எழுதும் ஆர்வம்தான் என்னை இந்த வலைப்பூ தொடுக்க வைத்தது. உங்கள் வாசிப்பினாலும், விமர்சனங்களாலும், நட்பினாலும் மெருகேறக் காத்திருக்கும் என் எழுத்துகள்..
Monday, April 02, 2012
3
"கொலவெறி" -- இதுதான் இந்த ஆண்டில் இதுவரை உலகளவில் அதிகமாக உச்சரிக்கப்பட்டத் தமிழ் வார்த்தை....!!!
கிட்டத்தட்ட அத்தனை மொழிக்காரர்களும் அர்த்தம் கேட்டுத் தங்கள் தமிழ் நண்பர்களை நச்சரித்த வார்த்தையும் கூட!!!
கொலவெறிக்கு அர்த்தம் தேடிய அத்தனை மொழிக்காரர்களுக்கும் (சப்-டைட்டில் இல்லாமலேயே!) "3" படத்தை ஜஸ்ட் ஒருமுறை முழுதாகப் போட்டுக் காட்டிவிட்டால் போதும் "கொலவெறி" என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்பதையெல்லாம் அவர்களாகவே அர்த்தம் புரிந்துகொள்வார்கள்!!! :-)))
சூப்பர்ஸ்டார் முதல் மகள் ஐஸ்வர்யாவின் முதல் படம்.... இதனை ஜஸ்ட் மொக்க படம் என்று சொல்லிவிடமுடியாது என்பதை முதலிலேயே சொல்லிக்கொள்கிறேன் உண்மையாக! மெயின்மேட்டருக்கு அப்புறமாக வருகிறேன்......
அதற்குமுன்......
இளமையான புதுமையான ஒரு ஃபில்மி டைம்பாஸாக முதல்பாதியை ஜில்லென்று வழங்கியதற்கு ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லலாம்.... இரண்டாம் பாதி டிஸாஸ்டரில் மாட்டிக்கொண்டவர்கள் கொஞ்சம் தப்பித்து தியேட்டரில் டைம்பாஸ் செய்துகொள்ள நல்ல டிப்ஸ் தருகிறேன்.... நேரமிருந்தால் என்னையும் கொஞ்சம் வாழ்த்துங்கள் :-)))
டிப்ஸ்:
இரண்டாம் பாதி ஆரம்பித்தவுடனேயே, படத்திற்கு ஏன் "3" எனப் பெயர் வைத்தார்கள் என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுங்கள்.... படம் முடியும்வரை உங்களுக்கு டைம் போவதே தெரியாது!!! :-)))) (ஆன்ஸரும் கடைசிவரை புரியாது!!!!)
பயங்கரமாய் யோசித்து நான் கண்டுபிடித்த விடைகள் இதோ உங்களுக்காக...... :)))
1) படம் முழுதும் "ஓ...ஓஓஓ"வென அழுதுகொண்டேயிருக்கும் ஷ்ருதிஹாசன் மொத்தத்தில் முழுதாக "3" நிமிடங்கள் திரையில் அழாமல் நடித்திருக்கிறார்..... ஒருவேளை அதைத்தான் டைட்டில்ல சொல்லுறாங்களோ????!!! (அவர் தூங்கும் காட்சியில் அவரால் அழமுடியாது என்பதால் அந்தக் காட்சியில் தனுஷ் அழுவார்!!) எப்பூடி????
2) தனுஷ் மன நோயாளியாக நடித்திருக்கும் "3" ஆவது படம் இது!!!! (3, காதல் கொண்டேன், மயக்கம் என்ன) அவ்வ்வ்....
3) படத்தின் ஹீரோ ஹீரோயின் இருவரின் பெயர்களுமே "3" எழுத்து!!!! (தனுஷ், ஷ்ருதி) ஹி ஹிஹிஹீ
4) தனுஷ் அல்லது ஐஸ்வர்யாவின் லக்கி நம்பர் "3"-ஆக இருக்குமோ????? ம்ம்ம்ம் முடியல.....
