Friday, December 18, 2015

இளையராஜாவின் கோபமும் தீபிகா படுகோனின் பப்பிஷேம் பேட்டியும்!



”ஆனாலும் இளையராஜா இப்படிக் கோபப் பட்டிருக்கக் கூடாது…. அந்தக் கேள்வியைப் பக்குவமாகக் கையாண்டிருக்கணும்” என்று இளையராஜாவுக்கு ஆளுக்கு ஆள் ஃப்ரீ அட்வைஸ் கொடுத்துக்கொண்டிருக்க……. தீபிகா படுகோனின் சமீபத்திய பத்திரிக்கைப் பேட்டி ஒன்று என் கண்ணில் பட்டுத்தொலைத்தது!



”டைம்ஸ் ஆஃப் இந்தியா” என்று ஒரு பத்திரிக்கை இருக்கிறதல்லவா… (அதை ஏன்  நீ படிக்குற??ன்னு கேட்கக்கூடாது பெங்களூரு டீக்கடையில் கண்ணில் பட்ட விஷயம் இது!) பல “பெருமை”களுக்குச் சொந்தமான அந்தப் பத்திரிக்கையில் அழகும் ஒய்யாரமுமாய் அரைமுதுகு காட்டிச் சிரிக்கும் தீபிகாவின் ஒரு ஆளுயுரப் புகைப்படம் அருகே மிகப்பெரிய எழுத்துகளில் சில வார்த்தைகள்…… 

“I can be Naked in front of Ranveer He wont hurt me!”

இதற்கு என்ன அர்த்தம்?? என்று இப்போதே ஒருமுறை அனைவரும் அவரவர் புரிதலுக்கு ஏற்ப மனதில் இந்த வார்த்தைகளை translate செய்துகொள்ளுங்கள! செய்வீர்களா?? செய்வீர்களா?? ச்ச்சீ….. ஸாரி பாஸ் க்ராஸ் டாக்….!! ஸோ மனதுக்குள் translate செய்து வைத்துக்கொள்ளுங்கள் சரியா! எனக்குத் தனிப்பட்ட முறையில் தீபிகாவின் அழகைவிட அவரின் சமுதாய எதிர்கொள்ளலும் அனாயச ஆங்கிலமும் பிடிக்குமாதலால் அந்த டீக்கடையில் மலையாள சேட்டன் அவரது டிரேட்மார்க்கான ஓர் அடிப்பொளி சாயாவைப் தயார் செய்து கொண்டிருக்கும் இடைவெளியில், அதே இதழில் தீபிகாவின் அந்த முழுப்பேட்டியையும் படித்தேன்.... படித்தால் உள்ளே பேட்டியில் ஒரு நான்கைந்து கேள்விகளுக்குப் பிறகான ஒரு கேள்விக்கு தலைப்பையொட்டிய பதில் இருந்தது..... இங்கே எப்படி இருக்கிறது என்று பாருங்கள்...... (ஸ்க்ரீன் ஷாட்டில் க்ளிக் செய்து பார்க்கவும்)

“I’m very sensitive It’s easy to hurt me………..bla bla bla………..… I CAN BE SO NAKED IN FRONT OF RANVEER HE WON’T HURT ME!”



ஹ்ம்ம்ம்…. இப்போது மெதுவாக ஒரு குட்டி ரீவைண்ட் செய்து இதற்கு முன்னால் செய்தித் தலைப்பில் கொடுத்திருந்த வாக்கியத்தையும் அதனை நீங்கள் மனதுக்குள் translate செய்ததையும் இங்கு உள்செய்தியில் இருக்கும் இந்த வாக்கியத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்! “SO” என்கிற இரண்டெழுத்து இடைச்சொல்லை மட்டும்  நீக்கிவிட்டு பத்துமடங்கு அதிகமான சைஸ் எழுத்தில் தலைப்பு கொடுத்து எப்படி கல்லா கட்ட அடிபோடுகிறார்கள் என்று புரிகிறதா?! 

