Wednesday, May 04, 2011

அரசியல் பயணங்கள் - இலவச ஹெலிகாப்டர்?!!!


மாதவராவ் சிந்தியா, மக்களவை சபாநாயகர் பாலயோகி, நடிகை சவுந்தர்யா, ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ஆர்...

அரசியல் தவிர அதிக சம்பந்தமில்லாத இந்தப் பிரபலங்களை இணைக்கும் ஓர் ஒற்றுமை இவர்களின் ஹெலிகாப்டர் மரணங்கள்!

நம் நாட்டில் ஏறக்குறைய ஒரு சீரான இடைவெளியில் தொடர்கின்றன இந்த ஹெலிகாப்டர் மரணங்கள்..... இதோ இப்பொழுது.... தரையிலிருந்து  புறப்பட்ட 20 நிமிடங்களில் அத்தனை தொடர்புகளையும் இழந்து மாயமாகிவிட்ட அருணாச்சல பிரதேச முதல்வர் டோர்ஜி பயணித்த ஹெலிகாப்டரை மூவாயிரம் இராணுவ வீரர்கள் நான்கு நாட்களாகத் தேடிவருகின்றனர்!

தொடரும் ஹெலிகாப்டர் விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஒவ்வொரு மரணத்தின் பின்னும் ஏதோவொரு சிறிய "டெக்னிக்கல் அலட்சியத்"தைக் காரணமாகக் காட்டி துக்கம் அணுசரித்து அடுத்தகட்டப் பரபரப்பைத் தேடி நாம் நகர்ந்திருப்பதுதான் வரலாறு!

நம் நாட்டின் "அரசியல் பயணங்கள்" உண்மையிலேயே சுறுசுறுப்பானவை..... நம்மூரில் பெரும்பான்மை அரசியல் தலைகள் நரைத்துப்போன கிழட்டுத்தலைகள்தான் என்றாலும் ஒவ்வொரு தலையும் பொதுவாழ்க்கை பயணங்கள் மற்றும் அலைச்சல்களில் காட்டும் ஃபிட்னஸ் மற்றும் சளைக்காத ஸ்டாமினா அசாத்தியமானது!  தேர்தல் சமயங்களில் பொதுவாக மொழியப்படும் "சூறாவளி சுற்றுப்பயணங்களை" மேற்கொள்ள ஏதுவான வாகனம் ஹெலிகாப்டர் என்று சொல்லலாம் முக்கியமாக மக்களவைத் தேர்தலைக் குறிப்பிடலாம்....... சில தேசிய தலைவர்கள் இந்தியா முழுவதும் ரவுண்ட் அடித்தாகவேண்டியிருக்கும்போது ஹெலிகாப்டரின் தேவை இன்றியமையாததாகிவிடுகின்றது! இந்த நேரங்களில்தான் ஏர் டிக்கெட் இன்றி ஏர்வேயில் பயணித்துப் பரலோகத்துக்கு சிலர் டிக்கெட் வாங்கிவிடும் பரிதாபங்களும் நேருகிறது!

நம்ம ஊர்த் தலைகள் யாரும் ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவதில்லை...... எப்பேர்ப்பட்ட சூறாவளி சுற்றுப்பயணத்துக்கும் கார்கள்தான் நம்ம உஷார் பார்ட்டிகளுக்கு! 87 வயதில் நடக்கமுடியாத நிலையிலிருந்து நிற்கக்கூட முடியாத நிலைக்கு சக்கர நாற்காலியில் முன்னேறிய (!) பிறகும் இந்தத் தேர்தலில் குறிப்பிடும்படியான பயணங்களை மேற்கொண்டுள்ளார் கலைஞர்! கொளுத்தும் வெயிலில்தான் பெரும்பாலும் நம்ம ஊரில் தேர்தல் நிகழும்..... ஏசி குளிர்ச்சியில் உடல் திளைத்துப் பழகிவிட்டாலும் உச்சிவெயிலில் வெள்ளையுஞ் சொள்ளையுமாகத் திறந்த டெம்போ வேனில் கைகூப்பி சூடமிட்டாய், சோடா போன்ற வஸ்துக்களால் தொண்டையை நனைத்துக்கொடுத்து, களமிறங்கிக் கத்திப்பேசி வாக்குக் கேட்பது இன்றைய சேட்டிலைட் யுகத்திலும்  வழக்கமாய்த் தொடர்வது ஒருவகையில் பார்க்கும்போது  நல்ல விஷயம்தான்! உயிருக்கும் மேலாகவும், ரத்தத்தின் ரத்தமாகவும்  அழைக்கப்படுகின்ற‌ மக்கள் மற்றும் தொண்டர்களை வோட்டுக் கேட்டு நேரடியாகச் சந்திக்கும் தருணங்களில் எவ்வளவுதூரம் இவர்கள் தங்களின் உடல்களை வருத்திக்கொள்ள முனைகிறார்கள்... இவர்களது ப்ளாஸ்டிக் புன்னகைகள் (Fake smiles!), சகிப்புத்தன்மை  போன்றவை எந்தளவு நிஜமானது மற்றும் தலைகளின் தாக்குப்பிடிக்கும் தன்மைகளை மக்கள் ஓரளவு லைவ்வாகக் கவனிக்க வாய்ப்புக் கிடைக்கும் விஷயம் இது!

