Monday, February 28, 2011

இந்தியா V இங்கிலாந்து : Do or Tie!!!

வெற்றியின் களிப்பையும் தோல்வியின் களைப்பையும் இருதரப்பு முகங்களையும் மாறி மாறி அபிநயிக்க வைத்து இறுதியில் வெற்றி தோல்வியின்றி முடிந்த போட்டியை ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும் மறக்க நாளாகும்! :-)

ந‌க‌த்தோடு சேர்த்து ச‌தையையும் பற்கள் க‌டிக்கும் ப‌த‌ற்ற‌ம்.... வ‌லியைப் பொறுத்துக்கொண்டு நிதானித்த‌ தோணிக்கு ஜாஹிர் கொடுத்த திடீர் உற்சாக‌ Come back! அதைத் தொடர்ந்து அடுத்த‌டுத்த‌ விக்கெட்டுக‌ள் இங்கிலாந்து கொடியை அரைக்க‌ம்ப‌த்தில் ப‌ற‌க்கவிட்டாலும்....இங்க்லீஷ் பேட்டிலிருந்து ச‌ந்த‌டியில் ப‌ற‌ந்த‌ ச‌த்த‌மில்லாத அந்த‌ சிக்ஸ‌ர்கள் இறுதிக்காட்சியில் முடிவுரையை மாற்றியமைத்து இரு அணிகளையுமே இருகிய‌ முகமாய்க் கைகொடுத்து விடைபெற‌வைத்து விட்ட‌து வெற்றி‍‍ யாருக்குமின்றி!!

England's Graeme Swann greets Indian players after the match was tied
இர‌ண்டு ப‌க்க‌முமே சோக‌ம்தான் முடிவில்!
ம‌ழைவ‌ராது என்று மேகங்கள் ச‌த்திய‌ம் செய்திருக்க,  இரண்டு நாள் மழையில் குளிர்ந்திருந்த பெங்களூரு அற்புத‌மான‌ கிரிக்கெட்டிங் க‌ண்டிஷனை வழங்கியிருந்தது இந்த முக்கிய‌மான‌ ஆட்ட‌த்துக்கு... அந்த‌ நிலையிலும், ஒருவேளை ம‌ழை வ‌ந்திடுமோ என்று அச்ச‌ம் க‌ல‌ந்ததோர் ஆச்ச‌ர்ய‌ம்.. கார‌ண‌ம் டாஸ் வென்ற‌து தோணி!! :)) வெல்டன் கேப்டன்..இனிமேல் உங்க‌ டாஸ் ராசியைப் ப‌ற்றிப் பேச‌மாட்டேன் இது மேன் ஆஃப் தி மேட்ச் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் மேல‌ ச‌த்திய‌ம்!!! ;-)

முத‌ல்ப‌ந்தே மூச்சைப் பிடித்தது சேவ‌க்கிற்கு ஸ்லிப்பில் கேட்சு மிஸ்ஸாகி பவுண்டரி போனபோது!..."தப்பிச்சோம்டா.." என்று பார்த்தால்... அந்த‌ ஓவ‌ரிலேயே அடுத்தடுத்து மூன்றுமுறை சற்று க‌டினமான கேட்ச் வாய்ப்புக‌ளில் த‌ப்பி செத்து செத்து விளையாடினார் சேவ‌க்!! ஒருமுனையில் ச‌ச்சின் க‌ன்ன‌ட‌ ம‌ண்ணில் வேர்விட‌ ச‌ற்று நேர‌ம்பிடிக்க மறுமுனையில் ஓர் இன்ஸ்டன்ட் ஆல‌ம‌ர‌மாய் வேருக்குமுன்பே நாற்புற‌மும் கிளைப‌ர‌ப்பினார் சேவ‌க் அச‌த்த‌ல் ப‌வுண்ட‌ரிகளால்! அவரது டைமிங் அற்புத‌ம்.... ஓகே அகைன் எ சேவ‌க் ஷோ என்று க‌ணித்த‌ அடுத்த‌நொடி விக்கெட் கீப்பர் மேட் ப்ரைய‌ரின் அற்புத‌மான டைவ் கேட்சுக்கு விக்கெட்டைப் ப‌றிகொடுத்து சேவக் ந‌டையைக் க‌ட்டியது ஷாக்! (35 ர‌ன்க‌ள் 24பந்துக‌ளில்)

