நண்பர்கள் கொடுத்த பின்னூட்டங்களுக்கும், சமூக வலைதளப் பகிர்வுகளுக்கும் நன்றி.
மூன்றாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்
முதல் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
கமல் என்னும் தலைமையைப் பற்றிய உரையாடல்களிலும் சமூக வலைதளங்கள் மற்றும் பொது இணையதளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துகளில் பெரும்பான்மைக் கருத்துக்கள் அரசியல் கமலுக்கு ஆதரவானவையே! இருப்பினும் இந்தத் தொடருக்காக சேகரிக்கப்பட்டவை எதிர்க்கருத்துக்கள் மட்டுமே. எதிர்மறை எண்ணவோட்டங்களை கட்டுடைத்து பார்த்து அவையெல்லாம் குவியம் கொள்ளும் புள்ளிகளைத் தொட்ட சில கருத்துக்களையே இந்த தொடரின் இரண்டாம் பாகத்தில் விவாதிக்கிறோம்.....

வாழ்க்கையில் வரப்போகும் இன்னல்களையும் துரதிர்ஷ்டங்களையும் வருமுன்பே எதிர்பார்ப்பது மனதளவில் அவற்றின் தாக்கங்களை சற்று குறைக்கும் என்று சோதிடத்தில் நம்பிக்கை கொண்ட நண்பர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்...... ஆனால் அதுவே வாழ்வின் இன்பங்களையும் வெற்றிகளையும் அதீதமான எதிர்பார்ப்புகளுடன் அணுகும்போது அவை நல்லதாகவே அமைந்தாலும்கூட எல்லையற்ற எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் உளரீதியாக சற்று தரம் குறைந்துதான் போகிறதோ என்னும் எண்ணத்தைப் பலமுறை வாழ்விலேயே கவனித்திருக்கிறேன். சம்பள அப்ரைசல் முதல் சமீபகால ஷங்கர் படங்கள் வரைக்கும் ”எதிர்பார்ப்புகள்” தான் ஏமாற்றங்களை எழச்செய்யும் முக்கிய காரணிகளாவதை உணர்ந்திருக்கிறேன்....!
ஆனால்... ஏமாற்றத்தையே எதிர்பார்த்து இரு கட்சிகளுக்கு மாறி மாறி வாக்களித்துப் பழகிவிட்ட நாம், தமிழகத்தின் “தலைமை” வெற்றிடத்துக்கு விண்ணப்பிக்கும் புதியவர்களிடம் மட்டும் சற்று மிகுதியான ”எதிர்பார்ப்புகளைத்” திணித்துக் கொண்டிருக்கிறோமோ என்கிற எண்ணம் மேலோங்குவதைத் தவிர்க்க முடியவில்லை!
தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளை நாம் முற்றிலுமாக இழந்துவிட்டோம் இனி அவர்கள் இல்லை என்பதை முதலில் அழுத்தம் திருத்தமாக ஒவ்வொரு தமிழனும் அவசரமாகத் தங்கள் மனதில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.... கூவத்தூர் கூத்துக்களையும், தெர்மாக்கூல் விஞ்ஞானத்தையும் பார்த்து அதிர்ந்தோம், வலிமையான போராட்டங்களில் கூட காவல்துறையின் வன்முறையால் உதிர்ந்தோம், நீட் பிரச்னையை ஆளாளுக்கு நீட்டி முழக்கியதில் அனிதாவின் இழப்பில் மனதளவில் இடிந்தோம்! ஆனால் இன்னும் இன்னும் இன்னும் ஒன்றை ஒன்று மிஞ்சிக்கொண்டு அனுதினமும் அரங்கேறும் பேரபத்த நகர்வுகளால் நம் மாநிலத்தைக் கவ்வப்போகும் பேராபத்தை நாம் உணர்ந்தும் உணராமல் இருப்பதற்கு ஒரே காரணம், இதுவரை சுயமரியாதை காத்த, மாநில இறையாண்மைக்கு இரும்பு அரண் அமைத்திருந்த இரண்டு முக்கிய ஆளுமைகளை நாம் முற்றிலுமாக இழந்துவிட்டதை இன்னும் நம் ஆழ்மனது ஏற்றுக்கொள்ளாததே ஆகும்! மரணங்களைக் கடந்து விடலாம் ஆனால் அதன் இழப்பை ஏற்றுக்கொள்ளத்தான் காலம் பிடிக்கும் என்பதுதான் அனுபவ அறிவு! ஆனால் தற்போது காலம் தாழ்த்த நம்மிடம் மணித்துளிகள் இல்லை எனும் நிதர்சனம்தான் அபாயச் சங்கு ஊதுகிறது!...... தற்கால போலித் தலைமைகள் முன்பிருந்த துதிபாடலைவிட இருமடங்கு அதிகமாய் வார்த்தைக்கு வார்த்தை முந்தைய தலைவர்களின் பெயர்களை வலுக்கட்டாயமாக உச்சரிப்பதன் தேவை இதுவேதான்...அதாவது அவர்கள் இனி இல்லவே இல்லை என்கிற நிரந்தர வெற்றிடத்தை மக்களின் ஆழ்மனம் ஏற்றுக்கொள்வதைத் தங்களால் இயன்றவரை மக்கள் மனங்களிலிருந்து காலந்தாழ்த்தி அந்த இடைவெளியில் தாங்கள் வேர்விட்டுக்கொள்வது!

