Sunday, February 20, 2011

உலகக்கோப்பை 2011: இந்தியா V வங்கதேசம்


முதல் பந்திலேயே பவுண்டரியுடன் அதிரடித் துவக்கம் கண்டது அமர்க்களத் திருவிழா!
இந்தியாவுக்கு முதல்வெற்றி....!

தோணி மேட்ச் வின்னர்னாலும் டாஸ் வின்னர் இல்லதான்!


கடந்த உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு ரிட்டர்ன் டிக்கெட் எடுத்துக்கொடுத்த வங்கதேசத்தை சற்று எச்சரிக்கையுடனே எதிர்கொண்டது இந்தியா... வ‌ழ‌க்க‌ம்போல் தோணி டாஸில் தோற்க‌ இந்த‌ உல‌க‌க்கோப்பையின் ப‌க‌லிர‌வு ஆட்ட‌ங்க‌ளின் ப்ரைம் ஃபாக்ட‌ராக‌ இருக்க‌ப்போகும் ட்யூ ஃபாக்ட‌ரைக் (Dew Factor) கார‌ண‌மாக‌க் கொண்டு முத‌லில் ஃபீல்டிங் செய்ய‌த் தீர்மானித்தார் வ‌ங்க‌தேச‌க் கேப்ட‌ன் ஷாக்கிப் அல் ஹாஸ‌ன்.

சேவாக் v 2.0!!!


சேவ‌க்கின் பெர்ச‌னாலிட்டி பொதுவாகவே ப‌டு ருசிக‌ர‌ம்... உள்ள‌தை உள்ள‌ப‌டி அணுகும் இந்த‌ அதிர‌டிக்கார‌ர் சொன்ன‌தைச் செய்த‌துதான் இந்திய முகாமிற்கு உற்சாக‌ டானிக்! தான் எப்போதும் அணிக்கு அதிர‌டியாக‌த் துவ‌க்கம் த‌ந்துவிட்டு விரைவாக‌த் த‌ன‌து விக்கெட்டைப் ப‌றிகொடுத்துவிடுவ‌தாக‌வும், இந்த‌ உல‌க‌க்கோப்பைத் தொட‌ரில் நிலைத்து நின்று நாற்ப‌து ஐம்ப‌து ஓவ‌ர்க‌ள் வ‌ரை ஆடப்போவதாக‌ முன்ன‌தாக‌ சொன்னார் அதையே இப்பொழுது செய்திருப்பதுதான் "சேவாக் வெர்ஷ‌ன் 2.0" என்று கிரிக்கெட் உல‌கின் தற்போதைய‌ ப‌ர‌ப‌ர‌ப்பு! இந்த‌ வெர்ஷ‌ன் முந்தையதைவிட‌ப் ப‌டு டேஞ்ச‌ர் பவுலர்களுக்கு! சேவாக் எடுத்த‌ 175 ர‌ன்க‌ளில் மென‌க்கிட‌லை விட‌க் க‌வ‌ன‌ம் அதிக‌ம் தென்ப‌ட்ட‌து.... கொஞ்ச‌ம் அழுத்தியிருந்தால் இர‌ட்டைச‌த‌ம் வ‌ச‌மாகியிருக்கும்..... ப‌ர‌வாயில்லை ச‌ச்சினிட‌ம்தானே இருக்கிற‌து அந்த‌ சாத‌னை ம‌குட‌ம்! சேவாக்கிற்காக‌ காம்பிர் ஓட, ம‌றுமுனையில் வீர‌ட் கோஹ்லி என‌ நேற்றைய‌ போட்டியில் இந்த‌ டெல்லி பாய்ஸின் அண்ட‌ர்ஸ்டாண்டிங் அபார‌ம்! ஆனால் ஒருவ‌ரையொருவ‌ர் பார்க்காமல் ரன் ஓடியெடுக்க முற்பட்டு ர‌ன் அவுட் ஆனது ச‌ச்சினும் சேவாக்குமா?? ச‌ச்சினின் ர‌ன் அவுட்டை ஜீர‌ணிக்க‌ முடிய‌வில்லை.... ஆனால் ச‌ச்சின் ப‌டு இய‌ல்பாக‌ ஆடிய‌து ந‌ம்பிக்கை அளித்த‌து!

