எழுதும் ஆர்வம்தான் என்னை இந்த வலைப்பூ தொடுக்க வைத்தது. உங்கள் வாசிப்பினாலும், விமர்சனங்களாலும், நட்பினாலும் மெருகேறக் காத்திருக்கும் என் எழுத்துகள்..
Sunday, May 15, 2011
The Source Code [U/A] ( 2011) - விமர்சனம்
"அவதார்", "இன்செப்ஷன்" போன்ற படங்களைப் பார்த்து ரசித்து வரவேற்ற நமக்கு அதே நம்முடைய மெருகேறிய புரிதலுடன் கூடிய நேயர் பங்களிப்பை அடித்தளமாகக்கொண்டு அடுத்த தளத்தில் அதிநவீன யுக்திகளுடன் திரையில் களமிறங்கியிருக்கும் லேட்டஸ்ட் ஹாலிவுட் சூப்பர் டெக்னோ த்ரில்லர்... "The Source Code"!!!
"Source Code is not a TIME TRAVEL it's just a TIME RE-ASSIGNMENT" என்று படத்தில் சொல்லுவார் கதைப்படி "ஸோர்ஸ் கோட்"-ஐ உருவாக்கிய Dr. ருட்லெட்ஜ் ( நடிப்பு: ஜெஃப்ரி ரைட்) அது என்ன Time Re-assignment?? என்று கேட்டால் அதுதான் படத்தின் கான்செப்ட்!
அமெரிக்காவில் ஓடும் ரயிலில் ஒரு குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படுகின்றது.... சக்திவாய்ந்த அந்த குண்டுவெடிப்பில் ரயிலில் பயணித்தவர்கள் யாருமே பிழைக்கவில்லை...... பிரச்னை என்னவென்றால் இது ஒரு Trial மட்டுமே, தொடர்ந்து எந்த நேரத்திலும் நகரத்தில் அடுத்த அதிபயங்கர நியூக்ளியர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம்.... இந்த சூழ்நிலையில் "ஸோர்ஸ் கோட்" என்னும் அறிவியல் அற்புதத்தின் துணைகொண்டு நாயகன் ஜேக் கில்லின்ஹாலை வெடித்துச் சிதறிய அந்த ரயிலில் கடந்தகாலத்தில் களமிறக்குகிறார்கள் தவணைமுறையில்!!!!
கேப்டன் ஸ்டீவன்ஸ் ஒரு ராணுவ வான்படை வீரன் ( நடிப்பு: ஜேக் கில்லின்ஹால்) குண்டுவெடிப்பிற்கு இரையான அந்த ரயிலில் பயணித்த ஷான் ஃபென்ட்ரஸ் என்னும் ஓர் பயணியின் உடலில் ஜேக்கின் உயிரை "ஸோர்ஸ் கோடி"ன்மூலம் களமிறக்குகிறார்கள்! வெடித்துச் சிதறிய அந்த ரயிலில் குண்டு வெடிப்பதற்கு முன்பான கடைசி எட்டு நிமிடங்களை மட்டும் "ஸோர்ஸ் கோட்" ப்ரோக்ராமின்படி, ஷானின் உடலில் மீண்டும் வாழ்ந்து ரயிலில் வெடிகுண்டு வைத்த வில்லனை ஜேக் கண்டுபிடிக்கவேண்டும் இதுதான் கதையின் கரு!
எட்டு நிமிடத்தில் வெடிக்கப்போகும் ரயிலில்..... கிறிஸ்டினா என்னும் இளம்பெண்ணின் ( நடிப்பு: மிஷெல் மொனாஹென்) பக்கத்து ஸீட்டில் ஷான் ஃபென்ட்ரஸ்ஸின் உடலுக்குள் திடுக்கிட்டு உயிர்பெற்று எழுவார் ஜேக்...... பக்கத்து ஸீட்டில் கிறிஸ்டினா சகஜமாக பேச்சுக் கொடுப்பாள்..... பயணிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் பயணத்தை மேற்கொள்ள வில்லனைத் தேடும் பரபரப்பில் எந்தக் க்ளூவும் பெறாமலேயே எட்டு நிமிடங்கள் கடந்து ரயில் வெடித்து உயிரிழந்து "ஸோர்ஸ் கோடு"க்குள் மீண்டும் வந்து சேருவார் ஜேக்....... அங்கே குட்வின் என்னும் பெண் அதிகாரியும் , ஸோர்ஸ் கோடை உருவாக்கிய Dr. ருட்லெட்ஜும் அவரிடம் தகவல்களை சேகரிப்பார்கள் வில்லனைக் கண்டுபிடிக்க.....!
