எழுதும் ஆர்வம்தான் என்னை இந்த வலைப்பூ தொடுக்க வைத்தது. உங்கள் வாசிப்பினாலும், விமர்சனங்களாலும், நட்பினாலும் மெருகேறக் காத்திருக்கும் என் எழுத்துகள்..
Thursday, April 19, 2012
ஒரு கல் ஒரு கண்ணாடி [U] (2012)
தமிழகத்தில் ஒருகாலத்தில் சிறந்த தலைவர்கள் இருந்ததாகப் பாட்டிகதைகள் உண்டு..... அதேபோல் தலைமைக்குத் தகுதிகள் தேவையில்லை "யார்" வேண்டுமானாலும் தலைவராகலாம் என்ற "புரட்சி" ஏற்பட்ட ஃப்ளாஷ்பேக்குகளும் ஏராளமாக உண்டு..! அரசியலில் "தாத்தா" காலத்தில் நடந்த அந்த புரட்சி "பேரன்"(கள்) காலத்தில் இப்போது நடந்தேறுவது சினிமாவில்!! அதாவது யார் வேண்டுமானாலும் ஹீரோவாகலாம் (சொந்தக் காசில்!!!!!) :-)) முதலிலேயே சொல்லியாக வேண்டும்......நிச்சியமாக உறுத்தவில்லை " நாயகன்" எனும் வார்த்தைக்குக் கொஞ்சமும் பொருந்தாதவராகக் கணிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினின் ஹீரோ வேஷம் இந்தப் படத்தில்.... அதற்கு யோசிக்காமல் உடனே சொல்லியாக வேண்டியது Director Rajesh is really really talented என்று!!
"படத்தோட கதை என்ன?" என்றுதான் தங்களிடம் கதை சொல்லவரும் இயக்குனர்களிடம் எல்லா தயாரிப்பாளர்களும் எடுத்தவுடன் கேட்பார்கள் என்று சொல்லுவார்கள்.... ஆனால் ராஜேஷ் மட்டும் இதற்கு ஒரு பெரும் விதிவிலக்கு ஏனென்றால் கதைகேட்கப்போகும் தயாரிப்பாளர் மட்டுமல்ல படமாகப் பார்க்கப்போக்கும் ஆடியன்ஸுக்கே அவர் படங்களின் "கதை" க்ளைமேக்ஸ் வரை அச்சுப்பிசகாமல் தெரிந்திருக்கிறது அவரே தனது கதையை எழுத ஆரம்பிக்கும் முன்பே!!! :-))
அதாவது ஒரு வேலைவெட்டி இல்லாத பையன்..... காதல்.... சந்தானம்.... க்ளைமேக்ஸில் ஆர்யா அல்லது ஜீவா.......நண்பேன்டா.... ப்ளாப்ளாப்ளா.... இதுதான் கதை என்று!!
ஹ்ம்ம்ம்ம்........
1998ல் ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் சச்சினின் தாண்டவம் மிக மிகப் பிரசித்தி பெற்றது..... காரணம் கிரிக்கெட் எனும் டீம் கேமை தனித்து ஒரே ஆளாக நின்று ஒன் மேன் ஆர்மியாக மொத்த கேமையும் அடித்து ஆடி அமர்க்களப்படுத்தியிருந்தார் ஆடுகளத்தில் அன்று லிட்டில் மாஸ்டர்..... அதே மாதிரிதான் ஓகே ஓகேயில் சந்தான தாண்டவமும்!!!! ஒன் மேன் ஆர்மி மட்டுமல்ல படத்துக்கு ஒன்மேன் நேவி, ஏர்ஃபோர்ஸ் என்று எல்லாமுமாக இந்தப் படத்தில் படமெடுத்து ஆடி அசத்தியிருக்கிறார் இந்த காமெடி கேங்ஸ்டர்! :))மொத்தப் படமுமே சந்தான சேட்டைகளால் அதகளமாகும் கலர்ஃபுல் காமெடி கதகளிதான்!!
படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்திருக்கிறது... ( நாலு நாள் கலெக்ஷனே 12 கோடியாம்!!!) படம் பார்த்து சிரித்தவர்கள் வெளியே வந்து தங்களுக்கு ஞாபகம் இருக்கும் சந்தான டயலாக்குகளைச் சொல்லிச் சிரிக்கும் "வோர்ட் ஆஃப் மவுத்"தே போதுமானது "ஓகே ஓகே"வின் ரிஸல்ட் ஜஸ்ட் ஓகேவைத் தாண்டி செம ஹிட் அடிப்பதற்கு! கதை, லாஜிக், எத்திக்ஸுக்கு எல்லாம் குட்பை சொல்லிவிட்டு வந்து உட்கார்ந்தால் கிடைக்கும் பொழுதுபோக்கிற்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழே தரலாம்...... அந்தளவுக்கு Guarenteed Entertainment!!...... வெல்டன் ராஜேஷ் அன்டு சந்தானம் டீம்!
கவனிக்கத்தக்க வகையில் இருந்தது ராஜேஷின் திரைக்கதை காரணம் கதையோட்டத்தில் "திரைக்கதை" என்னும் மேட்டரைக் கவனிக்கவே டைம் இல்லாமல் நம்மை சிரிப்போடே நகர்த்தியிருப்பதால்! டக்கு டக்கென்று Bungee Jump அடித்து நகர்கின்றன காட்சிகள்...... சந்தானத்தின் எதிர்பாராத டைமிங் ஜோக்குகள் கைத் தட்டி சிரிக்கவைப்பது எக்குத்தப்பாக எகிறவைக்கும் எனர்ஜி பூஸ்டர்ஸ் திரைக்கதைக்கு! படத்தில் காட்சிகளையும் காட்சிகளில் காமெடியையும் திருத்தமாகப் பொருத்தியிருக்கும் நேர்த்தியில் ஸ்க்ரிப்ட் வொர்க்கின் கடும் உழைப்பு தெரிகிறது....
ஹீரோவாக உதயநிதி.... முதலிலேயே சொன்னதுபோல நிச்சியமாக உறுத்தவேயில்லை.... அவரது இயக்குனர் தேர்வும் சரி..... அவருக்கேற்ற இயக்குனரின் கதைத் தேர்வும் சரி மிகச் சரியாகப் பொருந்திப்போயிருப்பது பெரிய ப்ளஸ் பாயிண்ட்! தனது இயல்பான ஸ்லிம் உடலை நாலு மாத ஜிம் வொர்க் அவுட் செய்து டோன் செய்திருக்கிறார்.... தினமும் கண்டீஷ்னர் போட்டு ஃப்ரெஷ்னஸ் மெயின்டைன் செய்த சிகையும் , காஸ்ட்யூமர் நளினி ஸ்ரீராமின் மிக அழகாய்த் தேர்ந்த உடை அலங்காரமும் உதயநிதியை மிக சிம்பிளாக "ஹீரோ" வாக உலவவிட்டிருக்கிறது திரையில்!
ஹன்சிகா...... கொழுக் மொழுக் பெண்களைப் பூஜித்த பழைய ட்ரெண்டிற்குப் போய்விடுமோ தமிழகம்? படத்தில் சொல்வதுபோல் சின்னத் தம்பி குஷ்பூ போலெல்லாம்கூட இல்லை.. உண்மையில் சைஸில் நமீதா தங்கச்சி மாதிரி இருக்கிறார்..... இலியானா சைஸ் ஜீரோ... ஷ்ருதிஹாசன் சைஸ் ஃபோர் என்றெல்லாம் செந்தமிழில் நாப்பயிலும் நிகழ்கால "டைம்ஸ் ஆஃப் இந்தியா" தமிழர்கள் இந்த மோத்வானியை சைஸ் தர்ட்டி சிக்ஸ் என்று கூசாமல் சொல்லலாம்...மேடம் அவ்ளோ குண்டு!!! தேக ஆரோக்யத்துக்காகவாவது அம்மணி வெயிட்டைக் குறைப்பது நலம்!
