”ஆனாலும் இளையராஜா இப்படிக் கோபப் பட்டிருக்கக் கூடாது….
அந்தக் கேள்வியைப் பக்குவமாகக் கையாண்டிருக்கணும்” என்று இளையராஜாவுக்கு ஆளுக்கு ஆள்
ஃப்ரீ அட்வைஸ் கொடுத்துக்கொண்டிருக்க……. தீபிகா படுகோனின் சமீபத்திய பத்திரிக்கைப்
பேட்டி ஒன்று என் கண்ணில் பட்டுத்தொலைத்தது!
”டைம்ஸ் ஆஃப் இந்தியா” என்று ஒரு பத்திரிக்கை இருக்கிறதல்லவா…
(அதை ஏன் நீ படிக்குற??ன்னு கேட்கக்கூடாது
பெங்களூரு டீக்கடையில் கண்ணில் பட்ட விஷயம் இது!) பல “பெருமை”களுக்குச் சொந்தமான அந்தப்
பத்திரிக்கையில் அழகும் ஒய்யாரமுமாய் அரைமுதுகு காட்டிச் சிரிக்கும்
தீபிகாவின் ஒரு ஆளுயுரப் புகைப்படம் அருகே மிகப்பெரிய எழுத்துகளில் சில வார்த்தைகள்……
“I can be Naked in front of Ranveer He wont hurt
me!”
இதற்கு என்ன அர்த்தம்?? என்று இப்போதே ஒருமுறை அனைவரும்
அவரவர் புரிதலுக்கு ஏற்ப மனதில் இந்த வார்த்தைகளை translate செய்துகொள்ளுங்கள! செய்வீர்களா??
செய்வீர்களா?? ச்ச்சீ….. ஸாரி பாஸ் க்ராஸ் டாக்….!! ஸோ மனதுக்குள் translate செய்து
வைத்துக்கொள்ளுங்கள் சரியா! எனக்குத் தனிப்பட்ட முறையில் தீபிகாவின் அழகைவிட அவரின்
சமுதாய எதிர்கொள்ளலும் அனாயச ஆங்கிலமும் பிடிக்குமாதலால் அந்த டீக்கடையில் மலையாள சேட்டன்
அவரது டிரேட்மார்க்கான ஓர் அடிப்பொளி சாயாவைப் தயார் செய்து கொண்டிருக்கும் இடைவெளியில், அதே இதழில் தீபிகாவின் அந்த முழுப்பேட்டியையும் படித்தேன்.... படித்தால் உள்ளே பேட்டியில் ஒரு நான்கைந்து கேள்விகளுக்குப் பிறகான ஒரு கேள்விக்கு தலைப்பையொட்டிய பதில் இருந்தது..... இங்கே எப்படி இருக்கிறது என்று பாருங்கள்...... (ஸ்க்ரீன் ஷாட்டில் க்ளிக் செய்து பார்க்கவும்)
“I’m very sensitive It’s easy to hurt me………..bla
bla bla………..… I CAN BE SO NAKED IN FRONT OF RANVEER HE WON’T HURT ME!”
ஹ்ம்ம்ம்…. இப்போது மெதுவாக ஒரு குட்டி ரீவைண்ட் செய்து இதற்கு
முன்னால் செய்தித் தலைப்பில் கொடுத்திருந்த வாக்கியத்தையும் அதனை நீங்கள் மனதுக்குள்
translate செய்ததையும் இங்கு உள்செய்தியில் இருக்கும் இந்த வாக்கியத்தையும் ஒப்பிட்டுப்
பாருங்கள்! “SO” என்கிற இரண்டெழுத்து இடைச்சொல்லை மட்டும் நீக்கிவிட்டு பத்துமடங்கு அதிகமான சைஸ் எழுத்தில்
தலைப்பு கொடுத்து எப்படி கல்லா கட்ட அடிபோடுகிறார்கள் என்று புரிகிறதா?!
ஹிஹி….இவ்ளோதான் பாஸ் விஷயம் இந்த மட்டமான, beep song-க்கு இணையான வக்கிரத்துடன் கூடிய வியாபாரத்தைத்தான் ரொம்பவே ஸ்டைலாக “Contemporary Journalism” என்று பீட்டர் விட்டுக்கொண்டிருக்கிறோம்….. இதைச் சொன்னால் 'இரண்டெழுத்தில் அர்த்தம் எப்படி மாறுகிறது பாருங்கள்!' என்று ஒருவருக்கொருவர் ஆங்கில வகுப்பு எடுக்கத் துவங்கிவிட்டார்கள் உடனிருந்த நண்பர்கள்…. டேய் டேய் உங்களையெல்லாம் ஆயிரம் பெரியார் ஓ ஸாரி இவனுங்க பீட்டர்ஸ்.... பெரியார் வேண்டாம் ஆயிரம் ஆபிரகாம் லிங்கன் வந்தாலும் திருத்த முடியாதுடா…..! என்று நினைத்துக்கொண்டே சேட்டனின் சாயாவை உறிஞ்சத் துவங்கினேன்…….!

