எழுதும் ஆர்வம்தான் என்னை இந்த வலைப்பூ தொடுக்க வைத்தது. உங்கள் வாசிப்பினாலும், விமர்சனங்களாலும், நட்பினாலும் மெருகேறக் காத்திருக்கும் என் எழுத்துகள்..
Showing posts with label கார்ட்டூன். Show all posts

Saturday, November 05, 2011
மௌனம் Vs விரதம்!! : கார்ட்டூன்
"தனது 18 நாள் மௌன விரதத்தை கலைத்தார் அன்னா ஹஜாரே!!" என இன்றைக்கு காலை பேப்பரில் படித்தபோதுதான் தெரிந்துகொண்டேன் கொஞ்ச நாளா அன்னாவின் வாய்ஸூம் ஆக்ரோஷ போஸும் பேப்பர்ல பார்க்காததன் காரணத்தை!!
.தன்னோட "டீம்" (?) அங்க எச்சக்கச்ச ப்ரச்னைகளில் அல்லாடித் தள்ளாடி ஸ்டேட்மென்ட் விட்டுக்கொண்டிருக்கும் போது டோட்டலா 'ம்யூட்' பட்டனைத் தட்டிவிட்டு உக்காந்து நீட்டா எஸ்கேப் ஆகிட்டாரே தாத்தா!! ந்யூட்ரலா யோசிச்சா யப்பா.... என்னா ஐடியா?? "வாட் அன் ஐடியா அன்னாஜி!!!"என மனதில் பட்ட அதே நொடியில் ஏனோ கண்முன் தோன்றியது நம் பிரதமர் மன்மோகனின் பரிதாபத்துக்குரிய திருஉருவம்தான்......!!!
வாய்திறக்காத நீ.......ண்ண்ண்ண்ட மௌனங்களின் "பேட்டன்ட் ரைட்ஸை"யே தனதாக்கி வைத்திருக்கும் நமது பிரதமருக்குக்கூட இப்படி ஒரு "விரத" ஐடியா வராம போச்சே.... என்று மனம் ஆதங்கப்பட்டதன் விளைவுதான் இந்தக் கார்ட்டூன்..... ஹ்ம்ம்ம்ம்ம்ம்.... என்னத்த சொல்ல....???
தாத்தா இன்னும் என்ன என்ன விரதங்களையெல்லாம் இருக்கப்போறாரோ ??
ஒருவேளை "சத்திய சோதனை" படிச்சா இப்படி சூப்பர் ஐடியாவெல்லாம் வருமோ?? டவுட்டு!!!!
:-)))
அன்புடன்,
பிரபு எம்
.
Friday, November 26, 2010
வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!!!
அரசியல்வாதிகளும், நடிகர்களும், பிரபலங்களும் செய்தித்தாள்கள் படிப்பதேயில்லையா??!!!
கட்சிக்கு ஒரு சேனல் வைத்திருப்பதால் அடுத்தக்கட்சி சேனல்களையெல்லாம் நோட்டம் விடுவதேயில்லையா??!!
வெளியுலகமே தெரியாதா??!! இல்ல கலாய்ச்சு பேசுறது எல்லாம்
காது கேட்காதா??!! என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.....!
"மக்கள் நாயகர்" , "பசுநேசர்" ராமராஜரை நினைவிருக்கிறதா?! சர்தாரைவிட அதிகமாய்க் கலாய்க்கப்பட்டக் கலர்மன்னர்!! எங்கே பசங்க இவருபேரைப் பட்டப்பெயரா வெச்சுருவாய்ங்களோன்னு பயந்துபோய்ப் போடுற சட்டைக் கலரை மாற்றிக்கொண்ட வாத்தியார்களையெல்லாம் பார்த்திருக்கிறேன்.... ஆனா அவரு மாறலியே.... கடைசியா டி.வியில் ஒரு வெளிவரவேவராத படம் ஒன்றின் துவக்கவிழாவில் மஞ்சமஞ்சேரென்று நின்றுகொண்டிருந்தார்.. கையில் வேப்பிலை இல்லாததுதான் குறை....
