Showing posts with label உலகக்கோப்பை. Show all posts
Showing posts with label உலகக்கோப்பை. Show all posts

Saturday, December 10, 2022

FIFA உலகக்கோப்பை கால்பந்து 2022 - History repeated itself but Brazil didn't!

 உலகக்கோப்பை 2022 ன் முதலாவது காலிறுதிப்போட்டியில் கால்பந்து ஜாம்பவான் பிரேசிலின் வலிமிகுந்த வெளியேற்றம் பிரேசில் ரசிகர்களை ஆசை காட்டி மோசம் செய்தது! நேற்றைய ஆட்டம், 1994 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலகக்கோப்பை போட்டியின் காலிறுதிப்போட்டியில் ஸ்வீடனை பிரேசில் வீழ்த்திய அற்புதமான ஆட்டத்தின் ஆக்‌ஷன் ரீப்ளேவைப் போல் அமைந்திருந்தது வரலாறு மீண்டும் நிகழும் ஆச்சர்யம் என்றால் கடைசி மூன்று நிமிடங்களில் க்ரோஷியா அந்த வரலாற்றை மாற்றி எழுதியது அதிசியம்! History repeated itself but Brazil couldn't make it this time! :(

"தனி ஒருவன்" Dominic Livacovic

நெய்மரின் மாயாஜால கோல்!


முழு ஆட்ட நேரமான 90 நிமிடங்களில் பிரேசில் குரோஷியா இரு அணிகளுமே கோல் அடிக்காத 0-0 என்ற நிலையில் எக்ஸ்ட்ரா டைம் வழங்கப்பட்டது.... அதுவரை கோல் அடிக்கப் பலமுறை பலவிதமாக முயன்றும் அத்தனை முயற்சிகளையும் க்ரோஷியாவின் கோல்கீப்பர் டோமினிக் லிவாகோவிக் (Dominik Livakovic) தனிஆளாகத் தடுத்து நிறுத்த,  பிரேசிலின் நம்பிக்கை நட்சத்திரம் நெய்மர், கடுமையாகப் போராடி, அதுவரையிலான பலன் தராத முயற்சிகளில் பாடம் கற்று, அதாவது அனைத்து தூரங்களிலிருந்தும் எவ்வளவு  வலிமையாகவும் நேர்த்தியாகவும் பந்தை கோல்போஸ்ட் நோக்கி செலுத்தினாலும் லிவாகொவிக்கால் துல்லியமாகத் தடுக்க முடிகிறது என்பதைத் தெளிவாக உணர்ந்துகொண்ட நெய்மர் கண்டுபிடித்த ஒரே வழி, எப்படியாவது கோல்கீப்பரைத் தாண்டிப் பந்தைக் கடத்திச் சென்று கோல் அடிக்கும் வழிமுறை! அதை ஓர் அரை நொடி மாயாஜாலத்தில் லிவாகோவிக்கை ஏமாற்றி நடத்தியும் காட்டினார் நெய்மர்...! எக்ஸ்ட்ரா டைமில் இன்னொரு பகுதி (15 நிமிடங்கள்) மீதமிருக்கும் நிலையில் 1-0 முன்னிலை கிடைக்க, அதுவரை ஒருமுறை கூட உருப்படியாகப் பந்தை பிரேசில் கோல்கீப்பர் வரைகூட கொண்டுபோக முடியாத குரோஷியா வீரர்களால் என்ன செய்துவிட  முடியும் என்கிற நியாயமான ஆற்றாமையில் குரோஷியா ரசிகர்களே ஆரவாரம் ஓய்ந்து அமைதி நிலையடைந்தார்கள்!

நம்பிக்கை நட்சத்திரம் நெய்மார்!

க்ரோஷியா தந்த பேரதிர்ச்சி வைத்தியம்

அதிரடி கோலடித்த ப்ரூணோ பெட்கோவிக்

பிரேசில் ரசிகர்கள் உலகெங்கும் கொண்டாடி மகிழ்ந்தனர்! வான வேடிக்கைகள் இன்னும் 15 நிமிட ஆட்டம் மிச்சமிருப்பதற்காகக் காத்திருக்கவில்லை! இன்னும் இந்த ஆட்டமே முடிவுராமால் இருக்க அடுத்த ஆட்டத்தின் (அர்ஜெண்டினா vs நெதர்லாந்து) முடிவையும் சேர்த்துக் கணித்து பிரேசில் - அர்ஜெண்டினா அரையிறுதியைப் பற்றியெல்லாம் வர்ணணையாளர்கள் சிலாகிக்கத் துவங்க காத்திருந்தது அதிர்ச்சி! இரண்டாவது எக்ஸ்ட்ரா டைமில் ஆட்டம் முடிய இன்னும் 3 நிமிடங்கள் இருக்கும் தருவாயில் க்ரோஷியாவின் ப்ரூனோ பெட்க்கோவிக் (Bruno Petković) இழப்பதற்கு இனி எதுவுமில்லை எனும் தோரணையில் உதைத்த படு கான்ஃபிடண்ட் ஷாட் தடுப்புகளின் சிறு ஓட்டைகளினூடே கீறிக்கொண்டு கோல் போஸ்டுக்குள் புகுந்தது! மஞ்சள் சீருடைகள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க வெள்ளை சிவப்பு ஆரவாரம் அரங்கம் அதிர உயிர்த்தெழுந்தது! காரணம் பெனால்டி டை-பிரேக்கர் சென்றுவிட்டால் க்ரோஷிய கோல் போஸ்டின் காவல் தெய்வத்தைக் கடந்து பந்தைப் புகுத்திவிடுவது சிம்ம சொப்பணம் என்று பிரேசில் வீரர்களே அறிந்திருந்தார்கள்! "இனி இழக்க எதுவுமில்லை" எனும் உரத்த உணர்வின் வலிமைதான் நேற்றைய உலகப் பாடம் என்னைப் பொறுத்தவரை!

History repeated!

இந்த நிலையில் கால்பந்து ரசிகர்கள் அனைவருக்குமே இதே போன்றதொரு உலகக்கோப்பை காலிறுதிப்போட்டி அச்சு அசலாக நினைவுக்கு வந்திருக்கலாம்.... அதுதான், 1994 உலகக்கோப்பையில் இதே போன்றதொரு காலிறுதிப்போட்டியில் இதே பிரேசில் அணி அன்று ஸ்வீடனுடன் மல்லுக்கட்டிய மறக்கமுடியாத கால்பந்து யுத்தம்!

Thomas Ravelli Vs Romario (1994 WC )

"The Evergreen Hero" Romario!


அப்போதைய ஸ்வீடன் அணி கிட்டத்தட்ட  நேற்றைய ஆட்டத்தின் க்ரோஷியாவின் நகல் எனலாம் காரணம் அன்றைய ஆட்டத்தின் 90% நடைபெற்றது என்னவோ ஸ்வீடனின் பெனால்டி ஏரியாவில்தான்! இருந்தாலும் பிரேசிலின் கடும் பிரயத்தனங்களையும் தாண்டி ஒரு கோல் கூட விழுந்திருக்கவில்லை 80 நிமிடங்கள் வரை! ஒரே காரணம் தாமஸ் ரேவிலி (Thomas Ravelli) எனும் மதில் மனிதனால்! படு சுமாரான ஸ்வீடன் அணியை மலையாய்த் தாங்கி எதிர் கோல்களை எல்லாம் தடுத்துக் காலிறுதிவரை கொண்டு சேர்த்தது அந்தத் தொடரில் அவர்களின் "பெருஞ்சுவர்" கோல்கீப்பர் தாமஸ் ரேவலிதான்... முக்கியமாக காலிறுதிக்கு முந்தைய முதலாவது நாக்-அவுட் போட்டியில் ரோமேனியாவை ஸ்வீடன் சந்தித்த போது டை-ப்ரேக்கரில் பெனால்டி வரை போட்டி சென்றது... அதுவரை ஆதிக்கம் செலுத்திய ரோமேனியா வீரர்களின் துல்லியமான ஸ்ட்ரைக்குகளைக் கண்கவரும் புலிப்பாய்ச்சலால்  ரேவிலி தடுத்து நிறுத்தித் தன் அணியை ஒன் மேன் ஆர்மியாகத்தான் பிரேசிலுக்கு எதிரான காலிறுத்திப் போட்டிக்கு அணி வகுக்கச் செய்திருந்தார்! 

"Swedish Legend" Raveli


 நேற்றைய ஆட்டத்தில் பிரேசிலின் நம்பிக்கை நாயகன் நெய்மார் என்றால் அப்போதைய பிரேசிலின் நேஷனல் ஹீரோ ரோமாரியோதான் அன்றைய ஆட்டத்தில் ரேவலியை வீழ்த்த அஸ்திரங்களை மாறி மாறி எய்துகொண்டிருந்தார்... ஏனென்றால் கோல்கள் இல்லாது போட்டி நேரம் முடிந்து பெனால்டிக்கு சென்றால் ரேவலியை மிஞ்சி வெற்றி பெற்றுவிட இயலாது என்பதை மிகத் தெளிவாகப் புர்ந்திருந்தார் ரொமேரியோ , நேற்று நெய்மார் செய்ததைப் போலவே படு தந்திரமானதொரு வியூகத்தில் கிடைத்த சின்னஞ்சிறு வாய்ப்பை ரேவிலிவைத் தாண்டி கோல் ஆக்கினார் ரோமாரியோ! அந்தத் தொடரையும் வென்று இறுதியில் அந்த ஆண்டுக்கான கோல்டன் பாலையும் தனதாக்கினார் எவர்கிரீன் ஹீரோ ரோமாரியோ!

ரோமாரியோவுக்கு எட்டியது நெய்மாருக்குக் கிட்டாத சோகம்!

ஆனால் நேற்றைய போட்டியைப் பொறுத்தவரை 1994ஆம் ஆண்டு காலிறுதியைப் போலவே சென்றிருந்தாலும், ரோமாரியோவைப் போலவே பிரேசிலுக்கு ஒரு நெய்மார் இருந்தபோதிலும், முதல் கோலுக்குப் பின்பாகத் தங்கள் கோல் போஸ்டை காத்திரமாகக் காப்பதில் கோட்டை விட்டார்கள் அதுவரையில் குரோஷியாவின் எந்தவொரு முயற்சியையும் தங்கள் பெனால்டி ஏரியாவில்  நுழையும்போதே விரட்டியடித்த பிரேசிலின் பேக்வார்ட் டிஃபெண்டர்கள்! ப்ரூணோ அடித்த அந்த அதிவேக அதிசியம் அதுவரையில் தன்னைத்தானே மறுமுறை பதித்துக்கொண்டிருந்த வரலாற்றை ஒட்டுமொத்தமாக மாற்றியெழுத வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க, அதனை ஆட்டத்தின் அசல் நாயகன், குரோஷியாவின் கோல்கீப்பர் லிவாகோவிக், பெனால்டி வாய்ப்புகளில் பிரேசிலின் முதல் இரண்டை அபாராமாகத் தடுத்துப் பொன்னெழுத்துக்களால் மாற்றிப் பொறித்தார்! வரலாற்று வெற்றியைத் தனதாக்கியது குரோஷியா!

அர்ஜெண்டினாவுடன் அரையிறுதியில் லிவாகோவிக்....

எங்கிருந்தோ சிலிர்த்தெழுந்து வந்து கடந்த 2018 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் இறுதி ஆட்டம் வரை முன்னேறி பிரான்ஸ் அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்த குரோஷியா தான் ஓர் "ஒன் சீஸன் வொண்டர்" அல்ல என்பதை நேற்று  நிரூபித்து ஆட்டத்தின் ஆகச்சிறந்த தென் அமெரிக்க நாடான பிரேசிலையே வீழ்த்து அரையிறுதியில் கால்பதித்து விட்டது! நேற்று இன்னுமொரு விருவிருப்பான ஆட்டத்தில் நெதர்லாந்தை அர்ஜெண்டினா வீழ்த்த, அரையிறுதியில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை சந்திக்கிறது குரோஷியா... உண்மையில் குரோஷியா என்று சொல்வதைவிட அசராமல் அடிக்கும் அர்ஜெண்டினாவைப் பெனால்டி ஏரியாவில் தனியாகச் சந்திக்கப்போகிறார் தடுப்புச்சுவர் கோல்கீப்பர் லிவோகோவிக் என்றுதான் சொல்ல வேண்டும்!

இறுதிக்கட்டத்தில் இந்த உலகக்கோப்பையின் உஷ்ணம் கத்தாரின் உச்சபட்ச வெயிலுக்கெல்லாம் உயர்க்கொதிநிலை காட்டுகிறது...... அடுத்தடுத்த போட்டிகளைப் பற்றி எழுத வாய்ப்புக்கிடைத்தால் சந்திப்போம்!

அன்புடன்,
பிரபு எம்









Sunday, December 04, 2022

உலகக்கோப்பை கால்பந்து 2022 : FRANCE 3 - 1 POLAND | போலாந்தைத் தன் முழுபலத்துடன் வீழ்த்திய ப்ரான்ஸ்!

FRANCE Vs POLAND

Full-Time Result:  FRANCE 3 - 1 POLAND


Watch France vs Poland online on Jiocinema


 1986ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஓர் உலகக்கோப்பைத் தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் போலந்து வந்த வேகத்திலேயே வெளியேறியிருப்பதில் இன்றைய போட்டியைப் பார்த்த யாருக்குமே எந்த ஆச்சர்யமும் இருக்கப்போவதில்லை! பிரான்ஸ் அணிக்கு எந்தவிதமான நெருக்கடியையும் தர இயலாமல் கிட்டத்தட்ட 30 நிமிட ஆட்டம் மீதமிருக்கும்போதே ஒட்டுமொத்த அணியும் ஒரு சரணடைந்த உடல்மொழியை வெளிப்படுத்தியதைப் பார்க்கப் பாவமாகத் தான் இருந்தது!


Wojciech Szczesny Juventus Goalkeeper, Profile & Stats ...
Wojciech Szczęsny

                                      

போலந்தைப் பொறுத்தவரை 36 ஆண்டுகாலம் கழித்து இந்த உலகக்கோப்பையின் இரண்டாம் சுற்றுக்கு அவர்கள் தகுதிபெற்றதற்கே ஒற்றைக் காரணம் அவர்களது கோல் கீப்பரான ஸ்கென்சி (Szczęsny) தான்! கோல் கீப்பர்களுக்கான தர வரிசையில் 13 ஆம் இடத்தில் இருக்கும் ஸ்கென்ஸி இந்த உலகக்கோப்பைத் தொடரில் மட்டும் 24 கோல்களைத் தடுத்திருக்கிறார் இன்றைய போட்டியிலும் பிரான்ஸ் அணியின் அசாத்தியமான ஆட்டத்துக்கு சளைக்காமல் எதிர்வினை ஆற்றியது ஸ்கென்ஸி மட்டுமே! இறுதியில் மூன்று கோல்களைக் கொடுத்துவிட்டாலும் முதல் பாதியில் (44 நிமிடங்கள் வரை!) பிரான்ஸ் அணியின் அட்டாக்குகளை எல்லாம் தாண்டி கோல் போஸ்ட்டைத் தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் ஸ்கென்ஸி வைத்திருந்தார் என்பது உண்மை!

France vs Poland Highlights FIFA World Cup 2022: Mbappe, Giroud shine as  France beat Poland 3-1, reach quarterfinals | Hindustan Times
Olivier Giroud

பிரான்ஸ் அணியைப் பொறுத்தவரை, விருவிருவென மைதானமெங்கும் பந்தை விரட்டிய வேகத்தில் போட்டியைக் காணும் கண்களுக்கு விருந்து வைக்கத் தவறவில்லை! முதல்பாதியின் 44 நிமிடத்தில் ப்ரான்ஸ் அணியின் கிரூட் (Olivier Giroud), கோல்போஸ்ட்டின் இடது முனையை நோக்கிக் கடத்தி வந்த பந்தை கோல் கீப்பர் தன் முழு உயரத்தையும் நீளவாக்கில் நீட்டித்தும் அவரைக் கடந்து வலது முனையில் தஞ்சம் புகுந்த அற்புதமான கோலை அடித்துத் தன் அணிக்கு நிம்மதி பெருமூச்சைப் பரிசளித்தார்! அற்புதமான கோல் அது.... அதற்குப் பின் இரண்டாம் பாதியில் எம்பெப்பே (Kylian Mbappé) அடித்த இரண்டு கோல்களுமே அசாத்தியமானவை...!

France vs. Poland: Mbappé Scores Twice to Send Poland on Its Way - The New  York Times
Kylian Mbappé
இந்த உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் தற்போது முதலிடம் (5 கோல்கள்) பிடித்துள்ள எம்பெப்பே இன்று அடித்த மின்னல் வேக கோல்கள் இரண்டுமே அபாரம்!
நாக்-அவுட் போட்டிகள் தொடங்கியதிலிருந்தே ஆட்டங்கள் செம சூடுபிடிக்கத் துவங்கிவிட்டன.... நேற்றைய போட்டியில் அர்ஜெண்டினா மட்டும் சற்று அசமந்தமாக ஆடியது, ஆஸ்திரேலியாவை வீழ்த்த இதுபோதும் என்பது போன்ற ஆபத்தான அணுகுமுறையில்! ஆனால் அதே வேளையில் அமெரிக்காவை வீழ்த்திய நெதர்லாந்து வெளிப்படுத்திய ஆட்டத்தில் முழு முனைப்பு தெறித்தது! இன்றைய போட்டியில் தனது முழுவேகத்தை வெளிப்படுத்திப் புயலாக விளையாடிய பிரான்ஸ் அணியை எதிர்கொள்ளப் போதுமான ஆட்டம் இல்லாத போலாந்துக்கு இரண்டாம் பாதியின் கூடுதல் நிமிடங்களில் கிடைத்த அந்த பெனால்டி கோல் மட்டுமே ஒரே ஆறுதல்!
இன்று நடக்கப்போகும் இன்னொரு போட்டியான இங்கிலாந்து v செனகல் போட்டியில் வெல்லப்போகும் அணி கால் இறுதியில் பிரான்ஸ் அணியைச் சந்திக்கும்!

அன்புடன்,
பிரபு எம்

Monday, February 23, 2015

உலகக்கோப்பை 2015 - இந்தியா vs தென்னாப்பிரிக்கா : எழுச்சியின் அறைகூவல்!

"என்னது இந்தியா இன்னைக்கும் ஜெயிச்சிருச்சா???!!"

