Sunday, April 03, 2011

சச்சினின் கோப்பை இது..... சரித்திரம் ஆனது இன்று!!!

 இன்று காலையில் எழுதிய வரிகள் இவை........


கிரிக்கெட் உலகின் இன்றைய விடியல் விசேஷமானது!
கனவுகள் யாவருக்கும் சாத்தியம்தான் ஆனால் அவை நனவாவது  ஒன்றும் சத்தியம் அல்ல!

கனவுகள் பூக்கத் துவங்கிய ஒற்றை இலக்க வயதில் கனவே உருவாய் ஓர் இளம் மனிதன் அறிமுகமானான்.....

அன்று நான் பொடியன்..... அவன் சிறுவன்.....!!

 "கனவு" என்னும் சொல்லுக்கு அவனே பொருளாக மாறிவந்தான்.....
"கனவு"களின் மெய்ப்பொருள் காண்பது அறிவெனில் அத்தனை கனவுகளுக்கும் ஒரே மெய்ப்பொருள் "வெற்றி"தான்!
எதில் வெற்றி? அது எப்போது? இந்த இரண்டே கேள்விகளில் அண்டம் தாண்டியும் நீளும் கனவுகள் நிஜ உலகின் இலக்குகளாக அடங்கிவிடும்! எனக்குக் கனவுகளின் மெய்ப்பொருள் புரியுமுன்னே அவன் தன் கனவுகளை வரையறுத்து ஓர் இலக்காக நிலைநிறுத்தி பாதிதூரம் கடந்துமிருந்தான்....

இன்று நான் இளைஞன்.... அவனோ என்றும் இளைஞன்‍!!!

கனவுலகின் இன்பங்களை நிஜவுலகில் நிறுவி அதை மெய்ப்பிக்கத் தவறிவிட்ட எத்தனையோ மனிதர்களில் நானும் ஒருவனாக ஆண்டுதோறும் வயதுகூடிவர....வயதை என்றோ வென்றுவிட்ட அவனது கனவுகளைத்தான் இன்று என் கண்களில் கண்டுவருகிறேன் ...... அவனது  கோடான கோடி ரசிகர்களில் ஒருவனாய்....!!!!


இவன் தான் அவன்........!!!  

                


.

    இதுதான் அவன் கனவு.........!!

    

தன் கனவிடம் தன் காதலை என்றோ சொல்லிவிட்ட அவனைவிட அதிகமாய் அந்தக் கனவு அவனைக் காதலிக்கின்றது!
அதனால்தான் உடனடியாக  அவனிடம் கைசேர்ந்துவிடாமல் ஒவ்வொருமுறையும் தொடுவானமாய்த் தள்ளி நின்று  தன்னைத் தொட்டுப் பிடிக்கச் சொன்னது!! தன்னை நோக்கி  வரும்வழியில் அவன் சம்பாஷிக்கும் கிரிக்கெட் உலகின் அத்தனை வெற்றிகளையும் அவனை வெல்லுமாறு வெறியேற்றியது.... இனியும் வெல்ல எதுவுமில்லை என்ற நிலையில், தன்னை இறுதியாக அவனிடம் கையளிக்க‌ அந்தக் கனவு அவனை வரச்சொல்லியிருக்கும் இடம் அவன் தன் கனவுதனைக் கண்டெடுத்த களம்..... தன் ஓட்டத்தைத் துவக்கிய அதே இடம்!! அது அவன் பிறந்த மும்பையின் "வான்கடே மைதானம்"!!!

இன்று நடக்கப் போகும் இறுதி யுத்தத்தில் இந்தக் காதல் கைகூடுமா? என்னும் பதற்றம் யாருக்கும் தேவையில்லை...!
ஏனெனில் அவன் காதலை இந்த உலகும் அறியும்...... உலகை விட அதிகமாய் அவன் கனவும் அறியும்.....!! இந்த நீண்ட நேடும்பயணத்தில் இவன் கண்டிருக்கும் சாதனைகளுக்கெல்லாம் இந்தக் கனவினால் கூட ஒற்றை மகுடம் வைத்துவிட முடியாது!! இந்தக் காதல் கதையின் முடிவில் காதலர்கள் சேர்ந்தாலும் பிரிந்தாலும் சச்சினின் காதல் வெற்றியே!!