மீண்டும் இரண்டாவது முறையாக ரயிலின் கடைசி எட்டு நிமிடங்களை வாழ்ந்து உண்மையைக் கண்டறிய ரயிலுக்கு ஜேக் அனுப்பப்படுவார்....... சென்றமுறை குண்டுவெடித்த திசையைவைத்து கழிவறையின் மேற்கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் செல்ஃபோன்மூலம் வெடிக்கவைக்கப்படும் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஜேக் கண்டுபிடிப்பார்.....
இப்படி மீண்டும் மீண்டும் ஜேக் அந்த ரயிலுக்குள் அனுப்பபட்டு அதே அந்த எட்டு நிமிட இடைவெளியில் கடும் போராட்டத்துக்குப்பின் குண்டு வைத்தவனைக் கண்டறிவதுதான் எட்டு எட்டு நிமிடமாக திரையில் செத்துச் செத்து விளையாடும் ஸூப்பர் த்ரில்லர்......!
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நம் இந்திய கிரிக்கெட் அணியின் வோர்ல்ட் கப் ஹீரோ யுவ்ராஜ் சிங் பின்வருமாறு "ட்வீட்" செய்திருந்தார் ட்விட்டரில்......
"Never seen a hero die so many times in a movie but source code was good fun!! " - Yuvi
ஹாஹா... இதைப் பார்த்துவிட்டுத்தான் நேற்று செகண்ட் ஷோவிற்கு புக் செய்தேன் (தூக்கம் வராமல் மும்பையின் தெருக்களில் சுற்றும் என் பூர்வஜென்மத்து சாபம் இன்னும் என்னுடனே தொடர்வதால்!!!! ) யுவ்ராஜிற்கு நன்றிகள்.... சிந்தையை உறங்கவிடாது வேலைகொடுத்த திரைக்கதையை மிகவும் ரசித்தேன்!!
ரயிலில் பயணிக்கும் அந்த எட்டு எட்டு நிமிடங்களில் வில்லனைக் கண்டுபிடிக்கும் ஆபரேஷனுக்கு இடையே, பக்கத்து ஸீட் இளவழகி கிறிஸ்டினாவுடன் ஜேக்கிற்கு ஏற்படும் பாந்தமான பரிச்சியம் படு அழகான திரைக்கதை முடிச்சு!! அந்த குண்டுவெடிப்பில் ஏற்கெனவே இறந்துவிட்ட கிறிஸ்டினாவைக் கடந்தகாலத்தில் காப்பாற்ற இயல்பாக உந்தப்படுவார் ஜேக்... ஆனால் "ஸோர்ஸ் கோட்" ஒரு டைம் ரீ-அசைன்மெண்ட் மட்டுமே... அதாவது முடிந்துபோன எட்டு நிமிடங்களை வாழ்ந்து அதன்மூலம் வருங்காலத்து நிகழ்வுகளை மாற்றியமைக்கலாமே தவிர அந்த ரயிலில் கடந்தகாலத்தில் முடிந்துபோன உயிர்களை மீட்கமுடியாது என்பதுதான் "டைம் ரீ-அசைன்மெண்ட்"ன் சோகமான ரியாலிட்டி!
ஸோர்ஸ் கோட் மூலம் ஓடும் ரயிலில் செத்து செத்து விளையாடும் "ஜேக்"கிற்குத் தன்னைப்பற்றிய நிகழ்கால நினைவுகளும் அவ்வப்போது தோன்றி மறைந்து குழப்பிக்கொண்டே இருக்கும்..... அதாவது தன் நிகழ்காலத்து நிஜவாழ்வில் கடைசியாக நடந்த ஒரு ஹெலிகாப்டர் விபத்துவரைதான் அவருக்கு நினைவிருக்கும் அதற்குப் பிந்தைய நிகழ்வுகள் எங்கே என்கிற தேடலில் உழலும் ஜேக் ஒருகட்டத்தில், தான் அந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதை அறிந்துகொள்ளும் காட்சியில் நமக்கு செம ஜெர்க் அடிக்கும்!