இப்படி நான் பெயர்க்காரண சிந்தனைகளில் தீவிரமாக மூழ்கியிருந்ததால் மட்டுமே எனக்கு இரண்டாம் பாதியின் அழுகாய்ச்சிகள் எல்லாம் என் மனநிலையை அதிகமாக பாதிக்கவில்லை!!!! மறந்துடாதீங்க பாஸ்... இந்த ப்ரிகாஷன் ரொம்ம்ம்ம்ம்பபபப முக்கியம் கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கத் தியேட்டருக்குப் போறவங்களுக்கு!!! :))) இது இல்லாமல் படத்தில் தப்பித்தவறி மூழ்கிவிட்டால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்கள் கண்டிப்பா வரும் என்கிற அபாயத்தை இப்போதே சொல்லிக்கொள்கிறேன் பொறுப்புணர்வோடு!!!!
:-)))
ஓகே..... பேக் டு தி மூவி......
மாலைகளால் மூடிய சவப்பெட்டியில் சடலாமாக தனுஷ் முதல்காட்சியில்!!!...... ஷ்ருதி, பிரபு, ரோகிணி மற்றும் அனைவரின் வாவ் நடிப்புடன் அப்போது துவங்கும் தத்ரூபமான காட்சியமைப்பு படம் முழுவதும் தொடர்ந்து வந்திருப்பது இயக்குனர் மட்டுமின்றி மொத்த க்ரூவின் கவனமான உழைப்பை நன்றாகவே பறைசாற்றுகிறது....... அப்படியிருக்கும்போது திரைக்கதையில் ஏன் இவ்வளவு குழப்பியடித்திருக்கிறார்கள்??? இந்தக் கேள்விக்கும் கூட நீங்கள் பதில் தேடிக்கொண்டே இருக்கலாம் மேற்கூறிய செகண்ட் ஹாஃப் டேஞ்சரிலிருந்து மேலும் தற்காத்துக்கொள்ள.. ...... :-)))
அப்படியே ஜில்லென்று விரியும் தனுஷ்-ஷ்ருதியின் ஸ்கூல் டேஸ் எபிசோட்..... யமஹாவில் ஸ்கூலுக்குப் போகும் பணக்கார ப்ளஸ் ஒன் பையன்.... லேடிபேர்டில் (சைக்கிள்!) தோழிகள் சூழ பள்ளிசெல்லும் ரெட்டைஜடை மிடில்க்ளாஸ் தேவதை.... தனுஷ் மற்றும் ஷ்ருதியின் வீடுகள்.....அந்த ட்யூஷன் சென்டர் அதன் செட்டிங், லைட்டிங், ஆக்டிங்..... சைக்கிள் ஷ்ருதியை யமஹா தனுஷ் ஃபாலோ செய்யும் தெருக்கள்... வாவ்வ்வ்வ் வாவ்வ்வ் சூப்பர்ப் என்று ரசித்து மகிழவைக்கும் அந்த அழகான பேக்ட்ராப்புகள் சூப்பர்ப்.... மேலும் பள்ளிக்கால லவ் அட் ஃபர்ஸ்ட் ஸைட்டை சித்திரித்த விதமும் வயதிற்கேற்ற குறும்புடன் அழகாக நகர்த்தி இன்டெலிஜென்ட்டாக "இதழின் ஓரம்" பாடலை கோர்யோகிராஃப் செய்த அணுக்கமும் படு இன்வால்வ்மென்டுடன் நம்மைத் திரையோடு இணைத்துவிடுகின்றது சுகமாக.....
நடுநடுவே நிகழ்கால ஷ்ருதியின் பலஹீனமான சோகமும் தனுஷின் மரணத்தின் மர்மத்தை அறியத் தூண்டும்விதமாக நல்ல மிஸ்டிக்கான காட்சியமைப்புகளால் வலுசேர்க்கின்றன...... காதல்..... எதிர்ப்பு.....என்று சரியாக நகர்ந்துவரும் திரைக்கதையில் முதல் சருக்கல்.... ஷ்ருதியும் தனுஷும் டிஸ்கோத்தேயில் சென்று திருமணம் செய்துகொள்வதும்....தொடர்து வரும் "கமான் கேர்ள்ஸ்" பாடலின் கொடுமையும்!!
ஷ்ருதி, தனக்குக் காதல் வேண்டாம் என்று தன் அப்பாவின் காலடியில் மருகும் காட்சியில் பிறவியிலேயே காதுகேளாத, ஷ்ருதியின் தங்கை கஷ்டப்பட்டு இழுத்து முதன்முறையாகப் பேச... அதிர்ச்சியும் நெகிழ்ச்சியுமாய் ஷ்ருதியின் காதலுக்குத் தங்கள் தடையை நீக்குகிறார்கள் ஷ்ருதியின் பெற்றோர்.... அழுத்தமான அந்த சீனின் ப்ரேக்கில் டிஸ்கோத்தேயில் ஷ்ருதி கழுத்தில் தாலி அதோடு "கமான் கேர்ள்ஸ்" பாடல்...... படு அபத்தமான கற்பனை இது!!
