Wednesday, May 18, 2011

வானம் [U/A] (2011)


நல்ல படம்!

தப்பு, தவறு, குற்றம், பாவம்.... என்று சைஸ் வாரியாக ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் தவறிப்போவது ஜஸ்ட் ஒரு நொடி நிகழ்வுதான் ...... அதையே அவன் உணர்ந்து திருந்துவதும்கூட ஏதோவொரு நொடியில்தான்!! அந்த நொடிப் பொழுது தடுமாற்றங்களையும் உச்சக் கொதிநிலையில் உழலும் மனப்போராட்டத்தையும்  நிகழ்கால‌ தமிழ்சினிமாவின் சந்தான சேட்டைகளுடனும் செம குத்துப்பாட்டு ஆட்டங்களுடனும் பரபர வேகத்தில் அழுத்தம் குறையாமல் திருத்தமாகப் பதிந்து வென்றிருக்கிறார் தெலுங்கு இயக்குனர் க்ரிஷ்!

படு சிரமமான திரைக்கதை.... ஐந்து வெவ்வேறு மனிதர்கள்..... ஒருவருக்கொருவர் சம்பந்தமேயில்லாத அந்த ஐந்து பாத்திரங்களும் அவரவர் பாதையில் பயணிக்க அவர்களைச் சுற்றிச் சுழலும் பிரதான கதையையும் திரையில் அவர்களுடன் க்ளைமேக்ஸ் வரை நகர்த்தி வந்திருப்பதே ஒருகட்டத்தில் பிரமிப்பாகத் தோன்றும்!

"சினிமாவை சினிமாவாகப் பார்க்கவேண்டும்!" என்று ஒரு பொதுவான பரிந்துரை அடிக்கடி மொழியப்படுவது வழக்கம் கமர்ஷியல் சினிமா மார்க்கெட்டில்! ஆனால் இந்தப் படத்தை ஒரு சினிமாவாகப் பார்க்காமல் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு ஜன்னலோர வேடிக்கையாகப் பார்த்தல் நலம்!  "Sometimes Truth is stranger than Fiction" என்று சொல்வதைப்போல இந்த ஃபிக்ஷனை ஒரு ஸ்ட்ரேஞ்ச் ட்ரூத்தாகப் பார்த்தால் கதாபாத்திரங்களைத் தாண்டிய இந்த ஐந்து மனிதர்களின் போராட்டங்கள் மற்றும் தடுமாற்றங்களுடன் நம்மையும் பொருத்திப்பார்த்திக்கொள்ளும் அனுபவம் கிடைக்கலாம்!

கேபிள் ராஜாவாக சிம்பு....  தன்னை ஒரு ஹை-க்ளாஸ் வாலிபனாகக் காட்டிக்கொண்டு டிப்பிக்கல் பணக்காரப்பெண் ஜாஸ்மினை .... ஹாய்ய்ய்ய்ய் பேப்ப்பி.... என்று இங்க்லீஷில் குழைந்துருகிப் பொய்யாய் சொல்லி உண்மையாய் (?) காதலிக்கும் லோ-க்ளாஸ் குப்பத்துப் பார்ட்டி!

ராக்ஸ்டார் கனவுடன் கலரிங் செய்த தலையில் ஸ்பைக்கும் கையில் கிடாருமாய் வலம்வரும் "டோன் கேர் யூத்" பரத்‍!

ஒரு கண்ணில் செயற்கையான‌‌ காமத்தையும் மறுகண்ணில் இயல்பாகக் கனவுகளையும் சுமந்து வலைய வரும் பெண்ணாக, தேகம் சார்ந்த தன் தொழிலையே சொந்தமாக விரிவாகச் செய்து அதிக‌ பணம் சம்பாதிக்க முனையும், அனுஷ்கா......

உப்பு விளையும் தூத்துக்குடியில் வட்டிக்கடனுக்குப் பணயமாகிவிட்டத் தன் மகனை மீட்டுப் படிக்கவைக்க‌ப் பணத்துக்காகத் தன் கிட்னியை விற்கப் போராடும் படிப்பறிவில்லாத ஏழை விதவை சரண்யா....

தன்‌ மதத்தைச் சார்ந்திருப்பதாலேயே ஒரு தீவிரவாதியாய்ப் பார்க்கப்பட்டு படு இன்னல்களுக்கு ஆளாகும் ஒரு நல்ல மனிதனாக பிரகாஷ்ராஜ்!

