ஒவ்வொரு உலகக்கோப்பையின்போதும் கோப்பையை வெல்லப்போகும் அணியாக ஆலமரத்தடி கிளிஜோசியன் முதல் ஆல்-வோர்ல்டு ஆக்டோபஸ்ஸுகள் வரை ஆரூடம் சொல்லும் அணியின் பெயர் "தென்னாப்பிரிக்கா" தான்! ஆனாலும் வெல்வதற்கு முழுத்தகுதி வாய்ந்த இந்த அணி ஒருமுறைகூட இறுதிப்போட்டிவரைகூட சென்றதில்லை என்பது சோகம் மட்டுமல்ல நீண்டதொரு துரதிர்ஷ்ட வரலாறும் கூட!
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு அணியும் அதுவரையிலும் எட்டியிராத எவரெஸ்ட் உச்சமான 400 ரன்களையும் தாண்டித் தொடுவான தூரத்தில் இலக்கை பாண்டிங் நட்டுவைத்தால்... அதையும் அடுத்தகணமே வைராக்யமும் வீரமுமாய்ப் பதினோரு பேரும் துடுப்புபோட்டு கடந்து புதிய சரித்திரம் படைத்ததுக் கோப்பையுடன் திரும்பி வந்தது ஸ்மித்தின் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிதான்..... அதேசமயம்
உலகக்கோப்பை என்று வந்துவிட்டாலோ நாக்-அவுட் போட்டி வந்தவுடனே நாக்குத் தள்ளிப்போய் ஆல் அவுட் ஆகி ஒவ்வொரு முறையும் வெறும்கையுடன் திரும்பிப்போவதும் இதே தென்னாப்பிரிக்க அணிதான்!
History repeated itself again... என்று சொல்லத் தோன்றவில்லை... They had done it to themselves once again என்றுதான் சொல்லத் தோன்றியது நேற்று நியூசிலாந்துடன் தோல்வி நெருங்க நெருங்க அதிர்ச்சியில் ஆற்றாமையுடன் உதடுபிதிங்கி நின்றிருந்த கேப்டன் ஸ்மித்தைப் பார்த்தபோது!
1992ல் தொடங்கிய தன் உலகக்கோப்பை சோக வரலாறு நேற்றுவரை தொடர்ந்திருக்க வேண்டாம்தான்... ! :-(
சரி...சரி...வாங்க அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சு பாத்துட்டு வருவோம் சௌத் ஆஃப்ரிக்காவின் கடந்த காலத்து உலகக்கோப்பை செய்வினைப் பலன்களை!
1992: மழையில் கரைந்த முதல்கனவு!

1992ம் ஆண்டு உலகக்கோப்பையில் அரையிறுதியில் இங்கிலாந்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் பலமாக மோதிக் கொண்டிருந்தார்கள் கெப்ளர் வெஸ்ஸல்ஸ் தலைமியிலான தென்னாப்பிரிக்க அணி... இரண்டாவது பேட்டிங்கில் 253 (45 ஓவர் போட்டி) ரன்கள் என்னும் வெற்றி இலக்கை நோக்கி மெல்ல மெல்ல அடியெடுத்து வெற்றியை அழகாக நெருங்கிச் சென்றவர்களுக்கு ஆதரவாக மைதானத்து ரசிகர்களின் அரங்கம் அதிந்த பேரொலியில் அன்றைய இரவு வானம் மின்னல்வெட்டிக் கண்ணடித்து முன்மொழிந்த எச்சரிக்கையைக் கவனிக்கத் தவறியிருந்தார்கள்.... அந்த உலகக்கோப்பையின் ஒரிஜினல் "தொடர் நாயகன்" முக்கியப் போட்டிகளிலெல்லாம் மும்மாரிப் பொழிந்த கேப்மாரி மழைதான்!! வானிலையை உணர்ந்திருந்த இங்கிலாந்து கேப்டன் கிரகாம் கூச் தனது பவுலர்களை அறிவுறுத்தி சாதுர்யமாய் ஓவர்களை ஒருபுறம் வேகவேகமாய்க் கடத்தலானார் மறுபுறம் நம்பிக்கையுடன் களமாடிக் கொண்டிருந்த தெ.