Wednesday, October 12, 2011

முரண் [U] (2011)



"ஏன் சார்......... இவ்ளோ மோசமான உங்க மனைவிய கொலை செஞ்சுட்டா என்னன்னு உங்களுக்கு ஒருதடவைகூடத் தோணினதே இல்லையா???"

என்று  அழுத்தமான ஆளான‌ சேரனிடம் அஸால்ட் ஆறுமுகமாக அசராமல் கேட்கிறார் பிரசன்னா ஒரு முக்கியமான காட்சியில்!! தியேட்டரே ஆமோதிக்கிறது...."தோணத்தான் செய்யும்!" என்று.... (Unrelasitic Reality.??!! he...heee!!)

அடங்காத ப்ரசன்னாவின் அடுத்த கேள்வி....

"போலீஸ் பிடிக்கமாட்டாங்கன்னா உங்க பொண்டாட்டிய கொலை செய்வீங்கதானே!!"

இதற்குப் ப்ரசன்னாவிடம் லிஃப்ட் கேட்டு வரும் "ஜஸ்ட் ஸ்ட்ரேஞ்சர்" சேரன், உன் சங்கார்த்தமே வேணாம்டா!! என்று பெட்டியைத் தூக்கிட்டுக் கிளம்பிடுவார்!!...  அவர் அப்படியே போயிருந்தால் நார்மல்.... ஆனால் மறுபடியும் ப்ரசன்னாவுடன் சேர்ந்து ஒரு "டிப்ளமேட்டிக் பார்ட்னராகத்" தொடர்ந்து தன் வாழ்க்கையின் சில த்ரில்லிங் எபிஸோடுகளைச் சேரன் பயணிக்க நேர்வதுதான் "முரண்"!!!

செம த்ரில்லர் களத்தைக் கையிலெடுத்துக் களம் கண்டிருக்கிறார் இயக்குனர் ராஜன் மாதவ்.....
ஃப்ரெஷ்ஷாக ப்ரசன்னா, ஸேம் ஓல்டு சேரன் (இப்படி சாமாணிய மூஞ்சிக்கு தமிழ்ல வேற ஆள் இல்ல சாமியோவ்!), ஜெயப்ரகாஷ் என கச்சிதமான‌ கேஸ்டிங்கும் ...பத்மேஷ் ஒளிப்பதிவு, அருண் துரைராஜ் எடிட்டிங், ஷாஜன் இசை என "Not Bad" க்ரூவுமாக (crew) ஒரு "முரணா"ன  டீம்வொர்க்!!

ஒரு கொலை நடந்தா போலீஸ் எந்தெந்தக் கோணத்தில் துப்பறியும் என்று ஜு.வி, ரிப்போர்ட்டர் தொடங்கி டி.வி யில் க்ரிமினாலஜி ஷோ வரைக்கும் படிக்குற & பாக்குற நிகழ்கால "சாமாணியர்கள்" அத்தனை பேருக்குமே தெரியும்தானே!
அதான் கான்செப்ட்.........!

 வழக்கம்போல விசாரணையின்  முதல் கோணம் கொலைக்கான "மோட்டிவ்"..... இரண்டாவது..... கொலையினால் கொலையாளிக்குக் கிடைக்கும் ஆதாயத்தின் அளவு...... இது ரெண்டுமே இல்லையென்றால் மூன்றாவது வாய்ப்பு "கூலிப்படை".....!!  ஆனா இப்படி மூன்றிலும் சிக்காமல் முற்றிலும் "ஸ்ட்ரேஞ்சர்ஸ்" ஆன சேரன் & ப்ரசன்னா இருவரும் சேர்ந்து  சேரனுக்காக அவர் மனைவியை ப்ரசன்னாவும்.... ப்ரசன்னாவுக்காக அவர் தந்தை ஜெயப்ரகாஷை சேரனும் கொலை செய்ய டீல் போடுகிறார்கள்!!