ஒருவேளை இன்றைக்கு மேட்ச் பார்க்க மோக்கா இல்லாத இந்திய ரசிகர்கள் ரிசல்ட் கேட்டுப் பெரும்பாலும் இப்படித்தான் ரியாக்ட் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்!! ("மோக்கா" என்றால் ஹிந்தியில் வாய்ப்பு - Chance or Opportunity என்று பொருள்!)

மோக்கா மோக்கான்னு பாடினியே....கடைசில‌ இப்படி மொக்கை வாங்கிட்டுப் போயிட்டியே!


பாகிஸ்தானால் இந்த வருடமும் வெடிக்க முடியாத பட்டாசு பொட்டலத்தை சௌத் ஆஃப்ரிக்க ஜெர்சியில் நம் இந்திய ரசிகருக்குக் காலிங்பெல் அடித்து அன்பளிக்கும், ஒரு சீரியல் போல தொடரும், அந்த‌ "மோக்கா மோக்கா" விளம்பரம் உணர்த்துவதும் இதே விஷயத்தைத்தான், அதாவது தென்னாப்பிரிக்கா அணி கெப்ளர் வெஸ்ஸல்ஸ் காலத்திலிருந்து ஹான்ஸி குரோனியே, க்ரீம் ஸ்மித், இப்போது ஏபி டி வில்லியர்ஸ் வரையிலும் இந்தியாவுக்கு வெற்றிபெற‌ ஒரு சிம்ம சொப்பணமாகத்தான் திகழ்ந்து வந்திருக்கின்றது! பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியிருந்தாலும் தற்சமயம் அது ஒரு பலவீனமான அணி என்று பாகிஸ்தானியர்களே பழிபோடுமளவு பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது! இந்த நிலையில் "சௌத் ஆஃப்ரிக்காவை அடிங்கடா பார்க்கலாம்!" என்கிற உதார் மனப்பான்மையோடுதான் உலகம் உற்றுநோக்கியது இந்திய அணியை இன்று! ஆனால் நம்ம கேப்டன் கூல் டாஸோடு சேர்த்து மேட்சையும் அள்ளிக்கொண்டு வந்ததை கிள்ளிப் பார்த்துக்கொண்டுதான் உண்மையென்று உணர்கிறேன்! பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என்று ஒட்டுமொத்த அணியின் செயல்பாடும் இன்று கம்பீரமாய்க் கட்டவிழ்த்திருப்பது இந்தியாவின் எழுச்சியின் அறைகூவலை!

இத்தனை வலுவான அணியை ஆஸ்திரேலிய மண்ணில் அதுவும் மெல்போர்னில் இப்படி ஒரு க்ளீன் டாமினென்ஸுடன் (Clean dominance) வீழ்த்தியது நம்மவர்களின் அசாத்தியமான நம்பிக்கையைத்தான் பறைசாற்றுகிறது! சூப்பர்ப்பா!!!

The Match!


டாஸ் லயே நம்ம டீம் பாஸ்! :

உலகின் மிக பிரம்மண்டமான மொல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த பத்துப் போட்டிகளில் முதல் பேட்டிங் செய்த அணிகளின் சராசரி ஸ்கோர் 280+ என்ற தகவலைப் பார்த்தபோது சற்று ஆச்சர்யமாகத்தான் இருந்தது! இந்த ட்வெண்டி-20 யுகத்தில் ஆடுகளங்கள் எல்லாமே பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாகத்தான் வடிவமைக்கப்படுகின்றனவோ என்னவோ! ஏற்கெனவே சவாலான சூழலில் இந்தப் போட்டியில் டாஸ் ஒரு மிக முக்கியமான அம்சம்.... தோனி எப்போதும் சொல்வதுபோல் "We can't take control over the toss" என்பது நூறு சதவீதம் உண்மைதானென்றாலும் நேற்றைய சூழலில் நம்ம தல தோனிக்கு அடித்த டாஸிலேயே இன்றைக்கு பாஸ் பண்ணிடுவோம்னு தோணியது நிஜம்!

பார்ட்னர்"ஷிப்" பின் மீகாமன்!


"மீகாமன்" ஷிகார் தவான்! :

தன்னிகரற்ற பவுலிங்..... உலகத்தர பேட்டிங் இரண்டும் வாய்த்ததோடு மட்டுமில்லாமல் அதி அபாயகரமான ஃபீல்டிங்கும் வாய்க்கப்பெற்ற அணி தென்னாப்பிரிக்கா! கவர் மற்றும் பாய்ண்ட் உள்ளிட்ட‌ திசைகளில் படுசாகசமாக பந்தினைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் திடுக்கிட வைக்கும் அவர்களது ஸ்டெம்பை நேராகத் தாக்கும் "த்ரோ"க்களும் உலகப் பிரசித்தம்! தென்னாப்பிரிக்காவின் இந்த குறிப்பிடும்படியான ஃபீல்டிங்கையும் "அதிசிய ஸ்விங்கர்" டேல் ஸ்டெய்னை எதிர்கொள்வது பற்றியும் மிகத் துல்லியமான ஓர் எச்சரிக்கையை இந்திய அணிக்கு வழங்கியிருந்தார் சச்சின் டெண்டுல்கர் இந்தப் போட்டிக்கு இந்தியா தயாராகும் சூழலில்! சச்சினின் அந்த எச்சரிக்கையையும் மீறி ரோஹித் ஷர்மா தனது விக்கெட்டை ஒரு க்விக் சிங்கிளுக்காக ஓடி டைரக்ட் ஹிட்டாகி வெளியேறியபோது வேதனையாகத்தான் இருந்தது! ஸ்டெய்னின் பந்துவீச்சில் முதல் ஓவரை ரோஹித் ஷர்மா மெய்டனாக விடுவது இன்றும் ஒரு வாடிக்கையாகவே தொடர்ந்தது! ரோஹித் வெளியேறிய போது இந்திய மனதின் அத்தியாவசிய தேவையாக இருந்தது ஒரு பார்ட்னர்ஷிப்! அதனை அப்பழுக்கின்றிக் கொடுத்தது ஷிகார்-கோலி இணை!

முதல் விக்கெட்டைப் பறிகொடுத்து தத்தளித்த கப்பலுக்கு மீகாமனாக செயலாற்றினார் ஷிகார் தவான்..... சென்ற போட்டியிலேயே குறிப்பிட்டதைப்போல மிகக் கச்சிதமான "டச்"சில் இருக்கிறார் ஷிகார். ஆஃப் சைடில் ஃபிலாண்டரின் இரண்டாவது ஓவரில் பந்தை பவுண்டரிக்கு கனெக்ட் செய்த அந்த ஸ்கொயர்- கட் ஷாட்டிலேயே தெளிவாகத் தெரிந்தது தவானின் ஃபார்ம்..... நேற்று தவான் வெளிப்படுத்திய ஆட்டத்தில் ஷாட் செலக்ஷனில் தொடங்கி ஸ்ட்ரைக் ரொடேஷன் வரை பேட்டிங் டிபார்ட்மென்டில் எந்தக் குறையையும் காணமுடியாத அளவு நேர்த்தி! வழக்கத்துக்கு மாறாக நேற்று தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சைவிட ஸ்பின் தான் அதிகளவு சுழன்றது.... நம்மவர்கள் ஸ்பின்னில் ஆடுவதில் ஜாம்பவான்கள்தான் என்றாலும் துணைக்கண்ட ஆடுகளங்களில் சுழல்வீச்சை எதிர்கொள்வதை விட சற்றே வித்தியாசமான சவால் விடுப்பது ஆஸ்திரேலிய ஆடுகளங்கள்! உதாரணமாக நம்ம பிட்சுகளில் பேட்ஸ்மேன்கள் விரும்பி ஸ்லைஸ் செய்யும் "ஆங்குலர்" ஷாட்டுகள் ஆஸ்திரேலியாவில் ஸ்லிப் திசையில் விக்கெட்டைப் பறித்துவிடும்! மட்டையை நேர்கோணத்தில் தள்ளியும் இழுத்தும் ஆடுவதுதான் இவ்வகை ஆடுகளங்களில் நிலைத்து ஆட வழிமுறை அந்த வகையில் "ஃபுட் வொர்க்" மிகத் துல்லியமாக இருப்பதன் அவசியத்தை மிக அழகாக செய்து காட்டினார் ஷிகார் தவான்! அற்புதமான பேட்டிங்கில் 137 ரன்கள் எடுத்தார் நேற்றைய ஆட்ட நாயகன்!

மூழ்காத ஷிப்பே பார்ட்னர்ஷிப்தான்!


இந்தியாவின் பார்டர்னர்ஷிப்புகள்:

டெஸ்ட், ஒருநாள், ட்வெண்டி-20 என எந்தவகைக் கிரிக்கெட் போட்டியென்றாலும் பேட்டிங்கில் அத்தியாவசியமானது "பார்ட்னர்ஷிப்" அமைப்பதுதான்..... டெஸ்ட் போட்டியென்றால் மூன்று முதல் ஐந்து பார்ட்னர்ஷிப்கள் சிறப்பாக அமைவதும், ஒரு நாள் போட்டிகளில் இரண்டு அல்லது மூன்று , டி-20யில் குறைந்தபட்சம் ஒன்று என்று எண்கள் மாறுமே தவிர ஜோடிபோட்டு ஸ்கோர்செய்வதன் அவசியம் மாறப்போவதில்லை! நேற்றைய போட்டியில் இந்திய அணி அமைத்த இரண்டு சத‌ பார்ட்னர்ஷிப்களை ஒரு பாடமாகவே ஆவணப்படுத்திவைக்கலாம் அத்தனை அற்புதமான கூட்டு முயற்சி அது!

கோலி - தவான் இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 127 ரன்களை சேர்த்தது 24.2 ஓவர்கள் களத்தில் நின்று! ஓவருக்கு வெறும் 3 ரன்கள் என்று முதல் பவர்ப்ளே முடிவில் தடுமாறிய அணியின் ரன்விகிதத்தை அசராமல் 5.18க்குக் கொண்டுசென்ற நேரம் பார்த்து கோலி எதிர்பாராதவிதமாகத் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார்.... இம்ரான் தாஹிரின் பந்தைத் தொடர்ந்து ஆன்-ட்ரைவ் செய்ய ஆர்வமாய் இருந்த கோலியை சிம்பிளாக ஷார்ட்-மிட்வெக்கெட்டில் ஒரு ஃபீல்டரை நிறுத்தித் தூக்கியது தென்னாப்பிரிக்காவின் சாதுர்யம்! அற்புதமான பார்ட்னர்ஷிப்  அந்தத் தருணத்தில்(27வது ஓவர்) உடைந்துபோனபோது அடுத்து 35 ஓவர்கள் வரை அணியை வழிநடத்த இன்னொரு பார்ட்னர்ஷிப் அமைந்தாகவேண்டிய நெருக்கடி ஆட்கொண்டது (35 ஓவர்களுக்குமேல் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்த ரெய்னா-தோனியிடம் ஒப்படைத்துவிடலாம் என்னும் எளிமையான ஸ்ட்ராடெஜியின் அடிப்படையில்!)
 இதனை அருமையாக சுமந்தது அஜின்க்யா ரஹானே!

தவான் - ரஹானே இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 125 ரன்களை வெறும் 16 ஓவர்களில் சேர்த்தது அசாத்தியமான 7.6 ரன்விகதத்தில்!

ரகளையாகக் கலக்கிய ரஹானே!


ரஹானேயின் பேட்டிங் பவர்ப்ளே:

விக்கெட்டில் நிலைத்து ரன்வேகத்தை மெல்ல மெல்ல உயர்த்த ஆரம்பித்த நிலையிலேயே கோலியின் விக்கெட்டை இந்தியா இழந்தபோதே தெரிந்துவிட்டது பேட்டிங் பவர்ப்ளே விதிகளுக்குக் கட்டுப்பட்டு 35 - 40 ஓவர்களில்தான் எடுக்கப்படும் என்று! வந்த வேகத்திலிருந்தே மிக அழகாக ரன்களை சேர்க்கத் துவங்கிய ரஹானே, பவர்ப்ளே நெருங்கும் முன்பாகவே சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசத் துவங்கிவிட்டார்.... நேர் திசையில் லாங்-ஆன், லாங்-ஆஃப் இரண்டிலுமே அனாயசமாகப் பந்துகளை எல்லைக்கோட்டுக்கு எளிமையாய் ரஹானேவால்   வழியனுப்பிவைக்க முடிந்தது! மிகக் குறிப்பாக பேட்டிங் பவர்ப்ளேவில் தவான்-ரஹானே இணை விக்கெட் இழக்காமல் சேர்த்த 44 ரன்கள் மிக முக்கியமானவை....! எதிர்பார்ப்பையும் கடந்து 43-வது ஓவர் வரை நீடித்தது இந்த இணை....! இன்னும் ஏழு ஓவர்களே மீதமிருக்கும் சூழலில் ஆரோக்யமான ரன் விகிதத்தில் இன்னும் ஏழு விக்கெட்டுகள் கைவசம் இருப்பதுதான் ஒருநாள் போட்டிகளில் மிக வலுவான நிலை.... அதன்பிறகு இழக்க ஒன்றுமில்லை முடிந்தவரை ரன்களை அதிகப்படுத்துவதே ஒரே நோக்கமாக மைதானத்தின் ஒவ்வொரு முடுக்கிலும் அடித்து ஆட முயற்சி செய்ய...... தவான், ரெய்னா,ரஹானே, ஜடேஜா என வரிசையாக நடையைக் கட்டத் துவங்கினாலும் 315 ரன்கள் வரை சேர்க்க வாய்ப்பு மிகத் தெளிவாக இருந்தது இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக தோனியின் விக்கெட்டை ஒரு ஸ்லோ பவுன்சர் காவு வாங்கிவிட அஷ்வினின் முயற்சியால் வலுவான 307 / 7 என்கிற வலுவான ஸ்கோருடன் பேட்டிங்கை முடித்தது இந்தியா!

நாங்களும் ரன்-அவுட் செய்வோம்ல!


அழுத்தத்துக்கு அடுத்தடுத்து வீழ்ந்த தென்னாப்பிரிக்கா:

மின்னொளியில் பந்து ஸ்விங் ஆனது மட்டுமின்றி நல்ல மூவ்மெண்டும் கொடுக்கும் ஆஸ்திரேலிய சூழல்களில் என்பது பொதுவான கணிப்பு..... அது நேற்றும் பொய்யாகவில்லை....! இருந்தாலும் பலவீனமான இந்திய பவுலிங் அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமே! ஹஷிம் ஆம்லா ஒரு பெருஞ்சுவர் என்றால் இளம் வீரரான க்விண்டென் டி காக் ஓர் அதிரடி சரவெடி... அதுவும் நேற்றைய போட்டிக்கு முந்தைய ரெகார்டின் படி இந்தியாவுக்கு எதிராக  க்விண்டன் டி காக்கின் சராசரி மட்டுமே 103.3 என்று இருந்தது! ஆடுகளத்தின் நிலைக்கு ஏற்ப முகம்மது ஷமி வீசிய ஸ்விங் பவுலிங் மற்றும் வேக மாற்றங்கள் 22 வயதான டி காக்கின் அனுபவமின்மையைத் தெளிவாகவே சோதித்தது! அவசரகதியில் அடித்தாடத்தான் விழைந்தாரே தவிர நீடிக்கும் துவகத்தைத் தர அவர் எத்தணிக்கவில்லை...... சொற்பமாக மிட்-ஆஃபில் கேட்ச் கொடுத்து விக்கெட்டைத் துறந்தார்.....! அடுத்துவந்த டுப்ளெஸி பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அருமைதான்.... ஆனாலும் ஏனோ தெரியவில்லை ஆம்லாவும் அவரும் அதிகம் பேசிக்கொள்ளக்கூட இல்லை! சரியான திட்டமிடல் இல்லாததுபோன்ற தோற்றத்தைத்தான் கொடுத்தது மிக முக்கியமானதாக இருந்திருக்க வேண்டிய அந்த அனுபவ இணை...... சுதாரிப்பின்றி ஆம்லா ஆடிய தவறான ஷாட் மிக மிகக் காஸ்ட்லியான அவரது விக்கெட்டை இந்தியாவுக்குத் தாரை வார்த்தது! கேப்டன் டி வில்லியர்ஸ் என்னைப் பொறுத்தவரை தற்போதைய சூழலில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பேன்! ஆனாலும் அழுத்தமான சேஸிங்கில் அவர் அத்தனை சோபிப்பதில்லை என்னும் வழக்கமான புகாரை இன்றும் தொடர்ந்து வாசித்தார்.... ஒரு முனையில் டுப்ளேஸி தன்னால் முடிந்தவரை நிலைத்து ஆடினாலும்..... டுமினி, மில்லர் என அணியின் கடைசி நம்பிக்கைகளும் சலனமேயின்றிக் கதையை முடித்துக்கொள்ள ஒரு ஹேண்ஸம் ஹேண்ட்ஷேக்குடன் ஆட்டத்தை முடித்தது இந்திய அணி மீதமுள்ள விக்கெட்டுகளைச் சம்பிரதாயமாய் சரித்துவிட்டு!

மோஹித் ஷர்மா மற்றும் அஷ்வினின் பந்துவீச்சு பங்களிப்பு நன்றாகக் கைகொடுத்தது தனிச்சிறப்பு!

ஹைலைட்டுகள்:

* நேற்றைய போட்டியில் இந்தியாவிடம் மிகவும் ரசித்தது மிக வேகமான களத்தடுப்பாட்டம்.... சில த்ரோக்களும் கடினமான கேட்ச் வாய்ப்புகளையும் தவறவிடுவதில்கூட பிழையில்லை களத்தில் இத்தனை ஆக்ரோஷமான தாக்குதல் தடுப்பாட்டத்தில் மொத்த அணியும் திமிரும்போது! நேற்று இந்தியாவின் ஃபீல்டிங் முனைப்பு அட்டகாசம்!

* என்னதான் ரஹானே இன்று ஓர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மிக வலுவாக அணியை நிலை நிறுத்தியிருந்தாலும் கடைசி ஓவர்களில் இன்றும் சீட்டுக்கட்டாக சரிந்தது இந்திய அணி! தோணி தனது ஹெலிகாப்டரைப் பழுதுபார்த்தே ஆகவேண்டும் மிக விரைவில்!

*  ஏபி டி வில்லியர்ஸின் கேப்டன்ஸியில் நேற்று நான் ரசித்தது உற்று நோக்கியது இரண்டு விஷயங்களை...

