Monday, March 07, 2011

இந்தியா V அயர்லாந்து

அய‌ர்லாந்து இங்கிலாந்தை அப்செட் செய்த‌ ஆட்ட‌த்தைப் பார்த்தீர்க‌ளா? உற்சாகமற்ற‌ நேற்றைய‌ போட்டியைவிட‌ப் ப‌ல‌ம‌ட‌ங்கு வொர்த் வாட்சிங் அந்தப் போட்டி... அனுப‌வ‌ம் அதிக‌ம் இல்லாத‌ அய‌ர்லாந்தின் அந்த‌ பாஸிடிவ் கிரிக்கெட் இந்திய‌ர்க‌ளை உஷார்ப் ப‌டுத்த... மிகுந்த‌ எச்ச‌ரிக்கை உண‌ர்வுட‌ன் விளையாடி ஜ‌ஸ்ட் ஒரு வெற்றியையும்... குரூப் டேபிளில் கூடுத‌லாக‌ இர‌ண்டு பாயிண்டுக‌ளையும் தன்வசப்படுத்திக் கொண்டது இந்திய‌ அணி!

டாஸில் வென்று முத‌லில் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுக்க‌வேண்டும் என்று போட்டிக்கு இர‌ண்டு நாட்க‌ளுக்குமுன்பே மீடியாவில் அறிவித்தார் தோணி! இது என்ன‌ ஸ்ட்ராடெஜியோ புரிய‌வில்லை.... ந‌ல்ல‌வேளை டாஸில் அவ‌ரே வென்றுவிட்ட‌தால் குழ‌ப்ப‌ம் ஏற்ப‌ட‌வில்லை.... இங்கிலாந்துட‌னான‌ திடீர் வெற்றியில் எளிதில் க‌ணித்துவிட‌முடியாத‌ சூப்ப‌ர் ஃபார்மில் அய‌ர்லாந்து இருக்க‌ பவுலிங் வீக் என்று ப‌கிர‌ங்க‌மாக‌த் தெரியும் இந்திய‌ அணி முத‌லில் அய‌ர்லாந்தை ஆட‌விட்டு சேஸ் செய்வ‌துதான் சிற‌ந்தது என்பது திண்ணம்.... ஆனால் பேட்டிங்கா ஃபீல்டிங்கா என்று டாஸுக்குமுன்பே எத‌ற்கு மீடியாவில் அறிவிக்க‌ வேண்டும்? ந‌ம்ம‌ உள்துறை அமைச்ச‌ர் ஸ்டைலில் பேட்டி கொடுக்க‌ ஆர‌ம்பித்துவிட்டாரோ தோணி!

Zaheer Khan picked up a wicket in each of his first two overs
குட் ஸ்டார்ட் : ஜாகிர்கான்


ஞாயிற்றுக்கிழ‌மைக‌ளில் ம‌ட்டும் க‌ள‌மிற‌ங்கும் இந்திய‌ அணி... தூர்த‌ர்ஷ‌ன் ஞாயிற்றுக்கிழ‌மைத் திரைப்ப‌ட‌ங்க‌ள்போல‌த்தான் செய‌ல்ப‌டுகின்ற‌ன‌ர்... நேற்று ஜாகிர்கானின் ப‌வுலிங் அவ‌ர‌து ஸ்டைலில் ஸ்விங் ஆன‌து ச‌ந்தோஷ‌ம் அந்த‌ இர‌ண்டு விக்கெட்டுக‌ளும் முத‌ல் ப‌வ‌ர்ப்ளேவையும் தொட‌ர்ந்து ப‌வுலிங் ப‌வ‌ர்ப்ளேவையும் காப்பாற்றி ர‌ன்ரேட்டைக் க‌ட்டுக்குள் கொண்டுவந்தது வெற்றிக‌ர‌மாக‌....
William Porterfield's half-century was in vain
தில் ஹாஃப் செஞ்சுரி!: போர்ட்டர்ஃபீல்ட்

அய‌ர்லாந்து மிக‌வும் ப‌க்குவ‌மான‌ ஜூனிய‌ர்க‌ளாக‌ ஜொலிக்கிறார்க‌ள்... கேப்ட‌ன் போர்ட‌ர்ஃபீல்டும், நெயில் ஓ பிரைனும் போட்ட‌ பார்ட்ன‌ர்ஷிப் அத்த‌னை ஸ்டெடி! ரொம்ப‌ கூலாக‌ ப்ரெஷ்ஷ‌ரையும் இந்திய‌ ப‌வுலிங்கையும் ச‌மாளித்து ஆடினதை ர‌சிக்க‌ முடிந்த‌து....

