இந்த வருடத்துக்கான முதல்பதிவே சினிமா விமர்சனம்தானா? என்று லேசாக உருத்தினாலும் கூட ஆல் இஸ் வெல்தான்!!
பாஸிடிவ்வான ஒரு பதிவோடுதானே வருடத்தைத் துவங்கணும்... அதைவிட சூப்பர் பாஸிடிவ்வான இந்த ஷங்கர் படத்தைக் கொஞ்சம் ஸ்லாகித்துவிட்டு இந்த வருடத்துடைய கணக்கைத் துவங்குவதில் எனக்கு மகிழ்ச்சியே!!!!
"ரீ" என்கிற ஒற்றைத் தமிழ் எழுத்தை மட்டும் மனதிலிருந்து அழித்துவிட்டு ரசித்து மகிழ வேண்டிய ஓர் அழகிய திரை அனுபவம்!
"ரீ-மேக்கிங்" என்கிற வார்த்தையில் உள்ள "ரீ"யைத் தான் சொல்கிறேன்! அழித்துவிட்டுப் பார்த்தால் இந்தப் பொங்கலுக்கு விஜய் வைபவம்தான்!
"3 இடியட்ஸ்" என்னும் ஓர் அற்புதமான படைப்பைத் தனது கைகளால் மீண்டும் படைத்திடும் வாய்ப்பை ஷங்கர் தன் நகமும் தீண்டாது, ரேகையும் படியாது தொட்டும் தொடாமல் தூக்கிச் சுமந்து அழகுபடுத்திக் கொடுத்திருக்கிறார் இன்னும் இன்னும் அழகாக.....!!
இரண்டொரு மாற்றத்தை செய்துகொண்டு திரைக்கதை, இயக்கம் என்று தன் பெயரைப் போட்டுக்கொள்ளாமல்..... வெறும் இயக்கம் - ஷங்கர் என்று டைட்டில் கார்டு போட்டு அப்படியே அச்சு அசலாக ஒரிஜினலை ரீமேக்கி இருக்கும் ஷங்கரின் இந்த நேர்மைதான் அவரின் இந்தப் படவெற்றிக்கு சீக்ரெட் மற்றும் ஷார்ட் கட்!
ஒரு தேர்ந்த திரைக்கதையாக "த்ரீ இடியட்ஸ்" தாங்கி வந்த அந்த "இன்ஸ்பைரிங் இன்ஃபர்மேஷன்" எந்தவொரு மனிதனுக்கும் மனதின் மைலேஜைக் கூட்டும் ஒரு மந்திர மருந்தாகிவிடுவதில் ஆச்சர்யம் எதுவும் இருக்கப்போவதில்லை....... ஏனெனில் மொழி தாண்டி, இனம் தாண்டி, மதம் தாண்டியும் வீரியமாய் இதயத்துக்குள் பாயும் இந்த "ஆல் இஸ் வெல்" அப்ரோச்!!! அநேகமாக இந்த யுனிவர்சல் தத்துவத்தை அடித்தளமாகக் கொண்டுதான் ஷங்கர் தைரியமாகக் களம் கண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.... அவருக்குத்தான் நன்றாகவே தெரியுமே "இன்ஃபர்மேஷன் இஸ் வெல்த்" என்று!!