சந்தானம்தான் படத்தின் சச்சின் டெண்டுல்கர் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன்! :-))
சரண்யா பொன்வண்ணனுக்கு அளவெடுத்துத் தைத்த டெய்லர் மேட் ரோல்...... வழக்கமான ராஜேஷ் படத்து ஹீரோவோட அம்மா பாத்திரம்தான்...... டிகிரி முடித்தவர் என்று பொய் சொல்லிக் கட்டிவைத்துவிடக் கணவர் அழகம்பெருமாள் அந்தப் பொய்க்காக இருபது வருடம் (கணக்குக் கன்னாபின்னாவென இடிக்குதே?!!!) மனைவி சரண்யாவிடம் பேசாமலேயே குடும்பம் நடத்துவது என சற்று செயற்கையான புதுமைத் திணிக்கப்பட்டிருந்தாலும்... தனது எபிஸொடுகளில் தனக்கே உரித்தான வெள்ளந்தி நடிப்பாலேயே ஈர்த்துவிடுகிறார் இந்த நேஷனல் அவார்டு அழகு அம்மா!!! சந்தானத்தின் "ஜாங்கிரி" (!) யாக வரும் நடிகைகூட நன்றாகவே நடித்திருக்கிறார்!!! :-))
ஒளிப்பதிவு பளீச்ச்ச்ச்!! பாலசுப்ரமணியெம் கலர்களாலும் காண்ட்ராஸ்டுகளாலும் அப்படியொரு ஃப்ரெஷ்னஸ் கொடுத்திருக்கிறார் ஒவ்வொரு காட்சிக்கும்...... ஆங்கிள்களால் சிக்ஸர் அடிக்க ஸ்கோப் இல்லாத ரொமாண்டிக் காமெடியில் அழகியலில் சிக்ஸர்கள் இல்லாமலேயே செஞ்சுரி போட்டிருக்கிறார்.... சூப்பர்ப்!!
விவேக் ஹர்ஷனின் எடிட்டிங் காட்சிகளுக்கு ஊடே புகுந்து கத்திரி போட்டிருப்பது சற்று நீளமான இந்தப் படத்தின் ட்ரிம் லுக்குக்கு மிக முக்கியமான காரணம்....... சபாஷ் விவேக்!
ஹாரிஸுக்கு இந்தப் படத்துக்கு இசையமைத்தது ஒரு புதிய அனுபவமாக இருந்திருக்கலாம்..... "வஞ்சிரம் மீனு வவ்வாலு" என்று லோக்கலாக இறங்கி ஜனக்க்கு ஜனக்கு அடித்திருக்கும் ஹாரிஸ் பின்னணி இசையில் ஆங்காங்கே தன் பங்குக்கு சென்ஸ் ஆஃப் ஹியூமர் காட்டியிருப்பதும் நல்ல சுவாரஸ்யம்....."வேணாம் மச்சான் வேணாம்" பாட்டு ஏரியா முழுக்க பசங்களின் தேசியகீதமாகப் பின்னியெடுக்கிற போதிலும்..... "அகிலா அகிலா", "அழகே அழகே" போன்ற பாடல்களைக் கண்ணைமூடிக்கொண்டு ஹாரிஸ் ஜெயராஜ் இசை என்று சொல்லமுடிவது மட்டும்தான் தொடர்ந்து இந்தப் படத்திலும் ஹாரிஸ் இசையின் அதே பழைய லெட் டவுன்...... :-(
படம் பக்கா என்டர்டெயின்மென்ட் நிச்சியமாக!!...... லாஜிக், எத்திக்ஸ் எல்லாம் ராஜேஷ் படத்தில் பார்க்காதீங்கன்னு நான் தனியாக சொல்லவேண்டியதில்லை...... இருந்தாலும் க்ரிட்டிக்கலாகப் பார்க்கையில்...... ஓர் "ஆணாக" சமூகத்தின் சர்வ சுதந்திரங்களையும் அனுபவிக்கும் "சலுகை" பெற்றவனாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அதே பொறுப்பற்ற ஹீரோ...... சும்மாகாச்சு பப்பப்ப்பே காட்டும் ஏப்ப சாப்ப ஹீரோயின் அப்பா கேரக்டர்..... தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் மகனுக்கு கலெக்டர் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கும் அதே ஹீரோவின் அம்மா பாத்திரம்....... வேலவெட்டி இல்லாத ஆண்காதல்......வெட்கங்கெட்ட பெண்காதல்........ ஈவ் டீசிங்கிற்கு கொடுக்கப்படும் தேசிய அங்கீகாரம் (!)..... இவையெல்லாம் யாருமே கண்டுகொள்ள மெனக்கிடாத கரும்புள்ளிகளாக ராஜேஷின் இந்தப் படத்திலும் வலுவாகத் தொடர்ந்திருப்பதையும் ஜஸ்ட் காமெடியாக ஓகே ஓகே என்று ஏற்றுக்கொள்ள முடியாத ஏமாற்றம்தான்! :-(
ஆனால் சுவாரஸ்யம் செத்துப்போன இந்தப் பவர்-கட் ஸம்மருக்கு ஜாலியா ஒரு ஏ/சி தியேட்டரில் "ஓகே ஓகே" வுக்குப் போய் நல்லா ஜில்லுன்னு சிரிச்சிட்டு வாங்க!!!
