண்டிய படம் வெறிச்சோடிப் போய்விடுவதுதான் அதிர்ச்சியே தவிர முதலுக்கு மோசமில்லை............ குடும்பத்தோடு சம்மருக்கு "தெறி" விசிட் அடித்தால் டிக்கெட் + பார்க்கிங + பாப்கார்ன் செலவுக்கு நஷ்டமிருக்கப் போவதில்லை......!
எப்படியெல்லாமோ "தெறி"க்கப் போகுது என எக்ஸ்ட்ராடினரியாகத் துவங்கி வெரி வெரி ஆர்டினரியாக முடிகிறது தெறி.... இருந்தாலும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் தெறிக்கும் நல்ல ஒரு ஃபேமிலி என்டர்டெயினர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.......
அன்புடன்,
பிரபு எம்
Saturday, August 23, 2014
கதை திரைக்கதை வசனம் இயக்கம் [U] (2014)
"எனக்கு ஒரு விஷயம் நல்லா தெரியும் "புதியபாதை" சமயத்தில் இருந்த பார்த்திபனைவிட இப்போதைய பார்த்திபன் அறிவாளி.... ஆனால் அப்போ கொடுக்க முடிஞ்ச வெற்றிப்படங்களை இப்போ என்னால ஏன் கொடுக்கமுடியலன்னுதான் புரியல!"
"குடைக்குள் மழை" சமயத்தில் பார்த்திபன் மேற்கண்டரீதியில் ஒரு பத்திரிக்கைப் பேட்டியில் பேசிய வார்த்தைகள் இவை.....அந்த படம்... சூழ்நிலை..... ஏன் அந்த பேட்டியே கூட நினைவைவிட்டு அகன்று விட்டாலும் இந்த வார்த்தைகள் சற்று நேரம் சிந்திக்கவைத்ததாலோ என்னவோ நினைவுகளில் எங்கோ ஒரு ரூம் போட்டுத் தங்கிவிட்டது போல....நேற்று "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென்று மனதில் கதவைத் தட்டின பார்த்திபனின் இந்த வார்த்தைகள்! அனுபவசாலி பார்த்திபன் தன் அறிவைக் கசக்கிப் பரிசோதித்துப் பார்த்திருக்கும் புதிய அனுபவம் "கதை திரைக்கதை வசனம் இயக்கம்"!
இன்றைய தமிழ்சினிமாவின் ஸ்டார் ஹீரோ யார்? என்று கேட்டால் விஜய சேதுபதி , சிவகார்த்திகேயன் எட்சட்ரா.... என்று கூகிளே தப்பான பதில்களைத்தான் சொல்கின்றது..... இன்றைய தேதியில் தமிழ்சினிமாவின் உண்மையான உச்ச நட்சத்திரம் "திரைக்கதை" தான்! கடைசியா நல்லா ஓடின எல்லா படங்களிலுமே ரியல் ஹீரோ "ஸ்க்ரீன் ப்ளே"தான்...... இதனைத் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கும் நேற்றைய " நாளைய இயக்குனர்கள்!" அதான் இன்றைய இளம் இயக்குனர்கள் எல்லாருமே பாரபட்சம் இல்லாமல் "ஸ்க்ரீன் ப்ளே"யிடமே தொடர்ந்து கால்ஷீட் வாங்கி ஹீரோவாக்கிப் பட்டையக் கிளப்பும் இன்றைய புதுமைகளுக்கு இடையே தானும் திரைக்கதையை ஹீரோவாக்கி மேலும் தன்பங்குக்குக் கதையை ஜீரோவாக்கி வசனபலத்தாலும் தன்னுடைய ட்ரேட்மார்க் குறும்புகளாலும் ஒரு நேரோ கேப்பில் சக்ஸஸ் கண்டிருக்கிறார் பார்த்திபன்!
ஒரு திரைப்படத்துக்குக் "கதை" தேடும் டீம்... அந்தத் தேடல்தான் படத்தில் "கதை" இருக்கவேண்டிய ஸ்பேஸை நிரப்புகின்றது மற்றபடி திரைக்கதையும்-வசனமும்தான் மொத்தப்படமும்! பாஸிடிவ் எனர்ஜியுடன் முதல்பட வாய்ப்புக்குக் காத்திருக்கும் டைரக்டர் அஸ்பைரன்ட் தமிழ்....... "முதல்படம் எடுத்துட்டுதான் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்"னு தமிழ் சொல்லும்போது "ஓகே அப்போ அதுவரைக்கும் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்"னு சொல்லி காஷுவலாகத் தமிழைக் கரெக்ட் பண்ணும் அவனுடைய மாடர்ன் சம்சாரம் தக்ஷா! கல்யாணத்துக்குப் பிறகுதான் தமிழுக்குத் தெரிகிறது தனது மாடர்ன் சம்சாரம் ஓர் எக்ஸன்ட்ரிக் மினசாரமும் கூடவென்று! தக்ஷாவிடம் அப்பப்போ ஷாக் வாங்கிக்கொண்டும் தமிழ் சினிமா "சீனியர்" தம்பி ராமையா மற்றும் சிலபல புதிய ஆர்வங்களையும் வைத்துக்கொண்டு வீட்டுக்குள் ஸ்டோரி டிஸ்கஷன் என்கிற பெயரில் நடக்கும் குளறுபடிகள்... போராட்டங்கள்..... வாய்ப்புத் தேடல்கள் என்று அன்றாடக் கசகச அத்தியாயங்களையே வசனக் கிச்சுக்கிச்சு மூட்டி அடுத்தடுத்து கடத்துகிறார்.... இடையே இயக்குனர் பார்த்திபனாகவே கேமியோ கொடுத்து அடுத்து வரப்போகிற இரண்டு பரபர சீன்களை முன்னதாகவே காண்பித்து டெம்போ மெயின்டெய்ன் பண்ணுகிறார்...! "கதை" என்று ஸாலிடாக எதுவும் இல்லாததால் திருப்பங்களுக்குக் கதாபாத்திரங்களைத்தான் ரீப்ளேஸ் செய்தாகவேண்டும் அந்த வகையில் "இன்ட்யூஷன்" தீபாவும் , ஜாலித் திருடன் "முரளி-சுருளி"யும் படத்தை ஸ்வாரஸ்யமாக நகர்த்துகிறார்கள்! இதுவரை பார்த்திபனின் "அனுபவம்"தான் ஸ்கோர் செய்யும் ஆனால் அதுவரை தமிழின் வாழ்வில் நடந்த, வந்து போன பாத்திரங்களை வைத்தே தமிழ் தன் திரைக்கதையை செதுக்க ஆரம்பிக்கும் அத்தியாயங்களில் இதுவரை வந்த காட்சிகளையே அற்புதமாக நிஜம் என்னும் பேஸ்லைனில்(Base line) பொருத்திக்கொண்டு அதற்கு மேல்கீழாகத் தமிழின் "கற்பனைகள்" கலந்ததாய்க் கண்முன் விரியும் தமிழின் "திரைக்கதை"! அதில் ஆர்யா-அமலாபால் (அமலாபாலுக்கு ஏன் மேக்-அப் போடாமல் பயமுருத்தியிக்கிறார்கள் என்று தயவுசெய்து விளக்கம் கொடுப்பது நலம்!) நாயகன்- நாயகி! ..... படத்துக்குள் படமாகப் பார்க்கும்போது நம்முடன் பழகிய நண்பன் ஒருவன் நமக்குப் பரிச்சியமான அனுபவங்களையே படமாக்கினால் ஓர் அழகான உணர்வு வருமே அந்த உணர்வை அத்தனை ஆடியன்ஸிடம் இழுத்துவருவதில் வெற்றிகண்டுவிட்டார் பார்த்திபன் என்றுதான் சொல்லவேண்டும்! அந்த "லிவ் தி மொமண்ட்" க்ளைமேக்ஸ் செம சேட்டை...... தில்லான முடிவு!
இத்தனை ட்ரிம் அன்ட் ஸ்லிம்மாகப் படத்தை நறுக்கித் தந்திருந்தாலும் தேவையற்ற ஸீன்களும் படத்தில் இருப்பது மைனஸ்! திடீரென்று சேரன் தமிழின் வீட்டுக்கு வந்து தமிழின் முந்தைய திரைக்கதையை யாரோ திருடிப் படம் எடுத்திருப்பதாகச் சொல்வது படத்துடன் ஒட்டவில்லை! இந்தமாதிரி சவசவ காட்சிகளைத் தவிர்த்திருந்தால் படம் இன்னும் ஃப்ரெஷ்ஷாக வந்திருக்கும்..... அதேபோல "எந்த ஒரு விஷயமும் அது இல்லாதபோதுதான் அருமை புரியும்" என்று சொல்லுவார்களே அப்படித்தான் இங்கு படத்தில் கதையில்லாத தருணங்களில்தான் "கதை"யின் அருமை புரிகிறது! கதையில்லாமல் வெறும் காட்சியமைப்பு - வசன ஸ்வாரஸ்யம் வைத்து மூவ் பண்ணமுடிந்தாலும் ஒருவித அலுப்புத் தட்டுமே என்றால் பதில் "ஆமாம்! தட்டத்தான் செய்கிறது!" ஆனால் அதிலிருந்து மீட்டெடுத்து முடித்துவைத்ததுதான் இங்கு பார்த்திப வெற்றி!
