Saturday, February 05, 2011

உணர்வுகள் - 5th Feb 2011

க‌ண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்ற‌றியும் ஐம்புல‌ண்க‌ளின் வாயிலாக‌ உள்ள‌த்தைத் த‌ட்டும் ப‌ல்வேறு உண‌ர்வுக‌ளை அவ்வப்போதைய‌ ரியாக்ஷ‌ன்க‌ளாக‌ப் ப‌திவுசெய்ய‌ப் போகிறேன் இதுமுத‌லாக‌....

                                              "உணர்வுகள்"-1

சந்தோஷம் :  சிபிஐ காவலில் தொலைதொடர்பு அரசியல் சாதனையாளர்!

ச‌ந்தோஷ‌ப்ப‌டுவ‌த‌ற்கு என்ன‌ இருக்கிற‌து என்று தெரிய‌வில்லை ஆனாலும் ஏனோ மகிழ்ச்சியாக‌த்தான் இருந்த‌து ப‌டித்த‌போது!

ஏனோ தெரிய‌வில்லை அலுவலகத்தில் செய்தியைப் படித்தவர்கள் எல்லாருமே எங்க‌ள் அலுவ‌ல‌க‌த்தின் ஒரே (அப்பாவி!) த‌மிழ‌னான‌ என்னிட‌ம்தான் வ‌ந்து ப‌கிர்ந்தார்க‌ள் ந‌ம‌ட்டுச் சிரிப்புட‌ன்!

ம‌ன‌துக்குள் நினைத்துக்கொண்டேன்....

"விஸ்வ‌நாத‌ன் ஆன‌ந்த் க்ராண்ட் மாஸ்ட‌ர் ப‌ட்ட‌ம் வென்றால் அவர் பெயர் இந்திய‌ன்....
இந்த‌ ராசாதி ராசரின் அடையாளப்பெயர் மட்டும் இவர்களுக்கு த‌மிழ‌ன்!"

 என்று!!

வ‌ருத்த‌ம் : பேச்சாள‌ர் வெற்றிகொண்டான் மரணம்

ஆபாச‌த்தை அள்ளிவீசிய‌ மேடைப்பேச்சாள‌ர் என்கிற‌ பொதுவான‌ குற்ற‌ச்சாட்டில், இறந்தாலும் இவருக்கு விடுத‌லை கிடைக்கப் போவதில்லைதான்! எனினும் க‌ழ‌க‌ங்க‌ளின் மேடைப் பேச்சாள‌ர்க‌ளின் சுற்றுப்ப‌ய‌ண‌ங்க‌ளும் அர‌சிய‌ல் அலுவ‌ல்க‌ளும் ரொம்பவே அட்வென்ச்ச‌ரஸ் என்றே உணர்கிறேன்! அர‌சிய‌ல் த‌லைக‌ளின் அறிக்கைப்போர்க‌ள் ஒருவாறு தலைப்புச்செய்திகளில் தொட‌ர்ந்துகொண்டிருந்தாலும்‌ இவரைப் போன்ற‌ பேச்சாள‌ர்க‌ளின் க‌ருத்துமோத‌ல்களும் மற்றுமோர் அலைவ‌ரிசையில் ப‌யணித்துக் கொண்டுதான் இருக்கும் பெட்டிச்செய்தியாக! இவர்கள் அமெரிக்க பாலிடிக்ஸைத் தங்கள் இஷ்டத்துக்கு இழுத்து மடிக்கி அலங்காநல்லூர் மீட்டிங்கில் அவிழ்த்துவிடுபவர்கள்! அவ‌ரவ‌ர்க்கென்று ஆடிய‌ன்ஸுக்கும் ப‌ஞ்ச‌ம் இருப்ப‌தில்லை.... முக்கிய‌மாகக் க‌ட்சியின் அடிம‌ட்ட‌த் தொண்ட‌ர்க‌ளுக்கு வெற்றிகொண்டான் போன்ற‌ பேச்சாள‌ர்க‌ளே நேர‌டி நாய‌க‌ர்க‌ளாக‌ இருப்பார்க‌ள்! இவ‌ர்க‌ளுக்கென்று பாதுகாப்பும் கிடையாது.... பெரிய‌ "க‌வ‌னிப்பு"க‌ளும் கிடையாது... ஆனாலும் சூட‌மிட்டாய்களை ருசித்துக்கொண்டும், சோடாவை அருந்திக்கொண்டும் ஊர்ஊராகச் சென்று இவர்கள் கட்சிக்காகக் க‌ர‌க‌ர‌க்க‌த் த‌வறியதேயில்லை! எண்ப‌து வ‌ய‌தைத் தாண்டிவிட்டார் என்றே நினைக்கிறேன்.... நெடுநேரம் நிற்க‌முடியாம‌ல் உட்கார்ந்து பேசியிருக்கிறார் க‌டைசி கால‌ங்க‌ளில்... உட‌ல்நிலை ச‌ரியாகும்வ‌ரைப் பேச‌வேண்டாம் என்று க‌லைஞ‌ரும் ஸ்டாலினுமே த‌டுத்தும்கூட‌ இற‌க்கும்வ‌ரைப் பேசிப்பேசியே ஜீவ‌னிழந்திருக்கிறார் இந்தப் பெரியவர்.... ம‌ர‌ண‌ச்செய்தியைப் ப‌டித்த‌போது வ‌ருத்த‌மாக‌ இருந்த‌து!