ஆ பேட்ஸ்மென் பிரைன் மேக்மிலனும், டேவ் ரிச்சர்ட்ஸனும் மழைத்துளிகள் மேலே விழுந்தபின்னர்தான் உணர்ந்தார்கள் ஸ்கோர்போர்டில் "விதி"யெழுதிய தகிடுதத்தங்களை... 43வது ஓவரில் 236 ரனகள் எடுத்திருந்தவர்களுக்கு (வெற்றிக்குத் தேவை 17 ரன்கள் 13 பந்துகளில்!) மழையால் ஆட்டம் சில நிமிடங்கள் தடைபட அப்போதைய "Best-scoring Over Method" முறைப்படி (டக்வொர்த்-லீவிஸ் முறை அப்போது தோன்றியிருக்கவில்லை!) இலக்கு அநியாயமாய்த் திருத்தப்பட்டு 1 பந்தில் 22 ரன்கள் எடுக்கவேண்டும் என்று இரக்கமின்றி அறிவித்தது சிட்னியின் பிரம்மாண்ட ஸ்கோர்போர்டு.... இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் லீவிஸ் தன் இயல்பை மீறி மெதுவான ஒரு பந்தை எளிமையாய் வீச மேக்மிலன் விரக்தியுடன் ஓடியெடுத்த ஒரு ரன்னுடன் முடிந்துபோனது உலகக்கோப்பையின் அறிமுகத்தொடரில் சாதிக்கக் காத்திருந்த தென்னாப்பிரிக்கக் கனவு!
1996: லாராவின் விஸ்வரூபமா? குரோனியின் சுயரூபமா?

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து நடத்திய வில்ஸ் உலகக்கோப்பையின் "பி" பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றிருந்த ஹான்ஸி குரோனி தலைமையிலான தென்னாப்பிரிக்கா லீக் போட்டியின் அத்தனை ஆட்டங்களையும் ஊதித்தள்ளியிருந்தது! ஐந்து லீக் போட்டி வெற்றிகளையும் சேர்த்து மொத்தம் 10 ஒருநாள் ஆட்டங்களின் தொடர்வெற்றி தந்த தன்னம்பிக்கையுடன் காலிறுதியில் கால்பதித்திருக்க, கடிமான "ஏ" பிரிவில் அடிபட்டு மிதிபட்டுக் (அதில் ஒன்று கென்யாவிடம் வாங்கியது!) காலிறுதி வந்து சேர்ந்திருந்தது ரிச்சி ரிச்சர்சனின் வெஸ்ட் இண்டீஸ்! படுத்துக்கொண்டே ஜெயிப்பார்கள் என்று ஜோதிடங்கள் கணித்திருக்க விழித்துக்கொண்ட அரக்கனாக "கரிபியன் லெஜண்ட்" லாரா அதிவேக சதமொன்றை விளாசித்தள்ள விழிபிதுங்கிப் மொத்தமாகப் படுத்தது! இருந்தாலும் பேட்டிங்கில் மீண்டெழ முயன்றார்கள்தான் ஆனால் ஆட்டம் நடந்த கராச்சி ஆடுகளம் திடீரென சுழலுக்கு இசைய ரோஜர் ஹார்ப்பரின் ஆஃப்ஸ்பின்னரில் நடந்தேறியது குரோனி தொடங்கி பால் ஆடம்ஸ் வரையிலான பேட்ஸ்மேன்களின் பெவிலியன் நோக்கி நடந்த அதிர்ச்சி அணிவகுப்பு!! பெவிலியன் தாண்டி வீடுவரை தலைகவிழ்த்து சென்றார்கள் தென்னாப்பிரிக்கர்கள் (குரோனியின் ஃபிக்ஸிங் தில்லாலங்கடிகளில் இன்றும் சந்தேகிக்கப்படும் போட்டி இது!)
1999: ஒரு ரன் ஓடியெடுக்க டொனால்டு அடித்த லூட்டி!

