முக்கிய அறிவிப்பு:
இந்தப் பதிவிற்கும் நமது டிவிக்களின் டி.ஆர்.பி பூஸ்டர்களான டான்ஸு ஷோக்களுக்கும், மற்றும் இந்த ஷோக்களுக்கு எல்லாம் தாயாக (!)இருந்து வழிநடத்தி வருகிற நம் தென்னகத்து ஜானெட் ஜாக்ஸன் கலா ஆண்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று முதலிலேயே அறிவித்துக்கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன்... (ஏன்னா "கெமிஸ்ட்ரி" என்கிற வார்த்தைக்கு காப்பிரைட்ஸ் அவங்ககிட்டதான் இருக்காமாம்!)
இது நான் ஸ்கூலில் படித்த கெமிஸ்ட்ரி! நம்ம எல்லாரும் படிச்சோமே அதே கெமிஸ்ட்ரிதான்!
கெமிக்கல் சூப்பர்ஸ்டார் கார்பனும்.. நம்பர் ஒன் தணிமம்(எலமெண்ட்) ஹைட்ரஜனும் சேர்ந்து அமைத்த சூப்பர்ஹிட் "சி-ஹெச்" கூட்டணி தனித்து ஆட்சியைப் பிடித்து ஆட்டிப்படைக்கும் "ஆர்கானிக் கெமிஸ்ட்ரி" அப்போதுதான் தன் ஆட்டத்தை எங்களுக்கு எட்டாம் வகுப்பில் காட்ட ஆரம்பித்திருந்தது!
ஸிம்பிள் ஆல்கேன்களை (Alkane) வரிசைபடுத்தச்சொல்லி ஒரு படு பாப்புலரான கேள்வி ஒன்று எல்லா பரிட்சையிலும் ரிப்பீட்டு அடித்துக் கொண்டிருந்தது அந்த வருடம்.... ! ஏப்ரல் மாத இறுதித்தேர்விலும் அந்தக் கேள்வி கண்டிப்பாக வருமே.... என்கிற ஞானோதயம் எங்கள் கடைசி பெஞ்சு உயிர் சிநேகிதன் ஜார்ஜ் புஷ்ஷுக்குப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது!) பரிட்சை ஹாலுக்கு உள்ளே செல்லும் கடைசி தருவாயில்தான் வந்தது..... சீக்கிரம் ஆன்ஸர் சொல்லிக்கொடுங்கடான்னு கேட்கிறான்!
"டேய் ஆமாடா....கண்டிப்பா அந்த க்வெஸ்டின் வந்திடும்... ஸோ உனக்கு இன்னொரு மூணு மார்க்குக்கு ஆச்சு! ரொம்ப ஈசி...."
என்று ஆன்ஸரைச் சொன்னோம்.... மீத்தேன், ஈத்தேன், ப்ரொப்பேன், பியூட்டேன், பெண்டேன்! ஜஸ்ட் இந்த அஞ்சு வார்த்தையைக் கட்டம் கட்டி வரிசையா எழுதினா போதும்டா மூணு மார்க்!! என்று சொன்னோம்.....
ஆனால் எங்கள் உயிர்த்தோழன் ஜார்ஜ் புஷ்ஷோ காய்ச்சலுக்கு மாத்திரையைத் தேனில் கரைத்துக் கொடுத்தாலே தேனை மட்டும் சப்பிவிட்டு மாத்திரையைத் துப்பிவைக்கும் மாண்புமிகு மாணவன்...! மீத்தேன் ஈத்தேனிலும் "தேன்" மட்டுமே அவன் மூளையில் பதிந்தது....
"என்னடா நண்பா... பழைய பாட்டுல கண்ணதாசன் எழுதின மாதிரி "தேன் தேன்"னு முடியுது ஹி ஹி ஹி!" என்று சிரித்தான்...