காலைவரை கனவாக இருந்தது......... இதோ சரித்திரம் ஆனது இன்று!!!!!
இதோ இப்பொழுது அந்தக் கதையின் தொடர்ச்சி.......




அவனது காதலி அவனை ஏமாற்றவிடவில்லை..... இந்த நீண்ட நெடும்பயணத்தில் அவன் காதலி அவனிடம் ஒவ்வொருமுறையும் தன்னைத் தர அவனிடம்  கேட்டிருந்த வெவ்வேறு புதிய‌ சாதனை மகுடங்களை எல்லாம்.... உடலின் ஒவ்வொரு எலும்பும் வலிக்க.... வயது பாராமல் வருடக்கணக்கில் அவன் உழைத்து, கணக்கற்ற காயங்களையும் அறுவை சிகிச்சைகளையும் தாங்கிக்கொண்டு, தாங்கிப் பிடித்துத் தூக்கிவிட்ட தந்தையின் மறைவிற்குக்கூட இரண்டே நாள் லீவ் எடுத்துத் திரும்பிவந்து, வலி, வேதனை, விமர்சனங்கள் அத்தனையும் தாங்கிக்கொண்டுத் தன் கனவான காதலி தன்னிடம் கேட்டதற்கும் மேலான சாதனை சரித்திரங்களை சுமந்து சென்றிருந்தான் அவளைக் காண......

அவளை வெல்ல விரட்டிக்கொண்டு உலகெங்கும் சுற்றியவனை..... அவன் முதன்முதலில் பேட்டைப் பிடித்துக் களம்கண்ட அவனது சொந்த மண்ணிற்கே அவனை அழைத்து வந்து பெருமையோடு தன்னைக் கொடுத்தாள் அவனிடம் இன்று... இந்த சில மணித்துளிகள் முன்பு !!!!!


         



வெற்றியைத் தழுவத் துடித்திருந்தான் தன் வாழ்க்கை முழுதும்..... ஆனால் வெற்றி இன்று அவனைத் தேடி வந்து இருகத் தழுவிக்கொண்டது !!!!

இது சச்சினின் கோப்பை!!!!!!!!  Sachin - The God of Cricket!!!!

 சச்சின் "கனவு நாயகன்" அல்ல "கனவுகளின் நாயகன்" , "இளைய தலைவன்" அல்ல அவன் "இளமைக்குத் தலைவன்" !!!!

...... சச்சினைப் பார்க்கும்போதெல்லாம் சாதிக்கத் தோன்றியது அன்று... சிறுவனாய் அவன் ரசிகனாய்க் கனவுகளுடன் ஓடிக்கொண்டிருந்தபோது........!  இன்று அதுபோல் ஓடமுடியவில்லை .....  ஹ்ம்ம் வயதாகிவிட்டது!! ஆனால் அவனுக்கு வயதாகவில்லை....... இதுவும் அவனது எல்லையா??? இல்லவே இல்லை.... இதோ அடுத்து ஐபிஎல்லில் ஆரஞ்ச் கேப்பைத் தக்கவைப்பான்..... இங்கிலாந்து சென்று நூறாவது சதம் கடப்பான்....... இருபதாயிரம் ரன்களை எட்டிப்பிடிப்பான்...... 50 ஒருநாள் சர்வதேச சதங்களைப் பதிவு செய்வான்.......

ஓய்வையும் அவன் தேடிக்கொள்ள மாட்டான் ஓய்வும் தானாகவே வந்து தன்னை ஏற்றுக்கொள்ளக் கெஞ்சும்........

சச்சின் ஒரு சகாப்தம்....!!! ஜெய் ஹோ சச்சின்..... நானும் உன்னை ரசித்திருக்கிறேன் என்று பெருமைப் படுகிறேன்.....

சச்சினின் கோப்பையிது! சச்சினுக்குப் பெற்றுத்தந்த ஒப்பற்ற நம் அணியை வாழ்த்துவோம்!!!

சக் தே இந்தியா..... ஜெய் ஹோ சச்சின்!!!!!!