மிஸ்டர்.கன்ஸிஸ்டன்ஸி!

இப்போதைய‌ இந்திய‌ அணியின் ஒரிஜின‌ல் ஹீரோ விராட் கோஹ்லிதான்! ஜுனிய‌ர் உல‌க‌க்கோப்பையை இந்தியாவுக்கு வாங்கிக்கொடுத்த‌ கையோடு ஐபிஎல்லிலிருந்து வேக‌மாக‌ இந்திய‌ அணியில் இட‌ம்பிடித்துள்ள இளம்புயலுக்கு இதுவ‌ரை ஆடியுள்ள‌ வெறும் 46 போட்டிகளிலேயே 5 ச‌த‌ங்க‌ளும் 12 அரைச‌த‌ங்க‌ளும் பாக்கெட்டில்! நேற்றைய‌ த‌ன்னுடைய‌ முத‌ல் உல‌கக்கோப்பை போட்டியில் அநாய‌ச‌மாக‌ ச‌த‌மடித்திருக்கும் இந்த‌ "மிஸ்ட‌ர். க‌ன்ஸிஸ்ட‌ன்ஸி" தொட‌ர்ந்து க‌ல‌க்கும் ப‌ட்ச‌த்தில் இந்தியாவுக்குப் பெரும் ப‌ல‌ம் சேர்ப்பார் என்ப‌தில் ஐய‌மில்லை.. நேற்று 46வ‌து ஓவ‌ரில் வ‌ங்க‌க் கேப்ட‌ன் ஷாக்கிப் அல் ஹாஸ‌னின் ப‌ந்துவீச்சில் கோஹ்லி அடித்த‌ ஸ்ட்ரெய்ட் சிக்ஸ‌ர்தான் என்னைப் பொறுத்த‌வ‌ரை "ஷாட் ஆஃப் தி டே"! குறுகிய‌ இடைவெளியில் பேட்டை ப‌டு நேராக‌ ஆங்கிள் செய்துகொண்டு அள‌ந்துவைத்து 90 டிகிரியில் நேர்த்திசையில் சிக்ஸ‌ரை செலுத்திய‌ வேக‌ம் இன்னும் க‌ண்ணில் நிற்கிற‌து!

காம்பிரைப் பொறுத்தவ‌ரை ரெய்னா புத்துண‌ர்ச்சியுட‌ன் ஃபார்முக்குத் திரும்புகையில், நேர்த்தியான‌ கோஹ்லி நீடிக்கும்போது காம்பீருக்கு அணியில் பெரிய வாய்ப்பு இருக்க‌ப் போவ‌தில்லை.... பேட்டிங் ஆர்ட‌ர் நெருக்கடியில் உருளும் அவரின் த‌லையைக் காத்துக்கொள்ள வேக‌மாக‌ சூழ்நிலைக்கு ஏற்ற‌வாறு த‌ன்னுடைய‌ ஆட்ட‌த்தை மாற்றிக்கொள்ளும் திற‌னை நிரூபித்தாக‌ வேண்டிய‌ க‌ட்டாய‌த்தில் இருக்கிறார்.... வ‌ழ‌க்க‌மான‌ த‌ன்னுடைய‌ ஸ்டைலில் நேற்று ஆடிய‌து வ‌ர‌வேற்க‌க‌த்த‌க்க‌தே.....

குட் ஜாப் முனாஃப்!