எதிர்பார்ப்பு : உல‌க‌க்கோப்பைக் கிரிக்கெட் - இந்தியா வெல்ல‌ வேண்டும்!

இந்த‌முறை கிரிக்கெட் திருவிழாவுக்குப் ப‌ந்த‌க்கால் ந‌ட்டிருப்ப‌து இந்திய‌ ம‌ண்ணில்!
எல்லா வில்ல‌ன்க‌ளும் ந‌ம்ம‌ ஊரு ஏர்ப்போர்ட்டுக‌ளில் க‌ம்பீரமாய் வ‌ந்திற‌ங்க‌ப்போகும் வேளையில் ந‌ம்ம‌வ‌ர்க‌ளை நினைக்கும்போதும் ந‌ம்பிக்கை மிளிர‌த்தான் செய்கிற‌து.... ச‌ச்சினுக்கு இதுவே கடைசி வாய்ப்பு..... தோணியின் தலைமைக்கோ இதுவே முதல் முறை... என்று கிரிக்கெட் பித்து பிடித்த‌ ந‌ம் தேச‌த்தின் த‌விர்க்க‌முடியாத‌ த‌லைப்புச் செய்தியாக வரும் நாட்களில் விருவிருக்க‌ப் போகிற‌ ரேசில் போல் பொஸிஷன் (Pole Position) நிச்சிய‌ம் ந‌ம்ம‌ ப‌ச‌ங்க‌ளுக்குத்தான் என்று ந‌ம்புகிறேன்.....

வ‌ழ‌க்க‌ம்போலத்தான் எதிர்பார்க்கிறேன் இந்தமுறையும், உல‌க‌க்கோப்பையை இந்தியா வெல்ல‌ வேண்டும் என்று ஆனால்... ந‌ம்பிக்கை மட்டும் வ‌ழ‌க்க‌த்தை விட‌க் கொஞ்ச‌ம் அதிக‌ம் இந்த‌ முறை! ;-)

ஏமாற்ற‌ம் : "எந்திர‌ன்" க‌ளின் அடுத்த‌ப‌ட‌ அறிவிப்புக‌ள்!

"எந்திரனி"ன் த‌ந்திர‌னும், ம‌ந்திர‌னும் த‌ங்க‌ள் அடுத்த‌ப் ப‌ட‌ங்க‌ளைத் த‌னித்த‌னியே அறிவித்திருக்கிறார்க‌ள்!

"3 இடிய‌ட்ஸி"ன் ரீமேக் ஷ‌ங்க‌ர் இய‌க்க‌த்தில் "நண்பனா"கத் தமிழில் தயாராகிறதாம்!