ஓகே ஓகே..... - டேக் இட் ஈஸீ...... செம ஜாலி!!!! :-))
அன்புடன்,
பிரபு எம்
Subscribe to:
Post Comments (Atom)

என்னங்க சார்...ப்லாக் திடீர்னு காணா போச்சு...;-)) ரெப்ரெஷ் பண்ணால் உங்க ப்லாக் கிடைக்கும்ன்னு f5 பட்டன் அழுத்தி அழுத்தி நொந்து போன வேளையில்...உங்க ப்லாக் கிடைச்சுருச்சு;-)...மீண்டும் தொலையாமல் இருக்க...மதுரை ஆதின ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நித்யானந்தா சுவாமிகளை வேண்டிகொள்கிறேன்..;-)))
ReplyDelete/ஹன்சிகா...... கொழுக் மொழுக் பெண்களைப் பூஜித்த பழைய ட்ரெண்டிற்குப் போய்விடுமோ தமிழகம்? படத்தில் சொல்வதுபோல் சின்னத் தம்பி குஷ்பூ போலெல்லாம்கூட இல்லை.. உண்மையில் சைஸில் நமீதா தங்கச்சி மாதிரி இருக்கிறார்..... இலியானா சைஸ் ஜீரோ... ஷ்ருதிஹாசன் சைஸ் ஃபோர் என்றெல்லாம் செந்தமிழில் நாப்பயிலும் நிகழ்கால "டைம்ஸ் ஆஃப் இந்தியா" தமிழர்கள் இந்த மோத்வானியை சைஸ் தர்ட்டி சிக்ஸ் என்று கூசாமல் சொல்லலாம்...மேடம் அவ்ளோ குண்டு!!! தேக ஆரோக்யத்துக்காகவாவது அம்மணி வெயிட்டைக் குறைப்பது நலம்!//
ReplyDeleteஇதை வன்மையாக...கடுமையாக...பதட்டமாக...கொலைவெறியோடு கண்டிக்கிறேன்...;-)))
//தமிழகத்தில் ஒருகாலத்தில் சிறந்த தலைவர்கள் இருந்ததாகப் பாட்டிகதைகள் உண்டு..... அதேபோல் தலைமைக்குத் தகுதிகள் தேவையில்லை "யார்" வேண்டுமானாலும் தலைவராகலாம் என்ற "புரட்சி" ஏற்பட்ட ஃப்ளாஷ்பேக்குகளும் ஏராளமாக உண்டு..! அரசியலில் "தாத்தா" காலத்தில் நடந்த அந்த புரட்சி "பேரன்"(கள்) காலத்தில் இப்போது நடந்தேறுவது சினிமாவில்!! அதாவது யார் வேண்டுமானாலும் ஹீரோவாகலாம் (சொந்தக் காசில்!!!!!) :-)) முதலிலேயே சொல்லியாக வேண்டும்......நிச்சியமாக உறுத்தவில்லை " நாயகன்" எனும் வார்த்தைக்குக் கொஞ்சமும் பொருந்தாதவராகக் கணிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலினின் ஹீரோ வேஷம் இந்தப் படத்தில்.... அதற்கு யோசிக்காமல் உடனே சொல்லியாக வேண்டியது Director Rajesh is really really talented என்று!!//
ReplyDeleteintroduction ஐ இவ்வளவு சுவாரஸ்யமா எழுதுறதுக்கு உன்னை அடிச்சுக்க ஆள் இல்லை :-)
//இருந்தாலும் க்ரிட்டிக்கலாகப் பார்க்கையில்...... ஓர் "ஆணாக" சமூகத்தின் சர்வ சுதந்திரங்களையும் அனுபவிக்கும் "சலுகை" பெற்றவனாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அதே பொறுப்பற்ற ஹீரோ...... சும்மாகாச்சு பப்பப்ப்பே காட்டும் ஏப்ப சாப்ப ஹீரோயின் அப்பா கேரக்டர்..... தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் மகனுக்கு கலெக்டர் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்கும் அதே ஹீரோவின் அம்மா பாத்திரம்....... வேலவெட்டி இல்லாத ஆண்காதல்......வெட்கங்கெட்ட பெண்காதல்........ ஈவ் டீசிங்கிற்கு கொடுக்கப்படும் தேசிய அங்கீகாரம் (!)..... இவையெல்லாம் யாருமே கண்டுகொள்ள மெனக்கிடாத கரும்புள்ளிகளாக ராஜேஷின் இந்தப் படத்திலும் வலுவாகத் தொடர்ந்திருப்பதையும் ஜஸ்ட் காமெடியாக ஓகே ஓகே என்று ஏற்றுக்கொள்ள முடியாத ஏமாற்றம்தான்! :-(//
ReplyDeleteஇந்த கிரிடிக்ஸ் பிடிச்சிருக்கு...