(கர) டி.ஆரைக் கலாய்ச்சுக் கலாய்ச்சு களைச்சுப்போனதுதான் மிச்சம்... அவரு இன்னும் யூ-டியூப்ல சூப்பர்ஹிட் ஸ்டேட்மெண்ட்டுகள சூடுபறக்கக் கொடுத்துட்டுதான் இருக்காரு!! (இன்னும் டண்டனக்காவக் கூட விடல!) அவரு புள்ள...ஸ்ஸ்ஸப்ப்பா... இப்பவே கண்ணக் கட்டுது.... இன்னும் கூட லிஸ்டைப் பாருங்க.... டாக்டர் சுறா, ஸ்டீவன் பேரரசு, அடுத்த தேர்தலுக்கும் கூட்டணி மாறப்போற மருத்துவர் கொய்யா, அதே தேர்தல்டைம்ல காமெடிட்ராக் பண்ண கரெக்ட் டைம்-க்கு வரப்போகிற ஆல்டைம் காமெடிபீஸ் சுப்ரமண்யஸ்வாமிஜி.... ஊஹும்... எவனும் மாறப்போறதில்ல தமிழ்நாட்டுல!!
ஹ்ம்ம்ம்ம்... ஆனா
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதற்கெல்லாம் ஒரே பதில் நம்ம இம்சை அரசன் சொன்னதுதான்...
"வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!!!"
ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்..ஸாரி ஸாரி...."வரலாறு"!!!
2001 தேர்தல் வந்திச்சு... ஓட்டுப்போடுற வயசுவராத ஒண்ணாங்கிளாஸ் பிள்ளைவரைக்கும் சன் டிவில பாத்துடுச்சு அதிமுக ஜெயிச்சாலுமே அம்மா தேர்தல்ல நிற்க முடியாதுன்னு... காரணம் என்ன? அதுவும் பச்சப்புள்ளக்குக் கூட தெரியும் "டான்ஸி, கிரிமினல் வழக்கு, ____, ____, ____" என்று. ஆனா ஜெயா டிவி மட்டும் பாக்குற எம்ஜிஆர் ஃபேன்ஸ் மட்டும் நம்பினாங்க அம்மாதான் முதல்வர் வேட்பாளர் என்று! அம்மாவும் வேட்புமனு தாக்கல் செஞ்சாங்களே....அதுவும் ஒண்ணு இல்ல ரெண்டில்ல நாலு தொகுதில!!... ஏங்க.. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரெண்டு தொகுதிலதான் போட்டியிட முடியும்னு அந்த நேரத்துல முதல்வரான ஓ.பி.எஸ்ஸுக்குக் கூட (!) தெரியுமேன்னு கேக்குறீங்களா??!! கரெக்டு.... எப்படியும் நிராகரிக்கப்படப் போகிற அவங்க மனு நிராகரிக்கத்தான் பட்டது... ஆனா காரணம்?? மாத்திட்டோம்ல!!..... "இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் மேற்படி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப் படுகிறது"ன்னு அந்த ஏரியா தாசில்தார் ஒரு லேடி அறிவிச்சதை இதே ரெண்டு கண்ணால நாம பார்த்ததுதானே வரலாறு!! இன்னைக்கு பீகார்ல ரெண்டு இடத்துல போட்டிபோட்ட ராப்ரி இரண்டிலுமே தோத்து போய்ட்டதப் பத்தி ஆஃபிசுல பேசிச் சிரிச்சுட்டு இருக்கும்போது ஒரு மராட்டிக்காரன் என்னப் பாத்து சொல்லுறான் "ராப்ரியாவது பரவாயில்ல.... உங்க ஊரு அம்மா சின்னபுள்ளத்தனமா நாலு தொகுதில நின்னு ரிஜெக்ட் ஆனதைவிடவா இது பெரிய காமெடி??! ஹே ஹே.." என்று சிரிக்கிறான்...அதற்குப்பின்னால் இருக்கும் பெரியபுள்ளத்தனம் புரியாமல்.... ஹி ஹி ஹி..