ஒன்று...... அவர் ஃபீல்டிங் பொஸிஷன்களைத் தேர்த்து வழங்குவதன் சைக்காலஜி! மிடில் ஓவர்களில் ஷார்ட்-தேர்ட் மேனாக (ஃப்ளை ஸ்லிப்) மார்னே மார்கலை நிறுத்தினார்.... ஸ்லிப்பைத் தாண்டி தூக்கியாடும் வாய்ப்பினை அடியோடு தவிர்க்க ரஹானேவைத் தீவிரமாக உந்தியது மார்க்கெல்லின் உயரம்! அதே போல பொதுவாகவே ஒரு நாள் போட்டிகளில் மிகவும் பயனளிக்காத ஷார்ட் கவர் , ஷார்ட் எக்ஸ்ட்ரா கவர் பொஸிஷன்களில் அவர் தொடர்ந்து ஃபீல்டர்களை நிறுத்தியவிதத்தில் அருகில் இருக்கும் ஃபீல்டர்களால் ஏதோ ஒருவகையில் டிஸ்டர்ப் ஆகத்தான் செய்தார்கள் பேட்ஸ்மேன்கள்......

இன்னொரு விஷயம்.... தனது வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங்கில் தேர்ந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு தென்னாப்பிரிக்கர்கள் பந்து சிக்கும்போது எல்லாம் விடாத கவனுத்துடன் பந்தின் ஒருபகுதியின் பளபளப்பைப் பாதுகாத்துக்கொண்டே இருந்தது! இப்போதெல்லாம் கேப்டன்கள் அதிகம் மறக்கும் யுக்தி இது..... டெத் ஓவர்களில் டேல் ஸ்டெயினால் ரிவர்ஸ் ஸிவிங் கச்சதமாக டெலிவர் செய்ய முடிந்தது இந்த வித்தையினால்தான்! மற்றபடி திட்டமிடுதல்.... சேஸீங் அழுத்தத்தைக் கையாளுதல் என எதிலும் எவ்விதப் புதுமையோ அல்லது உத்வேகமோ இல்லாத ஃப்ளாட் (Flat)  செயல்பாடுதான் ஆக்கிரமித்திருந்தது தென்னாப்பிரிக்காவை இம்முறை!

* இந்தியாவைப் பொறுத்தவரை இது அற்புதமான எழுச்சி..... இனிமேல் வரும் ஆட்டங்களில் பெரும்பாலும் அஸோஸீயேட் டீம்களுடன் தான் மோதவிருக்கிறோம்..... இந்த ஆட்டங்களில் நமது பெஞ்சில் இருக்கும் வீரர்களை ஆடப் பணித்து நமது பெஞ்ச் ஸ்ட்ரெந்தையும் ஊர்ஜிதம் செய்து கொள்ள சிறந்த வாய்ப்பு இருந்தாலும் தொடர் வெற்றிகளின் தேவையைக் குறைத்து எண்ணும் வழியில்லை! UAE அயர்லாந்து வெஸ்ட் இண்டீஸ் ஜிம்பாப்வே எனப் போகும் பயணத்தைப் பார்த்து ரசிப்போம்!

இந்தியாவுக்கு சூடு பற்றிக்கொள்ளப் போவதென்னவோ இனிமேல் க்வார்ட்டர் ஃபைனலில்தான்......!

அடுத்த போட்டியில் சந்திப்போம்!

அன்புடன்,

பிரபு எம்.

Wednesday, February 18, 2015

உலகக்கோப்பை 2015 - இந்தியா v பாகிஸ்தான் : அழுத்தங்களை எதிர்கொள்ளல்!

இந்தப் பதிவை ஆட்டம் நடந்த மறுநாளே பதிந்திருக்க வேண்டியது சிலபல காரணங்களால் முடியாமல் போய்விட்டது.... தாமதத்திற்கு மன்னிச்சூ!




முதல்சீனிலேயே க்ளைமேக்ஸ் ரேஞ்சுக்குப் பரபர காட்சி வைக்கப்படும் ஜேம்ஸ்பாண்ட் படம் போல அமைந்துவிட்டது இந்த உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவுக்கு! முதல் போட்டியே பாகிஸ்தானுடன் என்ற நிலையில் வீரர்களைவிட ரசிகர்கள் அதிகமான பதற்றத்துடன் இருந்துவந்தனர்..... முடிவு நல்லவிதமாக வந்தவகையில்தான் எத்தனை நிம்மதி... நேற்றைய போட்டியின் ரிசல்ட் ஒரு "வெற்றி"யின் மகத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது...! முழுமையான திருப்தி கொடுத்த ஆட்டத்தில் இந்திய அணியின் கூட்டு செயல்பாடு மிகவும் செழுமையாக இருந்தவிதத்தில் தேசமெங்கும் நம்பிக்கை விதைகள் துளிர்க்க ஆரம்பித்துள்ளதும் நிஜம்....!

நேற்றைய‌ ஆட்டத்தின் முன்பான இந்திய மனநிலையில் இத்தனை நம்பிக்கை இருந்திருக்கவில்லை என்பதே உண்மை! காரணம் மிகவும் அதிகப்படியான அழுத்தங்கள் படிந்திருந்தன கேப்டன் தோனியின் மீது....... யுவ்ராஜ் சிங் உட்பட சீனியர் வீரர்கள் யாவரும் முற்றிலுமாக தேசிய அணியைவிட்டு ஒதுக்கப்பட்டது மட்டுமன்றி அவ்வாறு நீக்கப்பட்ட அனுபவ வீரர்களுக்கு மாற்றுத் தேர்வுகளான‌ அம்பத்தி ராயுடு, ஸ்டூவர்ட் பின்னி, அக்ஸர் படேல் போன்ற இளம்வீரர்களுக்கும் உலகக்கோப்பை விளையாடுமளவு அனுபவம் சுத்தமாக வாய்த்திருக்க‌வில்லை அதிலும் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆடும் பக்குவம் பெற்றிருக்க இந்திய இளம் வீரர்களுக்கு அத்தனை எளிதான சாத்தியமுமல்ல! இதுவரையிலான உலகக்கோப்பை இந்திய அணிகள் களத்தில் முன்பின் இருந்திருந்தாலும் காகிதத்தில் மிகவும் வலுவான அணிகளாகவே இருந்துள்ளன.... இந்த உலகக்கோப்பை இந்திய அணிதான் இதற்கும் விதிவிலக்காக அமைந்துவிட்டது! பேப்பரில் பெயர்களைப் பார்த்தபோது எந்தவொரு இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கும் திருப்தியோ நம்பிக்கையோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லாததொரு அணித்தேர்வு இம்முறை! இவை அனைத்திற்கும் பொறுப்பாளராக எண்ணற்ற குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்தது எப்போதும் போல தேர்வுக்குழு அல்ல மாறாக கேப்டன் தோனி! ஆக.... தொடர் தோல்விகள், புதுமைகள் இல்லாத சோர்வான கேப்டன்சி, சீனியர் வீரர்களின் புறக்கணிப்பு என ஏகப்பட்ட விமர்சனங்களுடன் மிக அதிகமான அழுத்தத்துடனும் உலகக்கோப்பையில் களமிறங்கினார் எம்.எஸ் தோனி! இருந்தாலும் ஃபர்ஸ்ட் லுக்கில் மிக யதார்த்தமான உடல்மொழியை தோனி வெளிப்படுத்திய விதத்திலேயே அவரது தனிப்பட்ட ரசிகர்களுக்கு நேற்று நம்பிக்கை பிறந்திருக்கும்!

பாகிஸ்தானை வீழ்த்தியாக வேண்டும் என்ற உணர்ச்சிப்பூர்வமான இலக்கு முதல்போட்டியிலேயே do or die போன்றதொரு நாக்-அவுட் சூழலை உருவாக்கிவிட்டது அதைவிட அதிகப்படியான அழுத்தம் பாகிஸ்தான் மீது திணிக்கப்பட்டிருந்ததும் நிதர்சனம்! பற்றாக்குறைக்கு அந்த "மோக்கா மோக்கா" டிவி விளம்பரம் வேறு! இரு அணிகளின் மீதான அளப்பெரிய அழுத்தம் திணிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் எந்த அணி அதனை சிறப்பாக எதிர்கொள்கிறதோ அதில்தான் இருந்தது வெற்றியின் சூட்சமம்!

கேப்டன் கூல்:




தோனியும் சரி மிஸ்பாவும் சரி இருவருமே நிதானத்தில் தேர்ந்தவர்கள்...... ஆனால் தோனியின் ஆளுமையில் அவர் தனது கூல் ஆட்டிட்யூடை அணிவீரர்களுக்கும் கடத்திவிடுவார் அங்குதான் சொதப்பிவிட்டார் மிஸ்பா.... தான் மட்டும் கூலாக களத்தில் நின்றுவிட்டால் வெற்றிக்குப் போதாது என்பதைத் தான் அவர் உணர்ந்து செயலாற்றவேண்டும் அடுத்த போட்டிகளில்! டாஸில் வென்று சென்டிமென்டலாக பேட்டிங்கைத் தேர்வு செய்தபோது க்ளீன் ஷேவில் அத்தனை புத்துணர்வு தெரித்தது தோனியிடம்.... முந்தைய தொடரின் தோல்விகளையெல்லாம் அவர் முற்றும் மறந்திருந்த துள்ளல் உடல்மொழி தந்த நம்பிக்கையே அலாதியாக இருந்தது! இந்தப் போட்டியில் நான் தோனீயிடம் ரசித்த விஷயங்கள்......

1) வெற்றிக்கென அமைத்த வியூகங்களை மிகவும் எளிமையானதாக அமைத்துக்கொண்ட விவேகம்.

2) களத் தடுப்பில் மிக வெளிப்படையான அணுகுமுறையால் அத்தனை பெரிய மைதானத்தில் மொத்த அணியையும் தெளிவான புரிதலுடன் இயக்கிய விதம்.

3) சுறுசுறுப்பான ஃபீல்டிங் வியூகங்கள்.... வேகவேகமாக தோனியால் நேற்று ஃபீல்டிங் அமைப்பினை மாற்ற முடிந்தது மிகச் சிறப்பான ஆளுமை.... பாக். பேட்ஸ்மேன்கள் செட்டிலாவதற்குக் கடும் சவாலாக இருந்தது தோனியின் இந்த அணுகுமுறை

ஒரேயொரு நெகடிவ் அம்சம் என்னவென்றால்...... துவக்க ஓவர்களில் தடுமாறிய வேகப்பந்துவீச்சாளர் முகம்மது ஷமியை விக்கெட் கீப்பிங் பொஸிஷனில் இருந்து தோனியால் பேக்-அப் செய்ய முடியவில்லை.... பொதுவாக இதுபோன்ற வேளைகளில் ஜாகிர்கான் தலைமைப் பண்புடன் செயலாற்றுவார் பவுலர் தடுமாறும்போது தானே முன்வந்து சில டிப்ஸ் வழங்கி லைனை முறைப்படுத்துவார் ஆனால் பவுலிங் டிபார்ட்மென்டில் "ஸ்பியர்ஹெட்" இல்லாத சூழ்நிலையில் கேப்டன் தோனிதான் இதனை வரைமுறைப் படுத்தியாக வேண்டும் ஒருவேளை பாகிஸ்தானின் துவக்கவீரர்கள் சொதப்பாமல் எடுத்த எடுப்பிலேயே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால் நிலைமை மோசமாகிப்போயிருக்கும்!

இன்றியமையாத நிலையில் ஷிகார் தவான் கண்டிருக்கும் கம்-பேக்:




ஷிகார் தவானின் ஆட்டம் நேற்று வயிற்றில் பீரை வார்த்தது! ஸ்கோர் செய்வதைவிட அடுகளத்தில் நிலைத்து ஆடுவதே மிகவும் முக்கியம் என்று எக்ஸ்பர்ட்கள் அறிவுறுத்துவார்கள் அவுட் ஆஃப் ஃபார்ம் பேட்ஸ்மேன்களை.... தொடர்ந்து சொதப்பிவந்த தவான் நேற்று சரியான டச்-சில் இருந்தார்..... ஸ்கொயர் கட் ஷார்ட்களை அவர் கனெக்ட் செய்த விதம் நம்பிக்கையை வாரி வழங்குவதாய் அமைந்திருந்தது..... வெற்றிகரமான 2003 மற்றும் 2011 உலகக்கோப்பைத் தொடர்களில் சச்சின்-சேவாக் இணைந்து கொடுத்த துவக்க நிலையை இப்பொழுது ஏற்றிருப்பது ரோஹித் ஷர்மா - ஷிகார் தவான் இணை என்று நினைத்துப்பார்க்கையில் இவர்களின் பொறுப்பு புரியும் இவ்வகையில் தவான் தனது இயல்பான ஆட்டத்தை முதல் பவர்ப்ளேயில் சிறப்பாக வெளிப்படுத்துவது அத்தியாவசியம்! முதல்போட்டியில் தவான் வெளிப்படுத்திய ஃபார்ம் தொடர்கையில் பெரிய வெற்றிகளுக்கு அடித்தளம் அமைத்துத்தர அவரால் முடியும்.... நம்பிக்கையுடம் காத்திருப்போம் குடுமி வாலாவின் சாகசங்களுக்காக!

கோலி மேஜிக்:



கோலியின் பேட்டிங் திறமை உலகம் அறிந்தது..... சச்சின் டெண்டுல்கரின் இடத்தை விராட் கோலியை வைத்துதான் இந்தியா நிரப்புவதாக ரமீஸ் ராஜா நேற்று வெளிப்படையாகவே கோலியிடம் சொல்ல விராட்டுக்கு வாயெல்லாம் ஒரே புன்னகை... நிற்க.. பேட்டை சுழற்றுவதில் கோலியின் இயற்கையான திறமையும் சர்வதேச அளவில் விளையாட ஆரம்பித்தபின் தனது ஃபார்மை இவ்வளவு வலுவாக நிறுவியிருக்கும் கோலியின் அர்ப்பணிப்பையும் யாரும் சந்தேகிக்கப்போவதில்லைதான் ஆனாலும் கன்ஸிஸ்டன்ஸிதான் சச்சினைத் தொடர்ந்து உலகக்கோப்பை நாயகனாக நிலைநிறுத்தியிருந்தது என்பதை கோலி உணர்ந்து செயலாற்ற வேண்டும்.. நேற்றைய போட்டியில் கோலியின் பாஸிடிவ் பேட்டிங் கண்களைக் கவரும் விதமாக இருந்தது...... சுழல்பந்துவீச்சை அழகாக ஆன்டிஸிபேட் செய்து அட்டகாசமாய் ஆடினார்.... அதீத தற்காப்புடன் அவர் ஆடிய பெரிய ஷாட்களை ரசித்தபோதும் பொறுமையிழக்காமல் தொடர்முழுக்க ஆடவேண்டுமே என்கிற பயமும் மிரட்டிக்கொண்டேதான் இருக்கிறது!

ரெய்னா:




என்னைப் பொறுத்தவரை இந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரெய்னா தான்! அதிரடியானாலும் நிலைத்து ஆடவேண்டுமென்றாலும் நிலைமைக்கு ஏற்ப தன்னை செயல்படுத்தும் திறமும் அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட டீம் ப்ளேயர்..... கடந்த உலகக்கோப்பையில் யுவ்ராஜ் சிங்கின் இடத்தை நிரப்பும் பொறுப்பு ரெய்னாவிடம்தான் இருக்கிறது..... ரெய்னாவின் பழகிய பிரச்னைகளான ஸ்லோ பவுன்சர் பந்துகள் மற்றும் க்விக் ரன் அவுட்கள் போன்றவற்றைச் சரியாக அணுகும்பட்சத்தில் ரெய்னாவால் இந்தியாவுக்கு பெரிய வெற்றிகளைப் பெற்றூத்தர முடியும்!

அஷ்வினின் மெய்டன்கள்:




நேற்று அஷ்வினின் பவுலிங் சார்ட்டை வெறுமனே பார்த்தால்... 8 ஓவர்களில் 41-1 என்று 5.13 எகானமி ரேட்டில் சர்வ சாதாரணமாகத்தான் தெரியும் ஆனால் அஷ்வின் வீசிய மூன்று மெய்டன் ஓவர்கள் ஆட்டத்தில் இந்தியாவை வெற்றிபெற வைத்தது என்பதே நிஜம்! அவர் வீசிய மெய்டன்களின் கணக்கிற்கு அஷ்வினின் பிந்தைய ஓவர்களில் மிஸ்பா பவுண்டரிகளை விளாசி சரிக்கட்டிவிட்டார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் கதறினாலும்.... அந்த மெய்டன் ஓவர்கள் சேஸிங்கில் பாகிஸ்தான் மீது திணித்த கூடுதல் அழுத்தமே தொடர்ந்த விக்கெட்டுகளுக்குக் காரணம்.... என்னைப்பொறுத்தவரை நேற்றைய மேன் ஆஃப் தி மேட்ச் மூன்று மெய்டன்களுக்காக ரவிச்சந்திரன் அஷ்வின்தான்!

உமேஷ் யாதவ் - மோஹித் மற்றும் ஷமி:

இதே பாகிஸ்தானுக்கு எதிரான 2011 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியின் முடிவில் தோனி சொன்னார், "எங்களிடம் அச்சுருத்தும் வேகம் இல்லை, திணறடிக்கும் ஸ்விங் பவுலிங்கும் இல்லை அதனால் நாங்கள் தேர்ந்துகொண்ட ஆயுதம் "டிசப்ஷன்" என்று! அதாவது லைன், லெங்த் மற்றும் பேஸ் களில் வேரியேஷன் மூலமாக பேட்ஸ்மேன்களை ஏமாற்றித்தான் விக்கெட்டுகளை வீழ்த்தினோம்" என்று! நான்கு வருட இடைவெளியில், அப்போதைய வேகப்பந்துவீச்சாளர்களான ஜாஹிர்,முனாஃப், நெஹ்ரா மூவருமே இப்போது அணியில் இல்லை..... ஆனாலும் அவர்களின் மாற்று வீரர்களான உமேஷ்-மோஷித்-மொஹமத் ஷமி யைப் பார்க்கும்போது இவர்களிடம் மட்டும் வேகமோ, ஸிவிங்கோ இருக்கிறதா என்று கேட்டால் என்ன பதில் வரும் என்று எல்லாருக்கும் தெரியும்.... உமேஷ் தொடர்ந்து 140 kmph க்கு மேல் வீசுகிறார்தான் என்றாலும் கண்ட்ரோலில் அவ்வளவு போதிய ஆளுமையில்லாததால் அச்சுருத்த முடியவில்லை! மேலும் இவர்களிடம் அனுபவமும் இல்லை.....! நேற்றைய போட்டியில் இவர்களின் செயல்பாடு ஓரளவு நன்றாக இருந்தது ஆனால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகளுடன் இவர்களது பவுலிங் எடுபடவேண்டும் என்பது பெரும் சவால்!
மேலே குறிப்பிட்டதைப் போல ஜாஹிர்கான் இல்லாத நிலையில் தோனி இந்த பவுலர்களை நெருக்கடி நேரங்களில் பேக் செய்ய வேண்டும்.... முஹம்மத் ஷமி தான் இழந்த ஃபார்மை மீட்டெடுப்பது அடுத்த போட்டியிலேயே கட்டாயம்!