பிரபு- பானுப்ரியா ஜோடிக்கு ஒரே மகன் தனுஷ்...... சினிமாட்டிக் ஜென்டில்மேன் அப்பா பிரபு... (மெஜஸ்டிக் நடிப்புக்கு விசில் அடித்து அப்ளாஸ் தரலாம்! அவ்வளவு அனாயஸம்!!!) ஆனால்.... தனுஷ்-ஷ்ருதியின் திடீர் டிஸ்கோத்தே திருமணத்திற்கு (!) ஃப்ளாட் வாங்கித் தந்து ஜஸ்ட் லைக் தட் அங்கீகரிப்பது எல்லாம்......... என்னங்கடா இது!!!! சத்தியமாகக் கேனத்தனமாகத்தான் தெரியும் திரையில்... :))))))
தனுஷ்-ஷ்ருதி காதலில்... இன்னொசன்டான அந்த ஃப்ரெஷ்ஷான "காதல்" தெரிவதெல்லாம் அந்த முதல்பாடல் வரைதான் அதன்பிறகு காதலாகக் காட்டப்படுவது எல்லாம் தன்ஷும் ஷ்ருதியும் இழைத்து இழைத்து உருகும் "ரொமான்ஸ்" மட்டுமே! ரசனையான கண்டுபிடிப்பான (!) மூக்கும் நாடியும் இதழ்களில் மாறி மாறிப் பதியும் அந்து நூதன முத்தம் தொடங்கி ஏகத்துக்கும் தாராளமாக டைம் எடுத்துக்கொள்கிறார்கள் திரைக்கதையில் தனுஷ் அன்டு ஷ்ருதியின் "ஃபிஸிக்கல்" கெமெஸ்ட்ரிக்கு!!! இது படு க்ரிப்பிங்காக இருக்கவேண்டிய காதலையே முதிர்ச்சியற்றதாகத் தெளிவாக நிலைநிறுத்திவிடுகின்றது.... இதுக்கப்புறம் என்னத்த சொல்ல??? ஏம்பா... கட்டிப் பிடிச்சிக்கிட்டே இருக்குறதுக்குத்தான் நாட்டுல கல்யாணம் பண்ணிக்கிறாய்ங்களா???!!!!
அப்புறம்தான் செகண்ட் ஹாஃப்.....
தனுஷ் எப்படி இறக்கிறார்?? என்று கொக்கி போட்டுவைத்துக்கொண்டது எதிர்பார்ப்பைத் தூண்டுவதாக அமைந்திருந்தாலும் திரைக்கதையில் போதுமான Clue க்கள் வழங்கப்படவில்லை ரசிகர்கள் படத்தோடு Glue ஆவதற்கு!!!
மரண மர்மத்தை ரகசியமாகக் காட்சிகளில் ஒளித்துவைத்திருக்கிறார்களே தவிர கதையோட்டத்தில் ரசிகனின் பங்களிப்புக்கு வெறும் வறண்ட காத்திருப்பை மட்டுமே வைத்திருப்பது நவீனதிரையுகத்தில் பாஸ்மார்க்குக்கே உலை வைக்கும் சந்தர்ப்பம் கெட்ட சமயோஜிதம்!! ஸாரி ஐஸ்வர்யா.....