இப்படிப் படத்தின் ஐந்து கதாபாத்திரங்களும் படு வித்தியாசமானவை!

"சராசரி மனிதர்கள்" என்னும் வரையறைக்குள் இவர்களைப் பொருத்திவிட முடிந்தாலும் அந்தந்த‌ப் பிரிவுகளில் வித்தியாசப்பட்டு நிற்பவர்களாய் முக்கியப் பாத்திரங்களை அமைத்திருப்பது, சற்றே பழமையான கருத்துக்களை பேசப்போகும் கதையாதலால் , புத்திசாலித்தனமாகக்  கதாப்பாத்திரங்களில் இயக்குனர்  தெளித்திருக்கும் புதுமைச் சா(துர்)யம்!!

கடைசி காட்சியில் சிலரால் நிகழ்த்தப்படும் ஓர் அசாதாரண சூழலில் இந்த ஐந்து கதாபாத்திரங்களும் சந்த்தித்துக்கொண்டாலும் அப்போதும் அவர்கள் ஒருவருக்கொருவர் அந்நியர்களாகவே இருப்பது ரொம்பப் புதுசு!

அதுவரையில் ஆசை, பேராசை, பயம் போன்ற உணர்வுகளுக்கு சாதாரண தனி மனித மனங்களின் தடுமாற்றங்கள் நிச்சியம் இயல்பாய் ரீச் ஆகிவிடும்..... ஆனால் அதே மனம் ஒரு விளிம்பு நிலையில் காணும் மாற்றங்கள்தான் "வானம்" சொல்ல வரும் விஷயம்!  ஸோ உச்சநிலையில் சுயந‌ல‌ மனங்கள் காணும்  தலைகீழ் மாற்றத்தையும் இயல்பாகவே ஏற்றுக்கொள்ள முடிபவர்களுக்கு  மட்டுமே படம் ஓர் அழுத்தமான அனுபவமாக இருக்கும் ......  மாறாக தடுமாற்றத்தை இயல்பாக ஏற்று  மாற்றத்தை ஜஸ்ட் சினிமாவாகப் பார்ப்பவர்களுக்கும் சந்தானத்தின் அதகளக் காமெடியும், யுவனின் ஹை-வோல்டேஜ் இசையும், அனுஷ்காவின் காந்தப் பார்வைகளும் டிக்கெட் செலவை ஈடுகட்டிக்கொடுக்கும்! ஸோ எப்படிப் பார்த்தாலும் படம் ஓகே தான்!

ஐந்து முக்கியப் பாத்திரங்களில் முதலில் பாராட்டப்பட வேண்டியவர் அனுஷ்கா! - வெல்... இந்தப் படத்தில் தான் ஒரு கதாநாயகி அல்ல ஜஸ்ட் ஒரு கதாபாத்திரமே என்கிற‌ சரியான புரிதலுக்கே கை தட்டவேண்டும்.....! தமிழ்சினிமாவின் தேவதை வம்சத்து லூசுப்பெண் அல்ல அனுஷ்கா இந்தப் படத்தில்..... சவாலான விலைமகள் கதாபாத்திரம் என்பதால் literal beautification-ஐ முற்றிலும் தவிர்த்து உடல்வாகை எக்ஸ்போஸ் செய்யும்விதமாகவே பார்வை, ஒப்பனை, உடல்மொழி என்று தைரியமாகத் தன்னை மறைத்துத் தன் நடிப்பை முன்னிறுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்! சிம்புவைப் பிடிக்கும் பிடிக்காது என்பதைத் தள்ளிவைத்துவிட்டுப் பார்த்தால் நல்ல உழைப்பு தெரியும்..... படத்தை நகர்த்தும் "ஆங்கர்" ரோல் இவருக்குத்தான் (சொல்லணுமா?!!) குறையொன்றுமில்லை..... படம்முழுக்க உயிர்ப்புடன் வெளிப்படுத்தியிருக்கும் அலட்சியமும் பதற்றமும் நிறைந்த உடல்மொழி அருமை...... ஆனாலும் மற்றப் படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் பெரிய வித்தியாசம் காட்டாமல் "ஹீரோ" கெத்-திலேயே வலைய வருவது லெட்-டவுன்! ‌ ‌பரத் பற்றிச் சொன்னால்  பரத் - வேகா சீக்வென்ஸ் திரையில் வரும்போதெல்லாம் தியேட்டரில் வரப்போகும் அடுத்தப் படத்துக்கான‌ "டிரெயிலர்" மாதிரிதான் தோன்றுகிறது  காரணம் சிம்பு போர்ஷனுக்குத் தரப்பட்ட அதிகமான வெயிட்டேஜ்! மொத்தத்தில் பரத் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை.....  பிரகாஷ்ராஜ் நன்றாக நடிப்பது சச்சின் சதமடிப்பதைப் போன்று ஒரு சாதாரண (!) நிகழ்வுதான் ஆனால் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜின் நடிப்பு ஓவர்டோஸாகிப் போயிருப்பது சற்றும் எதிர்பார்த்திராத‌ ஏமாற்றம்! அதேபோலத்தான் அற்புதமான நடிகையான  சரண்யாவும்!  ஓர் ஏழைத் தாயாகத் தன் கிட்னியை விற்கவந்து மிரட்சியில் விழிப்பதும், ஆற்றாமையில் உழல்வதுமாக நடிப்பில் வழக்கம்போல் ஸ்கோர் செய்தாலும் ப்யூட்டி பார்லர் ரிட்டர்ன் போல் திருத்தமாக் ட்ரிம் செய்த‌ புருவங்கள் க்ளோசப் பில் கதாபாத்திரத்தையே காலிசெய்துவிட்டபின் என்ன நடித்து என்ன ப்ரயோஜனம்?!

