இந்தியா வென்ற கையோடு அடுத்தடுத்து நடந்து முடிந்திருப்பவை சம்பிரதாய மோதல்களே... இந்த வாரக் கடைசியில்தான் அனல் பறக்கும் ஆக்ரோஷ மோதல்களெல்லாம் ஆரம்பிக்கவிருக்க... இந்தப் போட்டிகள் பற்றி க்விக் அப்டேட்ஸ்...
நியூஸிலாந்து V கென்யா
பார்ப்பது லைவ் டெலிகாஸ்டா அல்லது ஹைலைட்ஸா என்று கண்டுபிடிக்க முடியாத அளவு சுருக்கமாக முடிந்த ஒரு ஸ்கூல் மேகஸின் சிறுகதை போல டிபிகல் டெம்ப்ளேட் லீக் மேட்ச்!!! க்ரூப் "ஏ" வில் இருக்கும் வீக் டீம்ஸ் எல்லாமே இலவச இணைப்புகள்தான்..... கென்யா, ஜிம்பாப்வே, கனடா இந்த மூன்றுமே ஊறுகாய் அணிகள்தான்..... இதில் ஜிம்பாப்வே மற்றும் கென்யாவும் இணைந்தது வருத்தம்! அதிரடியான டீமாக உருவெடுப்பார்கள் என்று கணிக்கப்பட்ட அணிகள் இவை... தேசங்களின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இடுங்கிப்போன கிரிக்கெட் அணிகளாக கட்டங்களை நிரப்பிக்கொண்டிருக்கின்றன இந்த உலகக்கோப்பையில்!
நியூஸிலாந்து - கென்யா ஆட்டத்தின் நட்சத்திரம்: பென்னட்! சௌத்தீ, வெட்டோரி போன்றவர்களைவிட பென்னட் ஸ்ட்ரைக் செய்திருப்பது அந்த அணிக்கு நல்லது... பொதுவாகவே நியூசி அணி வலிமை குறைந்த அணிகளை வாழவைப்பதில்லை.... முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நசுக்கிவிடுவார்கள்..! வலிமையான அணிகளுடன் மோதும்போதும்கூட இவர்களுக்கு சாதகமாக ஆட்டம் ஆரம்பகட்டத்தில் நகர்ந்துவிட்டால்போதும் அந்த ஆரம்பஜோரில் உற்சாகமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்துவார்கள் ஆனால் அதுபோலவே ஆரம்பம் பாதகமாகிப் போனால் தன்னம்பிக்கையிழந்து ஊதுபத்தியாகிவிடுவதும் இவர்கள் வழக்கம்! ஏதோ கவர்மெண்ட் எம்ப்ளாயீ போன்றதொரு கேப்டனாக ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் ஆண்டாண்டு காலமாக இவர்களை ஒரே வேகத்தில் ஒரே திசையில் வழிநடத்தியிருக்க வெட்டோரியின் தலைமையில் ஆட ஆரம்பித்ததிலிருந்தே சற்று நன்றாக செல்கிறது இவர்களின் பாதை... இந்த உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக நியூசியை சொல்வது கடினம்தான் ஆனாலும் குறைத்து மதிப்பிட முடியாது நாக்-அவுட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதுதான் இவர்களுக்கு சவாலாக இருக்கும்!
கென்யாவைப் பார்க்கவே பாவமாக இருந்தது.... பேட்டிங் சொத்தையாக வீழ்ந்துகிடக்கிறது.... கனடாவுடனான போட்டிக்குத்தான் இவர்கள் தயாராக இருக்கிறார்கள் :-( 96 உலகக்கோப்பையில் கலக்கிய ஸ்டீவ் டிக்காலோ இந்தப் போட்டியில் பென்னட்டுக்கு அப்பளமாகிவிட்டார்.... கென்யாவுக்கு பெட்டர்லக் நெக்ஸ்ட் டைம்தான் சொல்ல முடியும்!
