Thursday, March 31, 2011

இந்தியா V பாகிஸ்தான் - பிரம்மாண்டக் கனவின் தரிசனத்தில் ஒரு வெற்றிக் கொண்டாட்டம்!

கிரிக்கெட் வானில் சூரிய கிரகணம்...! முடிவில் இந்திய வானமெங்கும் விழாக்கோலம்...! இருட்டில் கருத்திருந்த வானமெல்லாம் வானவேடிக்கையின் வண்ணச்சிதறல்கள்!! :-)

எல்லை மண்ணில் கோடுபோட்டுப் பிரித்துக்கொண்ட பகை தேசங்கள் அவ்வப்போது தும்பைசூடி யுத்தம் செய்யும் கிரிக்கெட் களத்தில் மீண்டுமொருமுறை வாகையினை நாம் சூடிவர‌.... இனி இந்திய இதயங்கள் துடிப்பதெல்லாம் "இறுதிப்போட்டி" என்னும் இணையற்ற கனவை எதிர்நோக்கித்தான்!
Sachin Tendulkar celebrates India's win with an ecstatic leap
ஆன‌ந்த‌ தாண்ட‌வ‌ம்!


மீண்டும் அஷ்வின் தவிர்க்கப்பட்டு நெஹ்ரா அணியில் இடம்பெற்றிருந்ததைப் பார்த்து, இன்றைய‌ போட்டிக்கான அதீத தயாரிப்புகளெல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில், அதிர்ச்சியால் சூழ்ந்தது அவநம்பிக்கை மேகமூட்டம் தேசமெங்கும்.... ஆனால் டாஸில் வென்றபின் பொழிந்ததோ சேவாக்கின் ரன்மழை....!!

உம‌ர் குல் அத்த‌னை எளிதான ப‌வுல‌ர் அல்ல‌வே அல்ல‌..... அவ‌ர் வீசிய‌ அந்த‌ப் ப‌ந்துக‌ளும் அத்த‌னை த‌வ‌றான‌ தேர்வுகளுமல்ல‌... ப‌டு அல‌ட்சிய‌மாக ஐந்து பவுண்டரிகளுடன் 20 ர‌ன்களை சேவாக் விளாசிய‌ அந்த‌ ஓவ‌ரில் ஒவ்வொரு ப‌ந்திலும் குல்லின் Change of Pace, லைன், லெங்த் எல்லாமும் இருக்கத்தான் செய்தது ஏன் அஃபிரிடியிட‌ம் கேட்டு மிட்-விக்கெட்டில் ஒரு ஃபீல்ட‌ரைக்கூட‌ நிறுத்திப்பார்த்தார்... ந‌ல்ல‌ ப‌வுல‌ராக‌த் தொட‌ர் முழுதும் அச‌த்தி வந்திருக்கின்ற‌ உம‌ர் குல் இத்த‌னைமுறை விடாம‌ல்  மீண்டு வரமுயன்றாலும்.. ம்ஹும்.. திசைக‌ள் மாறிய‌தே த‌விர‌ ப‌ந்துக‌ள் ப‌வுண்டரிக்கு விரட்டப்பட்ட‌ வேக‌மும் அல‌ட்சிய‌மும் (!) மாற‌வேயில்லை என்றால் இந்த‌ பேட்ஸ்மேன் த‌ர‌ப்பு மாயாஜால‌த்துக்கு உலக‌ம் முழுவ‌தும் ஒரே பெய‌ர்தான் அதுதான் "வீரேந்தர் சேவாக்"!!!!! "நிலைத்து ஆட‌ப்போகிறேன்"....இனிமேல் சேவாக் v 2.0" என்று சேவாக் உல‌க‌க்கோப்பைக்குமுன் கொடுத்த‌ பில்ட‌ப்புக‌ள் எல்லாம் ப‌ங்க‌ளாதேஷுட‌னான‌ துவ‌க்க‌ப் போட்டியோடு சரி அதன்பின் வேலைக்கு ஆகவில்லை.... நிலைத்து ஆடுவ‌த‌ற்கான‌ எந்த‌வொரு முன்னெச்ச‌ரிக்கையும் வீருவிட‌ம் காண‌ப்ப‌ட‌வில்லை.... உமர் குல்லை அடித்த‌ அடியில் அவ‌ருக்கு நேற்று எந்த‌ பேட்ஸ்மேனைப் பார்த்தாலும் சேவாக்கைப் போல‌வேதான் தெரிந்திருக்கும்போல‌ அந்த‌ ஓவ‌ரிலிருந்தே அப‌த்த‌ப் ப‌ந்துக‌ளை வாரி இரைத்தார் "டெத் ஓவ‌ர்"க‌ளை வீசிய‌போது கூட‌...! ஆனால் சேவாக்கிற்கும், ச‌ரியான‌ நேர‌த்தில் அஃப்ரிடி ப‌ந்துவீச‌ அழைத்த, வாஹெப் ரியாஸைப் பார்க்கவும் உம‌ர் குல்லைப் போல‌வே தெரிந்த‌துதான் ஏமாற்ற‌ம்... அச‌ந்த‌ நேர‌த்தில் வீழ்ந்த‌து விக்கெட்.... ச‌ச்சினிட‌ம் கூட‌க் க‌லந்தாலோசிக்காம‌ல் ஒரு ரிவ்யூவைக் கோரி வீண‌டித்துவிட்டு ந‌டையைக்க‌ட்டினார் ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட அதே பழைய வெர்ஷன் "ஹார்ட்"வேர் சேவாக் v 1.0"!!!!

