Sunday, May 08, 2011

எங்கேயும் காதல் [U] (2011)


ஜில்... ஜில்.... ஜில்லென்று பாரிஸ் நகரமும்..... படுஃப்ரெஷ்ஷாக பார்த்துச் செதுக்கிய விஷுவல்களும்..... பளிச் காஸ்ட்யூம்களும்..... இளமையும்.... அழகும்.......திரையில் மென்மை என்கிற பெயரில் "படு மெதுவாக" நகர்வதை உங்களால் உட்கார்ந்து ரசிக்கமுடியும் என்றால் நூறு ரூபாய் வரைக்கும் செலவுசெய்து டிக்கெட் புக் செய்யலாம்! (250 ரூபாய்க்கு நான் பார்த்தேன் இண்டெர்வெல் பாப்கார்ன்கூட வாங்கல.... முதலுக்கே மோசமாகிவிட்ட காரணத்தால்!) காட்சிகளோடு சேர்த்து காதலும் "ஜில்"லென்று குளிர்வூட்டியிருந்தால் இந்த சம்மருக்கு சிம்லா குலுமணாலி ஆகியிருக்கக்கூடிய திரைப்படம்தான்!  ஆனால் ஸாரி..... கண்களுக்கு மட்டுமே குளிர்ச்சி தருகிறது பிரபுதேவாவின் இந்த "காதல் படம்"!

இளம் பிஸினெஸ்மேன் கம் ப்ளேபாய் கமலாக ஜெயம்ரவி..... சென்னையில் வருடத்திற்கு பதினோரு மாதம் பிஸினஸ் பிஸினல் என்று சஞ்சய் ராமசாமி ரேஞ்சில் இருந்துவிட்டு..... அடுத்த ஒரு மாதமோ பாரிஸில் ப்ளேபாய் அவதாரம் எடுத்து காதல் + கம்மிட்மெண்ட்களில் சிக்கிவிடாமல் பெண்களுடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கும்  ரிச் பாய்! அப்படி பாரிஸில் ரிலாக்ஸ் பண்ணும்போது ஹீரோ செல்ஃபோன் கூட பயன்படுத்தமாட்டார்!  பாரிஸில் வாழும் தமிழ்ப்பொண்ணு ஹன்சிகாவின் பெயர் கயல்விழி  (வெச்சிருக்கான்பாரு பேரு!!) தாயில்லாத மகள் ஹன்சிகாவைச் செல்லமாக வளர்க்கும் ப்ரைவேட் டிடெக்டிவ் சுமன் (ஹீரோயின் அப்பா சுமன்ன்னவுடனே பவர்ஃபுல்லா நினெச்சுடாதீங்க அவரு பாஷையிலேயே சொல்லணும்னா பொட்டு வெச்சிட்டு பொங்கல் சாப்பிடுற ரோல்தான் அவருக்கு.. பார்ட்டி படுசாஃப்ட்!) பாரிஸில் ஹேண்ட்ஸம் ரவியைப் பார்த்தமாத்திரத்திலேயே பால் ஐஸாக உருகிவிடுகிறார் ஹன்சிகா ! ஆனால் ப்ளேபாய் ரவிக்கோ ஹன்சிகா ஜஸ்ட் அனதர் கேர்ள் மட்டுமே!  மேடம் படாதபாடு பட்டு சாரைத் தன்னை லவ் பண்ணவைப்பதுதான் படம்!

டைரக்டர் பிரபுதேவா டான்ஸாடி நாள் ஆச்சு இல்லையா?! படம் ஆரம்பிச்சவுடனேயே நாரேட்டராக வந்து அறிமுகமாகி படுமெலடியான "எங்கேயும் காதல்...." பாடலுக்கு மென்மையும் நளிணமுமான நடன அசைவுடன் படத்தைத் துவக்கிவைத்து அவ்வப்போது திரையில் தோன்றி கதையும் சொல்லுகிறார்..... இதில் படத்தில் இல்லாத பாத்திரமாக (!) ப்ரகாஷ்ராஜ் ஒரு கேமியோ ரோல் செய்திருக்கிறார்..... ரெண்டு சீன்தான் என்றாலும் இந்த கான்செப்ட் கலக்கல்!! ;-)

