Saturday, August 23, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம் [U] (2014)




"எனக்கு ஒரு விஷயம் நல்லா தெரியும் "புதியபாதை" சமயத்தில் இருந்த பார்த்திபனைவிட இப்போதைய பார்த்திபன் அறிவாளி.... ஆனால் அப்போ கொடுக்க முடிஞ்ச வெற்றிப்படங்களை இப்போ என்னால ஏன் கொடுக்கமுடியலன்னுதான் புரியல!"

"குடைக்குள் மழை" சமயத்தில் பார்த்திபன் மேற்கண்டரீதியில் ஒரு பத்திரிக்கைப் பேட்டியில் பேசிய வார்த்தைகள் இவை.....அந்த படம்... சூழ்நிலை..... ஏன் அந்த பேட்டியே கூட நினைவைவிட்டு அகன்று விட்டாலும் இந்த வார்த்தைகள் சற்று நேரம் சிந்திக்கவைத்ததாலோ என்னவோ நினைவுகளில் எங்கோ ஒரு ரூம் போட்டுத் தங்கிவிட்டது போல....நேற்று "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென்று மனதில் கதவைத் தட்டின பார்த்திபனின் இந்த வார்த்தைகள்! அனுபவசாலி பார்த்திபன் தன் அறிவைக் கசக்கிப் பரிசோதித்துப் பார்த்திருக்கும் புதிய அனுபவம் "கதை திரைக்கதை வசனம் இயக்கம்"!

இன்றைய தமிழ்சினிமாவின் ஸ்டார் ஹீரோ யார்? என்று கேட்டால் விஜய சேதுபதி , சிவகார்த்திகேயன் எட்சட்ரா.... என்று கூகிளே தப்பான பதில்களைத்தான் சொல்கின்றது..... இன்றைய தேதியில் தமிழ்சினிமாவின் உண்மையான உச்ச நட்சத்திரம் "திரைக்கதை" தான்! கடைசியா நல்லா ஓடின எல்லா படங்களிலுமே ரியல் ஹீரோ "ஸ்க்ரீன் ப்ளே"தான்...... இதனைத் தெளிவாகப் புரிந்துவைத்திருக்கும் நேற்றைய " நாளைய இயக்குனர்கள்!" அதான் இன்றைய இளம் இயக்குனர்கள் எல்லாருமே பாரபட்சம் இல்லாமல் "ஸ்க்ரீன் ப்ளே"யிடமே தொடர்ந்து கால்ஷீட் வாங்கி ஹீரோவாக்கிப் பட்டையக் கிளப்பும் இன்றைய புதுமைகளுக்கு இடையே தானும் திரைக்கதையை ஹீரோவாக்கி மேலும் தன்பங்குக்குக் கதையை ஜீரோவாக்கி  வசனபலத்தாலும் தன்னுடைய ட்ரேட்மார்க் குறும்புகளாலும் ஒரு நேரோ கேப்பில் சக்ஸஸ் கண்டிருக்கிறார் பார்த்திபன்!