ஃபெயிலாகுற நேரத்திலயும் பக்கிக்குக் காமெடிக்கு ஒண்ணும் குறைச்சலில்ல!! மதுரைக்காரன்ல.... அதான் ரணகளத்திலயும் ஒரு குதூகலம்! :-)
முப்பத்தைஞ்சுதான் அவனுக்கு லக்கி நம்பர்.... எப்படியாது தேத்தி எல்லா பாடத்திலும் முப்பத்தஞ்சு மார்க்கா வாங்கித்தான் பாஸ் ஆகிட்டே வந்தான் இந்த பாஸ் என்கிற பாஸ்மார்க்காரன்! ஆனா நண்பன் ஒருத்தனுக்குப் பிரச்னைன்னா அடிதடின்னாலும் யோசிக்காம உள்ள இறங்கிடுற "நண்பேன்டா" ரகம் அவன்! அவனை நாங்க ஃபெயிலாக விட்டுட்டா அடுத்த வருஷம் யாரை நம்பி இந்த "ரத்தபூமி"யில் கால்பதிக்கிறது!!
அதனால அந்தக் கடைசி அஞ்சு நிமிஷத்துல அவனுக்கு மீத்தேன், ஈத்தேன், ப்ரொப்பேன்,பியூட்டேன்,பெண்டேன் இந்த அஞ்சே அஞ்சு வார்த்தையை அவனோட மானங்கெட்ட மண்டையில ஏத்தணும்னு நாங்க மண்டைய உடைச்சுட்டு இருந்தோம்!
அப்புறம் என் மண்டையில பல்பு எறிஞ்சு ஓர் ஐடியா வந்து அவனுக்கேத்த மாதிரி ஆக்ஷன் மசாலா எல்லாம் சேர்த்துக் கொடுத்துப் புரியவெச்சு சாதனைசெஞ்சு சீனை முடிச்சிட்டோம்!!! அப்படி என்ன ஆக்ஷன், காமெடி கமர்ஷியல் ஐடியான்னு கேக்குறீங்களா... சொல்றேன் சொல்றேன்.... அதுக்குத்தானே இந்தப் பதிவே எழுதுறேன்....
ஆனால் அதுக்குமுன்னாடி ஒரு சின்ன விஷயம்.....
நம்ம தமிழர்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்கள்னு பெருசா பேசிக்கிறோம் ஆனால் நம்ம கல்விமுறையைப் பற்றி ஏன் யோசிக்க மாட்டேங்குறோம்? மூளையின் பல்வேறு திறன்களை மேம்படுத்தத்தான் கல்வி... அதுல பிரதானமா அறிவை வளர்க்கவும், புத்திசாலித்தனத்தை ஊக்கப் படுத்தவும், முக்கியமா படித்த அறிவை அப்ளை செய்யவும் தொடர்ந்து உந்துசக்திகொடுத்து மூளையைத் தீட்டும் ஒரு விஷயமா இருக்கணும் நம்ம கல்வி.... ஆனால் மூளையோட இன்னொரு பயன்பாடான மனப்பாடம் செய்யும் திறனில் சிறந்துவிளங்கினாலே போதும் நம்முடைய கல்விமுறையில் நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு! ஒரு திருக்குறளை அடிபிறழாமல் மனப்பாடம் செய்தல் நலம்.... ஆனால் அதோட சேர்த்து அதன் அர்த்தத்தையும் மனப்பாடம் செய்வது கேவலமில்லையா??! மேலும் நம்ம பரிட்சை முறையோ அதைவிடக் கேவலம்... புத்தகத்தில் இல்லாது ஒரு சின்ன கணக்கு வந்துவிட்டால்கூட "அவுட் ஆஃப் சிலபஸ்" என்று பொதுத்தேர்வில் க்வெஸ்டின் நம்பர் போட்டுவைத்தாலே அந்தக் கேள்விக்கு முழுமதிப்பெண் வழங்கிவிடுவார்கள்....! அதிலும் ஒரு கேள்வித்தாள் கொஞ்சம் கஷ்டமா இருந்துட்டா போதும் "பெற்றோர்-ஆசிரியர் சங்கம்" கல்வித்துறையோடும் தேர்வுத்துறையோடும் பேச்சு வார்த்தை நடத்தப் போயிடும்! அவங்களச் சொல்லியும் குற்றமில்ல..... ஏன்னா இப்படி அல்லாடித் தள்ளாடி வாங்குற மார்க் ஷீட்டைப் பொறுத்துதானே அடுத்தடுத்து எல்லா நல்ல காரியமும் நடக்கணும் அந்த மாணவன் வாழ்க்கையில!! தொப்பை விழுந்த