"ராணா" வோ மீண்டும் நேர்-நேர் தேமா என்று "பாபா" வை ஞாப‌க‌ப்ப‌டுத்தும் வகையில் ர‌ஜினியின் திரைக்க‌தையாம்!

ஒரே ஸ்டைல் டெம்ப்ளேட் என்றாலும் ஷ‌ங்க‌ர் தைத்துவைத்திருக்கும் "ஹீரோ" உடைக்கு ஏற்ற‌வாறு த‌ங்க‌ளின் உடல்களைத் திருத்திக்கொண்டு பிர‌ம்மாண்ட‌ நாய‌க‌ அவ‌தார‌ம் த‌ரிக்க எல்லா நாய‌க‌ர்க‌ளும் த‌வ‌மிருக்க‌, ஷ‌ங்க‌ரோ  ரீமேக் ப‌ட‌த்தைக் கையிலெடுத்திருக்கிறார் விஜய்யின் கால்ஷீட்டைக் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு வாங்கி!! "3 இடிய‌ட்ஸ்" போன்ற‌ யுனானிம‌ஸ் ஸ‌க்ஸ‌ஸ் ப‌ட‌ங்க‌ள் எல்லாம் ஸ்டேட்டுக்கு ஸ்டேட் ம‌றுப‌திப்பு செய்ய‌ ஸ்கோப் இருக்குமா தெரிய‌வில்லை.... பொறுத்திருந்து பார்க்க‌த்தான் போகிறோம் என்றாலும் எதிர்பார்ப்பைவிட‌ ஏமாற்ற‌மே அதிகம் இந்த அறிவிப்பில் :-(

கே எஸ் ர‌விகுமார் இய‌க்க‌த்தில் மீண்டும் ர‌ஜினி... அதுவும் மூன்று ர‌ஜினியாம்! நாய‌கி தீபிகா ப‌டுகோன் என்று சொல்கிறார்க‌ள்! "எந்திர‌னு"க்குப் பிற‌கு ர‌ஜினியை ர‌ஜினியாக‌ நினைத்துப் பார்ப்ப‌தே சிர‌ம‌மாக‌ இருக்கிற‌து..... ர‌ஜினியின் திரை அசைவுக‌ளை அணுஅணுவாக‌ ர‌சிப்ப‌வ‌ன்தான் நான் என்றாலும் "ராணா"வுக்கு ஏனோ புருவ‌ங்க‌ள் அதிக‌ம் துடிக்க‌வில்லை... :-(


ஆச்ச‌ர்ய‌ம் : எதிர்க்க‌ட்சியின் இந்த‌த் தேர்த‌ல் ந‌டவ‌டிக்கைக‌ள்!