வ‌ழ‌க்க‌மான‌ மேட்ச் க‌வ‌ரேஜ் இங்கே : இந்தியா V இல‌ங்கை - துடிக்க‌ட்டும் புஜ‌ம்... நாம் ஜெயித்த‌து நிஜ‌ம்!!


அன்புடன்,

பிரபு எம்



47 comments:

  1. வலைமனை சுகுமார்ஜியை விட விரைந்து இடுகையிட்டதற்கு முதல் பூச்செண்டு...

    ReplyDelete
  2. // இதுவும் அவனது எல்லையா??? இல்லவே இல்லை.... இதோ அடுத்து ஐபிஎல்லில் ஆரஞ்ச் கேப்பைத் தக்கவைப்பான்..... இங்கிலாந்து சென்று நூறாவது சதம் கடப்பான்....... இருபதாயிரம் ரன்களை எட்டிப்பிடிப்பான்...... 50 ஒருநாள் சர்வதேச சதங்களைப் பதிவு செய்வான்....... //

    சூப்பர்...

    ReplyDelete
  3. முதலில் மகிழ்ச்சியான வெற்றி கலந்த வணக்கங்களும், வாழ்த்துக்களும் நண்பரே
    :))

    ReplyDelete
  4. வார்த்தைகள் ஒவ்வொன்றும் கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சினுக்கு அர்ப்பனங்கள், அருமை....

    ReplyDelete
  5. //வெற்றியைத் தழுவத் துடித்திருந்தான் தன் வாழ்க்கை முழுதும்..... ஆனால் வெற்றி இன்று அவனைத் தேடி வந்து இருகத் தழுவிக்கொண்டது !!!!

    இது சச்சினின் கோப்பை!!!!!!!! Sachin - The God of Cricket!!!!

    சச்சின் "கனவு நாயகன்" அல்ல "கனவுகளின் நாயகன்" , "இளைய தலைவன்" அல்ல அவன் "இளமைக்குத் தலைவன்" !!!!//

    இதைவிட வேறு சிறப்பாக சொல்ல முடியாது சூப்பரா சொல்லியிருக்கீங்க நண்பரே வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  6. //...... சச்சினைப் பார்க்கும்போதெல்லாம் சாதிக்கத் தோன்றியது அன்று... சிறுவனாய் அவன் ரசிகனாய்க் கனவுகளுடன் ஓடிக்கொண்டிருந்தபோது........! இன்று அதுபோல் ஓடமுடியவில்லை ..... ஹ்ம்ம் வயதாகிவிட்டது!! ஆனால் அவனுக்கு வயதாகவில்லை....... இதுவும் அவனது எல்லையா??? இல்லவே இல்லை.... இதோ அடுத்து ஐபிஎல்லில் ஆரஞ்ச் கேப்பைத் தக்கவைப்பான்..... இங்கிலாந்து சென்று நூறாவது சதம் கடப்பான்....... இருபதாயிரம் ரன்களை எட்டிப்பிடிப்பான்...... 50 ஒருநாள் சர்வதேச சதங்களைப் பதிவு செய்வான்......//


    உங்கள் வார்த்தைகள் அப்படியே நனவாகட்டும், இதுதான் உண்மை வரலாறும் இதற்காகத்தான் காத்திருக்கிறது :))

    ReplyDelete
  7. //சச்சினின் கோப்பையிது! சச்சினுக்குப் பெற்றுத்தந்த ஒப்பற்ற நம் அணியை வாழ்த்துவோம்!!!

    சக் தே இந்தியா..... ஜெய் ஹோ சச்சின்!!!!!!//

    நிச்சயமாக நமது அணியின் வீரர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ராயல் சல்யுட் :))

    சக் தே இந்தியா..... ஜெய் ஹோ சச்சின்!!!

    ReplyDelete
  8. ரொம்ப ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க!!!:))

    ReplyDelete
  9. தல உங்களின் ஆட்டம் ஓயாது.. கலக்குங்க தல.. கலக்குங்க...

    ReplyDelete
  10. பிரபு...உன் பதிவுக்காய் தான் லாகின் பண்ணினேன் விடுமுறை நாளாய் இருந்தும்..இம்முறை நோ கிண்டல்..முழுக்க முழுக்க உணர்ச்சி பெருவாகத்தில் நான்...