Sachin Tendulkar and MS Dhoni are thrilled after India's win
கோப்பையை வென்று தோணி, ச‌ச்சினிட‌ம் த‌ரும் காட்சியைக் காண்போமா?! :-)

வாஹெப் ரியாஸின் ப‌வுலிங் பாகிஸ்தானுக்கு மிக‌வும் போர்ட்ட‌பிளான‌ ஆகிஸிஜ‌ன் சிலிண்ட‌ர்! தேவையான‌ ச‌ம‌ய‌த்திலெல்லாம் உயிரைக் காத்த‌து இந்த‌ வாசிம் அக்ர‌மின் டைன‌மிக் ஜெராக்ஸ் காப்பிதான்! ஸ்விங்காகட்டும், ப்ளேஸ்மெண்ட் ஆக‌ட்டும், மற்றூம் ஸ்பீடிலும் சரி.. எதிலுமே குறைவைத்துவிட‌வில்லை... ஓர் இட‌து கை ப‌வுல‌ரின் அத்தியாவ‌சிய‌த்தை அத்த‌னை அணிக‌ளும் உண‌ர்ந்து வைத்திருக்கும் கால‌ம் இது.... கோஹ்லியின் க‌தையை முடித்த‌ அடுத்த‌ ப‌ந்திலேயே காற்றில் ஸிவிங்கான‌ அந்த‌ விசேஷ‌ யார்க்க‌ரைக் க‌ள‌மிற‌க்கி யுவ்ராஜுக்கு அவ‌ர் கொடுத்த‌ அதிர்ச்சி வைத்திய‌ம் உட‌ன‌டிப் ப‌ல‌ன் கொடுத்த‌துதான் ர‌ன்குவிப்பில் இந்தியாவுக்கு விழுந்த‌ பேரிடி... இன்றாவ‌து தோணி தான் ஒரு பேட்ஸ்மேன் என்கிற‌ ம‌ற‌ந்துபோன‌தொரு "ப‌ழைய‌ உண்மை"யை நிலைநாட்டுவார் என்று பார்த்தால் அதேபோல் ப‌டுநேராக‌ பேட்டை இருக‌ப்பிடித்துக்கொண்டு ப‌ந்துக‌ளைக் காற்றில் தோசையைத் திருப்பிப்போடும் அந்த‌ உருப்ப‌டாத‌ ஷார்ட்டை விடாம‌ல் தொட‌ர்ந்தார் ("பெப்ஸி"யின் "Change the game" campaignல் "The DHOSA shot" என்றுதான் தோணியை நியாய‌ப்ப‌டி விள‌ம்ப‌ர‌ப் ப‌டுத்தியிருக்க‌ வேண்டுமோ!!!) பின்திசையில் விரைந்த‌ அந்த‌ இர‌ண்டு ப‌வுண்ட‌ரிக‌ளும் ச‌த்திய‌மாக‌ தோணியின் சுய‌நினைவின்றி அதுவாக‌ பேட்டில் ப‌ட்டு எல்லைக்கோட்டைத் தொட்ட இல‌வ‌ச‌ ர‌ன்க‌ள்! (அதையும் ரவிசாஸ்திரி கமெண்ட்ரியில் புகழ்ந்தார்!!! ஒருவேளை தோணியின் Dhosa shotக்கு முன்பு ஒரு காலத்தில் ரவிஅண்ணன் "Chappathi shot"ல் ஊரைக் கலக்கினாரே அந்தப் பாசமோ?!!) என்ன‌தான் ஆச்சு தோணிக்கு?? கேப்ட‌ன் தோணி - Back to form, விக்கெட் கீப்ப‌ர் தோணி - No harm, ஆனால் பேட்ஸ்மேன் தோணி?? - When will he again storm???!! இந்த‌க் கேள்விக்குப் ப‌தில் தெரிய‌வேண்டும் ந‌ம‌து பேட்டிங் லைனின் நிஜ‌ வ‌லிமையை அருதியிடும் முன்பாக‌...!

Crackers go off in Hyderabad to celebrate India's victory
கொண்டாட்டம் தொடரவேண்டும்!

ச‌ச்சின்..... 85!! அவ‌ர் ஐந்துமுறை உயிர்பிழைத்து சேர்த்த‌ இந்த‌ முக்கிய‌மான் 85 ர‌ன்க‌ளை விட‌ அவ‌ர் கூடுத‌லாக‌ சேர்க்காத‌ 15 ர‌ன்க‌ள்தான் வெற்றிக்குக் கார‌ண‌ம் என்று எஸ் எம் எஸ் அனுப்புகிற‌வ‌ர்க‌ளைப் ப‌த்தாயிர‌ம் பெரியார் வ‌ந்தாலும் திருத்த‌ முடியாது! ச‌ச்சினின் ச‌த‌த்தைக் கிட்ட‌த்த‌ட்ட‌ குறுக்கே பாயும் க‌ருப்புப் பூனை ரேஞ்சுக்கு ஆண்டி-சென்டிமென்டாக‌ப் பார்க்க‌ ஆர‌ம்பித்துவிட்ட‌து தேச‌ம்...! என்ன‌ கொடும‌ ச‌ச்சின் இது??!! இருப்பினும் அஃப்ரிடி ப‌ந்துவீச்சில் யூனிஸ்கான் மிக‌ எளிதான‌ கேட்சைத் த‌வ‌ற‌விட‌த் தான் உயிர்பிழைத்த‌தைக் குறும்புச் சிரிப்புட‌ன் வெளிப்ப‌டுத்திய‌ லிட்டில் மாஸ்ட‌ருக்கு நேற்று "ல‌க்கி டே"!! அத்த‌னை பிர‌மாத‌மான‌ "ச‌ச்சின் இன்னிங்ஸ்" இல்லைதான் என்றாலும் சேட்டை செய்தார் செத்துச் செத்து விளையாண்டு!!! :))

ரெய்னா.... நேற்று எதிர்பார்த்ததைப் போல‌வே தோணி வீழ்ந்துவிட‌, ரெய்னா அதிர‌டியை முக்கிய‌ப்ப‌டுத்தாம‌ல் ஐம்ப‌து ஓவ‌ர் ஆட‌வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌த்தைத் தொட்டுத் துல‌க்கிய‌ ப‌க்குவ‌ம்தான் இந்த‌ வெற்றியை இத்த‌னை Handyயாக‌ கைவ‌ச‌ப்ப‌டுத்திக் கொடுத்த‌து! 235க்கு மேல் தேராது என்றுதான் நினைத்திருந்தேன் ஆனால் ஜாஹிர், நெஹ்ராவுட‌ன் கைகோர்த்து போராடி 260க்குக் கொண்டுபோன‌ ரெய்னாவுக்கு அழகான‌ ஒரு பூச்செண்டு!