ஹிஹி….இவ்ளோதான் பாஸ் விஷயம் இந்த மட்டமான, beep song-க்கு இணையான வக்கிரத்துடன் கூடிய வியாபாரத்தைத்தான் ரொம்பவே ஸ்டைலாக “Contemporary Journalism” என்று பீட்டர் விட்டுக்கொண்டிருக்கிறோம்….. இதைச் சொன்னால் 'இரண்டெழுத்தில் அர்த்தம் எப்படி மாறுகிறது பாருங்கள்!' என்று ஒருவருக்கொருவர் ஆங்கில வகுப்பு எடுக்கத் துவங்கிவிட்டார்கள் உடனிருந்த நண்பர்கள்…. டேய் டேய் உங்களையெல்லாம் ஆயிரம் பெரியார் ஓ ஸாரி இவனுங்க பீட்டர்ஸ்.... பெரியார் வேண்டாம் ஆயிரம் ஆபிரகாம் லிங்கன் வந்தாலும் திருத்த முடியாதுடா…..! என்று நினைத்துக்கொண்டே சேட்டனின் சாயாவை உறிஞ்சத் துவங்கினேன்…….!

இத்தோடு முடியவில்லை கச்சேரி….. நமது விகடனார் இருக்கிறாரல்லவா?? ஆனந்த விகடனார்…… அவரும் அந்த பப்பி ஷேம் பேட்டித் தலைப்பைப் படித்திருக்கிறார் போலும்…. என்ன கிறக்கமோ அவரும் முழுப்பேட்டியைப் படிக்கவில்லையா அல்லது படித்தும் புரியவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை இந்த வார விகடனில் என்ன வெளிவந்திருக்கிறது என்று அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்…..



அவர்முன்னால் நான் ஆடை இல்லாமல் இருந்தால்கூட என் மேல் உரிமை எடுத்துக்கொள்ளமாட்டாராம்!! டேய்…டேய்…. ஃபேஸ்புக் ட்விட்டர் மற்றும் சில ஆன்லைன் செய்திகளில் இருந்து செய்தி சேகரிக்கும் copy+paste journalism-னு ஒன்றைக் கண்டுபிடிச்சீங்க ரைட்டு இப்போ அதையும் உங்க வசதிக்கு ட்விஸ்ட் பண்ணி கமர்ஷியலா “அதுக்கும் மேல” போறீங்களேம்மா….. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா……!!

"NAKED" என்கிற ஒரு வார்த்தை கிடைத்தவுடனேயே.... அது என்ன ஏதென்று ஆராயாமல் வெறுமனே பச்சையாக நிர்வாணம் என்கிற ரீதியில் அர்த்தம் கொண்டு.....ஒரு பெண் அதுவும் நடிகை என்று ஓர் ஊடகனே இப்படித்  துடித்துக் களமிறங்கிவிட்டால்..... இயல்பிலேயே கீழ்த்தர ரசனையுடையவர்கள் ஏன் பீப் சாங்-களைப் பதிவேற்ற மாட்டார்களாம்??!

இப்படியெல்லாம் ஆயிரமாயிரம் தில்லாலங்கடி பேட்டிகளையும் ப்ரஸ்மீட்களையும் சாதாரணமாக செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்களே மேற்கோள் காட்ட முடியும்…. நமது மீடியாவின் தரம் எந்தளவு தரைமட்டமானது என்பதை சிரமேற்கொண்டு விளக்கத் தேவையில்லை அது கண்ணாடி தேவைப்படாத கைப்புண் தான்…. ஆனால் புண்கள் புரையோடிப் புற்றுவைத்துவிட்டால் எதிர்ப்படும் ஆபத்துகளையும் நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதும் மறுப்பதற்கல்ல…..!



இப்போது இளையராஜா விஷயத்துக்கு வருவோம்……. ”அவன் நிருபர் அப்படித்தான் கேட்பான் இவரு ஏன் இப்படி டென்ஷன் ஆகுறாரு…. ஒரு பக்குவம் வேண்டாமா??” என்கிற ரீதியிலான அட்வைஸ் மழைகள் ஒருபுறம் இளையராஜாவை நோக்கிப் பொழிந்துகொண்டிருக்க…… இன்னொருப்புறம் அவரது ரசிகர்களும் தங்கள் தலைவனுக்காகத் தரம் தாழ்ந்தும் இறங்கியடிக்கத் தயாராக இருக்கும் இசைவிசிறிகள் அடிக்கும் கூத்துக்கள் அதைவிட மோசம்! இதுகுறித்து திரு. ஞானி அவர்களின் கீழ்க்கண்ட ஃபேஸ்புக் போஸ்ட் ஏற்புடையதாக இருந்தது!