இலங்கை V கனடா
இலங்கையின் பேட்டிங்கை ஸ்லாகிக்கப் புதிதாக எதுவும் செய்திடவில்லை.. ஜெயவர்த்தனே ஸாலிட் ஃபார்மில் இருப்பது இலங்கைக்கு க்ளுக்கோன்-டி!! சங்கக்காரா மாதிரி கன்ஸிஸ்டன்ட் கேப்டனுடன் பேட்டிங் பவுலிங் என்று சரிவிகித சமபலமாய்க் களமிறங்கியிருக்கும் இலங்கை முக்கியமான அணி... மலிங்கா இல்லாமல் களமிறங்கியது ஆச்சர்யமாக இருந்தது.... இருப்பினும் ஒரே பந்தில் அனுபவ டேவிஸனை அசரடித்து வீழ்த்திய பெரெரா க்விக் பவுலிங்கில் துல்லியமான லெங்தில் கவனம் கவர்ந்தார்... மெண்டிஸூம், முரளியும் "அடடா அல்வாத்துண்டு அமுக்கு...." என்று விக்கெட் எடுப்பதிலேயே கவனமாக மாறி மாறி ரவுண்டு வந்தார்கள்...
இலங்கை மிரட்டுகிறது!!!
ஆஸ்திரேலியா V ஜிம்பாப்வே
ஆஸ்திரேலியா அடித்து நொறுக்கிப் பதம்பார்ப்பதற்கு வெள்ளோட்ட வெள்ளரிப்பிஞ்சாய் ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வேயைப் பார்க்கப் பாவமாய் இருந்தது சிறப்பான ஆட்டக்காரர்களைத் தயார் செய்து கொண்டிருந்த முகாமில் பெருத்த பின்னடைவாய் ஒரு பெயர்கூட அச்சுறுத்தும்படியாய் இல்லை! எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சிகும்புரா உட்பட டாப் ஆர்டர் மொத்தமாக மண்ணைக் கவ்வ ஆறுதல் கொடுத்தது க்ரீமரும் உத்சயாவும்தான்.. க்ரீமரின்(37 ரன்கள்) பேட்டிங்கை ரசித்தேன்..... டெய்ட்டின் பந்தில் ஸ்கொயர் கட் டைமிங் கச்சிதம்.... க்ரீமரை பேட்டிங் ஆர்டரில் முன்னதாகக் களமிறக்கலாம்.... 46 ஓவர் வரை ஆஸ்திரேலிய பவுலிங்கில் தாக்குப்பிடித்தது ஜிம்பாப்வே... அத்தனை போட்டிகளிலும் ஐம்பது ஓவர் நிலைத்து ஆடிவிட்டாலே உலகக்கோப்பை வென்றதற்கு சமம் சிவப்பு சட்டைகளுக்கு....!!
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, பொலின்ஞர் களமிறங்கவில்லை... ஒரு புது ஸ்ட்ராடெஜியாக நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்கலாமோ ஆசிய அணிகளுக்கு எதிராக!!!... மிட்சல் ஜான்சன், டெய்ட்,ப்ரெட் லீ, போலிஞ்சர் என மிரட்டும் வேகங்கள் எடுபட்டால் பாண்டிங்கிற்கு மீண்டெழும் வாய்ப்புகள் அதிகரிக்கும்... பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவு எதுவும் இல்லை ஏனெனில் ஜிம்பாப்வேயின் பந்துவீச்சு மருந்துக்கும் நெருக்கடி தரவில்லை! அகமதாபாத் ஆடுகளம் ஆசைகாட்டி மோசம் செய்யும் தன்மையுடையது என்பதை உணர்ந்து அடக்கி வாசித்து வெற்றியைப் பறித்துசென்றார்கள் ஆல்டைம் சாம்பியன்கள்!! க்ரெஜா நன்றாக பந்தை சுழற்றுகிறார் அது ஒரு கொசுறு நல்ல செய்தி ஆஸிக்கு!