The celebrations begin after the victory is confirmed
வெற்றி!!!!
ப‌வுலிங், ஃபீல்டிங்.... வாவ்!!!! நேற்றும் சரி ஆஸ்திரேலியா உடனும் சரி ந‌ம்முடைய‌ பெஸ்ட் வெளிப்ப‌ட்டிருக்கின்ற‌து! ப‌தினோரு பேரும் ஒரே ம‌ன‌நிலையில் ந‌ம்பிக்கையும் ம‌ன‌உறுதியுமாக‌ ஒருங்கிணைந்து செய‌ல்ப‌டுவ‌தன் ப‌ல‌னை தேச‌மே கொண்டாடினாலும் அத‌ன் க்ரெடிட் ச‌த்தியமாக‌ தோணிக்குத்தான்! நேற்று அஷ்வினை சேர்க்காத‌போது கொதித்துக் குமுறிய‌வ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்! ஆனால் இதுதான் விஷ‌ய‌ம்... ந‌ம் அனைவ‌ருக்கும் தெரிந்த‌து தோணிக்குத் தெரியாத‌த‌ல்ல‌... அப்ப‌டியிருந்தும் ஒரு விஷ‌ப்ப‌ரிட்சையைத் துவ‌க்கி முழுக்க‌ப் பின்புல‌மாய் இருந்து துரித‌மாய் செய‌ல்ப‌ட்டுக் வென்று காட்டினார் தோணி நேற்று... சிம்ப்ளி கிரேட்!! (நேற்று தோற்றிருந்தால் கேப்டனாக தோணியின் கடைசி போட்டியாகியிருக்கும் சந்தேகமில்லாமல்!) உல‌க‌க்கோப்பையை அதிகார‌ப்பூர்வ‌மாய்த் த‌ழுவிக்கொள்ளும் அத்த‌னை த‌குதிக‌ளும் தோணியின் க‌ர‌ங்க‌ளுக்கு உண்டு... அதிர்ஷ்ட‌ம் இருக்குமா என்று நாளை ம‌றுநாள் தெரியும்!! :)

Sachin Tendulkar, Suresh Raina and Munaf Patel celebrate after India ended up winners
துள்ளாத மனமும் துள்ளிய தருணங்கள்!
முனாஃப் ப‌ட்டேலின் ப‌வுலிங் ஸ்பீடைக் க‌வ‌னித்தீர்க‌ளா..... 135, 137, 139.2 Kmph வ‌ரையெல்லாம் போன‌து நேற்று! ஆனாலும் லைனிலும் லெங்திலும் அதிக‌க் காம்ப்ர‌மைஸ் செய்துகொள்ள‌வில்லை... வேக‌ம் பெரிய‌ விஷ‌ய‌ம‌ல்ல‌ வேகத்தில் காட்டும் வேரியேஷ‌ன்தான் பேட்ஸ்மேனை வீழ்த்தும்... நெஹ்ராவும் முனாஃபும் "லிமிடெட் ப‌வுல‌ர்ஸ்" அதில் மாற்றுக் க‌ருத்தே இல்லை... ஆனால் நேற்று அவ‌ர்க‌ளின் முனைப்பும் க‌வ‌ன‌மும் அன்லிமிடெட்-ஆக‌ வெளிப்ப‌ட்ட‌தே வெற்றிக்குக் கார‌ண‌ம்... அனுப‌வ‌ நெஹ்ராவும் ஹ‌ர்ப‌ஜ‌னும் த‌ங்க‌ள் அத்த‌னை அனுப‌வ‌த் தொழில்நுட்ப‌த்தையும் உட்புகுத்திதான் த‌ங்க‌ள் விக்கெட்டுக‌ளைப் பெற்றார்க‌ள் ஆளுக்குப் ப‌த்து என்று ஐம்பது ஓவ‌ர்க‌ளை முடித்திருந்த‌ பவுலிங் சார்ட்டைப் பார்க்க‌வே அவ்வ‌ள‌வு ந‌ம்பிக்கைத் துளிர்க்கிற‌து!

தோணியின் வார்த்தைக‌ள் நேற்று அற்புத‌ம்... ப‌வுலிங் ப‌ற்றிக் கேட்ட‌போது "எங்க‌ளிட‌ம் வேக‌மில்லை.. ப‌ழதாகி விட்ட‌ ப‌ந்திலும் மூவ்மெண்ட் பார்க்கும் அபார‌ ஸ்விங்கும் இல்லை... இருப்பினும் எங்க‌ள் ப‌வுல‌ர்க‌ளின் ஆயுத‌மாக‌த் நாங்கள் தேர்ந்துகொண்டிருப்பது 'DECEPTION'!! அதாவது வேக‌ம், அள‌வு, நீள‌ம் என்று ஒவ்வொன்றையும் மாற்றி மாற்றி பேட்ஸ்மேனை ஏமாற்றித்தான் விக்கெட்டைப் ப‌றிக்க‌வேண்டும் எனும் சாதுர்ய‌ம்" என்று நிதான‌மாகப் பேசிய‌ தோணியிடம், இந்த‌ ப‌க்குவ‌மும், ஆளுமையும் நிறைந்த‌ அவ‌ர‌து இய‌ல்பான அந்த‌ "attitude" அவருக்கே உரித்தான அவரது பெர்சனாலிட்டியின் ஓர் அழகான‌ Gift! எப்போதுமே நான் ரசித்துப் பாராட்டும் அழகான விஷயம் அது! (வாழ்க்கையில் அடைய‌ முயல்வதும் கூட‌!)  "Captain cool"ன் கைக‌ளில் உலகக்கோப்பை த‌வ‌ழும் அழ‌கைக் காண‌ ஆவ‌லாக‌ இருக்கின்ற‌து! "Nothing comes easy and nothing did come easy to us in this tournament..." என்று தோணி நேற்று சொன்ன‌தைப் போல‌ நேர்மையாக‌ அடிவைத்துக் கண்டிருக்கும் சிறப்பான‌ முன்னேற்ற‌ம் இது.... உச்ச‌நிலைக்கான‌ போராட்ட‌ம் வ‌ரை முன்சென்றிருக்கும் ந‌ம‌க்கு.. வெற்றி நிச்சிய‌மானால் ந‌ம் அணி "Most Deserving" என்ப‌தி ஐய‌மில்லை!!