இங்கிலாந்தில் நடந்த இந்த உலகக்கோப்பையை நினைத்தவுடனேயே நம் அனைவருக்கும் நினைவில் கண்முன்னே தோன்றுவது ஒரு ரன் ஓடியெடுக்கத் தெரியாது ஆலன் டொனால்டு அக்கிரமம்(!)செய்த, மேலே படத்தில் இருக்கும், காட்சியாகத்தான் இருக்கும்! இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்தித்த தென்னாப்பிரிக்கா... மான் போலக் குதித்தோடிவந்து புலியாகப் பாய்ந்து பந்தை வீசும் டொனால்டின் வேகத்தில் ஸ்டீவ் வாக்கின் ஆஸியை 213 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.... அதான் நிறைய ஓவர் இருக்கே என்று காலிஸ் நிதானமாக 92 பந்துகளில் அரைசதம் அடித்துவிட்டு அவுட்டானார்... திடீரென்று முயலின் தூக்கத்தில் வேகநடை போட்ட ஆமையாக ஆஸ்திரேலியா ஓவர்களைக் கடத்திவிட, தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் முனைகளில் கடும் அழுத்தம் விக்கெட்டுகளை சரித்தது... அந்த உலகக்கோப்பையின் சூப்பர் ஸ்டார் "Zulu" என்று இன்றும் செல்லமாக அழைக்கப்படும் லான்ஸ் க்ளூஸ்னர் புயலாகத் தோன்றி 16 பந்துகளில் 32 ரன்களைக் குவித்துக் கிட்டத்தட்ட ஆஸியின் ஸ்கோரையும் விரட்டிப்பிடித்துவிட்டார்... வெற்றியைப் பதிவு செய்யத் தேவைப்பட்ட ஒரே ஒரு ரன்னைக் கடைசிபந்தில் ஓடச் சொன்னால் ஆலன் டொனால்டு பேட்டைத் தூக்கிப்போட்டுப் பதற்றத்தில் குழம்பி நடு ஆடுகளத்தில் அடித்த லூட்டிகளைக் கிரிக்கெட் உலகம் என்றும் மறக்காது!!! :))) ஆட்டம் "டை" ஆனாலும் சூப்பர் சிக்ஸ் ரவுண்டின் டேபிளில் முன்னணியில் இருந்த ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குச் செல்ல வழக்கம்போல் ஏர்போர்ட்டுக்கு பஸ் பிடித்தது தென்னாப்பிரிக்கா!!!
2003 : மீண்டும் மழை செய்த சதி...

இந்தமுறை தென்னாப்பிரிக்காவை சொந்தமண்ணிலேயே சொதப்பவைத்தது மீண்டும் அதே வலிய விதி!!!
ஹான்ஸி குரோனி மேட்ச் ஃபிக்ஸிங் பிரச்னைகளில் நிலைகுலைந்துபோன அணியை ஷான் போலாக்கின் தலைமையில் ஒருவாறாகத் தயார்செய்துக் களமிறக்கினார்கள் ஆனாலும்கூட அணியின் வலிமை குறைந்திடாது மிரட்டியதுதான் தென்னாப்பிரிக்க பலம்!!! வெஸ்ட் இண்டீஸைக் கம்பீரமாக ஹோம் க்ரௌடின் சப்போர்ட்டுடன் எதிர்கொண்ட அணிக்கு தொடரின் முதல்போட்டியிலேயே அதிர்ச்சி காத்திருந்தது காரணம் அதே லாரா... அதே செஞ்சுரி.... வெற்றி வெஸ்ட் இண்டீசுக்கு... !! அடுத்த முக்கியப் போட்டி நியூஸியுடன்.... கிப்ஸின் அதிரடி சதத்துடன் 305 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா.... ஆனாலும் தோல்விதான் ரிசல்ட்.... காரணம் பாதியில் பெய்த விடாத மழை!!! (இந்தமுறை டக்வொர்த்-லீவிஸ்!)... இலங்கையுடனான Do or die போட்டியிலும் Never say die என்று மழை மீண்டும் வந்தது.... மறுபடியும் டக்வொர்த்-லீவிஸ் கைவண்ணத்தில் ஆட்டம் "Tie" ஆனது... லீக் போட்டியிலேயே பெட்டிகட்டியது!!!