அமீர்கானாக விஜய்!...... விஜய்யிடம் "நடிப்பை" யெல்லாம் யாரும் எதிர்பார்ப்பதில்லை இருந்தாலும் தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரமாகப் படம்முழுக்கத் திரையில் சரளமாக உலவும் வரையில் தன்பங்குக்குக் பங்கம் வராதவாறு பார்த்துக்கொள்ளத் தெரிந்தவர் அவர்...... எப்படி "போக்கிரி"யில் மகேஷ்பாபுவின் காஸ்ட்யூமில் இருந்து மேனரிஸம் வரைக்கும் அப்படியே இமிடேட் செய்தாரோ அதேபோல்தான் இங்கு ரான்சோவை (அமீர்கான்) அப்படியே உள்வாங்கிக்கொண்டு பாரியாக அவதனித்திருக்கிறார்.... இருந்தாலும் இயல்பாகப் பல இடங்களில் மிளிர்கிறார் விஜய் என்பது பொய் அல்ல...... க்ளைமேக்ஸ் காட்சியில் விஜய்யின் உடல்மொழி மிக மிகக் கச்சிதம்..... (சத்தியமாக முதன்முறையாக விஜய் நடிப்பில் பாடிலாங்குவேஜ் பற்றியெல்லாம் பேசுவதாய் உணர்கிறேன்!) எல்லாவற்றிற்கும் மேலாக இந்த ரோலைத் தமிழில் விஜய்யால் மட்டுமே செய்ய முடியும் காரணம் நாற்பது வயதிலும் அவர் மெய்ன்டைன் பண்ணும் அந்த டீன்-ஏஜ் உடல்வாகு..... துறுதுறுவென ஜீவா, ஸ்ரீகாந்துடன் ஒன்றாக வலம் வந்ததில் ஃபிட்னஸ் புத்தகம் எழுதியிருக்கிறார் விஜய்...... கிரேட் ஜாப்! விஜய்யை ரசித்தேன் "கில்லி"க்கு அடுத்தபடியாய்!
ஜீவா.... ரெண்டு ஸ்கொயர் ஃபீட் இடம் மட்டுமே கிடைத்தாலும் கிடைச்சதில் வீடுகட்டி விளையாடியிருக்கிறார்.... செம ஸ்கோரிங் பை சௌத்ரி மகன்! ஷர்மான் ஜோஷியின் பாத்திரத்தைக் கேட்டுவாங்கிக் கொண்டதாக சொன்ன ஜீவா, ஒரிஜினலில் ஷர்மானின் ஸ்க்ரீன் ஸ்பேஸை டபுள் ட்ரிபிளாக்கிப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.... குறிப்பாக அந்தக் குடிபோதையில் குளறும் காட்சி..... விஜய்யும் ஸ்ரீகாந்தும் "நடித்த" அந்தக் காட்சியில் படு இயல்பாய் வெளிப்பட்டிருப்பார் ஜீவா.....ரொம்பவே அநாயசமாக நடிப்பு கைகூடுகிறது ஜீவாவுக்கு! பலருக்கு த்ரீயில் பிடிக்கப்போவது இந்த நம்பர் டூ வைத்தான்!
ஸ்ரீகாந்த்..... குறையே சொல்லிவிட முடியாத பெர்ஃபார்மென்ஸ்.... எப்படியாவது ஒரு கம்பேக் ரவுண்ட் வந்திடவேண்டும் என்ற வேகம் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது.... பொதுவாகவே இவர் சொதப்பும் வாய்ஸ் மாடுலேஷன் சம்பந்தப்பட்ட ஏரியாக்களில் ஸ்ரீகாந்தா என்று நம்ப முடியாத அளவு அழுத்தமான ரொம்பவே மெச்சூர்ட் டயலாக் டெலிவரி..... மேலும் புருவத்தைத் தூக்கிக்கொண்டு ஓவர் எக்ஸைட்டடாக இவர் நடிப்பதும் எரிச்சல் ரகமாக இருக்கும் பட் இந்தப் படத்தில் ஒரு ஸீனில்கூட பழைய ஸ்ரீகாந்த்தைப் பார்க்கவே முடியாதது சந்தோஷமான ஆச்சர்யம்..... அடுத்தப்படம் என்று நிச்சியம் ஒன்று வரும் அதில் ஷங்கர் இல்லாமல் ஜெயிக்கணும் பாஸ் நீங்க..... பார்த்து செலக்ட் பண்ணுங்க...............!
இலியானா.... கரீனா செய்த வேடத்தைத் தமிழில் செய்ய அழகும், அந்தப் பேசும் விழிகளும் இருந்தால் போதும் என்றால் எந்தவொரு நடிகைக்கும் பொருந்தியிருக்கக் கூடிய ரோல்தான்... ஆனால் அதையும் தாண்டி கரீனாவுடைய "கெத்"தை இயல்பாய் மெய்ன்டைன் செய்தவிதத்தில் கெத்தாக ஜெய்த்திருக்கிறார்!..... அனுயா ஏற்கெனவே தான் ஒரு தைரியமான நடிகை என்று நிரூபித்த ப்ரூவன் ஆர்டிஸ்ட்..... குட்டியூண்டு ரோலிலும் க்யூட் பெர்ஃபார்மென்ஸ்.....