பியுஷ் சாவ்லா அடுத்த‌ ஸ்ரீ சாந்த்தாக‌த் த‌ன்னை முற்றிலும் டீமை விட்டு தானே வில‌க்கிக் கொண்டுவிட்டார் என்றே சொல்ல‌லாம்..... ஓவ‌ருக்கு ச‌ராச‌ரியாக‌ எட்டுப் ப‌ந்துக‌ளை வீசினார்.... இர‌ண்டு அடி ந‌ட‌ந்து வ‌ந்து ரிஸ்ட் ஸ்பின் போடும் ப‌வுல‌ர் லைனைத் த‌வ‌றவிட்டுத் திரும்பத் திரும்ப வைட் வீசியது "மறுபடி போய்ப் ப‌டிச்சிட்டு வாங்க‌ டாக்ட‌ர்!" என்று விவேக் சொல்லுவ‌தை ஞாப‌க‌ப் ப‌டுத்திய‌து.... அஷ்வினுக்கு அடுத்த‌ ஆட்ட‌த்தில் வாய்ப்பு உறுதி என்றே தோன்றுகிற‌து.... அஷ்வின் ஒரு ந‌ல்ல‌ பேட்ஸ்மேனும் கூட‌!

Yuvraj Singh is mobbed by his team-mates after dismissing Kevin O'Brien
மேன் ஆஃப் தி மேட்ச்! : யுவராஜ் சிங்

யுவ்ராஜ் நேற்று ப‌ந்துவீச்சில் மிக‌ச் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட்டார் என்று சொல்ல‌லாம்.... ஒரே உல‌க‌க்கோப்பைப் போட்டியில் ஐந்து விக்கெட்டுக‌ளும், ஐம்ப‌து ர‌ன்க‌ளும் ஸ்கோர் செய்த‌ முத‌ல் ம‌ற்றும் த‌ற்போதைய‌ ஒரே வீர‌ர் என்னும் கூடுத‌ல் பெருமை மேன் ஆஃப் தி மேட்ச் யுவ்ராஜுக்கு இன்னுமொரு த‌ன்ன‌ம்பிக்கை பூஸ்ட‌ராக‌ இருக்கும் என்ப‌து ந‌ல்ல‌ விஷ‌ய‌ம்...

பொதுவாக‌ உல‌க‌க்கோப்பைப் போட்டிகளில் லீக் மேட்சுகளில் விளையாடும்போது, தொட‌ரில் க‌ல‌ந்துகொள்ளும் ஒவ்வொரு அணிக்கும் ஸ்ட்ராங்காக எச்சரிக்கை விடுக்கும்படியாக அமைய‌ வேண்டும் ஒரு வெற்றிக‌ர‌மான‌ அணியின் செய‌ல்பாடு! அந்த‌ வ‌கையில் பார்த்த‌போது நேற்று இந்தியா ஒரு சொற்ப‌ டோட்ட‌லை சேஸ் செய்து ஒரு வெற்றியைப் ப‌திவு செய்த‌தே த‌விர‌ த‌ன்னுடைய‌ டாமினென்ஸைக் கொஞ்ச‌மும் பிர‌யோகிக்க‌வில்லை ந‌ல்ல‌ வாய்ப்பிருந்தும் கூட!.... பெங்க‌ளூரு ஆடுகளத்தின் ச‌ர்ஃபேஸும், அய‌ர்லாந்தின் டிஸிப்ளிண்ட் ப‌வுலிங்கும் இத‌ற்கு முக்கிய‌க் கார‌ண‌ம் என்று சொல்லுகிறீர்க‌ளா? நேற்று ர‌வி சாஸ்திரியும் ச‌ஞ்ச‌ய் ம‌ஞ்ச்ரேக்க‌ரும் கூட‌ இதையேதான் சொன்னார்க‌ள்.... அப்ப‌டியானால் நேற்று கூடுத‌லாக‌ அய‌ர்லாந்து இன்னும் ஐம்ப‌து ர‌ன்க‌ள் எடுத்திருக்கும் ப‌ட்ச‌த்தில் இந்தியா தோல்வி அடைந்திருக்கும்.... அப்போதும் ச‌ர்ஃபேஸையும் க‌ண்டிஷ‌னையும் கார‌ண‌மாக‌ச் சொன்னால் ஏற்க‌ முடியுமா?!

