மாயன் காலண்டர் படி உலகம் அழியாதுன்னு உறுதியா சொல்லுறவங்ககூட உள்ளுக்குள்ள உதறிக்கிட்டுதான் இருக்காங்கன்னு உளவுத்துறை ரிப்போர்ட் வந்திருக்காம்!
சுனாமிலயே சும்மிங் போற நம்ம ஊரு பிரபலங்கள் "மாயனை"வெச்சு எப்டியெல்லாம் ப்ளான் பண்ணுவாங்கன்னு ச்சும்மாக்காச்சு கற்பனை செஞ்சு பாப்போம்....
ரஜினி ரசிகர்கள்:
1996ல இருந்து தெனமும் டெய்லி காலண்டர் கிழிக்கிறோம் தலைவர் அரசியலுக்கு இன்னிக்கு வருவாரு நாளைக்கு வருவாருன்னு..... கடைசில மாயன் காலண்டரே முடிஞ்சுபோச்சாம் தலைவா..... நீங்க இன்னும் மேலதான் கைய காட்டிட்டு இருக்கீங்க.....
டிசம்பர் 22ம் தேதி: (உலகம் அழியாவிட்டால்....)
யேய்!! ஜாலி உலகம் அழியல........
அடிங்கடா நோட்டீஸு ஊருபூராம்....
"தலைவர் ஆளாமல் தரணி அழியாது....
இன்று கோச்சடையான்
நாளை கோட்டையை அடைவான்!!!!!"
மின்வாரியத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்:
"மாயா.... நீ சொன்னமாதிரி ஒலகம் கண்டிப்பா அழிஞ்சிடும்னு நம்பிதான் 2013ல பவர்கட்டே இருக்காதுன்னு தைரியமா அறிக்கைவிட்டிருக்கேன்...... ஒண்ணு ஒலகம் அழியணும் இல்ல.... அம்மா 7வது முறையா அமைச்சரவைய மாத்தும்போது என் இலாகாவ மாத்திடணும்!
டிசம்பர் 22ம் தேதி: (உலகம் அழியாவிட்டால்....)
கவுத்திட்டியேடா மாயா........
நல்லவேளடா சாமி.... 2013 ஜூன்லதான் நோ பவர்கட்னு சொல்லிவெச்சேன்...... இன்னும் ஆறு மாசத்துக்கா அமைச்சரவைய மாத்தாம இருக்கப்போறாங்க!!! ஹை ஜாலி!!!
சுப்ரமணியசுவாமி:
ஒலகத்தை அழிச்சுடலாம்னு நெனைக்கிறா......
இத்தாலி பக்கம் ஒரு தீவைத் தவிர எல்லா எடமும் அழியப்போகுது....
சோனியாவும் ராகுலும் சரத் பவாரோட கப்பல்ல அங்கே எஸ்கேப் ஆகப் போறா....
எல்லா ஆதாரமும் என்னோட லேப்டாப்ல இருக்குது.....
டிசம்பர் 22ம் தேதி: (உலகம் அழியாவிட்டால்....)
நியூக்ளியர் வெப்பன்ஸ வெச்சுதான் ஒலகத்த முடிக்கிறதா இருந்தா.....
நான் அவா சீனியர்கிட்டயே பேசி லாஸ்ட் மினிட்ல ஸ்டாப் பண்ணிண்டேன்....
நெக்ஸ்ட் டைம் சென்னை வரும்போது இந்த ஆதாரத்தையெல்லாம் வெச்சு சுப்ரீம்கோர்ட்டுல வழக்குபோடுவேன்....
சட்டதுல இருந்து யாரும் தப்பிக்க முடியாது....
இந்தியகிரிக்கெட் அணி
ஒலகம் அழிஞ்சா என்ன அழியாட்டி என்ன... நம்ம வோர்ல்டு கப் வாங்கியாச்சு...... நம்மதாண்டா வோர்ல்டு சாம்பியன்ஸ்!!!
டிசம்பர் 22ம் தேதி: (உலகம் அழியாவிட்டால்....)
மக்கள்: டேய்...... வோர்ல்டு கப் வாங்கினதுல இருந்தே உலகம் அழிஞ்சிடற மாதிரிதானடா விளையாடிட்டு இருக்கீங்க......
இன்னும் ரெண்டு வருஷத்துல திரும்பவும் வோர்ல்டுகப் வரப்போகுதுடா என் வென்று!!