எல்லாம் சரிதான்…… ஆனால் சென்னை மழை நிவாரணம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில்தான் இளையராஜாவை நிருபர்கள் சந்தித்திருக்கிறார்கள் அதில் இப்படி ஒரு சர்ச்சையான ஃபுட்டேஜ் கிடைத்தவுடனேயே அவர்கள் கவரேஜ் செய்யப்போன விஷயத்தை அப்படியே சென்னை வெள்ளத்தில் விட்டுவிட்டு செம்பரம்பாக்கம் ஏரியில் பீப் சாங் சர்ச்சையைக் கலந்து விட்டார்களே இந்த மீடியா தர்மத்தை யாருமே கண்டுகொள்ளவில்லையே!!!

 நம்மல்லாம் நல்லா வருவோம் பாஸ்……

அன்புடன்,
பிரபு எம்.




14 comments:

  1. அருமையான கட்டுரை...இந்த புரிதல் பல பேருக்கு இல்லை. 'அவர்கள் உண்மைகள்', அமெரிக்காவில் இருந்தும் கூட , இந்த புரிதல் இல்லாமல் , இளையராஜாவின் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டே எழுதியிருக்கிறார். பத்திரிக்கையாளர்களின் தில்லாலங்கடி வேலைகள் அனைத்தும் 'சென்சேசன் ' வகையில் கல்லா கட்டுவதுதான் நோக்கம். அந்த நிருபருக்கு புவ்வா கிடைக்காது அந்த மாதிரி செய்தி கொண்டுவரவில்லை என்றால்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே.... நான் அவரது பதிவைப் படிக்கவில்லை.....
      ஆனால் வாழ்த்தியும் தூற்றியும் பல பதிவுகளைக் காண நேர்ந்தது.....
      இதனைக் காலத்தின் கட்டாயம் என்று ஏற்றுக்கொள்வது பக்குவமா என்று எனக்குத் தெரியவில்லை :-)

      Delete
  2. yes.that 'so' makes a lot of difference.But how many do really have that much good language knowledge?your analysis is 100 % correct.
    karthik amma

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot for your kind words...
      Yes Media takes advantage on that dark spot only...
      Lets stay awake.... :-)

      Delete
  3. Sindhu9:28 PM

    Excellent Write up ! It is surprising to know that a magazine of such high popularity and readership can go 'so' low to stir up interest in a 'so' cheap way.

    ReplyDelete
    Replies
    1. Thanks a lot Sindhu.... Well.. yes our media counts on popularity, readership and viewership only and never care for the standard and the integrity..... Everyday we could find such an incident if we follow our media of any kind.... To be honest this blogpost itself has got more hit counts only due to the commercial title :) I usually dont use such but this time did for a purpose....

      Delete
  4. Nice !!! All the best for upcoming articles ;)

    ReplyDelete
  5. நல்லதொரு அலசல் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே.....

