தனக்குச் சரியாக வராது என்று தெரிந்த எதையுமே சினிமாவில் விஜய் தொட்டதேயில்லை.....
ஒரு கமர்ஷியல் கதாநாயகனாக, தரை லோக்கலாக மக்களுடன் கனெக்டாகத் தேவையான எல்லா விஷயங்களில் தன்னைத் தயார் செய்துகொண்டுதான் நடிகர் ஆனார். அதைத்தாண்டி நுணுக்கமான நடிப்பிலோ அல்லது வித்தியாசமான கெட்-அப்பிலோ அல்லது சவாலான கதாபாத்திரங்களிலோ விஜய் நடிக்க முனைந்ததே கிடையாது. ஆக்ஷன், லவ், காமெடி போன்ற ஏரியாக்களில் மட்டுமே பவனி வந்து அதற்கேற்ற ஒரு கூட்டத்தைத் திரட்டி அவர்களுக்கென்று ஒரு தனி உலகத்தில் வித்தியாசமான சில தியரிகளுடனும் ட்ரெண்டிங் ட்வீட்களுடனும் இத்தனை ஆண்டு காலம் சினிமாவில் சிறப்பாகவே ஜல்லியடித்தாகிவிட்டது....
அதைத் தாண்டிக் கிட்டத்தட்ட முப்பதாண்டு காலமாகத் தன் சினிமா வாழ்வில் விஜய்....
1. எந்தவொரு சூழ்நிலையிலும் ஓர் ஆளுமையாக வெளிப்படதேயில்லை....
2. சமூகம் சார்ந்து பொது வாழ்க்கையில் அக்கறையான செயல்பாடுகள் எதிலும் விஜய்யின் தனித்துவமான பங்களிப்பு என்று ஒன்று இருந்ததே கிடையாது.... (ரசிகர் மன்றம் சார்பாக மோர்ப்பந்தல் அமைப்பதும், நோட்புக் வழங்குவதும் என்று சமூக செயல்பாடு என்று நம்புகிறவர்கள் தயவுசெய்து என்னை நீங்களே அன்ஃப்ரெண்டு செய்துவிடவும்)
3. நடிகர் சங்கம் உள்ளிட்ட எந்தவொரு சினிமா சார்ந்த சங்கங்களில் செயல்பட்டதோ அல்லது படைப்பாளிகளின் போராட்டம் உட்பட இவர் காலத்தில் சினிமா சந்தித்த எந்த சிக்கலுக்கும் தீர்வுகாணவோ அல்லது பங்ககளிக்கவோ கூட எந்தவிதத்திலும் முயன்றதாகப் பதிவுகள் இல்லை....
4. பின்னணிப் பாடல்கள் பாடியதைத் தவிர மற்றபடி திரைக்குப் பின்னால் கதை, திரைக்கதை போன்ற விஷயங்களில் எல்லாம் ஈடுபட எந்தவித ஆர்வமும் காட்டியதில்லை....
5. "தலைவா" பட ரிலீஸ் பிரச்னை உட்பட தன் நடிப்பு வாழ்வில் வந்த எந்தவொரு சிக்கலிலும் எந்தவோர் அரசியல் ஆளுமையோ அல்லது அதிகாரமையங்களுடனோ விஜய் எதிர்த்து நின்று மோதியதற்கான எந்தத் தடயமும் கிடையது. கையைக் கட்டி சரணடைந்துவிடும் அளவுக்கு அதிகபட்ச அகிம்சையைக் கடைபிடித்திருக்கிறார். (சி. ஜோசஃப் விஜய் என்று லெட்டர் பேடில் ஒரு கடிதம் எழுதினார் என்று யாருக்காவது மனதில் சட்டென்று தோன்றினால் மனதளவில் நீங்கள் ராமருக்கு உதவிய ஒரு குட்டி அனிமல் என்று நீங்களே புரிந்துகொள்ளலாம்!)
6. தன்னை மையமாகக் கொண்ட (அதாவது ஆடியோ ரிலீஸ் போன்றவை) நிகழ்வுகளைத் தவிர்த்து எந்தவொரு பொதுமேடையிலும் தன்னுடைய பேச்சாற்றலால் அரங்கத்தை அதிரவைக்கவோ அல்லது ஹைலைட்டாக மிளிரியதோ போன்ற எந்தவொரு சம்பவத்துக்கும் வாய்ப்புகளை அவர் எதிர்நோக்கியதுகூட இல்லை. முடிந்தவரை பொதுமேடைகளில் பேசுவதைத் தவிர்க்கத்தான் பார்ப்பார் பணிவன்புடன்!