போலீஸ்காரர்களைவிடக் கேவலமானவர்கள் தன் தொழிலில்,படிப்பில் தங்களை அப்டேட் செய்துகொள்ளாத ஆசிரியர்கள்... நம்ம நாட்டில் பாடங்களை அப்படியே டப்பா அடித்து மொட்டை மனப்பாடம் செய்து மார்க் வாங்கும் மாணவனும் இருக்கிறான்.... நல்ல வாத்தியார் நல்ல பள்ளி என்று பலவிஷயங்களுக்கும் எக்ஸ்போஸ் ஆகி மிளிருகின்ற மாணவனும் இருக்கிறான்.... வாத்தியார் யாருன்னே தெரியாம தினம் பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு வர்ற பரிதாபமான சில கிராமத்து மாணவனும் இருக்க்த்தான் செய்யுறான்... இப்போ கூட கல்விக்கு என்ன பண்ணீங்கன்னு கேட்டா... நிறைய பள்ளிகளுக்குக் கட்டுமானத்துக்கு எங்க எம்.எல்.ஏ நிதியிலிருந்து வழங்கியிருக்கோம்னு பெருமை பாடுறாங்க ஆட்சியாளர்கள்..... குளம் கண்மாய்களையே தூர் வாற மறக்கறவங்க கல்வியையா தூர் வாரப்போகிறார்கள்?? ஃபார்முலாவை மனப்பாடம் செய்யச்சொன்னா கணக்கையே மனப்பாடம் பண்ணி நூற்றுக்கு நூறு வாங்கமுடியுற ஒரே கல்விமுறை நம்முடையதாத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்...... :-((
ஓகே பேக் டு தி ஃப்ளாஷ்பேக்...
மீத்தேனையும் ஈத்தேனையும் எப்படி ஜார்ஜ்ஜு புஷ்ஷின் மண்டையில் ஏற்றினோமென்றால்.... அவன்தான் ஆக்ஷன் ஹீரோ ஆச்சே... அதான் அடிதடி ஃப்ளேவரில் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியை மிக்ஸ் பண்ணி ஒரு குட்டி நிமோனிகல் கதை சொல்லிப் புரியவெச்சோம்! இதான் அந்தக் கதை.....
" நண்பா.... இப்போ உனக்கும் நம்ம சீனியர் பையனுக்கும் சண்டை...
முதல்ல நீ அவனை மிதிக்குற... ஓகே? அதான் மீத்தேன்!!!
அடுத்து அவனை எத்துற ..... ஈத்தேன்...!! நீ எத்துனதுல அவன் கீழே விழுந்துடுறான்....
ஸோ நீ அவனைப் பொரட்டிப் போடுற.... அதான் ப்ரொப்பேன்...."உனை சாதாரணமா உதச்சா போதாதுடா"ன்னு
அவனை நீ பூட்ஸ் போட்டு மிதிக்கிற.... புரியுதா அதான் ப்யூட்டேன்...
ஆகமொத்தம் நீ அவ்னை பெண்டைக் கழட்டிட்ட.... அதான் பெண்டேன்!!"
எப்பூடி!!???
ஓர் அடிதடிச் சண்டையில் வில்லனைப் புரட்டியெடுத்து பெண்டெடுத்துவிட்ட சந்தோஷத்துடன் பரிட்சைக்கு சென்றான் ஜார்ஜ்புஷ்....
முடிவில்....
க்ளைமேக்ஸ்: 1
கான்ஃபிடன்டாக பரிட்சை ஹாலுக்கு சென்ற ஜார்ஜ்ஜு புஷ்ஷுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.... பரீட்சையில் மீத்தேன் ஈத்தேன் கேள்வி வரவில்லை!!! சோர்ந்த முகமாகவேதான் இருந்தான் தேர்வுமுடிந்தபின்னும்!
க்ளைமேக்ஸ்: 2
எட்டாம் வகுப்பு முடிந்து ஒன்பதாம் வகுப்புக்கு ஜுன் மாதம் பள்ளிக்கு சென்றபோது எங்களுக்கும் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது..... முதன்முறையாக நாற்பத்து இரண்டு மதிப்பெண் பெற்று பாஸாகியிருந்தான் ஜார்ஜ் புஷ்! எங்கள் கூடவே மீண்டும் ஆக்ஷன் ஹீரோவாகத் தொடர்ந்தான்.... நண்பேண்டா!!