370 ர‌ன்க‌ளை சேர்த்த‌போதே வெற்றி உறுதியாகிவிட்ட‌ போதிலும்.... பேட்டிங்கில் ஈர்த்த‌து வ‌ங்க‌தேச‌ம்! இம்ருல் கேய்ஸ்ஸின் அதிர‌டித் துவ‌க்க‌த்தை ர‌சித்தேன்.... ஸ்ரீ சாந்த்துக்கு வாய்ப்புக‌ளுக்குப் ப‌ஞ்ச‌மில்லாத‌ அதிர்ஷ்ட‌ம் இருந்தும் ப‌ய‌ன்ப‌டுத்திக்கொள்ளும் பொறுப்பு அவ‌ரிட‌ம் நேற்றும் இல்லாம‌ல் போன‌து பெரும் ஏமாற்ற‌ம்.... முனைப்பாக‌ வீசிய‌ முத‌ல் ஓவ‌ரே சுமார்தான்..... தொட‌ர்ந்து ஒரே ஸ்டைலில் அடித்து நொறுக்க‌ப் ப‌ட்டாலும் லைனை மாற்றிக்கொள்ளாம‌ல் இருகிய‌ முக‌மும் எரிச்ச‌ல் உட‌ல்மொழியுமாய் ஸ்ரீ சாந்த் ப‌ந்துவீசிய‌து பூர்வ‌ ஜென்ம‌த்து ஃபெயிலிய‌ர் அக‌ர்க்க‌ரை ஞாப‌க‌ப்ப‌டுத்திய‌து! ஜாஹிர்கானின் ப‌ந்துவீச்சும் எதிர்பார்த்த‌ அள‌விற்கு எடுப‌ட‌வில்லை.... முனாஃப் ப‌டு சாத்வீகமாகிவிட்டார்... Stick on to the basics  என்று அறிவுருத்த‌ப்ப‌டுவ‌துபோல‌ க்ளீன் லைன் அண்ட் லெங்க்த்! ச‌ரியான‌ இட‌ங்க‌ளில் துல்லிய‌மாக வீசுவ‌தையே க‌வ‌ன‌மாக‌ப் பின்ப‌ற்றிய‌த‌ற்குக் கிடைத்திருக்கும் 4 விக்கெட்டுக‌ள் அவ‌ர‌து த‌ன்ன‌ம்பிக்கையை உய‌ர்த்தும் என்றாலும் இதே பாணி அடுத்த‌டுத்த‌ அனுப‌வ‌ அணிக‌ளுட‌ன் கைகொடுக்குமா என்ப‌து கேள்விக்குறிதான்.... ஒரு லிமெடெட் ப‌வுலராக‌ இருக்கும் முனாஃப் ப‌ழ‌சாகிவிட்ட‌ ப‌ந்தைக் கையாளும் பாங்கில் ம‌ட்டும் க‌வ‌ன‌ம் ஈர்க்கிறார்.... அவ‌ருக்கு ஓர் ஆல் தி பெஸ்ட்..... அனுப‌வ‌ நெஹ்ராவுக்கு ஸ்ரீ சாந்த் அழைப்பித‌ழ் கொடுத்திருக்கிறார்...... நெஹ்ரா வந்தாலும் பவுலிங் இந்தியாவுக்கு நீங்காத‌ த‌லைவ‌லிதான்.... ஹ‌ர்ப‌ஜ‌ன் எழுச்சி காணும்ப‌ட்ச‌த்தில் சுழ‌லுக்கு சாத‌க‌மான‌ துணைக்க‌ண்ட‌ ஆடுக‌ள‌ங்க‌ளில் ச‌ற்று தாக்குப்பிடிக்க‌லாம்! பார்த்து இய‌ங்குங்க‌ தோணி.... முத‌ல்ல‌ ஃப்ரீயா இருக்கும் நேர‌ங்க‌ளில் டாஸ் போட்டு ஜெயிக்க‌ப் ப‌ழ‌குங்க‌! :)