Shahid Afridi congratulates Sachin Tendulkar and Virender Sehwag after the hard-fought game
நீ எங்க நண்பேன்டா!
சொல்ல‌ ம‌ற‌ ந்துவிடக்கூடாத‌ ஒரு விஷ‌ய‌ம் மீத‌முள்ள‌து.... அஃப்ரிடி இவ்வ‌ள‌வு ப‌க்குவ‌மான‌வ‌ரா?! வ‌ழ‌க்க‌ம்போல் பாகிஸ்தானை வீழ்த்த‌வேண்டும் என்று எண்ண‌த்துட‌ன் தோல்வியின் சுவ‌டுகளால் பூச‌ப்ப‌ட்ட‌ அஃப்ரிடியின் முக‌த்தைப் பார்க்க‌ அத்த‌னை ஆன‌ந்த‌மாக‌ இருந்த‌து.... ஆனால் அந்த‌ வார்த்தைக‌ளைக் கேட்ட‌பின் பாக்.கை வீழ்த்தினோம் என்று சொல்ல‌ப் பிடிக்க‌வில்லை பாக்.கை வென்றோம் என்று சொல்வ‌தே பொருத்த‌மாக‌த் தோன்றிய‌து... ப‌டுசிம்பிளாக‌.... பாண்டிங்கைப் போல‌ வ‌லுக்கவ‌ன‌மாய் டிப்ள‌ம‌ஸி காட்டாம‌ல் "They played better than us...." என்று ஒற்றைவ‌ரியில் முடித்துக்கொண்ட‌ ப‌க்குவ‌ம்.. பெரிய‌ விஷ‌ய‌ம்... ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் என்ப‌து உண‌ர்ச்சிக‌ளின் ஒட்டுமொத்த‌ க‌ட்டுப்பாட்டுட‌ன் ம‌ட்டுமே அடைய‌முடிவ‌து... எதிர்பாராத‌ ஆளான‌ அஃப்ரிடியிட‌மிருந்து எதிர்பாராத‌ நேர‌த்தில் ஓர் அழகான அப்ரோச்சைப் பார்த்த‌போது கைத‌ட்டாம‌ல் இருக்க‌முடிய‌வில்லை.... க‌டைசி நேர‌த்தில் கேப்ட‌னாகி.... இந்த‌ அணியை இவ்வ‌ள‌வு தூர‌ம் வ‌ழிந‌ட‌த்திக் கொண்டிவ‌ந்துப் போராடித் தோற்ற‌தே அஃப்ரிடிக்கு ஆறுத‌ல்தான்... Good to know your Sweeter side Afridi...you did your best!! :-)

ஒரு பெருங்க‌ன‌வின் வெகு அருகிலான‌ த‌ரிச‌ன‌த்தில்... இதோ ஒரு அழ‌கான‌ வெற்றிக்கு அர்த்த‌முள்ள‌ கொண்டாட்ட‌ங்களை நேற்றிர‌வு க‌ண்டோம்... இனி இன்றும் நாளையும் ப‌யிற்சிக்க‌ள‌த்தில் உழைப்பு... பிறகு களம்காணத் த‌யாரிப்பு....முனைப்பு... வெற்றி!! அவ்வளவுதான் என்றால்... அது சாத்தியமே!

 மொஹாலியிலிருந்து மும்பைக்கு இத்த‌னை Glorious ஆன‌தொரு ப‌ய‌ண‌ம் பெருமைக்குரிய‌து!

வெற்றி தோல்விக‌ளைத் தாண்டிய‌ ஒரு திருப்தி ம‌ன‌தில் இருக்கிற‌து... அதுதான் நிதர்சனம்.. ரிய‌ல் கேமும் கூட!! Thank you Dhoni and Boys!! WE TRUST YOU!!!

அன்புட‌ன்,
பிர‌பு எம்

 

56 comments:

  1. சந்தேகமில்லாமல் தோனியின் தலைமைத்துவம்தான் அணியைக் கொண்டு செலுத்துகிறது..

    டெண்டுல்கரிடம் கூடத் பாக் சேஸின் போது தென்பட்ட பதட்டமும் கோபமும் தோனியிடம் இல்லை..

    அதுவே அணியை இன்னும் பொறுப்புடன் விளையாட வைக்கிறது என்று நினைக்கிறேன்..

    இந்த வெற்றிக்கு தோனியும் அணியும் பெருமைப்படலாம்,நிச்சயம்.

    கிரிக்கெட்டில் இத்தனை ஆர்வம் இருக்கும் உங்களுக்கு நல்ல மொழிநடையும் இருக்கிறது...

    ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் கூடப் பைத்தியமாக கிரிக்கெட் பார்த்ததுண்டு;இப்போது அத்தனை உத்வேகம் இல்லை:))

    ReplyDelete
  2. Once again, a good review from u. Keep it up.

    ReplyDelete
  3. Prabu Rocks!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  4. Anna was extremely shocked to see nehra and patel bowling yesterday i cant believe it were them.... ivlo oru crucial ana matchla dhoni used juz 5 bowlers.... tat too particularly from 35 to 42... those overs extremely good... pakka team... we deserve the cup for sure....

    ReplyDelete
  5. Anonymous12:56 PM

    "Captain cool"ன் கைக‌ளில் உலகக்கோப்பை த‌வ‌ழும் அழ‌கைக் காண‌ ஆவ‌லாக‌ இருக்கின்ற‌து! "Nothing comes easy and nothing did come easy to us in this tournament..." -Dhoni,




    நானும் அதே ஆவலில் இருக்கின்றேன்.கிரிகெட் பதிவில் நீங்கள் மீண்டும் சதம்அடித்திருக்கிறீர்கள் பிரபு சார்.