க‌ம்பீரைத் த‌னியாக‌ பாராட்டியே ஆக‌வேண்டும்... வ‌ழ‌க்க‌த்துக்கு மாறாக‌ ச‌ச்சின் பேட்டிங்கில் த‌ன் ஸ்ப‌ரிஸ‌த்தைத் தொட்டுப்பதிக்க அதிக‌ நேர‌மெடுக்க, ச‌ச்சினின் முனையின் அழுத்த‌த்தையும் த‌ன் தோள்க‌ளில் சும‌ந்தார் கம்பீர்... ச‌ச்சின் மீண்டு எழுந்து வ‌ரும்வ‌ரையிலும் ர‌ன்ரேட் வீழாம‌ல் இருந்த‌த‌ற்குக் முழுக்கார‌ண‌ம் இன்று கௌத‌ம் காம்பீர்தான்! (51 ரன்கள் 61பந்துகளில்)


Sachin Tendulkar celebrates his 47th ODI century
தழல் வீரத்துக்கு மூப்பில்லைதான் - "இளைஞன்" சச்சின்!!

ஆறாவ‌து உல‌க‌க்கோப்பையில் ஆடும் ஒரே வீர‌ர் என்ற‌ சாத‌னை ஏற்கெனவே தன்வசமிருக்க உல‌க‌க்கோப்பைக‌ளில் அதிக‌ ச‌த‌ம‌டித்த‌ சாத‌னையையும் இன்று த‌ன‌தாக்கிய‌ ச‌ச்சினின் பேட்டிங்கை வ‌ருணிக்க‌ வார்த்தைக‌ள் தேவையில்லை முழுக்க‌ முழுக்க‌ அது கண்கொள்ளா ச‌ச்சினிஸ‌ம்! சின்ன‌சாமி ஸ்டேடிய‌த்தின் அவுட்ஃபீல்ட் ரொம்பவே ஃபாஸ்ட்!.. இத‌னைப் ப‌டுசாம‌ர்த்திய‌மாக‌க் கையாண்டார் இங்கிலாந்து கேப்ட‌ன் ஸ்ட்ராஸ்... ஏற‌த்தாழ‌ ஒவ்வொரு ப‌ந்திற்கும் க‌ள‌த்தில் மாற்றிய‌மைக்க‌ப்ப‌ட்ட‌ ஃபீல்டிங் வியூக‌ம் பவுண்ட‌ரிக‌ளை முளையிலேயே முட‌க்கிப்போட்டது.... வேக‌மான‌ அவுட்ஃபீல்டுக‌ளில் ப‌வுண்ட‌ரிக‌ள் த‌டுக்க‌ப்ப‌ட்டால் ஏற்ப‌டும் சிர‌ம‌ம் ஒரு ர‌ன்னுக்குமேல் ஓடி எடுக்க‌முடியாமல் போவது (ஃபீல்டரின் கைகளைத் தங்குதடையின்றி அத்தனை வேகமாகப் பந்து அடைந்துவிடுமே!)... இத‌ற்கு ச‌ச்சின் கொடுத்த‌ மாற்று ம‌ருந்து சிக்ஸ‌ர்க‌ள்!! ஒரே மேட்சில் சச்சின் ஐந்து சிக்ஸ‌ர்க‌ளை விளாசிய‌தெல்லாம் கால‌தேவ‌ன் க‌ள‌வாடிவிட்ட‌ பொழுதுக‌ளாக‌ ஏங்கும் த‌ருண‌த்தில் முப்ப‌த்து ஏழு வ‌ய‌தில் பதினாறு வயது பையனாக அதிரடிக் காட்சிகளை அரங்கேற்றிக் காட்டினார் ச‌ச்சின் டூப் இல்லாம‌ல்!! :-)) க‌வ‌னித்தீர்க‌ளா விக்கெட்டுக‌ளுக்கு இடையே ஓடிய‌தை?? ஒவ்வொருமுறையும் இர‌ண்டாவ‌து ரன்னை ஓடக்கேட்டு முன்னெழுந்து வேக‌மாக‌ ஓட‌ முனைந்த‌து ச‌ச்சின்தான்.. த‌டுத்தவ‌ர்க‌ள் யுவ‌ராஜும், க‌ம்பீரும்!!! ச‌ச்சின்தான் அன்றும் இன்றும் என்றும் "இளைஞன்"! ஒரு முழுமையான‌ ர‌ன் விருந்து இன்று ச‌ச்சின் ப‌டைத்த‌து! நாற்ப‌துக‌ளில் இருந்த‌போது அவ‌ர‌து ஸ்ட்ரைக்ரேட் 68.4 அதுவே எண்ப‌து ரன்னைத் தொட்ட‌போது 98.6!! இறுதியில் 115 ப‌ந்துக‌ளில் 120 ர‌ன்க‌ள் எடுத்து ஒட்டுமொத்த‌ ஸ்டேடிய‌மும் கொடுத்த‌ ஸ்டாண்டிங் ஓவேஷ‌னை ப‌ணிவுட‌ன் ஏற்றுத் த‌ன் ப‌ணிமுடித்துத் திரும்பினார் பேட்டிங் லெஜ‌ண்ட்!