நடிகர்கள் எல்லாருமே யதார்த்தமாக வாழ்ந்திருக்கிறார்கள்..... தம்பி ராமையா மட்டும் ஆங்காங்கே "நடிக்கிறார்" ஆனால் நன்றாகத்தான் நடிக்கிறார்! பார்த்திபனின் குறும்பு அப் டு டேட்டாக இருப்பதற்கு ஓர் ஆளுயுர ஆச்சர்யக்குறி!
மனிதர் பின்னிப் பெடலெடுக்கிறார் .....ஒன்லைனர்களில் அத்தனை இளமை! நரம்பும் குறும்புமாகத் தனக்குள் ஒரு காலேஜ் பையனை இன்னும் அதே உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்......
சத்யாவின் இசை - ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு - சுதர்சனின் எடிட்டிங் மூன்றுமே படத்துடன் பிரிக்கமுடியாதபடி இணைந்து செயல்பட்டது இயக்குனருக்கு பெரும்பலம் எந்தக் காட்சியும் பின்னணியில் உருத்தவேயில்லாமல் காட்சிகளின் செய்திகளை அப்படியே ரன்னிங் டைமில் உள்வாங்க முடிவதற்கு இந்த மூன்றுபேரின் உழைப்பும் அற்புதம்!
விஷால் - விஜயசேதுபதி-பிரகாஷ்ராஜ்-தப்ஸி பன்னு தோன்றும் அந்த முதல் காட்சி டீஸர் சீன்கள் சர்ப்ரைஸ் கிஃப்ட்!
மிக நல்ல முயற்சி..... ஆச்சர்யமான கம்-பேக்...... " கதையில்லாமல் ஒரு திரைப்படம்?" என்ற ஒரு டேக்-லைனால்தான் ஜெயித்திருக்கிறார் பார்த்திபன்...... சி.வி. குமாருக்கே டஃப் கொடுக்கும் மார்க்கெட்டிங் ஸ்ட்ராடெஜி அது! பார்த்திபனும் இன்னும் ரேஸில் இருக்கும் ஓர் இளம் இயக்குனர்தான்...... ஆல் தி பெஸ்ட் சார்....
கதை திரைக்கதை வசனம் இயக்கம் - Might not be exceptional but worth an experiment :-)
அன்புடன்
பிரபு எம்
Saturday, November 02, 2013
ஆரம்பம் [U] (2013)
மேக் இட் ஸிம்பிள்!.... இதுதான் "ஆரம்பம்" அஜித் படத்தில் வில்லன்களுக்கு அடிக்கடி கொடுக்கும் கூல் அட்வைஸ்!
அதையேதான் அல்டிமேட் ஸ்டார் விஷ்ணுவர்தனுக்கும் சொல்லியிருக்கிறார் போல அவர் "ஆரம்பம்" கதையெழுதுவதற்கு முன்! .....அதே அட்வைஸ் படம் பார்க்கும் நமக்கும் நன்றாக பொருந்தும்! So... Let's also KEEP IT SIMPLE! :-)
ஸ்டைல், ரிச்னஸ், ஃப்ரெஷ்னஸ் இதெல்லாம் இல்லாம அஜித் படமா?..... இதெல்லாம் இருந்தாலே அந்த ஏரியா பக்கம் லாஜிக், ரியாலிட்டி எல்லாம் இருக்க முடியுமா?!! இந்த புரிதலுடன்தான் இந்தப் பதிவே ஆரம்பம்! ;-)
குண்டு வைப்பதற்கு தீவிரவாதிகளுக்கும்..... குண்டுவெடிப்பு சீன் வைக்க இந்திய சினிமாவுக்கும் மும்பையைத் தவிர வேறு இடம் இல்லாத காரணத்தினால் இந்தப் படமும் மும்பையில்தான் ஆரம்பிக்கிறது.......! ஆனால் அந்த பாம்களையெல்லாம் வைத்துவிட்டு ஸ்டைலாக நடந்துவந்து போலீசுக்கு இன்னும் இருபது நிமிஷத்துல குண்டுவெடிக்கப்போகுது என்று இன்ஃபர்மேஷன் சொல்வது யார் தெரியுமா?? ... அதான் சொல்லிட்டேனே " நடந்து வந்து"ன்னு.... அப்புறம் என்ன சஸ்பென்ஸ்......யெஸ்.... சாட்சாத் நம்ம தலதான்!!!! பாம் ஸ்க்வாடாலேயே டிஃப்யூஸ் பண்ண முடியாத இன்டெலிஜெண்ட் பாம் என்பதால் பொதுமக்களை மட்டும் காப்பாற்றிவிட்டு பாம் வெடிப்பதை வேடிக்கை பார்க்கிறார்கள்........... !
அடுத்த ஸீனில்........ உலகத்தின் எந்தவொரு நெட்வொர்க்கையுமே ஜஸ்ட் தனது லேப்டாப் கீ-போர்டில் தடதடவென எதையோ தட்டி 'ஹேக்' செய்துவிடும் ஓர் இன்னொசண்ட் ஹேக்கர் பாய் அறிமுகாகிறார் அவர்தான் ஆர்யா!
இத்தனை மூளைக்கார ஆர்யாவை அஜித் அப்படியே அலேக்காக அபேஸ் செய்கிறார் அவர் காதலி டாப்ஸியைப் பகடையாக்கி! தன்னுடைய ஸ்டைலிஷ், வில்லனிக், ரிவெஞ்ச் எபிஸோடுக்கு ஆர்யாவின் ஹேக்கிங் மூளையை ஃப்ரீயாக ரெக்ர்யூட் செய்து தன் அடுத்தடுத்த நகர்வுகளால் தேசத்தையே உலுக்குகிறார் அஜித்...... இந்த ஆபரேஷனில் அஜீத்துக்கு ஒரே ஒரு போல்ட் அன்டு ப்யூட்டிஃபுல் அஸிஸ்டெண்ட் நயன்தாரா! அஜீத் யார்? நயன் தாரா யார்? அஜீத் எதற்காக "ஃப்ளாஷ் நியூஸ்" சேனல் அதிபரைக் குறிவைக்கிறார்? எதற்காகக் கொலைகள் செய்கிறார்? இந்தியாவின் ஹோம் மினிஸ்டருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?? என்று சஸ்பென்சுடன் உண்மையிலேயே விருவிருவெனப் போகிறது முதல்பாதி..... இன்டெர்வெலின் ஆக்ஷன் ப்ளாக் ஒரு மினி க்ளைமேக்ஸ்! இன்டெர்வெல் வரைக்கும் படம் செம இண்டரெஸ்டிங்ங்ங்!!!
அதான் ஃபர்ஸ்ட் ஹாஃப் முடிஞ்சிடுச்சே..... இப்போ ஒரு ஃப்ளாஷ்பேக் வெச்சு எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லுவாங்கன்னுதான் பாப்-கார்ன் கவரை வெடிச்சிட்டு ஸீட்டுக்குத் திரும்புகிறோம்..... ஃப்ளாஷ்பேக்கில் தெலுங்கின் யங் ஸ்டார் ராணா வருகிறார்.....! அஜித்தும் ராணாவும் மும்பை ஆண்டி-டெரரிஸ்ட் ஃபோர்ஸின் இன்டெலிஜெண்ட் ஆஃபீஸர்ஸ்......... இருவரும் உயிர் நண்பர்கள்! அப்புறம்தான் நமக்கே தெரியுமே...... ஒரு ஆபரேஷனில் ராணா உயிரிழக்கிறார்....... புல்லட் ப்ரூஃப் அணிந்தும் புல்லட்டுகள் துளைத்து ராணா இறந்திருக்க...... புல்லட் ப்ரூஃப் அப்ரூவலில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது! அதை நியாயப்படி அஜீத்தாலும், ராணாவின் தங்கை நயன் தாராவாலும் எதுவுமே செய்யமுடியாமல் போகத்தான் இந்த மெகா ரிவெஞ்ச் ஆரம்பம்!!
அதன்பிறகு படத்தில்...... ஸ்விஸ் பேங்க், துபாய் பேங்க் அக்கௌண்ட்டுகள் எல்லாம் ஹேக் ஆகும்..... மும்பை போலீசிடம் அரெஸ்ட்டாகித் தப்பித்த அஜித் அடுத்த ஸீனில் துபாய் ஏர்-போர்ட்டில் அடுத்த ப்ளான் போட்டுக்கொண்டிருப்பார்...... ஹை-ப்ரொஃபைல் கார்கள், டுகாடி பைக், ஸ்பீட் போட் என்று பறப்பார்..... ஹோம் மினிஸ்டரைத் தூக்குவார்...... நாமும் பார்த்துக்கொண்டே இருக்கும் டெம்போவில் ஒருமாதிரி நல்லாத்தான் இருக்கும் என்று வைத்துக்கொள்ளலாம்! :))
ஸிம்பிளாக சொன்னால்..... துபாய்ல வெச்சு டுகாட்டி பைக் தல கிட்ட எப்படி கிடைச்சுச்சு?ன்னு யோசிச்சா உங்களுக்கு உங்க 200 ரூபாய் வேஸ்ட்.... அதே.... "தல என்னமா பைக் ஓட்டுறாரு!!" ன்னு சிலாகிச்சா... இந்த தீபாவளி "தல" தீபாவளிதான்!!!! ......