சந்தானத்துக்கு இது இன்னொரு சிக்ஸர்!  இதுபோன்ற திரைக்கதைகளுக்கு சந்தானத்தின் காமெடிதான் Catalyst!!
தொய்வடைய விடாமல் டைம் பார்த்து டைமிங் சரவெடி கொளுத்திப்போடுகிறார்!! இவர் புண்ணியத்தில் இனிமேல் தமிழ்நாட்டில் எவனும்  "என் பைக் எனக்கு வொய்ஃப் மாதிரி"ன்னு சொல்லவே முடியாது..... :-))))) ஏன்னு நீங்களே பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க :-))

க்ரிஷ்ஷிற்கு ஒரு காஸ்ட்லி வெல்கம் பொக்கே! "வானம்" படத்தின் Crew - வை ஒரு Dream Team-ஆகச் சொல்லலாம்......
நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு...... ஆண்டனியின் படத்தொகுப்பு...... யுவன் at his best......... சற்றும் குறைவில்லாத க்ரிஷ்ஷின் திரைக்கதை மற்றும் இயக்கம்.... என  WOW டீம்.!!! யாரையும் தனித்துப் பாராட்டவே முடியாது மொத்தமாக ஒரு ட்ராஃபியைக் கொடுத்துவிடுவதுதான் உத்தமம்..... இதனை ஹாஸ்பிட்டலில் நடக்கும் க்ளைமேக்ஸ் ஸீக்வென்ஸின் மேக்கிங்கின் மிரட்டலைக் கவனித்தவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள்! என்னைப் பொறுத்தவரை அந்த அவுட்புட்டிற்கு யாருக்கும் தனிப்பட்ட க்ரெடிட்டைக் கொடுத்துவிடமுடியாது! ஞானகிரியின் வசனங்களுக்கு ஒரு ஆரஞ்ச் கேப் கொடுக்குமளவு ஸ்கோர் செய்திருக்கிறார்!

Old wine in a New bottle - என்று சொல்வது கச்சிதமாகப் பொருந்தும் இந்தப் படத்துக்கு...... Old wine-ன் "டேஸ்ட்" மக்களுக்குப் புதுசாகவும் தெரியலாம்!!!! :-)

ஒரு நல்ல எக்ஸ்பெரிமெண்ட் - Tested OK!! :-)

வானம் - நல்ல அனுபவம்!