செம‌ ஃபார்மில் இருக்கும் விராட் கோஹ்லியை விடுத்து தோணி யுவராஜைக் க‌ள‌மிற‌க்கிய‌த‌ற்கு யாரேனும் கோப‌ப்ப‌ட்டிருந்தால் ஸாரி.. அதற்கு நாம் தோணியைப் பாராட்ட‌வேண்டும் என்பேன்! க‌ட‌ந்த‌ ப‌த்தாண்டு இந்திய‌ கிரிக்கெட்டை ஒரு ஃபாஸ்ட் ஃபார்வோர்ட் செய்து பார்த்தால் அதிக‌மான‌ போட்டிக‌ளை வென்றுகொடுத்த‌ மேட்ச்வின்னர் சந்தேகமேயின்றி யுவ‌ராஜ் சிங்காக‌த்தான் இருப்பார்... அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஜென்யூன் மேட்ச்வின்ன‌ர் இன்று ஃபார்ம் இழ‌ந்து த‌விக்கும் வேளையில் இதைவிட‌ சிற‌ப்பான‌ வாய்ப்பு அவ‌ருக்குக் கிடைக்க‌ப்போவ‌தேயில்லை என்ப‌து நித‌ர்ச‌ன‌ம்... கார‌ண‌ம் இங்கிலாந்து அவ‌ருக்கு செம‌ ஸ்பெஷ‌ல் செல்ல‌ம்!! இங்கிலாந்தின் ப‌ந்துவீச்சை ரன் பசியில் ருசித்துப் புசிப்ப‌வ‌ர் ந‌ம் ப‌ஞ்சாப் ல‌ய‌ன்!! இந்த‌ப்போட்டிக்கு முன்ன‌தாக‌ இங்கிலாந்துட‌னான‌ ஆட்ட‌ங்க‌ளில் யுவ‌ராஜின் ஆவ‌ரேஜ் ஐம்ப‌த‌ற்கும் மேற்ப‌ட்ட‌து (28போட்டிக‌ள்!) ஃபார்மை மீட்டாரோ இல்லையோ வெளிப்ப‌டையாக‌வே இழ‌ந்திருந்த‌ த‌ன்ன‌ம்பிக்கையை நிச்சிய‌ம் மீட்டெடுதத‌ வ‌கையில் இருந்த‌து இன்று யுவ‌ராஜின் செய‌ல்பாடு (58 ரன்கள் 50 பந்துகளில்).... வெல்க‌ம் பேக் பாஸ்!!