வ‌ங்க‌தேச‌ம் நிச்சிய‌ம் தான் ஒரு வ‌லிமைகுறைந்த‌ அணியில்லை என்று வீர‌மாக‌வே நிரூபித்த‌து நேற்று.... இந்தியாவின் பேட்ட‌ங் லைன் அப்புட‌ன் பேட்ஸ்மேன்க‌ளின் சொர்க்க‌மான‌ ஆடுக‌ள‌த்தில் நானூறைக் க‌ட்டுப்ப‌டித்திய‌தே பெரிய‌விஷ‌ய‌ம்தான்... வ‌ங்க‌ப்புலிக‌ளின் பேட்டிங் நேற்று ப்ரொஃப‌ஷ‌ன‌ல்! த‌ம்மிம் இக்பால் பொறுமையான‌ ஆட்ட‌த்தை வெளிப்ப‌டுத்திய‌து ப‌க்குவ‌மே! கேப்ட‌ன் ஷாக்கிப்பின் சாதுர்ய‌மான‌ பேட்டிங் மிக‌வும் க‌வ‌ர்ந்த‌து..... இம்ருல் கேய்ஸ், தமிம் இக்பால், ஜுனாய்த் சித்திக், ஷாக்கிப் அல் ஹாலன், ரஜிம் மற்றும் ரகிபுல் ஹாஸன் என்று அதிர‌டி + நிதான‌ பேட்டிங் ஆர்ட‌ர் நிச்சிய‌ம் குரூப் பியில் இந்தியாவிட‌ம் வீழ்ந்தாலும் லீக் போட்டிக‌ளில் அதிர்ச்சி வைத்திய‌ம் கொடுக்கும் என்று ந‌ன்றாக‌வே எதிர்பார்க்க‌லாம்!

ஃபீல்டிங் நேற்று வ‌ழ‌க்க‌ம்போலத்தான் இருந்த‌து இந்திய‌ அணியில்.... இனிமேல் புதிதாக‌ ஓர் எழுச்சியை ஃபீல்டிங்கில் எதிர்பார்க்க‌ முடியாவிட்டாலும் விராட் கோஹ்லி,ரெய்னா,யுவ்ராஜ் போன்ற‌ ந‌ல்ல‌ ஃபீல்ட‌ர்க‌ளை தோணி ச‌ரியாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்துகையில் கொஞ்ச‌ம் ர‌ன்க‌ளை நிச்சிய‌ம் த‌டுக்க‌லாம்....

நேற்றைய‌ ஆட்ட‌ம் உல‌க‌க்கோப்பைக்கு அதிர‌டித் துவ‌க்க‌ம்.... இந்தியாவுக்கு கான்ஃபிட‌ன்ஸ் பூஸ்ட‌ர்.... வ‌ங்க‌தேச‌த்துக்கு ஆறுத‌ல் ப‌ரிசு....

அன்புட‌ன்,
பிர‌பு எம்


Pictures Courtesy: Cricinfo.com
.

19 comments:

  1. நல்ல விமர்சனம்
    இப்படியே அனைத்து ஆட்டங்களுக்கும் விமர்சனம் எழுதுங்களேன்

    ReplyDelete
  2. மேட்ச் சரியா பார்க்கலை பிரபு...:) ஆனால் நம்ம ஸ்ரீசாந்த் பாலில் வங்கதேசம் ரன் மழை பொரிச்ச கண்கொள்ளா காட்சியை மட்டும் பார்த்தேன்...:))) அடுத்து நம்ம பஜ்ஜு பையன் ஸ்ரீசாந்த் ஐ எப்போ அடிப்பார்?? :)))

    ReplyDelete
  3. //பார்த்து இய‌ங்குங்க‌ தோணி.... முத‌ல்ல‌ ஃப்ரீயா இருக்கும் நேர‌ங்க‌ளில் டாஸ் போட்டு ஜெயிக்க‌ப் ப‌ழ‌குங்க‌! :)//

    இத்..தோடா...இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல...:)))

    ReplyDelete
  4. //விராட் கோஹ்லி,///

    Jai ho:))

    ReplyDelete
  5. வங்கதேசம் தமது திறமையை பக்காவாக நிரூபித்துள்ளது.. அருமை.. இன்னும் சிறப்பான பயிற்சியும்,ஈடுபாடும் இருந்தால் மேலும் பல அதிர்ச்சிகளை அது தர வல்லமை பெற்றது..