வெல்.... திடீரென தனுஷ் இறந்தவுடன் தலைமறைவாகிவிடும் அவரது நண்பனின் வார்த்தைகளால் முற்றிலும் புதுத்திசையில் படம் பயணிக்கின்றது..... அதாவது..... தனுஷ் ஒரு மனநோயாளி!!! "Bi-polar disorder" என்னும் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்...... அந்த ஃப்ளாஷ்பேக்கின் ஆரம்பத்தில்தான் "வொய் திஸ் கொலவெறி..." பாடல் வருகிறது...... அந்த நேரத்தில் இந்த வோர்ல்டு ஃபேமஸ் ஃபன்னி சாங்கை நுழைத்தது வாஸ்து ப்ராப்ளம்தான் என்றாலும் படமாக்கிய விதம் என்னைப் பொறுத்தவரை ஓகேதான்.... பப்பபொய்ங்... பப்பபொய்ங்.... எல்லாம் நன்றாகத்தான் வந்திருந்தது திரையில்!!!! :))
பை-போலார் டிஸார்டரைப் பற்றி ஸ்க்ரீனில் காட்சிகளால் நமக்கு க்ளாஸ் எடுக்கப்படும்போதே தனுஷும் புரிந்துகொள்கிறார் தன் மனவியாதியைப் பற்றி...... அவர் கண்டிப்பாக அட்மிட் ஆகணும்னு டாக்டர் சொல்லுறார்... ஆனால் தனுஷ் மாட்டவே மாட்டார்... காரணம்..... "எனகிட்ட குறையிருக்குன்னு தெரிஞ்சுகிட்டு ஜனனி (ஷ்ருதி) என்னைப் பார்க்கும்போது அவ கண்ணுல லவ் இருக்குமாடா??" என்று கேட்கிறார் அட்மிட் ஆவதை வலியுறுத்தும் நண்பனிடம்!! (ஆமாமா....அவ என்ன ரிச்சா கங்காகோத்ரியா?? என்று தியேட்டரில் ஆடியன்ஸ் கமெண்ட்!!! :-)) # "மயக்கம் என்ன" ஹேங் ஓவர்!!)
தனுஷால் மூர்க்கமாகத் தாக்கப்பட்டு கை உடைந்து கட்டுப்போட்டிருக்கும் நண்பன் பாத்திரம் தனுஷை டாக்டரிடம் அழைத்து செல்லும் காட்சியில் மட்டும் இடையில் டிரைவர் ஸீட்டில் கையில் கட்டில்லாமல் உட்கார்ந்திருப்பது மெடிக்கல் மிராக்கிள்!!!! ஹிஹிஹி.......
அந்த நேரத்தில் வரும் "போ நீ போ..." பாடல் திரையிலிருந்து ஆடியன்ஸை நோக்கி சொல்லப்படுவதாகவே எனக்குத் தெரிந்ததற்கு எனக்கு என்ன டிஸார்டர் காரணமோ எனக்குத் தெரியவில்லை..... :))
டிஸார்டர் முற்றிய நிலையில் திகிலான இரு உருவங்களை ஹாலுசினேட் செய்துகொண்டு ரொம்பவே சித்ரவதை அனுபவித்து மிகமிகப் பரிதாபமாகத் தன்னையே மாய்த்துக்கொள்கிறார் தனுஷ்....... அந்த நேரம் கதாபாத்திரத்துக்குக் கிடைக்கவேண்டிய அதிகபட்சப் பச்சாதாபம் கிடைத்திருந்தால் படம் வெற்றிதான்... ஆனால் வாய்மூடாத ஓ...ஓஓ..ஓஓஓ வென ஷ்ருதியின் தொடர்ந்த அழுகையைக் கேட்டுக்கேட்டு வெறுப்பேறியிருக்கும் நிலையில் அந்தத் தற்கொலை எப்போது முடியும் என்றுதான் உட்கார்ந்திருக்க நேர்வதுதான் துரதிர்ஷ்டத்தின் உச்சம்!
ஷ்ருதி.... ஃபர்ஸ்ட் ஹாஃபில் காதல் வயப்படும் காட்சிகளிலெல்லாம் ரொம்ப அழகாக நடித்திருக்கிறார்.... அழுகும்போதுகூட ..... முகத்தசைகளெல்லாம் பின்னோக்கி இழுத்து.... ஆக்ஸிஜனுக்கு அல்லாடும் நாசியோடு விம்மிப்புடைத்து.... கமலஹாஸ நடிப்பை ஜீன்வழியாகவே மேட்ச் அப் செய்கிறார்.... ஆனால் இப்போதெல்லாம் சீரியலில் கூட பெண்கள் இவ்வளவு அழுவதில்லை...... படத்தில் ஷ்ருதிக்கு காஸ்ட்யூம் செலவைவிட க்ளிஸரின் செலவுதான் அதிகம்...... இத்தனை அழுத்தமாக நடித்தும் ஒட்டுமொத்த அவுட்புட்டாக கமல் மகள் எரிச்சலை மட்டுமே அள்ளிக்கொண்டிருப்பதற்கு முழுப்பொறுப்பும் ரஜினி மகளையே சாரும்! எக்ஸலென்ட் ஆக்டிங் பை ஷ்ருதி!