ஆக..... நோ மோட்டிவ்!!!..... கொலையினால் கொலையாளிக்கு நோ ஆதாயம்!!!...... மற்றும் முக்கியமாக‌ சேரனும், ப்ரசன்னாவும் கூலிக்குக் கொலை செய்யும் கூலிப்படையும் அல்ல..... வெறும் "காமன் மென்"!...என ஒரு பெர்ஃபெக்ட் மர்டருக்கு செம ஸ்கோப் வைத்து பூச்சியை வலைக்குள் இழுக்கும் சிலந்திபோலச் சேரனை ப்ரசன்னா இழுக்கும் காட்சிகள் ஸ்லோ பாய்சன்!

த்ரில்லுக்காக என்ன வேணாலும் செய்கிற படு எக்ஸண்ட்ரிக் வில்லன் ப்ரசன்னாவிடம், மனதுக்குப் பிடிக்காத மணவாழ்க்கையில் உழன்றுகொண்டே "தோழி"யின் அரவணைப்போடு தொழில்வாழ்க்கையில் ஜெயிக்கப் போராடும் அழுத்தமான ஆளான‌ சேரன் ஒரு கட்டத்தில் இப்படியொரு டேஞ்சர் டீலுக்குள் வந்து விழும் பாங்கு திரைக்கதையின் ஸுப்பர் ஸ்க்ரிப்டிங்.......  அடுத்தகட்டத்தில் யதார்த்தமாக டீலைவிட்டு விலகக்கோரும் சேரனைத் தன்வழியில் போகவிட்டு..... அடுத்த ஸீனில் அவர் மனைவி நிகிதாவை ப்ரசன்னா கொலை செய்துவிடுவதோ ஸ்டன்னிங் ட்விஸ்ட்!! மேலும் அதையே முதலாகக்கொண்டு......" உங்க வொய்ஃபை நான் முடிச்சிட்டேன் இப்போ என் அப்பனை எப்போ கொல்லப் போறீங்க சார்?"  என்று  சேரனை டைட் கார்னர் செய்து ப்ரசன்னா எடுக்கும் மிரட்டல் வில்லாவதாரங்கள் எல்லாம் லிஸ்ட்லயே வராத‌ ட்விஸ்ட் ரகம்!!! என அதகள இண்டர்வெல்லில் முடிகிறது ஃபர்ஸ்ட் ஹாஃப்......!

So....சூப்பர் வில்லன் ப்ரசன்னாவிடம் சிக்கிக்கொள்ளும் சாதா ஆளு (சோதா இல்ல பாஸ்!) சேரன் தப்பிச்சாகனும்..... எப்படித் தப்பிச்சாருன்னு இந்நேரம்தான் எல்லாரும் ஸ்க்ரீன்ல பாத்திருப்பீங்களே! (லேட்டான விமர்சனம்தானே இது! ஹிஹி)
ஆனால் கடுமையான முடிச்சாகக் கட்டவிழும் செகண்ட் ஹாஃபில் தொய்வுகளும் வேகத்தடைகளூம் உண்டு...  எப்பேர்ப்பட்ட ஜித்தனுக்கும் கொலை செய்வது இவ்வளவு சப்பை மேட்டராக இருக்க வாய்ப்பில்லை!! போன்ற லாஜிக் பொத்தல்களும்.... இரண்டாம் பாதி காட்சிகளின் முக்கியமான நகர்வுகள் அனைத்துமே யூகிக்க முடிந்துவிடுவதும் சுவாரஸ்யத்தைக் குறைப்பது நிஜம்!