அஜித், நயன், ஆர்யா, கிஷோர், அதுல் குல்கர்னி, மஞ்ச்ரேக்கர், யுவன், விஷ்ணு வர்தன் என்று பெரிய பெரிய பெயர்கள் இருந்தாலும் மேன் ஆஃப் தி மேட்ச் அவார்டை சற்றும் யோசிக்காமல் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்குக் கொடுத்துவிடலாம்...... இத்தனை அட்வான்ஸ்மென்ட்களுக்குப் பிறகும் இத்தனை ஃப்ரெஷ்ஷாக அயல்நாட்டு அழகை அள்ளிக் கொடுத்திருப்பது ஓசியில் ஓர் ஆன்ஸைட் ட்ரிப் கிடைத்ததுபோல் இருக்கும்! அழகியல் படம்தான் இது...... கலை இயக்கம், காஸ்ட்யூம் டிசைனிங், ஒளிப்பதிவாளர், இயக்குனர் அனைவரும் அணுக்கமாக செதுக்கியிருக்கிறார்கள் படத்தின் அழகியலை!
அஜித்தை அணுஅணுவாக ரசித்து உடை வழங்கி மீண்டுமொருமுறை அசத்தியிருக்கிறார் அனு வர்தன்! நூறு படம் முடித்துவிட்ட யுவனுக்கு படத்தின் வியாபாரத் தேவைகளையும் ரசிகனின் அப்ளாஸ் தருணங்களையும் கரெக்டாக மேட்ச் செய்து இசையமைக்கத் தெரியாதா என்ன?! கரெண்ட் ட்ரெண்டின் "Passing Cloud" நம்பர்களால் தன் பங்கை முடித்திருக்கிறார்!
ஆர்யாவுக்குத்தான் படத்தில் Dramatic Priority அதிகம்..... அந்த "குண்டுப்பையன்" கான்செப்ட் செம இளமை புதுமை! அதையும் மீறி அஜித் அடித்து விளையாடுவதுதான் அல்டிமேட்! அஜித்..... சிம்ப்ளி சூப்பர்ப்ப்ப்ப்ப்......
நயன் முகத்தில் தெரியும் முதிர்ச்சி நடிப்பிலும் தெரியும்போது என்ன பிரச்னை!...... அஜித்தோட சேர்ந்து வரும்போது நயன் இன்னும் அழகாகத் தெரிவது நேச்சுரல் ப்யூட்டி!.... அஜித்- நயன் இடையே "காதல்" இல்லாதது மெச்சூரிட்டி...... தேங்க்யூ டைரக்டர் சார்.......
டாப்ஸி..... ஸாரி...... பாப்பாவுக்கு நியூஸ் வாசிக்கவே தெரியல அப்புறம் நடிக்கிறதப் பத்தியெல்லாம் பேசலாம்......
ஆர்யா அவர் ஏரியாவில் செமையாக ஸ்கோர் செய்கிறார்....... அதுல் குல்கர்னி, மகேஷ் மஞ்ச்ரேக்கர் எல்லாம் பெரிய ஆளுங்க.... பாவம் இந்த இந்த காஸ்ட்லி மீலில் அவர்களெல்லாம் ஊறுகாய்கள்தான்....... கிஷோர்... வழக்கம்போல ஷார்ப் ஆனால் "ஆரம்பத்"திற்குப் புதிதாக எதுவுமே தரவில்லை....... "ஹரிதாஸ்" கிஷோர் இந்தப் பகுதியை நடித்துக்கொடுத்திருப்பதுபோலத்தான் இருந்தது!
பஞ்ச் டயலாக் ஹீரோக்கள் எல்லாம் ஹிட் கொடுக்கத் திணறும் இந்த "விஜய சேதுபதி" ட்ரெண்டில் ஒரு ஸ்டார் வேல்யூ மூவி என்று மீண்டும் முதலிலிருந்து தொடங்கும் "ஆரம்பம்" இது என்று சொல்லலாம் ஆனால் இருந்தும் படத்தின் ரிசல்ட் வேற மாதிரி வந்தால் தமிழ் சினிமா ஆடியன்ஸ் மாறியிருக்கிறார்கள் என்று ஊர்ஜிதமாகிவிடும்!! பார்ப்போம......
என்ன ஒண்ணூ..... ஒரு சேஞ்சுக்கு அஜித் அவர் கால்ஷீட் வாங்குவதற்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு கதையில் நடித்தால் அழகான அந்த "நடிகனின்" ரசிகன் இன்னும் குதூகலிப்பான்! மற்றபடி ஆல் இஸ் வெல்!
ஆரம்பம் - டேக் இட் ஈஸி!! :-)
அன்புடன்
பிரபு எம்
Saturday, August 17, 2013
ஐந்து ஐந்து ஐந்து [U/A] (2013)
தொடர்ந்து ஐந்துக்கு ஐந்து நட்சத்திரங்களையும் பெறுகின்ற திரைக்கதைகளாகத் தேர்ந்து இயக்கும் சசி, இந்தமுறை ஏனோ ஐந்துக்கு மூன்று போதுமென்று த்ரீ ஸ்டார்ஸை மட்டும் குறிவைத்துத் (!) தூக்கியிருக்கிறார்! தனது வழக்கமான மெல்லின சினிமாவைத் தாண்டி இம்முறை வல்லினத்தில் கதை பிடித்திருந்தாலும் யரல"வளவள"ல திரைக்கதையால் படம் இடையினமாகப் போனதுதான் வருத்தம்!
பேரலல் (Parallel) திரைக்கதையில் சாக்லேட் பாயாக பரத், புதுமுகம் மிருத்திகாவை காதலிக்கும் சுவாரஸ்ய அத்தியாயங்கள் ஒருபுறமிருக்க மற்றொருபுறம் ஆக்ரோஷ பரத் இன்வெஸ்டிகேட் செய்வது தான் காதலித்தது நிஜமா? தன் காதலி உண்மையா அல்லது கற்பனையா? என்று! பரத்தைப் பரிசோதிக்கும் டாக்டரும் பரத்தின் அண்ணன் சந்தானமும் லியானா(மிருத்திகா) என்று ஒரு பெண்ணே நிஜமில்லை என்று சத்தியம் செய்யத் தன்னைக் காதலித்து ஒரு விபத்தில் இறந்துபோன பெண்ணே நிஜமல்லையோ என்று துடிக்கிறார் பரத்........ ஒருகட்டத்தில் பரத் தன்னைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள போலி சதுக்கங்களையெல்லாம் கண்டறிய, அவற்றை உடைத்தெறியும் முயற்சியில் ஒருவழியாக சைக்கோபாத் வில்லனைக் கண்டுபிடிக்கிறார் அதன்பிறகு குழப்ப முடிச்சுகள் எல்லாம் ஒன்றொன்றாக அவிழ இறுதியில் எய்ட் பேக் இரும்பு உடம்புடன் பரத் தடைகளைத் தகர்த்து காதலியை மீட்கும் ஆக்ஷன் காம்போதான் எதற்கிந்த பெயர் என்று இறுதிவரை விளங்காத "ஐந்து ஐந்து ஐந்து"!
வித்தியாசமான கதையில் விஷயம் முழுக்கத் தெரிந்த கதாபாத்திரங்கள் திரைமறைவில் இருந்து ஆட்டுவிக்க முக்கியப் பாத்திரம் உண்மைகளைத் தெரிந்துகொள்ளத் துடிப்பதாக அமைந்திருக்கும் திரைக்கதையில் எதுவுமே புரியாமல் படம் பார்க்கும் ஆடியன்ஸால் சஸ்பென்ஸை பரத்துக்கு முன்னாடியே யூகித்துவிடமுடிவது மட்டுமே குறை திரைக்கதை தரமாகப் பின்னப்பட்டிருந்தாலும்!
பரத்.... ஒரே படத்தில் பல பரிமாணங்கள் காட்ட ஸ்கோப் இருக்கும் படு வெயிட்டான பாத்திரம்! மொத்தப் படத்தின் கணத்தையும் தன் வலிமையான தோள்களால் சுமந்திருக்கிறார் நிறைவாக! தன்னைச் சுற்றிலும் பொய்யாகப் பின்னப்பட்டிருக்கும் மாயவலையில் சிக்குண்டு தவிக்கும் காட்சிகளிலும், தன்னிடம் "பவர்" இருக்கின்றது என்று மிருத்திகாவுடனான இன்னொசன்ட் லவ் எபிஸோடிலும் பரத்தின் உடல்மொழி கச்சிதம்! வாய்ஸ் மாடுலேஷனில் மட்டும் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்! எய்ட் பேக் பாடிபில்டிங் எல்லாம் படத்தின் மார்க்கெட்டிங்குக்கும் பரத்தின் ஃப்யூச்சரிக்கும்தான் உதவியிருக்கிறதே தவிர படத்துக்கு எதற்கு என்பது கேள்விக்குறியே! எப்படிப்பார்த்தாலும் பரத்துக்கு இந்தப் படம் ஒரு பவர் பேக்ட் ஒன் மேன் ஷோ!