2007: எமனாக எழுந்துநின்ற ஆஸ்திரேலியா:

முதன்முறையாக கரீபிய மண்ணில் நடந்த உலகக்கோப்பையில் அசுரபலத்துடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா.... மீண்டும் ஃபிக்ஸிங் பிரச்னை.... போலாக்கின் படு பாஸிவ் அணுகுமுறை என்று சோர்வுகண்டிருந்த தென்னாப்பிரிக்காவுக்கோ திடீர் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் இளம்வீரர் ஸ்மித்!.... நமது இந்திய மீடியாக்கள் "நியூமராலஜி"தான் காரணம் என்று தெரிவிக்க.... அகில உலக கிரிக்கெட் உளவாளிகளெல்லாம், பிறப்பிலேயே பெரும் செல்வந்தரான க்ரீம் ஸ்மித் பணத்துக்கு மயங்காமல் நேர்மையாக அணியை வழிநடத்துவார் என்று அவர்களின் கிரிக்கெட் போர்டு நம்புவதாக பகிரங்கமாக எழுதினார்கள்! ஆனால் ஸ்மித்தின் கட்டுக்கோப்பான கேப்டன்ஸியில் குறையொன்றுமில்லை என்று மலையாய் எழுந்து விமர்சனங்களை வாயடைத்தார்கள் கம்பீர வெற்றிகளுடன்! ஆனால் மீண்டும் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுப்போக.... சர்வபலமும் கொண்ட ஆஸ்திரேலிய பவுலிங் அட்டாக்கில் நிலைகுலைந்து போனது தென்னாப்பிரிக்க பேட்டிங் ஆர்டர்... மெக்ராத்தும் ஷான் டெய்ட்டும் மாறி மாறி செய்த டோட்டல் டேமேஜில் பேட்டிங் ஆர்டருடன் சேர்ந்து கோப்பைக் கனவும் தகர்ந்து தவுடுபொடியானது!!!
2011 அதாவது நேற்று : நோ கமெண்ட்ஸ்!!!!!

என்னத்த சொல்லுறது????
ஆனாலும் சௌத் ஆஃப்ரிக்காவோட "ஜாதகம்" இத்தனை வாட்ஸ் பவர்ஃபுல்லா இருக்கும்னு நான் நினைக்கல.... மிகச் சாதாரண அணியாகக் கருதப்பட்ட நியூஸிலாந்து திடீரென்று எந்திரன் க்ளைமேக்ஸின் "சிட்டி"களைப் போல எக்கச்சக்க பிரமிக்கவைக்கும் ஃபார்மேஷன்களை மாற்றி மாற்றி அமைத்து மொத்தமாகக் கட்டிப்போட்டுவிட்டார்கள் திமிறும் தென்னாப்பிரிக்க பேட்டிங் லைனை!
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்பதால் டிஆர்பி மற்றும் பிற பெட்டிங் கலெக்ஷன்கள் எகிறக்கூடிய ஆசிய அணிகளின் மோதல்கள் இறுதிப் போட்டிகளில் ஊர்ஜிதமாகும் என்பதுபோன்ற காரணங்களை மையப்படுத்தி ஃபிக்ஸிங் சந்தேகங்கள் கிளப்பப்பட்டாலும் கொஞ்சம் நிதானமாக யோசித்துப்பார்த்தால் தென்னாப்பிரிக்காவின் அசாகாய வலிமை இந்த உலகக்கோப்பையில் ஜஸ்ட் ஒரு மூன்று பெயர்கள் வலுவாகக் காப்பாற்றிய ஒரு சோப்புக்குமிழ்தான் என்று புரியும்! அசைக்கமுடியாத ஹஷிம் ஆம்லா ஒரு பெருஞ்சுவர்.... நேற்று நூலிழையில் தகர்ந்தார்.... ஃபார்மில் இல்லாத ஸ்மித் ஓர் அச்சுருத்தல் இல்லவே இல்லை! அடுத்த டெரர் காலிஸ்.... ஆனால் ப்ரஷ்ஷரைத் தாங்கி ஆக்ஸலரேட் செய்யும் வயதிலும் இவர் இல்லை ஒவ்வோர் ஆண்டும் வயது குறைய இவர் பெயர் சச்சினும் இல்லை! இருப்பினும் நேற்று போட்டியிலும் அவர்களது ஃபேமஸ் துரதிர்ஷ்ட தேவதையின் திருவிளையாடல் இருக்கத்தான் செய்தது.... அது எபி டிவில்லியர்ஸின் ரன் அவுட்!!!!
