அவமானங்கள் இந்த தேசத்துக்கு என்ன சாபக்கேடா?!
ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் வெற்றிப் பரவசத்தோடு பங்குகொள்ளும் ஒரேயொரு நிகழ்வு வீரர்களின் அணிவகுப்பு மட்டுமே......! அதிலும்கூட ஓர் அசிங்கம் அரங்கேறிவிட்டது இந்தமுறை!
விவசாயத்தைப் போலவே அங்கீகாரமே இல்லாத ஒரு தொழில் இந்த நாட்டில் விளையாட்டு (கிரிக்கெட்டைத் தவிர!)
இந்தச் சூழலில், இந்த நாட்டின் ஒவ்வொரு விளையாட்டு வீரனும் ஒரு தீவிரவாதியே!
ஒரு தீவிரவாதி நிகழ்த்தும் ஒரு வன்செயல் நிமிடக்கணக்கில் உலகையே உற்றுநோக்கவைக்கும்... ஆனால் அதற்குப் பின்னணியில் அவனது சதித்திட்டங்களோ வருடக்கணக்கில் அவனை ஒரே முனைப்பில் உரையவைத்திருந்திருக்கும்.....அப்போது யாருக்கும் அடையாளம் தெரியாது அந்த நாசக்காரனை!
கிட்டத்தட்ட இதே நிலையில்தான் இயங்குகிறான் இந்த நாட்டின் ஒவ்வொரு தடகளவீரனும்! நான்கு வருடத்துக்கு ஒருமுறை உலகில் எங்கோ நடைபெறும் ஒலிம்பிக்கை மனதில் வைத்துக்கொண்டு அவன் நாளெல்லாம் உடலை வளைத்து, வருத்தி உழைத்து உழன்றுகொண்டிருக்குபோது, குண்டுவைக்கும் தீவிரவாதியைப்போலவே, லைம்லைட்டிற்கு வரும்வரை யாரும் அவனை அறிந்திருக்கப்போவதில்லை இந்த மாபெரும் தேசத்தில்!
விளைவும்கூட பாருங்கள்..... கசாப்பிற்குத் தூக்குமேடையைப் போலவே நமது வீரர்களுக்கும் வெற்றிமேடையும் வாய்ப்பதில்லை!!
எங்கும் எதிலும் அரசியலும், எங்கெல்லாம் அரசியலுண்டோஅங்கெல்லாம் ஊழலும் குடிகொண்டிருக்கும் இந்திய விளையாட்டுத்துறையில் ரிசர்வேஷனில் தொடங்கி ரெக்கமண்டேஷன்வரை அத்தனையையும் முறியடித்து ஒலிம்பிக் குழுவில் இடம்பிடிப்பதே ஒவ்வொரு வீரனுக்கும் வெற்றிக்கனியைவிட அதிகம் ருசிதந்துவிடும்! ஆகமொத்தம் அவன் வெற்றிப் பரவசத்தை அனுபவிக்கும் ஒரே தருணம், நூற்றிப்பத்து கோடிப்பேரின் பிரநிதியாகப் பெருமைமிக்க ஒலிம்பிக் அணிவகுப்பில் அவன் பங்குகொள்வது மட்டுமே..... சென்றவருடம் சானியா மிர்சாவின் ஜீன்ஸ்பேண்ட் சர்ச்சையில் சிக்க, இந்த வருடமோ ஒரு ஜீன்ஸ் டீ ஷர்ட் அணிந்த ஓர் அசிங்கம் நம் நாட்டுக் குழுவோடே ஒட்டிக்கொண்டுவிட்டது அழியாத அசிங்கமாக! மஞ்சளுடையில் பவனிவந்த நம் விளையாட்டு வீரர்களுக்கு நடுவே தேமேயென்று நடந்து சென்றது சிவப்புடையில் அந்த அருவருப்பு.... அடுத்த நாள் அவள் அப்பன் மன்னிப்புக் கோருகிறான் ஜஸ்ட் ஆர்வக்கோளாறென்று!! த்தூ..... ! இதே சம்பவம் இந்தியாவில் ஒலிம்பிக் நடந்து அப்போது இங்கிலாந்து வீரர்குழுவில் ஓர் அடையாளம் தெரியாத நபர் அத்துமீறிப் புகுந்திருந்தால் ஆளுக்குமுந்தி அவமானப்படுத்தியிருப்பார்கள் இந்தியாவை நமது மீடியா மக்களே!! இப்போதும் அவமானப்பட்டிருப்பது (உண்மையில் இல்லாத) இந்தியாதானே!! :-)))