பேட்டிங் ஆர்ட‌ரில் மாற்ற‌ம் செய்து தோணி சிற‌ப்பாக‌க் க‌ள‌மாடியிருந்தாலும் இன்று சிற‌ந்த‌ கேப்ட‌ன் அப்ளாஸ் ஸ்ட்ராஸுக்குத்தான் ஃபீல்டிங் ஃபார்மேஷ‌னுக்காக‌.... அதேபோல் ச‌ச்சினின் ச‌தம் இருந்தும் பெஸ்ட் பேட்ஸ்மேன் அவார்டும் ஸ்ட்ராஸ்ஸின் வ‌ச‌ம்தான்.... இன்று ஸ்ட்ராஸின் சத‌ம் பிர‌ம்மாண்ட‌மான‌து! ஒரு மிக‌ நீள‌மான‌ இன்னிங்ஸை முன்நின்று வ‌ழிந‌ட‌த்த‌ப்போகிறோம் என்கிற‌ டிடெர்மினேஷ‌ன்.. அத‌ற்கேற்ற‌ ரிஸ்க் ஃப்ரீ ஷாட் செல‌க்ஷ‌ன் என்று ஒவ்வொரு இந்திய‌னின் கைத்த‌ட்ட‌லையும் சித‌ற‌டித்தார் ஸ்ட்ராஸ் இன்று! ரிஸ்க் ஃப்ரீயான‌ ஷாட்டுக‌ளைக் க‌வ‌ன‌மாக‌த் தேர்ந்து இங்கிலாந்து கேப்ட‌ன் க‌ல‌க்கியிருக்க, ஒரு கேர் ஃப்ரீ ஷாட்டிற்குத் த‌ன‌து விக்கெட்டை தோணி ப‌றிகொடுத்த‌து பெரும் ஏமாற்ற‌ம்.... க‌டைசி ஓவ‌ர்க‌ளில் ஒருமுனையில் தான் நிலைத்து அதிர‌டியை வ‌ழி ந‌ட‌த்தியிருந்தால் கூடுத‌லாக‌ இருப‌து ர‌ன்கள் வரைகூட‌ சேர்த்திருக்க‌லாம் க‌ஷ்ட‌மின்றி.... ஆட்ட‌த்தின் முடிவும் வேறாக‌ இருந்திருக்கும்! சீட்டுக்க‌ட்டாக‌ ச‌ரிந்தார்க‌ள் ந‌ம்ம‌வ‌ர்க‌ள் க‌டைசி ஓவ‌ர்க‌ளில்... யூசுஃப் ப‌தானின் அதிர‌டி ஓகே ஆனால் ஒருமுனையில் தோணி நிச்சிய‌ம் தாக்குப்பிடித்திருக்க‌ வேண்டும்! :-(


Andrew Strauss celebrates his century
இவ‌ரைக் "கேப்ட‌ன்"னு கூப்பிட்டா அதுல‌ அர்த்த‌ம் இருக்கு!!  - ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்