அதிமுக‌வும் ச‌ரி அம்மாவும் ச‌ரி இந்த‌த் தேர்த‌ல் மூவ்க‌ளில் ரொம்ப‌வே ஆச்ச‌ர்ய‌ப்ப‌ட‌ வைக்கிறார்க‌ள்!
மீன‌வ‌ர் பிர‌ச்னையை எதிர்க்க‌ட்சிக‌ள் அர‌சிய‌லாக்குவ‌து வேத‌னைதான் என்றாலும் விடிவுகால‌ம் பிற‌ந்தால் புண்ணிய‌ம் எல்லாருக்கும்தான்... தாக்குத‌லில் ப‌லியான‌ மீன்வ‌ரின் குடும்ப‌த்தை அதிமுக‌ பொதுச்செய‌லாள‌ர் நேரில் சென்று பார்த்த‌தைவிட‌ அம்மீன‌வ‌ரின் ம‌னைவியைக் க‌ட்டிய‌ணைத்து ஆறுத‌ல் சொன்ன‌தெல்லாம் ஆச்சர்ய‌க்குறிக‌ளை அள்ளியிறைத்த‌ன‌.... அதுகூட‌ப் ப‌ர‌வாயில்லை கூட்ட‌ணி முடிவுக‌ளில் இதுவ‌ரை இல்லாத‌ அள‌வுக்கு பொறுமையாக‌ இய‌ங்குகிற‌து அதிமுக‌ என்றே எண்ண‌த் தோன்றுகிற‌து.... டைரக்டர் விருதகிரியும் ச‌ரி அதிமுக‌ அம்மாவும் ச‌ரி இருவருமே ட‌ஃப் பார்டிக‌ளாக‌ அடையாள‌ம் காண‌ப்ப‌டுவ‌தில் ஒருவ‌ருக்கு ஒருவ‌ர் ச‌ளைக்காத‌வ‌ர்க‌ளாக‌ இருக்க, இந்த‌முறை இலைக் கழகம் கொஞ்ச‌மும் எடுத்தெறிந்து பேசாம‌ல் முடிந்த‌வ‌ரை ர‌க‌சிய‌மாக‌ அமைதியாக‌வே காய் ந‌‌க‌ர்த்தி வருகிறது எதிர்முகாமில்! 2ஜி ஹீரோ கைதான‌போது கூட‌ ஒருபுற‌ம் க‌ட்சிக்கார‌ர்க‌ள் வெடிவெடித்துக் கொண்டாடினாலும் கொஞ்ச‌ம் பொறுத்திருந்து "இதுவும் தேர்த‌ல் த‌ந்திர‌மே!" என்று வெடியைக் கொளுத்தி வேறுதிசையிலிருந்து வீசத் துவ‌ங்கியிருக்கிறார்!

இருப்பினும் இது தேர்த‌ல் க‌ள‌ம்... "ஆடுக‌ள‌ம்" போல‌வே இதிலும் செக‌ண்ட் ஹாஃபில் கேர‌க்ட‌ர்க‌ள் எனிடைம் மாற‌க்கூடும் என்ப‌தையும் ம‌ற‌ப்ப‌த‌ற்கில்லை.... :)


அதிர்ச்சி... அவ‌லம்... கோப‌ம் : மீன‌வ‌ர் பிர‌ச்னை

இது ரொம்ப‌கால‌மாக‌வே தொட‌ர்ந்துவ‌ரும் அவ‌ல‌ம்தான்.... இத‌னை ம‌த்திய‌ மாநில‌ அர‌சுக‌ள் ம‌ட்டும‌ல்ல‌ இப்பொழுது கொந்த‌ளிக்கும் ம‌க்க‌ளாகிய‌ நாமும் கையில் காஃபியோடு செய்தித்தாளின் பக்கம் புர‌ட்டிய‌ விஷ‌யம்தான் என்பது நாம் மறந்துவிடக்கூடாத‌ அதிர்ச்சியான உண்மை :-( ஆனால் எழுந்திருக்கும் இந்த‌ப் புது எழுச்சியில்தான் ந‌டுக்க‌ட‌லில் மாண்டுவிழுவ‌து ஒவ்வொன்றும் ம‌னித‌ உயிர் என்று உரைத்த‌து..... த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ள் என்று த‌மிழில் குர‌லெழுவ‌தே வேத‌னைய‌ளிக்கிற‌து... இந்திய‌ மீன‌வ‌ன் கொல்ல‌ப்ப‌டுகிறான் என்று ப‌தினெட்டு மொழியிலும் தேசமெங்கும் எழுந்திருக்க‌ வேண்டிய‌ முழ‌க்க‌ம் இது ரொம்ப‌ நாளைக்கு முன்பாக‌வே.. :-( எடுத்து சொல்லிப் புரிய‌வைப்ப‌து அறிவு வ‌ள‌ரும் அறிகுறி ஆனால் எடுத்து சொல்லி உண‌ர‌வைப்ப‌து ச‌மூக‌ அவல‌த்தின் அறிகுறி.... புய‌ல் அறிகுறி தென்ப‌ட்டால் "மீன்வ‌ர்க‌ள் க‌ட‌லுக்குச் செல்ல‌ வேண்டாம்" என்று அறிவிக்க‌க் க‌ட‌மைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் உயிருக்குப் பாதுகாப்பளிக்காத‌தை நினைத்து எழுவ‌து என்ன‌ உண‌ர்வு என்று அறுதியிட்டுக் கூற‌முடிய‌வில்லை..... கார‌ணம் மீன‌வ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ ந‌ம்மைப் போன்ற‌ சொஃபிஸ்டிகேட்ட‌ட் சொஸைட்டி ம‌ட்டுமே ஜாப் செக்யூரிட்டி ப‌ற்றியெல்லாம் க‌வ‌லைப் ப‌டுகிறோம்... ஆனால் மீன‌வ‌ர்க‌ளில் துவ‌ங்கி, சாக்க‌டை அள்ளுப‌வ‌ர்க‌ளில் இருந்து தீயை அணைப்ப‌வ‌ர்க‌ள் வ‌ரை அவ‌ர்க‌ளின் Jobல் லைஃப் செக்யூரிட்டி இல்லாம‌ல்தான் பிழைத்து வ‌ருகிறார்க‌ள் கால‌ம்கால‌மாய் வாயிருந்தும் ஊமைக‌ளாய்....