    ReplyDelete
  6. அந்த ஆட்டத்தை விட உங்கள் மொழி நடை அழகு

    ReplyDelete
  7. அழகான வர்ணனை. வாழ்த்துகள்

    ReplyDelete
  8. தயாளன் சொல்வதை வழி மொழிகிறேன்...:))))

    ReplyDelete
  9. இது எனக்கு வந்த மடல்

    Whenever MS Dhoni has lifted a major Cup, it was preceeded by a 'tie' - T20 WC Vs

    Pakistan, IPL 2010 Vs Kings XI Punjab, Champions League 2010 Vs Victoria and now

    World Cup 2011 Vs England. So ...............................??????????????

    எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்களேன்

    ReplyDelete
  10. //கிரிக்கெட் வானில் சூரிய கிரகணம்...! முடிவில் இந்திய வானமெங்கும் விழாக்கோலம்...! இருட்டில் கருத்திருந்த வானமெல்லாம் வானவேடிக்கையின் வண்ணச்சிதறல்கள்!! :-)//

    ஆரம்பமே அழகான உவமைகள்...:)) இது கவிதையா..இல்லை உரைநடையா இல்லை பாடலா..இல்லை கீர்த்தனையா..இல்லை ஏதோ ப்ளோ வில் வந்ததா..:))...# டவுட்டு

    ReplyDelete
  11. //இனி இந்திய இதயங்கள் துடிப்பதெல்லாம் "இறுதிப்போட்டி" என்னும் இணையற்ற கனவை எதிர்நோக்கித்தான்!//

    அதே..அதே...ஹார்ட் பீட் எகிறுது இப்பவே...:((

    ReplyDelete
  12. //மீண்டும் அஷ்வின் தவிர்க்கப்பட்டு நெஹ்ரா அணியில் இடம்பெற்றிருந்ததைப் பார்த்து, இன்றைய‌ போட்டிக்கான அதீத தயாரிப்புகளெல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில், அதிர்ச்சியால் சூழ்ந்தது //

    உண்மை...நேற்றைய டாஸ் க்கு பிறகு அறிவிச்ச இந்த அறிவிப்பில் செலேக்டர்ஸ் குரூப் ஐ கேவலமாய் திட்டிய இந்திய பிரஜைகளில் நானும் ஒருத்தி என்பதை பெருமையுடன் உரைக்கிறேன்...:))) ஆனால் தங்கம் நெஹ்ரா நேரா ..ஒழுங்கா போட்டு தப்பிச்சுட்டாரு திட்டுல இருந்து...ஹீ...ஹீ...பட் பெரிய பிரயோஜன படலைனு தோனி ஒத்துகிட்டதுக்கு வணக்கமுங்க. வணக்கம்...:))

    ReplyDelete
  13. //அவநம்பிக்கை மேகமூட்டம் தேசமெங்கும்.... ஆனால் டாஸில் வென்றபின் பொழிந்ததோ சேவாக்கின் ரன்மழை....!! //

    தம்பி...இதுவும் கவிதையா...முடியலப்பா...(ஜோடா ப்ளீஸ்...) :))))))) நேத்து மும்பையில் எதுவும் மழையா பிரபு...:)))

    ReplyDelete
  14. //வாஹெப் ரியாஸின் ப‌வுலிங் பாகிஸ்தானுக்கு மிக‌வும் போர்ட்ட‌பிளான‌ ஆகிஸிஜ‌ன் சிலிண்ட‌ர்! தேவையான‌ ச‌ம‌ய‌த்திலெல்லாம் உயிரைக் காத்த‌து இந்த‌ வாசிம் அக்ர‌மின் டைன‌மிக் ஜெராக்ஸ் காப்பிதான்! //
    வாவ்..அழகான ..தேர்ந்தெடுத்த வார்த்தை தொகுப்பு..வெகுவாய் ரசித்தேன்...:))

    ReplyDelete
  15. //("பெப்ஸி"யின் "Change the game" campaignல் "The DHOSA shot" என்றுதான் தோணியை நியாய‌ப்ப‌டி விள‌ம்ப‌ர‌ப் ப‌டுத்தியிருக்க‌ வேண்டுமோ!!!) //

    ஹ ஹா...சூப்பர்..ஹ ஹா....ஹ ஹா...

    ReplyDelete
  16. /கமெண்ட்ரியில் புகழ்ந்தார்!!! ஒருவேளை தோணியின் Dhosa shotக்கு முன்பு ஒரு காலத்தில் ரவிஅண்ணன் "Chappathi shot"ல் ஊரைக் கலக்கினாரே அந்தப் பாசமோ?!!//
    ஹ ஹ...ஸோ..நேத்து நீ...நைட் பட்டினியோட மேட்ச் பார்த்திருக்க...:)) (ஓகே..போட்டு கொடுத்தாச்சு வீட்டில்...:)) )

    ReplyDelete
  17. //கேப்ட‌ன் தோணி - Back to form, விக்கெட் கீப்ப‌ர் தோணி - No harm, ஆனால் பேட்ஸ்மேன் தோணி?? - When will he again storm???!! இந்த‌க் கேள்விக்குப் ப‌தில் தெரிய‌வேண்டும் ந‌ம‌து பேட்டிங் லைனின் நிஜ‌ வ‌லிமையை அருதியிடும் முன்பாக‌...!//

    cool..cool...ரெண்டு நாளில் தெரிஞ்சுடும்...பொறுமை எருமையை விட முக்கியம்...:))) முரளியின் எல்லா பாலும் சிக்ஸர் ஆ போகபோகுது தோனியின் dosa ஸ்டைல் லில்..டோன்ட் வொர்ரி...:)))) மகிந்தா பால் பத்தி மட்டும் கேட்க படாது...படாது...:)):)))