பழையன கழிந்தாயிற்று இனி புதிய தலைவர்களை அவர்களின் நோக்கம் ஆராய்ந்து நாம் தான் கை தூக்கி விடவேண்டும்! ஆனால் நாமோ எல்லையற்ற “எதிர்பார்ப்புகளை” அவர்கள் மீது திணிப்பதும், அரை நூற்றாண்டுகளாக நம் பாரம்பரியத் தலைமைகளையே திணறடித்த நீர், உழவு, மின்சாரம், கல்வி போன்ற நெடுங்காலப் பிரச்னைகளுக்கு ஒற்றைத் தீர்வை முன்மொழியச் சொல்லி முட்டுக்கட்டைப் போடுவதுமாய் மேதாவித்தனத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறோம்! இப்பொழுது இவர்களிடம் நாம் காட்டும் இந்த அதீத எச்சரிக்கை உணர்வை நம் ஓட்டுகள் விற்பனைக்கு விலைபேசப்படும் கலாச்சாரம் சகஜமாகி போன போது எங்கே வைத்திருந்தோம்? இலவசங்களுக்கு இளித்த வாயுடன் வாக்களித்தபோதெல்லாம் இந்த அதிபுத்திசாலிக் கேள்விகளைக் கேட்க ஏன் மறந்தோம்?!
கேள்விகள் கேட்பதைப் பிழை சொல்லவே இல்லை கேள்விகள் மட்டுமே நம் ஆயுதம்... தமிழனின் ஒற்றை ஆயுதமான வினாக்களை நம் தமிழிலக்கணம் அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா, ஏவல்வினா என வகைப்படுத்தி வைத்துள்ளது! இதில் ”அறிவினா” என்பது கேள்விக்கான பதிலை அறிந்துவைத்துக்கொண்டு எதிராளியிடம் கேட்டுச் சோதிப்பது..... ”அறியாவினா” என்பது நமக்குத் தெரியாத பதிலைக் கேட்டறியத் தொடுப்பது! நம்மை ஆளப்போகும் நம்மில் ஒருவனைத் தேர்ந்தெடுக்கும் நேர்காணல்களில் நமக்கே பதில் தெரியாத அறியாவினாக்களைக் கேட்பது நியாயமல்ல.... அறிவினாக்கள்தான் ஆள வருபவனை ஆய்ந்தறிய உதவும்! இதைத்தான் சொல்ல விழைகிறேன் கேள்வி கேட்பதன் நியாயத்தையும் பொறுப்புணர்வையும் உணரக்கோரும் ஒரு கெஞ்சல்தான் இது.
வருங்காலத் தமிழகத்துக்கு வரைபடத்தை முன்மொழியும் சமகால ஆளுமைகளில் ஆகச் சிறந்தவராகக் கமல்ஹாசன் என் கண்களுக்குத் தென்படும் காரணங்களை அடுத்த பாகத்தில் தேவையிருந்தால் அலசலாம்!
இப்போது வருவோம் கமல்ஹாசன் மீது வைக்கப்படும் சில கேள்விகளுக்கு!