தனுஷ்...... கரைகண்ட நடிப்பு! தனது பூரண முழுமையையும் வழங்கியிருக்கிறார்.... பார்வைகள், அசைவுகள், எல்லாவற்றிலுமே.!!! பிரபு செம கம்போஸ்ட்.... பானுப்ரியாவுக்கு தீணி கம்மி........ ரோகிணி...... பாஸ்போர்ட்டை எரித்துவிடும் ஷ்ருதியை அடிக்கும் ஸீனிலும்... விதவையாக நிற்கும் மகளின் மனஓட்டத்தைக் கண்டு அதிர்ந்து அழும் காட்சியிலும் மிரட்டல் நடிப்பு..... க்ளாஸ்...... சிவகார்த்திகேயனின் சில நிமிட கிச்சு கிச்சு ரசிக்கவைக்கும்..... ஷ்ருதியின் தங்கை அழகான நடிப்பு......
வேல்ராஜின் ஒளிப்பதிவு அருமை அருமை அருமை...... க்ளோஸ் அப் கோணங்கள் படத்தின் மூடை விஸ்தீரணப்படுத்தியிருக்கின்றது....... ஆனாலும் கோலா பாஸ்கரின் எடிட்டிங் ஒளிப்பதிவை மிஞ்சிவிடுகின்றது மூட் செட்டிங்கில்...... ரொம்பவே தரமான படத்தொகுப்பு...... காட்சிகளின் கோர்வையை வீக்கான திரைக்கதையிலும் ரசித்து உள்வாங்க முடிவது கோலா பாஸ்கரின் கைவண்ணத்தில்தான்....... இருந்தாலும் முதலிடம் அவருக்கு அல்ல இசைக்குத்தான்!!!! அன்ட் தி மேன் ஆஃப் தி மேட்ச் கோஸ் டூ தி நியூ கமர்.... அனிருத்!! :)) பாடல்களில் எக்கச்சக்க புதுமையான பீஸ்களை வாரி இறைத்துவிட்டபோதே முடிவாகிப்போனதுதான் அதே இசைத் துண்டுகள்தான் பின்னணியிலும் படம் முழுக்க ஒலிக்கப் போகிறதென்பது.... இருந்தாலும் டைமிங்கும் ரைமிங்கும் பின்னணி இசையில் ரொம்பவே கச்சிதம்....... நிறைவான பாராட்டுக்கள் அனிருத்திற்கு :)
ஐஸ்வர்யாவின் மேக்கிங் ரியலி குட்!!! ரொம்ப நல்ல இயக்குனராக முதல்படத்திலேயே நிச்சியமாக மிளிர்ந்திருக்கிறார் என்றுதான் தோன்றியது மேக்கிங்கைக் பொறுத்தவரை..... ஆனால் அடுத்தப்படத்துக்கு வெளியில் கதைகேட்பது உத்தமம்.... திரைக்கதை அமைப்பதிலும் அதீத கவனம் செலுத்துவது மகா உத்தமம்!!! (அடுத்த படம் எடுக்காமல் இருப்பதுகூட மகா மகா உத்தமம் தானோ!!!!)