வணக்கம்!
கதை... திரைக்கதை.... வசனம்... இயக்கம்
பிரபு எம்!
கதை திரைக்கதை வசனம் இயக்கம்
ReplyDeleteசூப்பர்
புக்ல இருக்குற கணக்கில் நம்பரை மட்டும் மாத்தி கொடுத்தாலே அந்த வினாதாளை உருவாக்கிய நல்ல மனிதருக்கு சாபம் விடுவோம். டீச்சர்கிட்ட கம்ளைன் பண்ணுவோம். அந்த ஞாபகம் வந்துடுச்சு
ReplyDeleteஅட போப்பா போ..இப்ப தான் என் பையனுக்கு capillary tubes,alveoli ன்னு நான் மண்டை குடைஞ்சு படிச்சதை கஷ்டப்பட்டு ஞாபக படுத்தி சொல்லி கொடுத்துட்டு வரேன்:(((..இங்கே மீதேன்,ஈத்தேன் பதிவு...:((( பிரபு ஒழிக...:)))
ReplyDelete//ஆனால் மூளையோட இன்னொரு பயன்பாடான மனப்பாடம் செய்யும் திறனில் சிறந்துவிளங்கினாலே போதும் நம்முடைய கல்விமுறையில் நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு! ஒரு திருக்குறளை அடிபிறழாமல் மனப்பாடம் செய்தல் நலம்.... ஆனால் அதோட சேர்த்து அதன் அர்த்தத்தையும் மனப்பாடம் செய்வது கேவலமில்லையா??!//
ReplyDeleteபிரபு..உண்மை..இதை நான் பலமுறை யோசிச்சிருக்கேன்...என்னை கேட்டால் திருக்குறள் மனப்பாடம் கூட எதுக்குன்னு தான் சொல்வேன்...அதை சத்தியமா எத்தனை முறை படிச்சாலும் நமக்கு மீனிங் புரியபோறது இல்லை..ஆனால் அருமையான குறளின் கன்டென்ட் ஐ மட்டும் கதை போலே டீசெர்ஸ் சொல்லி கொடுக்கலாம்...
எனக்கு தெரிஞ்சு மனப்பாட செய்யுள் எல்லாம் மார்க் கு காகவும்,கடமைக்கு பண்றது மாதிரியும் தான் தோணுது ...என்னவோ நம் generation மாதிரி இல்லாமல் இப்போ இன்னும் கொஞ்சம் நம் கல்வி அமைப்பை மாத்தலாம்..முட்டி மோதி படிக்கிற ..உருப்போடும் மாணவனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மனப்பாடம் செய்ய தெரியாத ஆனால் keen observer கு கிடைக்காமல் போவதும் நம் பாட திட்டத்தின் அபத்தங்கள்...
//நண்பா.... இப்போ உனக்கும் நம்ம சீனியர் பையனுக்கும் சண்டை...
ReplyDeleteமுதல்ல நீ அவனை மிதிக்குற... ஓகே? அதான் மீத்தேன்!!!
அடுத்து அவனை எத்துற ..... ஈத்தேன்...!! நீ எத்துனதுல அவன் கீழே விழுந்துடுறான்....
ஸோ நீ அவனைப் பொரட்டிப் போடுற.... அதான் ப்ரொப்பேன்...."உனை சாதாரணமா உதச்சா போதாதுடா"ன்னு
அவனை நீ பூட்ஸ் போட்டு மிதிக்கிற.... புரியுதா அதான் ப்யூட்டேன்...
ஆகமொத்தம் நீ அவ்னை பெண்டைக் கழட்டிட்ட.... அதான் பெண்டேன்!!"//
அட...இது கூட நல்ல ஐடியா தானே...என் பையனுக்கு சில complicated ..வாய்க்குள் நுழையாத சில substances ,biological names எல்லாம் இப்படி தான் கொஞ்சம் சொல்லி தருவேன்...ஹ ஹ...நாமெல்லாம் மதுரை இல்லையா..ஒரே மாதிரி தான் குண்டக்க மண்டக்க யோசிக்கிறோம்...:)))
சூப்பர் பிரபு..