    ReplyDelete
  11. //அவனது காதலி அவனை ஏமாற்றவிடவில்லை..... இந்த நீண்ட நெடும்பயணத்தில் அவன் காதலி அவனிடம் ஒவ்வொருமுறையும் தன்னைத் தர அவனிடம் கேட்டிருந்த வெவ்வேறு புதிய‌ சாதனை மகுடங்களை எல்லாம்.... உடலின் ஒவ்வொரு எலும்பும் வலிக்க.... வயது பாராமல் வருடக்கணக்கில் அவன் உழைத்து, கணக்கற்ற காயங்களையும் அறுவை சிகிச்சைகளையும் தாங்கிக்கொண்டு, தாங்கிப் பிடித்துத் தூக்கிவிட்ட தந்தையின் மறைவிற்குக்கூட இரண்டே நாள் லீவ் எடுத்துத் திரும்பிவந்து, வலி, வேதனை, விமர்சனங்கள் அத்தனையும் தாங்கிக்கொண்டுத் தன் கனவான காதலி தன்னிடம் கேட்டதற்கும் மேலான சாதனை சரித்திரங்களை சுமந்து சென்றிருந்தான் அவளைக் காண...... //
    எமோஷன் இல் ஏற்கனவே இருந்த நான்...மீண்டும் இந்த வரிகளில் அழுதேன்...பிரபு...ஒரு உண்மையான ரசிகனால் சச்சினுக்கு சமர்க்கிபட்ட வரிகளா தான் நினைக்கிறேன் இதை...u did it...

    ReplyDelete
  12. நேற்றைய டாஸ் இல் ஆரம்பிச்ச அபசகுனத்தில் ஆரம்பிச்சு அப்டியே ஸ்ரீசாந்த் இருக்கானு தெரிஞ்சு வெறுப்பான பொழுதுகள் எல்லாம் ஒரே நொடியில் மாயமாய் போய்டுச்சு...

    ReplyDelete
  13. டோனி யின் பதில்கள் கூட எவ்வளவு தெளிவு...வாவ்...கண்களில் எதிர்பார்ப்பை தேக்கி...உண்மை நிருப்பிக்கபட்டபின் அப்டியே தாரை தாரையாய் தண்ணிர் நேற்று...

    ReplyDelete
  14. சச்சின்...சச்சின்...நமக்கெல்லாம் வயசாய்டும் பிரபு எச்செப்ட் சச்சின்...பார்த்தால் அப்டியா தெரியுது..குட்டியூண்டு பையன் மாதிரி பட்டாம்பூச்சியை போல துரு துரு பையனாய்...love you sachin...we love you sachin...

    ReplyDelete
  15. டாஸ் சில் நடந்து குளறுபடிகளில் மீடியா வின் பார்வை சூட்டை கிளப்ப...ஒரு வேளை தோத்து இருந்தால் இதுவே டோனி க்கு ஆயுதமாய் இருந்து இருக்கலாம் இல்லையா?? ஸ்ரீசாந்த் தை ரவிசாஸ்திரி லக்கி charm என்று வருனிக்கும்போதேல்லாம் சூடு மதுரை வெயிலை யும் மீறி போனது...ஆனால் it happened ..இல்லையா...

    ReplyDelete
  16. அடுத்தடுத்து போன நம் இரு விக்கெட்டுகளில் சுவாசம் மறந்த நிலையில் இந்தியாவே ....நானும் கூட..என் தோழி போன் இல்..."ஆனந்தி...டோன்ட் வொர்ரி...நான் சாய்பாபா க்கு ஒன்னாரூபா முடிஞ்சு வச்சிருக்கேன்...கடவுள் கை விடுவதில்லை...நாம ஜெயிப்போம் " சொன்னபோது கூட நான் சிறிது அலட்சிய படுத்தி விட்டு மீண்டும் சோர்வில் மூழ்கினேன்...ஆனால்...வெற்றி நிகழ்வு நடந்த போது...நான் அவளை கூப்பிட்டு சொன்னது..."கடவுளும் சச்சின் விசிறி கண்ணா .." he did for sachin ...