மிருத்திகா..... குழந்தைத்தனம் கண்களில் இன்னும் மிச்சமிருக்கும் குட்டி அழகி! குறும்பு கொப்பளிக்கும் கண்கள் விழித்துக்கொள்ளும்போதெல்லாம் உற்சாகமும் சேர்ந்து தொற்றிக்கொள்கிறது! நைஸ் கேர்ள்!
சுதேஷ் பெர்ரி... வித்தியாச வில்லன்.... கண்களை மறைத்துக்கொண்டு உடலாலும் தமிழ் தடுமாறும் பேச்சாலும் வயலன்ஸ் காட்டும் சைக்கோ வில்லன்..... க்ளீன் பெர்ஃபார்மென்ஸ்
சந்தானம் இந்தப் படத்தில் சந்தானமாக மிகச்சொற்பமான காட்சிகளில்தான் காமெடியனாக சிரிக்கவைக்கிறார்.... மற்றபடி அவருக்கு இதில் சப்போர்ட்டிங் ரோல்தான் அதிகம்!
சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவில் வேகமும் வீரியமும் இன்னும் கொஞ்சம் கைகூடியிருந்தால் திரைக்கதைக்கு அழுத்தமும் கொஞ்சம் கைகோர்த்திருக்குமோ என்று ஓர் உணர்வு எழுந்தது! உதாரணத்துக்கு சமீபத்தில் வந்த சிங்கம்-2 வின் ஒளிப்பதிவைச் சொல்லலாம் பரபர ஆக்ஷன் ஸ்க்ரிப்டுக்காக ஸ்பெஷலாக மெனக்கிட்டுருக்கும் கேமரா அபாயகரமான கோணங்களிலெல்லாம் அதகளமாகப் பயணித்து வேகமான திரைக்கதையை மொமண்டம் குறையாமல் ஸ்க்ரீனில் உட்காரவைத்திருந்தது! ஆனால் இந்தப் படத்தில் அதுபோன்ற எந்தவொரு சாகசமும் செய்யவிலை சரவணன் அபிமன்யுவின் கேமரா ரொம்பவே சாத்வீகமாகமான ஒளிப்பதிவு!
சுபாரக்கின் எடிட்டிங்கைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்...... அத்தனைத் துல்லியமான படத்தொகுப்பு....
விபத்துக்காட்சிக்கு முன்னும் பின்னுமாக இன்ஸ்டால்மென்டில் கதைசொல்லும் திரைக்கதையைக் கொஞ்சமும் குழப்பமின்றி காட்சிகளால் கோர்த்துக்கொடுத்த நேர்த்தி க்ளாஸ்!
சைமனின் இசை ஜஸ்ட் பாஸ் ரகம்! பின்னணி இசை இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாம் இருந்தாலும் சமகால ஆக்ஷன் படங்களைப்போல் இரைச்சல்களால் நிரப்பிவைக்காமல் விட்டது நல்ல ஆறுதல்!
சசியின் திரைக்கதை எழுதும் திறனைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதுமில்லை.... தமிழின் மிகத்தேர்ந்த கதைசொல்லிகளில் சசியும் ஒருவர் என்பது நிதர்சனம் இருப்பினும் தனக்குப் புதிதான களத்தில் கால்பதித்திருக்கும் சசி இந்தப் படத்தில் சற்று தடுமாறியிருப்பதுபோல் தெரிவதற்கு படத்தின் தாமதமான ரிலீஸும் ஒரு முக்கியக் காரணம்!
மற்றபடி இயக்கமெல்லாம் அருமைதான்! முதலிலேயே சொன்னதுபோல சசியின் ஃபைவ்ஸ்டார் படைப்பு இதுவல்லதான்! எனினும் தன்னால் ஒரு முழுநீள ஆக்ஷன் த்ரில்லரை வழங்க முடியுமென நிரூபித்திருப்பதில் வெற்றிகண்டிருக்கிறார் என்று நிச்சியம் சொல்லமுடியும்..... என்னதான் இருந்தாலும் "a Sasi Film" இதுவல்ல! :-(
ஐந்து ஐந்து ஐந்து --> ஐந்துக்கு ஐந்து அல்ல!
அன்புடன்,
பிரபு எம்
Thursday, February 07, 2013
டேவிட் [U/A] (2013)
ஒரு பெயர்.... இரண்டு வாழ்க்கை.......
அதாவது இரண்டு டேவிட்!!
இதே படம் ஹிந்தியில்..... ஒரு பெயர்.... மூன்று வாழ்க்கை......
அதாவது மூன்று டேவிட்!!!
நான் ஸ்கூல்ல படிக்கும்போது எங்க க்ளாஸ்ல மொத்தம் நாலு பிரபு இருந்தோம்.....
அதாவது..... ஒரு பெயர்....... நான்கு வாழ்க்கை.....!!!! (அதுல ஒருத்தன் பேரு டேவிட் பிரபு!! ஹிஹிஹிஹி)
என்னதாண்டா சொல்ல வர்றன்னு எரிச்சலா கேக்குறீங்களா.......! அதான் அதான் அதேதான்.....! அதையேதான் எனக்கும் கேட்கணும் பிஜாய் நம்பியார்கிட்ட!!!! :-))))
"பாஸ்.... என்னதான் சொல்ல வர்றீங்க????????????????!!!!!!!!!!!!!!!"
ஜீவா பேரும் டேவிட்........ விக்ரம் பேரும் டேவிட்! ஜீவாவோட எபிஸோட் 1999ல மும்பைல நடக்குது......
விக்ரமோட எபிஸோட் 2010ல் கோவாவில் நடக்குது.......
ரெண்டும் சேர்த்து 2013 என்னாத்துக்கு தமிழ்நாட்டுல வந்து எழவு கொட்டுதுன்னுதான் புரியல....!!!
வெல்.....
1999-ல் மும்பையில் ஒரு கட்சிப் பொதுக்கூட்டத்தில் ரோஹிணி ஹட்டங்காடி பெருங்கூட்டத்துக்கு முன்பாக மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்திலிருந்து ஜீவா முன்வரிசையை நோக்கி வருகிறார்....... கையில் கத்தியுடன்!!! நமக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது....... ஏன்...........?? ஏன்னா அதான் ஃபர்ஸ்ட் சீன்!
2010-ல் கோவாவில் ஒரு கல்யாணம் நடக்குது.... விக்ரம் மாப்பிள்ளைத் தோழனா நிக்குறாரு...... மணக்கோலத்துல இருக்குற பொண்ணுகிட்ட ஏதோ வில்லங்கமா பேசப் பாக்குறாரு..... அதுவும் நமக்கு எதுவுமே புரியாது..... ஏன்னா அதுவும் விக்ரம் எபிஸோட்ல முதல் சீன்!
அப்புறம் ஒரே பேருடைய இந்த ரெண்டு வாழ்க்கையிலும் ரெண்டு ஃப்ளாஷ்பேக் ரெண்டு மணி நேரம் ஓடும்........
அதுக்கப்புறமா................
1999-ல் மும்பையில் ஒரு கட்சிப் பொதுக்கூட்டத்..... ரேஹிணி ஹட்ட...... பெருங்கூட்டத்....... மைக்கி..... பேசிக்.......போது ஜீவா முன்வரிசையை நோக்கி வருகிறார் கையில் கத்தியுடன்!!!
2010-ல் கோவாவில் ஒரு..... கல்யா........விக்ரம்..... மாப்பி.......த்தோழ...... நிக்குறா.... மணக்கோ.... இருக்குற பொண்ணுகிட்ட ஏதோ வில்லங்கமா பேசப் பாக்குறாரு......!!!"
அதாவது...... அதே சீன் ரெண்டு மணி நேரம் கழிச்சு வருது.......ங்கொய்ய்யால..........அப்பவும் நமக்கு ஒரு எழவும் புரியலைன்னா என்னதாங்க பண்ணுறது!!!! :-)))
சரி.... அப்புறம் என்ன நடக்குதுன்னு கேக்குறீங்களா?! ஜீவா ரோஹிணி ஹட்டங்காடியைக் கொல்லுறமுன்னாடியே அவருக்குத் தெரிந்த இன்னொருத்தன் அவங்கள சுட்டுத்தள்ளிடுவான்...... விக்ரம் லவ் பண்ண அந்தப்பொண்ணை நிச்சியம் பண்ணபடி அவர் நண்பன்தான் கல்யாணம் பண்ணிக்கிறான்!
குழப்பமா இருக்கா.... நீங்க குழம்பக்கூடாது ஏன்னா...... படம் சொல்லுற மெசேஜ்.... "வாழ்க்கைல வலியத் தாங்குறவன்தான் டேவிட்!"
அந்தவகையில் பார்த்தா படம் பாக்குற எல்லாருமே "டேவிட்"தான்!!!! :-))
என்கூட தியேட்டர்ல ஒரு 57 "டேவிட்"கள் படம் பாத்தாங்க......
ஸோ..... ஒரு பெயர்..... 57 வாழ்க்கை!!! :-))))
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜோக்ஸ் அபார்ட்.....
வித்தியாசமான முயற்சின்னு சொல்லலாம்! ஹ்ம்ம்ம் சொல்லித்தான் ஆகணும்.....