"ஸோர்ஸ் கோட்" சேம்பருக்குள் உறங்கும் ஜேக்கின் உடல், கடுமையான ஹெலிகாப்டர் விபத்தில் அடிபட்டு வெறும் 15% மட்டுமே உயிருடன் இருக்கும் " நிகழ்கால" ஜேக்கின் சிதைந்த உடல் என்று நாம் அறியும் நேரம் பரிதாபம்!
ரயிலில் குண்டைவைத்து செல்ஃபோன் மூலம் வெடிக்கச் செய்துவிட்டு, அடுத்த இதைவிட மிகப்பெரிய குண்டுவெடிப்புத் தாக்குதலுக்குத் தயாராகும் வில்லன் டெரிக் ஃப்ராஸ்ட்டை ( நடிப்பு: மைக்கேல் ஆர்டென்) ஜேக் தொடர்ந்து பலமுறை எட்டு எட்டு நிமிடங்களாக ரயிலில் பயணித்துக் கண்டுபிடித்து அதிகாரிகளுக்கு ஜேக் துப்பு வழங்கிவிடுவார்.......அடுத்தகட்ட பேரழிவைத் தடுக்க டெரிக்கை மடக்க அமெரிக்கப் படைகள் ஒருபக்கம் விரைவார்கள்.....
மறுபக்கம்...... தான் ஏற்கெனவே மரணித்துவிட்ட ஒரு சிதைந்த உடல் மட்டுமே என்று புரிந்துகொண்டு மருகும் ஜேக்..... இந்த ஆபரேஷனில் தன்னை இயக்கும் அதிகாரி குட்வின்னிடம் மீண்டும் ஒருமுறை தன்னை அந்த ரயிலுக்குள் நிரந்தரமாக அனுப்பிவிடுமாறு கெஞ்சுவார்...... இதுவரை ரயிலில் எட்டு எட்டு நிமிடங்களாக சேகரித்த தகவல்களால் அந்த ரயில் குண்டுவெடிப்பைக் கடந்தகாலத்தில் தடுக்கமுடியும் என்று நம்பும் ஜேக்கை ரயிலுக்குள் நிரந்தரமாக அனுப்பிவிட ஒருகட்டத்தில் குட்வின் சம்மதிக்கத் தன் விளம்பர இடைவேளைக் காதலி (!) கிறிஸ்டினாவைக் காப்பாற்ற நம்பிக்கையுடன் மீண்டும் அந்தக் கடைசி எட்டு நிமிட ரயில் வாழ்க்கையில் கால்பதிக்கும் ஜேக் ரயிலில் வைக்கப்பட்ட அந்த வெடிகுண்டை செயலிழக்கச்செய்து கடந்தகாலத்தில் அந்த ரயிலையும் தன் காதலி கிறிஸ்டினாவையும் காப்பாற்றிவிடுகிறார்......!!!!
நிகழ்காலத்தில் வில்லன் டெரிக் ஃப்ராஸ்ட் தடுக்கப்பட்டானா?? வெடித்துச்சிதறிவிட்ட ரயிலைக் கடந்தகாலத்தில் ஜேக் காப்பாற்றியபிறகு என்ன நடந்தது?? ஜேக் - கிறிஸ்டினா என்ன ஆனார்கள்?? போன்ற கேள்விகளுக்கு நிறைவான பதில்தந்திருக்கிறார்கள் வெள்ளித்திரையில்!
குழப்பமான கதையென்றாலும் திரைக்கதையில் குழப்பம் எள்ளளவும் இல்லாதது அதிசியம்! அந்தளவில் பென் ரிப்ளீயின் பேனா ஒரு மந்திரக்கோலாகத்தான் திரைக்கதையைப் பதித்துள்ளது சமகால அதிநுட்ப சினிமா செல்லுலாய்டில்!
திரையில் மாறி மாறி நிகழும் ஒரே "எட்டு நிமிடங்களை" அடுத்தடுத்துப் பார்த்து நாம் சலிப்படைந்துவிடாமல், அதே நேரத்தில் வெடிகுண்டு இன்வெஸ்டிகேஷன் பரபரப்புகள், குட்டிக் குட்டி "ட்வீட்"களால் இறந்தகாலத்தில் வளரும் ஜேக் - கிறிஸ்டினாவின் காதல், பயணிகளின் சகஜநிலை என்று சுவாரஸ்ய நிகழ்வுகளை வெவ்வேறு டைம்லைன்களில் பிய்த்து அங்குமிங்கும் ஒட்டவைத்து பரபரப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் டங்கன் ஜோன்ஸ்!