சத்துராக சத்யன்...... ரொம்ப ரொம்ப ரொம்ப எதிர்பார்க்கப்பட்டவர் இவர்தான்! மொழுமொழு ஸாடிஸம்..... வாவ்... ரொம்பவே மெனக்கிட்டு பெர்ஃபெக்ஷன் காட்டியிருக்கிறார்..... அந்த "கற்பழிப்பு - கலவி" சொற்பொழிவிற்கு தியேட்டரே எழுந்து நின்று சிரிக்கின்றது...... இருந்தாலும் சத்துருக்கு இருந்த பெரிய ப்ளஸ் பாயிண்ட் சத்யனுக்கு கிடைக்காமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.... சத்துராக நடித்த ஓமி வைத்யா ஒரு புதுமுகம்... சத்யனோ நமக்கு நன்றாகவே அறிமுகம்!!
அதுதான் ப்ரச்னை.... அவ்வளவு அசாதாரணமாய் நடித்து வித்தியாசம் காட்டியிருந்தாலும் சாதாரண சத்யன் மனதைவிட்டு அகலமறுப்பது மட்டுமே சத்யனின் உழைப்பைப் பாதி இன்விஸிபிள் ஆக்கிவிடுகிறது! பட் சத்துருக்குத் தான் ரைட் சாய்ஸ் என்பதை ஆழமாகவே பதித்திருக்கிறார்.....
"தி புர்ச்சி டமிளியன்" சத்யராஜ்.... இந்தப் படத்தில் போமன் இராணியின் வேடத்தில்ஜஸ்ட் "இவர்களுடன்" சத்யராஜ்!!
வெல்..... சத்யராஜ் ஒரு தேர்ந்த நடிகர்.... அவருக்கு ஹீரோ வேடம் போனாலும் நடிக்குமளவில் இந்த மாதிரி எத்தனை சேலஞ்சிங் ரோல் கொடுத்தாலும் அஸால்ட்டாக ஸ்கோர் செய்வார்...... சுட்டுப்போட்டாலும் இவருக்கு வராத இங்க்லீஷ் ஆக்ஸெண்டைக்காப்பாற்ற அந்த மொத்த நாக்கு வசனவெளியீடு உதவியிருக்கிறது.... நல்ல நடிகர்யா...... நடிப்பாருல்ல!!! விஜய்யிடம் தன் ப்ரெஸ்டீஜ் பேனாவைக் கொடுக்கும் ஸீனில் மை நேம் இஸ் சத்யராஜ் என்று ஆட்டோகிராஃப் போட்டிருப்பார்!! வெல்டன் சார் உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பாக்குறோம்!
ஹாரிஸ் இசை ரொம்ப பிடிச்சது...... "ஹார்ட்டிலே பேட்டரி"பாடலில் முத்துக்குமாரின் ஸ்பெஷல் லிரிக்ஸுக்கு ஹாரிஸின் ட்யூன் க்ராண்ட் கிஃட்! பாடல்களைத் தாண்டிப் பின்னணி இசையில் கதையோட்டத்தில் இசைவசனம் எழுதியிருக்கிறார்! மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு ஷங்கரின் பேக்டிராப் எஞ்சினியரிங்கில் திரையை ஒவ்வொரு கணமும் டெக்கொரேட் செய்து மகிழ்விக்கிறது.... ஷங்கரின் கலர்களும் ஈடுஇணையில்லாத ப்ரொடக்ஷன் டிஸைனிங்கும் மனோஜின் கேமராவில் ஜில் ஜில்லென்று பதிவாகியிருப்பதில் உலகமே ஆல் இஸ் வெல்லாகத் தெரிகிறது! ஆண்டனியின் படத்தொகுப்பைத் தான் எல்லா படத்திலும் புகழ்கிறோமே..... இந்தப் படத்திலும் க்விக் ஃபிக்ஸ் டெக்னாலஜியில் கலக்கியிருக்கிறார்! எல்லாரும்தான் ஃபாரினுக்குப் போய் பாட்டு ஷுட் பண்றாங்க ஆனாலும் ஷங்கர் தேர்வு செய்யும் இடங்களும் அதைப் ப்ரெசண்ட் செய்யும் விதமுமாகத் தனியாகத் தெரிகிறது... பாடல்களின் படமாக்கல் நிச்சியமாக ஒரு வாவ் அனுபவம்! கார்க்கியின் வசனங்கள் படு ஷார்ப்... "திருக்குறள் சைஸுல ஒரு ஃப்ளாஷ்பேக்கையே சொல்லிட்டான் பாருன்னு" சொல்லுறதெல்லாம் சூப்பரோ சூப்பர் டச்!