ஜீவா எபிஸோட்....... சீஸனல் எஃபெக்டாக.....ஒரு கிறிஸ்தவக் குடும்பப் பின்னணியில் மும்பையில் நிகழ்கிறது.....
கல்லா கட்டுவதில் விருப்பமில்லாத நேர்மையான ஃபாதர் நோயலாக நாசர் (ஆக்சுவலி பாஸ்டர் என்றுதான் அழைக்கவேண்டும்!) ஒரு சாதாரண பொலிடிகல் கேமுக்காக சம்பந்தமே இல்லாமல் ஃபாதர் நோயல் மிகக் கொடூரமானமுறையில் பப்ளிக்காக அவமானப் படுத்தப்படுகிறார்... ஜீவாவால் எதுவுமே செய்யமுடியாமல் போகிறது...... நாசரின் மனநிலை இதனால் பாதிக்கப்படுவதால் ஜீவா ரொம்பவே டிஸ்டர்ப் ஆகிறார்..... நாசர் ஷேவ் செய்யும்போது முகத்தில் ஆர்ப்பாட்டக்கும்பல்தன் முகத்தில் கரிபூசி அவமானப் படுத்திய காட்சியை நினைத்து ரேசரால் முகத்தைக் கிழித்துக்கொள்ளும் காட்சி நிஜமாகவே மிக அழுத்தமானது! நாசர் நடிப்பு அபாரம்!...... ஜீவா நியாயம் கேட்கக் கிளம்புகிறார்.... அடிவாங்குகிறார்... அடிக்கவும் செய்கிறார்...... எல்லாம் எதார்த்தமாக நகர்வது பெரிய ஆறுதல்!
ஜீவா நியாயம்கேட்டுத் தட்டும் ஒவ்வொரு கதவும் ஏற்கெனவே திறக்காத கதவுகள் என்று சின்னவயதில் இருந்து சினிமா பார்ப்பவர்கள் அத்தனைபேருக்குமே தெரியும்! இருந்தாலும் காட்சிகளின் யதார்த்தம் பலமே!
நம்மைக் கொடுமைப்படுத்தாமல் மெல்லியதொரு அனுபவம் கொடுக்கும் காட்சித்தொகுப்பு ஜீவாவின் எபிஸோட்!
ஒருபக்கம் ஜீவாவின் கதை படு க்விக்காக டேக்-ஆஃப் எடுத்து சீரியஸாகக் கிளம்பிவிட...... மறுபுறம் கோவாவில் சீயான் விக்ரம் எந்த லட்சியமும் இல்லாத ஒரு லைட்டான கதையமைப்பில் குடி..குடி...குடி யென்று குடித்துத்தள்ளுகிறார்..... "குடிப்பழக்கம் உடல்நலத்திற்குக் கேடு" என்னும் வார்னிங் வாக்கியம் ஏதோ சேனல் லோகோ போல ஸ்க்ரீனின் ஓர் ஓரத்தில் நிரந்தரமாக இடம்பிடித்துவிடுகின்றது விக்ரம் எபிசோட் முழுக்க!! திருமணம் முடிவான மணநாளன்று விக்ரமின் மணப்பெண் தன் பாய்ஃப்ரெண்டுடன் ஓடிப்போய்விட அந்த விரக்தியின் வலியில் உழலும் கேரக்டர் விக்ரமுக்கு! அவரது ஒரே தோழி மசாஜ் பார்லர் வைத்திருக்கும் தபு.... "என் கல்யாணம் நின்னுபோனப்போ ஊரே என்னப் பாத்து சிரிச்சப்ப நீ மட்டும்தான் எனக்காக அழுத..!!" என்று தபுவைப் பார்த்து போதையில் விக்ரம் எமோஷன் கொட்டும்போது.... "உன் கல்யாணப்பொண்ணு ஓடிப்போகும்போது என் நகைய எல்லாம் தூக்கிட்டுப் போயிட்டா அத நெனச்சுதான் நான் அழுதேன்னு உன்கிட்ட நிறைய தடவ சொல்லிட்டேன் டேவிட்!!!"னு அசால்டாகச் சொல்லுவார் தபு......... :-)) இப்படித்தான் முழுக்கதையும் நகரும்! நடுவே நண்பனுக்கு நிச்சியக்கப்பட்ட ஓர் அழகான அர்ச்சனாவ ("மொழி" ஜோதிகா பேரு!! புரிஞ்சிக்கோங்க!) விக்ரம் லவ் பண்ண ஆரம்பிப்பார்..... அவளும் தன்னை விரும்புறா என்று சைகை மொழிக் குழப்பத்திலும், 24/7 போதையிலும் விக்ரம் தானும் நம்பி தபுவையும் நம்ப வைப்பது சுவாரஸ்யம்...... கடைசியில் விக்ரமின் நண்பனுக்குத்தான் கிடைப்பாள் அந்த மௌன தேவதை!!!
இரண்டு கொஞ்சம்கூட சம்பந்தமில்லாத கதைகள்... கடைசியில் இரண்டு டேவிட்டுகள் சந்தித்துக் கொள்வதைத் தவிர வேறு எந்த சினிமாத்தனமும் இல்லாமல் நகர்வது நல்ல விஷயம்!
கோவா ...... ஜாலி ஆவியாக வலம்வரும் விக்ரம் அப்பா கேரக்டர்..... விக்ரம் எடுக்கும் "கிறுக்கு சாண்டா!!" காமிக் கேரக்டர்...... மற்றும் புதுமையான கோவா வாழ்க்கை போன்றவை விக்ரம் ஸ்பேஸை ஜாலியாகக் கொண்டுபோனாலும் ஒருபக்கம் ஜீவா சீரியஸ்ஸாகப் பாதிகிணறு தாண்டிவிட்ட போதும் தேமேயெனத் தண்ணியடித்துக் கொண்டிருக்கும் சீயான் படத்தில் சோலோ டிராக் காமெடி செய்கிறாரோ என்றுதான் தோன்றும்!
ஜீவா பகுதியில் லாரா தத்தா இயல்பாக வந்தாலும் அரைகுறையாகப் போய்விடுவார்..... அதுவும் யதார்த்தம்தான்!
யதார்த்தமும், பரிசோதனையின் புதுமையும் தவிர "டேவிட்" ஒரு விபரீத முயற்சிதான்.... அதிலும் குறிப்பாகத் தமிழில்!
ஏற்கெனவே தொடர் தோல்விகள் தந்துகொண்டிருக்கும் ஜீவாவை இன்னும் நாலுபடி கீழே தள்ளிவிடும் கான்செப்ட் இது! ஆனால் உடல்மொழியும், டயலாக் டெலிவரியிலும் ஜீவா பின்னியெடுக்கிறார்! நடிப்பு சூப்பர்பா வருது ஜீவாவுக்கு......... விக்ரம், தபு, மற்றும் எல்லாருமே நடிப்பில் படு கேஷுவலாகக் கலக்கியிருப்பார்கள்! நடிகர்கள் எந்தக் குறையும் வைக்கல..........
படத்தில் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் இசை! அனிருத்தோட சேர்த்து மொத்தம் ஆறேழு பேர் போடுறாங்க டைட்டிலில்.... பாட்டும் சரி..... இசையும் சரி இனிமை புதுமை!
ரத்னவேலு மற்றும் வினோத்தின் ஒளிப்பதிவு இரண்டு கதைகளையுமே யதார்த்தமான நிறங்களில் கண்களுக்குக் குளுமையாகப் பரிமாறியிருக்கிறார்கள்......
ஆனால்...........எல்லாம் இருந்தும் எதுவுமேயில்லை என்கிற மாதிரிதான் இருக்கும் படம் முடிந்தபின்பு!
புதுமையென்று சொன்னால் "12-பி" கூடத்தான் புதுமையான முயற்சி... ஆனால் விளைவு என்ன ஆனது? அதேதான் இங்கும்!!
வலியைத் தாங்கும் "டேவிட்"..... ஒரு பெயர்...... இரண்டு வாழ்க்கை
அழுத்தமே இல்லாத "டேவிட்" ஒரு படம்..... இரண்டு கதைகள்........!! :
மொத்தத்தில் .......
ஆடியன்ஸுக்கு "டேவிட்" - ஒரு டிக்கெட்....... இரண்டு நூறு ருபாய் நோட்டு....... ஊஊஊஊஊஊ... கோவிந்தா கோவிந்தா!!!! :-))))
சீக்கிரம் விஜய் டிவில போட்டுடுவாங்க..............பாருங்க!!
அன்புடன்,
பிரபு எம்
Tuesday, February 05, 2013
விஸ்வரூபம் [U/A ] (2013)
"தக தக தக.....
தின தின தின....
னாகனாக தகிடதகிட......" வென கச்சிதமான "கதக்" வெட்டுக்களுடன் அபிநயக் கமல் திரையில் தோன்ற ஆர்ப்பரிப்பது இந்தமுறை கமல் ரசிகர்கள் மட்டுமல்ல...... அவரைப் படுத்தியெடுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் புண்ணியத்தில ஆதரவுமொழியில் அரங்கமே கைதட்டி வரவேற்கிறது கமலை....... மரியாதையுடன்!! :-))
தகிட தகிடவெனக் குறும்பாகக் குழையும் விஸ்வநாத எபிஸோட் சட்டென முடியும்வேகத்தில் படம் தடதடக்க ஆரம்பித்து நிற்காமல் தொடரும் ஜாலத்தில் தாமதமாகத்தான் நினைவுக்கு வருகிறது "தடை பண்ண இந்தப் படத்தில் என்ன இருக்கிறது என்று?!"