    ReplyDelete
  17. நான் அதுவரை ஒரு இடத்தில் அமர்ந்து மேட்ச் பார்க்க...எழுந்து வேற இடம் போகும்போது விராட் கோலி அவுட் ஆக...அதற்க்கு பிறகு மேட்ச் முடியும் வரை வீட்டில் மூன்று பேரும் அனு அளவு கூட அசைய வில்லை தத்தம் இடத்தில் இருந்து...b'coz we wish to get d cup for sachin...

    ReplyDelete
  18. மேட்ச் முடியும் வரை பசி மறந்தோம்....ஜெயித்தபிறகு மூளையின் அதிக பட்ச சந்தோஷத்தை உணர்ந்தேன் என் கண்ணீர் மூலம்...மதுரைக்கு நிஜ தீபாவளி,பொங்கல் எல்லாம் நேற்று இரவு தான்....வான வேடிக்கையில் மூழ்கியது நேற்று மதுரையின் இரவு..தெருக்களில் கிரிக்கெட் ரசிகர்களின் மகிழ்ச்சி தாண்டவம்..."இந்த படை போதுமா..இன்னும் கொஞ்சம் வேணுமா..." வாவ்...love you dhoni...we love you...we proud of you...

    ReplyDelete
  19. என் மகனின் குட்டி சுல்லான்ஸ் டீம் பிள்ளையார் கோவிலில் சச்சின் பேருக்கு அர்ச்சனை பண்ணும்போது அர்ச்சகரின் அழகான புன்வுருவல்..வாவ்..அழகிய ஹைக்கூ...

    ReplyDelete
  20. இந்த வெற்றியில் அனைவரும் இந்தியன் என்பதை அற்புதமாய் நிருபித்தோம்..நம் சந்தோஷம்,கோவம்,வருத்தம் மூலமாய்...we are the world...we are the children..(thanks to MJ)

    ReplyDelete
  21. எது நடந்ததோ..அது முழுக்க முழுக்க நன்றாகவே நடந்தது...

    ReplyDelete
  22. காலையில் ஆதித்யா,கணவர்,நான் மூணு பேரும் பேசிட்டு இருந்தபோது ஆதித்யா வேடிக்கையாய் ஒன்றை குறிப்பிட்டான்..."நேத்து டோனி,காம்பிர் செம partner ஷிப்...ஆனால் அடுத்த வாரம் ரெண்டு பேரும் எதிரிங்க ன்னு...ஹ ஹ...he means IPL ...:))

    ReplyDelete
  23. எதுவும் புதிதாய் வாழ்த்த வரிகள் இல்லை...ஒரே மந்திரம்..."ஜெய் ஹோ...!"

    ReplyDelete
  24. Jai ho..... India.....
    we turned speechless yesterday.... Sachin was like a child... Running here and there celebrating it to the core.... Every player become emotional with tears in eyes....oru varalaru nethu padaika pattathu.... Every indian must ve shed tears of joy.... Cherishable moments.... thanks to TEAM INDIA

    ReplyDelete
  25. அண்ணா உங்கள் வரிகள் என்னை மேலும் மெய் சிலிர்க்க வைத்தது.....
    மிக்க நன்றி.....
    சச்சின் கிரிக்கெட்டின் கடவுள்!!!
    சச்சின் இளமையின் கடவுள்!!!
    தன் கனவை காதலியை முதல் மனைவியை நேற்று தொட்டு தழுவி இன்புற்றான்...
    கண் கொள்ளா காட்சி.....
    இந்த கடவுளின் நலின நடனத்தை என்றும் எதிர்பார்க்கும் கடைநிலை பக்தன்....

    ReplyDelete
  26. Ko.Vai. Aranganathan12:35 PM

    வலைப்பதிவுகளுக்கே உள்ள இலக்கணப்படி யாராவது சச்சினையும் கிரிக்கெட்டையும் குறை சொல்லி எழுதிருப்பார்கள் என்று பயந்துகொண்டே படித்தேன். நல்ல வேளை யாரும் அப்படி எழுதவில்லை. இது கொண்டாட வேண்டிய நேரம். யாரும் சேற்றைவாரி இரைத்துவிடாதிர்கள்!