இங்கிலாந்தின் பேட்டிங் ப‌ல‌ம் நித‌ர்சனமானது, அதேபோல‌த்தான் இந்தியாவின் ப‌வுலிங் ப‌ல‌வீன‌மும்! ஆனால் இன்று இந்திய‌ அணியின் ப‌வுலிங் எதிர்பார்த்த‌தைவிட‌ அதிக‌ ப‌ல‌வீன‌மாக‌ இருக்கிற‌து என்ப‌துதான் இன்றைய‌ "மார‌ல் ஆஃப் தி ஸ்டோரி"..! :-( ஜாகிர்கான் - முனாஃபின் ஆர‌ம்ப‌ ஓவ‌ர்க‌ளில் முனைப்பிருந்தும் ப‌ல‌ன் இல்லை... தோணியின் ஃபீல்டிங் வியூக‌த்தில் ஏக‌ப்ப‌ட்ட‌ ஓட்டைக‌ள்... அத்தனையையும் ப‌வுண்ட‌ரிகளால் நிர‌ப்பினார்க‌ள் பீட்ட‌ர்ச‌ன்னும் ஸ்ட்ராஸ்ஸும் ஆரம்பப் ப‌வ‌ர்ப்ளேயில்! ட்யூ ஃபேக்ட‌ர் இல்லாத‌போதும் மிக‌ விரைவாக‌ப் ப‌ழ‌சான‌து இன்று இந்தியா வீசிய‌ வெள்ளைப்ப‌ந்து! அது பெரும் ச‌வாலான‌து பியுஷ் சாவ்லாவுக்குத்தான்! எதிர்பார்த்த‌ அள‌வு சுழ‌ல‌வில்லை சாவ்லா இன்று.... ஒரே மாதிரியான‌ கைய‌சைவுடனேயே 'கூக்லி' வீசும் வல்லமை படைத்த‌ இவர் அந்த அஸ்திரத்தை ச‌ற்று நிதான‌மாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து ந‌ல‌ம் என்று நினைக்கிறேன்... ஓவ‌ருக்கு மூன்று கூக்லிக்க‌ளை வாரி இரைக்கிறார்... அது பேட்ஸ்மேன்க‌ளைக் கூடுத‌ல் உஷார் நிலைக்கு நிர்ப‌ந்த‌ப்ப‌டுத்துகிற‌து! விக்கெட்டைப் பாதுகாத்துக்கொண்டு மோச‌மான‌ ப‌ந்துக‌ளைத் த‌ர‌ம்பிரித்து வெளுத்துவாங்கினார்க‌ள் பெல்லும், ஸ்ட்ராஸ்ஸும் இந்தியச் சுழ‌லை சாமர்த்தியமாக ச‌மாளித்து!

Munaf Patel (left) celebrates after catching England's Kevin Pietersen off his own bowling
முனாஃப் கேட்ச்!

முன்ன‌தாக‌ முனாஃப் ப‌டேல் "மோஸ்ட் டேஞ்ச‌ரஸ்" கெவின் பீட்ட‌ர்ஸனைக் க‌ண்ண‌ச‌ரும் நேர‌த்தில் எப்ப‌டியோ அவரே கேட்ச் பிடித்து (caught and bowled) வெளியேற்றியிருந்தாலும் (ஆக்சுவ‌லி ரீப்ளே பார்த்த‌போது ப‌ந்தை அவ‌ர் பிடித்தாரா அல்ல‌து ப‌ந்து அவ‌ரைப் பிடித்த‌தா? என்று கேள்வியெழுந்த‌தைத் த‌விர்க்க‌முடிய‌வில்லை!ஹிஹி!!!) போன‌ வ‌ங்க‌தேச‌ப் போட்டியின் ரிவ்யூவில் குறிப்பிட்டிருந்ததுபோலவே இவ‌ர‌து "லைன் அன்ட் லெங்த்" அரிச்சுவ‌டி ப‌வுலிங் எல்லாம் அனுப‌வ‌ அணிக‌ளுட‌ன் எடுப‌டாது என்ற‌ க‌ணிப்பு பொய்க்காத‌து சோக‌ம்... இங்கிலாந்து பேட்டிங்கிற்கு முனாஃபின் ப‌ந்துவீச்சு எவ்வித‌ நெருக்க‌டியும் த‌ர‌முடிய‌வில்லை :( இறுதிவேளையில் மெதுவான‌ ப‌ந்துக‌ளை நேர‌ம்பார்த்து வீசிய‌ சாதுர்ய‌த்தால் ம‌ட்டும் கொஞ்சம் க‌வ‌ர்ந்தார்... பொறுப்பும் உழைப்பும் ம‌ட்டும் போதாது முனாஃப்... வேக‌மும் துல்லிய‌மும் நிச்சிய‌ம் வேண்டும்... ப்ளீஸ் க‌வ‌ன‌ம் செலுத்துங்க‌ உங்க‌ள‌விட்டா ஆளில்ல‌!! :-(( ஹ‌ர்ப‌ஜ‌ன் ப‌வுலிங்கும் த‌டுமாற்ற‌ம்தான்... :( ஏற்கென‌வே சொன்ன‌துபோல‌ ஃபீல்டிங்கில் இனியோர் எழுச்சியெல்லாம் சாத்திய‌ம் அல்ல‌ இந்தியாவுக்கு இந்த‌த் தொட‌ரில், இருப்பினும் இன்று ஜாஹிர் கொடுத்த‌ பூஸ்ட்-அப் பிற்குப் பிற‌கு வெளிப்ப‌ட்ட‌ துடிப்பு இந்த‌த் தொட‌ர்முழுக்க‌ ஃபீல்டிங்கில் தொட‌ர்ந்தால் அது பெரும்ப‌ல‌மாக‌ இருக்கும் இந்தியாவுக்கு...