தடைகளை மட்டுமல்ல...... தமிழ் சினிமா இயங்கிவரும் தளங்களையும் உடைத்து விஸ்ஸ்ஸ்ஸ் எனக் கிளம்பியிருக்கும் "விஸ்வரூபத்"தின் முதல் அத்தியாயம் இது!!!!
பொதுவாகவே பயங்கரவாதத்தைத் (Terrorism) தீவிரவாதம் (Extremism) என்று அழைக்கும் தவறான வார்த்தைப்பிரயோகம் தமிழில் சகஜம்!
பூமியில் பயங்கரங்களை விதைப்பவர்களின் பெயர் பயங்கரவாதிகளே! அந்த பயங்கரவாதம் ஓரளவு நியாயப்படுவதுபோல் தெரியும் (இன்றைய மீடியா/சோஷியல் நெட்வொர்க்கிங் நியதிகளின்படி!) "தீவிரவாதிகள்"அல்லது இன்னும் சிறப்பாகப் "போராளிகள்"என்று அழைக்கப்படும்போது!!! இந்த பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதங்களை உள்ளும் புறமுமாக அணுகுவது விஸ்வரூபத்தின் புதுமை என்றால் அதற்கு இத்தனை வேகமான திரைக்கதையும் விவேகமான காட்சியமைப்பும் சாத்தியமா(க்)கியிருப்பது நிச்சியமாக அத்தனை சாதாரணமான காரியமில்லை!
நியூயார்க் நகரில் ஒரு நியூக்ளியர் குண்டுவெடிப்பை நிகழ்த்த தாலிபான்களின் தலைவர் ஓமர் (ராகுல் போஸ்) ஒரு மெகா மகா திட்டம் தீட்டுகிறார்...... "திட்டம்" என்றால் ஒரு டெரர் ப்ளான் என்று கடைசி சீனில் துப்பறியும் அதிகாரி சிரித்துக்கொண்டே விளக்கிச் சொல்வதுபோல் இல்லாமல்..... நுணுக்கமாக, மிக மிக நுட்பமாக...... பயங்கரவாத சம்பவங்களில் இதுவரை வெளிவந்திருக்கும் ஒவ்வொரு ஃபுட்டேஜும் எப்படித் தயாராகியிருக்கும் என்கிற ரீதியிலெல்லாம் செல்லும் அசுரத்தனமான கற்பனை...... அமெரிக்க மற்றும் உலக நாடுகளின் கோணத்தில் திரைக்கதையின் பார்வை வைக்கப்படும்போது தாலிபான்களின் அனைத்து செயல்பாடுகளும் உணர்வுகளும் மொத்தமாகவே "பயங்கரவாதம்" என்று நமது மனங்களால் லேபிள் குத்தப்படும்! அதே திரைக்கதை அடுத்த தளத்தில் அந்த ஆஃப்கன் மண்ணிலேயே கால்பதித்து ரத்தமும் யுத்தமுமாய் கோணத்தை மாற்றும்போது...... "பயங்கரவாதம்" என்னும் வார்த்தைக்குள் ஒளிந்திருக்கும் ஜிஹாதியில் தொடங்கி..... பாசம், தியாகம், புனிதம் என்றெல்லாம் நவரசமும் வெளிவந்து பதைபதைக்க வைத்திருப்பதுதான் திரைக்கதையின் விஸ்வரூபம்!
இப்படித் தீவிரவாதத்தை "உள்ளும் புறமுமாக" அணுகியிருப்பது எப்படி சாத்தியமானது என்று கமல் ஒருநாள் விளக்கிச்சொல்ல வேண்டும்...... என்னைப் பொறுத்தவரை தீவிர/பயங்கரவாதங்களை உலகம் அணுகவேண்டிய மாற்றுக் கோணத்தில் உலக நாயகன் அணுகியிருக்கிறார்! (செகண்ட் பார்ட்டில் என்ன சொல்லப்போகிறார் என்று ஆர்வம் பெருகுகிறது!)
ஆஃப்கானிஸ்தானின் யுத்தக்கள மண்ணைப் பரிசோதித்து அம்மனிதர்களின் ரத்த ரசாயணங்களை அளந்துபார்த்தபின் தன் கதைக்கான விதைகளைத் தூவியிருப்பது அறுவடையில் யதார்த்தமாய் அழகாக மட்டுமின்றி அழுத்தமாகவும் வந்திருக்கிறது!
ஒரு பட்டனில் உடல்சிதறி உயிர்விடப்போகும் சிறுவனின் முந்தைய இரவின் இருநிமிட கடைசி ஆசையாக ஊஞ்சலில் கண்மூடிக் காற்று வெளியில் அவன் மிதக்கும் ஏகாந்தம் அடுத்தகாட்சியில் அவன் உயிர்விடும்போது அந்த "மனித வெடிகுண்டின்" உயிரிழப்புக்கூட உஷ்ணப்படுத்துகிறது! ரேடியோ ஆக்டிவ் சீசியத்தை வெறும் விரல்களால் சுரண்டி கேன்ஸரை அன்புடன் வரவழைத்து ஸ்லோ டெத்துக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டவர்களை பயங்கரவாதிகள் என்பதா இல்லை தீவிரவாதிகள் என்பதா இல்லை என்னவென்று அழைப்பது?!! கால்படாத இடங்களில் நம்கண்பட வைப்பதைத்தான் கடல்தாண்டிய தமிழ்சினிமா செய்திருக்கும் சாதனை....... விஸ்வரூபம் கண்படா இடங்களை மனதில் விழவைத்திருப்பது அபூர்வம்!
வெல்....இந்தப் படத்தை ரசிக்கக் கொஞ்சம் பொதுவிஷய தரிசனமும் உலகத்திரை பரிச்சியமும் இருப்பது நலம்..... ஜஸ்ட் பார்த்துவிட்டு உவ்வே.... மொக்கபடம்னு யார் சொன்னாலும் " நோ கமெண்ட்ஸ்"தான்....... எப்படி தடை செய்யப் படத்தில் என்ன இருக்கின்றது என யோசித்தபோது புரியவில்லையோ அதேபோலத்தான் படத்தை மொக்கை, சப்பையென்று தூற்றுவதற்கும் எதுவுமில்லை........ விஸ்வரூபம் தருவது ஒரு திரைஅனுபவத்தை......! அனுபவத்தில் நல்ல அனுபவம்..... மொக்கை அனுபவம் என்று பகுத்துப்பார்ப்பதற்கெல்லாம் ஏழறிவு வேண்டும்....அதனால... வெரி சாரி..... எனக்கு ஆறுதான் இருக்கு! ;-)
கமல் நடிப்பு.......... "பாட்ஷா"வில் மாணிக்கம் திடீரென்று பாட்ஷாவாகும் சீனைப்போன்று இதிலும் ஒரு பவர்ஃபுல் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் சீன் உண்டு...... அதில் கமல் மாற்றிக்காட்டும் இரண்டு பாத்திரங்களுக்கும் இடையேயான டிஃப்ளெக்ஷன் கோணத்தை அளப்பதற்கு நடிப்புலகில் ஏதேனும் மெட்ரிக் அளவு இருந்தால் எல்லா மொழிகளிலும் திரைநடிப்புப் பள்ளிகளில் பாடமாக்கிவைக்கலாம்! இத்தனை ஆழமான கதையமைப்பிலும், காட்சியமைப்பிலும் கமல் தன் நடிப்பையும் இயக்க ஸ்பேஸ் எடுத்துக்கொண்டதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்! காரணம் "விருமாண்டி"யில் அந்த விஷயத்தில் எனது ஏமாற்றத்தைப் பதிவுசெய்திருந்தேன்! கமல் அபாரம்!
பூஜாகுமார்... பாத்திரம்..... என்னைப்பொறுத்தவரை பளிச் சென்று திரைக்கதையில் தெரியும் ஒரு லெட்-டவுன்...
கமல் படத்து 'பொம்மனாட்டிகள்' எல்லாரும் எப்போதும் இப்படித்தான் இருப்பார்கள் என்று எல்லாருக்கும் தெரிகின்ற அளவுக்கு அதே பேட்டர்ன்..! இதில் அவர் ந்யூக்ளியர் ஆன்காலஜியில் பி.ஹெச்.டி முடித்தவர்வேறு... சூழ்நிலை கைமீறிப்போய்..... டெரரிஸம்..... கொலை....அம்மாஞ்சிக் கணவனின் "விஸ்வரூபம்"என சர்வகொடூரத்தையும் சாதாரணமாகக் கண்முன்னே பார்த்தபின்னும்கூட அவ்ளோ அறிவாளிப்பொண்ணு "தசாவதாரம்" அசின் மாதிரி மொன்னத்தனமாக கேள்விகேட்பதும் கதறுவதுமாக இருப்பது இத்தனை அசாத்தியமான முயற்சியில் அசட்டுத்தனமாகத் தெரிந்தது....