ஒரு திரைப்படத்துக்குக் "கதை" தேடும் டீம்... அந்தத் தேடல்தான் படத்தில் "கதை" இருக்கவேண்டிய ஸ்பேஸை நிரப்புகின்றது மற்றபடி திரைக்கதையும்-வசனமும்தான் மொத்தப்படமும்! பாஸிடிவ் எனர்ஜியுடன் முதல்பட வாய்ப்புக்குக் காத்திருக்கும் டைரக்டர் அஸ்பைரன்ட் தமிழ்....... "முதல்படம் எடுத்துட்டுதான் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க முடியும்"னு தமிழ் சொல்லும்போது "ஓகே அப்போ அதுவரைக்கும் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்"னு சொல்லி காஷுவலாகத் தமிழைக் கரெக்ட் பண்ணும் அவனுடைய மாடர்ன் சம்சாரம் தக்ஷா!  கல்யாணத்துக்குப் பிறகுதான் தமிழுக்குத் தெரிகிறது தனது மாடர்ன் சம்சாரம் ஓர் எக்ஸன்ட்ரிக் மினசாரமும் கூடவென்று! தக்ஷாவிடம் அப்பப்போ ஷாக் வாங்கிக்கொண்டும் தமிழ் சினிமா "சீனியர்" தம்பி ராமையா மற்றும் சிலபல புதிய ஆர்வங்களையும் வைத்துக்கொண்டு வீட்டுக்குள் ஸ்டோரி டிஸ்கஷன் என்கிற பெயரில் நடக்கும் குளறுபடிகள்... போராட்டங்கள்..... வாய்ப்புத் தேடல்கள் என்று அன்றாடக் கசகச அத்தியாயங்களையே வசனக் கிச்சுக்கிச்சு மூட்டி அடுத்தடுத்து கடத்துகிறார்.... இடையே இயக்குனர் பார்த்திபனாகவே கேமியோ கொடுத்து அடுத்து வரப்போகிற இரண்டு பரபர சீன்களை முன்னதாகவே காண்பித்து டெம்போ மெயின்டெய்ன் பண்ணுகிறார்...! "கதை" என்று ஸாலிடாக எதுவும் இல்லாததால் திருப்பங்களுக்குக் கதாபாத்திரங்களைத்தான் ரீப்ளேஸ் செய்தாக‌வேண்டும் அந்த வகையில் "இன்ட்யூஷன்" தீபாவும் , ஜாலித் திருடன் "முரளி-சுருளி"யும் படத்தை ஸ்வாரஸ்யமாக நகர்த்துகிறார்கள்! இதுவரை பார்த்திபனின் "அனுபவம்"தான் ஸ்கோர் செய்யும் ஆனால் அதுவரை தமிழின் வாழ்வில் நடந்த, வந்து போன பாத்திரங்களை வைத்தே தமிழ் தன் திரைக்கதையை செதுக்க ஆரம்பிக்கும் அத்தியாயங்களில் இதுவரை வந்த காட்சிகளையே அற்புதமாக  நிஜம் என்னும் பேஸ்லைனில்(Base line) பொருத்திக்கொண்டு அதற்கு மேல்கீழாகத் தமிழின் "கற்பனைகள்" கலந்ததாய்க் கண்முன் விரியும் தமிழின் "திரைக்கதை"! அதில் ஆர்யா-அமலாபால் (அமலாபாலுக்கு ஏன் மேக்-அப் போடாமல் பயமுருத்தியிக்கிறார்கள் என்று தயவுசெய்து விளக்கம் கொடுப்பது நலம்!) நாயகன்- நாயகி! ..... படத்துக்குள் படமாகப் பார்க்கும்போது நம்முடன் பழகிய நண்பன் ஒருவன் நமக்குப் பரிச்சியமான அனுபவங்களையே படமாக்கினால் ஓர் அழகான உணர்வு வருமே அந்த உணர்வை அத்தனை ஆடியன்ஸிடம் இழுத்துவருவதில் வெற்றிகண்டுவிட்டார் பார்த்திபன் என்றுதான் சொல்லவேண்டும்! அந்த "லிவ் தி மொமண்ட்" க்ளைமேக்ஸ் செம சேட்டை......  தில்லான முடிவு!

இத்தனை ட்ரிம் அன்ட் ஸ்லிம்மாகப் படத்தை நறுக்கித் தந்திருந்தாலும் தேவையற்ற ஸீன்களும் படத்தில் இருப்பது மைனஸ்! திடீரென்று சேரன் தமிழின் வீட்டுக்கு வந்து தமிழின் முந்தைய திரைக்கதையை யாரோ திருடிப் படம் எடுத்திருப்பதாகச் சொல்வது படத்துடன் ஒட்டவில்லை! இந்தமாதிரி சவசவ காட்சிகளைத் தவிர்த்திருந்தால் படம் இன்னும் ஃப்ரெஷ்ஷாக வந்திருக்கும்..... அதேபோல "எந்த ஒரு விஷயமும் அது இல்லாதபோதுதான் அருமை புரியும்" என்று சொல்லுவார்களே அப்படித்தான் இங்கு படத்தில் கதையில்லாத தருணங்களில்தான் "கதை"யின் அருமை புரிகிறது! கதையில்லாமல் வெறும் காட்சியமைப்பு - வசன ஸ்வாரஸ்யம் வைத்து மூவ் பண்ணமுடிந்தாலும் ஒருவித அலுப்புத் தட்டுமே என்றால் பதில் "ஆமாம்! தட்டத்தான் செய்கிறது!" ஆனால் அதிலிருந்து மீட்டெடுத்து முடித்துவைத்ததுதான் இங்கு பார்த்திப வெற்றி!

நடிகர்கள் எல்லாருமே யதார்த்தமாக வாழ்ந்திருக்கிறார்கள்..... தம்பி ராமையா மட்டும் ஆங்காங்கே "நடிக்கிறார்" ஆனால் நன்றாகத்தான் நடிக்கிறார்! பார்த்திபனின் குறும்பு அப் டு டேட்டாக இருப்பதற்கு ஓர் ஆளுயுர ஆச்சர்யக்குறி!
மனிதர் பின்னிப் பெடலெடுக்கிறார் .....ஒன்லைனர்களில் அத்தனை இளமை! நரம்பும் குறும்புமாகத் தனக்குள் ஒரு காலேஜ் பையனை இன்னும் அதே உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்......