ரவியின் நடிப்பில் நல்ல பக்குவம்.... அலட்டிக்கொள்ளாமல் நடிக்கவேண்டிய பாத்திரத்தை இயல்பாக செய்து ஈஸியாக ஸ்கோர் செய்திருக்கிறார்..... ஹன்சிக்காவுக்குத்தான் படத்தில் அதிக வேலை.... தமிழகத்தை நோக்கி நம்பிக்கையாக வந்துக் களம்கண்டுவிட்டாலும் பாஷையும் நேட்டிவிட்டியும் கொஞ்சமும் கைகூடாதது பெரிய சறுக்கல்தான் இவருக்கு! இருந்தாலும் வயதுக்கேற்ப‌ கபடமில்லாத‌ வெள்ளையான குழந்தை முகமும்....  ஊட்டம் கொடுத்து வளர்க்கப்பட்ட செல்லப்பொண்ணு மாதிரி "Baby fat" கரையாத மேனியுமாக தத்தக்கா.... புத்தக்கா.... என்று இவர் நடிக்கக் கஷ்டப்படுவது கொஞ்சம் கவரத்தான் செய்கிறது.... !  காஸ்ட்யூம்ஸ் +  மேக்கப் என்று ரொம்ப கச்சிதமாக அலங்கரித்துத் தன் ரசனையை நம்பித் தன் நாயகியை களத்தில் இறக்கியிருக்கிறார் பிரபுதேவா..... செகண்ட் ஹாஃபில் ஹன்சிக்காவை மையமாகக்கொண்டுதான் சுழல்கிறது திரைக்கதை.... அவரும் ரொம்ப முயற்சிசெய்து ஓரளவு தாக்குப்பிடித்திருக்கிறார் ஆச்சர்யமாக!!

ஆண்காதலின் ஆதிச்சொத்தான "பொஸஸிவ்னெஸ் மற்றும் பொறாமை"யைக் கையிலெடுத்துத் தனக்கு எக்கச்சக்க பாய்ஃப்ரெண்ட்ஸ் இருப்பதாகக் கதைமேல் கதைகட்டி ரவியை வெறுப்பேற்றி ஹன்ஸிகா தன்னைக் காதலிக்கவைப்பதுதான் படத்தின் மெயின் ப்ளாட்டே! முதல்பாதி ரொம்ப ரொம்ப நெழியவிட்டாலும் இரண்டாம் பாதியில் வரும் இந்தப் பகுதிகளில் கொஞ்சம் "மூவ்மெண்ட்" இருப்பது ஆறுதல்!

ராஜுசுந்தரத்தின் இம்மெச்சூர்ட் காமெடிட்ராக் சம்டைம்ஸ் ஓகே..... சம்டைம்ஸ்  ஜஸ்ட் ஃப்ளாட்...... மொத்தத்தில் Not Bad என்று சொல்லுமளவுக்கு  இருக்கிறது..... ஒரு காட்சியில் ப்ரெஞ்ச் ரெஸ்டாரண்டில் சாப்பிட்ட பில்லுக்குக் கையில் பணமில்லாமல் போக பாஷை புரியாத வெயிட்டரிடம் கிச்சனைக் காட்டு நான் மாவாட்டுறேன் என்று மழுப்புவது செம காமெடி!!!! ....... ஓர் அப்பாவாக சுமன் காட்டும் பாந்தம் நன்று! படத்தில் வேற கதாபாத்திரங்களே கிடையாதது மிக நன்று!!

நீரவ்ஷாவிற்குதான் "மேன் ஆஃப் தி மேட்ச்" விருது!  ஐம்புலணுக்கும் மென்மையான சுகானுபவம் தருவது  "காதல்" ஆனால்  இங்கு உணர்வுகளை அதிகளவு ஈர்க்காதவாறு அமைந்திருக்கும் கதைக்களத்தில் கன்ஃபார்ம்டாக கண்களுக்கு மொத்த விருந்தையும் தன் ஒளிப்பதிவால் படைத்திருப்பது Twenty-20 போட்டியில் சதமடித்ததுபோன்றது!  குளிர்ச்சியான ஒளிப்பதிவுக்காகப் பார்க்கலாம் என்கிறரீதியில் Word of mouth கண்டிப்பாக பரவும் தமிழ் சினிமாவின் ரெகுலர் கஸ்டமர்களிடமிருந்து!