சத்தியமாக நம்பமுடியவில்லை தென்னாப்பிரிக்காவின் நேற்றைய தோல்வியை....
அதே நேரம் நம்பாமல் இருக்கமுடியவில்லை தொடரும் அவர்களது துரதிர்ஷ்டப் பின்கதையை!!!
கடைசி செய்தி : இந்த உலகக்கோப்பைத் தோல்வியை அடுத்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் க்ரேம் ஸ்மித்! (வைகோ மாதிரி அடுத்த உலகக்கோப்பையில் பங்கேற்காமல் புறக்கணித்துவிடலாமோ தென்னாப்பிரிக்கா?!!)
ஓர் அரிய கண்டுபிடிப்பு!!! : 1999 உலகக்கோப்பை வெளியேற்றத்தில் முக்கியக் காரணமாகிவிட்ட ஆலன் டொனால்டுக்கு நேற்றைய வெளியேற்றத்திலும் கணிசமான பங்கு உண்டு!! காரணம்..... திடீர் எழுச்சி கண்டிருக்கும் நியூசிலாந்தின் பவுலிங்கை கோச் செய்பவர் அதே ஆலன் டொனால்ட்தான்!!!ஹிஹிஹி....
அன்புடன்,
பிரபு எம்
Pictures Courtacy: Cricinfo.com
.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு அணியும் அதுவரையிலும் எட்டியிராத எவரெஸ்ட் உச்சமான 400 ரன்களையும் தாண்டித் தொடுவான தூரத்தில் இலக்கை பாண்டிங் நட்டுவைத்தால்... அதையும் அடுத்தகணமே வைராக்யமும் வீரமுமாய்ப் பதினோரு பேரும் துடுப்புபோட்டு கடந்து புதிய சரித்திரம் படைத்ததுக் கோப்பையுடன் திரும்பி வந்தது ஸ்மித்தின் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிதான்..... அதேசமயம்
உலகக்கோப்பை என்று வந்துவிட்டாலோ நாக்-அவுட் போட்டி வந்தவுடனே நாக்குத் தள்ளிப்போய் ஆல் அவுட் ஆகி ஒவ்வொரு முறையும் வெறும்கையுடன் திரும்பிப்போவதும் இதே தென்னாப்பிரிக்க அணிதான்!
History repeated itself again... என்று சொல்லத் தோன்றவில்லை... They had done it to themselves once again என்றுதான் சொல்லத் தோன்றியது நேற்று நியூசிலாந்துடன் தோல்வி நெருங்க நெருங்க அதிர்ச்சியில் ஆற்றாமையுடன் உதடுபிதிங்கி நின்றிருந்த கேப்டன் ஸ்மித்தைப் பார்த்தபோது!
1992ல் தொடங்கிய தன் உலகக்கோப்பை சோக வரலாறு நேற்றுவரை தொடர்ந்திருக்க வேண்டாம்தான்... ! :-(
சரி...சரி...வாங்க அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சு பாத்துட்டு வருவோம் சௌத் ஆஃப்ரிக்காவின் கடந்த காலத்து உலகக்கோப்பை செய்வினைப் பலன்களை!
1992: மழையில் கரைந்த முதல்கனவு!

| மறக்கமுடியாத ஸ்கோர்போர்டு! |
1996: லாராவின் விஸ்வரூபமா? குரோனியின் சுயரூபமா?

| ரோஜர் ஹார்ப்பரின் சுழல்! |
1999: ஒரு ரன் ஓடியெடுக்க டொனால்டு அடித்த லூட்டி!