    ReplyDelete
  6. வங்கதேசம் அதிகமாக வளர்ந்து வருகிறது..இருந்தாலும் நாம் பவுலிங்கில் சொதப்புவதாகவே படுகிறது.பீல்டிங்கிலும் அப்படியோ உள்ளோம்... இன்னும் மெனக்கெட்டு ஆட வேண்டும் ... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. இந்தியா வெளயாடுற எல்லா மேட்சுக்கும் இப்படி பதிவு எழுதுப்பா.. எப்படி வருதுன்னு பார்ப்போம்..

    ReplyDelete
  8. நன்றி ஹாஜா மொஹைதீன் :)
    உலகக்கோப்பையின் முக்கியமான போட்டிகள் அனைத்திற்கும் எழுதலாம் என்று எண்ணம்...
    நிச்சியமா எழுதுறேன்... ரொம்ப நன்றி நண்பா...

    ReplyDelete
  9. //அடுத்து நம்ம பஜ்ஜு பையன் ஸ்ரீசாந்த் ஐ எப்போ அடிப்பார்?? :)))
    //

    ஹஹஹா... பஜ்ஜி அடிச்சது கூட பரவாயில்லக்கா நேத்து மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் வாங்கிட்டு சேவாக் சொன்னதைக் கேட்டீங்களா? எல்லாரும் நல்லா விளையாடினோம் ஸ்ரீ சாந்தைத் தவிரன்னு வழக்கம்போல தன்னோட ஸ்டைல்ல பொட்டுத் தெறிச்சாமாறி சொல்லிட்டு போயிர்ட்டாரு.... இதுக்கு பஜ்ஜி கிட்ட அடி வாங்குறதே பெட்டர்தானே!! :))

    ReplyDelete
  10. //இத்..தோடா...இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல...:))) //

    :))) தோணிக்கு சீரியஸ்லி டாஸ்ல ஜெயிக்க ப்ராக்டிஸ் தரணும் அக்கா!! அசார் கிட்ட டிப்ஸ் கேக்கலாம்தான் ஆனா அவரு கூட சேர்ந்து கெட்டுப் போயிட்டாருன்னா பிரச்னையாகிடும்!!!:)

    ReplyDelete
  11. நன்றி தம்பி கூர்மதி

    வங்கதேசத்தின் எழுச்சியை நிச்சியம் இந்தத் தொடரிலேயே எதிர்பார்க்கலாம்!

    ReplyDelete
  12. நன்றி சரவணன் சார்...

    ReplyDelete
  13. //இந்தியா வெளயாடுற எல்லா மேட்சுக்கும் இப்படி பதிவு எழுதுப்பா.. எப்படி வருதுன்னு பார்ப்போம்.. //

    எழுதிட்டா போச்சு! :)
    எப்படி இருக்கீங்க ப்ரதர்... லாஸ்ட் டைம் மீட் பண்ண முடியல... :-(

    ReplyDelete
  14. க்ரிகெட் பற்றி நல்ல பகிர்வு. பிரபு..:))

    ReplyDelete
  15. ரொம்ப நன்றி தேனக்கா :)

    ReplyDelete
  16. Hellooo Aadhi sir :)) Vanga Vanga..... Yes.. India Rocks!!! Jai Ho...

    ReplyDelete
  17. ரொம்ப நன்றி அன்பு சகோதரா...

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)