அரசியல்வாதிகளும், நடிகர்களும், பிரபலங்களும் செய்தித்தாள்கள் படிப்பதேயில்லையா??!!!
கட்சிக்கு ஒரு சேனல் வைத்திருப்பதால் அடுத்தக்கட்சி சேனல்களையெல்லாம் நோட்டம் விடுவதேயில்லையா??!!
வெளியுலகமே தெரியாதா??!! இல்ல கலாய்ச்சு பேசுறது எல்லாம்
காது கேட்காதா??!! என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்.....!
"மக்கள் நாயகர்" , "பசுநேசர்" ராமராஜரை நினைவிருக்கிறதா?! சர்தாரைவிட அதிகமாய்க் கலாய்க்கப்பட்டக் கலர்மன்னர்!! எங்கே பசங்க இவருபேரைப் பட்டப்பெயரா வெச்சுருவாய்ங்களோன்னு பயந்துபோய்ப் போடுற சட்டைக் கலரை மாற்றிக்கொண்ட வாத்தியார்களையெல்லாம் பார்த்திருக்கிறேன்.... ஆனா அவரு மாறலியே.... கடைசியா டி.வியில் ஒரு வெளிவரவேவராத படம் ஒன்றின் துவக்கவிழாவில் மஞ்சமஞ்சேரென்று நின்றுகொண்டிருந்தார்.. கையில் வேப்பிலை இல்லாததுதான் குறை....
(கர) டி.ஆரைக் கலாய்ச்சுக் கலாய்ச்சு களைச்சுப்போனதுதான் மிச்சம்... அவரு இன்னும் யூ-டியூப்ல சூப்பர்ஹிட் ஸ்டேட்மெண்ட்டுகள சூடுபறக்கக் கொடுத்துட்டுதான் இருக்காரு!! (இன்னும் டண்டனக்காவக் கூட விடல!) அவரு புள்ள...ஸ்ஸ்ஸப்ப்பா... இப்பவே கண்ணக் கட்டுது.... இன்னும் கூட லிஸ்டைப் பாருங்க.... டாக்டர் சுறா, ஸ்டீவன் பேரரசு, அடுத்த தேர்தலுக்கும் கூட்டணி மாறப்போற மருத்துவர் கொய்யா, அதே தேர்தல்டைம்ல காமெடிட்ராக் பண்ண கரெக்ட் டைம்-க்கு வரப்போகிற ஆல்டைம் காமெடிபீஸ் சுப்ரமண்யஸ்வாமிஜி.... ஊஹும்... எவனும் மாறப்போறதில்ல தமிழ்நாட்டுல!!
ஹ்ம்ம்ம்ம்... ஆனா
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதற்கெல்லாம் ஒரே பதில் நம்ம இம்சை அரசன் சொன்னதுதான்...
"வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!!!"
ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக்..ஸாரி ஸாரி...."வரலாறு"!!!
2001 தேர்தல் வந்திச்சு... ஓட்டுப்போடுற வயசுவராத ஒண்ணாங்கிளாஸ் பிள்ளைவரைக்கும் சன் டிவில பாத்துடுச்சு அதிமுக ஜெயிச்சாலுமே அம்மா தேர்தல்ல நிற்க முடியாதுன்னு... காரணம் என்ன? அதுவும் பச்சப்புள்ளக்குக் கூட தெரியும் "டான்ஸி, கிரிமினல் வழக்கு, ____, ____, ____" என்று. ஆனா ஜெயா டிவி மட்டும் பாக்குற எம்ஜிஆர் ஃபேன்ஸ் மட்டும் நம்பினாங்க அம்மாதான் முதல்வர் வேட்பாளர் என்று! அம்மாவும் வேட்புமனு தாக்கல் செஞ்சாங்களே....அதுவும் ஒண்ணு இல்ல ரெண்டில்ல நாலு தொகுதில!!... ஏங்க.. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரெண்டு தொகுதிலதான் போட்டியிட முடியும்னு அந்த நேரத்துல முதல்வரான ஓ.பி.எஸ்ஸுக்குக் கூட (!) தெரியுமேன்னு கேக்குறீங்களா??!! கரெக்டு.... எப்படியும் நிராகரிக்கப்படப் போகிற அவங்க மனு நிராகரிக்கத்தான் பட்டது... ஆனா காரணம்?? மாத்திட்டோம்ல!!..... "இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் மேற்படி வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப் படுகிறது"ன்னு அந்த ஏரியா தாசில்தார் ஒரு லேடி அறிவிச்சதை இதே ரெண்டு கண்ணால நாம பார்த்ததுதானே வரலாறு!! இன்னைக்கு பீகார்ல ரெண்டு இடத்துல போட்டிபோட்ட ராப்ரி இரண்டிலுமே தோத்து போய்ட்டதப் பத்தி ஆஃபிசுல பேசிச் சிரிச்சுட்டு இருக்கும்போது ஒரு மராட்டிக்காரன் என்னப் பாத்து சொல்லுறான் "ராப்ரியாவது பரவாயில்ல.... உங்க ஊரு அம்மா சின்னபுள்ளத்தனமா நாலு தொகுதில நின்னு ரிஜெக்ட் ஆனதைவிடவா இது பெரிய காமெடி??! ஹே ஹே.." என்று சிரிக்கிறான்...அதற்குப்பின்னால் இருக்கும் பெரியபுள்ளத்தனம் புரியாமல்.... ஹி ஹி ஹி..