ReplyDeleteஇந்த பதிவில் நல்ல complile தெரிஞ்சது...நீட் ஸ்கிரிப்ட்...:)) introduction, concept கு வரதுக்கு முன்னாடி கன்டென்ட் பத்திய சில குறிப்புகள்...அப்டியே சுவாரஸ்யம் குறையாமல் பைனல் டச்...awesome prabu...
ReplyDeleteDirector Prabu.! It s a good Movie.....:)))
:-)))))))
ReplyDeleteபடிக்குறப்போ தோனுன விசயம்தான் நண்பா.... என் நண்பன் எனக்குச் சொல்லிக்கொடுத்த மாதிரி கணக்குப்பாடத்த எனக்கு வந்த எந்த வாத்தியாரும் சொல்லிக்கொடுக்கல... அவ்வளோ பிராக்டிகளா சொல்லிக்கொடுத்தான்.
ReplyDeleteஇதே மாதிரி நான்லாம் "வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி" தமிழ் செய்யுள்களை எல்லாம் சினிமா பாட்டு டியூன் போட்டு மனப்பாடம் பண்ணுவேன்... அதெல்லாம் ஞாபகத்துக்கு வந்திடுச்சு..
ReplyDelete\\கடைசி பெஞ்சு உயிர் சிநேகிதன் ஜார்ஜ் புஷ்ஷுக்குப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது\\
ReplyDeleteதினத்தந்தி நிறைய படிப்பீங்களோ!
ஆமினா அக்காவுக்கு நன்றி!
ReplyDeleteஆமா... உண்மைதான் நம்பர் மாற்றிக்கேட்டா கொஸ்டின் பேப்பர் எடுத்தவருக்கு அடுத்த ஜென்மம் வரைக்கும் சாபம் தொடரும்தான்! யோசிச்சுப் பார்த்தால்தான் பரிட்சை பேப்பர் கடினமா இருக்குறது ஆரோக்யமான விஷயம்னு புரியுது....யோசிக்க வேண்டியவங்க என்னைக்கு யோசிக்கப் போறாங்களோ!
//அட போப்பா போ..இப்ப தான் என் பையனுக்கு capillary tubes,alveoli ன்னு நான் மண்டை குடைஞ்சு படிச்சதை கஷ்டப்பட்டு ஞாபக படுத்தி சொல்லி கொடுத்துட்டு வரேன்:(((..இங்கே மீதேன்,ஈத்தேன் பதிவு...:((( பிரபு ஒழிக...:))) //
ReplyDeleteஹஹஹாஹா... படிக்குற காலத்துல ஒழுங்கா படிச்சிருந்தா இந்தப் பிரச்னையில்லை!!
ஹலோ சகோ நான் என்னை சொன்னேன்!! ;-)
//திருக்குறள் மனப்பாடம் கூட எதுக்குன்னு தான் சொல்வேன்...அதை சத்தியமா எத்தனை முறை படிச்சாலும் நமக்கு மீனிங் புரியபோறது இல்லை..ஆனால் அருமையான குறளின் கன்டென்ட் ஐ மட்டும் கதை போலே டீசெர்ஸ் சொல்லி கொடுக்கலாம்...
ReplyDeleteஎனக்கு தெரிஞ்சு மனப்பாட செய்யுள் எல்லாம் மார்க் கு காகவும்,கடமைக்கு பண்றது மாதிரியும் தான் தோணுது ...என்னவோ நம் generation மாதிரி இல்லாமல் இப்போ இன்னும் கொஞ்சம் நம் கல்வி அமைப்பை மாத்தலாம்..முட்டி மோதி படிக்கிற ..உருப்போடும் மாணவனுக்கு கிடைக்கும் அங்கீகாரம் மனப்பாடம் செய்ய தெரியாத ஆனால் keen observer கு கிடைக்காமல் போவதும் நம் பாட திட்டத்தின் அபத்தங்கள்... //
ஒவ்வொரு வரியும் உண்மை அக்கா....