ஆனால் க்ளைமேக்ஸின் மைக்ரோவேவ் கான்செப்ட்.....வாவ்!!
ஆண்ட்ரியா, சேகர் கபூர்..... திரைக்கதை போகும்போக்கில் பொருந்திக்கொண்டு கோ-ஆப்பரேட் செய்திருக்கிறார்கள்.......
ராகுல் போஸின் "விஸ்வரூபத்தை"ப் பார்க்கவாய்ப்பில்லை...... ஆனால் ஒரு சூடான சந்தர்ப்பத்தில் விரல்களால் துப்பாக்கி சுடும் காட்சியில் "இவன் யாரென்று தெரிகின்றதா?!" என்று பாட்டு கேட்கும் அவர் யாரென்று தெரிந்தவர்களுக்கு!
"அல்லா ஏன் இப்படிச் செய்யறாரு ?" என்று ஃபுல்டைம் டெரரிஸ்ட் (ராகுல்தான்!) ஆற்றாமையில் அழுவதாக ஒரு காட்சி வரும்..... ரொம்ப ரொம்ப சென்ஸிடிவ்வான காட்சியது...... திரையில் பாருங்கள்!
நாசர்..... அடப்போங்க சார்..... நீங்க எல்லா பாலும் சிக்ஸர் அடிப்பீங்கன்னு நான் வேற சொல்லணுமா!!
சானு வர்கீஸின் ஒளிப்பதிவில்..... தாலிபான் தீவிரவாதிகளே தமிழ்ல பேசினாலும்கூட தமிழ்ப்படம்னு நம்பமுடியல அத்தனை சாகசாமான சர்வதேசத்தரம்! இந்தப் படத்துக்கு இவ்ளோ வேணும்தான்.... கொஞ்சம்கூட காம்ப்ரமைஸ் செய்துகொள்ள முடியாத பொறுப்பை ஏற்றுத் தானும் இம்மியளவு காம்பரமைஸ் செய்துகொள்ளாமல் மிரட்டியிருக்கிறார் மனிதர்......
படம் போன வேகத்தில் மகேஷ் நாராயணனின் எடிட்டிங்கை நிதானித்து கவனிக்கமுடியவில்லை.... இதுக்குமேல என்ன சொல்லணும்!
ஷங்கர்-லாய்-எகாஸனின் இசை மிரட்டுகிறது பின்னணியில்!
தொழில்நுட்பம் அபாரம்.... எனக்கு ஆரோ 3டியில் காணும் வாய்ப்பு கிட்டவில்லை..... எனினும் டால்பி-க்யூபிலேயே மிரட்டிய சவுண்ட் எஞ்சினியரிங் ஆரோ 3டியில் அதிரடித்திருக்கும் என்று நம்புகிறேன்!
ரொம்பவே ஹை-ஃபை தொழில்நுட்பத்தில் கலக்கியிருக்கிறார்கள்.......
"வில்லன்" என்று யாரும் இல்லாததும் "வில்லத்தனம்" என்பது நாயகன் உட்பட எல்லாரிடமும் இருப்பதும் நான் ரசித்த மிகமுக்கியமான பொதுப்பொருள் "விஸ்வரூபத்தில்"!
இது வேறுமாதிரியான முயற்சி....... பொத்தாம்பொதுவான பொதுப்பொருளாகிவிட்ட சர்வதேச தீவிரவாதத்தின் கருப்பொருள் சிதையாது வந்திருக்கும் மிகவும் ப்ரோடோடைப் இந்தியப் பதிவிது உலகசினிமாவில்!
இன்னும் ஹோம்-க்ரவுண்டிலேயே படம் ரிலீஸாகத காரணத்தால் கதையையும், சிலாகித்த பல காட்சிகளையும் குறிப்பிடாமல் தவிர்த்திருக்கிறேன்..... படம் பார்த்தவர்களுக்கு ஸாரி!
விஸ்வரூபம் - விஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்......வ்ர்ர்ர்ர்ரரூரூம்ம்ம்ம்!!!!
நல்ல வித்தியாசமான விஸ்தீரணமான திரை அனுபவத்திற்காக விஸ்வரூபம் பாருங்க!
அன்புடன்,
பிரபு எம்
Monday, October 01, 2012
தாண்டவம் [U] (2012)
"தாண்டவம்" என்னும் வீரியமான ஆட்டத்தைக் குறிக்கும் டைட்டிலில் ஒரு மெலடி ஆக்ஷன் சால்சா!
அதிரடி அடாவடி என்று ஈஸி எக்ஸ்ப்ரஸ் பிடித்துக் கரைசேர்ந்துவிட நினைக்காமல் ஆக்ஷன் களத்தில் அணுக்கமும் நுணுக்கமும் பதிக்க முயன்றதற்கு இயக்குனரைப் பாராட்டலாம்......
நான் மூளைக்கு ரெஸ்ட் கொடுப்பதற்காக சினிமா பார்ப்பவன்..... எனவே லாஜிக் பார்க்கும் மூளைசெல்களின் ஆழ்ந்த உறக்கத்தில் "தாண்டவத்"தை சிறப்பாகவே ரசித்தேன்....! படம் சொல்லப்போகும் "தியரி"களையெல்லாம் நெட்டில் முன்கூட்டியே படித்துவைத்துக்கொண்டுத் திரையிலும் மூளையைத் தீட்டிவைத்துக்கொண்டுப் படம்பார்க்க இது என்ன கிறிஸ்டோஃபர் நோலான் படமா?!! டேக் இட் ஈஸி பாஸ்..... :-))
ஒரு பயங்கரவாத குண்டுவெடிப்பில் தன் பார்வையை இழந்துவிடும் இந்திய உளவுத்துறையின் ஹை-ப்ரொஃபைஸ் ஆஃபீசர் விக்ரம் அதன் பின்னணியில் இருக்கும் டேஞ்சர் வில்லன்களைப் பழிவாங்குவதே கதை.... ஸோ உலகத்துக்கே தெரியும் படத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கு! ஃப்ளாஷ்பேக்கில் அனுஷ்கா வருகிறார்..... (படத்தில் ஆங்காங்கே சந்தானமும் வருகிறார்!) அனுஷ்கா-விக்ரம் "லவ் ஆஃப்டர் மேரேஜ்" பகுதிகளின் டேஸ்ட்களும் அங்கிருந்து படத்தை லண்டனுக்கு மூவ்பண்ணும் ட்விஸ்ட்களும் சுவாரஸ்யமாகவே கதையை நகர்த்திச்செல்லும்! (லாஜிக் எல்லாம் பார்க்கலைன்னு முதல்லயே சொல்லிட்டேன்!)
விக்ரம்..... கிட்டத்தட்ட "பாபா" ரஜினி மாதிரி இருக்கிறார்..... வெரி ஸாரி டு ஸே... தனது முதுமையடைந்த தோற்றத்தைப் பொருட்படுத்தாமல் வெளிஉலகுக்கு வரும் ரஜினிகூட திரையில் தன் தோற்றத்தில் காம்ப்ரமைஸ் செய்துகொள்வதில்லையே.... ஒரு ஃபேஸ் லிஃப்டிங்கோ அல்லது ஏதாவது காஸ்மெட்டிக் சர்ஜரியோ செய்துவிட்டு அனுஷ்காவுடன் ரொமான்ஸ் செய்யக் கிளம்பியிருக்கலாம் விக்ரம்.....! அடுத்த படம் ஷங்கருடன்.... ஸோ.... நோ வொரீஸ் லுக்கைக் கரெக்ட் செய்துவிட்டுத்தான் ஷூட்டிங் போயிருப்பார்கள் என்று நம்பலாம்...... விக்ரமின் லுக்கைப் பொறுத்தவரை அது இயக்குனர் விஜய்க்கும் ஒளிப்பதிவாளர் நீரவ்வுக்கும்கூட ஒரு லெட் டவுன் தான்.... ஸாரி! :-(
தோற்றத்தில்தான் முதுமை.... மற்றபடி விக்ரமின் இருப்பே திரையை நிரப்பிவிடுகிறது! அந்தளவு கணமான நடிப்பு.... ரியாக்ஷன்களையும் பாடிலாங்குவேஜ்களையும் ரசித்துச் சிலாகிக்க எத்தனையோ இடங்களைப் படத்தில் சொல்லிக்கொண்டே போகலாம்...... கம்பீரமிடுக்கிலிருந்து கசிந்துருகும் காதலுக்கும், காதல் ரசத்தை அப்படியே காமெடி ரியாக்ஷன் ஆக்குவதற்கும் மனிதருக்கு ஒரு நொடிக்கும் குறைவான நேரமே தேவைப்படுகிறது...!! விக்ரம்.... சிம்ப்ளீ சூப்பர்ப்...... இந்த ரோலில் "தில்"லாகக் களமிறங்கி சீயான் "தூள்" கிளப்பியிருப்பதெல்லாம் கூடப் பரவாயில்லை ஆனால் கடைசிவரை எந்த இடத்திலும் "காசி" தெரியவே தெரியாமல் மீண்டுமொருமுறை பார்வையற்றவராக வலம்வந்திருப்பதுதான் விக்ரமின் டச்! விக்ரமைப் பார்க்க வந்தரவர்களுக்கு செம விருந்துதான்!