இப்போ புரியுதா???
"வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!!"
"பாராட்டு விழா" "பாராட்டு விழா"ன்னு சொல்லுறாங்களே... உலகத்திலேயே அதிகப் "பாராட்டு விழாக்கள்" கண்டவர் யாருன்னு ஒரு சர்வே எடுத்தா யாரு போட்டியின்றி தேர்வு ஆவாங்கன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்.. ஆனாலும் ஏன் அந்த சர்வே ரிசல்ட்டை வெளிய விடமாட்டேங்குறாங்கன்னா... அந்த சாதனைக்கும் (?) ஒரு பெரிய "பாராட்டு விழா" வெச்சு சும்மா இருக்குற சூப்பர்ஸ்டார்,சூப்பர் ஆக்டரையெல்லாம் கூப்பிட்டு இன்னும்கூட பாடிப்பரிசில்பெறத தயாரா இருக்குற பாலபத்திர ஓணாண்டிப் புலவர்களையெல்லாம் கூட்டிவெச்சு கும்மியடிச்சு அதகளம் பண்ணிடுவாங்களேன்னு பயந்துதான்!! ..... போனவருஷம் சிறந்த வசனகர்த்தா ஸ்டேட் அவார்டு யாருக்குக் கிடைச்சது?? தமிழுக்கு நடந்த உலக மாநாடு கூட மெய்யாலுமே யாருக்கு நடந்தது??
இதெல்லாம் என்ன புதுசா... இதுவும் இதுக்குப் பின்னால இருக்குற உள்குத்துகளும் நம்ம எல்லாருக்குமே தெரிஞ்சதுதானேன்னு சிரிக்கிறீங்கதானே??!! ஆனா இன்னும் அம்பது வருஷம் கழிச்சு இந்த வரலாறுகளைப் பாடப்புத்தகத்தில் (ஸாரி பாட டிவிடியில்) படிக்கப்போற 3 -ஜி (தேர்ட் ஜெனரேஷன்னுதான் சொல்றேன்!) கிட்ட நீங்க பாத்த 'வரலாறு'களையெல்லாம் சொல்லிப்பாருங்க... அவங்க நம்மள பாத்து சிரிப்பானுங்க!!! ஆகமொத்தம் இப்போ நடக்குற விஷயங்களுக்கெல்லாம் ஆடியன்ஸ் நிகழ்கால நம்ம இல்லங்குறதப் புரிஞ்சிக்கிட்டு... ரஜினி ஜோக், விஜய் ஜோக், இன்றைய அரசியல் கார்ட்டூன்னு எல்லாம் காலங்காத்தால கிளம்பாம போய் வேலயப் பாருங்க பாஸூ!!
வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!!! :-)))
ஹி ஹி ஹி.. சும்மா கார்ட்டூன் போட்டு ரொம்ப நாளாச்சேன்னுதான்!! வேற ஒண்ணுமில்ல...

Sunday, April 18, 2010
டுட் டூ டு..... டுட் டூ டு........
டென்ஷனான கிரிக்கெட் தருணங்களிலும் சளைக்காமல் விளம்பரங்களை ஒளிபரப்புவது எரிச்சல்...
அதுவும் இதுமாதிரி மொக்கைகளைப் பார்க்கையில் தலைக்கு ஏறுகிறது.....
அதான் ச்சும்மாக்காச்சு.... லூலுலாயிக்கு ஒரு கார்ட்டூன் வரைந்தேன்..... சீரியஸா எல்லாம் பார்க்காதீங்க..... சும்மா சிரிச்சுட்டு விட்டுடுங்க.... :)

கருத்துரையில் எத்தனைக் குட்டுகள் என் தலையில் விழப்போகுதோ.... ஆண்டவா காப்பாத்து!!!

