The Butterfly Effect (2004)
Cast: Ashton Kutcher
Amy Smart
Written & Directed by : Eric Bress & J. Mackye Gruber
கிட்டத்தட்ட இந்தப் படம் வெளிவந்த வருடமான 2004ம் ஆண்டுதான் என்று நினைக்கிறேன்... அன்றைய "“ஆனந்த விகட”னில் அமரர் சுஜாதா Chaos Theory பற்றி எழுதியிருந்தார். “குழப்பம்” என்று பொருள் படும் “Chaos" தியரியைக் குழப்பமின்றிப் பின்வருமாறு எளிமையாக அறிமுகம் செய்திருந்தார்!
”ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஒரேயொரு சிறகடிப்பு காற்றுமண்டலத்தில் ஏற்படுத்தும் மிகச் சிறிய மாற்றமானது கால ஓட்டத்தில் சற்றுதூரத்தில் வீசப்போகும் ஒரு பெரும்புயலுக்குக் காரணமாகலாம் (ஆகாமலும் போகலாம்!)” - கேயோஸ் தியரியை எளிதில் விளக்கப் பயன்படும் புகழ்பெற்றதொரு Metaphor இது!
அதாவது ஒரு பெரும் சம்பவம்/அவலம் நடந்தேறும்போது அதன் மூலகாரணங்களைத்தேடிக் காலவோட்டத்தில் பின்னோக்கிச் சென்று ஆராய்ந்தோம் என்றால் அது என்றோ நிகழ்ந்த ஏதோவொரு சர்வ சாதாரணமான (ஒரு வண்ணத்துப்பூச்சியின் ஒற்றை சிறகடிப்பை ஒத்த) மிகச்சிறியதான ஒரு நிகழ்வைத் தொட்டுத் துவங்கியிருக்கலாம் என்பதுதான் விஷயம்!
”12 பி” திரைப்படத்தில் ஷாம் வாழ்க்கையில் நிகழும் முக்கிய சம்பவங்கள் அனைத்துமே படத்தின் 12-வது நிமிடத்தில் அவர் சிட்டிபஸ்ஸில் பயணிக்கும்/அல்லது தவறவிடும் ஒரு சர்வசாதாரணமான நிகழ்வை மையமாக வைத்து நடப்பதாக இருந்ததல்லவா இதையும் “கேயோஸ்” அடிப்படையில் மேற்கண்டவாறு வகைப்படுத்தலாம்!
”தசாவதாரம்” திரைப்படத்தில் 12ம் நூற்றாண்டில் கடலுக்குள் அமிழ்த்தப்படும் விக்ரஹம் காலவோட்டத்தில் 2004ஆம் ஆண்டு சென்னையில் மாபெரும் சுனாமிக்கு மூலகாரணமாக அமைவதாகக் காட்டப்பட்டது “கேயோஸ் தியரி”யின் படி!
சுஜாதாவும் ஷங்கரும் இணைந்து எழுதிய “அந்நியன்” திரைக்கதையில் ”கேயோஸ் தியரி”யைக் கதைக்கு ஏற்றவாறு மிகவும் நுணுக்கமாகப் பயன்படுத்தியிருந்தார்கள்! இந்தியக் குடிமகன்களின் சமூக அலட்சியங்களை மையமாகக் கொண்ட திரைக்கதையில், அதிமுக்கியமானதொரு ஃப்ளாஷ்பேக் காட்சியை வைத்திருப்பார்கள்... பள்ளிக் குழந்தைகளை சுமந்து வரும் ஒரு சைக்கிள் ரிக்ஷா நோ-எண்ட்ரியில் நுழைகிறது அங்கே வரும் ஒரு வண்டியில் மோதி கட்டுப்பாடு இழந்து ரிக்ஷா தடுமாறும்போது உள்ளே இருக்கும் ஒரு குட்டிச் சிறுமி