பொறுத்திருந்து பார்ப்போம்!
அன்புடன்,
பிரபு எம்
Pictures Courtesy: Cricinfo.com
.
நியூஸிலாந்து V கென்யா
![]() |
| புத்துணர்வு வேகம் : பென்னட் |

| சதமடித்த சீனியர்: ஜெயவர்த்தனே |
நியூசிலாந்து வலுவிழந்த அணிகளை நசுக்கிக் கொன்றுவிடுவார்கள் என்றால் இலங்கையோ அணு அணுவாகக் கொன்று ரசிப்பார்கள்! கையில் சிக்கிய கைப்புள்ள கனடா அணி! :-)
கனடாவின் பவுலிங் பரவாயில்லை என்று பட்டது.... ஸ்லோ ட்ராக்கான ஆடுகளத்தை முதல் பவர்ப்ளேயிலேயே புரிந்து செயல்படத் துவங்கிவிட்டார்கள்.... ஆனாலும் ஆட்டத்தின் போக்குக்கேற்பப் பயன்படுத்த ஒரு பவுலர் கூட கைவசம் இல்லாத துரதிர்ஷ்ட கேப்டனாக அல்லாடினார் விக்கெட் கீப்பர்-கேப்டன் பகாய்!
இலங்கையின் பேட்டிங்கை ஸ்லாகிக்கப் புதிதாக எதுவும் செய்திடவில்லை.. ஜெயவர்த்தனே ஸாலிட் ஃபார்மில் இருப்பது இலங்கைக்கு க்ளுக்கோன்-டி!! சங்கக்காரா மாதிரி கன்ஸிஸ்டன்ட் கேப்டனுடன் பேட்டிங் பவுலிங் என்று சரிவிகித சமபலமாய்க் களமிறங்கியிருக்கும் இலங்கை முக்கியமான அணி... மலிங்கா இல்லாமல் களமிறங்கியது ஆச்சர்யமாக இருந்தது.... இருப்பினும் ஒரே பந்தில் அனுபவ டேவிஸனை அசரடித்து வீழ்த்திய பெரெரா க்விக் பவுலிங்கில் துல்லியமான லெங்தில் கவனம் கவர்ந்தார்... மெண்டிஸூம், முரளியும் "அடடா அல்வாத்துண்டு அமுக்கு...." என்று விக்கெட் எடுப்பதிலேயே கவனமாக மாறி மாறி ரவுண்டு வந்தார்கள்...
இலங்கை மிரட்டுகிறது!!!
ஆஸ்திரேலியா V ஜிம்பாப்வே
![]() |
| எனிடைம் எழந்துவரலாம் : ஆஸ்திரேலியா!! |
ஆஸ்திரேலியா அடித்து நொறுக்கிப் பதம்பார்ப்பதற்கு வெள்ளோட்ட வெள்ளரிப்பிஞ்சாய் ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வேயைப் பார்க்கப் பாவமாய் இருந்தது சிறப்பான ஆட்டக்காரர்களைத் தயார் செய்து கொண்டிருந்த முகாமில் பெருத்த பின்னடைவாய் ஒரு பெயர்கூட அச்சுறுத்தும்படியாய் இல்லை! எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சிகும்புரா உட்பட டாப் ஆர்டர் மொத்தமாக மண்ணைக் கவ்வ ஆறுதல் கொடுத்தது க்ரீமரும் உத்சயாவும்தான்.. க்ரீமரின்(37 ரன்கள்) பேட்டிங்கை ரசித்தேன்..... டெய்ட்டின் பந்தில் ஸ்கொயர் கட் டைமிங் கச்சிதம்.... க்ரீமரை பேட்டிங் ஆர்டரில் முன்னதாகக் களமிறக்கலாம்.... 46 ஓவர் வரை ஆஸ்திரேலிய பவுலிங்கில் தாக்குப்பிடித்தது ஜிம்பாப்வே... அத்தனை போட்டிகளிலும் ஐம்பது ஓவர் நிலைத்து ஆடிவிட்டாலே உலகக்கோப்பை வென்றதற்கு சமம் சிவப்பு சட்டைகளுக்கு....!!