நித்தியானந்தா:
"கதவைத் திற.... காத்தென்ன கேமராவே வரட்டும்" - அதான் எல்லாம் மொத்தமா முடியப்போகுதே!!!!
டிசம்பர் 22ம் தேதி: (உலகம் அழியாவிட்டால்....)
ப்ரஸ்மீட்டில்:
மறுபடியும் என்னைவெச்சு க்ராஃபிக்ஸ்ல மார்ஃபிங் பண்ணியிருக்காங்க சார்...... இந்த வீடியோல இருக்குறதும் நான் இல்லன்னு ப்ரூவ் பண்ணுவேன் சார்.......இந்தத் தடவையும் லேடீஸ் ஜெயில்லயே போடச்சொல்லுங்க சார்.....
மன்மோகன்சிங்:
"..... .................... ...................... .................................... "
டிசம்பர் 22ம் தேதி: (உலகம் அழியாவிட்டால்....)
"........ ............. ......................... .........................................."
இவரு வாயத்திறந்து பேசிட்டாதான் ஒலகம் தானாவே அழிஞ்சிடுமே!
கலைஞர்:
உலகம் அழிவதைக் கண்டித்து டிச 21ம் தேதி (லஞ்சுக்கு அப்புறம்) உடன்பிறப்புகளிடம் சொல்லாமல் திடீரென்று ஓர் உண்ணாவிரதம் அறிவிக்கலாம்.....
ஒருவேளை உலகம் அழியாவிட்டால்...... மாலை 5:30 மணிக்கு நியூசிலாந்தில் மணி 12-ஐத் தாண்டிவிட்டது...
உலகம் அழியவில்லை.... உண்ணாவிரதம் வெற்றி என்று ஸ்வீட்... எடுத்துக் கொண்டாடி விரதத்தை முடித்தும் கொள்ளலாம்!! :-))
உலகம் அழிஞ்சாலும் சரி..... அழியலைன்னாலும் சரி..... இவங்க யாரும் மாறப்போறதில்ல....
ஒருவேளை உலகம் அழிஞ்சுட்டா.......
நம்ம ஜாதகத்துல எல்லாம் " நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்"னு அர்த்தம்
அழியலைன்னா......
மாயன் காலண்டர்ல "கடைசில கொஞ்சம் பக்கத்தக் காணோம்"" னு அர்த்தம்....
ஓகே!
லெட்ஸ் வெய்ட் அன்டு ஸீ....
டிச 22ம் தேதி மீட் பண்ணலாம்... ;-)
அன்புடன்...
பிரபு எம்









கட்டாயம் மீட் பண்ணுவோம்.
ReplyDeleteசும்மா சொல்லி வைப்போம். உலகம் அழிஞ்ச பிறகு நம்மைக் கேட்க யார் இருக்கப்போகிறார்கள்?
:-)
Deleteஉலகம் அழியாட்டினாகூட எதையும் உறுதியா சொல்லமுடியாத லைஃபைத் தானே இயற்கை நமக்குக் கொடுத்திருக்கு...
மீட் பண்ணுவோம் சார்... :)
வருகைக்கும் கருத்துக்கு ரொம்ப நன்றி சார்.....
Super prabhu
ReplyDeleteThank you....
Deletemanmohan singh,karunanidhi gimmicks super na.....sema comedy
ReplyDelete:-)
DeleteThank you Viay... glad you liked it....
டிசம்பர் 22-ல் எங்கே பக்கத்தை காணொம்னு தெரிஞ்சுடும்.டிசம்பர் 22-ல் ஊட்டி போலம்னு ப்ளான் போட்டேனே.
ReplyDeleteஹாஹா..... ஜாலியா ஊட்டிக்குப் போயிட்டு வாங்க அக்கா...... Happy Holidays :)
Deleteநல்ல பதிவு. ரசித்தேன். மாயன் கேலண்டரில் கடைசி பக்கத்தை காணோம் என்று நானும் ஒரு தனி பதிவு போடலாம் என்றிருந்தேன். நீங்க முந்திகிட்டீங்க.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பாஸ்...
Deleteவெல்... நான் யோசிக்குறதுக்கு முன்னாடிகூட யாராவது இந்த டேக்லைனை எழுதியிருக்கலாம்....
இது நம்ம எண்ணங்களை இலவசமா அச்சேத்திக்கிற அழகான களம்தானே.... நான் இந்த ஒரு வரியில் முந்திக்கிட்டா என்ன நீங்க எழுத நினைத்த அந்த பதிவைக் கண்டிப்பா எழுதுங்க..... நான் எதிர்பார்க்கிறேன்......