    ReplyDelete
  27. சேவாக்கின் ஜீரோ ஹீரோவும் சச்சினின் 18 ஓட்டம் துவக்க ஆட்டம் இந்தியா அவுட் என்றுதான் எனது மனதிலும்,பெரும்பாலோரின் மனதிலும் உருவாகியிருக்குமென்று நினைக்கின்றேன்.

    சொல்லப்போனால் இது கம்பீருக்கும்,தோனிக்குமான கோப்பை என்பதே சரியாக இருக்கும்.

    நிறுவனங்களுக்கு Good will மாதிரி சச்சின்!அவ்வளவுதான்.

    ReplyDelete
  28. @ ko.vai. Aranganathan

    பாஸ்.... சேற்றை வாரி இரைப்ப‌தா??? என்னை சொல்லாவிட்டாலும், என்னிட‌ம் நீங்க‌ள் இதை சொல்லியிருக்க‌க்கூடாது!!! :-)

    ச‌ச்சின் ப‌ற்றிய‌ என் முந்தைய‌ ப‌திவுக‌ளைப் ப‌டித்துப்பாருங்க‌ள்.....

    த‌விர‌ சூரிய‌ன் மீது சேற்றைவாரி இரைக்க‌ முடியுமா..? புவி ஈர்ப்பு விசையே நியூட்ட‌னின் மூன்றாம் விதியை (!) அவ‌ர்க‌ளுக்கு நிரூபித்துக்காட்டும்!!!

    ReplyDelete
  29. @ ராஜ‌ ந‌ட‌ராஜ‌ன்

    //நிறுவனங்களுக்கு Good will மாதிரி சச்சின்!அவ்வளவுதான். //

    இது உங்க‌ளுடைய‌ த‌னிப்ப‌ட்ட‌ க‌ருத்து...

    என் ப‌தில் : No Comments!! (The subscriber you have called is currently busy with some celeberations!!)

    ReplyDelete
  30. இது சச்சினின் கோப்பை.................. கிரேட் பாய்ஸ்...........வெல்டன்..........!

    ReplyDelete
  31. @ ப‌ன்னிக்குட்டி ராம்சாமி

    ரொம்ப‌ ந‌ன்றி ந‌ண்பா....
    யெஸ்.. இது ச‌ச்சினின் கோப்பை!!! :-)

    ReplyDelete
  32. @ பிர‌பா

    பூச்செண்டிற்கு மிக‌வும் ந‌ன்றி பிர‌பா.... :-)

    ReplyDelete
  33. @ மாண‌வ‌ன்

    //வார்த்தைகள் ஒவ்வொன்றும் கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சினுக்கு அர்ப்பனங்கள், அருமை....

    //

    //இதைவிட வேறு சிறப்பாக சொல்ல முடியாது சூப்பரா சொல்லியிருக்கீங்க நண்பரே வாழ்த்துக்கள் :) /



    ரொம்ப‌ ரொம்ப‌ ந‌ன்றி ந‌ண்ப‌ரே....
    ச‌ச்சினின் இருப‌த்தியோறு வ‌ருட‌க் காத்திருப்பும் அந்த‌க் க‌ன‌விற்கான‌ அவ‌ர‌து அர்ப்ப‌ணிப்பும் அவ‌ரை எவ்வ‌ள‌வு புக‌ழ்ந்தாலும் குறைவாக‌வே தோன்றுகிற‌து.... உங்க‌ள் க‌ருத்துரைக்கு மிக‌வும் ந‌ன்றி... :-)
    ஜெய் ஹோ ச‌ச்சின் ..

    ReplyDelete
  34. //ரொம்ப ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க!!!:)) //

    உங்க‌ள் பெய‌ரே மிக‌வும் அழ‌காக‌ இருக்கின்ற‌து ந‌ண்பா...
    மிக‌ மிக‌ ந‌ன்றி... :)

    ReplyDelete
  35. @ ஆன‌ந்தி அக்கா...

    நான் போட்டிருக்கும் ப‌திவை விட‌ப் ப‌ல‌ம‌ட‌ங்கு அழ‌கான‌தொரு ப‌திவை நீங்க‌ள் பின்னூட்ட‌மாக‌ வெளியிட்டுட்டீங்க‌ அக்கா....