இப்போ புரியுதா???
"வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!!"
"பாராட்டு விழா" "பாராட்டு விழா"ன்னு சொல்லுறாங்களே... உலகத்திலேயே அதிகப் "பாராட்டு விழாக்கள்" கண்டவர் யாருன்னு ஒரு சர்வே எடுத்தா யாரு போட்டியின்றி தேர்வு ஆவாங்கன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்.. ஆனாலும் ஏன் அந்த சர்வே ரிசல்ட்டை வெளிய விடமாட்டேங்குறாங்கன்னா... அந்த சாதனைக்கும் (?) ஒரு பெரிய "பாராட்டு விழா" வெச்சு சும்மா இருக்குற சூப்பர்ஸ்டார்,சூப்பர் ஆக்டரையெல்லாம் கூப்பிட்டு இன்னும்கூட பாடிப்பரிசில்பெறத தயாரா இருக்குற பாலபத்திர ஓணாண்டிப் புலவர்களையெல்லாம் கூட்டிவெச்சு கும்மியடிச்சு அதகளம் பண்ணிடுவாங்களேன்னு பயந்துதான்!! ..... போனவருஷம் சிறந்த வசனகர்த்தா ஸ்டேட் அவார்டு யாருக்குக் கிடைச்சது?? தமிழுக்கு நடந்த உலக மாநாடு கூட மெய்யாலுமே யாருக்கு நடந்தது??
இதெல்லாம் என்ன புதுசா... இதுவும் இதுக்குப் பின்னால இருக்குற உள்குத்துகளும் நம்ம எல்லாருக்குமே தெரிஞ்சதுதானேன்னு சிரிக்கிறீங்கதானே??!! ஆனா இன்னும் அம்பது வருஷம் கழிச்சு இந்த வரலாறுகளைப் பாடப்புத்தகத்தில் (ஸாரி பாட டிவிடியில்) படிக்கப்போற 3 -ஜி (தேர்ட் ஜெனரேஷன்னுதான் சொல்றேன்!) கிட்ட நீங்க பாத்த 'வரலாறு'களையெல்லாம் சொல்லிப்பாருங்க... அவங்க நம்மள பாத்து சிரிப்பானுங்க!!! ஆகமொத்தம் இப்போ நடக்குற விஷயங்களுக்கெல்லாம் ஆடியன்ஸ் நிகழ்கால நம்ம இல்லங்குறதப் புரிஞ்சிக்கிட்டு... ரஜினி ஜோக், விஜய் ஜோக், இன்றைய அரசியல் கார்ட்டூன்னு எல்லாம் காலங்காத்தால கிளம்பாம போய் வேலயப் பாருங்க பாஸூ!!
வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!!! :-)))
ஹி ஹி ஹி.. சும்மா கார்ட்டூன் போட்டு ரொம்ப நாளாச்சேன்னுதான்!! வேற ஒண்ணுமில்ல...