நிலைதடுமாறி ரிக்ஷாவிலிருந்து கீழே விழுகிறாள். மழை தண்ணீர் தேங்கி இருக்கும் அந்தத் தெருவில் ஏற்கெனவே ஒரு மின்கம்பி அறுந்து விழுந்திருக்க, தேங்கிக் கிடக்கும் அந்தத் தண்ணியில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருக்கின்றது. ரிக்ஷாவிலிருந்து கீழே விழும் அந்தச் சிறுமி சரியாக அந்தத் தண்ணீர்த் தேக்கத்திலேயே விழ மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக அந்த இடத்திலேயே உயிரிழக்கிறாள்.... அழுத்தமான இந்தக் காட்சியில் ஷங்கர், அளவுக்கதிகமான சுமையேற்றும் ரிக்ஷா, நோ-எண்ட்ரியில் செல்வது, மின்கம்பி அஜாக்கிரதை, மழைநீர் தெருவில் தேங்குவது என நிறைய சமூக அலட்சியங்களை நிரப்பி வைத்திருப்பார்.... காரணம் இந்த அலட்சியங்களில் ஏதாவது ஒன்று நிகழாமல் தவிர்க்கப்பட்டிருந்தால் கூட அந்தச் சிறுமி உயிரிழந்திருக்க மாட்டாள் என்னும் உண்மையைப் பார்வையாளர்களின் மனதில் உணர்ச்சிப்பூர்வமாக அழுத்தி ஒட்டவைப்பதற்காக!.... ஒரு பெரும் அவல விளைவு (சிறுமியின் மரணம்) சம்பவத்ததின் தொடக்கப் புள்ளி மின்கம்பிகளைப் பராமறிக்காமல் விட்டதோ அல்லது அந்த சிறு தெருவில் சரியானமுறையில் ரோடுபோடாததோ என ஒரு சாதாரன நிகழ்வுதான் அதற்குத் தொடக்கப்புள்ளியாக இருந்திருக்கமுடியும் - இதுதான் “ அந்நியன்” சொல்லும் கேயோஸ் தியரி!
சரி... இந்தப் படத்துக்கு வருவோம்!
ஹாலிவுட்டில் 2004-ஆம் ஆண்டு Eric Bress மற்றும் Mackye Gruber எழுதி இயக்கிய “தி பட்டர்ஃப்ளை எஃபெக்ட்” திரைப்படமும் முழுக்க முழுக்க கேயோஸ் தியரியின் அடிப்படையில் பின்னப்பட்ட படுசிக்கலான திரைக்கதையால் உருவானது!
மேலே குறிப்பிடப்பட்ட இந்தியப் படைப்புகள் கேயோஸ் தியரியின் அறிவுப்பூர்வமான யதார்த்தப் பதிவுகள் என்றால் இந்த ஹாலிவுட் படமோ அதே தியரியின் அடிப்படையில் உணர்வுப்பூர்வமான ஒரு ஃபேண்டஸி!
கதை நாயகனான எவான்(Evan)-ன் வாழ்வில், பிறக்கும்போதே ரெடிமேட் குழப்பங்கள் சூழ்ந்திருக்கின்றன... அவனது தந்தை ஒரு மனநோய் காரணமாக மனநலக் காப்பகத்தில் இருப்பவர்.... இன்னும் சொல்லப்போனால் அவனது தாத்தாவும் (அப்பாவின் அப்பா) உயிர் நீத்தது ஒரு மனநலக் காப்பகத்தில்தான்! மேலும் எவானுக்கு முன்னதாக இரண்டு குழந்தைகள் அவன் அம்மாவின் வயிற்றிலேயே மரணித்து still babies-ஆகப் பிறந்த மெடிக்கல் ஹிஸ்ட்ரி வேறு!