மீண்டும் சொல்கிறேன்..... "ரீ" என்னும் எழுத்தை மட்டும் மனதிலிருந்து அழித்துவிட்டால் ஷங்கரின் மேக்கிங்மும் அந்த உழைப்பும் புரியும்..... இந்த ரீமேக்கிற்கு ஷங்கர் தேவையா? என்று பலரும் கேட்டாலும்.... என் கண்களுக்கு த்ரீ இடியட்ஸிலிருந்து ஷங்கர் தமிழுக்கு எடுத்துக் கொண்டுவந்திருக்கும் அந்த அழகான மெசேஜ் மட்டுமே தெரிகிறது.... புறா விடு தூது போல "ஆல் இஸ் வெல்" என்று எழுதிய சீட்டை ஷங்கர் என்னும் கழுகு தன் கால்களில் கட்டிச் சுமந்து கோடம்பாக்கம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது!!
நண்பன் - குறையொன்றுமில்லை...... ஆல் இஸ் வெல்!!!!!
அன்புடன்,
பிரபு எம்

செம
ReplyDeleteஎல்லா ரீமேக்கும் ரீமேக்கல்ல என்ற சூத்திரத்தை புரிந்துக் கொண்டு விமர்சித்த பாங்கு தான் இதில் சிறப்பு
Good review
ReplyDeleteGood keep it up......."Best of Luck"
ReplyDeleteVery nice review Prabhu- Abiraami
ReplyDeleteநண்பன் படம் குறித்த இதுகாறும் வந்த அனைத்து பதிவாளர்களின் விர்சனத்தையும் (அனேகமாக) படித்து முடித்து விட்டேன். ஆனால் சொல்லிவைத்தாற்போல் அனைவருமே இந்த படத்தில் வரும் ஒரு சில அருவருப்பான காட்சிகளைக் குறித்து விமர்சிக்க தவறி விட்டனர் அல்லது தவிர்த்துவிட்டனர். கற்பழிப்பது (கற்பிப்பது) குறித்து இத்தனை நீண்ட அங்கலாய்ப்பு அவசியமா? அதைப்போலவே கொங்கைகள் குறித்தும், குசுவாசம் குறித்தும் இத்தனை வியாக்கியானம் தேவையா? குழந்தைகளோடு, குறிப்பாக பெண்குழந்தைகளோடும் சகோதரிகளோடும் படம் பார்க்கும்போது உறுத்துறது. ஒரு நல்ல படத்தில் இது தேவை இல்லை என்றே கருதுகிறேன்
ReplyDeleteரொம்ப நன்றி கார்க்கி....
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்...
Thank you Raja...
ReplyDeleteThanks for the wishes Indian....
Thank you so much Abhi akka for your first visit to my blog :-)
ReplyDeleteSo nice of you....
@ Anonymous
ReplyDeleteஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை... எனக்கு இந்தப் படத்தின் எந்தக் காட்சியும் அருவருப்பாகத் தோன்றவில்லை..... அப்படி டிஸ்டர்பிங்காக எதுவும் காட்சிகள் இருந்தால் அடுத்தமுறை பார்க்கும்போது அந்த நேரத்தில் "ஆல் இஸ் வெல்" சொல்லிப்பாருங்கள்..... :-)
Happy Pongal ;-)) Booked tickets for Nanban film @tonight show...Comment u soon ;-))
ReplyDelete//அந்த மொத்த நாக்கு வசனவெளியீடு உதவியிருக்கிறது...//
ReplyDeleteரெண்டு மூணு தடவை இந்த வரிகளை மட்டும் படிச்சேன்...சம்திங் யுனிக் ;-))) செம தல..;-)))
தமிழர்திருநாள் வாழ்த்துக்கள் பிரபு ."ஆல் இஸ் வெல் " நண்பன் விமரிசனம் சூப்பர் .
