Tuesday, November 01, 2011

7-ஆம் அறிவு [U] (2011)




பௌத்தப் போர்வையில் தமிழினம் மீதான‌ இனவெறி வடு மறையாத சமகாலத்தில், புத்தன் வழி பௌத்தத்தை போதித்த குருமார் வரிசையிலேயே ஒரு பல்லவ ப்ராஃபட் (prophet) போதிதருமன் - ஒரு தமிழன்!!
ஹிஸ்ட்ரியின் இந்த‌ மிஸ்ட்ரியான‌ டேக்லைனில் (Tagline) கஜினிக்கு அடுத்த தன் கமர்ஷியல் ஃப்ளிக்கிற்கு ஒன்லைன் பிடித்திருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ் தன் ஆறாம் அறிவைக் கசக்கி! ......கஜினி கரம் மசாலா என்றால் ஏழாம் அறிவோ தமிழனின் ஜீன்களின் ஆழம்வரைத் தோண்டும் ஒரு டீ-ஆக்ஸி ரிபோ ந்யூக்ளிக் மசாலா!!!

"போதிதருமன்".......

வில் - அம்பு காலத்தில் வீரதீரம் புரிந்த இந்த விஸ்வரூபத் தமிழனை இன்று விக்கிபீடியாவில் விரட்டி விரட்டித் தேடுகின்றது தமிழினம்!  ஷாலின் டெம்பிளுக்கு அடிக்கல் நாட்டிய இந்த ஜீனியஸை ஜீன்வழியாய்த் திரும்பவர‌ வைக்க முயற்சிக்கும் ஜெனட்டிக் எஞ்சினியர் ஷ்ருதிஹாசன்.... பல்லவபூமி காஞ்சிபுரத்தில் போதிதருமனின் வம்சாவழியில் ஒரு சர்க்கஸ் கலைஞன் சூர்யா! சூர்யாவின் டி.என்.ஏ போதிதருமனின் டி.என்.ஏ வுடன் பொருந்திப்போக போதிதருமனின் அற்புதத் திறமைகளையெல்லாம் சர்க்கஸ் பார்ட்டி அரவிந்தனின்(சூர்யா) மரபணுவின் வழி உயிர்த்தெழ‌வைக்கும்  ஆராய்ச்சி என்ற கான்செப்டில் போகும் கதையில் இந்தியா மீது சீனா தொடுக்கும் பயோ வார்..... ஹிப்னாட்டிக் டெரர் வில்லன் ஜானி... சீனாவில பரவிய ஆறாம் நூற்றாண்டு கொடுமநோய்.... என்று கலந்துகட்டிக் கதை சொல்லியிருக்கிறார்கள் தமிழா... தமிழா.... என்று  உசுப்பேற்றி!!..பத்து நிமிடத்துக்கு ஒருமுறை படத்தில் இல்லாத சந்தானத்தின் வாய்ஸில் "தமிழேன்டா!!" என்று கேட்டுக்கொண்டே இருக்கிறது மூன்றாவது காதில்!!!

முன்பெல்லாம் தியேட்டரில் படம் துவங்குவதற்குமுன்பு பத்து நிமிடம் ஃபில்ம் டிவிஷனின் நியூஸ் ரீல் ஓட்டுவார்கள்..... இப்போதெல்லாம் அப்படியில்லை என்பதால் படத்திலேயே ஒரு குட்டி டாகுமென்டரி வைத்திருக்கிறார் போதிதருமனைப் பற்றி..... பேக்ரவுண்ட் வாய்ஸ் ஓவரில் போதிதருமன் பற்றிக் கற்பனை கலந்த இருபது நிமிட செய்திப்படம் சுவாரஸ்யமான தகவல்கள் சொன்னாலும் இன்னும் படம் போடலையோ என்று யோசிக்கவைப்பது முருகதாஸுக்குத் தெரியாததல்ல!!
ஆனால் ஆடி அசைந்து அசமந்தமாக ஆரம்பிக்கும் நிகழ்காலக் கதையின் ஃபர்ஸ்ட் ஹாஃபில் வெச்சான் பாரு மூணு பாட்டு...... உலகத் தமிழினம் மன்னிக்காது சார் உங்களை! "ஓ ரிங்கா ரிங்கா..." பாடலில் ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவு சுத்தமாக‌ மிஸ்ஸிங் என்றால் அதைவிடப் பரிதாபம் ஆண்டணியின் எடிட்டிங்..... ரோட்டில் எக்கச்சக்க பேர் ஆடுகிறார்கள் நடுவில் சூர்யாவும் தெரிகிறார்.... நடுநடுவே பாம்பே சர்க்கஸ் என்று இரண்டு ஃப்ரேம்கள்.... யார் இவனுங்க?? எதுக்கு ஆடுறானுங்க??....ம்ஹும்......பாட்டுக்குத் தியேட்டரில் தூங்கிவிழிப்பவர்கள் எல்லாம்  "என்னது போதிதருமனக் கொன்னுட்டாய்ங்களா?!!" என்று ஷாக் ஆகும் அளவுக்கு இம்சையான மேக்கிங் அந்தப் பாடல்..... அதைவிட மோசம் "யம்மா.... யம்மா...." பாடலின் இடைச்சொருகல்..... என்னதான் இரண்டாம் பாதியில் படத்தைப் பார்த்துப் பார்த்து செதுக்கியிருந்தாலும் ஈசான மூலையில் பீரோவை வைத்தமாதிரி தப்புத் தப்பான  இடங்களில் பாடல்களைப் வைத்த பாவத்துக்கு வாஸ்து பகவானின் சாபத்துக்கு ஆளாகித்தான் தீரவேண்டும் உதயநிதியின் இன்வெஸ்ட்மெண்ட்!!