இத்தோடு முடியவில்லை கச்சேரி….. நமது விகடனார் இருக்கிறாரல்லவா??
ஆனந்த விகடனார்…… அவரும் அந்த பப்பி ஷேம் பேட்டித் தலைப்பைப் படித்திருக்கிறார் போலும்….
என்ன கிறக்கமோ அவரும் முழுப்பேட்டியைப் படிக்கவில்லையா அல்லது படித்தும் புரியவில்லையா
என்று எனக்குத் தெரியவில்லை இந்த வார விகடனில் என்ன வெளிவந்திருக்கிறது என்று அப்படியே
காப்பி பேஸ்ட் செய்கிறேன் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்…..
அவர்முன்னால் நான் ஆடை இல்லாமல் இருந்தால்கூட என் மேல் உரிமை எடுத்துக்கொள்ளமாட்டாராம்!! டேய்…டேய்…. ஃபேஸ்புக் ட்விட்டர் மற்றும் சில ஆன்லைன் செய்திகளில் இருந்து செய்தி சேகரிக்கும் copy+paste journalism-னு ஒன்றைக் கண்டுபிடிச்சீங்க ரைட்டு இப்போ அதையும் உங்க வசதிக்கு ட்விஸ்ட் பண்ணி கமர்ஷியலா “அதுக்கும் மேல” போறீங்களேம்மா….. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா……!!
"NAKED" என்கிற ஒரு வார்த்தை கிடைத்தவுடனேயே.... அது என்ன ஏதென்று ஆராயாமல் வெறுமனே பச்சையாக நிர்வாணம் என்கிற ரீதியில் அர்த்தம் கொண்டு.....ஒரு பெண் அதுவும் நடிகை என்று ஓர் ஊடகனே இப்படித் துடித்துக் களமிறங்கிவிட்டால்..... இயல்பிலேயே கீழ்த்தர ரசனையுடையவர்கள் ஏன் பீப் சாங்-களைப் பதிவேற்ற மாட்டார்களாம்??!

இப்படியெல்லாம் ஆயிரமாயிரம் தில்லாலங்கடி பேட்டிகளையும் ப்ரஸ்மீட்களையும் சாதாரணமாக செய்தித்தாள் வாசிக்கும் பழக்கம் இருப்பவர்களே மேற்கோள் காட்ட முடியும்…. நமது மீடியாவின் தரம் எந்தளவு தரைமட்டமானது என்பதை சிரமேற்கொண்டு விளக்கத் தேவையில்லை அது கண்ணாடி தேவைப்படாத கைப்புண் தான்…. ஆனால் புண்கள் புரையோடிப் புற்றுவைத்துவிட்டால் எதிர்ப்படும் ஆபத்துகளையும் நாம் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதும் மறுப்பதற்கல்ல…..!
இப்போது இளையராஜா விஷயத்துக்கு வருவோம்……. ”அவன் நிருபர் அப்படித்தான் கேட்பான் இவரு ஏன் இப்படி டென்ஷன் ஆகுறாரு…. ஒரு பக்குவம் வேண்டாமா??” என்கிற ரீதியிலான அட்வைஸ் மழைகள் ஒருபுறம் இளையராஜாவை நோக்கிப் பொழிந்துகொண்டிருக்க…… இன்னொருப்புறம் அவரது ரசிகர்களும் தங்கள் தலைவனுக்காகத் தரம் தாழ்ந்தும் இறங்கியடிக்கத் தயாராக இருக்கும் இசைவிசிறிகள் அடிக்கும் கூத்துக்கள் அதைவிட மோசம்! இதுகுறித்து திரு. ஞானி அவர்களின் கீழ்க்கண்ட ஃபேஸ்புக் போஸ்ட் ஏற்புடையதாக இருந்தது!
எல்லாம் சரிதான்…… ஆனால் சென்னை மழை நிவாரணம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில்தான் இளையராஜாவை நிருபர்கள் சந்தித்திருக்கிறார்கள் அதில் இப்படி ஒரு சர்ச்சையான ஃபுட்டேஜ் கிடைத்தவுடனேயே அவர்கள் கவரேஜ் செய்யப்போன விஷயத்தை அப்படியே சென்னை வெள்ளத்தில் விட்டுவிட்டு செம்பரம்பாக்கம் ஏரியில் பீப் சாங் சர்ச்சையைக் கலந்து விட்டார்களே இந்த மீடியா தர்மத்தை யாருமே கண்டுகொள்ளவில்லையே!!!
நம்மல்லாம் நல்லா வருவோம் பாஸ்……
அன்புடன்,
பிரபு எம்.