// ஹாரிஸ் இசையின் அதே பழைய லெட் டவுன்...... :-(//
ReplyDeleteகாப்பி கேட் டவுன் டவுன்...;-)
//1998ல் ஷார்ஜாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் சச்சினின் தாண்டவம் மிக மிகப் பிரசித்தி பெற்றது..... காரணம் கிரிக்கெட் எனும் டீம் கேமை தனித்து ஒரே ஆளாக நின்று ஒன் மேன் ஆர்மியாக மொத்த கேமையும் அடித்து ஆடி அமர்க்களப்படுத்தியிருந்தார் ஆடுகளத்தில் அன்று லிட்டில் மாஸ்டர்..... அதே மாதிரிதான் ஓகே ஓகேயில் சந்தான தாண்டவமும்!!!! ஒன் மேன் ஆர்மி மட்டுமல்ல படத்துக்கு ஒன்மேன் நேவி, ஏர்ஃபோர்ஸ் என்று எல்லாமுமாக இந்தப் படத்தில் படமெடுத்து ஆடி அசத்தியிருக்கிறார் இந்த காமெடி கேங்ஸ்டர்! :))மொத்தப் படமுமே சந்தான சேட்டைகளால் அதகளமாகும் கலர்ஃபுல் காமெடி கதகளிதான்!!
ReplyDeleteசந்தானம்தான் படத்தின் சச்சின் டெண்டுல்கர் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன்! :-))//
சச்சின்?!!;-)) ரைட்டு...;-)))
//"படத்தோட கதை என்ன?" என்றுதான் தங்களிடம் கதை சொல்லவரும் இயக்குனர்களிடம் எல்லா தயாரிப்பாளர்களும் எடுத்தவுடன் கேட்பார்கள் என்று சொல்லுவார்கள்.... ஆனால் ராஜேஷ் மட்டும் இதற்கு ஒரு பெரும் விதிவிலக்கு ஏனென்றால் கதைகேட்கப்போகும் தயாரிப்பாளர் மட்டுமல்ல படமாகப் பார்க்கப்போக்கும் ஆடியன்ஸுக்கே அவர் படங்களின் "கதை" க்ளைமேக்ஸ் வரை அச்சுப்பிசகாமல் தெரிந்திருக்கிறது அவரே தனது கதையை எழுத ஆரம்பிக்கும் முன்பே!!! :-))//
ReplyDeleteஇயக்குனர் ராஜேஷ்: ஹீ...ஹீ.." பப்ளிக்...பப்ளிக் ;-)))"
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட். தொடரட்டும். படம்பார்க்கவில்லை, சுவாரசியமான விமர்சனம்தான்.
ReplyDeleteலேட்டஸ்ட் நீதான், படத்தைச் சொல்லவில்லை. :-)))))))
ReplyDeleteபிரபு , ஏப்ரல்ல விமர்சனம் எழுதியிருந்தாலும் எனக்கு இப்போதான் கூகிள் ரீடர்ல அப்டேட் ஆச்சு. கன்பீசன்ஸ் ஆப் இந்தியா.
ReplyDeleteவிமர்சனம் ரொம்ப நல்லா இருந்திச்சு, படத்தை விட!!!
என்ன ஒண்ணு உதயநிதி மூஞ்சிதான் கொஞ்சம் கடுப்பேத்திச்சு. எந்த தொழிலும் செய்யாமல் குடும்ப ஊழல் பணத்துல நடிகனாகி இம்சிக்கிறாரே னு ஒரு கடுப்பு படம் முழுக்க இருந்துச்சு.( அப்படி பாத்தா படமெடுக்குற தயாரிப்பாளர்கள்ல பெரும்பாலான பேர் ஏதோ ஒருவகையில தப்பான வழில வந்த பணத்துலதான் படமெடுக்குறாங்க.) எல்லாத்தையும் மீறி உக்காந்து பாக்க வச்சது சந்தானம் மட்டும் தான். இருந்தாலும் க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க ஒரு அலுப்பு வந்திடுச்சு.
அடிக்கடி எழுதுங்க ;-)