ஃபர்ஸ்ட் ஹாஃப் ஓகே.... செகண்ட் ஹாஃப் அவுட்டு.... என்கிற வோர்ட் ஆஃப் மவுத் தவிர்க்கமுடியாததாக வேகமாகப் பரவிவருகிறது. இது "கொலவெறி" புண்ணியத்தில் கிடைத்த மெகா ஓபனிங்கிற்கு ஆப்பு வைக்கத்தான் செய்யும்....... இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம் ஜெயிக்கப்போவது சூப் சாங் எஃபெக்டா அல்லது சூப்பாகப் போவது மூவியா என்று!! :))
அன்புடன்,
பிரபு எம்
Subscribe to:
Post Comments (Atom)

மிக நிதானமான மொழி நடையில் அட்டகாசமான விமர்சனம், உங்கள் எழுத்துக்களில் உள்ள நுணுக்கமான விஷயங்கள் அருமை. உலகக் கோப்பை தொடரைப் பற்றி நறுக்கென்று எழுதியிருந்த பாணி இதிலும் தொடர்கிறது. இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
ராஜேஷ் குமார்
மிக நிதானமான மொழி நடையில் அட்டகாசமான விமர்சனம், உங்கள் எழுத்துக்களில் உள்ள நுணுக்கமான விஷயங்கள் அருமை. உலகக் கோப்பை தொடரைப் பற்றி நறுக்கென்று எழுதியிருந்த பாணி இதிலும் தொடர்கிறது. இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
ராஜேஷ் குமார்///
ஹாய் ராஜேஷ்;-))) சரியா தான் சொல்லிருக்க...:)))
//அந்த நேரத்தில் வரும் "போ நீ போ..." பாடல் திரையிலிருந்து ஆடியன்ஸை நோக்கி சொல்லப்படுவதாகவே எனக்குத் தெரிந்ததற்கு எனக்கு என்ன டிஸார்டர் காரணமோ எனக்குத் தெரியவில்லை..... :))///
ReplyDeleteஅப்படியே படிச்சுட்டே வரும்போது....இந்த வரிகளை பார்த்துட்டு pause :)போட்டுட்டு ,சிரிக்க ஆரம்பிச்சுட்டேன்;-)))..செம நக்கலப்பா..:-))
ஆனால் வாய்மூடாத ஓ...ஓஓ..ஓஓஓ வென ஷ்ருதியின் தொடர்ந்த அழுகையைக் கேட்டுக்கேட்டு வெறுப்பேறியிருக்கும் நிலையில் அந்தத் தற்கொலை எப்போது முடியும் என்றுதான் உட்கார்ந்திருக்க நேர்வதுதான் துரதிர்ஷ்டத்தின் உச்சம்!//
ReplyDeleteஹ ஹா...அப்போ தனுஷ் நல்ல முடிவு தான் எடுத்துருக்காரு போல....;-))))
//இத்தனை அழுத்தமாக நடித்தும் ஒட்டுமொத்த அவுட்புட்டாக கமல் மகள் எரிச்சலை மட்டுமே அள்ளிக்கொண்டிருப்பதற்கு முழுப்பொறுப்பும் ரஜினி மகளையே சாரும்! எக்ஸலென்ட் ஆக்டிங் பை ஷ்ருதி!//
ReplyDeleteபிரபு...நல்லா இருந்தது இந்த வரிகளின் வார்த்தை பிரயோகம்...excellent:)
//(அடுத்த படம் எடுக்காமல் இருப்பதுகூட மகா மகா உத்தமம் தானோ!!!!)//
ReplyDeleteஹ ஹா....ஹ...ஹா....செமையா இருக்கு இந்த பதிவு பிரபு...;-)) செகண்ட் ஹாப் பார்த்து நீ எந்த அளவுக்கு பாதிக்க பட்ருக்கன்னு....புரிஞ்சுக்க முடியுது...;)
--
//இருந்தாலும் பொறுத்திருந்து பார்ப்போம் ஜெயிக்கப்போவது சூப் சாங் எஃபெக்டா அல்லது சூப்பாகப் போவது மூவியா என்று!! :))//
ReplyDeleteசெம செம பஞ்ச் :-)))
படத்திற்கு ஏன் "3" எனப் பெயர் வைத்தார்கள் என்று சிந்திக்க ஆரம்பித்துவிடுங்கள்....//
ReplyDeleteஇந்த "3" டைட்டிலுக்கு தனுஷ் இன் மூணு விதமான சீசன் era ன்னு படிச்ச ஞாபகம் ...அப்போ அதுவும் இல்லையா???!!..!!!;-))
பிரபு....இந்த பதிவு பூராவும்....நகைச்சுவை தூவி இருக்கு:)...பக்காவான உன் வழக்கமான ரசனையான,சூப்பர் விமர்சனம்...:)
ReplyDeleteமிகவும் வெளிப்படையான விரிவான விமர்சனம்
ReplyDeleteVery elaborate and clean review...
ReplyDelete@ராஜேஷ்
ReplyDeleteரொம்ப நன்றி ராஜேஷ் :)
ஓர் இடைவெளிக்குப்பின் மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி.....
@ ஆனந்தி அக்கா...
ReplyDeleteரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அக்கா :)
நன்றி பாலா...