ககன் நரங்.... பதக்கம் வெல்லும்வரை இவர் யாரென்றே அறியாமல் அபிநவ் பிந்த்ராவை மட்டும் (பெய்ஜிங்கில் பதக்கம் வென்றவரை இவரையும் யாரென்று தெரியாது!) ஃபாலோ செய்ததற்கு, கடைசி சுற்றில் ககன் நரங் விடாது விரட்டி வெண்கலம் வென்ற வீடியோவைப் பார்த்தபோது வருந்தினேன்! இனி இவர் ஒரு நாயகன்...... வாழ்த்துக்கள்.... இவரது வார்த்தைகளில் அவ்வளவு பக்குவம்.... (படிக்க: இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியா.... இவரது பேட்டி வந்திருக்கிறது!)
மகேஷ் பூபதி, போபண்ணாவுடன் இணைந்து முதல் சுற்றிலேயே டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தோல்விடைந்து வெளியேறியிருக்கிறார்!
"ஒலிம்பிக்கில் பதக்கம் பெறமுடியாத துயருடன்தான் நான் இறப்பேன்!" என்று இப்போது முணங்கியிருக்கும் இவர்.....
இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தர முடியாதுபோனதுக்காக இன்றளவும் வருந்தவில்லை!!!
லியாண்டருடன் இவர் இணைந்து ஆடியிருந்தால் வெற்றிவாய்ப்பு அதிகம் என்பது உலகுக்கே தெரியும்.... இருந்தாலும் இந்த "இந்தியர்" அவ்வளவு பிடிவாதமாக மறுத்தார் பயசுடன் இணைய! லியாண்டர் பயசுக்கும் மகேஷ் பூபதிக்கும் அங்கீகாரம் தானாகக் கிடைத்திடவில்லையே..... டேவிஸ் கோப்பைகளில் இந்திய இணையாக இவர்கள் ஜொலித்ததால் தானே இவர்கள் சர்வதேச டென்னிஸ் நட்சத்திரங்களாக மிளிரத்தொடங்கினார்கள்! அப்படியிருக்க இந்திய டென்னிஸிற்கு என்றுமே கடமைப்பட்டவர்கள்தான் இந்த இருவரும்....... இந்திய டென்னிஸ் அவ்வளவு கெஞ்சியும் மசியாத பூபதியின் தனிப்பட்ட ஈகோ...... "மகேஷுடன் விளையாடத் தயார்" என்று சீனியரான லியாண்டர் அறிவித்தபோதும் அடங்கவில்லை! விளைவு மகேஷ் - போபண்ணா இணையைப் போலவே பயஸ்-விஷ்ணுவர்தன் இணையும் தோற்றுப்போய் வெளியேறியிருக்கின்றது முதல் சுற்றிலேயே! மதுரா ஹனியைவிட இந்தியாவுக்கு இந்த ஒலிம்பிக்கில் அதிக அவமானம் தேடித்தந்தவர் மகேஷ் பூபதிதான்......! ஒலிம்பிக்கில் பதக்கம் பெறமுடியாத துயர்மட்டுமில்ல சார் தனிப்பட்ட ஈகோவினால் நேஷனல் ட்யூட்டியை மறந்த களங்கத்துடனும்தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை முடிக்கவேண்டியிருக்கும்!