"உண‌ர்வுக‌ள்" இனி அடிக்க‌டி தொட‌ரும்.....

உண்மையுட‌ன்,
பிர‌பு எம்
.

27 comments:

  1. // "ராணா" வோ மீண்டும் நேர்-நேர் தேமா என்று "பாபா" வை ஞாப‌க‌ப்ப‌டுத்தும் வகையில் ர‌ஜினியின் திரைக்க‌தையாம்! //

    அட்ராசக்க...

    ReplyDelete
  2. உணர்வுகள்... நல்லா இருக்கு... புதிய முயற்சியா இருக்கு...

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி பிரபா :)

    ReplyDelete
  4. //"உண‌ர்வுக‌ள்" இனி அடிக்க‌டி தொட‌ரும்.....//
    அருமை.தொடரட்டும்.

    ReplyDelete
  5. உணர்வுகள் ரொம்ப நல்லாயிருக்கு!

    ReplyDelete
  6. இந்தியா ஜெயிக்குமா கேள்விக்குறிதான் தைரியமா இருக்க முடியல:-)

    ReplyDelete
  7. உணர்வுகள் நல்லாவே வெளிப்படுத்தி இருக்கீங்க சகோ...:))

    //"விஸ்வ‌நாத‌ன் ஆன‌ந்த் க்ராண்ட் மாஸ்ட‌ர் ப‌ட்ட‌ம் வென்றால் அவர் பெயர் இந்திய‌ன்....
    இந்த‌ ராசாதி ராசரின் அடையாளப்பெயர் மட்டும் இவர்களுக்கு த‌மிழ‌ன்!"
    என்று!!//


    இது செம நச்...உண்மை தான்...நல்ல விஷயம்னால் மட்டும் இந்தியன் ன்னு பரவசபடுறது...ஏதாவது ராங்குன்னால் தமிழன்,கன்னடியன்,மலையாளி னு இப்படி இன ரீதியா பாகுபாடு பார்க்கிறது...என்ன கருமம் இது னு தெரியல...செம போடு போட்டு இருக்கீங்க சகோ...நச் நச் நச்...:))

    ReplyDelete
  8. //பேச்சாள‌ர் வெற்றிகொண்டான் மரணம்//

    நம்ம ஊரு தீப்பொறி ஆறுமுகம் தான் ஞாபகத்தில் வருது...வாய தொறந்தாலே சாக்கடை..கூவம் ஓடும்..:)) ஆரப்பாளையம் கார்னெர் இல் மீட்டிங் நடக்கும்...எத்தனை பேரு விமர்சித்தாலும் கட்சி பேதம்(?!) இல்லாமல் தீபொறி பேச்சை கேட்க எல்லாரும் ஆஜர்..இப்ப இருக்காரா..இல்லையான்னு தெரில சகோ...இவரும் கட்சி தாவல் இல் பிசி யா இருந்தார் ஒரு கட்டத்தில்..(?) !
    இந்த மாதிரி கூட்டத்தை தன் பேச்சு திறத்தால் வசியபடுத்தும் பேச்சாளர்கள் கிடைப்பது கட்சிகளுக்கு பெரிய வரப்ரசாதம்...வெற்றிகொண்டான் ஸ்பீச் கேட்டதில்லை பிரபு...ஆனால் அவரின் கடைசி நாட்கள் வரை கட்சி தலைமைக்கு பெரிய விசுவாசியாய் இருந்திருக்கிரர்னு விகடனில் இந்த வாரம் படிச்சு தெரிஞ்சுகிட்டேன்...
    நல்ல பகிர்தல் !!