//. அம்மா 7வது முறையா அமைச்சரவைய மாத்தும்போது என் இலாகாவ மாத்திடணும்!//
ReplyDeleteசெம...செம...:-))
ReplyDelete//ஒலகத்தை அழிச்சுடலாம்னு நெனைக்கிறா......
இத்தாலி பக்கம் ஒரு தீவைத் தவிர எல்லா எடமும் அழியப்போகுது....
சோனியாவும் ராகுலும் சரத் பவாரோட கப்பல்ல அங்கே எஸ்கேப் ஆகப் போறா....
எல்லா ஆதாரமும் என்னோட லேப்டாப்ல இருக்குது.....//
:-))) இந்த லோகத்துல இவாளெல்லாம் இப்டி கலாய்க்கிறாலே ...#சுப்ரமணியசுவாமி :-)
ReplyDelete//இந்தத் தடவையும் லேடீஸ் ஜெயில்லயே போடச்சொல்லுங்க சார்.....//
ஹ ஹ....:-))) ஜூப்பெர் ..
//மக்கள்: டேய்...... வோர்ல்டு கப் வாங்கினதுல இருந்தே உலகம் அழிஞ்சிடற மாதிரிதானடா விளையாடிட்டு இருக்கீங்க......
ReplyDeleteஇன்னும் ரெண்டு வருஷத்துல திரும்பவும் வோர்ல்டுகப் வரப்போகுதுடா என் வென்று!!
இவரு வாயத்திறந்து பேசிட்டாதான் ஒலகம் தானாவே அழிஞ்சிடுமே!
மாலை 5:30 மணிக்கு நியூசிலாந்தில் மணி 12-ஐத் தாண்டிவிட்டது...
உலகம் அழியவில்லை.... உண்ணாவிரதம் வெற்றி என்று ஸ்வீட்... எடுத்துக் கொண்டாடி விரதத்தை முடித்தும் கொள்ளலாம்!! :-))//
வண்ட வண்டயா உனக்கு நகைச்சுவை வருது...கலக்கு...கலக்கு...
//நம்ம ஜாதகத்துல எல்லாம் " நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்"னு அர்த்தம்
ReplyDeleteஅழியலைன்னா......
மாயன் காலண்டர்ல "கடைசில கொஞ்சம் பக்கத்தக் காணோம்"" னு அர்த்தம்....//
இந்த முடிவுரை ரொம்ப அழகு..டைமிங் ஆ நீ கையாண்ட இந்த கான்செப்ட் க்கு கண்ணா பின்னா லைக்ஸ் :-))
தேங்க்யூ தேங்க்யூ தேங்க்யூ சிஸ்டர்.... :-)
Deleteவழக்கம்போல என் போஸ்டைவிட உங்க கமெண்ட்ஸ்தான் ஹைலைட் அக்கா.....
SOOOOPPARUNGOOO
ReplyDeleteThannkkksssungooo :-))
Deleteரொம்ப ரொம்ப நன்றி நண்பா....
//ஒருவேளை உலகம் அழிஞ்சுட்டா.......
ReplyDeleteநம்ம ஜாதகத்துல எல்லாம் " நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்"னு அர்த்தம்
அழியலைன்னா......
மாயன் காலண்டர்ல "கடைசில கொஞ்சம் பக்கத்தக் காணோம்"" னு அர்த்தம்....//
சூப்பராச் சொல்லிட்டீங்க!
ரொம்ப நன்றி குட்டன்....
Deletegood one prabhu... kadaisi punch super...couldnt control laughing :D
ReplyDeleteHey Thank you very much Shuba.... :)
Deleteமன்மோகன் சிங் - கலக்கல். :-))))
ReplyDelete:-))
DeleteThanks na....
//ஒருவேளை உலகம் அழிஞ்சுட்டா.......
ReplyDeleteநம்ம ஜாதகத்துல எல்லாம் " நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம்"னு அர்த்தம்
அழியலைன்னா......
மாயன் காலண்டர்ல "கடைசில கொஞ்சம் பக்கத்தக் காணோம்"" னு அர்த்தம்....
///
:-)
அண்ணே எப்படி இருக்கீங்க நலமா?
//இந்தியகிரிக்கெட் அணி///
ReplyDeleteசச்சின் ஓய்வு :-(
விரைவில் சச்சின் பற்றிய ஒரு பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.....