      Delete
  6. from Oneindiatamil.com



    முன்னாள் முதல்வர் ஜானகி எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் சடலமாகக் கிடக்கிறார். அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், அழுதபடி மலர் மாலை வைத்துவிட்டு வெளியில் வர, அப்போதுதான் காமிரா வாங்கியிருந்த ஒரு நாளிதழ் புகைப்படக்காரர், 'சார் சார்.. அந்த மாலையை எடுத்து இன்னொரு வாட்டி போடுற மாதிரி போஸ் கொடுங்க சார்... ' என்று கேட்க, எப்படி ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியாமல் கடுப்புடன் காரை நோக்கிப் போனார் திருநாவுக்கரசர். தா. பாண்டியன் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரை பேட்டி எடுக்க வந்த பெண் நிருபர் 'உங்க பேர் என்ன சார்' என்று கேட்ட பேட்டியை ஆரம்பித்திருக்கிறார். தன்னை யார் என்றே தெரியாத நிருபருக்கு பேட்டி கொடுக்க வேண்டுமா என்று கோபத்தில் எழுந்த வந்து விட்டாராம் தா.பா. அது ஒரு எப்எம் ரேடியோ நிகழ்ச்சி. அமரர் எம்எஸ்வியை ஒரு பெண் பேட்டி காண்கிறார். "எம்எஸ்வி சார்... உங்க பேரு, உங்க பேக்ரவுண்ட் பத்தி நீங்களே சொல்லுங்களேன்," என்று கூற... "என்னப் பத்தி நான் என்ன சொல்றது... என்னை யாருன்னு கூட உனக்குத் தெரியாதாம்மா?" என்று வேதனையுடன் திருப்பிக் கேட்கிறார். இதே போல் மனோரமா மரணமடைந்த போது அவருக்கு மலர் வளையம் வைக்கக்கூட விஐபிகளை போக விடாமல் அவர்கள் தலையில் கேமாரவை இடித்து தள்ளினர். இன்னொரு விஐபி மாலை வைத்து விட்டு திரும்பினார் "சார்... வயர் கட் ஆகி விட்டது. மறுபடியும் மாலையை வைங்க," என்று அதட்டல் போட்டதும்... எல்லை மீறலின் உச்சம். இப்போது தொலைக்காட்சி மீடியாக்களுக்கு வரும் 'கத்துக்குட்டி' நிருபர்கள், ஒளிப்பதிவாளர்கள், புகைப்படக்காரர்கள் பண்ணும் கேலிக் கூத்து இவையெல்லாம். எந்தக் கேள்வியை எப்போது கேட்க வேண்டும், யாரிடம் கேட்க வேண்டும் என்கிற குறைந்தபட்ச நாகரீகம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். இது பல காலமாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. காரணம், அலுவலக நெருக்கடி, நடைமுறை யதார்த்தம் என்று பல காரணங்கள் சொல்வார்கள். ஆனால் அவை ஏற்கத்தக்கதல்ல. மழை வெள்ளத்தால் சென்னை மயிரிழையில் உயிர் தப்பியிருக்கும் இந்த நேரத்தில், தத்தளித்த பல ஆயிரம் மக்களை தன்னார்வலர்கள் பலரும் தாங்களாகவே முன் வந்து உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியிருக்கிறார்கள். குப்பைகளை அகற்றி நோய் பரவாமல் தடுத்திருக்கிறார்கள். பல லட்சம் செலவு செய்து உணவு அளித்திருக்கிறார்கள். மழை வெள்ளம் வடிந்த பிறகு அந்த உதவும் உள்ளங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. கனத்த மனதோடு பாதிக்கப்பட்டவர்கள் கூடியிருந்த அந்த நிகழ்ச்சியில் ஒரு டிவி நிருபர் ‘சிம்பு எழுதிய பீப் சாங் பற்றி உங்க கருத்து என்ன?' என்று இளையராஜாவிடம் கேட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார்.