செகண்ட் ஹாஃப் ஓகேதான்! ட்விஸ்ட் அன்ட் டர்ன் அதிகம் இல்லாத த்ரில்லர் டைப் திரைக்கதையின் இன்றியமையாத இன்க்ரீடியண்ட்டான "வேகத்"திற்கு இரண்டாம் பாதியில் இவ்வளவு ஸ்கோப் இருக்கையில் முதல்பாதியில் கியரைப் போட்டு ஸ்பீடைத் தூக்காமல் நியூட்ரலில் போட்டு ஆட்கள் இறங்கித் தள்ளும் அளவுக்கு ஆமைவேக ஸீன்களை வைத்திருப்பது தற்கொலை முயற்சி என்று சொல்வதா அல்லது கொலைமுயற்சி என்று சொல்வதா என்று தெரியவில்லை!! ஃபர்ஸ்ட் ஹாப் பிரம்மாண்ட லெட்-டவுன் படத்துக்கு!

தடதடவென அனல்பறக்கும் செகண்ட் ஹாஃபில் தமிழ்த்திரை கண்டிராத சூப்பர் டெக்னோ வில்லன் ஜானியின் கைங்கர்யத்தில் பீட்டர் ஹெயின் அன்ட் கோ அதகளப்படுத்தும் சில உண்மையிலேயே வித்தியாசமான சண்டைக் காட்சிகளாலும்...... புத்திசாலித்தனமான மூவ்களாலும்..... வீட்டுக்குப்போயிடலாமா? என்று யோசிக்கும் ரசிகனை அழகாகவே சீட்டில் பொருத்துகிறார்கள்.... (செகண்ட் ஹாஃபில் வரும் "எல்லேலமா.." பாடலும் இம்சை ரகமே!)

செகண்ட் ஹாஃப் நல்லா இருக்கு..... கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் ஸ்கோர் ஓகே ரகத்தில் இருந்தே தீரும் என்பதும் உண்மை.... நிச்சியமாக......

