எழுதும் ஆர்வம்தான் என்னை இந்த வலைப்பூ தொடுக்க வைத்தது. உங்கள் வாசிப்பினாலும், விமர்சனங்களாலும், நட்பினாலும் மெருகேறக் காத்திருக்கும் என் எழுத்துகள்..
Monday, October 01, 2012
தாண்டவம் [U] (2012)
"தாண்டவம்" என்னும் வீரியமான ஆட்டத்தைக் குறிக்கும் டைட்டிலில் ஒரு மெலடி ஆக்ஷன் சால்சா!
அதிரடி அடாவடி என்று ஈஸி எக்ஸ்ப்ரஸ் பிடித்துக் கரைசேர்ந்துவிட நினைக்காமல் ஆக்ஷன் களத்தில் அணுக்கமும் நுணுக்கமும் பதிக்க முயன்றதற்கு இயக்குனரைப் பாராட்டலாம்......
நான் மூளைக்கு ரெஸ்ட் கொடுப்பதற்காக சினிமா பார்ப்பவன்..... எனவே லாஜிக் பார்க்கும் மூளைசெல்களின் ஆழ்ந்த உறக்கத்தில் "தாண்டவத்"தை சிறப்பாகவே ரசித்தேன்....! படம் சொல்லப்போகும் "தியரி"களையெல்லாம் நெட்டில் முன்கூட்டியே படித்துவைத்துக்கொண்டுத் திரையிலும் மூளையைத் தீட்டிவைத்துக்கொண்டுப் படம்பார்க்க இது என்ன கிறிஸ்டோஃபர் நோலான் படமா?!! டேக் இட் ஈஸி பாஸ்..... :-))
ஒரு பயங்கரவாத குண்டுவெடிப்பில் தன் பார்வையை இழந்துவிடும் இந்திய உளவுத்துறையின் ஹை-ப்ரொஃபைஸ் ஆஃபீசர் விக்ரம் அதன் பின்னணியில் இருக்கும் டேஞ்சர் வில்லன்களைப் பழிவாங்குவதே கதை.... ஸோ உலகத்துக்கே தெரியும் படத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக் இருக்கு! ஃப்ளாஷ்பேக்கில் அனுஷ்கா வருகிறார்..... (படத்தில் ஆங்காங்கே சந்தானமும் வருகிறார்!) அனுஷ்கா-விக்ரம் "லவ் ஆஃப்டர் மேரேஜ்" பகுதிகளின் டேஸ்ட்களும் அங்கிருந்து படத்தை லண்டனுக்கு மூவ்பண்ணும் ட்விஸ்ட்களும் சுவாரஸ்யமாகவே கதையை நகர்த்திச்செல்லும்! (லாஜிக் எல்லாம் பார்க்கலைன்னு முதல்லயே சொல்லிட்டேன்!)