    ReplyDelete
  9. /எதிர்பார்ப்பு : உல‌க‌க்கோப்பைக் கிரிக்கெட் - இந்தியா வெல்ல‌ வேண்டும்!//

    நானும் எதிர்பார்கிறேன்..சச்சின் காக...:))) பார்ப்போம்..All is well :)))))))))))

    ReplyDelete
  10. //ர‌ஜினியின் திரை அசைவுக‌ளை அணுஅணுவாக‌ ர‌சிப்ப‌வ‌ன்தான் நான் என்றாலும் "ராணா"வுக்கு ஏனோ புருவ‌ங்க‌ள் அதிக‌ம் துடிக்க‌வில்லை... :-(//

    இப்போ துடிக்காது பாஸ்...ஷூட்டிங் தொடங்கட்டும்...தீபிகா படுகோன் பார்த்துட்டு இந்த உணர்வுகள் "சந்தோஷம்" பத்தியில் எழுதப்படலாம்...அந்த பதிவையும் படிக்க தானே போறேன்..அப்போ ராணா...எனக்கு வேணா னு சொல்லமாட்டிங்க :)))))))

    ReplyDelete
  11. //இருப்பினும் இது தேர்த‌ல் க‌ள‌ம்... "ஆடுக‌ள‌ம்" போல‌வே இதிலும் செக‌ண்ட் ஹாஃபில் கேர‌க்ட‌ர்க‌ள் எனிடைம் மாற‌க்கூடும் என்ப‌தையும் ம‌ற‌ப்ப‌த‌ற்கில்லை.... :)//

    பிரபு..இந்த வரிகள் சூப்பர்..எப்படி இப்படி...தானா வருதா...:)) நிஜம் ...டெய்லி ஒரு கணிப்பு னு நம்ம ஊரு அரசியல் கலக்கிட்டு இருக்கு..கூட்டணி யே இன்னும் குழப்பத்தில்...சிரஞ்சீவி கட்சி ஊத்திகிருச்சு...:)) தேறாதுன்னு காங்கிரசில் கட்சியை இணைச்சிட்டார்...நம்ம ஊரிலையும் இப்படி ஏதாவது காமடி நடக்கும்னு ஐ ஆம் வெய்ட்டிங் :))) ஒரு வேளை காங்கிரஸ் க்கு டப் கொடுக்க தி.மு.க. அ.தி.மு.க தே.மு.தி.க. எல்லாம் ஒரே கூட்டணியில் இணைஞ்சுடுமோ??? ஹ ஹ...சூப்பர் ல செல்ல தம்பி???:))))

    ReplyDelete
  12. //ஆனால் மீன‌வ‌ர்க‌ளில் துவ‌ங்கி, சாக்க‌டை அள்ளுப‌வ‌ர்க‌ளில் இருந்து தீயை அணைப்ப‌வ‌ர்க‌ள் வ‌ரை அவ‌ர்க‌ளின் Jobல் லைஃப் செக்யூரிட்டி இல்லாம‌ல்தான் பிழைத்து வ‌ருகிறார்க‌ள் கால‌ம்கால‌மாய் வாயிருந்தும் ஊமைக‌ளாய்....//

    சிந்திக்க வைக்கும் உணர்வுகள்...:))) மௌனம் மட்டுமே நம்மிடம்.. வழக்கம்போலே...:((

    ReplyDelete
  13. நிச்சியம் தொடர்கிறேன்....
    நன்றி ஸ்ரீ அண்ணா! :)