    ஒவ்வொரு விஷ‌ய‌மும் அவ்ளோ அழ‌கு.... க‌ட‌வுளும் ச‌ச்சின் ஃபேன் என்று சொன்ன‌து ஆதித்த்யா குட்டி அன்ட் கோ செய்த‌ அர்ச்ச‌னையும் அழ‌குக் க‌விதைக‌ள் அக்கா.... :-)


    //நான் அதுவரை ஒரு இடத்தில் அமர்ந்து மேட்ச் பார்க்க...எழுந்து வேற இடம் போகும்போது விராட் கோலி அவுட் ஆக...அதற்க்கு பிறகு மேட்ச் முடியும் வரை வீட்டில் மூன்று பேரும் அனு அளவு கூட அசைய வில்லை தத்தம் இடத்தில் இருந்து...b'coz we wish to get d cup for sachin... //

    இது முற்றிலும் உண்மை அக்கா..... அந்த‌ நேர‌ங்க‌ள் மிக‌வும் சோத‌னையான‌ க‌ட்ட‌ம்!!! க‌ம்பீர் எழுந்து வ‌ந்த‌து ஒரு க‌ம்பீர‌க் க‌விதை.... :)

    Thank you sooooooo much akkkaaaa :-)

    ReplyDelete
  36. @ Sri

    // சச்சின் கிரிக்கெட்டின் கடவுள்!!!
    சச்சின் இளமையின் கடவுள்!!!
    தன் கனவை காதலியை முதல் மனைவியை நேற்று தொட்டு தழுவி இன்புற்றான்...
    கண் கொள்ளா காட்சி.....
    இந்த கடவுளின் நலின நடனத்தை என்றும் எதிர்பார்க்கும் கடைநிலை பக்தன்....//

    ரொம்ப அழ‌கா எழுதுற‌ ஸ்ரீ... :)
    ச‌ந்தோஷ‌மா இருந்த‌து உன்னுடைய‌ Expression பாத்து... :-)
    சீக்கிர‌ம் நீயும் ஒரு ப்ளாக் ஓப்ப‌ன் ப‌ண்ணேன்... :-)
    மேட்சைப் பொறுத்த‌வ‌ரை... யெஸ்.. ஜெய் ஹோ ச‌ச்சின்!!!

    ReplyDelete
  37. @ Prabhu anna...
    Thanks anna... Blog elutha mudiumanu therila... Try panrean anna.....

    ReplyDelete
  38. @ தம்பி கூர்மதியன்

    //தல உங்களின் ஆட்டம் ஓயாது.. கலக்குங்க தல.. கலக்குங்க... //

    ரொம்ப நன்றி தல!! :-)

    ReplyDelete
  39. @ Sri

    Good..
    Give a Try.. You can... :-)

    ReplyDelete
  40. உங்கள் பதிவைத் தொடுத்திருக்கிறேன்..படித்துப் பாருங்கள் நன்றி.

    ReplyDelete
  41. Anonymous2:12 AM

    A very fine tribute to the greatest cricketer of our time. Kudos, Mr Prabhu.

    ReplyDelete
  42. @ அறிவன்

    //உங்கள் பதிவைத் தொடுத்திருக்கிறேன்..படித்துப் பாருங்கள் நன்றி. //

    ஸாரி...புரிய‌வில்லை நண்பா... ஏதேனும் லிங்க் இருக்கின்ற‌தா?

    ReplyDelete
  43. //A very fine tribute to the greatest cricketer of our time. Kudos, Mr Prabhu. //

    Thank you very much friend.. :-)

    ReplyDelete
  44. Really Very Glad About U r Each and every Lines...

    I realized small Tears fall down 4m my eyes when i read this Article... Hats Off Prabu

    Sachin= Indians Heart Beat...

    ReplyDelete
  45. @ அறிவன்

    நன்றி நண்பா.. படித்துவிட்டேன்...

    ReplyDelete
  46. @ Spice

    Thank you so much Friend..
    Each and Every line and letter dedicated to our Master Blaster...

    //Sachin= Indians Heart Beat//

    Yes... Friend... The Nation's heart beats to his strokes with the middle of the bat!! :-)

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)