மிகமிக மோசமான இளம்பருவத்தைக் கடக்கிறான் சிறுவன் எவான். ஆறு வயதிலிருந்தே எவானின் அன்புக்குரிய தோழியான கேய்லீ (Kay Leigh), கேய்லீயின் மூர்க்கத்தனமான அண்ணன் டாமி (Tommy) மற்றும் இவர்களின் அப்பாவி obese நண்பன் லெனி (Lenny) மூவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்பவர்கள்..... எவானுக்கு கேய்லீயின் மீது சிறுவயதுமுதலே நட்பைத் தாண்டிய நெருக்கமான உறவு உண்டு... அவளுடைய அண்னன் டாமி சிறுவயதிலேயே கொடூரமான இயல்புடையவன். டாமி மற்றும் கேய்லீயின் தந்தை மில்லர், சிறுவர்களை வைத்து தகாத வீடியோக்கள் எடுக்கும் ஓர் ஈனத்தனமான பாத்திரம். தன் ஆறு வயது மகள் கேய்லீயையும், சிறுவன் எவானையும் வைத்தே அப்படியானதொரு வீடியோவை மில்லர் எடுக்க முயல்வதாக ஒரு horrible காட்சி ஒன்று இருக்கிறது படத்தில். தனது தங்கையுடன் எவான் நெருங்கிப் பழகுவது சிறுவயது முதலே டாமிக்குப் பிடிக்காது..... ஒருமுறை தன் தந்தையால் காயப்படுத்தப் பட்டிருக்கும் கேய்லீக்கு எவான் முத்தம் கொடுக்கும்போது (மருத்துவ முத்தம் அல்ல!) டாமி பார்த்துவிட அந்தக் கோபத்தில் எவானின் வீட்டிற்கு சென்று அவனையும் லெனியையும் மூர்க்கமாகத் தாக்கி எவானின் நாய்க்குட்டியை உயிருடன் ஒரு சாக்குப் பைக்குள் போட்டு எரித்துக் கொன்றுவிடுகிறான். அதே பதின்மப் பருவத் தொடக்கத்தில் விபரீதமான ஒரு விளையாட்டாக டாமியின் வீட்டிலிருக்கும் ஒரு டைனமைட்டைப் பற்ற வைத்து அருகிலிருக்கும் ஒரு வீட்டின் தபால்பெட்டியில் லெனியை வற்புறுத்தி டாமி போடவைப்பான் அது வெடித்துவிட எதிர்பாராதவிதமாக அந்த வீட்டில் பிறந்து சில நாட்களே ஆன ஒரு குழந்தை மரணிக்கின்றது அந்தக் காட்சி அழியாத குற்ற உணர்வாக லெனி, எவான் மற்றும் கேய்லீயின் கண்கள் முன்பே நிகழ்கிறது.... இதனையொட்டி டாமி சிறுவர் ஜெயிலுக்கு செல்ல, எவானை அவன் அம்மா அந்த ஏரியாவை விட்டு வேறு இடத்துக்குப் பெயர்ந்து சென்றுவிடுவார்.... கேய்லீ தனிமையடைகிறாள் லெனி மன நலம் பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகிறான்.....
எவான் வாழ்க்கையில் இந்த சம்பவங்கள் நடக்கும் பருவத்தில், அவனுக்குக் கிட்டத்தட்ட ஆறு வயதிலிருந்தே அவ்வப்போது “Black-out" ஆகிவிடும் பிரச்னை உண்டு.... அதாவது திடீரென்று அவன் மனம் ஒருவிதமான வெறுமை நிலையை அடைந்துவிட அவன் நினைவுகளில் ஒரு புள்ளிக்கு மேல் அந்த சூழ்நிலைகளில் என்ன நடந்தது என்று சுத்தமாக நினைவிருக்காது! மேலே சொன்ன ஒவ்வொரு மோசமான நிகழ்ச்சியிலும் ஒரு கட்டம்வரைதான் எவானுக்கு நினைவிருக்கும். சம்பந்தப்பட்ட அந்த காட்சிகளும் பாதியில் “கட்”டாகிப் பிறகு எவான் நினைவுக்குத் திரும்பிய பிறகுதான் தொடர்வதாய் திரைக்கதை அமைத்திருப்பார்கள்..... பாட்டன், தகப்பன் வழியில் எவானுக்கும் எந்த மனநோய் வந்துவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையுடன் முதன்முறை ப்ளாக்-அவுட் ஆனபோதே மன நல மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவார் எவானின் அம்மா.... ஆனால் தெளிவாக எவ்விதக் குறைபாடும் கண்டுபிடிக்க முடியாமல் எவானை ஒவ்வொரு நாளும் நடக்கும் சம்பவங்களை சிறு குறிப்பேடுகளில் தவறாது Journal எழுதிவருமாறு அறிவுறுத்துகிறார் மருத்துவர்..... எவானும் அவனுக்கு நினைவிழப்பு நேரும்வரையிலான சம்பவங்களைத் தொடர்ந்து Journal-லாக எழுதிவருகிறான்!