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்தப் போட்டியில் கிரிக்கெட் ஸ்கில்களை விட "இந்தியா-பாகிஸ்தான்" என்னும் அழுத்தத்தைக் கையாளும் விதத்தில்தான் வெற்றி-தோல்வி இருந்தது அந்த வகையில் வெற்றி தோனிக்குத்தான்..... பேட்டிங் சிறப்பாக அமைந்ததில் அதிகமான நம்பிக்கை மேலோங்கியிருக்கின்றது..... ஃபீல்டிங் அற்புதமாக இருந்தது மிக நல்ல விஷயம்.... தோனி இதே துடிப்புடன் தொடர்ந்து அணியை வழி நடத்தும்போது ஏதாவது அதிசியத்தை எதிர்பார்க்கலாம் இந்தியாவிடமிருந்து! ஆனால் கடைசி ஓவர்களில் சரிந்து விழும் மிடில்-ஆர்டரும், பந்துவீச்சு பலவீனமும் இப்போதும் தொடர்கதையாகத் தொடர்ந்துகொண்டேதான் வருகிறது என்பதையும் மறக்கமுடியவில்லை... வழக்கம்போல் நேற்றைய போட்டியிலும் 20-30 ரன்கள் குறைவாகத்தான் நாம் ஸ்கோர் செய்திருந்தோம் என்பது கண்கூடு! இருந்தாலும் இந்த ஒரு வெற்றி பலவிதங்களில் சிறப்பானது...... நம்பிக்கை தந்த வீரர்களுக்கு நாம் தட்டும் ஒவ்வொரு கைத்தட்டலும் அவர்களது வெற்றிக்கு வாழ்த்தாய் தோள்களில் தட்டிக்கொடுக்கும்!

காத்திருப்போம்...... தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டியில் சந்திப்போம்.....

Pictures Courtesy: Espncrcinfo.com

அன்புடன்
பிரபு எம்

Sunday, April 03, 2011

இந்தியா V இலங்கை : துடிக்கட்டும் புஜம்.. நாம் ஜெயித்தது நிஜம்!!!

The champions celebrate with the World Cup trophy

எட்டுத்திக்கும் எதிரொலிக்கின்ற‌து மும்பையில் நேற்றிர‌வு கொட்டிய‌ வெற்றி மேள‌ம்!

"உரித்துப் பார்த்தால் வெங்காய‌த்தில் ஒன்றும் இருக்காது" என்று சொல்லுவார்க‌ள் ஆனால் அதனை உரிக்க‌ உரிக்க‌க் க‌ண் எரிந்து க‌ண்ணீர் சொட்டும் அதேபோல‌த்தான் கிரிக்கெட்டும்....!! தோலுரித்துப் பார்த்தால் கிரிக்கெட்டில் எதுவும் இருக்காதுதான்.... இது "இந்திய‌" அணியே இல்லைதான்... பிசிசிஐ-யின் அணிதான் இது...விளையாடுப‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே இந்திய‌ர்க‌ள்...! ப‌ண‌ம் கொழிக்கும் பிசினஸ்தான்... ஃபிக்ஸிங் ஸ்காண்ட‌ல்க‌ள் வேறு! என்றெல்லாம் தோன்றும்தான்....ஆனால் நேற்று மேட்சைப் பார்த்தபோது உண‌ர்ச்சிப் பெருக்கில் கண்கள் கலங்கியிருக்குமே!!! அதுதான் கிரிக்கெட்!! :-))

என்மீது என் ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரும் வ‌ருத்த‌ப்ப‌ட்டார்க‌ள் கிரிக்கெட்டைப் ப‌ற்றியே எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று... நேற்று அவ‌ர்க‌ளில் ப‌ல‌ரும்கூட‌ ஃபோன் செய்து நேற்று இந்தியா வென்ற‌த‌ன் ச‌ந்தோஷ‌த்தைப் ப‌கிர்ந்து கொண்டார்கள்.... வெல்... அதுதான் கிரிக்கெட்... இவ்வ‌ள‌வு நீளமானதொரு குழு விளையாட்டு வேறெதுவும் இருக்கின்ற‌தா என்று தெரிய‌வில்லை... கிரிக்கெட்டில் என்னை... ஸாரி.. நம்மை ஈர்ப்பது அந்த‌ உணர்ச்சிக் கதம்பமான பொழுதுகளை நாமும் வீரர்களுடன் சில மணித்துளிகள் "வாழ்வது"தான்!!.... Living the moments என்று சொல்லுவார்களே அதேதான்!!! உண‌ர்வுக‌ளை ம‌றைத்துக்கொண்டு வாழும் ஒப்ப‌னை ம‌னித‌ர்கள் உங்கள் வாழ்வில் இருந்தால் அவர்களைக் கூட‌ உட்கார‌வைத்து ஓர் இந்தியா மேட்ச் பாருங்க‌ள்.... ஒப்பனைகளெல்லாம் ஓப்பனாகி அவ‌ர‌து உண்மை நிற‌ங்க‌ளெல்லாம் பொங்கிடும் உண‌ர்ச்சிப் பிர‌வாக‌த்தில் பொங்கிப் பீறிட்டுவிடும்!! :-)))

ஐ.டி க‌ம்பெனி... ஆயிர‌மாயிர‌ம் பேர் க‌ணிணிக்குள் த‌லையைவிட்டுக்கொண்டு காதில் ஐ-பாட் மாட்டிக்கொண்டு ப‌க்க‌த்து கேபின் ந‌ண்ப‌னுக்குப் பிற‌ந்த‌ நாள் என்று க‌ம்பெனி மெயில் சொன்னாலும் அவ‌ன் ஃபேஸ்புக் வாலில் "ஹேப்பி ப‌ர்த் டே!" என்று எழுதி மற‌க்காம‌ல் இர‌ண்டு ஸ்மைலியும் வ‌ரைந்து விட்டு வேலையைத் தொட‌ரும் கலாச்சார‌ம்!!! இதுதான் எங்கள் Unity in Diversity அலுவலகம்!! வார‌நாளில் வ‌ந்துவிட்ட‌ இந்தியா - பாகிஸ்தான் மேட்சைப் பெரிய‌ ஸ்க்ரீனில் அன்று அலுவலகத்தில் ஒளிப‌ர‌ப்பினார்க‌ள்... பெயர் தெரியா கொலீக்குகள் எல்லாம் சேர்ந்து பார்த்துக் கொண்டாடினோம் அந்த உன்னத வெற்றியை....! அதைத் தொடர்ந்து.....வெள்ளிக்கிழ‌மை கேண்டீனுக்குப் போனால் யார் யாரோ "ஹாய்" சொல்லி சிரிக்கிறார்கள்.... " நாளைக்கு ஜெய்க்கிறோம் பாஸ்..BLEED BLUE!!!" என்று சொல்லிவிட்டு போறான் ஒரு ப‌ஞ்சாப்காரன்.... உற்றுப்பார்த்தால் முந்தாநாள் மேட்சில் சேர் மேல‌ ஏறி விசில் அடிச்சிட்டு இருந்த‌ப்போ ட‌ர்ப‌னை வெச்சு ஸ்க்ரீனை ம‌றைச்சிட்டு இருந்த முன்ஸீட்டு ப‌ல்லே.. ப‌ல்லே.. பல்லேலக்கா அவன்தான் என்று அடையாளம் தெரிந்தது!!! And that's cricket! It binds us....

நேற்றைய‌ உண‌ர்வுப்பூர்வ‌மான‌ ஆட்ட‌ம்... வீர‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ நூறுகோடி இந்திய‌க்க‌ண்க‌ளையும் ந‌னைத்த‌து!‍!

We lived those precious moments thanks to our Men in Blue!!!! :-)
Thank You Dhoni and Boys... Thank you Sachin.... Thank you Yuvraj, Zaheer, Gambhir, Kohli... You did it for us... We lived your victorious moments!!!

                           ********************************************

ஓகே இப்போது மேட்சுக்கு வ‌ருவோம்!!

"Every coin has an another side" என்ப‌த‌ன் முழு அர்த்த‌த்தை நேற்று இர‌ண்டுமுறை டாஸ் போட்ட‌போதுதான் புரிந்துகொண்டேன்....!!! சீவி முடித்து சிங்காரிக்குமுன்பே க‌ன்ன‌த்தில் வெச்சுவிட்ட‌ க‌ருப்பு திருஷ்டிப் பொட்டைப்போல‌ இருந்த‌து நேற்றைய மேட்சின் ஆரம்பத்திலேயே அரங்கேறிய‌ ரீ-டாஸ் குழ‌ப்ப‌ம்!! காதுகேட்க‌த் தெரிஞ்ச‌வ‌ங்க‌ளை மேட்ச் ரெஃப்ரீயாக‌ ஐசிசி நிய‌மிக்க‌வேண்டும்....! ச‌ங்க‌க்கராவின் ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் உடல்மொழியில் ஸ்லைட்டாக‌ப் ப‌ல்லைக் காட்டிய‌து.... ஆனாலும் சிரித்து மழுப்பித் த‌ப்பித்துவிட்டார்.... அங்கே ந‌ட‌ந்தது என்ன என்று முனைக்குமுனை மாறுப‌ட்ட‌ த‌க‌வ‌ல்க‌ள்...விஷ‌ய‌ம் முழுதாய்த் தெரியாம‌ல் யாரையும் எதுவும் சொல்லக்கூடாது.... ஸோ அப்ப‌டியே விட்டுவிடுவோம்!!

ம‌ன‌நிலையில் கோளாறு இருப்ப‌வ‌ர்க‌ளை நாம் ஒதுக்க‌க்கூடாது.... அவ‌ர்க‌ளை அர‌வ‌ணைக்க‌ வேண்டும்... அன்பு காட்டி ஆத‌ர‌வு த‌ர‌வேண்டும் என்பது மிகவும் ந‌ல்ல‌ விஷ‌ய‌ம்தான் ஆனாலும் அத‌ற்காக‌ ப‌ஜ்ஜியிட‌ம் உதைவாங்கியும் குண‌ம‌டையாத இந்தக் கடும்பித்து பிடிச்சவனை உல‌க‌க்கோப்பை ஃபைன‌லில் ப்ளேயிங் லெவ‌னில் சேர்த்ததையெல்லாம் ச‌த்திய‌மாக‌ ர‌சிக்க‌ முடிய‌வில்லை! மேக்க‌ப் மேன் ஸ்ரீசாந்தின் ம‌ண்டையும்... அந்த‌ ந‌கைக‌ளும் அருவருப்பான ஒப்பனைகளும் உல‌க‌ அர‌ங்கில் இந்திய‌க் கிரிக்கெட்டுக்கு ஓர் அவ‌மான‌ம் என்றால் சில்ல‌றை போடாம‌ல் செல்பவனை ச‌பிக்கும் ஒரு சிக்ன‌ல் பிச்சைக்காரனைப்போல, அவ‌ன‌து அப‌த்த‌ப் பந்துக‌ளை சித‌ற‌டித்த‌ அனுப‌வ‌ வீர‌ன் ஜெய‌வ‌ர்த‌னேவை நேர‌டியாக‌ அவ‌ன் ஏசிய‌து மொத்த‌ தேச‌த்துக்கும் த‌லைகுனிவு.... எத்த‌னைமுறை இவ‌னால் நாம் அசிங்க‌ப்ப‌ட்டாலும்.. அவமானப்பட்டாலும்... இவ‌னுக்கு டீம் ப‌ஸ்ஸில் விண்டோ ஸீட்டைத் தேர்வுக்குழு கண்டிப்பாக முன்பதிவு செய்யும்... ஒரு மேட்சில் ப‌வுலிங் செய்துவிட்டு ஒன்ப‌து நாள் ஹாஸ்பிட்ட‌லில் ப‌டுத்துக்கிட‌க்கும் நெஹ்ரா போன்ற "ஃபிட்னஸ் கிங்ஸ்" அணியில் இருக்கும்வ‌ரை ப்ளேயிங் லெவ‌னிலும் இவ‌ன் மீண்டு வ‌ர‌த்தான் செய்வான்... ச‌ரி விடுவோம்... ப‌த்துபேர் ம‌ட்டும் விளையாடியும் ஜெயிச்சுட்டோம்... தான் எடுத்த‌ முடிவுக‌ளுக்குத் தானே பொறுப்பேற்று சுமைசும‌ந்து வென்றுகாட்டிவிட்ட‌ வீர‌ன் தோணியைப் பேச‌ எதுவுமில்லை.... வ‌ழ‌க்க‌ம்போல் இந்த‌ வாய்ப்பையும் நாற‌டித்துவிட்டான் இந்த‌ _________( நீங்களே நிரப்பி உங்கள் கோபத்தையும் தணித்துக்கொள்ளுங்கள்!!). திறமை என்பது தோற்கும்போது அதைப்ப‌ற்றி விமர்சிக்க‌ எதுவுமில்லை.... ஜாஹிரின் ப‌ந்துக‌ள்கூட‌ நேற்றுக் க‌டைசியில் த‌க‌ர்க்க‌ப்ப‌ட்ட‌து... ஆனால் ஒரு த‌னிமனிதனின் ATTITUDE பொதுப்பார்வையில் என்றும் விம‌ர்ச‌ன‌த்துக்கு உட்ப‌ட்ட‌தே! ச‌ச்சின் உட்ப‌ட‌ அனுப‌வ‌ வீர‌ர்க‌ள் இவன் தோளில் கைபோட்டு பாந்த‌மாக‌ டிப்ஸ் கொடுத்துத் தேற்றியபோதும் இவ‌ன் வெளிப்ப‌டுத்திய‌ உதாசீன‌ உட‌ல்மொழிதான் இப்ப‌டி என்னை  _______ போடும்வ‌ரை வைத்த‌து!!! இருப்பினும் என் வ‌லைம‌னையின் சுத்த‌ம் க‌ருதி I'm sorry...

நேற்று ஃபைன‌லுக்கான‌ பிர‌த்யேக‌த் த‌யாரிப்பான‌ வான்க‌டே ஆடுக‌ள‌த்தின் முழுக்க‌ மொழுக‌ப்ப‌ட்ட‌ 'சிவ‌ந்த‌ம‌ண்'தான் டாஸில் தோற்று முத‌ல் பேட்டிங் வாய்ப்பை இழ‌ந்த‌ இந்தியாவுக்காக‌ அத்த‌னைபேரையும் ம‌ருக‌ வைத்த‌து! அந்த‌ முத‌ல் ப‌த்து ஓவர்களின் இலவச‌ பேட்டிங் வரம் கிடைக்க‌ப்போவ‌து சேவாக்கிற்கா? அல்ல‌து தில்ஷானுக்கா? என்னும் கேள்வியுட‌ன் காத்திருந்த‌ உற்சாக‌ ர‌சிக‌ர்க‌ளைத் த‌ன் வ‌ர‌லாறு காணாத‌ அற்புத‌ப் பந்துவீச்சால் தில்ஷானை முற்றிலும் அடக்கி த‌ர‌ங்காவையும் வீழ்த்திய‌ ஜாஹீருக்கு நேற்று கிடைத்த‌ ஆர‌வார‌ம் குறைவுதான்! முத‌ல் ஸ்பெல்லின் மூன்று ஓவ‌ர்க‌ள் மெய்ட‌ன்! (முத‌ல் ஓவ‌ரின் இர‌ண்டு ர‌ன்க‌ள் உதிரிக‌ள் (1b, 1lb)) தொட‌ர்முழுக்க‌ ந‌ம‌து அணிக்கு விக்கெட்டுக‌ளை வீழ்த்திக்கொடுத்த‌ வெற்றி நாய‌க‌ன் ஜாஹிர்தான்! இறுதி ஓவ‌ர்க‌ளில் லெங்த்தில் க‌வ‌ன‌ம் செலுத்த‌த் த‌வ‌றிவிட்டார் கார‌ண‌ம் அழுத்த‌ம்.... தோணியும் ஒரு கோண‌ங்கியை அணியில் சேர்த்த‌ பாவ‌த்திற்கு அவ‌ன‌து ஓவ‌ர்க‌ளைத் த‌ர‌ம்பிரிக்க‌ முடியாம‌ல் த‌வித்து ப‌வுல‌ர்க‌ள் தேர்வில் த‌டுமாற‌, அந்த‌ இடைவெளியில் அடித்த‌ள‌ம் அமைத்தார்க‌ள் ச‌ங்காவும் ஜெய‌வ‌ர்த‌னேவும்! (முதல் 5 ஓவர்களை ஜாஹீரை வீசச் செய்துவிட்டு அடுத்த ஸ்பெல்லை 36வது ஓவரில் கொடுத்தது ஒரு ர‌சிக‌னாக‌ என்னை ஈர்க்கவில்லை.... ஜாஹீர் ஒரு பார்ட்னஷிப் ப்ரேக்கர்... கடந்த போட்டிகளில் இதனை தோணியும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்!!)