அன்புடன்,
பிரபு எம்


ஹி ஹி ஹி.. சும்மா கார்ட்டூன் போட்டு ரொம்ப நாளாச்சேன்னுதான்!! வேற ஒண்ணுமில்ல...
ReplyDelete.....சிரிச்சு முடியல. அடிக்கடி போடுங்க.... சூப்பர் ஆக இருக்குதுங்க!
ரொம்ப ரொம்பச் சரியாவே வரலாறு சொல்றீங்க.இன்னும் இருக்குல்ல.எதிர்காலம் அறியணும்.ஒண்ணு ஒண்ணா
ReplyDeleteஅவிழ்த்துவிடுங்க பிரபு !
:)...வரலாறு முக்கியம் தான் மன்னா..
ReplyDeleteபடங்கள் சூப்பர்
ReplyDeleteவரலாறு முக்கியம் தான்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
வரலாறு ரொம்ப ரொம்ப முக்கியம் போல..
ReplyDeleteஹீ..ஹீ...டெய்லி அரசியலில் ஒரு நகைச்சுவை வரலாறு நடக்குது ...மறந்துரும் பாஸ்....அவங்க பேரை சொல்லுதோ இல்லையோ...பார்த்து மாங்கா மடையர்களாய் இருக்கும் நம்மை வரலாறு சொல்லும்...ஹீ...ஹீ .... "இந்த வரலாறு ரொம்பப ப ப முக்கியம் அமைச்சரே!!!"))))
ReplyDelete/மக்கள் நாயகர்" , "பசுநேசர்" ராமராஜரை நினைவிருக்கிறதா?/
ReplyDeleteஇதை வன்மையாக கண்டிக்கிறேன்)).....பாடி பால் கறந்த எங்கள் ஜூனியர் எம்ஜிஆர் ஐ எப்படி நினைவிருக்கிரதாணு கேட்கலாம்.)))..சகோ..உன்னை கிரைம் ரேட் கூடிக்கிட்டே போகுது..ஜாக்கிரதை...))))
மிரட்டலுடன்,
ஆனந்தி...)))
:)
ReplyDeleteநன்றி சித்ரா அக்கா :)
ReplyDeleteநீங்க சொல்லிட்டீங்கள்ல... நிறைய கார்ட்டூன் போட்டுட்டா போச்சு :)
நட்சத்திரவாரம், நெருக்கடியான சூழல், தேங்க்ஸ் கிவிங் டே, என எக்கச்சக்க எக்ஸ்க்யூஸஸ்களுக்கு நடுவிலும் பின்னூட்டப் புயல் என் கரை கடந்ததற்கு ஸ்பெஷல் நன்றி ஸ்டார் அக்கா :)
//ரொம்ப ரொம்பச் சரியாவே வரலாறு சொல்றீங்க.இன்னும் இருக்குல்ல.எதிர்காலம் அறியணும்.ஒண்ணு ஒண்ணா
ReplyDeleteஅவிழ்த்துவிடுங்க பிரபு !//
நன்றி அக்கா...
அப்பப்போ டைம் பார்த்து அவிழ்த்துவிடுவோம் ;-)
ரொம்ப நன்றி ஹரிஸ்...
ReplyDeleteமிக்க நன்றி Dr.கந்தசாமி சார்
ReplyDeleteஉங்கள் முதல்வருகைக்கும் கருத்துரை தரும் ஊக்கத்துக்கும்
Pleasure is mine Kana varo..
ReplyDeleteThank you :-)
@ஜீவன் பென்னி
ReplyDeleteநன்றி நண்பா
'வார்த்தை'யின் புன்னகைக்கு நன்றி :-)
ReplyDeleteவாங்க சகோதிரி வாங்க :-))
ReplyDelete//ஹீ..ஹீ...டெய்லி அரசியலில் ஒரு நகைச்சுவை வரலாறு நடக்குது ...மறந்துரும் பாஸ்....அவங்க பேரை சொல்லுதோ இல்லையோ...பார்த்து மாங்கா மடையர்களாய் இருக்கும் நம்மை வரலாறு சொல்லும்...ஹீ...ஹீ .... "இந்த வரலாறு ரொம்பப ப ப முக்கியம் அமைச்சரே!!!")))) //
சரியா சொன்னீங்க :)
(தப்பா சொன்னாலும் சரின்னுதான் சொல்லப்போறேன்.. அப்படி மிரட்டி வெச்சிருக்கீங்க ;-))
///மக்கள் நாயகர்" , "பசுநேசர்" ராமராஜரை நினைவிருக்கிறதா?/
இதை வன்மையாக கண்டிக்கிறேன்)).....பாடி பால் கறந்த எங்கள் ஜூனியர் எம்ஜிஆர் ஐ எப்படி நினைவிருக்கிரதாணு கேட்கலாம்.)))..சகோ..உன்னை கிரைம் ரேட் கூடிக்கிட்டே போகுது..ஜாக்கிரதை...))))