அனுஷ்கா..... கிராமத்துப்பெண் என்று அனுஷ்காவை விக்ரமும்..... சாதாரண எஸ்.ஐ என்று விக்ரமை அனுஷ்காவும் பரஸ்பரம் தவறாக நினைத்துக்கொண்டுத் திருமணம் செய்துவைக்கப்பட..... படுஸ்வாரஸ்யத்துக்கு ஸ்கோப் வைத்து விரியும் ஃப்ளாஷ்பேக்கின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் மேடம்தான்!! ரொம்ப நாளைக்குப்பிறகு ஒரு கிராமத்துக் கல்யாண வைபவம்..... கன்னத்தில் மஞ்சள் பூசி தழைய தழையப் புடவை கட்டிய அழகு அனுஷ்கா..... சந்தனச்சிலைக்கு எதற்கு கன்னத்து மஞ்சள்?னு எல்லாம்அநியாயத்துக்கு யோசிக்கவைத்துவிட்டார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்! :-)) நடிப்பும் அபாரம்.... ஒரு சராசரி மனைவியாகத் தொழில் நிமித்தம் தன்னால் இருக்க முடியாது என்று முதலிரவில் விக்ரமிடம் சொல்லும் காட்சியில் " நமக்கு முதல்ல ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கணும்.... அப்புறம் ஃப்ரண்ட்ஸ் ஆகணும்.... அப்புறம் லவ்... அப்புறம்தான் மற்ற விஷயங்கள் எல்லாம்" என்று சொல்லுவ்ம் டோட்டலி சைலண்ட், க்ளோஸ்-அப் ஷாட்டில் அனுஷ்கா வெளிப்படுத்தும் பக்குவமும், முகத்தில் ஒரு தவிப்புடன் கூடிய பெண்மையும்...... லவ்லி!! அனுஷ்காவைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் படத்தில்!
தெலுங்கு சீனியர் ஜெகபதி பாபு...... கிட்டத்தட்ட "கோ" படத்து அஜ்மல் மாதிரி கேரக்டர் ஆனாலும் சார் சீனியர் அல்லவா... தனது பாத்திரம் தடம் மாறிவிட்ட நிலையில் திரைக்கதை இவரை நிராயுதபாணி ஆக்கிவிடும் ஆனாலும் தன் பாவணைகளால் சற்று சுமந்திருப்பார்.... அது க்ளாஸ்! அதேபோல் இன்னொரு சீனியர் நாஸர்..... இலங்கைத் தமிழும் (கொஞ்சம் மிஸ்ஸிங்!) ஐ-பேடில் கேமுமாகத் துப்பறியும் அனாயஸ ஆஃபீஸர்.... விஜய்யும் திரைக்கதையில் இவருக்குக் கொஞ்சம் ஸ்கோப் வைத்திருக்க நாஸர் கேக் வாக் செய்திருக்கிறார்.... கேட் வாக்கிற்குப் படத்தில் ஏமி ஜாக்சன்... சைஸ் ஜீரோ என்றெல்லாம் சொல்லிவிட முடியாது..... ஹிப்சைஸ் மைனஸில் போகிறது!!! ப்ரிட்டிஷ்+தமிழ் ப்ராமின் கலப்பாக இவரை ஸ்க்ரீனில் அக்காமடேட் செய்திருந்தாலும் இவரை அழகான பொண்ணுன்னு சொல்லமுடியவில்லை.... ப்யூட்டிஃபுல் கேர்ள் என்றுதான் சொல்லமுடியும்! :-)
நீரவ் ஷா இவரது கண்களால்தான் ஏற்கெனவே நான் பார்த்து ரசித்து பாரீஸை இன்னும் அழகாகக் கண்டு ரசித்தேன் (எங்கேயும் காதல்) இந்தப் படத்தில் என் கண்கள் கண்டிராத லண்டனை ரசித்தேன்...! டெல்லி, ஒரு தமிழ்க்கிராமம், லண்டன் என்று ஒவ்வொரு காட்சிக்கும் கச்சிதமான ஷேட்களால் அலங்கரித்திருக்கும் நீரவ்வின் ஃபோட்டோகிராஃபி Flawless Fantasy! ஆண்டனியின் எடிட்டிங்கும் வழக்கம் போல சூப்பர் கூல்.....
ஜிவி பிரகாஷ்தான் ஏமாற்றி இருக்கிறார்...... பாடல்களை சிரத்தையாகப் படமாக்கியும்கூட காப்பாற்ற முடியாத நம்பர்ஸ்.....! பின்னணி இசைகூட காட்சியை நிரப்பமட்டுமே உதவுகிறது... காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் சத்தம் கண்டிப்பாக இசைதான் ஆனால் அந்த இசையில் பெரிதாக விஷயங்கள் இல்லாதது வருத்தம்!
எழுத்து + இயக்கம் விஜய்..... மேக்கிங் எல்லாம் க்ளாஸ்தான்..... ஆனால் குட்டிக் குட்டியாய் உருட்டி வைத்திருக்கும் சுவாரஸ்ய தோட்டாக்களால் சுடப் பார்க்கிறார்.... ஆனாலும் அந்தச் சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாம் க்ளிஷேக்களாயிருப்பதுதான் சருக்கல்..... விக்ரம் ஓர் எறும்பைக் கூடக் கொல்ல நினைக்காதவர் என்று காட்டுவதற்காக பியானோ கட்டைகளில் ஒரு க்ராஃபிக் எறும்பை விட்டு விளையாடுவதெல்லாம் தியேட்டரையே உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று பலூனூதவிடுகிறது!! இறந்தவரின் வாட்ச் காட்டும் டைமை வைத்து டக் கென்று இது ஒரு கொலைதான் என்று நாஸர் கண்டுபிடிக்கிறார்... ஓகே... தமிழ்ப்பட சிபிஐ என்றுதான் தோன்றுகிறது.... "இந்தியன்" நெடுமுடிவேணு..... பல படங்களில் மம்முட்டி என்று பழக்கப்பட்ட கதைசொல்லும் பாங்குதானே இதெல்லாம்..... இதுதவிர "லாஜிக்" பொத்தல்கள்.... மூளையைத் தூங்கவிட்டு ரசித்த காட்சிகளைக் கூட வீட்டுக்கு வந்தபின் விழித்துக்கொண்ட மூளை விக்கி விக்கி சிரிக்கிறது! எங்கேயோ மாடியில் இருக்கும் வில்லனை விக்ரம் ஜஸ்ட் லைக் தட் பார்த்துவிட்டுத் துரத்துவது....... விக்ரமின் லைஃப் ஸ்டைல் + காஸ்ட்யூம்ஸ் + இன்ஃப்ளூயன்ஸ் எல்லாம் பார்த்தும் அவரை சப்-இன்ஸ்பெக்டர் என்றே அனுஷ்கா நம்புவது என்று அமைத்திருக்கும் காட்சிகளைக் கலாய்க்காத விமர்சனங்களை விஜய் படிக்கவே முடியாது!! (ரொம்ப நல்லவனா எழுதியிருக்கிற நானே சொல்லிட்டேன்னா பாருங்க!!)
கதைத் திருட்டு என்று கேஸ் நடந்துகொண்டிருக்கின்றது..... மனுதாரர் பொன்னுசாமி சொல்வதைப் போல யூடிவி தனஞ்செயனிடம் தன் திரைக்கதையை ப்ரிண்ட் எடுத்து பைண்ட் பண்ணிக் கொடுத்திருக்கிறார் என்றால் சாஃப்ட் காப்பி கண்டிப்பாக இருந்தே தீரவேண்டும்...... ஆனால் அதையெல்லாம் தீர்மானிக்கவேண்டியது கோர்ட்..... பிரபு உனக்கெதுக்குடா....!!! (மைண்ட் வாய்ஸ்!)
விஜய் உட்பட நல்ல ஃபிலிம் மேக்கர்ஸ் இருக்கிறார்கள் தமிழில் இப்போது.... ஸ்க்ரீன் ரைட்டர்களுக்கு நல்ல விலைகொடுத்து கதைகளை வாங்க தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும்.... அதற்கு ஹீரோக்களின் சம்பளம் குறைய வேண்டும்...... லோ பட்ஜெட் படங்கள் ஹை- யீல்டிங் தர வேண்டும்.... எனப் பல "வேண்டும்" கள் உள்ளன .... எனக்குக் கூட இப்போழுது ஆஃபீஸுக்குக் கிளம்ப "வேண்டும்"..... ஸோ பை பை.....
ஓ... டெயில் பீஸ் எழுதணுமோ?
வாரி வாரிப் பணம் இரைத்திருக்கும் "யூ"டிவிக்காக இல்லாவிட்டாலும் ஒரு சின்ன கட் கூட இல்லாமல் சென்சார் வாரி வழங்கியிருக்கும் "யூ"வுக்காகவது "யூ" கேன் (குடும்பத்துடன்)_ வாட்ச் "தாண்டவம்"!! :-) பட் மூளைக்கு ரெஸ்ட் கொடுக்க மறந்துடாதீங்க..... :))
அன்புடன்,
பிரபு எம்
Subscribe to:
Posts (Atom)