ஜெய‌வ‌ர்த‌னேவின் ப‌க்குவ‌ப்ப‌ட்ட‌ ச‌த‌த்தை ர‌சித்தேன்.... "ட‌ச் ஷார்டுக‌ள்" எப்ப‌வுமே ஜெயா'ஸ் ட‌ச் என்றாலும்.... ஜுனிய‌ர்க‌ள் குல‌சேக‌ராவும், பெர‌ராவும் ந‌ம்பிக்கையுட‌ன் விளாச‌ எத்த‌னை வாஞ்சையாக‌ அந்த‌ ஹெல்மெட் ம‌ண்டைய‌ன்க‌ளை ஓடி ஓடிச் சென்று உச்சிமுக‌ர்ந்தான் இந்த‌ சீனிய‌ர் சிங்க‌ள‌ன்!! என‌க்கு இல‌ங்கை அணியின் எந்த‌வொரு வீர‌னையும் த‌னிப்ப‌ட்டமுறையில் பிடிக்காது (அர‌சிய‌ல், இன‌ப்பிரிவினை கார‌ண‌ங்க‌ள் ச‌த்தியமாக‌ இல்லை!)எனினும் நேற்று ப்ர‌ஷ்ஷ‌ரைத் தாங்கிய‌ அந்த‌ வெறிய‌ர்க‌ளின் க‌டைசி ஐந்து ஓவ‌ர் ர‌வுடித்த‌ன‌த்தை ந‌டுநிலையாக‌ ர‌சித்தேன்.. அப்போது கைத‌ட்டிய இலங்கை அதிபர் ராஜ‌ப‌க்ஷேவை ஏன் நாம் வென்ற‌பின்பு காட்ட‌வில்லை??? ஸ்டார் க்ரிகெட் சேன‌ல் மீது இன்னும் ஆறாத‌ கோப‌ம் அப்ப‌டியே உள்ள‌து!.. அவர‌து கோழிமுட்டைக் க‌ண்க‌ளின் ஓடு வெடித்து வாத்துக்குஞ்சுகள் ப‌ல்லிழித்து வெளிவருவதைக் காண‌ ஆவ‌லாய் இருந்தேன்...(வெல் இந்த‌ வெறிக்கு இலங்கை அதிபரின் இன‌வெறி அர‌சிய‌ல்தான் கார‌ண‌ம் என்பதைப் பெருமையுட‌ன் தெரிவித்துக்கொள்கிறேன் த‌மிழ‌னாய் அல்ல‌ வெறும் ம‌னிதனாய்!)

சேவாக்... எல் பி ட‌புள்யூ ஆவ‌தும் உட‌னே அணிச்சையாய் அதுவும் தன்னிச்சையாய் ஒரு ரிவ்யூவை வீணாக்குவ‌தும் ஒருபுது ச‌ம்பிர‌தாய‌ம் ஆகிப்போன‌து.... வான்க‌டே மைதான ரசிகர்களின் ஓயாத‌ இரைச்ச‌ல் அட‌ங்கிப்போய் அருகிருந்த அரபிக்க‌ட‌லின் இரைச்சல் உள்நுழைந்து பாலைத்திணையில் சோககீதமாய் அலறியது ரிவ்யூவும் முடிந்து சேவ‌க் ட‌க் வாக் செய்த‌போது! :-((

ச‌ச்சின்... ம‌லிங்காவைத் த‌ன‌க்கே த‌ன‌க்கான‌ ஆன்டிசிப்பேஷ‌னுட‌னும் வேக‌மான‌ ஃபுட் வொர்க்குட‌னும் கையாண்டு பாயிண்டுக்கும் க‌வ‌ருக்கும் ந‌டுவே பந்தை அனாய‌ச‌மாக‌ப் புகுத்திய‌ அழ‌கை ர‌சித்த‌போதே த‌லையில் அபாய‌ம‌ணி அடித்த‌து ம‌லிங்காவிட‌ம்தான் ச‌ச்சின் வீழ்வார் என்று... "மும்பை இண்டிய‌ன்ஸ்" அனுப‌வ‌த்தில் ச‌ச்சின் ம‌லிங்காவைக் கையாண்ட‌தைப் போல‌வே சுதாரித்துக்கொன்ட‌ ம‌லிங்கா அதே த‌ன் பங்கு அனுப‌வ‌த்தில் ஒரு சேஞ்ச் ஆஃப் பேஸில் ம‌லையை ச‌ரித்தார்.... சொற்ப‌ ர‌ன்க‌ளில் மூன்றாவ‌து முறை உல‌க‌க்கோப்பையின் அதிக‌ ர‌ன்க‌ள் சேர்த்த‌ வீரர் (1996 & 2003) என்ற‌ இன்னுமொரு இமால‌ய‌ சாத‌னைக்கு மகுட‌ம் வைப்ப‌தை தில்ஷானிட‌ம் ச‌ச்சின் இழ‌ந்த‌தைத் தாங்க‌முடியாம‌ல் ம‌ட்டும‌ல்ல‌ தோல்வியின் சுவ‌டுக‌ளாலும் தேச‌ம் த‌வித்த‌து....

க‌ம்பீரின் கூர்மையான‌ விழிக‌ளும், தீர்க்க‌மான‌ நாசியும், உறுதியான‌ நெஞ்சும் நேற்று ஒரு இம்மையில் உழ‌ன்ற‌போது "க‌ம்பீர‌"க் க‌விதையுட‌ன் வ‌ந்து போராடி வென்றுகாட்டிய‌து...! க‌ம்பீரின் ம‌ன‌உறுதி ப‌ல்லைக் க‌டித்துக்கொண்டு வேக‌ம்கூட்டி அடித்த‌ ஸ்கொய‌ர்-க‌ட்டிலும், தாவிப்பாய்ந்து நெஞ்ச‌டிக்க‌ விழுந்து ரீச்சான‌ ர‌ன் ஓட்ட‌த்திலும் மிளிர்ந்த‌து.... கோஹ்லியுட‌னும், தோணியுட‌னும் க‌ம்பீர் போட்ட‌ பார்ட்ன‌ர்ஷிப்பை இன்னும் எத்த‌னை வ‌ருட‌ங்க‌ளானாலும் உல‌க‌ம் பேசிக்கொண்டேதான் இருக்கும் கார‌ண‌ம் இது உல‌க‌க்கோப்பை ஃபைன‌ல்!!!

தோணி.... எங்கிருந்து வ‌ந்தாய் நீ???
திடீரென‌ க‌ங்குலி த‌லைமையில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ஆஜான‌பாகு விக்கெட் கீப்ப‌ர்.... தோள்வ‌ரை நீண்டிருந்த‌ த‌லைமுடியும், தேக்கும‌ர‌ தேக‌முமாய் ஸ்ரீல‌ங்காவின் பந்துவீச்சில் ஹெலிகாப்ட‌ர், ஏரோப்ளேன், ராக்கெட் ஷாட்டெல்லாம் ஆடிக்காட்டி அச‌த்தினாய்..... T20 அணிக்குக் கேப்ட‌ன் ஆனாய்... உல‌கக்கோப்பை வென்றும் வ‌ந்தாய்... இந்திய‌ அணியின் கேப்ட‌ன் ஆனாய்.... "கேப்ட‌ன்க‌ள் பிற‌க்கிறார்க‌ள்" என்று ந‌ம்ப‌வைத்தாய்.... பேச‌வேண்டிய‌ இட‌ங்க‌ளில் பேசினாய்..... மௌன‌த்தாலும் பேசினாய்..... இன்றும் உன் தேர்வுக‌ளும் முடிவுக‌ளும் புதிர்போட‌த்தான் செய்கின்ற‌ன‌... க‌ணிப்புக‌ளுக்கு அப்பாற்ப‌ட்ட‌வ‌னாக‌வே இன்றும் இருக்கிறாய்.... வெற்றியைப் பெற்றுத்த‌ந்துவிடுவாய் என்னும் ந‌ம்பிக்கையின் அடிப்ப‌டையிலான‌ க‌ணிப்பை ம‌ட்டும் பொய்க்காம‌ல் காப்பாற்றிவிடுகிறாயே... அதுவே போதும் கேப்ட‌ன் கூல்!!!! ந‌ன்றி தோணி!!

Disappointment and contentment. MS Dhoni and Kumar Sangakkara see the winning hit sail out of the ground

தோணியின் ம‌னஉறுதியை நேற்று ர‌சித்துக் குதித்த‌ப் ப‌ல‌கோடி இந்திய‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்... தோணியின் "DHOSA SHOT"-ஐக் கிண்டலடித்து "பேட்ஸ்மேன் தோணி : When will you again Storm?" என்று கேட்டிருந்தேன் சென்ற‌ ப‌திவில்... தோணி த‌ந்த‌ ப‌திலில் வாய‌டைத்துப்போன‌தில் பெருமையே!!! க‌டைசி சிக்ஸ‌ரில் பேட்டால் வ‌ர‌லாறு எழுதிய‌பின்பும் ரீப்ளேவில் க‌வ‌னித்தீர்க‌ளா அந்த‌க் க‌ண்க‌ளை...... Everybody listen... listen... He's on a Mission... Mission... என்று பாடுவ‌தைப்போல‌... நேற்று ஐம்ப‌து ர‌ன்க‌ளைக் க‌ட‌ந்த‌போது அதை தோணி அறிந்திருக்க‌வேயில்லை.... அதேபோல‌ அந்த‌க் க‌டைசி சிக்ஸ‌ரில் வ‌ர‌லாறு ப‌டைத்த‌பின்னும் கோட்டைத் தாண்டிப் ப‌ந்து ப‌ற‌ந்த‌பின்னும் குத்திய‌ கூர் பார்வையை தோணி அக‌ற்ற‌வேயில்லை... ஆடிய‌ன்ஸ் ஏரியாவில் ப‌ந்து Land ஆன‌ பின்புதான் அஃபிஷிய‌லாக‌த் த‌ன் மிஷ‌னை முடித்துக்கொண்டு செல‌ப்ரேஷ‌ன் மோடுக்கு மாறலானார்.... இது சுத்த‌மான‌ வீர‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே வாய்க்கும் ப‌ண்பு.... மீண்டுமொருமுறை தோணிக்காக‌.... "கேப்ட‌ன்க‌ள் பிற‌க்கிறார்க‌ள்!" த‌லைமைப் ப‌ண்பு என்ப‌து கருவிலேயே வாய்ந்திருக்கிற‌து இந்த‌ க‌ணிக்க‌ முடியாத‌ த‌லைவ‌னுக்கு....

ச‌ச்சினுக்கும் யுவ்ராஜுக்கும் வெற்றியில் வார்த்தைக‌ள் த‌ழுத‌ழுக்க‌... கோப்பையை வென்றுவிட்டு.... நிதான‌மாக‌.... நிறைய‌ கேள்விக‌ளுக்கு நான் ப‌தில் த‌ந்திருக்க‌ வேண்டியிருந்திருக்கும்.... என்று ப‌க்குவ‌மே உருவாய் வேட்டைமுடித்து ப‌சிதீர்ந்த‌ சிங்க‌மாய் தோணி  நிதான‌மாய்க் க‌ர்ஜித்த‌தை வாழ்க்கையில் ம‌ற‌க்க‌மாட்டேன்.... It's a real Quotable Quotation by the Born Captain!

இன்னும் இன்னும் இன்னும் எவ்வ‌ள‌வு வேண்டுமானாலும் எழுத‌லாம்..... இந்த‌த் தருண‌ங்க‌ள் ந‌ம் ஆயுள்கால‌ம் முடிந்தாலும் வ‌ர‌லாறாய் மீண்டும் மீண்டும் அசைபோட‌ப்ப‌ட்டுக்கொண்டே இருக்கும்... ப‌ழைய‌ த‌லைமுறையின் க‌பில்தேவின் வெற்றியை நாமும் கொண்டாடியிருப்ப‌தைப் போல‌..... தோணியின் இந்த‌ வெற்றியை அடுத்த‌ த‌லைமுறையின‌ரும் நினைவுகூர்ந்தும‌கிழ்வார்க‌ள் அப்போது இத‌னையெல்லாம் 'லைவ்'வாக‌ப் பார்த்த‌வ‌ர்க‌ள் என்று ந‌ம்மைப் பார்த்து பொறாமைப்ப‌டும் அடுத்த‌ த‌லைமுறை.... நாம் பெருமைப்ப‌ட‌!!! ;-))))

ஏதோ ஒரு ந‌ம்பிக்கையில் இந்தியா விளையாண்ட‌ அத்த‌னை போட்டிக‌ளுக்கும் ப‌திவெழுத‌த் துவ‌ங்கினேன்... காலிறுதி... அரையிறுதி என்று வந்து இதோ கோப்பையையும் இந்தியா வென்றுவிட‌.... இதோ ஃபைன‌லுக்கு இந்தப் பதிவை எழுதிய‌போது அடைந்த‌ பேருவ‌கைக்கு நிச்சிய‌ம் எல்லையில்லை...... தொட‌ர்ந்து உல‌க‌க்கோப்பை ம‌ற்றும் கிரிக்கெட் ப‌திவுக‌ளுக்குக் க‌ட‌ந்த‌ ஒன்ற‌ரை மாத‌கால‌மாகத் தொடர்ந்த தங்கள் வாசிப்பினாலும், அழ‌கான‌ பின்னூட்ட‌ங்க‌ளாலும் என்னை ஊக்குவித்த‌ அத்த‌னை ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் என் ம‌ன‌ப்பூர்வ‌மான‌ ந‌ன்றிக‌ள்!!!

மீண்டும் ச‌ந்திப்போம்......

துடிக்க‌ட்டும் புஜ‌ம்.... நாம் ஜெயித்த‌து நிஜ‌ம்!!!!

ஜெய் ஹோ இந்தியா...!!!!

வ‌ந்தே மாத‌ர‌ம்....!!

அன்புட‌ன்,

பிர‌பு எம்

சச்சினின் கோப்பை இது..... சரித்திரம் ஆனது இன்று!!!

 இன்று காலையில் எழுதிய வரிகள் இவை........


கிரிக்கெட் உலகின் இன்றைய விடியல் விசேஷமானது!
கனவுகள் யாவருக்கும் சாத்தியம்தான் ஆனால் அவை நனவாவது  ஒன்றும் சத்தியம் அல்ல!

கனவுகள் பூக்கத் துவங்கிய ஒற்றை இலக்க வயதில் கனவே உருவாய் ஓர் இளம் மனிதன் அறிமுகமானான்.....

அன்று நான் பொடியன்..... அவன் சிறுவன்.....!!

 "கனவு" என்னும் சொல்லுக்கு அவனே பொருளாக மாறிவந்தான்.....
"கனவு"களின் மெய்ப்பொருள் காண்பது அறிவெனில் அத்தனை கனவுகளுக்கும் ஒரே மெய்ப்பொருள் "வெற்றி"தான்!
எதில் வெற்றி? அது எப்போது? இந்த இரண்டே கேள்விகளில் அண்டம் தாண்டியும் நீளும் கனவுகள் நிஜ உலகின் இலக்குகளாக அடங்கிவிடும்! எனக்குக் கனவுகளின் மெய்ப்பொருள் புரியுமுன்னே அவன் தன் கனவுகளை வரையறுத்து ஓர் இலக்காக நிலைநிறுத்தி பாதிதூரம் கடந்துமிருந்தான்....

இன்று நான் இளைஞன்.... அவனோ என்றும் இளைஞன்‍!!!

கனவுலகின் இன்பங்களை நிஜவுலகில் நிறுவி அதை மெய்ப்பிக்கத் தவறிவிட்ட எத்தனையோ மனிதர்களில் நானும் ஒருவனாக ஆண்டுதோறும் வயதுகூடிவர....வயதை என்றோ வென்றுவிட்ட அவனது கனவுகளைத்தான் இன்று என் கண்களில் கண்டுவருகிறேன் ...... அவனது  கோடான கோடி ரசிகர்களில் ஒருவனாய்....!!!!


இவன் தான் அவன்........!!!  

                


.

    இதுதான் அவன் கனவு.........!!

    

தன் கனவிடம் தன் காதலை என்றோ சொல்லிவிட்ட அவனைவிட அதிகமாய் அந்தக் கனவு அவனைக் காதலிக்கின்றது!
அதனால்தான் உடனடியாக  அவனிடம் கைசேர்ந்துவிடாமல் ஒவ்வொருமுறையும் தொடுவானமாய்த் தள்ளி நின்று  தன்னைத் தொட்டுப் பிடிக்கச் சொன்னது!! தன்னை நோக்கி  வரும்வழியில் அவன் சம்பாஷிக்கும் கிரிக்கெட் உலகின் அத்தனை வெற்றிகளையும் அவனை வெல்லுமாறு வெறியேற்றியது.... இனியும் வெல்ல எதுவுமில்லை என்ற நிலையில், தன்னை இறுதியாக அவனிடம் கையளிக்க‌ அந்தக் கனவு அவனை வரச்சொல்லியிருக்கும் இடம் அவன் தன் கனவுதனைக் கண்டெடுத்த களம்..... தன் ஓட்டத்தைத் துவக்கிய அதே இடம்!! அது அவன் பிறந்த மும்பையின் "வான்கடே மைதானம்"!!!

இன்று நடக்கப் போகும் இறுதி யுத்தத்தில் இந்தக் காதல் கைகூடுமா? என்னும் பதற்றம் யாருக்கும் தேவையில்லை...!
ஏனெனில் அவன் காதலை இந்த உலகும் அறியும்...... உலகை விட அதிகமாய் அவன் கனவும் அறியும்.....!! இந்த நீண்ட நேடும்பயணத்தில் இவன் கண்டிருக்கும் சாதனைகளுக்கெல்லாம் இந்தக் கனவினால் கூட ஒற்றை மகுடம் வைத்துவிட முடியாது!! இந்தக் காதல் கதையின் முடிவில் காதலர்கள் சேர்ந்தாலும் பிரிந்தாலும் சச்சினின் காதல் வெற்றியே!!

காலைவரை கனவாக இருந்தது......... இதோ சரித்திரம் ஆனது இன்று!!!!!
இதோ இப்பொழுது அந்தக் கதையின் தொடர்ச்சி.......




அவனது காதலி அவனை ஏமாற்றவிடவில்லை..... இந்த நீண்ட நெடும்பயணத்தில் அவன் காதலி அவனிடம் ஒவ்வொருமுறையும் தன்னைத் தர அவனிடம்  கேட்டிருந்த வெவ்வேறு புதிய‌ சாதனை மகுடங்களை எல்லாம்.... உடலின் ஒவ்வொரு எலும்பும் வலிக்க.... வயது பாராமல் வருடக்கணக்கில் அவன் உழைத்து, கணக்கற்ற காயங்களையும் அறுவை சிகிச்சைகளையும் தாங்கிக்கொண்டு, தாங்கிப் பிடித்துத் தூக்கிவிட்ட தந்தையின் மறைவிற்குக்கூட இரண்டே நாள் லீவ் எடுத்துத் திரும்பிவந்து, வலி, வேதனை, விமர்சனங்கள் அத்தனையும் தாங்கிக்கொண்டுத் தன் கனவான காதலி தன்னிடம் கேட்டதற்கும் மேலான சாதனை சரித்திரங்களை சுமந்து சென்றிருந்தான் அவளைக் காண......