1) ஜெயலலிதா இருந்தபோது கமல்ஹாசன் எங்கேயிருந்தார்? அப்போதெல்லாம் இந்தச் சத்தம் கேட்கவில்லையே?
அதான் ஜெயலலிதா இருந்தாரே! அவரிடம் கலைஞர் என்றொருவர் நாளும் பல கேளிவிகளும் கடுமையான எதிர்ப்பறிக்கைகளும் எழுதிவந்தாரே?
ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதாவின் மரணம் நிகழ்ந்திருக்காது, நீட் தேர்வு வந்திருக்காது, காவிரி மேலாண்மை அமைந்திருக்கும், விவசாயம் செழித்திருக்கும் என்று ஆரூடம் கூறுபவர்கள்தான் மேற்படி கேள்வியையும் கேட்பவர்களாக இருக்கிறார்கள்..... பிறகு எதற்கு கமல்ஹாசனின் சத்தத்தைக் கேட்கவில்லை என்கிறார்கள்? தமிழகத்தைப் பார்த்துக்கொள்ள ஆளிருந்ததால் விவசாயிகள் விவசாயம் செய்துகொண்டிருந்தார்கள், மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தார்கள், கமல்ஹாசன் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்!
2) ட்விட்டரில் முழங்குவதுதான் கமலைப் பொறுத்தவரை அரசியலா?
அவர் முழங்குவது மக்களின் காதுகளுக்குப் போய் சேருகிறதே! அவை திசைகள் எங்கும் எதிரொலிக்கின்றதே, வேறு என்ன வேண்டும்? திருவள்ளுவர் ஏன் திருக்குறளை ஓலைச்சுவடியில் எழுதவேண்டும் என்று கேட்பீர்களா? அதைப் போல்தான் இருக்கிறது கமல்ஹாசன் ஏன் ட்விட்டரில் முழங்க வேண்டும் என்கிற கேள்வி.... கமல்ஹாசன் தன் கேள்விகளைப் பொதுவில் பதிவு செய்கிறார்..... அந்தக் கேள்விகளுக்குப் பதில் எங்கே? பதில் சொல்லவேண்டியவர்கள் எங்கே? பதில் சொல்லத் திராணி இல்லையா? அல்லது பதில்களே இல்லையா? முதலில் நம் மனதில் எழவேண்டிய கேள்வி இவையாக அல்லவா இருக்கவேண்டும்? மக்கள் கேள்வி கேட்கவேண்டும் என்று வற்புறுத்துபவர்கள் ஏன் மக்களில் ஒருவனாகக் கமல் கேட்கும் கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி கேட்கவேண்டும்?
3) கமலுக்குப் பின்னால் திமுக இருக்கிறதா? பிஜேபி கூட இருக்குமோ?
டீக்கடைகளில் இயற்றப்படும் அரசியல் அனுமானங்கள், நம் “துப்பறிவாளர்”களையெல்லாம் மிஞ்சக் கூடியது! மெய்ப்பொருள் காண்பதே அறிவு! என்னைப் பொறுத்தவரை கோடிகளில் சம்பாதிக்கும் நடிகர் கமல்ஹாசன், போத்தீஸ் விளம்பரத்துக்கும், பிக்பாஸுக்கும் அடியெடுத்து வைத்தாலே ஆயுளுக்கும் சம்பாதிக்கும் சாத்தியம் இருக்கும்போது இப்படிக் கட்சிகளுக்கு குடுகுடுப்பு வேலை பார்க்க வந்துத் தன் ஒரே மூலதனமான நன்மதிப்பை கெடுத்துக்கொள்ளத் துணிவாரா? அத்தகைய அறிவற்றவராகவா கமலை உங்கள் உள்ளுணர்வு சந்தேகிக்கிறது?
4) கமலின் கொள்கைகள் என்ன?
இதற்குப் பதிலைச் சொல்லாமலா முதலமைச்சர் ஆகிவிடப் போகிறார்?