"இன்செப்ஷன்" அளவுக்கும் ஒரு பிரம்மாண்டமான கல்வெட்டு இல்லைதான் இந்தப் படைப்பு.... இருந்தாலும்......
எக்ஸ், ஒய், இசட் ஆக்ஸிஸுகளைத்தாண்டிய நான்காவது பரிமாணத்தில் ஒரு நாலுகால் பாய்ச்சல் டங்கன் ஜோன்ஸ் வழங்கியிருக்கும் இந்த பரபர திரைப்படம்!!!
Source Code - Go For It!!!!
அன்புடன்,
பிரபு எம்
.
Subscribe to:
Post Comments (Atom)

அடேங்கப்பா..... இங்க்லிபீசு படந்தேன் பாப்பாக போல.... நல்லா எழுதி இருக்கீக..... நீங்களே சொல்லிட்டாப்புல ..... பார்த்துட வேண்டியதுதானே.... :-))))))))
ReplyDeleteYeah awesome thriller. Interval appo phone ring adikkum podhu theatre fulla shock. But no way to watch in tamilnadu i think i watched this in mumbai . Nice review keep going
ReplyDeleteதெளிவான விமர்சனம்..
ReplyDeleteநன்றி பிரபு.
seen this movie in DEVI theater... Good exp.. dont miss it guys!
ReplyDeleteசென்ற வார படம் பார்த்தேன் பிரபு. புரிந்து கொள்ள சற்று கடினமாக இருந்தது. மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்.
ReplyDelete@ சித்ரா அக்கா
ReplyDelete//அடேங்கப்பா..... இங்க்லிபீசு படந்தேன் பாப்பாக போல.... நல்லா எழுதி இருக்கீக..... நீங்களே சொல்லிட்டாப்புல ..... பார்த்துட வேண்டியதுதானே.... :-)))))))) //
பாருங்க மக்களே இங்க்லிபீசு படந்தேன் பாப்பாகன்னு சொல்லுறவுக யாருன்னு!!! :-))
ஹஹாஹா.. நன்றி அக்கா... :-)
@ கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் )
ReplyDelete//Yeah awesome thriller. Interval appo phone ring adikkum podhu theatre fulla shock. But no way to watch in tamilnadu i think i watched this in mumbai . Nice review keep going //
Thank you Friend...
Yes.. That was a real shocking scene! :-)
Me too watched the movie in Mumbai only... :-))
@ கும்க்கி
ReplyDeleteரொம்ப நன்றி நண்பரே.. :-)
Thank you Udai
ReplyDelete@ சிவகுமார்..
ReplyDelete//சென்ற வார படம் பார்த்தேன் பிரபு. புரிந்து கொள்ள சற்று கடினமாக இருந்தது. மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்.//
வாங்க சிவா...
உங்க ஸ்பெஷல் மீல்ஸ்ல படிச்சப்புறம்தான் "ஸோர்ஸ் கோட்"னு ஒரு படம் வந்திருக்குன்னே நான் தெரிஞ்சுக்கிட்டேன்..
கண்டிப்பா இன்னொருமுறை பார்க்கலாம் நண்பா :-)
அடேங்கப்பா...குழப்பமான கதைன்னு சொன்னாலும்..உன் குழப்ப மில்லாத narration நல்லா இருந்தது...ரொம்ப வித்யாசமாய் இருந்தது கதை...அட பார்த்தால் என்னனு தோணுது...பர்மா பஜார் பக்கம் போனால் இந்த படம் டிவிடி இருக்கானு பார்க்கிறேன்..:))
ReplyDeleteஎனக்கு இந்த பதிவின் கடைசி வரிகள் ரொம்ப பிடிச்சது பிரபு..
//எக்ஸ், ஒய், இசட் ஆக்ஸிஸுகளைத்தாண்டிய நான்காவது பரிமாணத்தில் ஒரு நாலுகால் பாய்ச்சல் டங்கன் ஜோன்ஸ் வழங்கியிருக்கும் இந்த பரபர திரைப்படம்!!!//
இந்த axis தத்துவம் :))) செம சூப்பர்...such a different u are..:)))