| இந்தக் காட்சியை மறக்கமுடியுமா? :-) |
இங்கிலாந்தில் நடந்த இந்த உலகக்கோப்பையை நினைத்தவுடனேயே நம் அனைவருக்கும் நினைவில் கண்முன்னே தோன்றுவது ஒரு ரன் ஓடியெடுக்கத் தெரியாது ஆலன் டொனால்டு அக்கிரமம்(!)செய்த, மேலே படத்தில் இருக்கும், காட்சியாகத்தான் இருக்கும்! இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்தித்த தென்னாப்பிரிக்கா... மான் போலக் குதித்தோடிவந்து புலியாகப் பாய்ந்து பந்தை வீசும் டொனால்டின் வேகத்தில் ஸ்டீவ் வாக்கின் ஆஸியை 213 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது.... அதான் நிறைய ஓவர் இருக்கே என்று காலிஸ் நிதானமாக 92 பந்துகளில் அரைசதம் அடித்துவிட்டு அவுட்டானார்... திடீரென்று முயலின் தூக்கத்தில் வேகநடை போட்ட ஆமையாக ஆஸ்திரேலியா ஓவர்களைக் கடத்திவிட, தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் முனைகளில் கடும் அழுத்தம் விக்கெட்டுகளை சரித்தது... அந்த உலகக்கோப்பையின் சூப்பர் ஸ்டார் "Zulu" என்று இன்றும் செல்லமாக அழைக்கப்படும் லான்ஸ் க்ளூஸ்னர் புயலாகத் தோன்றி 16 பந்துகளில் 32 ரன்களைக் குவித்துக் கிட்டத்தட்ட ஆஸியின் ஸ்கோரையும் விரட்டிப்பிடித்துவிட்டார்... வெற்றியைப் பதிவு செய்யத் தேவைப்பட்ட ஒரே ஒரு ரன்னைக் கடைசிபந்தில் ஓடச் சொன்னால் ஆலன் டொனால்டு பேட்டைத் தூக்கிப்போட்டுப் பதற்றத்தில் குழம்பி நடு ஆடுகளத்தில் அடித்த லூட்டிகளைக் கிரிக்கெட் உலகம் என்றும் மறக்காது!!! :))) ஆட்டம் "டை" ஆனாலும் சூப்பர் சிக்ஸ் ரவுண்டின் டேபிளில் முன்னணியில் இருந்த ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குச் செல்ல வழக்கம்போல் ஏர்போர்ட்டுக்கு பஸ் பிடித்தது தென்னாப்பிரிக்கா!!!
2003 : மீண்டும் மழை செய்த சதி...

| சோகம் :-( |
ஹான்ஸி குரோனி மேட்ச் ஃபிக்ஸிங் பிரச்னைகளில் நிலைகுலைந்துபோன அணியை ஷான் போலாக்கின் தலைமையில் ஒருவாறாகத் தயார்செய்துக் களமிறக்கினார்கள் ஆனாலும்கூட அணியின் வலிமை குறைந்திடாது மிரட்டியதுதான் தென்னாப்பிரிக்க பலம்!!! வெஸ்ட் இண்டீஸைக் கம்பீரமாக ஹோம் க்ரௌடின் சப்போர்ட்டுடன் எதிர்கொண்ட அணிக்கு தொடரின் முதல்போட்டியிலேயே அதிர்ச்சி காத்திருந்தது காரணம் அதே லாரா... அதே செஞ்சுரி.... வெற்றி வெஸ்ட் இண்டீசுக்கு... !! அடுத்த முக்கியப் போட்டி நியூஸியுடன்.... கிப்ஸின் அதிரடி சதத்துடன் 305 ரன்கள் சேர்த்தது தென்னாப்பிரிக்கா.... ஆனாலும் தோல்விதான் ரிசல்ட்.... காரணம் பாதியில் பெய்த விடாத மழை!!! (இந்தமுறை டக்வொர்த்-லீவிஸ்!)... இலங்கையுடனான Do or die போட்டியிலும் Never say die என்று மழை மீண்டும் வந்தது.... மறுபடியும் டக்வொர்த்-லீவிஸ் கைவண்ணத்தில் ஆட்டம் "Tie" ஆனது... லீக் போட்டியிலேயே பெட்டிகட்டியது!!!
2007: எமனாக எழுந்துநின்ற ஆஸ்திரேலியா:

| எல்லாம் முடிந்தபின்.... |
2011 அதாவது நேற்று : நோ கமெண்ட்ஸ்!!!!!

| விரக்தியின் விளிம்பில்....? |
என்னத்த சொல்லுறது????