தனது சித்தாந்தங்களுக்குப் பொருந்தும் கட்சிகள் இல்லாத காரணத்தினால்தான் தனிக்கட்சியை நோக்கி நகர்கிறேன் என்று கருத்து தெரிவித்திருக்கிறாரே..... தளிர் நிலையிலேயே சித்தாந்தரீதியாக அரசியல் பயணத்தைக் கட்டமைக்க எண்ணும் பக்குவம் கொள்கைகளை வகுத்துக்கொள்ளாமலா கட்சியைத் தோற்றுவிக்கும் என்று நினைக்கிறீர்கள்?
பல்வேறு நிலைகளில் பேச்சுக்கள் மற்றும் பேட்டிகள் மூலம் தனது கொள்கைகளைக் கமல்ஹாசன் தன் பொதுவாழ்வின் ஆரம்பத்திலிருந்தே பதிவு செய்துதான் வந்திருக்கிறார்.
5) முக்கியப் பிரச்னைகளில் கமலின் நிலைப்பாடு என்ன?
இதற்கான பதிலை முந்தைய பத்திகளிலேயே விவாதித்து விட்டோம்.
6) கமல் இதுவரை எந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்?
கமல் இதற்கு முன்னர் முன்னெடுத்த போராட்டங்களைப் பற்றி அவ்வப்போது பேசியிருக்கிறார் (சமீபத்தைய உதாரணம் இளமைக் காலத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடியது பற்றிப் பேசியது) ஆனால் தனது மகளைப் பள்ளியில் சேர்க்கையில் ஜாதியைக் குறிப்பிடமாட்டேன் என்று ஒரு போராட்டம் நடத்தியிருக்கிறார் அந்தத் தெளிவான போராட்டம் ஒன்று போதும் போலி அரசியல்வாதிகளின் போலித்தனமான போராட்டங்களைத் தோலுறித்துக் காட்ட!
இதுபோன்ற கேள்விகள் எல்லாம் என் மனதுக்கு சத்துள்ளவையாகத் தோன்றவே இல்லை ஆனால் ஒரு கேள்வி மட்டும் மனதில் சற்று ஆழமாக ஊடுறுவுகிறது.....
அதற்குக் கமல்ஹாசன்தான் பதில் சொல்ல வேண்டும்......
* கமல்ஹாசனுக்கு சினிமா தாகம் முற்றிலும் வற்றிவிட்டதா? சினிமாவை முற்றிலுமாக விட்டுவிடும் இந்த ஆகப்பெரிய முடிவைத் தடாலடியாக எப்படி எடுக்கத் துணிந்தார்? உண்மையில் கமல் தன் கலைப் பயணத்துக்கு மூட்டை கட்டிவிட்டு தலைமை தாங்க முழுமனதுடன் வந்துவிடுவாரா??
என்னும் கேள்விதான் அது!
கமல்ஹாசன் போன்ற ஒருவரை வருங்காலத் தலைமையாக ஏற்கும் என்போன்றோர் நிறைய பேர் இருக்கிறார்கள் என்றே அறிகிறேன்.... திட்டங்களைக் கமல் சரியாக வகுப்பார் என்னும் நம்பிக்கை இருக்கிறது.... சீக்கிரம் வகுக்க வேண்டும் எனும் தவிப்பும் இருக்கிறது!
என்னைப் பொறுத்தவரை ஒவ்வொருவரும் உங்களின் மனது ஏற்றுக்கொள்ளும் தலைமையை ஆய்ந்தறியுங்கள் ஆனால் இந்த ஆட்டத்துக்கு உங்கள் தலைவன் மீதான “எதிர்பார்ப்புகளை” அடுக்குவது உதவாது மாறாக அவர்மீது வலுவானதொரு ”நம்பிக்கை”பிறக்கிறதா என்று மட்டும் பாருங்கள்! “எதிர்பார்ப்பு” முடிவில்லாத் தாமதத்தையே விளைவிக்கும் “நம்பிக்கை”எதிர்காலத்தைக் கட்டமைக்கும்!
எதிர்பார்ப்புகளுக்கு எல்லையற்றுப் போனால் ஏமாற்றமே மிஞ்சும்....
எல்லைகள் கடந்த நம்பிக்கை வைப்பது சாத்தியமானால் ஒரு தலைவன் உதயமாவான்!
அடுத்த பாகத்தில் சந்திப்போம்!
அன்புடன்,
பிரபு எம்

ReplyDeleteவாரே வா சபாஷ்