போதிதருமன் அண்ட் சர்க்கஸ் கலைஞனாக நம்ம நார்மல் சூர்யா அல்ல... டைரக்டர்'ஸ் டார்லிங்கான இவர் சூஊஊஊஊஊர்யா!!!
எய்ட்பேக் உடம்பும் கண கச்சித குங்ஃபூ அசைவுமாக அபார ஹோம்வொர்க்.... போதிதருமனாக சூர்யாவை நடிக்கவைத்துவிடாமல் ஜஸ்ட் ஒரு மோனோ-ஆக்டிங் ஜாடையில் சூர்யாவின் கேன்வாஸில் போதிதருமனை அவதனிக்க வைத்திருக்கும் சாமத்தர்யத்துக்கு இயக்குனருக்கும் மேக்கப் உமன் பானுவுக்கும் அதிமுக்கியமாக ரவி கே சந்திரனுக்கும் க்ளாப்ஸ்!!
சர்க்கஸ் கலைஞன் அரவிந்தனாக மீண்டும் சூர்யா ஹோம் வொர்க்கில் கலக்கி எடுத்திருந்தாலும் ரியாக்ஷனில் கொஞ்சம் மிஸ் செய்திருப்பது சின்னதொரு ஏமாற்றமே..... உதாரணமாக போதிதருமனைப் பற்றி ஷ்ருதிஹாசன் சூர்யாவுக்கு சொல்லும் இடத்தில் சூர்யா தன் முகத்தில் காட்டும் ஆச்சர்ய ரசம் ஏற்கெனவே தெரிந்த விஷயத்தை தெரியாததுபோல நடிப்பதுபோலத்தான் தெரியும் கூர்ந்து கவனித்தால்..... அதே மாதிரிதான் அவ்வப்போது "தமிழன்" என்கிற ரீதியில் டென்ஷனாகி உதிர்க்கும் வசனங்களின் டெலிவரியும் அதுவரையிலான கேரக்டர் ஸ்டேட்மென்டை விட்டுத் தள்ளிப் போய்விடும் ஃபீல்..... ஏனோ நெருடியது இந்தப் படத்தில் சூர்யாவின் நவரசத்தில் தெரிந்த செயற்கை! வெரி ஸாரி சூர்யா..... அடுத்தப் படத்தில் நிஜமான "மாற்றானாக" சூர்யா வரவேண்டும் என்பதே எதிர்பார்ப்பு..... அதே வேளையில் "தமிழ்க் குறிப்புகளை" ஸோ-கால்டு விஞ்ஞானிகள் ஏளனம் செய்யும் காட்சியில் ஷ்ருதிஹாசன் கொதித்துப்பேசும் போர்ஷனை யதார்த்தமாக ஹேன்டில் செய்திருப்பார் ஷ்ருதி .... ஓவரால் க்ளீன் ஆக்டிங் பை ஷ்ருதிஹாசன் என சொல்லலாம்.......லவ் எபிசோடுகளில்தான் சூர்யா ஷ்ருதிஹாசனை ஏதோ சித்தப்பா பொண்ணைப் பார்ப்பதுபோல் கண்களில் பாசத்தைக் கொட்டி காலிசெய்துவிட்டதை ஊரே சொல்லிவிட்டதே!!

ஜானி....... ஹாலிவுட் இவர் தலையில் குல்லாவை மாட்டி ஸ்பைடர் மேனாக கட்டடம் விட்டுக் கட்டடம் தாவவிட்டுவிட்டாலும் நம் கோலிவுட் தந்திருக்கும் இந்த "சூப்பர் மேன்" அவதாரம் நிச்சியமாக இவர் கரியரில் மகுடமாக இருக்கும்....  யப்பா.. யப்பா.. என்னா ஷார்ப்னஸ்.... என்னா ஃபைட்டிங்...... படத்தின் ரியல் ஹீரோ இந்த சூப்பர் வில்லன்தான்...... ஸ்க்ரீனில் இவர் தோன்றும்போதெல்லாம் அடிவயிற்றில் உதறல்!!

ரவி கே சந்திரன் + ஆண்டனி + ஹாரிஸ் ஜெயராஜ் + ராஜீவன்..... என காஸ்ட்லி க்ரூ....... இவர்களின் பங்களிப்பு படத்தின் ஓட்டத்தோடு கரைந்து கலந்திருப்பதால் தனித்தனியே இவர்களின் "ஸ்பரிஸத்"தை உணர முடியாததுதான் நிஜம்... மற்றபடி உழைப்பை நிராகரிக்கவே முடியாது! ரவி கே சந்திரன் இந்தியாவின் நம்பர் ஒன் ஒளிப்பதிவாளர் என்றால் அது மிகையாகாது...... நான் கவனித்தவரையில் இந்தப் படத்தில் அலாதியான அவுட்டோர் காட்சிகளின் பேக்ட்ராப்புகள்(ப்ரொடக்ஷன் டிசைனிங்) இன்னும் அதிகமாக மிளிர்ந்திருக்கும் பட்சத்தில் ரவி அவர்களின் கேமராவும் தேர்ந்த கலர்களும் எகிறிப்போன நம் எதிர்பார்ப்புளுக்கு ஈடுகொடுத்து ஜொலித்திருக்கும் என நினைக்கிறேன்....  ஆண்டனியின் படக்கோர்வையில்... க்ளைமேக்ஸ் நெருங்கும் சமயங்களில் படத்தின் டோனுக்கு ஏற்ப வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் மிக அழகாக வடிவமைக்கப் பட்ட ஸீன்களுக்காகவே இவருக்கும் இயக்குனருக்கும் கூட்டாக ஒரு பூங்கொத்து தரலாம்!! ஆனாலும் ஆண்டனியின் எடிட்டிங்கில் அவரது பிரம்மாண்டமான ப்ராண்ட் மிஸ்ஸிங்தான்..... மொத்தமாகக் காட்சிகளின் தொகுப்பாக உருப்போட்டு யோசித்துப் பார்த்தால் அது புரியும்!  பின்னணி இசையில் நன்றாக ஸ்கோர் செய்திரிக்கிறார் ஹாரிஸ்.... குறிப்பாக திரையில் ஜானி தோன்றும்போது சில்லிட வைக்கும் அந்த ஒரு பீஸ் சூப்பர்ப்!!.... பாடல்களைப் பொறுத்தவரை ஆடியோ வெளியானபோது கிடைத்த அதே மிக்ஸட் ரியாக்ஷன்தான் இறுதிவரை  மிஞ்சும் ஏனெனில் பாடல்களைப் படமாக்கியவிதம் சிறிதும் காப்பாற்றப்போவதில்லை இசையை!
பெர்சனலாக எனக்கு மூன்று பாடல்கள் பிடித்திருந்தது..... (சத்தியமாக கேட்பதற்கு மட்டும் தான்!)