அவளை வெல்ல விரட்டிக்கொண்டு உலகெங்கும் சுற்றியவனை..... அவன் முதன்முதலில் பேட்டைப் பிடித்துக் களம்கண்ட அவனது சொந்த மண்ணிற்கே அவனை அழைத்து வந்து பெருமையோடு தன்னைக் கொடுத்தாள் அவனிடம் இன்று... இந்த சில மணித்துளிகள் முன்பு !!!!!


         



வெற்றியைத் தழுவத் துடித்திருந்தான் தன் வாழ்க்கை முழுதும்..... ஆனால் வெற்றி இன்று அவனைத் தேடி வந்து இருகத் தழுவிக்கொண்டது !!!!

இது சச்சினின் கோப்பை!!!!!!!!  Sachin - The God of Cricket!!!!

 சச்சின் "கனவு நாயகன்" அல்ல "கனவுகளின் நாயகன்" , "இளைய தலைவன்" அல்ல அவன் "இளமைக்குத் தலைவன்" !!!!

...... சச்சினைப் பார்க்கும்போதெல்லாம் சாதிக்கத் தோன்றியது அன்று... சிறுவனாய் அவன் ரசிகனாய்க் கனவுகளுடன் ஓடிக்கொண்டிருந்தபோது........!  இன்று அதுபோல் ஓடமுடியவில்லை .....  ஹ்ம்ம் வயதாகிவிட்டது!! ஆனால் அவனுக்கு வயதாகவில்லை....... இதுவும் அவனது எல்லையா??? இல்லவே இல்லை.... இதோ அடுத்து ஐபிஎல்லில் ஆரஞ்ச் கேப்பைத் தக்கவைப்பான்..... இங்கிலாந்து சென்று நூறாவது சதம் கடப்பான்....... இருபதாயிரம் ரன்களை எட்டிப்பிடிப்பான்...... 50 ஒருநாள் சர்வதேச சதங்களைப் பதிவு செய்வான்.......

ஓய்வையும் அவன் தேடிக்கொள்ள மாட்டான் ஓய்வும் தானாகவே வந்து தன்னை ஏற்றுக்கொள்ளக் கெஞ்சும்........

சச்சின் ஒரு சகாப்தம்....!!! ஜெய் ஹோ சச்சின்..... நானும் உன்னை ரசித்திருக்கிறேன் என்று பெருமைப் படுகிறேன்.....

சச்சினின் கோப்பையிது! சச்சினுக்குப் பெற்றுத்தந்த ஒப்பற்ற நம் அணியை வாழ்த்துவோம்!!!

சக் தே இந்தியா..... ஜெய் ஹோ சச்சின்!!!!!!

வ‌ழ‌க்க‌மான‌ மேட்ச் க‌வ‌ரேஜ் இங்கே : இந்தியா V இல‌ங்கை - துடிக்க‌ட்டும் புஜ‌ம்... நாம் ஜெயித்த‌து நிஜ‌ம்!!


அன்புடன்,

பிரபு எம்



Saturday, April 02, 2011

உலகக்கோப்பை 2011 : இறுதிப்போட்டியை இந்தியா வெல்ல‌ இசையால் ஒரு வாழ்த்து...!

கிரிக்கெட் உலகின் இன்றைய விடியல் விசேஷமானது!
கனவுகள் யாவருக்கும் சாத்தியம்தான் ஆனால் அவை நனவாவது  ஒன்றும் சத்தியம் அல்ல!
கனவுகள் பூக்கத் துவங்கிய ஒற்றை இலக்க வயதில் கனவே உருவாய் ஓர் இளம் மனிதன் அறிமுகமானான்.....

அன்று நான் பொடியன் அவன் சிறுவன்.....

 "கனவு" என்னும் சொல்லுக்கு அவனே பொருளாக மாறிவந்தான்.....
"கனவு"களின் மெய்ப்பொருள் காண்பது அறிவெனில் அத்தனை கனவுகளுக்கும் ஒரே மெய்ப்பொருள் "வெற்றி"தான்!
எதில் வெற்றி? அது எப்போது? இந்த இரண்டே கேள்விகளில் அண்டம் தாண்டியும் நீளும் கனவுகள் நிஜ உலகின் இலக்குகளாக அடங்கிவிடும்! எனக்குக் கனவுகளின் மெய்ப்பொருள் புரியுமுன்னே அவன் தன் கனவுகளை வரையறுத்து ஓர் இலக்காக நிலைநிறுத்தி பாதிதூரம் கடந்துமிருந்தான்....

இன்று நான் இளைஞன்....  என்றும் அவன் இளைஞன்!!!

கனவுலகின் இன்பங்களை நிஜவுலகில் நிறுவி அதை மெய்ப்பிக்கத் தவறிவிட்ட எத்தனையோ மனிதர்களில் நானும் ஒருவனாக ஆண்டுதோறும் வயதுகூடிவர....வயதை என்றோ வென்றுவிட்ட அவனது கனவுகளைத்தான் இன்று என் கண்களில் கண்டுவருகிறேன்!!!



இவன் தான் அவன்........!!!  

                


.

    இதுதான் அவன் கனவு.........!!

    

தன் கனவிடம் தன் காதலை என்றோ சொல்லிவிட்ட அவனைவிட அதிகமாய் அந்தக் கனவு அவனைக் காதலிக்கின்றது!
அதனால்தான் உடனடியாக  அவனது  கைசேர்ந்துவிடாமல் ஒவ்வொருமுறையும் தொடுவானமாய்த் தள்ளி நின்று  தன்னைத் தொட்டுப் பிடிக்கச் சொன்னது!! தன்னை நோக்கி  வரும்வழியில் அவன் சம்பாஷிக்கும் கிரிக்கெட் உலகின் அத்தனை வெற்றிகளையும் அவனை வெல்லுமாறு வெறியேற்றியது.... இனியும் வெல்ல எதுவுமில்லை என்ற நிலையில், தன்னை இறுதியாக அவனிடம் கையளிக்க‌ அந்தக் கனவு அவனை வரச்சொல்லியிருக்கும் இடம் அவன் தன் கனவுதனைக் கண்டெடுத்த களம்..... தன் ஓட்டத்தைத் துவக்கிய அதே இடம்!! அது அவன் பிறந்த மும்பையின் "வான்கடே மைதானம்"!!!

இன்று நடக்கப் போகும் இறுதி யுத்தத்தில் இந்தக் காதல் கைகூடுமா? என்னும் பதற்றம் யாருக்கும் தேவையில்லை...!
ஏனெனில் அவன் காதலை இந்த உலகும் அறியும்...... உலகை விட அதிகமாய் அவன் கனவும் அறியும்.....!! இந்த நீண்ட நேடும்பயணத்தில் இவன் கண்டிருக்கும் சாதனைகளுக்கெல்லாம் இந்தக் கனவினால் கூட ஒற்றை மகுடம் வைத்துவிட முடியாது!! இந்தக் காதல் கதையின் முடிவில் காதலர்கள் சேர்ந்தாலும் பிரிந்தாலும் சச்சினின் காதல் வெற்றியே!!

தங்களின் "கனவு நாயகன்" சச்சினுக்கு அவன் கனவைப் பெற்றுத்தர இன்று போராடப்போகும் தோணி தலைமையிலான இந்திய அணிக்குத்  தன் புத்துணர்ச்சிக் குரலில் பிரபல பாடகர் திப்பு பாடியிருக்கும்  இந்தப் பாடல் சமர்ப்பணம்.........





இந்தப் பாடலைப் பற்றி.....

முதலில் "நட்புக்காக" இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்த பிரபல‌ பாடகர் திப்புவுக்கு நன்றிகள்!

இசை: ஆண்ட்ரூ காலின்ஸ்

இந்த "இசையமைப்பள"ரை இத்துனூண்டு வயதிலிருந்து எனக்குத் தெரியும்.... சரியான மியூசிக் மண்டையன்! எப்போ பார்த்தாலும் எதையாவது தட்டிக்கிட்டே இருப்பான்..... பக்கி எங்கேயாவது போய் கொட்டடிச்சிட்டுதான் இருக்கப்போகுதுன்னு பாத்தா ஒருநாள் திடீர்னு மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முடிச்சு L&T ல ப்ளேஸ் ஆகிட்டேன்னு கொண்டுவந்து ஸ்வீட் கொடுத்தான்!! ஆனாலும் விடாமல் தன்னை மாதிரியே இசையில் ஆர்வமான நண்பர்களோட ஒரு டீமா இருந்து இப்படி அப்பப்போ ஃப்ரீ லான்ஸிங்கா தங்களுடைய திருப்திக்காக பாட்டு கம்போஸ் பண்ணி ஆல்பம் பண்ணுறாங்களாம்!!! வோர்ல்ட் கப் ஆரம்பிச்சதுல இருந்து இந்தியா விளையாடிய‌ மேட்சுகள் எல்லாத்துக்கும் விடாம‌ பதிவு போட்டுட்டு இருக்குற‌  என்கிட்ட இந்தப் பாட்டைக் கொடுத்து உங்க போஸ்ட்ல இதைப் போட்டுக்க‌ங்கன்னு உரிமையோட கொடுத்தான்.......  "அடப்பாவி....திப்புவோட குரல்ல ப்ரொஃபஷனலா வந்திருக்கிற‌ பாட்டை ஏன்டா மார்க்கெட் பண்ணல??"ன்னு கேட்டேன்.......ஹிஹிஹின்னு சிரிக்கிறான்!!!! என்னத்த சொல்ல??? :-)))

அவனுடைய Passion... உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க ப்ளீஸ்!!!

இறுதிப்போட்டியில் களமிறங்கியிருக்கும் இந்திய அணி இன்று கோப்பையை வெல்ல வாழ்த்துவோம்!!

ஜெய் ஹோ இந்தியா!!!!
BLEED BLUE!!!

அன்புடன்
பிரபு எம் 




Thursday, March 31, 2011

இந்தியா V பாகிஸ்தான் - பிரம்மாண்டக் கனவின் தரிசனத்தில் ஒரு வெற்றிக் கொண்டாட்டம்!

கிரிக்கெட் வானில் சூரிய கிரகணம்...! முடிவில் இந்திய வானமெங்கும் விழாக்கோலம்...! இருட்டில் கருத்திருந்த வானமெல்லாம் வானவேடிக்கையின் வண்ணச்சிதறல்கள்!! :-)

எல்லை மண்ணில் கோடுபோட்டுப் பிரித்துக்கொண்ட பகை தேசங்கள் அவ்வப்போது தும்பைசூடி யுத்தம் செய்யும் கிரிக்கெட் களத்தில் மீண்டுமொருமுறை வாகையினை நாம் சூடிவர‌.... இனி இந்திய இதயங்கள் துடிப்பதெல்லாம் "இறுதிப்போட்டி" என்னும் இணையற்ற கனவை எதிர்நோக்கித்தான்!
Sachin Tendulkar celebrates India's win with an ecstatic leap
ஆன‌ந்த‌ தாண்ட‌வ‌ம்!


மீண்டும் அஷ்வின் தவிர்க்கப்பட்டு நெஹ்ரா அணியில் இடம்பெற்றிருந்ததைப் பார்த்து, இன்றைய‌ போட்டிக்கான அதீத தயாரிப்புகளெல்லாம் உச்சத்தில் இருந்த வேளையில், அதிர்ச்சியால் சூழ்ந்தது அவநம்பிக்கை மேகமூட்டம் தேசமெங்கும்.... ஆனால் டாஸில் வென்றபின் பொழிந்ததோ சேவாக்கின் ரன்மழை....!!

உம‌ர் குல் அத்த‌னை எளிதான ப‌வுல‌ர் அல்ல‌வே அல்ல‌..... அவ‌ர் வீசிய‌ அந்த‌ப் ப‌ந்துக‌ளும் அத்த‌னை த‌வ‌றான‌ தேர்வுகளுமல்ல‌... ப‌டு அல‌ட்சிய‌மாக ஐந்து பவுண்டரிகளுடன் 20 ர‌ன்களை சேவாக் விளாசிய‌ அந்த‌ ஓவ‌ரில் ஒவ்வொரு ப‌ந்திலும் குல்லின் Change of Pace, லைன், லெங்த் எல்லாமும் இருக்கத்தான் செய்தது ஏன் அஃபிரிடியிட‌ம் கேட்டு மிட்-விக்கெட்டில் ஒரு ஃபீல்ட‌ரைக்கூட‌ நிறுத்திப்பார்த்தார்... ந‌ல்ல‌ ப‌வுல‌ராக‌த் தொட‌ர் முழுதும் அச‌த்தி வந்திருக்கின்ற‌ உம‌ர் குல் இத்த‌னைமுறை விடாம‌ல்  மீண்டு வரமுயன்றாலும்.. ம்ஹும்.. திசைக‌ள் மாறிய‌தே த‌விர‌ ப‌ந்துக‌ள் ப‌வுண்டரிக்கு விரட்டப்பட்ட‌ வேக‌மும் அல‌ட்சிய‌மும் (!) மாற‌வேயில்லை என்றால் இந்த‌ பேட்ஸ்மேன் த‌ர‌ப்பு மாயாஜால‌த்துக்கு உலக‌ம் முழுவ‌தும் ஒரே பெய‌ர்தான் அதுதான் "வீரேந்தர் சேவாக்"!!!!! "நிலைத்து ஆட‌ப்போகிறேன்"....இனிமேல் சேவாக் v 2.0" என்று சேவாக் உல‌க‌க்கோப்பைக்குமுன் கொடுத்த‌ பில்ட‌ப்புக‌ள் எல்லாம் ப‌ங்க‌ளாதேஷுட‌னான‌ துவ‌க்க‌ப் போட்டியோடு சரி அதன்பின் வேலைக்கு ஆகவில்லை.... நிலைத்து ஆடுவ‌த‌ற்கான‌ எந்த‌வொரு முன்னெச்ச‌ரிக்கையும் வீருவிட‌ம் காண‌ப்ப‌ட‌வில்லை.... உமர் குல்லை அடித்த‌ அடியில் அவ‌ருக்கு நேற்று எந்த‌ பேட்ஸ்மேனைப் பார்த்தாலும் சேவாக்கைப் போல‌வேதான் தெரிந்திருக்கும்போல‌ அந்த‌ ஓவ‌ரிலிருந்தே அப‌த்த‌ப் ப‌ந்துக‌ளை வாரி இரைத்தார் "டெத் ஓவ‌ர்"க‌ளை வீசிய‌போது கூட‌...! ஆனால் சேவாக்கிற்கும், ச‌ரியான‌ நேர‌த்தில் அஃப்ரிடி ப‌ந்துவீச‌ அழைத்த, வாஹெப் ரியாஸைப் பார்க்கவும் உம‌ர் குல்லைப் போல‌வே தெரிந்த‌துதான் ஏமாற்ற‌ம்... அச‌ந்த‌ நேர‌த்தில் வீழ்ந்த‌து விக்கெட்.... ச‌ச்சினிட‌ம் கூட‌க் க‌லந்தாலோசிக்காம‌ல் ஒரு ரிவ்யூவைக் கோரி வீண‌டித்துவிட்டு ந‌டையைக்க‌ட்டினார் ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட அதே பழைய வெர்ஷன் "ஹார்ட்"வேர் சேவாக் v 1.0"!!!!

Sachin Tendulkar and MS Dhoni are thrilled after India's win
கோப்பையை வென்று தோணி, ச‌ச்சினிட‌ம் த‌ரும் காட்சியைக் காண்போமா?! :-)

வாஹெப் ரியாஸின் ப‌வுலிங் பாகிஸ்தானுக்கு மிக‌வும் போர்ட்ட‌பிளான‌ ஆகிஸிஜ‌ன் சிலிண்ட‌ர்! தேவையான‌ ச‌ம‌ய‌த்திலெல்லாம் உயிரைக் காத்த‌து இந்த‌ வாசிம் அக்ர‌மின் டைன‌மிக் ஜெராக்ஸ் காப்பிதான்! ஸ்விங்காகட்டும், ப்ளேஸ்மெண்ட் ஆக‌ட்டும், மற்றூம் ஸ்பீடிலும் சரி.. எதிலுமே குறைவைத்துவிட‌வில்லை... ஓர் இட‌து கை ப‌வுல‌ரின் அத்தியாவ‌சிய‌த்தை அத்த‌னை அணிக‌ளும் உண‌ர்ந்து வைத்திருக்கும் கால‌ம் இது.... கோஹ்லியின் க‌தையை முடித்த‌ அடுத்த‌ ப‌ந்திலேயே காற்றில் ஸிவிங்கான‌ அந்த‌ விசேஷ‌ யார்க்க‌ரைக் க‌ள‌மிற‌க்கி யுவ்ராஜுக்கு அவ‌ர் கொடுத்த‌ அதிர்ச்சி வைத்திய‌ம் உட‌ன‌டிப் ப‌ல‌ன் கொடுத்த‌துதான் ர‌ன்குவிப்பில் இந்தியாவுக்கு விழுந்த‌ பேரிடி... இன்றாவ‌து தோணி தான் ஒரு பேட்ஸ்மேன் என்கிற‌ ம‌ற‌ந்துபோன‌தொரு "ப‌ழைய‌ உண்மை"யை நிலைநாட்டுவார் என்று பார்த்தால் அதேபோல் ப‌டுநேராக‌ பேட்டை இருக‌ப்பிடித்துக்கொண்டு ப‌ந்துக‌ளைக் காற்றில் தோசையைத் திருப்பிப்போடும் அந்த‌ உருப்ப‌டாத‌ ஷார்ட்டை விடாம‌ல் தொட‌ர்ந்தார் ("பெப்ஸி"யின் "Change the game" campaignல் "The DHOSA shot" என்றுதான் தோணியை நியாய‌ப்ப‌டி விள‌ம்ப‌ர‌ப் ப‌டுத்தியிருக்க‌ வேண்டுமோ!!!) பின்திசையில் விரைந்த‌ அந்த‌ இர‌ண்டு ப‌வுண்ட‌ரிக‌ளும் ச‌த்திய‌மாக‌ தோணியின் சுய‌நினைவின்றி அதுவாக‌ பேட்டில் ப‌ட்டு எல்லைக்கோட்டைத் தொட்ட இல‌வ‌ச‌ ர‌ன்க‌ள்! (அதையும் ரவிசாஸ்திரி கமெண்ட்ரியில் புகழ்ந்தார்!!! ஒருவேளை தோணியின் Dhosa shotக்கு முன்பு ஒரு காலத்தில் ரவிஅண்ணன் "Chappathi shot"ல் ஊரைக் கலக்கினாரே அந்தப் பாசமோ?!!) என்ன‌தான் ஆச்சு தோணிக்கு?? கேப்ட‌ன் தோணி - Back to form, விக்கெட் கீப்ப‌ர் தோணி - No harm, ஆனால் பேட்ஸ்மேன் தோணி?? - When will he again storm???!! இந்த‌க் கேள்விக்குப் ப‌தில் தெரிய‌வேண்டும் ந‌ம‌து பேட்டிங் லைனின் நிஜ‌ வ‌லிமையை அருதியிடும் முன்பாக‌...!