    ReplyDelete
  18. நேத்து சச்சின் க்கு இப்படி ஒரு லக்கி டே வா...பாக் சகோதரர்களே .நல்லா கேட்ச் மிஸ் பண்ண உங்களுக்கு கோவில் கட்டிறோம்...நண்ணி..நண்ணி...:))))

    ReplyDelete
  19. //‌ச்சினின் ச‌த‌த்தைக் கிட்ட‌த்த‌ட்ட‌ குறுக்கே பாயும் க‌ருப்புப் பூனை ரேஞ்சுக்கு ஆண்டி-சென்டிமென்டாக‌ப் பார்க்க‌ ஆர‌ம்பித்துவிட்ட‌து தேச‌ம்...! என்ன‌ கொடும‌ ச‌ச்சின் இது??!! //

    ஹீ..ஹீ...நானும் கடவுளை ரொம்ப வேண்டுனேன்..ப்ளீஸ் தல 100 எதுவும் போட்ராதன்னு:)))

    ReplyDelete
  20. //சொல்ல‌ ம‌ற‌ ந்துவிடக்கூடாத‌ ஒரு விஷ‌ய‌ம் மீத‌முள்ள‌து.... அஃப்ரிடி இவ்வ‌ள‌வு ப‌க்குவ‌மான‌வ‌ரா?! வ‌ழ‌க்க‌ம்போல் பாகிஸ்தானை வீழ்த்த‌வேண்டும் என்று எண்ண‌த்துட‌ன் தோல்வியின் சுவ‌டுகளால் பூச‌ப்ப‌ட்ட‌ அஃப்ரிடியின் முக‌த்தைப் பார்க்க‌ அத்த‌னை ஆன‌ந்த‌மாக‌ இருந்த‌து.... ஆனால் அந்த‌ வார்த்தைக‌ளைக் கேட்ட‌பின் பாக்.கை வீழ்த்தினோம் என்று சொல்ல‌ப் பிடிக்க‌வில்லை பாக்.கை வென்றோம் என்று சொல்வ‌தே பொருத்த‌மாக‌த் தோன்றிய‌து... ப‌டுசிம்பிளாக‌.... பாண்டிங்கைப் போல‌ வ‌லுக்கவ‌ன‌மாய் டிப்ள‌ம‌ஸி காட்டாம‌ல் "They played better than us...." என்று ஒற்றைவ‌ரியில் முடித்துக்கொண்ட‌ ப‌க்குவ‌ம்.. பெரிய‌ விஷ‌ய‌ம்...//

    எஸ்..எஸ்...நானும் புல்லரித்து புலங்காகிகிதமடைந்தேன்:)))..யாருப்பா..இது அப்ரிடி யானு பயங்கர டவுட்டு ஆய்டுச்சு..கிலானி மாமா இருந்ததாலே சீன் போட்டதாணு தெரியல:)))...பட்..உண்மையில் ரொம்ப நீட் ஆ இருந்தது அப்ரிடி யின் பேச்சு...ஒரே செண்டி போ...அழுவாச்சி காவியம்...:)))

    ReplyDelete
  21. ell ...எல்லாம் போகட்டும்...

    நம்ம பசங்க ஏன் பா ப்ரீ ஹிட் ஐ சரியா யூஸ் பண்ணவே மாட்டேன்க்ராங்க...? நமக்கு தான் இலவசம் னால் ரொம்ப புடிக்குமே...:))

    மிஸ்பா..கடைசியில் டென்ஷன் இல்லாமால் காமிச்ச அந்த சிக்ஸர்..நம்மை கொஞ்சம் டென்ஷன் ஆக்கிய ஜோர் சூப்பர்..ஆனால் கட்டைய போட்ட படுவா...ஏன் கடைசி நேரத்தில் சீன் காமிச்சதுன்னு எனக்கு இன்னும் புரியலே...ஹீ..ஹீ...

    அப்புறம் ஆடியன்ஸ் சப்போர்ட் செம கிளாஸ் இல்லையா பிரபு..பாலிவூட் பூராவும் நேத்து மொஹாலி யில் தான் வாசம் போலே..:)) அமீர்கான் டென்ஷன் விவேக் ஓபராய் கும்மாகுத்து ஆட்டம் பட்டய கிளப்புச்சு நேத்து...நம்ம ஊரில் நேத்து நைட் செம தீபாவளி...பூரா பட்டாசு தான்...:)

    ReplyDelete
  22. //வெற்றி தோல்விக‌ளைத் தாண்டிய‌ ஒரு திருப்தி ம‌ன‌தில் இருக்கிற‌து... அதுதான் நிதர்சனம்.. ரிய‌ல் கேமும் கூட!! Thank you Dhoni and Boys!! WE TRUST YOU!!!//

    Al d best guys..:)))

    ReplyDelete
  23. Anonymous6:35 PM

    அருமையான எழுத்து நடை .

    ReplyDelete
  24. It z d time for me..:)))

    1983 calender&2011 calender r same...check it...so as like as 1983,INDIA will win the world cup again...

    chak de india!!!

    (courtesy:fwd sms:)) )

    ReplyDelete
  25. எசுஸ் மீ ....
    இங்க பிரபுன்னு ஒரு ஆளு ...
    நல்லா கத சொல்லுவாப்புல ....
    அவர யாராவது பாத்தீங்களா ....

    ReplyDelete
  26. Back to form, விக்கெட் கீப்ப‌ர் தோணி - No harm, ஆனால் பேட்ஸ்மேன் தோணி?? - When will he again storm???!!
    மாப்ள.. you look so charm...and your write up make me warm.

    ReplyDelete
  27. சூப்பர் ரிவியூ பாஸ்.... நீங்கள் எழுதப் போகும் பைனல் வெற்றி ரிவியூவிற்காக காத்திருக்கிறோம்...!

    ReplyDelete
  28. // ச‌ச்சினிட‌ம் கூட‌க் க‌லந்தாலோசிக்காம‌ல் ஒரு ரிவ்யூவைக் கோரி வீண‌டித்துவிட்டு ந‌டையைக்க‌ட்டினார் //

    அவர் கலந்து ஆலோசிக்கவில்லை என்று ரவி சாஸ்திரி தவறாக சொல்லிவிட்டார்... ஆனார் ஆலோசித்து தான் ரிவியூ கேட்டனர்... மேட்ச் வீடியோ இருந்தால் மறுபடி பாருங்கள்...