ReplyDelete@ ஆனந்தி அக்கா...
ReplyDeleteஉங்களுக்குக் கண்டிப்பா படம் பிடிக்கும்னு நினைக்கிறேன் அக்கா!
@ஏஞ்சலின் அக்கா
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா.... உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் குறிப்பா உங்க வீட்டு குட்டி தேவதைக்கும் (சற்று தாமதமான!) பொங்கல் வாழ்த்துக்கள்..... :)
"இரண்டொரு மாற்றத்தை செய்துகொண்டு திரைக்கதை, இயக்கம் என்று தன் பெயரைப் போட்டுக்கொள்ளாமல்..... வெறும் இயக்கம் - ஷங்கர் என்று டைட்டில் கார்டு போட்டு அப்படியே அச்சு அசலாக ஒரிஜினலை ரீமேக்கி இருக்கும் ஷங்கரின் இந்த நேர்மைதான் அவரின் இந்தப் படவெற்றிக்கு சீக்ரெட் மற்றும் ஷார்ட் கட்!"
ReplyDeleteஎனும் வரிகளில் இயக்குனர் விஜயை சாடியிருப்பது நன்றாகவே தெரிகிறது. ஏனெனில் லேட்டஸ்ட்டாக ரீ மேக் செய்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தவர் அவர்தான் (தெய்வத்திருமகள்). ஆனால் பாருங்கள் ஒரிஜினல் திரைக்கதையில் ஓரிரு மாற்றங்கள் செய்தாலும் அது புதிய கதைதானே...... உங்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்.....
ஆகவே விஜய் திரைக்கதை இயக்கம் என்று போட்டுக்கொண்டதில் தப்பேதுமில்லை......
அடுத்து நண்பனில் விஜய் நடித்திருக்கிறான் என்று சொன்னால் தெய்வத்திருமகளில் ஷீயான் வாழ்ந்து காட்டியிருப்பார்....... So உங்கள் விமர்சனம் நண்பனுக்கான சிபாரிசு!!!
Nice review - Harish
ReplyDeleteஆனந்தி.. has left a new comment on your post "நண்பன் [U] (2012)":
ReplyDeleteம்ம்...படம் பார்த்தாச்சு..;-((
ம்ம்....எதுக்கு இதை ரீமேக் பண்ணாங்கனு தெரியல...வசனம்...காஸ்ட்யூம்,செட்..நு எல்லாமே ஒரிஜினல் டிட்டோ...ஒரிஜினல் படத்தையே....ஷங்கர் வாங்கி டப் பண்ணிருந்துருக்கலாம்;-)) கரீனா பியா னால்...இலியானா ரியா வா...போங்கப்பா....அந்த வைரஸ் பேரு வரகூட விருமாண்டி சந்தானம் மா ...அவ்வவ்....
ஜெயம் ராஜா கிட்டே டப்பிங் படத்துக்கு சின்ன ட்ரைனிங் எடுத்திருக்கலாமோ ஷங்கர்???? nativity செம மிஸ்ஸிங்....செமையா வடக்கத்தி வாடை...ஹீ...ஹீ...தனுஷ்கோடி கிட்டே இவளவு அழகான இடமா...;-)))) ஜீவா வீடு...அந்த சப்பாத்தி கான்செப்ட் கூட நம்ம ஊருக்கு தகுந்தமாதிரி கொஞ்சம் develop பண்ணிருக்கலாம்...
எல்லாத்தையும் மீறி...ஆமீர் கிட்டே இருந்த அந்த eyes expression சத்தியமா இளைய தளபதி க்கு துளியும் வரலை ;-(( அப்புறம் சத்யன் செம கிளாஸ்...செம செம கிளாஸ்...