7. ஆணவக்கொலைகள், அரசியல் கலவரங்கள், இன்னபிற சமூக அவலங்கள் எதற்கும் முன்னின்று குரல் கொடுத்து நான் பார்த்ததில்லை... பெருமழை, பேரிடர், பெருந்தொற்று காலங்களில் களத்திலிறங்கி... ஸாரி எந்தக் களத்திலும் விஜய் தென்பட்டதுமில்லை, எந்தவித மக்கள் இயக்கத்தையும் முன்னெடுத்ததுமில்லை. ( "ஒருமுறை, ஒரு குடும்பத்துக்கு, தடை தாண்டித் தனியாக பைக்கில் சென்று ஆறுதல் கூறி வந்தாரே!" என்று சொல்பவர்கள் அந்த ஒரு சம்பவத்தில் அவர்களும் ஆறுதல் அடைந்து கொள்ளலாம்)
8. சினிமாவில் இருந்தவரை மட்டுமின்றி ஒரு தனிக்கட்சி ஆரம்பித்தபின்னும் கூட எந்தவொரு போராட்டத்தையும் நடத்தியதோ பங்கேற்றதோ இல்லை....
9. ஒட்டுமொத்தமாக நடிகர்கள் அனைவரையும் திரண்டு (அல்லது வம்படியாகத் திரட்டி) திரையுலகம் சார்பாக நடந்த போராட்டங்கள், கண்டனக் கூட்டங்களிலும் ஃபோர்ஸாக ஒரு ஸ்பீச், தொடர்பாக ஒரு முன்னெடுப்பு.... ஊஹும் அப்படியெல்லாம் ஒரு வரலாறும் நினைவுக்கு வரவில்லை...
10. தன் தனிப்பட்ட வாழ்க்கையில் அவரைச் சுற்றிச் சுழலும் சர்ச்சைகளுக்குப் பொதுவாழ்க்கைக்கு வந்தபின்னும் பொதுவெளியில் விளக்கம் கொடுக்க அவருக்கு எப்போதுமே பெரிய சங்கடங்கள் இருந்துவருகிறது. தன்னுடைய ப்ரைவசியில் அரசியலுக்கும் வரும் முன்னும் வந்தபின்னும் எந்தவித மாற்றமும் இல்லாத ஒரே மனிதர் எனக்குத் தெரிந்து விஜய்தான்!
சினிமாவில் தனக்குச் சரியாக வராதவற்றை, தன் பலவீனங்களை மிகச் சரியாகத் தெரிந்துகொண்டு அவற்றைத் தொடாமலேயே விஜய் பயணித்தது ஒரு குறையே கிடையாது.... மாறாக அவருடைய வெற்றி ரகசியங்களில் மிக முக்கியமான அம்சம் அது....! அதுதவிர்த்து, ஒரு கதாநாயகனாகத் தனக்கான பாதையைத் (அதுவும் ஏற்கெனவே ஒரு நடிகர் போட்டுவைத்த பெருவெற்றிப் பாதை) தெளிவாகத் தேர்ந்துகொண்டு, அதற்கேற்ற தயாரிப்புகளுடனும், மிகச்சிறப்பான திட்டமிடலுடனும் தன்னுடைய தொழில் வாழ்க்கையில் வெகு சிரத்தையாகச் செயல்பட்டுத்தான வெற்றிகரமாகத் திகழ்ந்திருக்கிறார்...
ஆனால் ஏனோ அரசியலுக்கு அடியெடுத்த வைத்த நாளிலிருந்து தனக்கு சுத்தமாக வராத விஷயங்களை மட்டுமே செய்ய எத்தணித்துவருகிறார்... அதனால் அவருக்கு நிகழ வாய்ப்புள்ள சேதாரங்களிலிருந்து தன்னை முழுமையாகப் பாதுகாத்துக்கொள்ள மட்டுமே தெரிந்துவைத்திருக்கிறார் என்பதும் மற்றபடி வேறுயாரையும் காக்க அவரிடம் எந்தவித சிரத்தையும் இல்லை என்பதுதான் இங்கு ஆபத்தான விஷயமாகிறது!
ஆளுமை, ஆள்வினையுடைமை, தைரியம், தலைமை, சமூக ஒழுக்கம், ஒழுங்குபடுத்தல் போன்ற எந்தப் பண்புமே இல்லாதவர் விஜய் என்று பொதுவில் ஆரம்பம்தொட்டே பலமுறை நிரூபணம் ஆகியிருக்கும் நிலையில், விஜய் பின்னால் போகும் தறிகெட்ட பெருங்கூட்டமும் இருந்தாலும் இறந்தாலும் நாட்டிற்கு எந்த நன்மை தீமை இல்லைதான்!
ஆனால் அவரவர் வீட்டுக்கு????!!
இது கடந்துபோகக்கூடிய கேள்வி கிடையாது!
ஆக்ஷனுக்கும் கட்டுக்கும் இடையே சிறப்பாக இயங்கி (இயக்குனர் வேறொருவர்) ஜொலிக்கத் தெரிந்த விஜய் ஒரு சிறப்பான "ஜனரஞ்சகன்". ஆனால் அனைத்து சூழல்களிலும் அனைத்து திசைகளிலும் சுற்றிச் சுழன்று ஓய்வின்றி இயங்கும் "ஜன நாயகன்" சத்தியமாகக் கிடையாது.....
நமக்குத்தான் வரலைல்ல.... அப்புறம் ஏன்???