Zaheer Khan leaps for joy after dismissing Andrew Strauss
ம‌றுவாழ்வு த‌ந்த‌ புய‌ல் - ஜாகிர்கான்
முன்ன‌தாக‌.. இங்கிலாந்து பேட்டிங்கில் பெல்லும் ஸ்ட்ராஸ்ஸும் அடித்து ஆடி அமைத்துக்கொடுத்த‌ அடித்த‌ள‌ம் ம‌க‌த்தான‌தாக‌ இருப்பினும் யுவ‌ராஜின் ப‌ந்துவீச்சில் பெல்லின் எல்பிடபுள்யூ வுக்கு அம்பய‌ர் தீர்ப்பை ரிவ்யூ கோரியும் நியாய‌ம் கிடைக்காத‌து மிக‌வும் துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மானது.... நிச்சிய‌மாக‌க் கோண‌ங்கி அம்ப‌ய‌ர் பில்லி போட‌ன் அந்த‌ அப்பீலுக்குத் தானே அவுட் கொடுத்திருக்கும் ப‌ட்ச‌த்தில் ரிவ்யூ கோராம‌லேயே இயான் பெல் பெவிலிய‌ன் திரும்பியிருந்தாலும் ஆச்ச‌ர்ய‌மில்லை... "அம்ப‌ய‌ரிங்" இந்த‌ ல‌ட்ச‌ண‌த்தில் இய‌ங்கும்போது எத‌ற்கு இந்த‌ ரிவ்யூ செய்யும் புதிய‌முறை???? அந்த‌ விக்கெட்டும், ஸ்ட்ராஸ்ஸுக்கு ஹ‌ர்ப‌ஜ‌ன் த‌வ‌ற‌விட்ட‌ கேட்சும் மாறி ந‌ட‌ந்திருக்கும் ப‌ட்ச‌த்தில் போட்டியின் முடியும் நிச்சிய‌ம் மாற்றியெழுத‌ப்ப‌ட்டிருக்கும் என்ப‌தில் ச‌ந்தேக‌மில்லை...!

இக்க‌ட்டில் ஒருபுற‌ம் ஜாகிர்கான் மூன்று வேக‌மான‌ விக்கெட்டுக‌ளால் த‌லையைக் காத்தாலும் கால்வ‌ழியாக‌ உயிர்போய்க்கொண்டுதான் இருந்த‌து இறுதியில் அஜ்ம‌ல் ஷ‌சாத்தின் எதிர்பாராத‌ சிக்ஸ‌ர்தான் இன்று இந்த‌ உல‌க‌க்கோப்பையின் முத‌ல் அழுத்த‌மான‌ ட்விஸ்ட‌ர் போட்டியான‌ இன்றைய‌ ஆட்ட‌த்தின் முக்கிய‌மான ட்விஸ்ட்!!

Ajmal Shahzad hits a first ball six as the game turns again
ஷசாத்தின் சிக்ஸ‌ர் ட்விஸ்ட்!
வெற்றியும் இன்றி தோல்வியும் இன்றி "டை" அடித்துவிட்ட‌ இந்த‌ப்போட்டி வலிமை படைத்த இந்திய‌-இங்கிலாந்து அணிக‌ளுக்கு ஓர் எச்ச‌ரிக்கை... ஆனால் அதேவேளையில் ஐந்து நிமிட‌த்திற்கு ஒருமுறை கைமாறியதிலேயே சாறு பிழிந்து ச‌க்கையாகிவிட்ட‌ வெற்றிக்க‌னியை இர‌ண்டு கேப்ட‌ன்க‌ளும் ப‌கிர்ந்துகொண்ட‌ இந்த‌ லீக் மேட்ச் ச‌ந்தேக‌மின்றி ஒரு "குட் கிரிக்கெட் எக்ஸ்பீரிய‌ன்ஸ்!"