    ReplyDelete
  29. // ப‌வுலிங் ப‌ற்றிக் கேட்ட‌போது "எங்க‌ளிட‌ம் வேக‌மில்லை.. ப‌ழதாகி விட்ட‌ ப‌ந்திலும் மூவ்மெண்ட் பார்க்கும் அபார‌ ஸ்விங்கும் இல்லை... இருப்பினும் எங்க‌ள் ப‌வுல‌ர்க‌ளின் ஆயுத‌மாக‌த் நாங்கள் தேர்ந்துகொண்டிருப்பது 'DECEPTION'!! அதாவது வேக‌ம், அள‌வு, நீள‌ம் என்று ஒவ்வொன்றையும் மாற்றி மாற்றி பேட்ஸ்மேனை ஏமாற்றித்தான் விக்கெட்டைப் ப‌றிக்க‌வேண்டும் எனும் சாதுர்ய‌ம்" //

    செம மேட்டர்...

    ReplyDelete
  30. செமையா எழுதியிருக்கீங்க... வரிக்கு வரி ரசித்துப் படித்தேன்...

    ReplyDelete
  31. அழகான எழுத்து நடை! Amazing analysis and very well written. Thanks!

    ReplyDelete
  32. @ அறிவன்

    ரொம்ப நன்றி நண்பரே.... நிச்சியம் நான் பெருமைப்படும் அளவு இந்த உலகக்கோப்பைப் பயணம் அமைந்திருக்கின்றது திருப்தி அளிக்கின்றது!

    //
    ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் கூடப் பைத்தியமாக கிரிக்கெட் பார்த்ததுண்டு;இப்போது அத்தனை உத்வேகம் இல்லை:)) //

    உண்மைதான்... சச்சின் ரிட்டையர் ஆகிவிட்டால் நானும் இப்படி கிரிக்கெட் பார்ப்பேனா? என்ற கேள்விக்கு என்னிடமும் பதில் இல்லை!

    ReplyDelete
  33. @ வரதராஜுலு

    //Once again, a good review from u. Keep it up.//

    Thank you so much friend.. :-)

    ReplyDelete
  34. @ சித்ரா அக்கா
    Thank you so so so much my dear akka.. :)

    ReplyDelete
  35. @ Sri

    Hi Sri..
    Mutual feelings here too! was shocked to see Nehra and Munaf included in the team but it was a great surprise that they did a great job with the ball! Yes We do deserve the CUP.. Jai Ho!

    ReplyDelete
  36. @ RAMAKRISHNAN

    //நானும் அதே ஆவலில் இருக்கின்றேன்.கிரிகெட் பதிவில் நீங்கள் மீண்டும் சதம்அடித்திருக்கிறீர்கள் பிரபு சார். //

    ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே... :-)
    நமது ஆவல் நிறைவேறட்டும்.... கொண்டாடி மகிழ்வோம்!

    ReplyDelete
  37. @ தயாளன்

    //அந்த ஆட்டத்தை விட உங்கள் மொழி நடை அழகு //

    மிக்க நன்றி நண்பரே ...

    ReplyDelete
  38. @ பாலா சார்

    //அழகான வர்ணனை. வாழ்த்துகள் //

    ரொம்ப நன்றி பாலா சார்.... :)

    ReplyDelete
  39. @ ஹாஜா மொஹைதீன்

    ஹாஹாஹ.... பயங்கர சிந்தனை சார்..... நம்ம மக்களின் யோசனைக்கு அளவே கிடையாது!
    நல்லதையே நினைப்போம்... கோப்பை வசப்படும் என்று முழு நம்பிக்கை இருக்கின்றது! :-)

    ReplyDelete
  40. @ ஆனந்தி அக்கா...

    ஹாய் அக்கா... Welcome back!! :))
    பாவம் நானும் ஏதோ எழுதுறேனேன்னு என் ப்ளாக்கைக் கொஞ்சம் பேர் படிக்கிறாங்கன்னா... உங்க கமெண்ட்ஸுக்காகவே படிக்கிறவங்களும் நிறைய பேர் இருக்காங்க!! "எங்கே கொஞ்ச நாளா உங்க சகோ-வைக் காணோம்.. அவங்க கமெண்ட்ஸ் போடறதில்லையே.."ன்னு நண்பர்களிடமிருந்து வந்த இமெயில்களே இதற்கு சாட்சி!! நானே உங்க கமெண்ட்ஸை நிறைய தடவை வாசிச்சு சிரிச்சேன் அக்கா!! ஆதிக்கு லீவ் விட்டாச்சுன்னா நாளைக்கு ஃபைனல்ஸ் சூப்பரா பார்க்கலாம்! யெஸ்ஸ்!! உங்க போஸ்டுக்காகத் தான் பதிவுலகத்தோட சேர்த்து நானும் வெயிட்டிங்... சீக்கிரம் வாங்க சகோ!! :-)

    ReplyDelete
  41. //@ பாலா சார்//

    ஒவ்வொரு முறையும் 'சார்' போட்டு கஷ்டப்படுத்துறீங்களே, பிரபு 'சார்'? :)

    ReplyDelete
  42. அடடா... ஸாரி ஸாரி ஸாரி...! :-)
    அது என்னவோ எனக்கு "பாலா சார்"னு ஃபிக்ஸ் ஆகிடிச்சு! :-)
    உங்களைப் பற்றி நண்பர்களிடம் ( நம்ம மதுரை பதிவர்கள்தான்!) பேசும்போது பாலா சார்னு சொல்ல ஆரம்பிச்சேன் அப்படியே ஒட்டிக்கொண்டது! :-)

    ReplyDelete
  43. @ Anonymous

    //அருமையான எழுத்து நடை . //

    ரொம்ப நன்றிங்க! :-)

    ReplyDelete
  44. @ வார்த்தை

    //எசுஸ் மீ ....
    இங்க பிரபுன்னு ஒரு ஆளு ...
    நல்லா கத சொல்லுவாப்புல ....
    அவர யாராவது பாத்தீங்களா .... //

    வணக்கம் பாஸ்! :-)
    புரியுது நண்பா!!...... கிரிக்கெட் மட்டும் எழுத்தார்வ மிகுதியால்தான் தொடர்ந்து கிரிக்கெட் பதிவுகள் எழுதிவருகிறேன்.... உலகக்கோப்பை முடியட்டும்.... வழக்கமான பதிவுகளுக்குத் திரும்பிவிடுகிறேன்!