ஷங்கர் படத்துலையே...செம மொக்கை சாங்க்ஸ் இந்த படத்தில் தான் இருக்கணும்...இலியானா....ப்ச் ...கரீனா இடத்தில் என்னவோ வைக்கவே முடியலை...:-((((
;-(((((((
@ ஆனந்தி அக்கா
ReplyDelete//
ஜெயம் ராஜா கிட்டே டப்பிங் படத்துக்கு சின்ன ட்ரைனிங் எடுத்திருக்கலாமோ ஷங்கர்???? nativity செம மிஸ்ஸிங்....செமையா வடக்கத்தி வாடை...ஹீ...ஹீ...தனுஷ்கோடி கிட்டே இவளவு அழகான இடமா...;-)))) ஜீவா வீடு...அந்த சப்பாத்தி கான்செப்ட் கூட நம்ம ஊருக்கு தகுந்தமாதிரி கொஞ்சம் develop பண்ணிருக்கலாம்..//
ஹஹஹா..... நான் "ரீ" என்கிற எழுத்தை மறந்துட்டுப் பாருங்கன்னு ஏற்கெனவே சொல்லிட்டேனே..!
ஆக்சுவலி எனக்கு 3 இடியட்ஸை அப்படியே ரீமேக் பண்ணினதுதான் பிடிச்சிருந்தது.... அப்புறம் ஜெயம் ராஜாவோட வொர்க்னு சொல்லூறாங்க யெஸ்........ சீன் பை சீன் ரீமேக்......பட் அப்படியே பார்த்தாலும் "சந்தோஷ் சுப்ரமணியமும்" , "சம்திங் சம்திங்"கும் சூப்பர் ஹிட் மூவீஸ்தானே..... எனக்குப் பிடிச்ச படங்களும் கூட அவை...!! :-)
ஜெயம் ராஜா ரீமேக் மட்டும்தான் பண்ணியிருக்காரு..... சொந்தமா படம் எடுத்ததே இல்லைங்குறதுதான் அவர்மீதான குற்றச்சாட்டே தவிர.... ரீமேக் பண்ணுறது அவ்ளோ ஈஸியான வேலை இல்ல.... ;-)
ஷங்கர்.... ரீமேக் பண்ணியிருந்தாலும் 3- இடியட்ஸ் பாக்குறப்போ ஒரு பிரம்மாண்ட உணர்வு எனக்கு ஏற்படல அதை ஷங்கர் கொடுத்திருந்தாருன்னு சொல்வேன்..... ஆல்ஸோ டயலாக்ஸ் ஒரு பிடி மெருகேற்றிக் கொடுத்திருந்தாரு....
பட்.... Taste differs akka..... எனக்குப் பிடிச்சது.... உங்களுக்குப் பிடிக்கல.... அவ்ளோதான்.. நெக்ஸ்ட் டைம் நான் மொக்கையா இருக்குன்னு விமர்சனம் பண்ணுற படத்தை மட்டும் தியேட்டர்ல பாருங்க..... அப்போ கரெக்டா மேட்ச் ஆகிடும் :-))
அப்புறம் படத்தில் படு செயற்கையான ஒரு காட்சி..இதை தமிழ் version இல் கொஞ்சம் யோசிச்சு பண்ணிருக்கலாம்..
ReplyDelete.அது ஹிந்தியில் பெருசா தெரில...பட் தமிழ் இல் செம எரிச்சல்...விஜய் வந்து ஜீவா,ஸ்ரீகாந்த் கிட்டே ஆல் இஸ் வெல் பத்தி அவங்க ஊரு கிராமத்து கதை சொல்லும்போது....சத்தியமா முடியல...எந்த ஊரில் நைட் சுத்துற வயசான கிராமத்து ஆளு" ஆல் இஸ் வெல்" நு சொல்லுவாங்க...தமிழ்நாட்டில் அப்படி எல்லாம் நடக்குதா...:-))))
@ ஆனந்தி அக்கா.....
ReplyDelete"மணப்பந்தல்"னு ஒரு பழைய படம்.... எஸ் எஸ் ஆர் ஹீரோ சரோஜாதேவி ஹீரோயின்......
அதுல ஒரு சூப்பர்ப் சாங் இருக்கு "உடலுக்கு உயிர் காவல்... உலகுக்கு ஒளி காவல்...."னு
அந்த பாட்டு ஸ்டார்ட்டிங் சீக்வென்ஸ்ல ஒரு தாத்தா ஒவ்வொரு வீட்டு வாசலையும் தட்டி "ஊர்க்காவல்.... ஊர்க்காவல்"னு கத்திட்டே போவார்...... இதே விஷயம்தான் விஜய் ஸ்ரீகாந்த் கிட்ட சொல்லுற கான்செப்ட்....