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, பொலின்ஞர் களமிறங்கவில்லை... ஒரு புது ஸ்ட்ராடெஜியாக நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆஸ்திரேலியா களமிறங்கலாமோ ஆசிய அணிகளுக்கு எதிராக!!!... மிட்சல் ஜான்சன், டெய்ட்,ப்ரெட் லீ, போலிஞ்சர் என மிரட்டும் வேகங்கள் எடுபட்டால் பாண்டிங்கிற்கு மீண்டெழும் வாய்ப்புகள் அதிகரிக்கும்... பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் அளவு எதுவும் இல்லை ஏனெனில் ஜிம்பாப்வேயின் பந்துவீச்சு மருந்துக்கும் நெருக்கடி தரவில்லை! அகமதாபாத் ஆடுகளம் ஆசைகாட்டி மோசம் செய்யும் தன்மையுடையது என்பதை உணர்ந்து அடக்கி வாசித்து வெற்றியைப் பறித்துசென்றார்கள் ஆல்டைம் சாம்பியன்கள்!! க்ரெஜா நன்றாக பந்தை சுழற்றுகிறார் அது ஒரு கொசுறு நல்ல செய்தி ஆஸிக்கு!
பொறுத்திருந்து பார்ப்போம்!
இப்போதைக்கு இன்னும் சூடுபிடிக்காத உலகக்கோப்பை எப்படியும் இந்தவார இறுதியில் உச்சக்கொதிநிலை அடையும்..... ஆவியில் சூடுபறக்க கிரிக்கெட் வாசனை கமழட்டும் விரைவில்!!! :))
அன்புடன்,
பிரபு எம்
Pictures Courtesy: Cricinfo.com
.

இப்போதைக்கு இன்னும் சூடுபிடிக்காத உலகக்கோப்பை எப்படியும் இந்தவார இறுதியில் உச்சக்கொதிநிலை அடையும்..... ஆவியில் சூடுபறக்க கிரிக்கெட் வாசனை கமழட்டும் விரைவில்!!! :))
ReplyDelete...Eagerly waiting for the steam!!!!
நன்றி அக்கா :)
ReplyDelete//ஏதோ கவர்மெண்ட் எம்ப்ளாயீ போன்றதொரு கேப்டனாக ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங் ஆண்டாண்டு காலமாக//
ReplyDelete//இலங்கைக்கு க்ளுக்கோன்-டி//
நல்லா இருந்தது பிரபு இந்த வார்த்தை பிரயோகம்...:)
/இந்த உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக நியூசியை சொல்வது கடினம்தான் ஆனாலு//
ReplyDeleteஅப்படி எல்லாம் ஆருடம் சொல்லிட முடியாது பிரபு..என்ன வேணும்னாலும் நடக்கலாம்....
//நியூசிலாந்து வலுவிழந்த அணிகளை நசுக்கிக் கொன்றுவிடுவார்கள் என்றால் இலங்கையோ அணு அணுவாகக் கொன்று ரசிப்பார்கள்! கையில் சிக்கிய கைப்புள்ள கனடா அணி! :-)//
ReplyDeleteஅருமையான கவிதை...அடடா...இதுக்கு மேலே கேவலபடுத்த நோ சான்ஸ்...:))) ..குட்..குட்..:)))
/வெள்ளோட்ட வெள்ளரிப்பிஞ்சாய் ஜிம்பாப்வே!//
ReplyDeletemeaning please...:)) வெள்ளோட்டம் ஓகே...வெள்ளரிபிஞ்சு ஓகே...பட் சேர்த்து படிச்சால்...ஹீ..ஹீ...புரியல ப்பா..புரியல...:))))