சத்யாவின் இசை - ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவு - சுதர்சனின் எடிட்டிங் மூன்றுமே படத்துடன் பிரிக்கமுடியாதபடி இணைந்து செயல்பட்டது இயக்குனருக்கு பெரும்பலம் எந்தக் காட்சியும் பின்னணியில் உருத்தவேயில்லாமல் காட்சிகளின் செய்திகளை அப்படியே ரன்னிங் டைமில் உள்வாங்க முடிவதற்கு இந்த மூன்றுபேரின் உழைப்பும் அற்புதம்!

விஷால் - விஜயசேதுபதி-பிரகாஷ்ராஜ்-தப்ஸி பன்னு தோன்றும் அந்த முதல் காட்சி டீஸர் சீன்கள் சர்ப்ரைஸ் கிஃப்ட்!

மிக நல்ல முயற்சி..... ஆச்சர்யமான கம்-பேக்...... " கதையில்லாமல் ஒரு திரைப்படம்?" என்ற ஒரு டேக்-லைனால்தான் ஜெயித்திருக்கிறார் பார்த்திபன்...... சி.வி. குமாருக்கே டஃப் கொடுக்கும் மார்க்கெட்டிங் ஸ்ட்ராடெஜி அது! பார்த்திபனும் இன்னும் ரேஸில் இருக்கும் ஓர் இளம் இயக்குனர்தான்...... ஆல் தி பெஸ்ட் சார்....

கதை திரைக்கதை வசனம் இயக்கம் -  Might not be exceptional but worth an experiment :-)

அன்புடன்
பிரபு எம்

7 comments:

  1. பிரபுக்கு விமர்சனம் தவிர ஹைக்கூ லாம் நல்லா வரும்னு இப்போ தான் தெரிஞ்சுகிட்டேன்...:-)

    // கல்யாணத்துக்குப் பிறகுதான்
    தமிழுக்குத் தெரிகிறது
    தனது மாடர்ன் சம்சாரம் ஓர்
    எக்ஸன்ட்ரிக் மினசாரமும் கூடவென்று! //

    //மேல்கீழாகத் தமிழின் "கற்பனைகள்"
    கலந்ததாய்க் கண்முன் விரியும்
    தமிழின் "திரைக்கதை"! //

    // கதையில்லாத தருணங்களில்தான்
    "கதை"யின் அருமை புரிகிறது! //

    ReplyDelete
  2. சி.வி. குமாருக்கே டஃப் கொடுக்கும் மார்க்கெட்டிங் ஸ்ட்ராடெஜி அது! //

    c.v.குமார் அளவுக்கு மார்க்கெட்டிங் ஸ்ட்ராடெஜி பார்த்திக்கு வொர்க் அவுட் ஆய்டுச்சா என்ன? கொஞ்சம் அமெச்சூர் இன்னும் பார்த்திட்ட பெண்டிங் இருந்துட்டே இருக்கோன்னு டவுட்டு...

    ReplyDelete
    Replies
    1. " கதையில்லாமல் ஒரு திரைப்படம்?" - இந்த கான்செப்ட்-டை வெச்சு படத்தை பப்ளிசிட்டி பண்ணது.....
      ட்ரெய்லர்... டீஸர் எல்லாத்துலயுமே அந்த லைனையே ஹை-லைட் பண்ணுற மாதிரி கவனமா இருந்தது....
      இதைத்தான் மீன் பண்ணேன் அக்கா..... செம ஸ்ட்ராடெஜி..... இந்த ஒன்-லைன் முதல்லயே பாப்புலர் ஆகலைன்னா படம் புரியுறதுக்குள்ள தியேட்டர் விட்டுப் போயிருக்கும்....

      Delete
    2. அதை தான் சொல்றேன்...அதிலே ஒரு அமெச்சூர் பீல் இருக்குன்னு...:-) இதிலே சி.வி.குமார் பக்கத்துல கூட பார்த்தி நெருங்க முடியாது...:-)

      Delete
    3. casting ஆல் ஓவர் ஓகே வா? கடந்தகால பார்த்தியின் நமிதா எல்லாம் கண்ணுக்குள் வந்து பயம் பயமா வந்துச்சு:-)

      தம்பி ராமய்யா சில நேரங்களில் அவஸ்தை இல்லையா? ஹ ஹா...:-)

      Delete
  3. ஒரு விஷயம் பார்த்திக்கு பேவர் :-) மார்கெடிங் ட்ரெண்ட் ஐ தூக்கி சாப்பிட்டு, அவரை காப்பாத்த 'அஞ்சான்' வந்தது தான் பெரிய turning point இல்லையா? :-) So, Luck favours in this time beyond market strategy :-)

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)