விக்ரம்..... கிட்டத்தட்ட "பாபா" ரஜினி மாதிரி இருக்கிறார்..... வெரி ஸாரி டு ஸே... தனது முதுமையடைந்த தோற்றத்தைப் பொருட்படுத்தாமல் வெளிஉலகுக்கு வரும் ரஜினிகூட திரையில் தன் தோற்றத்தில் காம்ப்ரமைஸ் செய்துகொள்வதில்லையே.... ஒரு ஃபேஸ் லிஃப்டிங்கோ அல்லது ஏதாவது காஸ்மெட்டிக் சர்ஜரியோ செய்துவிட்டு அனுஷ்காவுடன் ரொமான்ஸ் செய்யக் கிளம்பியிருக்கலாம் விக்ரம்.....! அடுத்த படம் ஷங்கருடன்.... ஸோ.... நோ வொரீஸ் லுக்கைக் கரெக்ட் செய்துவிட்டுத்தான் ஷூட்டிங் போயிருப்பார்கள் என்று நம்பலாம்...... விக்ரமின் லுக்கைப் பொறுத்தவரை அது இயக்குனர் விஜய்க்கும் ஒளிப்பதிவாளர் நீரவ்வுக்கும்கூட ஒரு லெட் டவுன் தான்.... ஸாரி! :-(
தோற்றத்தில்தான் முதுமை.... மற்றபடி விக்ரமின் இருப்பே திரையை நிரப்பிவிடுகிறது! அந்தளவு கணமான நடிப்பு.... ரியாக்ஷன்களையும் பாடிலாங்குவேஜ்களையும் ரசித்துச் சிலாகிக்க எத்தனையோ இடங்களைப் படத்தில் சொல்லிக்கொண்டே போகலாம்...... கம்பீரமிடுக்கிலிருந்து கசிந்துருகும் காதலுக்கும், காதல் ரசத்தை அப்படியே காமெடி ரியாக்ஷன் ஆக்குவதற்கும் மனிதருக்கு ஒரு நொடிக்கும் குறைவான நேரமே தேவைப்படுகிறது...!! விக்ரம்.... சிம்ப்ளீ சூப்பர்ப்...... இந்த ரோலில் "தில்"லாகக் களமிறங்கி சீயான் "தூள்" கிளப்பியிருப்பதெல்லாம் கூடப் பரவாயில்லை ஆனால் கடைசிவரை எந்த இடத்திலும் "காசி" தெரியவே தெரியாமல் மீண்டுமொருமுறை பார்வையற்றவராக வலம்வந்திருப்பதுதான் விக்ரமின் டச்! விக்ரமைப் பார்க்க வந்தரவர்களுக்கு செம விருந்துதான்!
அனுஷ்கா..... கிராமத்துப்பெண் என்று அனுஷ்காவை விக்ரமும்..... சாதாரண எஸ்.ஐ என்று விக்ரமை அனுஷ்காவும் பரஸ்பரம் தவறாக நினைத்துக்கொண்டுத் திருமணம் செய்துவைக்கப்பட..... படுஸ்வாரஸ்யத்துக்கு ஸ்கோப் வைத்து விரியும் ஃப்ளாஷ்பேக்கின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் மேடம்தான்!! ரொம்ப நாளைக்குப்பிறகு ஒரு கிராமத்துக் கல்யாண வைபவம்..... கன்னத்தில் மஞ்சள் பூசி தழைய தழையப் புடவை கட்டிய அழகு அனுஷ்கா..... சந்தனச்சிலைக்கு எதற்கு கன்னத்து மஞ்சள்?னு எல்லாம்அநியாயத்துக்கு யோசிக்கவைத்துவிட்டார்கள் இயக்குனரும் ஒளிப்பதிவாளரும்! :-)) நடிப்பும் அபாரம்.... ஒரு சராசரி மனைவியாகத் தொழில் நிமித்தம் தன்னால் இருக்க முடியாது என்று முதலிரவில் விக்ரமிடம் சொல்லும் காட்சியில் " நமக்கு முதல்ல ஒருத்தரை ஒருத்தர் பிடிக்கணும்.... அப்புறம் ஃப்ரண்ட்ஸ் ஆகணும்.... அப்புறம் லவ்... அப்புறம்தான் மற்ற விஷயங்கள் எல்லாம்" என்று சொல்லுவ்ம் டோட்டலி சைலண்ட், க்ளோஸ்-அப் ஷாட்டில் அனுஷ்கா வெளிப்படுத்தும் பக்குவமும், முகத்தில் ஒரு தவிப்புடன் கூடிய பெண்மையும்...... லவ்லி!! அனுஷ்காவைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் படத்தில்!