    ReplyDelete
  7. அங்கிருந்த பத்திரிகையாளர்கள் பலரும் இந்த முதிர்ச்சியற்ற செயலை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீடுகள், உறவுகள், உடமைகள் என்று அனைத்தையும் இழந்து நிற்கும் அபலைகளுக்கு ஆறுதல் கூற வந்த இடத்தில் ஒரு மரியாதைக்குரிய மனிதரிடம் இந்த கேள்வியை கேட்ககூடாது என்கிற குறைந்தபட்ச நாகரிகம் கூட இல்லாதவர்களை பணியில் வைத்திருப்பது அந்த டிவிக்கு வந்த சோதனை. அப்படியென்றால் இந்த கேள்வியை கேட்கவே கூடாது என்று அர்த்தமல்ல. இந்த இடத்தில் கேட்கக்கூடாது என்பது பக்குவப்பட்ட பத்திரிகையாளருக்கு தெரியும். தனியே இசைஞானியிடம் பேட்டிக்கு நேரம் வாங்கிகொண்டு போய் கேட்க வேண்டும். அப்படியொன்றும் திறவாத இரும்புக் கதவுகள் இல்லை அவருடைய ஸ்டுடியோவில். இங்கு கேட்பது சாவு வீட்டில் சாப்பாடு கேட்டு சண்டை போடுவது போன்ற மோசமான செயல். மைக்கை நீட்டுவது மட்டும் பத்திரிகையாளரின் வேலை அல்ல. உதவிக்கு கையும் நீட்ட வேண்டும் இதை புதிதாக வந்து மீடியாக்களில் பணியாற்றுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! யாரையும் கேள்வி கேட்கலாம் என்ற மாபெரும் சலுகை மீடியாக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. அந்த சலுகையை பொறுப்பற்ற முடியில் பயன்படுத்தப் பார்த்தால், 'அறிவிருக்கா' மட்டுமல்ல... இன்னும் பல மோசமான எதிர்வினைகளை மீடியா உலகம் எதிர்கொள்ள நேரும். அந்தக் கேள்வியை அந்த நிருபர் கேட்ட முறையும், அதற்கு இளையராஜா எதிர்வினையாற்றிய பிறகு, அந்த நிருபர் காட்டிய எகத்தாளமும்... நிச்சயம் இது பத்திரிகை தர்மமன்று. கல்லூரியின் குட்டிச் சுவற்றில் அமர்ந்தபடி போகிற வருகிற பெண்களை வம்புக்கிழுக்கும் பொறுக்கித்தனத்துக்கு சற்றும் சளைத்ததல்ல! இந்தக் கேள்வியை இவர்கள் கேட்டிருக்க வேண்டியது மாண்புமிகு தமிழக முதல்வரிடம். ஒரு பெண்ணான உங்கள் ஆட்சியில் இப்படி கேவலமான பாடல்கள் வருகின்றனவே... டாஸ்மாக் எதிர்ப்பு பாடல் பாடிய கோவனை கைது செய்த உங்களால், இந்த மாதிரி பீப் பாடல்களை எப்படி அனுமதிக்க முடிகிறது... இவர்கள் மீது நடவடிக்கை என்று என்று கேட்டிருக்க வேண்டும். அவர் பிரஸ் மீட் வைக்காவிட்டாலும், போயஸ் தோட்டத்திலோ, தலைமைச் செயலகத்திலோ மறித்து நிற்க வைத்துக் கேட்டிருக்க வேண்டும். 'தில்' இருக்கா... ராஜா கேட்ட மாதிரி அதற்கான அறிவிருக்கா இந்த நிருபர்களுக்கு? அட, குறைந்தபட்சம், புகார்களை வாங்கிக் கொண்ட பிறகும் மவுனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரிகளிடம்? ம்ஹூம்! மழை வெள்ளம் மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. மாநிலத்துக்கே மறுசீரமைப்பு தேவைப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு முகமாக நின்று அரசுக்கு அழுத்தம் கொடுத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ள மீடியாக்காரர்கள், வெற்றுப் பரபரப்புக்காக கண்டபடி கேட்பது, தங்கள் தான்தோன்றித்தனத்தையே ஒரு செய்தியாக்கி குளிர்காய்வது போன்றவை உண்மையிலேயே அநாகரீம்தான். ஆளாளுக்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்காமல், மீடியா தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் இது!

    Thanks: Oneindiatamil.com

    ReplyDelete
  8. ஓ! அடக் கடவுளே.... அவ்ளோ சென்ஸிடிவ்வான பதிவா நான் எழுதியிருக்கேன்.. :-))
    டைட்டில் காரணமா அக்கா?
    மக்கள் இப்போல்லாம் ரொம்ப ரியாக்டிவ்வா இருக்காங்க போலயே...... :-)

    ReplyDelete
  9. @ VijayaKumar

    நன்றி விஜயகுமார்....
    ஏற்கெனவே ஒரு நண்பர் இந்தக் கட்டுரையை முகநூலில் பரிந்துரைத்திருந்தார்..... நமக்கெல்லாமே தெரிகிறது ஆனாலும் எதுவுமே இங்கு மாறுவதில்லை.... என்ன சொல்லுறது....? இந்தத் தலைப்பினால்தான் இந்தப் பதிவே அதிகம் கவனிக்கப்பட்டிருக்கும் போது யாரை என்ன சொல்ல முடியும்?? :):)

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)