"உலகத் தமிழர்களின் வெற்றி" என்று விளம்பரப்படுத்துகிறார்கள்...... "எந்திரனின்" சாதனையை (?) முறியடித்துவிட்டதாகத் தயாரிப்பாளர் டிவிட்டரில் சொல்லியிருக்கிறார்..... "தமிழன் இனி திமிருடன் நடக்க‌வேண்டும்" என்று இயக்குனர் சொல்கிறார்...... "தமிழேன்டா!" டைப் வசனங்கள் படத்தில் வரும்பொழுதெல்லாம் தியேட்டரில் கைத்தட்டல் கேட்கிறது...... ஹ்ம்ம்ம்ம்ம்.......படத்தின் வெற்றி "உலகத் தமிழர்களின் வெற்றி"யாகவே இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் இந்த வெற்றியினாலும் கல்லா கட்டப்போவது என்னவோ மீண்டும் "அதே"  குடும்பத்துக்குத்தானே!!  இதுவும்தான் தமிழனின் தலையெழுத்தோ!!!

ஆயிரத்து ஐநூறு வருஷத்துக்கு முன்பு வாழ்ந்தவரோட குணநலன்களே டி.என்.ஏ வில் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்போது சொந்தத் தாத்தாவுடைய டி.என்.ஏ பேரனின் ஜீனில் எவ்வளவு வீரியமாக வேலைசெய்யும்........ ஹ்ம்ம்ம்..... பிஸினஸ் பாஸ் பிஸினஸ்!!!

மொத்தத்தில் நல்ல (கமர்ஷியல்) படம்!

போதி தருமனின் விக்கிப்பீடியா பேஜ் வ்யூ கூடியிருப்பது முருகதாஸிற்கு  ரியல் ரீச்....
ஓர் இயக்குனராகத் தமிழில் இப்படியொரு முயற்சிக்கு ஏ ஆர் முருகதாஸ் பாராட்டுக்குரியவர்தான்.....
ரெட் ஜயண்ட் மூவீஸ்-க்கு இது ஒரு ஜயண்ட் சைஸ் ப்ராஜெக்ட் என்பதிலும் ஐயமில்லை......
சூர்யாவுக்கு இது தொடர்ந்து இன்னொரு வெற்றியாக அமையலாம ரசிகர்களின் ஆதரவைப் பொறுத்து......

எ கமர்ஷியல் மூவி பை எ "தமிழன்"!!!!!

முதல் பாராவில் சொன்னபடி....

7-ஆம் அறிவு - a De-oxyribo Nucleic Acid MASALA!!!


அன்புடன்,

பிரபு எம்

.

10 comments:

  1. நல்ல படம் ..