பேட்மிண்டனில் நேற்று இரண்டு நல்ல செய்திகள்..... நம்பிக்கை நட்சத்திரம் செய்னா காலிறுதிக்கு எளிதாக முன்னேறியிருக்கிறார்...... வரலாற்றிலேயே முதன்முறையாக ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும் காலிறுதியில் இந்தியர் ஒருவர் நுழைந்திருக்கிறார்..... காஷ்யப் பருப்பள்ளி..... நேற்று இலங்கையின் நிலுக்காவை இவர் போராடி வீழ்த்திய போட்டியை ஜெயிப்பார் என்கிற நம்பிக்கையே இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்..... இருந்தாலும் கடைசி செட்டில் படுவேகமாக சுதாரித்துக்கொண்டு சரித்திரம் படைத்திருப்பவருக்குப் பதக்கம் கிடைத்தால் நன்றாக் இருக்கும்!
சானியாவுடன் இணைந்து ஆடவேண்டும் என்று சண்டைபோட்டுக் கடைசியில் மதுராவுடன் இணைந்திருக்கிறார் நாட்டை அவமானப்படுத்திய லிஸ்டில் மகேஷ் பூபதி....... விஜேந்தர், செய்னா, சுஷீல், காஷ்யப்.... என்று பதக்க நம்பிக்கைகள் மிச்சமிருக்கின்றன..... இன்று நடக்கப்போகும் 75 கிகி எடை பிரிவு குத்துச்சண்டை- காலிறுதிக்கு முந்தைய சுற்றில் விஜேந்தர் சந்திக்கவிருப்பவர் டெர்ரல் காஷா - உலகக்கோப்பை பாக்ஸிங்கில் மூன்றாவது இடம்பிடித்த முரட்டு வீரர்....... முதன்முறையாக டெர்ரல் காஷாவுடன் மோதப்போகும் விஜேந்தர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகப் பணிவுடன் பேட்டியளித்திருக்கிறார்.... பொறுத்திருந்து பார்ப்போம்......
ஆல் தி பெஸ்ட் விஜேந்தர்..... வாழ்த்துவோம்!!!
இன்னும் இரண்டு பதக்கங்களாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்.......
பிரபு எம்






நல்ல அலசல்... பாராட்டுக்கள்...
ReplyDeleteஎல்லாத்துலேயும் ஈகோ பார்த்தால் இப்படித்தான்:(
ReplyDeleteபோதாக்குறைக்கு விளையாட்டிலும் அரசியல்:( எல்லாத்துலேயும் காசு பண்ணத்தெரிஞ்சுக்கிட்டாங்க:(
இந்த ஒலிம்பிக்கில் ஒரு தங்கம் எங்க நாட்டுக்கு நேற்று கிடைச்சது. இதுவரை 91 ஒலிம்பிக் சரித்திரத்தில். இன்னும் ஒன்பது பாக்கி. அதுக்கு எத்தனை வருசங்கள் காத்திருக்கணுமோ!
நன்றி திரு. தனபாலன் :)
ReplyDeleteரொம்ப நன்றிங்க...
ReplyDeleteநீங்க சொல்லுறது உண்மை.... வருத்தமான உண்மை.. :-(
நியூசிலாந்து படகுப்போட்டியில் தங்கம் வென்றது எனக்கும் மகிழ்ச்சியே :)
அந்த பாப்பாவை யாரும் கண்டுகொண்டதாகவே தெரியவில்லையே? ஒரு வேளை எதேனும் உள்குத்து இருக்கிறதா?
ReplyDeleteநம் நாட்டில் அரசியலில் விளையாடுவார்கள், விளையாட்டில் அரசியல் செய்வார்கள் என்று யாரோ சொன்னார்கள். அதன் விளைவுதான் இவை. பார்க்கலாம் எதிர்காலத்திலாவது இது சரியாகிறதா என்று.
rapid fire pistol ஹீரோ விஜயகுமார் படமும் அப்டேட் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்..# நேயர் விருப்பம் :-)
ReplyDeleteமுதல் படத்தில் இருக்கும் மஞ்ச குல்லா கூட்டத்தில் எங்கயாவது இருப்பான் அப்டிங்கிற பதில் இருந்தால் ஏற்று கொள்ளபடாது..:-)
ReplyDeleteஇப்படிக்கு,
வீரன் விஜயகுமார் ரசிகையர் மன்றம்...:-)