அன்புடன்,

பிரபு எம்

16 comments:

  1. Chimbu and Bharath : mmmmmm....... mmmmmmm......

    ReplyDelete
  2. முதலில் நம்ம ஊரு மல்லிகை கொத்தை பிடித்து கொள்ளவும்...சத்தமே இல்லாமல் 101 வது பதிவுக்கு...வாழ்த்துக்கள் பிரபு...தொடர்ந்து தரமான...பதிவுகளாய் கொடுக்கவும்# இப்படிக்கு ரசிகை :)))

    ReplyDelete
  3. தாமதமான என் பின்னூட்டங்களுக்கு நோ மன்னிப்ப்பு..:)))

    ReplyDelete
  4. வானம் விமர்சனம் படிச்சேன்..அட...இது வரை நான் படிச்சதில் முற்றிலும் வேறு பட்ட கோணம்...ம்ம்....

    ReplyDelete
  5. சில வரிகள் எல்லாம் படிக்கும்போது..பிரபு...அளவுக்கு அதிகமாய் வியக்கிறேன் உன் கண்ணோட்டம் மற்றும் உன் observation ஐ ...ம்ம் ..கோடம்பாக்கம் ஒரு அற்புதமான ,ரசனையான கலைஞன் ஐ மிஸ் பண்ணிட்டு இருக்குனு மட்டும் தோணுது...ரியல்லி சீரியஸ் பிரபு...

    ReplyDelete
  6. சரண்யா புருவத்தை எத்தனை பேர் கவனிச்சிருக்க முடியும்...அந்த கதாபாத்திரத்தின் ஒப்பனை வரை நீ கவனிக்கிற..கலையை ரசிப்பவனுக்கு மட்டும் தான் இந்த உற்று நோக்கிய பார்வை இருக்கும்..ம்ம்..கிரேட் பிரபு...

    ReplyDelete
  7. தெலுங்கு வேதம் மாதிரி இல்லை னு கூட நான் படிச்சேன்...ஆனால் நீ க்ரிஷ் ஐ பாராட்டிய விதம் பார்த்தால்...something ..there is good...

    ReplyDelete
  8. /ஒரு கண்ணில் செயற்கையான‌‌ காமத்தையும் மறுகண்ணில் இயல்பாகக் கனவுகளையும் சுமந்து வலைய வரும் பெண்ணாக, தேகம் சார்ந்த தன் தொழிலையே சொந்தமாக விரிவாகச் செய்து அதிக‌ பணம் சம்பாதிக்க முனையும், அனுஷ்கா......//

    அப்புறம் அனுஷ்கா பற்றிய உன் வரிகள்..வாவ்..இவ்வளவு கண்ணியமாய் எழுத முடிஞ்ச உனக்கு பாராட்டுக்கள் பிரபு...

    ReplyDelete
  9. உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.
    Share

    ReplyDelete
  10. எனக்கும் இந்த படம் மிக பிடித்தது.

    ReplyDelete
  11. சினிமாட்டோகிராபி நல்லாயில்லை;கேமரா எங்கடா வாங்கினீங்க? திரைக்கதை எவண்டா எழுதுனது? எடிட்டிங் செம மொக்கை; எல்லாத்துக்கும் மேல கடைசி வரி பஞ்ச் (Eg:வானம் - பறக்குது சிம்பு மானம்) - இப்படியெல்லாம் எழுதாதனால உங்களை நல்ல சினிமா விமர்சகரா நாங்க ஏத்துக்க மாட்டோம்.

    அடுத்த தடவை இதெல்லாம் சரி பண்ணிரனும், புரிஞ்சுதா?

    ReplyDelete
  12. விமர்சனம் எழுதும் கலையில் நீங்கள் வல்லவர் என்பது புலனாகிறது. கேபிள் சங்கருக்கு பிறகு உங்கள் விமர்சனங்களை படிக்கும் எண்ணம் தோன்றி உள்ளது. வாழ்த்துகள் பிரபு.

    ReplyDelete
  13. நேர்த்தியான எழுத்து நடையுடன் விமர்சனம் சூப்பர் :)

    ReplyDelete
  14. நேற்றுதான் படம் பார்த்தேன்
    தங்கள் விமர்சனம் மிகச் சரியாக
    தெளிவாக உள்ளது
    தொடர்ந்து விமர்சனப் பதிவு செய்ய
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. Hi ,Thambi hope you are keeping fine .(did'nt see any of your recent posts )Are you busy with studies.if so keep it up .take care.

    ReplyDelete
  16. hi da. what happen? No recent posts. Are you busy with work?

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)