    ReplyDelete
  45. @ ஜெர்ரி மாமா

    ரொம்ப நன்றி மாமா!! :-)

    ReplyDelete
  46. @ பன்னிக்குட்டி ராம்சாமி

    //சூப்பர் ரிவியூ பாஸ்.... நீங்கள் எழுதப் போகும் பைனல் வெற்றி ரிவியூவிற்காக காத்திருக்கிறோம்...! //

    ரொம்ப ரொம்ப நன்றி நண்பா.... :-)
    யெஸ் நம்ம கண்டிப்பா ஜெயிக்கிறோம்..... :-) ஜெய் ஹோ!!

    ReplyDelete
  47. @ பிரபா

    //அவர் கலந்து ஆலோசிக்கவில்லை என்று ரவி சாஸ்திரி தவறாக சொல்லிவிட்டார்... ஆனார் ஆலோசித்து தான் ரிவியூ கேட்டனர்... மேட்ச் வீடியோ இருந்தால் மறுபடி பாருங்கள்...//

    ஹாய் பிரபா...
    ரவி சாஸ்திரியும் சொன்னாரா? நான் லைவ் பார்த்துதான் எழுதியிருக்கிறேன்..... ரிவ்யூ கோரிவிட்டுதான் சச்சினிடம் வந்தார் என்றுதான் நான் கவனித்தேன்..... இப்பொழுது என் நண்பர்களிடமும் கேட்டேன் அவர்களும் சச்சினிடம் கேட்கவில்லை என்றுதான் சொன்னார்கள்.... ஹ்ம்ம்... நான் மீண்டுமொருமுறை பார்க்கின்றேன்..... நன்றி நண்பா :-)

    // செமையா எழுதியிருக்கீங்க... வரிக்கு வரி ரசித்துப் படித்தேன்... //

    ரொம்ப நன்றி பிரபா.... :-)

    ஒரு கேள்வி.. ஒயின்ஷாப் என்ன ஆச்சு?! :-)

    ReplyDelete
  48. @ Mr. Reggi

    //அழகான எழுத்து நடை! Amazing analysis and very well written. Thanks! //

    ரொம்ப ரொம்ப நன்றி நண்பரே :-)

    ReplyDelete
  49. your comments like a poetry. All the best man....

    ReplyDelete
  50. பகிர்வுக்கு நன்றி

    உங்கள் பதிவு ஒரு நேரிடை பார்த்தல் வழி சார்ந்ததாக இருப்பது சந்தோசம் வாழ்த்துக்கள் நண்பா

    தோணிகிட்ட எனக்கு பிடிச்ச விஷயம் தன்னம்பிக்கை மற்றும் யாரும் எதிர் பார்க்காத மாதிரியான தெரிவுகள் எனும் முடிவுகள்........அந்த தலைமைப்பண்பு மிக முக்கியம்

    ReplyDelete
  51. @ Raju

    //your comments like a poetry. All the best man.... //

    Thank you so much Friend.. :-)

    ReplyDelete
  52. @ விக்கி உலகம்

    //உங்கள் பதிவு ஒரு நேரிடை பார்த்தல் வழி சார்ந்ததாக இருப்பது சந்தோசம் வாழ்த்துக்கள் நண்பா

    தோணிகிட்ட எனக்கு பிடிச்ச விஷயம் தன்னம்பிக்கை மற்றும் யாரும் எதிர் பார்க்காத மாதிரியான தெரிவுகள் எனும் முடிவுகள்........அந்த தலைமைப்பண்பு மிக முக்கியம் //

    ரொம்ப நன்றி நண்பா ...
    தோணியின் தலைமைப்பண்பு இந்த உலகக்கோப்பையைத் தேடித் தரட்டும்! :-)

    ReplyDelete
  53. அழகான ரசனையுடன்.....எழுத்துநடை அபாரம் சுப்பரா எழுதியிருக்கீங்க நண்பரே, கிரேட்... வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  54. நாளைக்கு உங்க விமர்சனம் பார்த்தாலெ விளையாட்டுப் பார்த்த திருப்தி வரும்.எனக்கு நாளைக்கு நேரமில்லை.அதோட யார் வென்றாலும் நாம வென்றமாதிரித்தான் !

    ReplyDelete
  55. @ மாணவன்

    //அழகான ரசனையுடன்.....எழுத்துநடை அபாரம் சுப்பரா எழுதியிருக்கீங்க நண்பரே, கிரேட்... வாழ்த்துக்கள் :) //

    மிகவும் நன்றி நண்பரே....

    ReplyDelete
  56. @ ஹேமா அக்கா

    //நாளைக்கு உங்க விமர்சனம் பார்த்தாலெ விளையாட்டுப் பார்த்த திருப்தி வரும்.//

    I' m honored akkaa..... So sweet of you...

    எனக்கு நாளைக்கு நேரமில்லை.அதோட யார் வென்றாலும் நாம வென்றமாதிரித்தான் ! //

    அடடா... நீங்க பார்க்கமுடியாதா நாளைக்கு..... :-(
    இங்கே இந்தியாவில் இந்தப் போட்டி ரொம்ப சென்ஸிடிவ்வாதான் இருக்கு அக்கா..... அதுவும் மகிந்தா மேட்ச் பார்க்க வரதுனால தமிழ்நாட்டில் இப்பவே டெம்பரேச்சர் அதிகமாத்தான் இருக்கு.....

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)