பாடங்களை உருப்போட்டுப் படிக்கும் மாணவனுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் நிச்சியம் உற்று நோக்கிப் பயிலும் மாணவனுக்குக் கிடைக்கப் போவதே கிடையாது... அதேபோலத்தான் கையெழுத்து அழகாக இருப்பதும் தேவையே இல்லாத அத்தியாவசியம் நம்ம கல்விமுறையில்! :(
ரொம்ப நன்றி அமுதா அக்கா :)
ReplyDelete//இந்த பதிவில் நல்ல complile தெரிஞ்சது...நீட் ஸ்கிரிப்ட்...:)) introduction, concept கு வரதுக்கு முன்னாடி கன்டென்ட் பத்திய சில குறிப்புகள்...அப்டியே சுவாரஸ்யம் குறையாமல் பைனல் டச்...awesome prabu...
ReplyDeleteDirector Prabu.! It s a good Movie.....:))) //
Thank you sooooo much Sago!! :))))))
நன்றி ஸ்ரீ அண்ணா :)
ReplyDelete@ ஜீவன் பென்னி
ReplyDeleteவணக்கம் நண்பா...
உண்மைதான்.... நண்பர்கள்தான் பெஸ்ட் ஆளுக்கேற்ற மாதிரி ஷேப் பண்ணிக் கொடுப்பதில்!
முதலில் போட்ட முக்கிய அறிவிப்பு செம நக்கல் நண்பா...
ReplyDeleteஉள்ளேயும் நிறைய இடங்களில் வார்த்தைகள் விளையாடி இருக்கு...
ReplyDelete// "என்னடா நண்பா... பழைய பாட்டுல கண்ணதாசன் எழுதின மாதிரி "தேன் தேன்"னு முடியுது ஹி ஹி ஹி!" என்று சிரித்தான்... //
// பாஸ் என்கிற பாஸ்மார்க்காரன்! //
கிளைமாக்ஸ் 1 தான் அட்டகாசம்...
ReplyDeleteவணக்கம் எஸ்கா.. :)
ReplyDeleteஓ! வானாகி மண்ணாகிக்கு சினிமா ட்யூனா! இன்ட்ரஸ்டிங் பாஸ்... :)
நானும் ட்யூன் போட்டு படிச்சிருக்கேன்....படிக்கும்போது எவ்ளோ விஷயங்களை என்னன்னவோ மாதிரி ராப்பர் போட்டு மூளைக்குள்ள திணிச்சிருக்கோம் நம்ம எல்லாம்! இப்போ ஃபோன் நம்பரைக் கூட ஞாபகம் வெச்சுக்க முடியல.. :)
ஹாய் ராஜு!
ReplyDeleteபெயர் மாற்றப்படுள்ளது! அதுவா??!! ஹிஹி தினத்தந்தி கண்டுபிடிச்சு இன்றைக்கு ஜூவி வரைக்கும் இந்தக் கூத்தைத்தானே பண்ணுறாங்க அதை ஓட்டுறதுக்குதான்.... நீங்க டெய்லி தந்தி படிப்பீங்களோ! ;)
ஹாய் பிரபா..
ReplyDeleteரொம்ப நன்றி நண்பா:)
முதல் க்ளைமேக்ஸ்தான் உங்க சாய்ஸா! :)
பயபுள்ள பாஸாகிட்டுப் போகட்டுமேன்னுதான் செகண்ட்!! :)))
நன்றி நண்பா....
பிரபு உண்மையில் சிரிச்சிட்டேன்.
ReplyDeleteஎன்னன்னா...வானொலி கேட்டுக்கொண்டே பதிவு வாசிக்கிறேன்.தமிழை இலகுவாக்குங்கள்.ஞாபகத்தில் வைத்துக்கொள்ளக்கூடிய சொற்களைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் தந்திருக்கும் சொற்களையும் கொடுத்துவிடவா !
ஹஹஹாஹா :) உண்மையிலேயே செம டைமிங் அக்கா :)
ReplyDeleteகொடுங்க கொடுங்க....
தமிழன்தான் உலகம் பூரா மிதிக்கவும்,எத்தவும் படுறான்.. இப்படி வார்த்தைகளை இலகுவா படிச்சு அடுத்த தலைமுறையாவது அடிக்க வர்றவங்க பெண்டைக் கழட்டட்டும்... :-(