Wednesday, March 17, 2010
33%
செய்தித்தாள் படிக்க ஆரம்பித்து, கடைசிபக்க விளையாட்டுச் செய்திகளைத் தாண்டி நாட்டுநடப்புப் பக்கங்களையும் கவனிக்க ஆரம்பித்திருந்த பள்ளி நாட்களிலேயே புரிந்திருந்தது 33 ஒரு பெண்பால் எண் என்று!!
எப்பவும் 50 தானே கேட்பாங்க இதென்ன பாஸ்மார்க்கைவிட ரெண்டு கம்மியா 33 க்கு சண்ட போடுறாங்களே? என்ற ஒரு சந்தேகத்துக்கும், "இடஒதுக்கீடு" என்ற அரசியல் சார்ந்த சொல்லுக்கும் எனக்கு அர்த்தம் புரிந்தது நான் ஹைஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும்போது நடந்த ஓர் உள்ளாட்சித் தேர்தலின்போதுதான்....
காரணம் : அப்போது எங்கள் வார்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது!!
அதே எலக்ஷனில் மதுரையில் இன்னொரு பெண்கள் வார்டில் அமோக வெற்றி பெற்றவர்தான், நேர்மை மற்றும் தைரியம் என்னும் கூடாத காம்பினேஷனில் சில காரியங்கள் செய்ய முற்பட்டதால், வெட்டிக் கொலை செய்யப்பட்ட பெண் கவுன்சிலர் லீலாவதி...
இப்போது 33 சதவீதம் ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேறிய நாளில் நாடளுமன்றப் பெண் உறுப்பினர்களெல்லாம் கட்சிபேதம் மறந்து கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்களைப் பார்க்க நன்றாகத்தான் இருந்தது.....
" ஆண்கள் அதிகாரத்தில் அதிகளவு இருப்பதைத் தகர்க்க அந்நியநாடுகளின் சதி இது"
என்று நேற்று முத்துதிர்த்து இருக்கிறார் இந்த மசோதாவை எப்படியாவது (பெண்ணியத்துக்கு எதிரானவர்கள் எனும் முத்திரை வாங்கிடாமல்)தடுத்துவிடத் துடிதுடிக்கும் மூவரில் ஒருவரான முலாயம்சிங் யாதவ்.... இவர் எந்த ஹோட்டலில் ரூம் போட்டு யோசிக்கிறார் என்று தெரியவில்லை.... :-)
இது பெயரளவில் ஒரு சட்டமாக இயற்றப்பட்டுவிட்டு இதன் அடிப்படையில் பெண்களுக்கு அதிகளவில் தொகுதிகளை இடஒதுக்கீடு செய்வதினால் அரசியலில், ஏன் பெண்கள் சமூகத்துக்குமே கூட, பெரிதாய் என்ன மாற்றம் விதைக்கப் படப்போகிறது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை...
இட ஒதுக்கீட்டினால் நம்முடைய மிஸ்டர்களுக்கு மிஸ்ஸாகப் போகும் தொகுதிகளை அவர்களின் மிசஸ்களை வைத்துக் கரெக்ட் செய்துகொள்ளப் போகிறார்கள்... அதுதானே பீகார் ராப்ரி முதல் மதுரை மாநகரம் வரை தொன்றுதொட்டு வழக்கம்!!
உலகில் எந்தவொரு நாட்டின் பார்லிமெண்டிலும் இல்லாத அளவுக்கு மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இந்தியாவில் இடம்பெறப் போவதின் சமுதாய மகத்துவம் என்ன்வென்று தெரிந்தவர்கள் விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.....
நட்புடன்,

Subscribe to:
Posts (Atom)