ஆனாலும் சௌத் ஆஃப்ரிக்காவோட "ஜாதகம்" இத்தனை வாட்ஸ் பவர்ஃபுல்லா இருக்கும்னு நான் நினைக்கல.... மிகச் சாதாரண அணியாகக் கருதப்பட்ட நியூஸிலாந்து திடீரென்று எந்திரன் க்ளைமேக்ஸின் "சிட்டி"களைப் போல எக்கச்சக்க பிரமிக்கவைக்கும் ஃபார்மேஷன்களை மாற்றி மாற்றி அமைத்து மொத்தமாகக் கட்டிப்போட்டுவிட்டார்கள் திமிறும் தென்னாப்பிரிக்க பேட்டிங் லைனை!
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்பதால் டிஆர்பி மற்றும் பிற பெட்டிங் கலெக்ஷன்கள் எகிறக்கூடிய ஆசிய அணிகளின் மோதல்கள் இறுதிப் போட்டிகளில் ஊர்ஜிதமாகும் என்பதுபோன்ற காரணங்களை மையப்படுத்தி ஃபிக்ஸிங் சந்தேகங்கள் கிளப்பப்பட்டாலும் கொஞ்சம் நிதானமாக யோசித்துப்பார்த்தால் தென்னாப்பிரிக்காவின் அசாகாய வலிமை இந்த உலகக்கோப்பையில் ஜஸ்ட் ஒரு மூன்று பெயர்கள் வலுவாகக் காப்பாற்றிய ஒரு சோப்புக்குமிழ்தான் என்று புரியும்! அசைக்கமுடியாத ஹஷிம் ஆம்லா ஒரு பெருஞ்சுவர்.... நேற்று நூலிழையில் தகர்ந்தார்.... ஃபார்மில் இல்லாத ஸ்மித் ஓர் அச்சுருத்தல் இல்லவே இல்லை! அடுத்த டெரர் காலிஸ்.... ஆனால் ப்ரஷ்ஷரைத் தாங்கி ஆக்ஸலரேட் செய்யும் வயதிலும் இவர் இல்லை ஒவ்வோர் ஆண்டும் வயது குறைய இவர் பெயர் சச்சினும் இல்லை! இருப்பினும் நேற்று போட்டியிலும் அவர்களது ஃபேமஸ் துரதிர்ஷ்ட தேவதையின் திருவிளையாடல் இருக்கத்தான் செய்தது.... அது எபி டிவில்லியர்ஸின் ரன் அவுட்!!!!
சத்தியமாக நம்பமுடியவில்லை தென்னாப்பிரிக்காவின் நேற்றைய தோல்வியை....
அதே நேரம் நம்பாமல் இருக்கமுடியவில்லை தொடரும் அவர்களது துரதிர்ஷ்டப் பின்கதையை!!!
கடைசி செய்தி : இந்த உலகக்கோப்பைத் தோல்வியை அடுத்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் க்ரேம் ஸ்மித்! (வைகோ மாதிரி அடுத்த உலகக்கோப்பையில் பங்கேற்காமல் புறக்கணித்துவிடலாமோ தென்னாப்பிரிக்கா?!!)
ஓர் அரிய கண்டுபிடிப்பு!!! : 1999 உலகக்கோப்பை வெளியேற்றத்தில் முக்கியக் காரணமாகிவிட்ட ஆலன் டொனால்டுக்கு நேற்றைய வெளியேற்றத்திலும் கணிசமான பங்கு உண்டு!! காரணம்..... திடீர் எழுச்சி கண்டிருக்கும் நியூசிலாந்தின் பவுலிங்கை கோச் செய்பவர் அதே ஆலன் டொனால்ட்தான்!!!ஹிஹிஹி....
அன்புடன்,
பிரபு எம்
Pictures Courtacy: Cricinfo.com
.
உங்கள் கிரிக்கெட் பதிவுகள் தொடர்ந்து படித்து வருகிறேன். ஒவ்வொரு சம்பவங்களும் உங்கள் கோர்வையான வரிகளில் மனதில் காட்சியாய் விரிகிறது. சில நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் இன்றும் அந்த ரன் அவுட்டை நினைத்தால் தூக்கம் வருவதில்லை என்று கூறியிருக்கிறார் டொனால்ட். 'ஸூலு' குளுஸ்னருக்கு எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை :(. தென்னாப்ரிக்காவுக்கும் உலகக்கோப்பைக்கும் கெமிஸ்ட்ரி கன்னா பின்னாவென்று தறிகெட்டு வொர்க் அவுட் ஆவுது :).