ReplyDeleteThank you Shuba.. :)
ReplyDeleteஅந்த நேரத்தில் வரும் "போ நீ போ..." பாடல் திரையிலிருந்து ஆடியன்ஸை நோக்கி சொல்லப்படுவதாகவே எனக்குத் தெரிந்ததற்கு எனக்கு என்ன டிஸார்டர் காரணமோ எனக்குத் தெரியவில்லை..... :))
ReplyDelete3 என்ற சின்ன டைட்டில் படத்துக்கு, மூணு கிலோ மீட்டர் நீளத்துக்கு விமர்சனம் பண்ணி இருப்பது too much ஆக ....... இல்லை, 3 much ஆக தெரிவதால், அந்த disaster க்கு, Tri - போ - நீ - லார் disorder னு புதுசா பேர் வச்சுட்டாங்கப்பா......
.........
பிரபு ,
ReplyDeleteஇரு நாட்களுக்கு முன்புதான் படத்தை பார்த்தேன். கணவனை இழந்த மனைவி , அதுவும் காதல் மணம் செய்த மனைவி கணவன் இழப்பை எண்ணி அழுவதுதான் இயல்பு, இரண்டொரு நாட்களிலேயே சகஜ நிலைக்குத் திரும்ப சத்தியமே இல்லை. ஸ்ருதியின் அழுகை நியாயமே சற்று ஓவர் டோஸ் ஆனாலும் கூட. தனுஷின் மனப்பிரம்மை தான் சற்று கடுப்பேற்றியது. கொஞ்சாம் கூட அழுத்தமே இல்லை.மனப்பிரம்மையை ஆளவந்தானில் கமல் காட்சிப்படுத்தியது மிக இயல்பாக இருந்தது, இங்கோ வலிந்து திணிக்கப்பட்டதாகவே தோன்றியது.மற்றபடி ஐஸ்வர்யா முதல் படம் என்று தோன்றாத அளவிற்கு தான் பணியை நன்றாகவே செய்திருக்கிறார்.
வணக்கம் ராஜேஷ்...
ReplyDeleteபடத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் வந்து பின்னூட்டம் கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி நண்பா..
வெல்.. கணவனை இழந்த ஷ்ருதி அழுவதில் எந்த லாஜிக் பொத்தல்களும் இல்லை.... ஆனால் ஒரு திரைக்கதையின் அத்தனைப் பக்கங்களும் கண்ணீரில் நனைந்து தோய்ந்து நமத்துப்போயிருந்தால் பார்வையாளன் படும் எரிச்சலை இயக்குனர் யோசிக்காததைத் தான் இங்கு பதிவுசெய்திருக்கிறேன் (ஃப்ளாஷ்பேக்கிலும் மேடம் அழுதுட்டேதான இருக்காங்க!).... ஐஸ்வர்யாவின் மேக்கிங் நன்று என்றுதான் நானும் கூறியிருக்கிறேன்.... ஆனால் கொஞ்சம்கூட அழுத்தம் இல்லாத காட்சியமைப்பு, பாந்தமே இல்லாத திருமணம்.... ஒருத்தருக்கொருத்தர் தன் ப்ரச்னைகளைப் பேசிக்கக்கூட முனையாத காதல் கணவன்-மனைவி எல்லாம் எதற்காகக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கணும்!!! :-))
நம்ம வாழ்க்கை என்ன இவ்வளவு insecured-ஆவா இருக்கு???!
நல்ல டெக்னீஷியன்களை வைத்துத் திருத்தமாகப் படம் எடுத்து மேக்கிங்கில் மிளிர்வதைவிட, யதார்த்தமாகவும் சுவாரஸ்யமாகவும் திரைக்கதை அமைத்து சொல்லவந்ததைச் சொல்லி ஈர்ப்பதுதான் இயக்குனருக்கு அழகு.... அந்தவகையில் ஐஸ்வர்யாவின் திரைக்கதை கொஞ்சமும் என்னை ஈர்க்கவில்லை..... மற்றபடி மேக்கிங்கை மட்டும் பார்த்தால் உண்மையிலேயே குட் வொர்க்தான்! ஆக்ஷன் - கட் சொல்லி நன்றாக இயக்கி இருக்கிறார்.... ஆனால் அவர் சொன்ன கதை நம்மைக் கொஞ்சம் நகர்த்தக்கூட இல்லையே! அதுதான் வருத்தம்..
அருமையான பதிவு
ReplyDeleteதமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ் போஸ்ட்
To get the Vote Button
தமிழ் போஸ்ட் Vote Button
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …
நன்றி
தமிழ் போஸ்ட்