Crackers go off in Hyderabad to celebrate India's victory
கொண்டாட்டம் தொடரவேண்டும்!

ச‌ச்சின்..... 85!! அவ‌ர் ஐந்துமுறை உயிர்பிழைத்து சேர்த்த‌ இந்த‌ முக்கிய‌மான் 85 ர‌ன்க‌ளை விட‌ அவ‌ர் கூடுத‌லாக‌ சேர்க்காத‌ 15 ர‌ன்க‌ள்தான் வெற்றிக்குக் கார‌ண‌ம் என்று எஸ் எம் எஸ் அனுப்புகிற‌வ‌ர்க‌ளைப் ப‌த்தாயிர‌ம் பெரியார் வ‌ந்தாலும் திருத்த‌ முடியாது! ச‌ச்சினின் ச‌த‌த்தைக் கிட்ட‌த்த‌ட்ட‌ குறுக்கே பாயும் க‌ருப்புப் பூனை ரேஞ்சுக்கு ஆண்டி-சென்டிமென்டாக‌ப் பார்க்க‌ ஆர‌ம்பித்துவிட்ட‌து தேச‌ம்...! என்ன‌ கொடும‌ ச‌ச்சின் இது??!! இருப்பினும் அஃப்ரிடி ப‌ந்துவீச்சில் யூனிஸ்கான் மிக‌ எளிதான‌ கேட்சைத் த‌வ‌ற‌விட‌த் தான் உயிர்பிழைத்த‌தைக் குறும்புச் சிரிப்புட‌ன் வெளிப்ப‌டுத்திய‌ லிட்டில் மாஸ்ட‌ருக்கு நேற்று "ல‌க்கி டே"!! அத்த‌னை பிர‌மாத‌மான‌ "ச‌ச்சின் இன்னிங்ஸ்" இல்லைதான் என்றாலும் சேட்டை செய்தார் செத்துச் செத்து விளையாண்டு!!! :))

ரெய்னா.... நேற்று எதிர்பார்த்ததைப் போல‌வே தோணி வீழ்ந்துவிட‌, ரெய்னா அதிர‌டியை முக்கிய‌ப்ப‌டுத்தாம‌ல் ஐம்ப‌து ஓவ‌ர் ஆட‌வேண்டிய‌த‌ன் அவ‌சிய‌த்தைத் தொட்டுத் துல‌க்கிய‌ ப‌க்குவ‌ம்தான் இந்த‌ வெற்றியை இத்த‌னை Handyயாக‌ கைவ‌ச‌ப்ப‌டுத்திக் கொடுத்த‌து! 235க்கு மேல் தேராது என்றுதான் நினைத்திருந்தேன் ஆனால் ஜாஹிர், நெஹ்ராவுட‌ன் கைகோர்த்து போராடி 260க்குக் கொண்டுபோன‌ ரெய்னாவுக்கு அழகான‌ ஒரு பூச்செண்டு!

The celebrations begin after the victory is confirmed
வெற்றி!!!!
ப‌வுலிங், ஃபீல்டிங்.... வாவ்!!!! நேற்றும் சரி ஆஸ்திரேலியா உடனும் சரி ந‌ம்முடைய‌ பெஸ்ட் வெளிப்ப‌ட்டிருக்கின்ற‌து! ப‌தினோரு பேரும் ஒரே ம‌ன‌நிலையில் ந‌ம்பிக்கையும் ம‌ன‌உறுதியுமாக‌ ஒருங்கிணைந்து செய‌ல்ப‌டுவ‌தன் ப‌ல‌னை தேச‌மே கொண்டாடினாலும் அத‌ன் க்ரெடிட் ச‌த்தியமாக‌ தோணிக்குத்தான்! நேற்று அஷ்வினை சேர்க்காத‌போது கொதித்துக் குமுறிய‌வ‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்! ஆனால் இதுதான் விஷ‌ய‌ம்... ந‌ம் அனைவ‌ருக்கும் தெரிந்த‌து தோணிக்குத் தெரியாத‌த‌ல்ல‌... அப்ப‌டியிருந்தும் ஒரு விஷ‌ப்ப‌ரிட்சையைத் துவ‌க்கி முழுக்க‌ப் பின்புல‌மாய் இருந்து துரித‌மாய் செய‌ல்ப‌ட்டுக் வென்று காட்டினார் தோணி நேற்று... சிம்ப்ளி கிரேட்!! (நேற்று தோற்றிருந்தால் கேப்டனாக தோணியின் கடைசி போட்டியாகியிருக்கும் சந்தேகமில்லாமல்!) உல‌க‌க்கோப்பையை அதிகார‌ப்பூர்வ‌மாய்த் த‌ழுவிக்கொள்ளும் அத்த‌னை த‌குதிக‌ளும் தோணியின் க‌ர‌ங்க‌ளுக்கு உண்டு... அதிர்ஷ்ட‌ம் இருக்குமா என்று நாளை ம‌றுநாள் தெரியும்!! :)

Sachin Tendulkar, Suresh Raina and Munaf Patel celebrate after India ended up winners
துள்ளாத மனமும் துள்ளிய தருணங்கள்!
முனாஃப் ப‌ட்டேலின் ப‌வுலிங் ஸ்பீடைக் க‌வ‌னித்தீர்க‌ளா..... 135, 137, 139.2 Kmph வ‌ரையெல்லாம் போன‌து நேற்று! ஆனாலும் லைனிலும் லெங்திலும் அதிக‌க் காம்ப்ர‌மைஸ் செய்துகொள்ள‌வில்லை... வேக‌ம் பெரிய‌ விஷ‌ய‌ம‌ல்ல‌ வேகத்தில் காட்டும் வேரியேஷ‌ன்தான் பேட்ஸ்மேனை வீழ்த்தும்... நெஹ்ராவும் முனாஃபும் "லிமிடெட் ப‌வுல‌ர்ஸ்" அதில் மாற்றுக் க‌ருத்தே இல்லை... ஆனால் நேற்று அவ‌ர்க‌ளின் முனைப்பும் க‌வ‌ன‌மும் அன்லிமிடெட்-ஆக‌ வெளிப்ப‌ட்ட‌தே வெற்றிக்குக் கார‌ண‌ம்... அனுப‌வ‌ நெஹ்ராவும் ஹ‌ர்ப‌ஜ‌னும் த‌ங்க‌ள் அத்த‌னை அனுப‌வ‌த் தொழில்நுட்ப‌த்தையும் உட்புகுத்திதான் த‌ங்க‌ள் விக்கெட்டுக‌ளைப் பெற்றார்க‌ள் ஆளுக்குப் ப‌த்து என்று ஐம்பது ஓவ‌ர்க‌ளை முடித்திருந்த‌ பவுலிங் சார்ட்டைப் பார்க்க‌வே அவ்வ‌ள‌வு ந‌ம்பிக்கைத் துளிர்க்கிற‌து!

தோணியின் வார்த்தைக‌ள் நேற்று அற்புத‌ம்... ப‌வுலிங் ப‌ற்றிக் கேட்ட‌போது "எங்க‌ளிட‌ம் வேக‌மில்லை.. ப‌ழதாகி விட்ட‌ ப‌ந்திலும் மூவ்மெண்ட் பார்க்கும் அபார‌ ஸ்விங்கும் இல்லை... இருப்பினும் எங்க‌ள் ப‌வுல‌ர்க‌ளின் ஆயுத‌மாக‌த் நாங்கள் தேர்ந்துகொண்டிருப்பது 'DECEPTION'!! அதாவது வேக‌ம், அள‌வு, நீள‌ம் என்று ஒவ்வொன்றையும் மாற்றி மாற்றி பேட்ஸ்மேனை ஏமாற்றித்தான் விக்கெட்டைப் ப‌றிக்க‌வேண்டும் எனும் சாதுர்ய‌ம்" என்று நிதான‌மாகப் பேசிய‌ தோணியிடம், இந்த‌ ப‌க்குவ‌மும், ஆளுமையும் நிறைந்த‌ அவ‌ர‌து இய‌ல்பான அந்த‌ "attitude" அவருக்கே உரித்தான அவரது பெர்சனாலிட்டியின் ஓர் அழகான‌ Gift! எப்போதுமே நான் ரசித்துப் பாராட்டும் அழகான விஷயம் அது! (வாழ்க்கையில் அடைய‌ முயல்வதும் கூட‌!)  "Captain cool"ன் கைக‌ளில் உலகக்கோப்பை த‌வ‌ழும் அழ‌கைக் காண‌ ஆவ‌லாக‌ இருக்கின்ற‌து! "Nothing comes easy and nothing did come easy to us in this tournament..." என்று தோணி நேற்று சொன்ன‌தைப் போல‌ நேர்மையாக‌ அடிவைத்துக் கண்டிருக்கும் சிறப்பான‌ முன்னேற்ற‌ம் இது.... உச்ச‌நிலைக்கான‌ போராட்ட‌ம் வ‌ரை முன்சென்றிருக்கும் ந‌ம‌க்கு.. வெற்றி நிச்சிய‌மானால் ந‌ம் அணி "Most Deserving" என்ப‌தி ஐய‌மில்லை!!

Shahid Afridi congratulates Sachin Tendulkar and Virender Sehwag after the hard-fought game
நீ எங்க நண்பேன்டா!
சொல்ல‌ ம‌ற‌ ந்துவிடக்கூடாத‌ ஒரு விஷ‌ய‌ம் மீத‌முள்ள‌து.... அஃப்ரிடி இவ்வ‌ள‌வு ப‌க்குவ‌மான‌வ‌ரா?! வ‌ழ‌க்க‌ம்போல் பாகிஸ்தானை வீழ்த்த‌வேண்டும் என்று எண்ண‌த்துட‌ன் தோல்வியின் சுவ‌டுகளால் பூச‌ப்ப‌ட்ட‌ அஃப்ரிடியின் முக‌த்தைப் பார்க்க‌ அத்த‌னை ஆன‌ந்த‌மாக‌ இருந்த‌து.... ஆனால் அந்த‌ வார்த்தைக‌ளைக் கேட்ட‌பின் பாக்.கை வீழ்த்தினோம் என்று சொல்ல‌ப் பிடிக்க‌வில்லை பாக்.கை வென்றோம் என்று சொல்வ‌தே பொருத்த‌மாக‌த் தோன்றிய‌து... ப‌டுசிம்பிளாக‌.... பாண்டிங்கைப் போல‌ வ‌லுக்கவ‌ன‌மாய் டிப்ள‌ம‌ஸி காட்டாம‌ல் "They played better than us...." என்று ஒற்றைவ‌ரியில் முடித்துக்கொண்ட‌ ப‌க்குவ‌ம்.. பெரிய‌ விஷ‌ய‌ம்... ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் என்ப‌து உண‌ர்ச்சிக‌ளின் ஒட்டுமொத்த‌ க‌ட்டுப்பாட்டுட‌ன் ம‌ட்டுமே அடைய‌முடிவ‌து... எதிர்பாராத‌ ஆளான‌ அஃப்ரிடியிட‌மிருந்து எதிர்பாராத‌ நேர‌த்தில் ஓர் அழகான அப்ரோச்சைப் பார்த்த‌போது கைத‌ட்டாம‌ல் இருக்க‌முடிய‌வில்லை.... க‌டைசி நேர‌த்தில் கேப்ட‌னாகி.... இந்த‌ அணியை இவ்வ‌ள‌வு தூர‌ம் வ‌ழிந‌ட‌த்திக் கொண்டிவ‌ந்துப் போராடித் தோற்ற‌தே அஃப்ரிடிக்கு ஆறுத‌ல்தான்... Good to know your Sweeter side Afridi...you did your best!! :-)

ஒரு பெருங்க‌ன‌வின் வெகு அருகிலான‌ த‌ரிச‌ன‌த்தில்... இதோ ஒரு அழ‌கான‌ வெற்றிக்கு அர்த்த‌முள்ள‌ கொண்டாட்ட‌ங்களை நேற்றிர‌வு க‌ண்டோம்... இனி இன்றும் நாளையும் ப‌யிற்சிக்க‌ள‌த்தில் உழைப்பு... பிறகு களம்காணத் த‌யாரிப்பு....முனைப்பு... வெற்றி!! அவ்வளவுதான் என்றால்... அது சாத்தியமே!

 மொஹாலியிலிருந்து மும்பைக்கு இத்த‌னை Glorious ஆன‌தொரு ப‌ய‌ண‌ம் பெருமைக்குரிய‌து!

வெற்றி தோல்விக‌ளைத் தாண்டிய‌ ஒரு திருப்தி ம‌ன‌தில் இருக்கிற‌து... அதுதான் நிதர்சனம்.. ரிய‌ல் கேமும் கூட!! Thank you Dhoni and Boys!! WE TRUST YOU!!!

அன்புட‌ன்,
பிர‌பு எம்

 

Sunday, March 27, 2011

உல‌க‌க்கோப்பைக் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவின் துரதிர்ஷ்ட‌ வ‌ர‌லாறு! (1992 முத‌ல் நேற்றுவ‌ரை!)

ஒவ்வொரு உலகக்கோப்பையின்போதும் கோப்பையை வெல்லப்போகும் அணியாக ஆலமரத்தடி கிளிஜோசியன் முதல் ஆல்-வோர்ல்டு ஆக்டோபஸ்ஸுகள் வரை ஆரூடம் சொல்லும் அணியின் பெயர் "தென்னாப்பிரிக்கா" தான்! ஆனாலும் வெல்வதற்கு முழுத்தகுதி வாய்ந்த இந்த அணி ஒருமுறைகூட இறுதிப்போட்டிவரைகூட சென்றதில்லை என்பது சோகம் மட்டுமல்ல நீண்டதொரு துரதிர்ஷ்ட வரலாறும் கூட!

ஒருநாள் கிரிக்கெட் வ‌ர‌லாற்றில் எந்த‌வொரு அணியும் அதுவரையிலும் எட்டியிராத‌ எவ‌ரெஸ்ட் உச்ச‌மான‌ 400 ர‌ன்களையும் தாண்டித் தொடுவான‌ தூர‌த்தில் இல‌க்கை  பாண்டிங் ந‌ட்டுவைத்தால்... அதையும் அடுத்தகணமே வைராக்ய‌மும் வீர‌முமாய்ப் பதினோரு பேரும் துடுப்புபோட்டு  கடந்து புதிய‌ ச‌ரித்திர‌ம் ப‌டைத்ததுக் கோப்பையுடன் திரும்பி வந்தது ஸ்மித்தின் தலைமையிலான தென்னாப்பிரிக்க‌ அணிதான்.....  அதேசமயம்
உல‌க‌க்கோப்பை என்று வ‌ந்துவிட்டாலோ நாக்-அவுட் போட்டி வ‌ந்த‌வுட‌னே நாக்குத் தள்ளிப்போய் ஆல் அவுட் ஆகி ஒவ்வொரு முறையும் வெறும்கையுடன் திரும்பிப்போவதும் இதே தென்னாப்பிரிக்க‌ அணிதான்!

History repeated itself again... என்று சொல்லத் தோன்றவில்லை... They had done it to themselves once again என்றுதான் சொல்லத் தோன்றிய‌து நேற்று நியூசிலாந்துட‌ன் தோல்வி நெருங்க நெருங்க‌ அதிர்ச்சியில் ஆற்றாமையுடன் உத‌டுபிதிங்கி நின்றிருந்த கேப்டன் ஸ்மித்தைப் பார்த்தபோது!

1992ல் தொடங்கிய தன் உலகக்கோப்பை சோக வரலாறு நேற்றுவரை தொடர்ந்திருக்க வேண்டாம்தான்... ! :-(

சரி...சரி...வாங்க அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சு பாத்துட்டு வருவோம் சௌத் ஆஃப்ரிக்காவின் கடந்த காலத்து உலகக்கோப்பை செய்வினைப் பலன்களை!

1992: மழையில் கரைந்த முதல்கனவு!

The scoreboard reveals South Africa's impossible task
ம‌ற‌க்க‌முடியாத ஸ்கோர்போர்டு!
1992ம் ஆண்டு உல‌க‌க்கோப்பையில் அரையிறுதியில் இங்கிலாந்துட‌ன் ஆஸ்திரேலிய மண்ணில் பலமாக மோதிக் கொண்டிருந்தார்க‌ள் கெப்ள‌ர் வெஸ்ஸ‌ல்ஸ் த‌லைமியிலான‌ தென்னாப்பிரிக்க‌ அணி... இரண்டாவது பேட்டிங்கில் 253 (45 ஓவர் போட்டி) ரன்கள் என்னும் வெற்றி இலக்கை நோக்கி மெல்ல‌ மெல்ல‌ அடியெடுத்து வெற்றியை அழகாக நெருங்கிச் சென்ற‌வ‌ர்க‌ளுக்கு ஆத‌ரவாக மைதானத்து ரசிகர்களின் அர‌ங்க‌ம் அதிந்த‌ பேரொலியில் அன்றைய‌ இரவு வான‌ம் மின்ன‌ல்வெட்டிக் கண்ணடித்து முன்மொழிந்த எச்ச‌ரிக்கையைக் க‌வ‌னிக்க‌த் த‌வறியிருந்தார்கள்.... அந்த‌ உல‌க‌க்கோப்பையின் ஒரிஜின‌ல் "தொட‌ர் நாய‌க‌ன்" முக்கியப் போட்டிகளிலெல்லாம் மும்மாரிப் பொழிந்த கேப்மாரி ம‌ழைதான்!! வானிலையை உண‌ர்ந்திருந்த‌ இங்கிலாந்து கேப்ட‌ன் கிர‌காம் கூச் தனது பவுலர்களை அறிவுறுத்தி சாதுர்யமாய் ஓவர்களை ஒருபுறம் வேகவேகமாய்க் கடத்தலானார் மறுபுறம் ந‌ம்பிக்கையுட‌ன் க‌ள‌மாடிக் கொண்டிருந்த தெ.ஆ பேட்ஸ்மென் பிரைன் மேக்மில‌னும், டேவ் ரிச்சர்ட்ஸனும் ம‌ழைத்துளிக‌ள் மேலே விழுந்த‌பின்ன‌ர்தான் உண‌ர்ந்தார்க‌ள் ஸ்கோர்போர்டில் "விதி"யெழுதிய‌ த‌கிடுத‌த்த‌ங்க‌ளை... 43வது ஓவ‌ரில் 236 ர‌ன‌க‌ள் எடுத்திருந்தவ‌ர்க‌ளுக்கு (வெற்றிக்குத் தேவை 17 ரன்கள் 13 பந்துகளில்!) மழையால் ஆட்டம் சில நிமிடங்கள் தடைபட‌ அப்போதைய‌  "Best-scoring Over Method" முறைப்ப‌டி (ட‌க்வொர்த்-லீவிஸ் முறை அப்போது தோன்றியிருக்கவில்லை!) இலக்கு அநியாய‌மாய்த் திருத்தப்பட்டு 1 ப‌ந்தில் 22 ர‌ன்க‌ள் எடுக்க‌வேண்டும் என்று இர‌க்க‌மின்றி அறிவித்த‌து சிட்னியின் பிர‌ம்மாண்ட‌ ஸ்கோர்போர்டு.... இங்கிலாந்தின் வேக‌ப்ப‌ந்து வீச்சாள‌ர் லீவிஸ் த‌ன் இய‌ல்பை மீறி மெதுவான‌ ஒரு ப‌ந்தை எளிமையாய் வீச‌ மேக்மில‌ன் விர‌க்தியுட‌ன் ஓடியெடுத்த‌ ஒரு ர‌ன்னுட‌ன் முடிந்துபோன‌து உல‌க‌க்கோப்பையின் அறிமுக‌த்தொட‌ரில் சாதிக்க‌க் காத்திருந்த‌ தென்னாப்பிரிக்க‌க் க‌ன‌வு!