மிரட்டலுடன்,
ஆனந்தி...))) //
மக்கள் நாயகர் ராமராஜர் வாழ்க...!!! போதுமா :-)
"சுறா" "வேட்டைக்காரன்" படங்களோட உங்களுக்கு "எங்க ஊரு பாட்டுக்காரன்" , "வில்லுப்பாட்டுக்காரன்" போன்ற மெகாஹிட் படங்களின் டிவிடிகளையும் 5.1 சரௌண்ட் எஃபெக்ட் சவுண்டில், சப்டைட்டிலுடன் வாங்கிக் கொண்டு வருகிறேன் ஊருக்கு வரும்போது :-)))
அன்பு நண்பர்களுக்கு,
ReplyDelete"வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே!!" என்ற 'இம்சை அரசனின்' பாதிப்பில் நான் வரைந்த கார்ட்டூனை அரங்கேற்றுவதுதான் பிரதான நோக்கம்....
ரொம்பவும் ஒன்சைட் அட்டாக்காக இருக்கிறதே என்றுதான் கொஞ்சம் 'வரலாற்று'ப் பக்கங்களைப் புரட்டி (என் மண்டைக்குள்ளதான்!) ஓரளவுக்கு பேலன்ஸ் செய்து ஒரு பதிவாக்கியிருக்கிறேன்... Just for laughsதான்...
இவ்வளவு வேகமாக மறுமொழிகள் கிடைத்திருப்பது எனக்கு இதுவே முதன்முறை... அதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி தொடர்ந்து படித்து மறுமொழி கொடுத்து மகிழ்ச்சி தரும் ஒவ்வொரு நட்புக்கும்!!
:-)
படத்தை பார்த்ததும் தலைவர் கவுண்டமணி சொன்னது நினைவிற்கு வருகிறது, பிரபு! அது, "என்னடா மம்மிய பாத்தா எம்.எல்.ஏ. மாதிரி பம்முற". அற்புதமான பதிவு!
ReplyDelete@சிவகுமார்..
ReplyDeleteஉங்க முதல்வருகைக்கும் கருத்துரைக்கும் ரொம்ப நன்றி நண்பா :-)
கார்ட்டூன் கொஞ்சம் தூக்கலாவே இருக்கு.
ReplyDeleteஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி சார்பா உங்கள தேடி வந்தா நாங்க எப்புடி ஒடுறோம்னு மட்டும் பாருங்க, பிரபு! (nanbendaa.blogspot.com and madrasbhavan.blogspot.com)
ReplyDeleteஅன்பு நண்பர் அன்பரசனுக்கு நன்றி :-)
ReplyDelete//ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி சார்பா உங்கள தேடி வந்தா நாங்க எப்புடி ஒடுறோம்னு மட்டும் பாருங்க, பிரபு! //
ReplyDeleteஹ்ம்ம்ம்.... அது உங்களோட வலைப்பதிவின் பெயரே சொல்லுது நண்பா.. " நண்பேன்டா!!" ஹஹஹா!! :)
இன்னிக்குதான் இங்க வந்தேன், தொடர்ந்து வரதூண்டும் பதிவு! வருவோம்ல!!!!! நீங்களும் நேரமிருந்தால் வரவும் http://unmai-sudum.blogspot.com/
ReplyDeletesuperb
ReplyDeleteவாங்க வைகை.. :-)
ReplyDeleteரொம்ப நன்றி நண்பா...
//superb//
ReplyDeleteதேங்க்யூ போலீஸ்கார்! :-)