தெலுங்கு சீனியர் ஜெகபதி பாபு...... கிட்டத்தட்ட "கோ" படத்து அஜ்மல் மாதிரி கேரக்டர் ஆனாலும் சார் சீனியர் அல்லவா... தனது பாத்திரம் தடம் மாறிவிட்ட நிலையில் திரைக்கதை இவரை நிராயுதபாணி ஆக்கிவிடும் ஆனாலும் தன் பாவணைகளால் சற்று சுமந்திருப்பார்.... அது க்ளாஸ்! அதேபோல் இன்னொரு சீனியர் நாஸர்..... இலங்கைத் தமிழும் (கொஞ்சம் மிஸ்ஸிங்!) ஐ-பேடில் கேமுமாகத் துப்பறியும் அனாயஸ ஆஃபீஸர்.... விஜய்யும் திரைக்கதையில் இவருக்குக் கொஞ்சம் ஸ்கோப் வைத்திருக்க நாஸர் கேக் வாக் செய்திருக்கிறார்.... கேட் வாக்கிற்குப் படத்தில் ஏமி ஜாக்சன்... சைஸ் ஜீரோ என்றெல்லாம் சொல்லிவிட முடியாது..... ஹிப்சைஸ் மைனஸில் போகிறது!!! ப்ரிட்டிஷ்+தமிழ் ப்ராமின் கலப்பாக இவரை ஸ்க்ரீனில் அக்காமடேட் செய்திருந்தாலும் இவரை அழகான பொண்ணுன்னு சொல்லமுடியவில்லை.... ப்யூட்டிஃபுல் கேர்ள் என்றுதான் சொல்லமுடியும்! :-)
நீரவ் ஷா இவரது கண்களால்தான் ஏற்கெனவே நான் பார்த்து ரசித்து பாரீஸை இன்னும் அழகாகக் கண்டு ரசித்தேன் (எங்கேயும் காதல்) இந்தப் படத்தில் என் கண்கள் கண்டிராத லண்டனை ரசித்தேன்...! டெல்லி, ஒரு தமிழ்க்கிராமம், லண்டன் என்று ஒவ்வொரு காட்சிக்கும் கச்சிதமான ஷேட்களால் அலங்கரித்திருக்கும் நீரவ்வின் ஃபோட்டோகிராஃபி Flawless Fantasy! ஆண்டனியின் எடிட்டிங்கும் வழக்கம் போல சூப்பர் கூல்.....
ஜிவி பிரகாஷ்தான் ஏமாற்றி இருக்கிறார்...... பாடல்களை சிரத்தையாகப் படமாக்கியும்கூட காப்பாற்ற முடியாத நம்பர்ஸ்.....! பின்னணி இசைகூட காட்சியை நிரப்பமட்டுமே உதவுகிறது... காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் சத்தம் கண்டிப்பாக இசைதான் ஆனால் அந்த இசையில் பெரிதாக விஷயங்கள் இல்லாதது வருத்தம்!
எழுத்து + இயக்கம் விஜய்..... மேக்கிங் எல்லாம் க்ளாஸ்தான்..... ஆனால் குட்டிக் குட்டியாய் உருட்டி வைத்திருக்கும் சுவாரஸ்ய தோட்டாக்களால் சுடப் பார்க்கிறார்.... ஆனாலும் அந்தச் சின்னச் சின்ன விஷயங்கள் எல்லாம் க்ளிஷேக்களாயிருப்பதுதான் சருக்கல்..... விக்ரம் ஓர் எறும்பைக் கூடக் கொல்ல நினைக்காதவர் என்று காட்டுவதற்காக பியானோ கட்டைகளில் ஒரு க்ராஃபிக் எறும்பை விட்டு விளையாடுவதெல்லாம் தியேட்டரையே உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று பலூனூதவிடுகிறது!! இறந்தவரின் வாட்ச் காட்டும் டைமை வைத்து டக் கென்று இது ஒரு கொலைதான் என்று