1996: லாராவின் விஸ்வரூபமா? குரோனியின் சுய‌ரூப‌மா?

 Steve Palframan is caught and bowled by Roger Harper
Steve Palframan is caught and bowled by Roger Harper
ரோஜ‌ர் ஹார்ப்ப‌ரின் சுழ‌ல்!

இந்தியா, பாகிஸ்தான், இல‌ங்கை இணைந்து ந‌ட‌த்திய‌ வில்ஸ் உல‌க‌க்கோப்பையின் "பி" பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுடன் இட‌ம்பெற்றிருந்த ஹான்ஸி குரோனி தலைமையிலான தென்னாப்பிரிக்கா லீக் போட்டியின் அத்த‌னை ஆட்ட‌ங்களையும் ஊதித்த‌ள்ளியிருந்த‌து! ஐந்து லீக் போட்டி வெற்றிக‌ளையும் சேர்த்து மொத்த‌ம் 10 ஒருநாள் ஆட்ட‌ங்களின் தொட‌ர்வெற்றி த‌ந்த‌ த‌ன்ன‌ம்பிக்கையுடன் காலிறுதியில் கால்பதித்திருக்க, கடிமான‌ "ஏ" பிரிவில் அடிப‌ட்டு மிதிப‌ட்டுக் (அதில் ஒன்று கென்யாவிடம் வாங்கியது!) காலிறுதி வ‌ந்து சேர்ந்திருந்தது ரிச்சி ரிச்ச‌ர்ச‌னின் வெஸ்ட் இண்டீஸ்! ப‌டுத்துக்கொண்டே ஜெயிப்பார்க‌ள் என்று ஜோதிட‌ங்க‌ள் க‌ணித்திருக்க‌ விழித்துக்கொண்ட‌ அர‌க்க‌னாக‌ "க‌ரிபிய‌ன் லெஜ‌ண்ட்" லாரா அதிவேக‌ ச‌த‌மொன்றை விளாசித்த‌ள்ள‌ விழிபிதுங்கிப் மொத்தமாகப் படுத்தது!  இருந்தாலும் பேட்டிங்கில் மீண்டெழ முய‌ன்றார்க‌ள்தான் ஆனால் ஆட்ட‌ம் ந‌ட‌ந்த‌ க‌ராச்சி ஆடுக‌ள‌ம் திடீரென‌ சுழ‌லுக்கு இசைய‌ ரோஜர் ஹார்ப்ப‌ரின் ஆஃப்ஸ்பின்ன‌ரில் ந‌ட‌ந்தேறிய‌து குரோனி தொட‌ங்கி பால் ஆட‌ம்ஸ் வ‌ரையிலான‌ பேட்ஸ்மேன்க‌ளின் பெவிலிய‌ன் நோக்கி நட‌ந்த‌ அதிர்ச்சி அணிவ‌குப்பு!! பெவிலிய‌ன் தாண்டி வீடுவ‌ரை த‌லைக‌விழ்த்து சென்றார்க‌ள் தென்னாப்பிரிக்க‌ர்க‌ள் (குரோனியின் ஃபிக்ஸிங் தில்லால‌ங்க‌டிக‌ளில் இன்றும் ச‌ந்தேகிக்க‌ப்ப‌டும் போட்டி இது!)

1999: ஒரு ரன் ஓடியெடுக்க டொனால்டு அடித்த லூட்டி!


The mother of all mix-ups
இந்த‌க் காட்சியை ம‌ற‌க்க‌முடியுமா? :-)

இங்கிலாந்தில் ந‌ட‌ந்த‌ இந்த‌ உல‌க‌க்கோப்பையை நினைத்த‌வுட‌னேயே ந‌ம் அனைவ‌ருக்கும் நினைவில் க‌ண்முன்னே தோன்றுவது ஒரு ரன் ஓடியெடுக்கத் தெரியாது ஆலன் டொனால்டு அக்கிரமம்(!)செய்த, மேலே ப‌ட‌த்தில் இருக்கும், காட்சியாக‌த்தான் இருக்கும்! இர‌ண்டாவ‌து அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை ச‌ந்தித்த‌ தென்னாப்பிரிக்கா... மான் போல‌க் குதித்தோடிவந்து புலியாகப் பாய்ந்து பந்தை வீசும் டொனால்டின் வேக‌த்தில் ஸ்டீவ் வாக்கின் ஆஸியை 213 ர‌ன்க‌ளுக்கு ஆல் அவுட் செய்த‌து.... அதான் நிறைய‌ ஓவ‌ர் இருக்கே என்று காலிஸ் நிதான‌மாக‌ 92 ப‌ந்துக‌ளில் அரைச‌த‌ம் அடித்துவிட்டு அவுட்டானார்... திடீரென்று முய‌லின் தூக்க‌த்தில் வேக‌ந‌டை போட்ட‌ ஆமையாக‌ ஆஸ்திரேலியா ஓவ‌ர்க‌ளைக் க‌டத்திவிட, தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் முனைக‌ளில் கடும் அழுத்தம் விக்கெட்டுக‌ளை ச‌ரித்த‌து... அந்த‌ உல‌க‌க்கோப்பையின் சூப்ப‌ர் ஸ்டார் "Zulu" என்று இன்றும் செல்ல‌மாக‌ அழைக்க‌ப்ப‌டும் லான்ஸ் க்ளூஸ்ன‌ர் புய‌லாக‌த் தோன்றி 16 ப‌ந்துக‌ளில் 32 ர‌ன்க‌ளைக் குவித்துக் கிட்ட‌த்த‌ட்ட ஆஸியின் ஸ்கோரையும் விர‌ட்டிப்பிடித்துவிட்டார்... வெற்றியைப் ப‌திவு செய்ய‌த் தேவைப்ப‌ட்ட ஒரே ஒரு ர‌ன்னைக் க‌டைசிப‌ந்தில் ஓட‌ச் சொன்னால் ஆல‌ன் டொனால்டு பேட்டைத் தூக்கிப்போட்டுப் ப‌த‌ற்ற‌த்தில் குழம்பி ந‌டு ஆடுக‌ள‌த்தில் அடித்த‌ லூட்டிக‌ளைக் கிரிக்கெட் உல‌க‌ம் என்றும் ம‌ற‌க்காது!!! :))) ஆட்ட‌ம் "டை" ஆனாலும் சூப்ப‌ர் சிக்ஸ் ர‌வுண்டின் டேபிளில் முன்ன‌ணியில் இருந்த‌ ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குச் செல்ல‌ வ‌ழ‌க்க‌ம்போல் ஏர்போர்ட்டுக்கு ப‌ஸ் பிடித்த‌து தென்னாப்பிரிக்கா!!!


2003 : மீண்டும் மழை செய்த சதி...

Shaun Pollock is distraught after South Africa's elimination
Shaun Pollock is distraught after South Africa's elimination
சோக‌ம் :-(
இந்த‌முறை தென்னாப்பிரிக்காவை சொந்த‌ம‌ண்ணிலேயே சொத‌ப்ப‌வைத்த‌து மீண்டும் அதே வ‌லிய‌ விதி!!!
ஹான்ஸி குரோனி மேட்ச் ஃபிக்ஸிங் பிர‌ச்னைக‌ளில் நிலைகுலைந்துபோன‌ அணியை ஷான் போலாக்கின் த‌லைமையில் ஒருவாறாக‌த் த‌யார்செய்துக் க‌ள‌மிற‌க்கினார்க‌ள் ஆனாலும்கூட‌ அணியின் வ‌லிமை குறைந்திடாது மிர‌ட்டிய‌துதான் தென்னாப்பிரிக்க‌ ப‌லம்!!! வெஸ்ட் இண்டீஸைக் க‌ம்பீர‌மாக‌ ஹோம் க்ரௌடின் ச‌ப்போர்ட்டுட‌ன் எதிர்கொண்ட அணிக்கு தொட‌ரின் முத‌ல்போட்டியிலேயே அதிர்ச்சி காத்திருந்த‌து கார‌ண‌ம் அதே லாரா... அதே செஞ்சுரி.... வெற்றி வெஸ்ட் இண்டீசுக்கு... !! அடுத்த‌ முக்கிய‌ப் போட்டி நியூஸியுட‌ன்.... கிப்ஸின் அதிர‌டி ச‌த‌த்துட‌ன் 305 ர‌ன்க‌ள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா.... ஆனாலும் தோல்விதான் ரிச‌ல்ட்.... கார‌ண‌ம் பாதியில் பெய்த விடாத‌ ம‌ழை!!! (இந்த‌முறை ட‌க்வொர்த்-லீவிஸ்!)... இல‌ங்கையுட‌னான‌ Do or die போட்டியிலும் Never say die என்று ம‌ழை மீண்டும் வ‌ந்தது.... மறுபடியும் ட‌க்வொர்த்-லீவிஸ் கைவ‌ண்ண‌த்தில் ஆட்ட‌ம் "Tie" ஆன‌து... லீக் போட்டியிலேயே பெட்டிக‌ட்டிய‌து!!!

2007: எமனாக எழுந்துநின்ற ஆஸ்திரேலியா:


South Africa leave the field after losing to AustraliaSouth Africa leave the field after losing to Australia
எல்லாம் முடிந்தபின்....
முத‌ன்முறையாக‌ க‌ரீபிய‌ ம‌ண்ணில் ந‌ட‌ந்த‌ உல‌க‌க்கோப்பையில் அசுர‌ப‌ல‌த்துட‌ன் க‌ளமிற‌ங்கிய‌து ஆஸ்திரேலியா.... மீண்டும் ஃபிக்ஸிங் பிர‌ச்னை.... போலாக்கின் ப‌டு பாஸிவ் அணுகுமுறை என்று சோர்வுக‌ண்டிருந்த‌ தென்னாப்பிரிக்காவுக்கோ திடீர் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் இள‌ம்வீர‌ர் ஸ்மித்!.... ந‌ம‌து இந்திய‌ மீடியாக்க‌ள் "நியூம‌ரால‌ஜி"தான் கார‌ண‌ம் என்று தெரிவிக்க‌.... அகில‌ உல‌க‌ கிரிக்கெட் உள‌வாளிகளெல்லாம், பிறப்பிலேயே பெரும் செல்வ‌ந்த‌ரான க்ரீம் ஸ்மித் ப‌ண‌த்துக்கு ம‌ய‌ங்காம‌ல் நேர்மையாக‌ அணியை வ‌ழிந‌ட‌த்துவார் என்று அவ‌ர்க‌ளின் கிரிக்கெட் போர்டு ந‌ம்புவ‌தாக‌ ப‌கிர‌ங்க‌மாக‌ எழுதினார்க‌ள்! ஆனால் ஸ்மித்தின் க‌ட்டுக்கோப்பான‌ கேப்ட‌ன்ஸியில் குறையொன்றுமில்லை என்று ம‌லையாய் எழுந்து விம‌ர்ச‌ன‌ங்க‌ளை வாய‌டைத்தார்க‌ள் கம்பீர வெற்றிகளுடன்! ஆனால் மீண்டும் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை ச‌ந்திக்க‌ வேண்டிய‌ துர்பாக்கிய‌ நிலை ஏற்பட்டுப்போக‌.... ச‌ர்வ‌ப‌ல‌மும் கொண்ட‌ ஆஸ்திரேலிய‌ பவுலிங் அட்டாக்கில் நிலைகுலைந்து போன‌து தென்னாப்பிரிக்க‌ பேட்டிங் ஆர்ட‌ர்... மெக்ராத்தும் ஷான் டெய்ட்டும் மாறி மாறி செய்த‌ டோட்ட‌ல் டேமேஜில் பேட்டிங் ஆர்ட‌ருட‌ன் சேர்ந்து கோப்பைக் க‌ன‌வும் த‌க‌ர்ந்து த‌வுடுபொடியான‌து!!!

2011 அதாவ‌து நேற்று  : நோ கமெண்ட்ஸ்!!!!!

Graeme Smith reacts to South Africa's loss
Graeme Smith reacts to South Africa's loss
விரக்தியின் விளிம்பில்....?

என்ன‌த்த‌ சொல்லுற‌து????

ஆனாலும் சௌத் ஆஃப்ரிக்காவோட‌ "ஜாத‌க‌ம்" இத்த‌னை வாட்ஸ் ப‌வ‌ர்ஃபுல்லா இருக்கும்னு நான் நினைக்க‌ல‌.... மிகச் சாதாரண அணியாகக் கருதப்பட்ட‌ நியூஸிலாந்து திடீரென்று எந்திர‌ன் க்ளைமேக்ஸின் "சிட்டி"க‌ளைப் போல‌ எக்க‌ச்ச‌க்க‌ பிர‌மிக்க‌வைக்கும் ஃபார்மேஷ‌ன்களை மாற்றி மாற்றி அமைத்து மொத்த‌மாக‌க் க‌ட்டிப்போட்டுவிட்டார்க‌ள் திமிறும் தென்னாப்பிரிக்க‌ பேட்டிங் லைனை!

இந்த‌ப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்ப‌தால் டிஆர்பி ம‌ற்றும் பிற பெட்டிங் க‌லெக்ஷன்கள் எகிறக்கூடிய‌ ஆசிய‌ அணிக‌ளின் மோத‌ல்கள் இறுதிப் போட்டிகளில் ஊர்ஜித‌மாகும் என்ப‌துபோன்ற‌ கார‌ண‌ங்க‌ளை மைய‌ப்ப‌டுத்தி ஃபிக்ஸிங் ச‌ந்தேக‌ங்க‌ள் கிள‌ப்ப‌ப்ப‌ட்டாலும் கொஞ்ச‌ம் நிதான‌மாக‌ யோசித்துப்பார்த்தால் தென்னாப்பிரிக்காவின் அசாகாய‌ வ‌லிமை இந்த‌ உல‌க‌க்கோப்பையில் ஜஸ்ட் ஒரு மூன்று பெயர்கள் வலுவாகக் காப்பாற்றிய ஒரு சோப்புக்குமிழ்தான் என்று புரியும்! அசைக்க‌முடியாத‌ ஹ‌ஷிம் ஆம்லா ஒரு பெருஞ்சுவ‌ர்.... நேற்று நூலிழையில் த‌க‌ர்ந்தார்.... ஃபார்மில் இல்லாத‌ ஸ்மித் ஓர் அச்சுருத்த‌ல் இல்ல‌வே இல்லை! அடுத்த‌ டெர‌ர் காலிஸ்.... ஆனால் ப்ர‌ஷ்ஷ‌ரைத் தாங்கி ஆக்ஸ‌ல‌ரேட் செய்யும் வ‌ய‌திலும் இவ‌ர் இல்லை ஒவ்வோர் ஆண்டும் வ‌ய‌து  குறைய‌ இவ‌ர் பெய‌ர் ச‌ச்சினும் இல்லை! இருப்பினும் நேற்று போட்டியிலும் அவ‌ர்க‌ள‌து ஃபேம‌ஸ் துர‌திர்ஷ்ட‌ தேவ‌தையின் திருவிளையாட‌ல் இருக்க‌த்தான் செய்த‌து.... அது எபி டிவில்லிய‌ர்ஸின் ர‌ன் அவுட்!!!!

ச‌த்திய‌மாக‌ ந‌ம்ப‌முடிய‌வில்லை தென்னாப்பிரிக்காவின் நேற்றைய‌ தோல்வியை....
அதே நேர‌ம் ந‌ம்பாம‌ல் இருக்க‌முடிய‌வில்லை தொட‌ரும் அவ‌ர்க‌ள‌து துர‌திர்ஷ்ட‌ப் பின்கதையை!!!

க‌டைசி செய்தி :  இந்த‌ உல‌க‌க்கோப்பைத் தோல்வியை அடுத்து த‌ன‌து கேப்ட‌ன் ப‌தவியை ராஜினாமா செய்திருக்கிறார் க்ரேம் ஸ்மித்! (வைகோ மாதிரி அடுத்த‌ உல‌க‌க்கோப்பையில் ப‌ங்கேற்காம‌ல் புற‌க்க‌ணித்துவிட‌லாமோ தென்னாப்பிரிக்கா?!!)


ஓர் அரிய‌ க‌ண்டுபிடிப்பு!!! : 1999 உல‌க‌க்கோப்பை வெளியேற்ற‌த்தில் முக்கிய‌க் கார‌ண‌மாகிவிட்ட‌ ஆல‌ன் டொனால்டுக்கு நேற்றைய‌ வெளியேற்ற‌த்திலும் க‌ணிச‌மான‌ ப‌ங்கு உண்டு!! கார‌ண‌ம்..... திடீர் எழுச்சி க‌ண்டிருக்கும் நியூசிலாந்தின் பவுலிங்கை கோச் செய்பவர் அதே ஆல‌ன் டொனால்ட்தான்!!!ஹிஹிஹி....

அன்புட‌ன்,

பிர‌பு எம்

Pictures Courtacy: Cricinfo.com

.