    ReplyDelete
  2. Intersting...&Cute
    ------------------
    1.//ஏழாம் அறிவோ தமிழனின் ஜீன்களின் ஆழம்வரைத் தோண்டும் ஒரு டீ-ஆக்ஸி ரிபோ ந்யூக்ளிக் மசாலா!!!//

    2.//.பத்து நிமிடத்துக்கு ஒருமுறை படத்தில் இல்லாத சந்தானத்தின் வாய்ஸில் "தமிழேன்டா!!" என்று கேட்டுக்கொண்டே இருக்கிறது மூன்றாவது காதில்!!!//

    3.//ஆனால் ஆடி அசைந்து அசமந்தமாக ஆரம்பிக்கும் நிகழ்காலக் கதையின் ஃபர்ஸ்ட் ஹாஃபில் வெச்சான் பாரு மூணு பாட்டு...... உலகத் தமிழினம் மன்னிக்காது சார் உங்களை! //:-))))))

    4.//என்னதான் இரண்டாம் பாதியில் படத்தைப் பார்த்துப் பார்த்து செதுக்கியிருந்தாலும் ஈசான மூலையில் பீரோவை வைத்தமாதிரி தப்புத் தப்பான இடங்களில் பாடல்களைப் வைத்த பாவத்துக்கு வாஸ்து பகவானின் சாபத்துக்கு ஆளாகித்தான் தீரவேண்டும் உதயநிதியின் இன்வெஸ்ட்மெண்ட்!!//Cute...:-))

    5.//லவ் எபிசோடுகளில்தான் சூர்யா ஷ்ருதிஹாசனை ஏதோ சித்தப்பா பொண்ணைப் பார்ப்பதுபோல் கண்களில் பாசத்தைக் கொட்டி காலிசெய்துவிட்டதை ஊரே சொல்லிவிட்டதே!!//:-))))) sema...sema..;-)

    6.//படத்தின் வெற்றி "உலகத் தமிழர்களின் வெற்றி"யாகவே இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் இந்த வெற்றியினாலும் கல்லா கட்டப்போவது என்னவோ மீண்டும் "அதே" குடும்பத்துக்குத்தானே!! இதுவும்தான் தமிழனின் தலையெழுத்தோ!!!//Nach...Nach..;-))))))

    7.//ஆயிரத்து ஐநூறு வருஷத்துக்கு முன்பு வாழ்ந்தவரோட குணநலன்களே டி.என்.ஏ வில் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்போது சொந்தத் தாத்தாவுடைய டி.என்.ஏ பேரனின் ஜீனில் எவ்வளவு வீரியமாக வேலைசெய்யும்........ ஹ்ம்ம்ம்..... பிஸினஸ் பாஸ் பிஸினஸ்!!!//:-)))))) Superrrrrrrrrrrrrrru...

    ReplyDelete
  3. 7ஆம் அறிவு தமிழர் பெருமை...
    படம் பார்த்து கருத்து எழுது.. இது அரசியல் அல்ல... உண்மை தமிழரின் குமுறல்
    நீ தமிழானா.நீ தமிழானா

    ReplyDelete
  4. @prabu

    நீ முதல்ல தமிழ் படிச்சிட்டு கமெண்ட் எழுது...

    "தமிழானா" இல்ல "தமிழனா?"

    ReplyDelete
  5. கொண்டாடப்பட வேண்டிய படமல்ல, அதற்காக படுமோசம் என்றும் சொல்ல முடியாது. அதை அருமையாக உங்கள் விமர்சனத்தில் சொல்லி இருக்கிறீர்கள் நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. @ பாலா

    ரொம்ப நன்றி பாலா....
    நீங்க சொன்னதைத்தான் அசலாக நானும் உணர்ந்தேன் நிறை குறைகளுடன் கூடிய இந்த கமர்ஷியல் படைப்பைப் பார்த்தபோது.... அதையேதான் பதியவும் முயற்சித்தேன்..... ரொம்ப நன்றி உங்களுடைய கருத்துக்கு :-)

    ReplyDelete
  7. @ ஆனந்தி அக்கா

    தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ சகோ :-)

    ReplyDelete
  8. //ஆயிரத்து ஐநூறு வருஷத்துக்கு முன்பு வாழ்ந்தவரோட குணநலன்களே டி.என்.ஏ வில் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்போது சொந்தத் தாத்தாவுடைய டி.என்.ஏ பேரனின் ஜீனில் எவ்வளவு வீரியமாக வேலைசெய்யும்........ ஹ்ம்ம்ம்..... பிஸினஸ் பாஸ் பிஸினஸ்!!!// sema point nga. .

    ReplyDelete
  9. @ kavya

    ரொம்ப நன்றிங்க...

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)