வழக்கம்போல் இந்தமுறையும் திமுக அணிதான் இதில் நன்றாக ஸ்கோர் செய்தது..... லட்சம் கோடி ஊழல்களில் திளைத்தாலும் பேசிப்பேசியே அரியணை பிடித்த வரலாற்றை இன்றும் மறக்காமல் சொகுசு மைனர்களாக வாழப் பழகிவிட்டாலும், கருப்பு சிவப்பு கரைவேட்டிகள் வெயிலோடு விளையாடி.... உறவாடி..... மல்லுக்கட்டித் தமிழக தெருக்களில் சரளமாக வலம்வந்ததைப் பாராட்டலாம்!

வேட்பாளர் பெயரை மாற்றிச்சொல்லி....... கூட்டணி கட்சிப் பெயரைத் தவறாக உளறி...... அதிமுக‌ கொடியை அகற்றச்சொல்லி சொதப்பி....... என்று ஏகத்துக்கும் கொளுத்தும் வெயிலில் சாயம் போனவர் நம்ம கேப்டன் விருதகிரிதான்! ஏசி கேரவேனில் இளைப்பாறி ஆக்ஷனுக்கும் கட்டுக்கும் இடையே மட்டும் மக்க'லு'க்காக உ'லை'த்ததுதானே இவரின் பின்னணி......பாவம்... அனுபவம் பத்தல......! இவரைக் குறிவைத்துக் கேவலப் பயணம் மேற்கொண்ட கைப்புள்ளயோ.... எதிரி விஜயகாந்தின் பிரச்சாரப் பிழைகளை ஏகத்துக்கும் ஓட்டியெடுத்து ஓட்டுக்கேட்ட படலத்தில் எதிரணி வேட்பாளரின் பெயரைச் சொல்லி அவருக்கு வாக்களிக்குமாறு "டங்கு ஸ்லிப்" பானது இதுவும் அனதர் மட்டை ஃபரம் தி ஸேம் குட்டை என்றாகிப்போனது!

குஷ்பூ எப்படியோ தாக்குப்பிடித்துவிட்டார்......  ஆயிரம்தான் இருந்தாலும் பஞ்சாபிப் பொண்ணு புடவையைக் கட்டிக்கொண்டு வீதிவீதியாக அரசியல் தமிழ்ப்பேசி ஓட்டுக்கேட்டது ஆச்சர்யமாகத்தான் இருந்தது!

உண்மையாகவே சூறாவளி சுற்றுப்பயணத்தில் "பம்பரமாய்" சுழலும் வைகோ இந்தமுறை கூட்டணி கிரிக்கெட்டில் மைண்ட்  இன்ஜியூரியினால் ரிட்டையர்டு ஹர்ட் ஆகி வெளியேறிவிட்டது சோகம்!

சத்தியமாகத் தோற்கப்போகிறோம் என்று தெரிந்தும் சொந்தத் தொகுதி மயிலையையே சுற்றிச்சுற்றி வந்து மயிரிழையிலாவது கரையேறிவிடமாட்டோமா என்று சொட்டையில் வெயில்சூட்டைத் தாங்கிய காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தேர்தல் காமெடி!