கேய்லீ, டாமி, லெனி ஆகியோரது வாழ்க்கை ஒவ்வொரு திசையில் பிரச்னைகளில் தேங்கிவிட கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றுவிடும் அளவு வளர்ந்துவிடுகிறான் எவான். அப்படியானதொரு வெற்றிகரமான சூழலில் எவானின் அம்மா எவானின் கையை ஒரு கைரேகை பார்க்கும் பெண்ணிடம் காட்டுவார்.... அதிர்ச்சியடையும் அந்தப் பெண்ணோ, எவானுக்குக் கையில் ஆயுள் ரேகையே இல்லை என்றும் அவனுக்கென்று ஓர் ஆன்மா (soul) இருக்கவே இருக்காது என்று சொல்கிறார்.... எவான் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லையென்றாலும் அவனது அம்மா கோபப்பட்டு அந்த இடத்திலிருந்து தன் மகனுடன் வெளியேறிவிடுவார்......
கிட்டத்தட்ட படம் ஆரம்பித்து முதல் ஒரு மணி நேரத்துக்கு மேலே சொன்ன காட்சிகள்தான் சற்றே குழப்பித் தெளிவான கோர்வையின்றி நான் - லீனியராகத் திரையில் விரியும். அதன்பின்பு, கல்லூரி விடுதியிலிருக்கும் எவான் தன்னுடைய சிறுவயது நண்பர்களின் நினைவு வந்து தன்னுடைய சிறுவயது ஜர்னல்களை வாசிப்பான்...... அவ்வப்போது black-out ஆகிவிடும் பிரச்னை காரணமாக ஒவ்வொரு மோசமான சம்பவமும் பாதிவரைதான் பதியப்பட்டிருக்கும் எவானின் டைரிகளில்... அச்சம்பவங்களை அவன் வாசிக்கும்போது திடீரென்று எழுத்துக்கள் ஆடத்துவங்கி அவனுக்கு மட்டும் ஏதோ நில நடுக்கம் வந்ததுபோல் உடல்ரீதியாகக் கஷ்டப்பட்டு மூக்கிலிருந்து ரத்தம் வழியத் துவங்கும் எவானுக்கு! அப்போதுதான் ஒருவழியாகத் தெரியவரும் நமக்கு..... அதாவது, எவானுடைய பழைய டைரிகளை அவன் படிக்கும்போது அந்த எழுத்துகள் அல்லது அந்த நினைவுகள் வழியே அவன் அந்தச் சம்பவம் நடக்கும் காலத்துக்கு சென்றுவிடுகிறான் என்று! (தன் டைரிக் குறிப்பு நினைவுகளின் வழியே கிட்டத்தட்ட ஒரு டைம்-டிராவல்).
நிகழ்காலத்தில் தான் நல்லவிதமாக வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு வந்துவிட்டாலும் தன்னுடன் வளர்ந்த நண்பர்கள் யாருமே நன்றாக வாழவில்லை என்னும் நிஜம் எவானை மிகவும் மனரீதியாகத் துன்புறுத்துகிறது.... அவர்களின் இந்த நிலைக்குத் தானும் ஒரு காரணம் என்னும் எண்ணம் அவனை மேலும் குற்ற உணர்வுக்கு ஆளாக்குகிறது! தன் நண்பர்களின் வாழ்க்கையைக் காவு வாங்கிவிட்ட அப்படியான மூலகாரணமான சம்பவங்களை எல்லாம் தன்னுடைய டைரிக்குறிப்புகள் மூலம் கடந்த காலத்துக்கு சென்று மாற்றியமைக்க முனைகிறான்! (கேயோஸ் தியரியின் படி!)....