இருந்தாலும்..... ஓர் ஈர்ப்பான த்ரில்லர் என்கிற அடிப்படையில் படத்தை வெகுவாகவே ரசிச்சேன்.... குறிப்பாக அந்த சூப்பர் ஷார்ப் வசனங்கள்!
அதை விட ஷார்ப்பாக ப்ரசன்னா....... பார்வையாகட்டும், உடல்மொழியாகட்டும், நடிப்பாகட்டும் அந்தத் திமிரு... தெனாவெட்டு.... இரண்டும் ஒருங்கேறிக் கலந்திருக்கும் அசத்தல் பெர்ஃபார்மென்ஸ்!!! சேரன்  இதிலும் அதே சேரன்தான் ஆனால் இந்த "நந்தா" கதாபாத்திரம் அவருக்கு "டெய்லர் மேட்"... கிச் சென்று பொருந்துகிறார்! (அவருக்கு காஸ்ட்யூம்ஸும் "செம டெய்லர் மேட்"னு சொல்லியே ஆகணும்! டைட் ஜீன்ஸ், மேன்லியான அவுட்ஃபிட்ஸ்னு அந்த கண்ணாடி ஃப்ரேம் வரைக்கும் பாராட்டலாம்!) பணக்கார அப்பாவாக மீண்டும்  ஜெயப்ரகாஷ் யெஸ் அதே ஜெயப்ரகாஷ்தான்.... அதே டெம்ப்ளேட்டுக்கு இதுவும் இன்னொரு ரிப்பீட்டு ஆனாலும் ஓகே!! நாயகிகள்......
நிகிதா..... சேரனோட பணக்கார சாடிஸ்ட் வொய்ஃப்..... ஹரிப்ரியாதான் ஹீரோயின்.... சுமாவுக்கு குட்டியா ஒரு நல்ல காரெக்டர்!! ஹிட் அடிக்க வாய்ப்பில்லாட்டியும் பாத்திரத்தில் மூன்று பேரின்  ஃபிட்டிங் ஓகே!

சுமாரான க்ரூ (crew) என்று முதலில் சொல்லிவிட்டேன் இருந்தாலும் பத்மேஷின் ஒளிப்பதிவு சூப்பர் ரகம்தான்..... ஆனாலும் ஏனோ  ஃபர்ஸ்ட் ஹாஃபில் சிறகடித்த கேமரா கோணங்கள் செகண்ட் ஹாஃபில் அசரடிக்கவில்லை.... கொஞ்சம் லெட் டவுனாகத்தான் தெரிந்தது எனக்கு!...... எடிட்டிங் கணகச்சிதமான வெட்டல் அன்ட் ஒட்டல்தான் ஆனாலும் ஆண்டனி மற்றும் கிஷோர் ரேஞ்சுக்கு இல்லையோன்னு ஒரு ஃபீலிங் (கொஞ்சம் க்ளாஸிக்கல் ஸ்டைல் எடிட்டிங்!)..... ஷாஜனின் இசை ரொம்ப பாதிக்காததில் ஆச்சர்யமும் இல்லை அசௌகரியமும் இல்லை!! மௌனங்கள் டைல்யூட்டட் இசையால் நிரம்பியிருக்கின்றன படம் முழுக்க....... ஜஸ்ட் ஓகே! அவ்வளவுதான்........

மொத்தத்தில் படம் பார்த்து என்னுடைய ஃபீலிங்......

ஒரு ஸுப்பர் ஃபாஸ்ட் ட்ரெயின் மாதிரி முதல்ல‌ மெதுவா தடதடத்து..... நிதானமா ஸ்பீட் எடுத்து.... சும்மா அதிரடிச்சுப் பரபரக்குற ஃபர்ஸ்ட் ஹாஃப் திரைக்கதை...... ஸெகண்ட் ஹாஃபில் அடுத்தடுத்த ஸ்டேஷன்கள் நமக்குத் தெளிவா தெரிஞ்சுபோறதுனாலேயே...... மீனம்பாக்கம்....திரிசூலம்.... பல்லாவரம்.....குரோம்பேட்டை.......தாம்பரம்னு எலக்ட்ரிக் ட்ரெயின் எண்டிங் கொடுத்திருப்பது மட்டும் கொஞ்சம் ஏமாற்றம்! மற்றபடி வித்தியாசமான ரயில் ஸ்நேகங்களுக்கும் ஜன்னலோர ஆச்சர்யங்களுக்கும் பஞ்சமில்லை என்பது உண்மை!!

முரண் - Truely a "STRANGER" on a (local metro) TRAIN!!!! ;-)

அன்புடன்,

பிரபு எம்

.




