Wednesday, March 27, 2019

"செளக்கிதார்" - டீக்கடை டூ DRDO சயின்டிஸ்ட்: A Biopic😃😃




நம்ம சௌக்கிதாரு அய்யாவோட  பயோபிக்-கைத் தமிழ்ல படு கமர்ஷியலா பண்ணுறோம்! அவருகிட்ட ஓரு அதிமுக ஓ ஸாரி அறிமுக இயக்குனர் கதை சொன்னபோது......



ஓபன் பண்ணா ஃபர்ஸ்ட்டு சீன்-ல‌.... டெல்லி-ல முரட்டு வெயில்ல ஒரு கேட் வாட்ச்மேன் வேலைக்கு இண்டர்வியூக்கு நீங்க போறீங்க சார்....  அப்போ இண்டர்வியூ பண்ணுறவரு உங்கள பாத்து, "அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி டீக்கடை வெச்சிருந்தேன்னு உங்க ரெஸ்யூம்ல போட்டிருக்கு இப்போ வாட்ச்மேன் வேலைக்கு வந்திருக்கீங்க?"னு கேக்குறாரு.... அப்போ நீங்க கேமராவப் பாத்து ஆடியன்ஸப் பாத்து கண்ணடிச்சு சிரிக்கிறீங்க! உடனே பாகிஸ்தானுக்குள்ள ஃப்லைட்டெல்லாம் பறந்து போய் குண்டுபோடுற ஸீனெல்லாம் அனிருத் மியூசிக்-ல போட்டுப் பொளக்குறோம்!
அடுத்து அவர் மறுபடியும் உங்களப் பாத்து கேக்குறாரு... "என்னங்க ரெஸ்யூம்ல ஃபர்ஸ்டு பேஜுல கல்யாணம் ஆனவருன்னு போட்டிருக்கு, கடைசி பக்கத்துல சிங்கிள்னு போட்டிருக்கீங்க"ன்னு கேக்குறாரு.... அப்போ உங்க மூஞ்சிய க்ளோஸ்-அப்புல காட்டுறோம்.. உங்க கண்ணு கலங்கி மேல பாக்குறீங்க.. "முதல் மரியாதை" படத்துல ராஜா சாரோட வயலின பேக்ரவுண்டுல வாசிச்சு படத்துல ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்குன்னு ஆடியன்ஸை இப்போவே ஒரு மிரட்டு மிரட்டி வைக்கிறோம்! திரும்பவும் இன்டர்வியூ பண்ணுறவரு, "என்னங்க டிகிரி படிச்சிருக்கேன்னு போட்டிருக்கீங்க, டிகிரி சர்டிஃபிகேட் ஃபைல்-ல இல்லையே?"ன்னு கேக்குறாரு.... அப்போ நீங்க கோபமா அவரைப் பாக்குறீங்க..... டேபிள ஒரு தட்டுத் தட்டிட்டு கோபமா எந்திருச்சு உள்ள போறீங்க.... பரபரப்பா மியூஸிக் போடுறோம் உங்களையும் சிங்கத்தையும் மாறி மாறி காட்டுறோம்.... பாத்தா அது ஒரு விண்வெளி நிலையம்.... நீங்க உள்ள போறீங்க எல்லா சயின்டிஸ்ட்டும் உங்கள அதிர்ச்சியோட பாக்குறாங்க... இண்டர்வியூ பண்ணவரு உங்க பின்னாடியே வர்றாரு.. "சார்.. சார் ஹலோ நில்லுங்க சார்.....' இந்த மாதிரி யாரும் உள்ள வந்திடக்கூடாதுன்னுதான் சௌக்கிதார்னு ஒரு வாட்ச்மேனுக்கு யூனிஃபார்ம் தைச்சு கேட்டுக்கு வெளிய நிக்க வைக்கிறோம்... அந்த இன்டர்வியூவுக்கே வந்துட்டு நீங்களே உங்க‌ பாட்டுக்கு உள்ள போயிட்டு இருக்கீங்க.... சார் நில்லுங்க சார்"னு உங்க பின்னாடியே பதற்றமா ஓடி வர்றாரு... ஆனா உங்க வேகம் பயங்கரமா இருக்கு... அப்போதான் ஒரு ரூமுக்குள்ள நீங்க போறீங்க அங்கே நிறைய கேமரா இருக்கு.. கேமராவப் பாத்தவுடனே உங்க‌ ஃபேஸ் அப்படியே ஃப்ரெஷ்ஷாகிடுது அத நம்ம க்ளோஸ்-அப்புல காட்டுறோம்...... உள்ளே மேக்-அப் ரூமுக்குப் போய் 10 லட்ச ரூபாய்க்கு ப்ரொடியூசர் காசுல (ஜி.எஸ்.டி ரெண்டு லட்சம் சேர்த்து)  வாங்கிவெச்ச ஒரு சூட்டைப் போட்டுக்கிட்டு வந்து உக்காந்து.... "விண்வெளியில நீங்க லாஞ்ச் பண்ண ஒரு பயங்கரமான சாட்டிலைட் வெப்பன் பத்தி செம சயின்டிஃபிக்கா சுத்தி இருக்குற ஃபாரினர்ஸ் கிட்ட எல்லாம் நீங்க ஒன் ஹவருக்கு ஹிந்தில பேசுறீங்க.... மறுபடியும் மியூசிக் போட்டுப் பொளக்குறோம்!

இப்போ அந்த இன்டர்வியூ எடுத்தவரு.. உங்கள பாத்து , "வாட் எ மேன்... யாரு இவரு? டீக்கடைக் காரரா? வாட்ச் மேனா? மாஸ் ஹீரோவா? இல்ல ஸ்பேஸ் சயின்டிஸ்டா"?னு யோசிச்சிக்கிட்டே, மெர்சலாகி வாயப் பொளக்குறாரு....

அப்போதான் போடுறோம் சார் இண்டர்வெல் ப்ளாக்.....

எப்புடி சார் கதை??!!! செகண்ட் ஹாஃப்-ல நிறைய பாட்டு இருக்குது சார்.. நம்மளே நாஞ்சில் சம்பத் மாதிரி யார்கிட்டயாவது பாட்டெழுதி வாங்கிக்குவோம் போஸ்டர்ல கண்ணதாசன், வாலி, வைரமுத்துன்னு போட்டு மார்க்கெட்டிங் பண்ணிக்கலாம்! வேணும்னா சேக்கிழார், கம்பர்னு கூட போட்டுக்கலாம் சார்!

அன்புடன்,
பிரபு.எம்

No comments:

Post a Comment

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)