ReplyDeleteஇறுதி ஆட்டம் -> இந்தியா Vs நியுசிலாந்து ??
பகிர்வுக்கு நன்றி...அடுத்த முறை என்னாகுதுன்னு பார்ப்போம்...1999 டொனால்ட் ரன் அவுட் மறக்க முடியாத நிகழ்வு...
ReplyDeleteதொடரும் தென்னாப்ரிக்கா சோகம்... என்று முற்று பெறுமோ? கோப்பையை வெல்லுமா?
ReplyDeleteஎனது வலைபூவில்: மதியோடை மதிசுதா'வின் சிறப்பு பேட்டி - விரைவில்
@ சுடுதண்ணி
ReplyDeleteமிக்க நன்றி நண்பா...
உண்மைதான் நிச்சியம் டொனால்டால் அந்த ரன்அவுட்டை மறக்கவே இயலாதுதான்!
கிட்டத்தட்ட முடிந்துவிட்ட போட்டியை தன்னந்தனியாக அபாரமாகப் போராடி இறுதிப்பந்துவரை மீட்ட ஸுலுவும் மறக்கவில்லை... இந்தியா-தென்னாப்பிரிக்கப் போட்டியின்போது கமெண்ட்ரியில் ரவிசாஸ்திரியிடம் அந்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருந்தார் அந்த நேரத்து உணர்வுகளை..!
//இறுதி ஆட்டம் -> இந்தியா Vs நியுசிலாந்து ??//
எனக்கும் கூட இந்த டவுட் இருக்கிறது நண்பா... ஆனால் இந்த உலகக்கோப்பையின் மாரல் ஆஃப் தி ஸ்டோரி எதையும் கணிக்க வேண்டாம் என்பது! ஏற்கெனவே நியூசிலாந்து தோற்றுவிடும் என்று நம்பிக்கையாகச் சொல்லி ஆஃபீஸில் செம பல்பு வாங்கியிருக்கிறேன்.... அதனால் நோ கமேண்ட்ஸ்!! ஹிஹிஹி!!
@ டக்கால்டி
ReplyDelete//பகிர்வுக்கு நன்றி...அடுத்த முறை என்னாகுதுன்னு பார்ப்போம்...1999 டொனால்ட் ரன் அவுட் மறக்க முடியாத நிகழ்வு... //
நன்றி நண்பா
//தொடரும் தென்னாப்ரிக்கா சோகம்... என்று முற்று பெறுமோ? கோப்பையை வெல்லுமா?//
ReplyDeleteஉண்மை பிரகாஷ்!
தொடர்ந்து தொடர்கதையாகிக்கொண்டுதான் இருக்கின்றது இந்த சோக வரலாறு!
நன்றி நண்பா...
ஓர் அரிய கண்டுபிடிப்பு!!! : 1999 உலகக்கோப்பை வெளியேற்றத்தில் முக்கியக் காரணமாகிவிட்ட ஆலன் டொனால்டுக்கு நேற்றைய வெளியேற்றத்திலும் கணிசமான பங்கு உண்டு!! காரணம்..... திடீர் எழுச்சி கண்டிருக்கும் நியூசிலாந்தின் பவுலிங்கை கோச் செய்பவர் அதே ஆலன் டொனால்ட்தான்!!!ஹிஹிஹி....
ReplyDelete.......டாக்டர் பிரபு M , வாழ்க!
//.....டாக்டர் பிரபு M , வாழ்க! //
ReplyDeleteகௌரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கும் அனைத்து அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தரும் ஒபாமாவின் ஒரே முக்கிய ஆலோசகருமான சித்ரா அக்காவுக்கு நன்றி!! :)))
நன்றி அக்கா.. :)
Excellent article with nice Time line. thanks
ReplyDelete@ பொன்மலர்
ReplyDeleteThank you so much :)
where from u get these snaps...!!
ReplyDeleteexcellent choice of pics...
enjoyed ur post:)
Anna post was soooo good... I missed tat 1999 wc semifinal fun na... juz now saw t in youtube.... the entire post was fantastic recap.... keep going.....
ReplyDelete