எத்தனை விமர்சனத்துக்கு ஆளானாலும் தன் சொகுசு வாழ்க்கையை விட்டுக்கொடுக்கமுடியாத அதிமுக அம்மா இந்தமுறை வேனிற்குமேல் ஏசியுடன் கூடிய பிரத்யேகக் கண்ணாடிக் கூண்டில், ஹைட்ராலிக் லிஃப்ட் பொருத்தப்பட்ட ஸீட்டில் அமர்ந்து உடல் நோகாமல் பிரச்சாரப் பணியாற்றினார்.... அந்தக் களைப்பு தீர்க்கவும் (!) தன் தாய்நாடான‌ கொடநாட்டுக்கு ஓய்வெடுக்கப் போய்விட்டார்! ஓய்வெடுத்த களைப்புதீர ஓய்வெடுக்கும் ஓயாத தலைவி உலகில் இவர்மட்டும்தான் இருப்பார்!! இருப்பினும் மின்வெட்டில் இருண்டுபோய்ப் பார்வையைத் திசை மாற்றும் மக்களுக்கு ஏற்கெனவே இருண்டுபோன இன்னொரு முனையில் மாற்றுத் தலைமையாக இன்னும் இவர்தானே இருக்கிறார்...... :-( 1992ல் இவர் செய்த பிரம்மாண்ட ஊழல்கள் அதிர்ச்சியானவை என்றால் இப்பொழுது பெரிய்ய்ய்ய குடும்பத்தினர் செய்திருக்கும் ஊழல்கள் அருவருப்பானவையாக நாளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன!

நாள்தோறும் அநாகரிகமான அறிக்கைப் போர்புரியும் கழகங்கள் தேர்தல் சமயத்தில் தேர்தல் அறிக்கைகளை போட்டிபோட்டு வெளியிட்டு இலவசப் போர்புரிந்தது கேலிக்கூத்தின் உச்சம்!

நமக்கு மாய்ந்து மாய்ந்து லேப்டாப்பையும், மிக்ஸி கிரைண்டரையும் இலவசமாக வாரிவழங்கும் நமது பாசத்தலைவர்களுக்கு நாமெல்லாம் சேர்ந்து காசுபோட்டு ஒரு ஹெலிகாப்டரை வாங்கி இலவசமாக வழங்கினாலாவது விடிவுகாலம் பிறக்குமா?!!!!

மே 13 என்ன கதை சொல்லப்போகிறதோ?!!!

வால்க தமிலகம்!!!


அன்புடன்,

பிரபு எம்

6 comments:

  1. //அனதர் மட்டை ஃபரம் தி ஸேம் குட்டை என்றாகிப்போனது!//
    .மதுரை வீரன் வேட்பாளரை பளார் கொடுத்தது மட்டும் தான் கேள்வி பட்டேன் .ஹா ஹா !! இவ்ளோ காமெடி நடந்துச்சா .
    superb post .

    ReplyDelete
  2. @ பன்னிக்குட்டி ராம்சாமி

    //அண்ணா நாமம் வால்க! //

    :-))

    நன்றி நண்பா ....

    ReplyDelete
  3. @ Angelin

    //மதுரை வீரன் வேட்பாளரை பளார் கொடுத்தது மட்டும் தான் கேள்வி பட்டேன் .ஹா ஹா !! இவ்ளோ காமெடி நடந்துச்சா//

    நடந்த தேர்தல்களிலேயே பிரச்சாரக் களங்களில் இவ்வளவு காமெடிகள் நடந்தது இந்தத் தேர்தலில்தான்னு சொல்லுற அளவுக்கு நடந்தது! :-))
    எதிரணி வேட்பாளர் பெயரைச் சொல்லி வோட்டுக்கேட்டுவிட்டு வடிவேலு வழிந்த அழகைப் பார்க்கமுடியாமல் போனதுதான் வருத்தம் :-)

    //superb post .//

    ரொம்ப நன்றி சகோ :-)

    ReplyDelete
  4. Anonymous1:39 PM

    நாம் ஹெலிகாப்டர் வாங்கி தந்தாலும் அதை எதிர்கட்சி தலைவருக்கு தள்ளி விடுவார்கள் தலைவர்கள். வரும் வெள்ளி மே 13 என்ன அமளிதுமளி நடக்கப்போகுதோ?

    ReplyDelete
  5. @ சிவகுமார்

    //நாம் ஹெலிகாப்டர் வாங்கி தந்தாலும் அதை எதிர்கட்சி தலைவருக்கு தள்ளி விடுவார்கள் தலைவர்கள். //

    அந்த சைடிலாவது நல்ல காரியம் நடக்கட்டுமே! ஹாஹாஹா.. :-)
    ரொம்ப நன்றி நண்பா....

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)