"மணப்பந்தல்" எந்த ஹிந்தி படத்துடைய ரீமேக்கும் கிடையாது மை சிட்டி சிஸ்டர்... ஐ மீன் இது கிராமத்துப் பழக்கம்.... நம்ம தமிழ்நாட்டுலயும் இந்தக் கலாச்சாரம் இருந்திருக்கு..... இந்தப் பழக்கம்தான் அவுட்சோர்ஸ் ஆகி கூர்க்காஸ் இங்க வந்து ரெக்ரூட் ஆகியிருக்காங்கன்னு நினைக்கிறேன்... :-)
//"சந்தோஷ் சுப்ரமணியமும்" , "சம்திங் சம்திங்"கும் சூப்பர் ஹிட் மூவீஸ்தானே..... எனக்குப் பிடிச்ச படங்களும் கூட அவை...!! :-)//
ReplyDeleteசரிங்க சார்...;-)) பட் எம்.குமரன் s/o மகாலட்சுமி படத்தில் கூட ரீமேக் தமிழ், ஒரிஜினல் தெலுங்கை விட சில சுவாரஸ்ய மாற்றங்கள் தமிழ் ல தான் இருக்கும்..நம்ம ஊரு நேடிவிடி ல...;-)))
மை டியர் பிரதர்...இன்னும் நான் சொன்னதை புரிஞ்சுக்கலை நீங்க...;-))) சிட்டி ல கூட கூர்க்கா யாரும் இங்கிலீஷ் ல ஆல் இஸ் வெல் நு கத்துற மாதிரி தெரில..;-))))) அதுவும் விஜய் சொல்ற பேரு மரியம் சூசை..;-)) அட்லீஸ்ட் அந்த ஆளு...தமிழ் ல எல்லாமே நல்லா நடக்கும் நு தமிழ் ல சொல்லிட்டு போற மாதிரியாவது சொன்னால் லாஜிக் கா இருந்திருக்குமே...;-)))
ReplyDeleteஏன் சூசைக்குக் கொஞ்சூண்டு இங்க்லீஷ் தெரிஞ்சிருக்கக் கூடாதா??!!
ReplyDeleteஅந்த சூசையோட அப்பா ப்ரிட்டிஷ் ஆர்மில இருந்தாராம்... சூசைக்கும் அப்பா மாதிரியே ஆர்மில சேரணும்னு ஆசைப்பட்ட நேரத்துல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடெச்சு அந்த அதிர்ச்சில சூசை மூணாம்கிளாஸ்ல ஃபெயிலாகி ஆர்மி சான்ஸ் ஜஸ்ட் மிஸ் ஆகிடிச்சாம்.... அதுல கொஞ்சம் அரைலூசாகிட்ட சூசையை அந்த ஊரு பெரியவரு கையில ஒரு குச்சிய குடுத்து இந்த ஊருக்கு நீதான்டா காவல்னு ஒரு எக்ஸ்-சர்வீஸ்மேன் க்வோடா வேலையைக் கொடுத்துட்டாராம்... அவங்க அப்பாவுக்கு ப்ரிட்டிஷ்காரன் சொல்லிக்கொடுத்த இங்க்லீஷ் வார்த்தையை இவர் டெய்லி சொல்லுவாராம்....னு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கை ஷங்கரும் வெச்சிருந்தாராம்..... பட் எடிட்டிங்ல கட் பண்ணிட்டாங்களாம்......
மரியம் சூசை இங்க்லீஷ் ல ரெண்டு வார்த்தை பேசினா ஏன் இவ்ளோ காண்டு மை சிஸ்டர்... ஐயோ வேணாம் தமிழ்லயே சொல்லிடுறேன் எனது அக்கா...!! :-)
//ஏன் சூசைக்குக் கொஞ்சூண்டு இங்க்லீஷ் தெரிஞ்சிருக்கக் கூடாதா??!!
