Friday, August 19, 2011

3 - (தொடர் பதிவு)

 ஸ்ரீ அண்ணா இந்தத் தொடர்பதிவு எழுத அழைத்ததை லேட்டாகத்தான் கவனித்தேன்... அதனால் மட்டுமே இந்தப் பதிவு மற்றபடி மீண்டும் நண்பர்களை எழுதி இம்சிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை!! ;-)

விரும்பும் 3 விஷயங்கள்:

 1) குடும்பம்
2) நானே சம்பாதித்த சில பொக்கிஷமான நட்புகள்
 3) தனிமை

  விரும்பாத 3 விஷயங்கள்:

 1) அத்துமீறல்
2) ரொம்ப சீப்ப்பான பொய்கள்
 3) தனிமை (பிடித்த தனிமை ஏற்படுத்திக்கொள்வது, இது ஏற்படும் தனிமை!)

  பயப்படும் 3 விஷயங்கள்:

 1) மரணம் (பிரிவு என்று இன்னும் தெளிவாக அர்த்தம் கொள்ளலாம்)
2) மனதிடம் மாட்டிக்கொள்வது
3) குறிப்பிட்ட சில நினைவுகளில் சிக்கிக்கொள்வது.....

  புரியாத 3 விஷயங்கள்:

 1) பெண்கள்
2) ஹார்மோன்கள்
3) ஒருசிலரை எதற்காக சந்தித்தோம் பழகினோம் பிரிந்தோம் போன்ற நினைவுகள்......

 உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்:

 1) லேப்டாப்
2) மொபைல்
3) காஃபி குடிச்ச காலி டம்ளர்!

 உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்:

 1) _________ (இந்த இடம் வடிவேலு,சந்தானம்,ராமதாஸ் மற்றும் நம் எதிர்க்கட்சித் தலைவர் போன்றவர்களுக்கு!!)
 2) தேர்தலுக்குமுன்பு... மக்கள்
3) தேர்தலுக்குப் பின்பு..... தலைவர்கள்

  இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்:

 ஹ்ம்ம்ம்... இப்போதைக்கு பெர்சனல் விஷயங்களில்தான் கவனம்....
"Never... Never.... Never Give up!" எனும் சர்ச்சிலின் பொன்மொழிதான் பஞ்ச் டயலாக்!!

 வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்:

 1) நிறைவா சம்பாதிக்கணும்... முடிஞ்சா சாதிக்கணும்.....
2) வெற்றி, தோல்விகளை பேலன்ஸ் பண்ணக் கத்துக்கணும்...
3) முடிஞ்சா... வாய்ப்பிருந்தா.... ஒரு படம் இயக்கணும்....!! :-)

 உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்:

 1) அவசரத்துக்கு ரெசிபி பார்த்து பக்காவா சமையல் செய்துமுடிக்க முடியும்!
2) என் திருப்திக்கு ஒரு ஹாபியா ஜாலியா ஒரு திரைக்கதை எழுதி முடிக்க முடியும்
3) மனசுக்குப் பிடிச்சவங்களை சிரிக்க வைக்க முடியும்.....

 கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்:

 1) ஹிந்தி
 2) சங்கீதம்
3) சமையல்

 பிடித்த 3 உணவு விஷயங்கள்:

 1) பருப்புப்பொடி + நெய் + அம்மா வைக்கும் சாம்பார்
 2) வீட்டில் அப்பா தரும் ஃபில்டர் காஃபி
 3) ஆல்டைம் ஃபேவரைட் தோசை வித் சட்னி!!!

  கேட்க விரும்பாத 3 விஷயங்கள்:

 1) க்ரெடிட் கார்டு, பர்சனல் லோன் வாங்கச் சொல்லி வற்புறுத்தும் கால்கள்.....

 2) "இந்தப் பாடலை உங்கள் காலர் டோனாகப் பெற உங்கள் மொபைலில்...." என்று பிச்சையெடுக்கும் பெண்குரல்

3) ஃப்ளாஷ்பேக்குகள் (ரீலிலும் ரியலிலும்!!)

  அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்:

 இது எக்கச்சக்கம்..... இப்போதைக்கு.....

 1) கண்ணே கலைமானே
2) நியூயார்க் நகரம்
 3) நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

  பிடித்த 3 படங்கள்:

 இதுவும் எக்கச்சக்கம்...
 1) தளபதி
2) ஸ்வதேஸ்
3) அன்பே சிவம்

  இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்:

 இங்கதான் லைஃப்ல ப்ரச்னையே ஆரம்பிக்குதுன்னு நினைக்கிறேன்! என்னைப் பொறுத்தவரை எந்தவொரு "விஷயமும்" இல்லாமல் வாழ முடியும் ஆனால் இவங்க இல்லாம வாழ முடியாதுன்னு சில மனிதர்கள் இருக்காங்க... வெல்... அது என் வீக்னெஸ்.... வீக்னெஸ்ஸை வெளியன்னு இல்ல எனக்குள்ள கூட சொல்லிக்கிறதில்ல...... ஸோ ... நெக்ஸ்ட் க்வெஸ்டின்......

 இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்:

 1) சித்ரா அக்கா
2)  சீனா ஐயா
 3) மனம்கொண்டவன்

அன்புடன்,
 பிரபு எம்

.

23 comments:

  1. வணக்கம் பிரபு அண்ணே,

    நீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவு... இருங்க படிச்சுட்டு வரேன்... :)

    ReplyDelete
  2. //மூன்று விசயங்கள்//

    அழகா தொகுத்து சொல்லியிருக்கீங்க...வாழ்த்துக்கள்!
    பகிர்வுக்கு நன்றிண்ணே.