டாமி, எவானின் வீட்டில் லெனியைத் தாக்கி எவானின் நாய்க்குட்டியை எரித்துக் கொல்லும் காட்சிக்குச் சென்று அந்த சம்பவத்தை மாற்றுகிறான் அதன்படி அப்போதே டாமி போலீஸிடம் பிடிபட்டு கேய்லீ மற்றும் லெனி சற்று சந்தோஷமாய் எவானுடன் கல்லூரிப் படிப்பிலும் உடன் வருகிறார்கள்... எல்லாம் நன்றாகப் போனாலும் டாமியின் வாழ்க்கை வீணானதை கேய்லீயால் தாங்கிக்கொள்ள முடியவில்லை... அதனை சரிசெய்ய மீண்டும் ஒரு கடந்தகால சம்பவத்துக்குள் சென்று இம்முறை இவர்களின் விபரீத விளையாட்டால் மரணிக்கும் கைக்குழந்தையைக் காப்பாற்றுகிறான்,.... அந்த முயற்சியில் எவான் தன்னுடைய கை, கால்களை இழந்து சக்கர நாற்காலியில் கல்லூரி பயில்கிறான்..... லெனியும் கேய்லீயும் தன்னை நட்புடன் கவனித்துக் கொள்கிறார்கள், டாமியும் மிகவும் பண்பட்ட இளைஞனாக ஏதோ வேலை செய்கிறான்.... லெனியும் கேய்லீயும் காதலிக்கிறார்கள்! எவானுக்கு அந்த ஏமாற்றம் வலித்தாலும் ஒருவகையில் இந்த முடிவு அவனுக்குப் பிடித்திருக்கிறது.... ஆனால் அதிலும் ஒரு பிரச்னை இருக்கின்றது..... எவானின் விபத்திற்குப் பிறகு அதிகமாகப் புகை பிடித்து நுரையீரல் புற்று நோய்க்கு ஆளாகி மரணப்படுக்கையில் இருக்கிறார் எவானின் அம்மா...... !
இப்படி ஒருவர் பிரச்னையை சரிசெய்யக் கடந்தகாலத்துக்கு சென்று மோசமான சம்பவங்களை எல்லாம் எவான் மாற்றியமைத்தால், அது இன்னொருவரின் வாழ்க்கையை முற்றிலும் காவு வாங்குவதாகவே அமைகிறது! இதனால் எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டவனாய் ஒரு கட்டத்தில் எவான் பிறந்த மருத்துவமனையில் தன் தாயின் மருத்துவக் குறிப்புகளை வாசித்து தன் பிறந்த நாளுக்குப் பயணமாகிக் கருவிலேயே எவான் தன்னை மாய்த்துக்கொள்வான்! (தனது தாயின் மெடிக்கல் ஹிஸ்ட்ரி படியே மூன்றாவது கருவில் மாய்ந்த குழந்தையாகித் தன் வாழ்வே இல்லாமல் செய்துகொள்கிறான்!)
எவான் கருவிலேயே இறந்து பிறக்க, எவானின் தந்தை முழு மன நலமுடன் தன் மனைவியுடனே வாழ்கிறார்.... கேய்லீ, லெனி மற்றும் டாமி எவானின் பெற்றோரின் அரவணைப்பில் நல்லவிதமாக வளர்வார்கள்.... நன்றாகப் படித்து ஆளாளுக்கு சந்தோஷமாகத் திருமணம் நடைபெற்று எல்லாரும் இன்புற்றிருக்கப் படம் முடிவடையும்.... எவான் என்று ஒருவன் உலகத்திலேயே இல்லாதவனாகிப் போகிறான்.... அப்போது அந்த கைரேகை பார்க்கும் பெண் சொன்னதை ஒருமுறை ரீகால் செய்து முடிகின்றது படம்!
படுகுழப்பமான திரைக்கதை..... மிகமிக சிக்கலான கதையமைப்பு..... முக்கியப் பாத்திரங்களான எவான், கேய்லீ, டாமி மற்றும் லெனி என நான்கு பேருக்கும் ஆறு வயதும் பதின்மூன்று வயது பிறகு இருபதுகளில் என்று ஒவ்வொரு பாத்திரத்துக்கும் உருவ ஒற்றுமையுடன் கூடிய மூன்று நடிகர்களை நடிக்கவைத்திருப்பது என அளவுக்கும் அதிகமாகக் கடினமாக உழைத்துத்தான் இந்தப் படத்தைத் திரையில் பதிந்திருக்கிறார்கள்....... வித்தியாசமான திரைக்கதை வடிவங்களை விரும்பும் பார்வையாளர்கள் நிச்சியம் இந்தப் படத்தைப் பார்க்கலாம்!
பதிவின் அதிக நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கிறேன்! உங்கள் கருத்துக்களை மறுமொழியில் தெரிவியுங்கள்....... பேசுவோம்! :-)
அன்புடன்,
பிரபு எம்