நாஸர் கண்டுபிடிக்கிறார்... ஓகே... தமிழ்ப்பட சிபிஐ என்றுதான் தோன்றுகிறது.... "இந்தியன்" நெடுமுடிவேணு..... பல படங்களில் மம்முட்டி என்று பழக்கப்பட்ட கதைசொல்லும் பாங்குதானே இதெல்லாம்..... இதுதவிர "லாஜிக்" பொத்தல்கள்.... மூளையைத் தூங்கவிட்டு ரசித்த காட்சிகளைக் கூட வீட்டுக்கு வந்தபின் விழித்துக்கொண்ட மூளை விக்கி விக்கி சிரிக்கிறது! எங்கேயோ மாடியில் இருக்கும் வில்லனை விக்ரம் ஜஸ்ட் லைக் தட் பார்த்துவிட்டுத் துரத்துவது....... விக்ரமின் லைஃப் ஸ்டைல் + காஸ்ட்யூம்ஸ் + இன்ஃப்ளூயன்ஸ் எல்லாம் பார்த்தும் அவரை சப்-இன்ஸ்பெக்டர் என்றே அனுஷ்கா நம்புவது என்று அமைத்திருக்கும் காட்சிகளைக் கலாய்க்காத விமர்சனங்களை விஜய் படிக்கவே முடியாது!! (ரொம்ப நல்லவனா எழுதியிருக்கிற நானே சொல்லிட்டேன்னா பாருங்க!!)
கதைத் திருட்டு என்று கேஸ் நடந்துகொண்டிருக்கின்றது..... மனுதாரர் பொன்னுசாமி சொல்வதைப் போல யூடிவி தனஞ்செயனிடம் தன் திரைக்கதையை ப்ரிண்ட் எடுத்து பைண்ட் பண்ணிக் கொடுத்திருக்கிறார் என்றால் சாஃப்ட் காப்பி கண்டிப்பாக இருந்தே தீரவேண்டும்...... ஆனால் அதையெல்லாம் தீர்மானிக்கவேண்டியது கோர்ட்..... பிரபு உனக்கெதுக்குடா....!!! (மைண்ட் வாய்ஸ்!)
விஜய் உட்பட நல்ல ஃபிலிம் மேக்கர்ஸ் இருக்கிறார்கள் தமிழில் இப்போது.... ஸ்க்ரீன் ரைட்டர்களுக்கு நல்ல விலைகொடுத்து கதைகளை வாங்க தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும்.... அதற்கு ஹீரோக்களின் சம்பளம் குறைய வேண்டும்...... லோ பட்ஜெட் படங்கள் ஹை- யீல்டிங் தர வேண்டும்.... எனப் பல "வேண்டும்" கள் உள்ளன .... எனக்குக் கூட இப்போழுது ஆஃபீஸுக்குக் கிளம்ப "வேண்டும்"..... ஸோ பை பை.....
ஓ... டெயில் பீஸ் எழுதணுமோ?
வாரி வாரிப் பணம் இரைத்திருக்கும் "யூ"டிவிக்காக இல்லாவிட்டாலும் ஒரு சின்ன கட் கூட இல்லாமல் சென்சார் வாரி வழங்கியிருக்கும் "யூ"வுக்காகவது "யூ" கேன் (குடும்பத்துடன்)_ வாட்ச் "தாண்டவம்"!! :-) பட் மூளைக்கு ரெஸ்ட் கொடுக்க மறந்துடாதீங்க..... :))
அன்புடன்,
பிரபு எம்
Subscribe to:
Post Comments (Atom)

போகணும்.நல்ல விமர்சனம்.
ReplyDeleteஇந்தியாவின் தலை சிறந்த 5 ரா ஆபிசர்களில் ஒருவருக்கு திருமணம்.அதற்கு 2 நாட்கள் முன்பு வரை அது(திருமணம்)பற்றி அவருக்கு தெரியவில்லை.இப்படி பட்ட பதவிகளில் இப்படி பட்ட ஆபிசர்கள் இருந்தால் நாம முன்னேறி விடுவோம்.
Deleteடபுள் ஓகே :-))
ReplyDelete