11 comments:

  1. வணக்கமுங்க...:-))

    ReplyDelete
  2. /சூப்பர் வில்லன் ப்ரசன்னாவிடம் சிக்கிக்கொள்ளும் சாதா ஆளு (சோதா இல்ல பாஸ்!)//
    :-)))))) வெளங்கிருச்சு...:-)))))

    ReplyDelete
  3. /.பத்மேஷ் ஒளிப்பதிவு, அருண் துரைராஜ் எடிட்டிங், ஷாஜன் இசை என "Not Bad" க்ரூவுமாக (crew) ஒரு "முரணா"ன டீம்வொர்க்!!/சுமாரான க்ரூ (crew) என்று முதலில் சொல்லிவிட்டேன் இருந்தாலும் பத்மேஷின் ஒளிப்பதிவு சூப்பர் ரகம்தான்.....//

    ஆரம்பத்தில் not bad crew வை intro குடுத்துட்டு...அப்புறம் அதை விளக்கியது...பிரபு சார்:-))))...இங்கே நல்ல எடிட்டிங்..:-)))

    ReplyDelete
  4. //ஒரு பெர்ஃபெக்ட் மர்டருக்கு செம ஸ்கோப் வைத்து பூச்சியை வலைக்குள் இழுக்கும் சிலந்திபோலச் சேரனை ப்ரசன்னா இழுக்கும் காட்சிகள் ஸ்லோ பாய்சன்!//

    சின்ன சின்ன ஹைக்கூ எட்டி பார்க்குது விமர்சனத்தில்..நீங்க நல்லா கவிதை எழுதுவீங்க தானே...:-)))))))))))

    ReplyDelete
  5. //சேரன் இதிலும் அதே சேரன்தான் ஆனால் இந்த "நந்தா" கதாபாத்திரம் அவருக்கு "டெய்லர் மேட்"... கிச் சென்று பொருந்துகிறார்! (அவருக்கு காஸ்ட்யூம்ஸும் "செம டெய்லர் மேட்"னு சொல்லியே ஆகணும்! டைட் ஜீன்ஸ், மேன்லியான அவுட்ஃபிட்ஸ்னு அந்த கண்ணாடி ஃப்ரேம் வரைக்கும் பாராட்டலாம்!)//

    ஹீ..ஹீ...சரண்யா புருவத்தை தான் கவனிப்பீங்கனு நினைச்சேன்....சோதா..சை..சாதா சேரனையும் இம்புட்டு கவனிப்பீங்கனு நினைக்கல...:-)))))))

    ReplyDelete
  6. /ஷாஜனின் இசை ரொம்ப பாதிக்காததில் ஆச்சர்யமும் இல்லை அசௌகரியமும் இல்லை!! //

    செம மொக்கையா இருந்தது இசை..பட்...இவளவு டீஜென்ட் ஆ சொன்னது சூப்பர் ரூ...:))))

    ReplyDelete
  7. /ஒரு ஸுப்பர் ஃபாஸ்ட் ட்ரெயின் மாதிரி முதல்ல‌ மெதுவா தடதடத்து..... நிதானமா ஸ்பீட் எடுத்து.... சும்மா அதிரடிச்சுப் பரபரக்குற ஃபர்ஸ்ட் ஹாஃப் திரைக்கதை...... ஸெகண்ட் ஹாஃபில் அடுத்தடுத்த ஸ்டேஷன்கள் நமக்குத் தெளிவா தெரிஞ்சுபோறதுனாலேயே...... மீனம்பாக்கம்....திரிசூலம்.... பல்லாவரம்.....குரோம்பேட்டை.......தாம்பரம்னு எலக்ட்ரிக் ட்ரெயின் எண்டிங் கொடுத்திருப்பது மட்டும் கொஞ்சம் ஏமாற்றம்! மற்றபடி வித்தியாசமான ரயில் ஸ்நேகங்களுக்கும் ஜன்னலோர ஆச்சர்யங்களுக்கும் பஞ்சமில்லை என்பது உண்மை!!//

    சூப்பர் ரூ...ரசிகன் யா நீ ...# சாலமன் பாப்பையா..

    ReplyDelete
  8. //முரண் - Truely a "STRANGER" on a (local metro) TRAIN!!!! ;-)//

    :-))))))

    ReplyDelete
  9. படம் பார்த்தேன் .. எனக்கு மிகவும் பிடித்துள்ளது

    ReplyDelete
  10. கிளைமாக்ஸ் எதிபார்த்ததுதான்

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)