ReplyDeleteஅந்த சூசையோட அப்பா ப்ரிட்டிஷ் ஆர்மில இருந்தாராம்... சூசைக்கும் அப்பா மாதிரியே ஆர்மில சேரணும்னு ஆசைப்பட்ட நேரத்துல இந்தியாவுக்கு சுதந்திரம் கிடெச்சு அந்த அதிர்ச்சில சூசை மூணாம்கிளாஸ்ல ஃபெயிலாகி ஆர்மி சான்ஸ் ஜஸ்ட் மிஸ் ஆகிடிச்சாம்.... அதுல கொஞ்சம் அரைலூசாகிட்ட சூசையை அந்த ஊரு பெரியவரு கையில ஒரு குச்சிய குடுத்து இந்த ஊருக்கு நீதான்டா காவல்னு ஒரு எக்ஸ்-சர்வீஸ்மேன் க்வோடா வேலையைக் கொடுத்துட்டாராம்... அவங்க அப்பாவுக்கு ப்ரிட்டிஷ்காரன் சொல்லிக்கொடுத்த இங்க்லீஷ் வார்த்தையை இவர் டெய்லி சொல்லுவாராம்....னு இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக்கை ஷங்கரும் வெச்சிருந்தாராம்..... பட் எடிட்டிங்ல கட் பண்ணிட்டாங்களாம்......//
ஹ ஹ ஹ...இதுக்கு நண்பன் படம் பரவால சாமி....பட் பிரபு...ஷங்கர் உன்கிட்டே கதை கேட்டு படம் எடுத்திருந்தால் கூட செமையா இருந்திருக்கும்...;-))))
ஏற்கெனவே படம் 3 மணி நேரத்துக்கும் மேல.... இதுல என்கிட்டயும் கதை கேட்டு படம் எடுத்தா கிழிஞ்சிரும்!!
ReplyDelete//ஏற்கெனவே படம் 3 மணி நேரத்துக்கும் மேல.... இதுல என்கிட்டயும் கதை கேட்டு படம் எடுத்தா கிழிஞ்சிரும்!!//
ReplyDeleteஹலோ....உங்க கதை ஒரிஜினல் ங்க:-))) சோ, கூட்டி கழிச்சு பார்த்தால் கணக்கு சரியா வரும்...;-))))))
@ கலியுகம்
ReplyDeleteவெல்.. பாஸ்... நீங்க சொல்லுறது எனக்குப் புரியல....
நான் எழுதியிருக்கிற விஷயங்களுக்கு நீங்க கருத்து சொன்னா எனக்கு பதில் சொல்ல விஷயம் இருக்கும்...
நீங்க எதையோ புரிஞ்சிக்கிட்டு எதையோ எழுதிவெச்சா நான் என்ன பதில் சொல்லுறது??
"தெய்வத்திருமகள்" பத்தி நான் பேசவே இல்ல...... வெல்... இயக்குநர் விஜய் தெய்வத்திருமகள் படத்துக்கு சொந்தமா திரைக்கதை அமைச்சுதான் இயக்கியிருந்தாரு..... ரெண்டு சீன்ஸ் மட்டும்தான் ஒரிஜினல்ல இருந்து அப்படியே எடுத்திருப்பாரு...... திரைக்கதை- இயக்கம் - விஜய்னு அவர் டைட்டில் க்ரெடிட்ஸ் போட்டதுல எதுவும் தப்பு இல்லன்னுதான் சொல்லுவேன்.....
அப்புறம் ஒரு படம் பிடிச்சிருந்தா படம் நல்லாயிருக்குன்னு ப்ளாக்ல பதிவு போடுறதும் கூட ஒருவிதத்துல சிபாரிசுதான் பாஸ்..... நான் இல்லைன்னு சொல்லப்போறதேயில்ல... :-)
@ Harish..
ReplyDeleteThank you so much Harish..
Waiting for you to start your own blog :-)
why this kolaveRi?
ReplyDelete@ சித்ரா அக்கா
ReplyDeleteஹாய் அக்கா.... :-))
உங்களுக்கு ரீ-மேக்ஸ் பிடிக்காதுன்னு "காவலன்" ரிவ்யூ எழுதும்போதே எனக்குத் தெரியுமே.. தெரியுமே.... தெரியுமே!!! :-)
அதுவும் விஜய் வேற... நான் எதுவும் சொல்லப்போறதில்ல!!! :-))
I am not against remakes. Let me stop there.... ha,ha,ha,ha,ha,ha,ha,ha,ha...
ReplyDeleteOh ok ok... Point noted... Chitra akka is not against Re-makes...
ReplyDelete:-))))