அடுத்த‌ இந்திய‌ப் போட்டியில் ச‌ந்திப்போம்!


அன்புட‌ன்,

பிர‌பு எம்


Picture Courtesy: cricinfo.com & rediff.com
 .



15 comments:

  1. நேற்று கிரிக்கெட் தொலைக்காட்சியில் பார்க்கவில்லை. இந்திய வென்று விடும் என்ற எண்ணத்தில் பார்க்கவில்லை.
    உங்களது விமர்சனம் அபாரம்; மேட்ச் நேரில் பார்த்தது போன்ற உணர்வு. தொடர்ந்து நன்கு எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கலக்கிபுட்ட பிரபு...பட் என்னவோ நமக்கு பெரிய ஹோப் இருந்தது ஓரளவு நல்ல ஸ்கோர் தான்னு..பட் நம்ம பீல்டிங் ஒலக மோசம் பா...உண்மைய சொன்னால் இங்கிலாந்து க்கு நேத்து அதிர்ஷ்டம் இல்லைன்னு தான் சொல்லணும்:)))..மக்காஸ் லாஸ்ட் நிமிஷத்தில் வெற்றியை கை நழுவ விட்டாங்க...அந்த லாஸ்ட் ஓவர் சிக்ஸர் எல்லாம்...தில் லு பசங்க பா...

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி ரத்னவேல் சார்.. உங்களுடைய அறிமுகம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி :)

    ReplyDelete
  4. நன்றி அக்கா...
    இங்கிலாந்துக்கு லக் இல்லையா? இயன் பெல் தப்பிப்பிழச்ச அதிர்ஷ்டம் போதாதா!! :)
    நம்ம பலத்தைவிட பலவீனங்கள் அதிகபலத்தோட இருக்கு.... ரொம்பக் கஷ்டம்தான்.. பொறுத்திருந்து பார்ப்போம்!

    ReplyDelete
  5. விறுவிறுப்பான போட்டி - இந்த மாதிரி அமைவது அரிது!

    ReplyDelete
  6. ஆமா அக்கா.. பயங்கர த்ரில்!

    ReplyDelete
  7. எனக்கு இந்த தலைப்பு ரொம்ப பிடிச்சது...சூப்பர் டைட்டில் பிரபு...do or tie ?? சூப்பர்...ரொம்ப ரசித்தேன்...:)))

    ReplyDelete
  8. பிரபு...நானும் வானொலியில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.உங்கள் விமர்சனமும் அருமை !

    ReplyDelete
  9. Wow.. excellent review.. U've done a good job. Will come back 2 ur blog for future reviews... Keep it up man...

    ReplyDelete
  10. //எனக்கு இந்த தலைப்பு ரொம்ப பிடிச்சது...சூப்பர் டைட்டில் பிரபு...do or tie ?? சூப்பர்...ரொம்ப ரசித்தேன்...:))) //

    நன்றி அக்கா :)

    ReplyDelete
  11. வானொலியில் கிரிக்கெட் வர்ணனை கேட்பதும் ஒரு தனி அனுபவம்தான்!!
    ரொம்ப நன்றி ஹேமா அக்கா :)

    ReplyDelete
  12. Thank you very much Mr. Charles.. Nice meeting you.. :)

    ReplyDelete
  13. Javed Minadad also played in 6 world cups. so sachin has equalled that reacord and he is not the only person.

    ReplyDelete
  14. Yes you are right... :-)
    Miandad was playig in WCs from 1975 to 1996.
    Total 33 World Cup Matches..
    Sachin leads him as he has played 38 WC matches till now....

    Hope Sachin would play for India in 2015 also... will he? ;-)))

    Thanks..

    ReplyDelete
  15. தம்பி தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.தொடரவும்..

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)