கடவுள்களின் தாமதம் நல்லதாகிப்போனது, அந்தப் பொறுப்பை இணையத்தால் இணைந்த இதயமுள்ள மனிதர்களே கையிலெடுத்து, சில மனிதர்களின் அருவருப்பான செயல்பாடுகளால் ஆரம்பித்த கதைக்கு அழகான ஒரு முடிவைக் கொடுத்து நெகிழவைத்து விட்டார்கள்! அண்டவெளியில் உயிர்கள் வாழும் பூமிக்கோளில் ஒரு மகத்தான நாள் நேற்று என்றுதான் இதைச் சொல்லவேண்டும்!
கடந்த 19ம் தேதி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் 9 வயது சிறுவன் க்வேடென் பேய்ல்ஸ் தனது உடல்ரீதியான தோற்றக் குறைபாட்டின் காரணமாக சக மாணவர்களால் கடுமையான முறையில் துன்புறுத்தலுக்கு ஆளானதில் பள்ளியிலிருந்து அவனை அழைக்கவைந்த தன் அம்மாவிடம், காரில் வெடித்து அழுதிருக்கிறான்.... ஆற்றாமையில் உழன்ற அந்தத் தாய் தன் குழந்தையின் குற்றமற்ற வேதனை உணர்ச்சிகளை உலகத்துக்கு ஓளிபரப்ப..... ( நான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை பார்க்கப்போவதுமில்லை!) உலகெங்கும் வேற்றுமைகள் மறந்து வெறும் மனித உணர்வுகளால் தழுதழுத்து, உணர்ச்சிவேகத்தில் அந்த அழுகையை நிறுத்தி அவனைப் புன்னகைக்க வைக்க என்ன செய்யவென்று தெரியாமல் என்னென்னல்லாமோ செய்து திக்குமுக்காட வைத்துவிட்டது! :-)
சம்பவம் நடந்த இரண்டொரு நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான ரக்பி பந்தயத்தில் ஆஸ்திரேலிய அணியை முன்னடத்தி அழகாக நடந்துவந்தான் க்வேடென் பேய்ல்ஸ் அந்த அணியினரின் சீருடையில், ஆஸ்திரேலிய கேப்டனின் கையைப் பற்றிக்கொண்டு! அந்தப் புகைப்படம் உலகளவில் கோடிக்கணக்கான முறை மகிழ்வுடனும் திருப்தியுடனும் பகிரப்பட்டது.... இதுதவிர, யாரோ ஒரு நபர் க்வேடெனின் பெயரில் ஒரு "Gofundme" பேஜை உருவாக்கி.... க்வேடனை நான் டிஸ்னிலேண்டிற்கு அழைத்துச் சென்று அவனை மகிழ்விக்க வேண்டும் பத்தாயிரம் டாலர் பணம் நன்கொடை தருக என அறிவிக்க மணிப்பொழுதில் அந்தப் இணையப் பக்கத்தில் சுமார் நான்கு லட்சம் டாலர்கள் பணம் குவிந்திருந்தது! மேலும் மேலும் பல gofundme pages க்வேடனின் பெயரில் வெவ்வேறு காரணங்களைச் சொல்லி உருவாக்கப்பட்டன.... ஓர் அழுகையை ஆனந்தமாக்கிவிட உலகெங்கும் மனிதர்கள் அறிவு, அர்த்தங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உணர்ச்சிவசப்பட்டு சகட்டுமேனிக்கு செய்த காரியங்கள் எல்லாம் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு எதிர்கால உலகத்தின் மேல் நம்பிக்கையை விதைத்தது!
Body shaming என்று சொல்லப்படும் அசிங்கமான பழக்கத்தை இன்றும் உலகம் தொடர்வது மிகமிகக் கேவலமானது. நிறம், உடல்பருமன், உயரக்குறைவு, முடிஉதிர்தல் போன்ற இயற்கையான தோற்ற நிலைகளை ஒரு குற்றத்தைப் போல் முன்னிருத்தி வாழ்நாள் முழுதும் ஒருவிதமான பாதுகாப்பாப்பற்ற மன நிலையோடே சம்பந்தப்பட்டவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் வதைத்தெடுக்கும் அருவருப்பான பழக்கத்தைத் தயவுசெய்து விட்டொழிக்கவேண்டும்....!
ஓர் அழகான (relatively deceptive!) பெண்ணையோ ஆணையோ பார்க்கும்பொழுது மனித மூளையின் எந்தப் பகுதியில் நியூரான்கள் கிளர்ந்து எழுகின்றன எந்த உணர்வை எழச்செய்யும் எந்தெந்த ஹார்மோன்கள் உடலளவில் செயல்படுத்தப்படுகின்றன எனும் தகவல்கள் வரை விஞ்ஞானம் கட்டுடைத்து பப்ளிஷ் செய்துவிட்டது ஆனால் இன்னும் “அழகு”, ”அசிங்கம்” என்கிற, மிகமிக அற்பமான , இடம் பொருள் சூழல் வயது போன்ற அடிப்படைகள் மாற மாற, அதுசார்ந்த அர்த்தமும் அளவீடுகளும் மாறக்கூடிய, உபயோகமற்ற டிஸ்ட்ராக்ஷன்களைக் (distraction!) கூட இன்னும் மனித இனம் இத்தனை நூற்றாண்டுகளில் கடக்க முடியாததை எண்ணும் போது ஆறறிவு உயிரனம் இயற்கையால் ஏளனம் செய்யப்படத் தகுந்ததாகவே தோன்றுகிறது.... இந்த தோல் நிறம், சதை பலம், எலும்புமண்டல அமைப்பு, இவற்றையெல்லாம் தாண்டி ஊடுறுவிச் சென்றபின் தான் மனம், அறிவு, குணம் போன்ற மனிதனின் நிஜ அடையாளங்கள் குடிகொண்டுள்ளன... அதை இன்னும் அணுகக்கூட பெரும்பாலான ஜனம் எத்தனிப்பதில்லை என்ற அவமானகரமான உண்மைதான் வெளிப்படுகின்றது இதுபோன்ற body shaming அவலங்கள் உலகெங்கும் அடிக்கடி நிகழும்போது!
இவையெல்லாம் அதிகம் நிகழ்வது பள்ளிக்கூடங்களில் என்பதுதான் மேலும் வேதனையான விஷயம்.....பெற்றோர்கள் இதுபோன்ற விஷங்களை கவனத்துடன் கையாண்டு ஓர் ஆரோக்கியமான பார்வையைத் தங்கள் பிள்ளைகளிடத்தில் விதைத்திட வேண்டும், அது தவறும் பட்சத்தில், கல்விமுறைகளும், ஆசிரியர்களும் மூர்க்கமான முறையில் இதனைத் தடுத்திட வேண்டும்! இதற்கு சட்டங்களும் துணைசெய்ய வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்..... க்வேடன் பேய்ல்ஸ் இப்போது தன்னைத் துன்புருத்திய கோமாளிகளுக்கு சிரித்துக்கொண்டே நன்றி சொல்வான் தன்னை உலகமே கொண்டாட வாய்ப்பளித்த அவர்களின் அற்பத்தனத்துக்காக!

க்வேடென்களை க்வேடென்களாக இயல்பாய் அழகாய் வாழ இயற்கை வழிசெய்கிறது அதனைத் தொந்தரவு செய்யும் கேவலமான செய்கைகளை மட்டும் நாம் தவிர்த்தால் போதும்!
அன்புடன்,
பிரபு எம்