    ReplyDelete
  14. ஹாய் எஸ் கே... ரொம்ப நன்றி நண்பா :)

    ReplyDelete
  15. //இந்தியா ஜெயிக்குமா கேள்விக்குறிதான் தைரியமா இருக்க முடியல:‍) //

    உண்மைதான் ஆனா இந்திய ஆடுகளங்களில் பேட்டிங் திரும்ப களைகட்டிடும்னு பலத்த நம்பிக்கை இருக்கு..
    இருந்தாலும் கொஞ்சம் டவுட்டுதான்... இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவில் தெரியும் எழுச்சி நம்மகிட்ட கொஞ்சம் கம்மியாதான் இருக்கு! -(

    ReplyDelete
  16. //இது செம நச்...உண்மை தான்...நல்ல விஷயம்னால் மட்டும் இந்தியன் ன்னு பரவசபடுறது...ஏதாவது ராங்குன்னால் தமிழன்,கன்னடியன்,மலையாளி னு இப்படி இன ரீதியா பாகுபாடு பார்க்கிறது...என்ன கருமம் இது னு தெரியல...செம போடு போட்டு இருக்கீங்க சகோ...நச் நச் நச்...:))/

    அரசியல்வாதிங்க நிறுத்தினாலும் இந்த மாதிரி பிரிவினை உணர்வுகளிலிருந்து நம்ம மக்கள் வெளிவரப்போவதில்லை அக்கா... :(

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. //இப்போ துடிக்காது பாஸ்...ஷூட்டிங் தொடங்கட்டும்...தீபிகா படுகோன் பார்த்துட்டு இந்த உணர்வுகள் "சந்தோஷம்" பத்தியில் எழுதப்படலாம்...அந்த பதிவையும் படிக்க தானே போறேன்..அப்போ ராணா...எனக்கு வேணா னு சொல்லமாட்டிங்க :)))))))
    //

    கண்டிப்பா அது நடக்கத்தான் போகுது! :)
    ஆனா தீபிகா பார்த்து துடிக்காது.... சூப்பர்ஸ்டாரின் ஸ்டில்களைப் பார்த்தால் புருவங்களோடு புஜங்களும் துடிக்கும்... ஓபனிங் ஷோ கன்ஃபார்ம்டு! ரஜினில்ல!! :))))

    ReplyDelete
  19. //சிந்திக்க வைக்கும் உணர்வுகள்...:))) மௌனம் மட்டுமே நம்மிடம்.. வழக்கம்போலே...:(( //

    ஆமா அக்கா... :((

    ReplyDelete
  20. உணர்வுகள் கொஞ்சம் ஜாஸ்தியோ..

    ReplyDelete
  21. உணர்வுகள் ஜாஸ்தியா இருந்தாலும் உடம்புக்கு ஆகுறதில்ல!! :)
    அதுனால கண்ட்ரோல்ட் எமோஷன்ஸ்தான் அக்கா...!!

    ReplyDelete
  22. ஃஃஃஃமீன‌வ‌ர் பிர‌ச்னைஃஃஃ

    என்ன தான் முடிவோ தெரியல...

    ReplyDelete
  23. உங்க நாட்டுப் பிரச்னைன்னு போன மாசம் சொன்னாங்க இல்லையா..
    இது எங்க நாட்டுப் பிரச்னைதான் ஆனாலும் பாருங்க!! இதுதான் நிலைமை மதிசுதா.. :(

    ReplyDelete
  24. அறுசுவை உணவு போல இது அறுசுவை உணர்வுகளா ?. உணவு போல் உணர்வுகளும் அருமை.

    ReplyDelete
  25. ரொம்ப நன்றி விஜயன் சார் :)

    ReplyDelete
  26. உணர்வுகளின் பகிர்வு அருமை பிரபு.. அதிலும் தமிழன் பற்றி நச்..:))

    ReplyDelete
  27. ரொம்ப நன்றி தேனக்கா :)

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)