ஹாரிஸையும் மறந்துவிடக்கூடாது.....பாடல்கள் படத்தின் அடுத்த பெரிய ப்ளஸ்.....ஆனால் ஏற்கெனவே மென்மையான இசையில் ஹிட்டடித்திருக்கும் பாடல்களைப் படத்தில் சம்பந்தமேயில்லாமல் முதல்பாதியில் அடுத்தடுத்து அடுக்கப்பட்டிருப்பது பெரிய‌ மைனஸ்! செகண்ட் ஹாஃபில் வரும் "வள்ளியே சக்கர வள்ளியே..." பாடல் (மைக்கேல் ஜாக்சனிடமிருந்து உருவிய ட்யூன்....! ஹிஹி)  பொருத்தப்பட்ட இடமும் அழகான ரசனையுடன் படமாக்கப்பட்ட விதமும் டாப்கிளாஸ்! பாடல்வரிகள் நன்றாக எழுதப்பட்டிருந்தாலும் சம்பந்தமில்லாத இடங்களில் பாடல்கள் திணிக்கப்பட்டிப்பதால் அர்த்தமற்ற கவிதைகளாய் விழலுக்கு இரைக்கப்பட்டிருக்கின்றன.... உதாரணத்துக்கு.... "காதல்" என்ற உணர்வு கொஞ்சமும் ஏற்படாத ஃபர்ஸ்ட் ஹாஃப் ஜெயம் ரவி பாடுவதாக அடுத்தடுத்து வருகின்றன  "தீயில்லை புகையில்லை...."  மற்றும் " நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ..." பாடல்கள்..... ஜஸ்ட் இது இயக்குனரின் அபத்தம் அண்ட் அலட்சியம் அவ்வளவுதான்! இத்தனை அழகான பேக்டிராப், நீரவ்ஷாவின் ஒளி ஓவியம் , ஹாரிஸின் ஹிட் ட்யூன்ஸ், காஸ்டிங்கின் இளமை மற்றும் ஃப்ரெஷ்னஸ் என்று இவ்வளவும் கையில் இருக்கையில் அவுட்புட் ரொம்ப கம்மிதான்.....  ஸாரி பிரபுதேவா....

வேற எதுவும் சொல்வதற்கு இல்லை....... தேர்ந்த அழகியல் ரசனையுடன் பிரம்மாண்டமாக கிஃப்ட் பேக்கிங் செய்யப்பட்டிருந்தாலும் உள்ளே இருப்பது ஒரு சாதாரணமான‌ காகிதப்பூ பொக்கேதான்!

அழகாக இருந்தாலும் காகிதப்பூக்கள் மணம் வீசுவதில்லையே....!!! :-(


அன்புடன்,

பிரபு எம்
.

16 comments:

  1. நன்றி
    நல்லவேளை இன்று போகலாம் என இருந்தேன்
    அழகாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி ரமணி சார் :-)

    ReplyDelete
  3. அழகான விமர்சனம்... எழுத்து நடையும் அருமைங்க..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

    ReplyDelete
  4. ரொம்ப நன்றி சகோதரா :-)

    ReplyDelete
  5. எழுத்து மெருகேறிக் கொண்டே போகின்றது பிரபு!!!!!!

    ReplyDelete
  6. Thank you Karthi :)

    ReplyDelete
  7. நீங்கள் ஏன் வானம் படம் கண்டிப்பாக பார்க்க வேண்டும் ?
    http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.com/2011/05/blog-post_08.html

    வானத்த பத்தியும் ஒரு பதிவு போடலாமே.....

    ReplyDelete
  8. நன்றி புரட்சிமணி...
    திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு இருந்தால் நிச்சியம் பதிவிடுகிறேன் எனக்குத் தோன்றியவற்றை...... :-)

    ReplyDelete
  9. so, போக வேண்டாமா??

    ReplyDelete
  10. //so, போக வேண்டாமா?? //

    வாங்க அக்கா வணக்கம்!

    நீங்க இன்னும் பார்க்கலையா?

    பதிவிலேயே சொல்லியிருப்பதுபோல் ஜில்லென்ற காட்சிகளும் ஃப்ரெஷ்ஷான சில "பளிச்"களும் மட்டும் எண்டர்டெயின்மெண்டுக்குப் போதும் என்ற பெரியமனதுடன் போனால் நிச்சியம் பார்க்கலாம் அக்கா! மற்றபடி பரிந்துரைக்குமளவு படத்தில் ப்ளஸ்ஸும் சரி மைனஸ்ஸும் சரி நிதர்சனமாக இல்லை!!! :-(

    ReplyDelete
  11. நான் எஸ்கேப் ஆகி விட்டேன்!

    ReplyDelete
  12. //நான் எஸ்கேப் ஆகி விட்டேன்! //

    ஹாஹாஹா...
    வாழ்த்துக்கள் நண்பா :-)

    ReplyDelete
  13. அழகாக விமர்சனம் செய்துள்ளீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. @ மாலதி

    ரொம்ப நன்றிங்க....

    ReplyDelete
  15. //பரிந்துரைக்குமளவு படத்தில் ப்ளஸ்ஸும் சரி மைனஸ்ஸும் சரி நிதர்சனமாக இல்லை//

    நேற்று தான் படம் பாத்தேன்...நீங்கள் சொன்னது சரியே.நல்ல விமர்சனம்

    ReplyDelete
  16. உன் review படிச்சேன்...நூல் பிடிச்ச மாதிரி செம கச்சிதம்...டக்கரு :)))

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)