    ReplyDelete
  3. // ஸ்ரீ அண்ணா இந்தத் தொடர்பதிவு எழுத அழைத்ததை லேட்டாகத்தான் கவனித்தேன்... அதனால் மட்டுமே இந்தப் பதிவு மற்றபடி மீண்டும் நண்பர்களை எழுதி இம்சிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை!! ;-)///

    இப்படிலாம் சொல்லி தப்பிக்கக்கூடாது நீங்க எழுதலங்கறதுதான் எங்களுக்கு கொஞ்சம் வருத்தமா இருக்கு... கண்டிப்பா நேரம் கிடைக்கும்போது எழுதுங்கண்ணே! :)

    ReplyDelete
  4. மூன்று பதிவில் முத்தான பதிவு

    ReplyDelete
  5. முத்தான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. //ஸ்ரீ அண்ணா இந்தத் தொடர்பதிவு எழுத அழைத்ததை லேட்டாகத்தான் கவனித்தேன்...//

    எவ்வளவு லேட் ஆ..:-)) மூணு மாசம்..??

    ReplyDelete
  7. வணக்கம்..வணக்கம்...திரு.பிரபு அவர்களே...என்ன ப்லாக் பக்கம் எல்லாம்...:-)))

    ReplyDelete
  8. /3) தனிமை (பிடித்த தனிமை ஏற்படுத்திக்கொள்வது, இது ஏற்படும் தனிமை!)//

    படிச்சேன்..படிக்கிறேன்......றேன்...றேன்...பிரியலப்பா..விளக்கம் ப்ளீஸ்...

    ReplyDelete
  9. //3) ஆல்டைம் ஃபேவரைட் தோசை வித் சட்னி!!!//

    :-)))))))

    ReplyDelete
  10. //2) ஸ்வதேஸ்//

    hee..hee...thanks..thanks..thanks..:-))))))

    ReplyDelete
  11. //1) க்ரெடிட் கார்டு, பர்சனல் லோன் வாங்கச் சொல்லி வற்புறுத்தும் கால்கள்.....

    2) "இந்தப் பாடலை உங்கள் காலர் டோனாகப் பெற உங்கள் மொபைலில்...." என்று பிச்சையெடுக்கும் பெண்குரல்//

    செம...செம...:-))

    ReplyDelete
  12. //1) அவசரத்துக்கு ரெசிபி பார்த்து பக்காவா சமையல் செய்துமுடிக்க முடியும்!//

    //3) சமையல்//

    முரண்படுகிறது மிஸ்டர்.பிரபு..:-))))

    ReplyDelete
  13. //3) தனிமை (பிடித்த தனிமை ஏற்படுத்திக்கொள்வது, இது ஏற்படும் தனிமை!)
    //
    கலக்கல்...

    தொடர்ந்து எழுதுங்கோ :)

    ReplyDelete
  14. //1) ஹிந்தி
    2) சங்கீதம்//
    அது ரெண்டும் பிழைத்து போகட்டும்....:-)))

    ReplyDelete
  15. //2) என் திருப்திக்கு ஒரு ஹாபியா ஜாலியா ஒரு திரைக்கதை எழுதி முடிக்க முடியும்//

    ஆமாம்...பாட்டிகதை மாதிரி மிகவும் சுவாரஸ்யமான சிறுகதைகளை.:-))) எழுதி முடிக்கவும் முடியும்..:-)))

    ReplyDelete
  16. /இங்கதான் லைஃப்ல ப்ரச்னையே ஆரம்பிக்குதுன்னு நினைக்கிறேன்! என்னைப் பொறுத்தவரை எந்தவொரு "விஷயமும்" இல்லாமல் வாழ முடியும் ஆனால் இவங்க இல்லாம வாழ முடியாதுன்னு சில மனிதர்கள் இருக்காங்க... வெல்... அது என் வீக்னெஸ்.... வீக்னெஸ்ஸை வெளியன்னு இல்ல எனக்குள்ள கூட சொல்லிக்கிறதில்ல...... ஸோ ... நெக்ஸ்ட் க்வெஸ்டின்......//

    க்வெஸ்டின் அவ்வளவு தான்..மனசுக்குல 'முதல்வன் 'ரகுவரன் நினைப்போ..:-)))

    ReplyDelete
  17. பேஸ் புக் மாதிரி இங்கயும் லைக் எல்லாம் வச்சால் நல்லா இருக்கும்..:-))இந்த போஸ்ட்க்கு படு பயங்கரமான :-)))லைக்ஸ் போட்டு கொள்ளவும்...:-))
    பிரபு...செமையா இருந்தது...மணிரத்னம் பட ட்ரைலெர் பார்த்த மாத்ரி இருந்துச்சு:-)))...சீக்கிரம் தாத்தா கதையை எதிர்பார்க்கும் உங்கள் தீவிர ப்லாக் ரசிகை: ஆனந்தி...:-))))))))

    ReplyDelete
  18. // வெற்றி, தோல்விகளை பேலன்ஸ் பண்ணக் கத்துக்கணும்...//

    இது சூப்பர்.

    மொத்தத்தில் நிறைவா இருந்தது பிரபு, விடாமுயற்சியில் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடிய பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  19. .....இங்கேயும் அழைப்பா? அவ்வ்வ்வ்...... நல்லவேளை.... எழுதி முடிச்சிட்டேன்....

    ReplyDelete
  20. I added your name too. :-)

    ReplyDelete
  21. ரொம்ப யதார்த்தமா எழுதி இருக்கீங்க........

    ReplyDelete
  22. தம்பி

    உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்

    http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html

    வாழ்த்துக்கள்

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)