யூசுஃப் ப‌தான்.... அல‌ட்சிய‌மாக‌ அடித்த‌ இர‌ண்டு சிக்ஸ‌ர்க‌ளும் ஒரு ப‌வுண்ட‌ரியும், தோணியின் விக்கெட்டை வீழ்த்தி ப்ரெஷ்ஷ‌ரை அதிக‌ப்ப‌டுத்திய‌ அதே ஓவரிலேயே, வெற்றியை உறுதிப்ப‌டுத்திய‌து ம‌ட்டுமே நேற்று இந்திய‌ ஆளுமையின் ஒரே அத்தாட்சி! யுவ‌ராஜின் பேட்டிங் நிலைமைக்கு ஏற்ற‌வாறு ப‌க்குவ‌மாக‌ வெளிப்ப‌ட்ட‌து.... தோணி ப்ரெஷ்ஷ‌ரைத் தோளில் தாங்க முன்வ‌ந்து நிதான‌மாக‌ வெற்றிக்கு வித்திட்டார் 34 ர‌ன்க‌ள் சேர்த்து... விராட் கோஹ்லியின் பேட்டிங்தான் இப்போதைய‌ ஃபேவ‌ரைட்டாக‌த் தொட‌ர்கிற‌து... எல்லா போட்டியிலும் க‌ன்ஸிஸ்டெண்டாக‌த் திற‌மையாக‌ ஒரு எண்டில் உறுதி ப‌டைத்து நிற்ப‌து இவ‌ரை ந‌ம்பிக்கை ந‌ட்ச‌த்திர‌மாக‌ப் பார்க்க‌வைக்கிற‌து... ச‌ச்சின் முக்கிய‌மான‌ நேர‌த்தில் க‌வ‌ன‌த்தை இழ‌ந்து விக்கெட்டைப் ப‌றிகொடுத்தார்... சேவ‌க்கின் விக்கெட் துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மான‌து.... க‌ம்பீர் .. ஸாரி பாஸ்!

இன்னும் இந்திய‌ அணியிட‌ம் எதிர்பார்க்க‌ப்ப‌டும் எழுச்சி ஏற்ப‌ட்ட‌பாடில்லை.... இந்த‌ டீமை வைத்துக்கொண்டு கோப்பைக்கான‌ ஃபேவ‌ரைட் அணியாக‌ முழு ம‌ன‌துட‌ன் யாரும் இந்தியாவைப் ப‌ரிந்துரைத்திட‌ முடியாத‌ சூழ‌லில் இனிமேல் திற‌மையை ந‌ம்பிப் ப‌ல‌னில்லை.... 2003 உல‌க‌க்கோப்பையில் நிக‌ழ்ந்த‌தைப் போல‌ ஒரு திடீர் எழுச்சியும், குழு முய‌ற்சியும் அடுத்த‌டுத்த‌ போட்டிக‌ளில் ப‌ளிச்சிட்டால் ம‌ட்டுமே இந்தியாவின் ந‌ம்பிக்கை த‌ப்பிக்கும்.... தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிக‌ளுட‌னான‌ போட்டியைத் தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.....!

இந்தியா V அய‌ர்லாந்து : ஒரு சாதாரண‌ வெற்றி....

அன்புட‌ன்,

பிர‌பு எம்

18 comments:

  1. னேர்மையான பகிர்வு.... பார்க்கலாம்...(இப்படி நம்பி நம்பியே நம்ம பொழப்பு ஓடுதுங்க)

    ReplyDelete
  2. வாவ்...அவ்வளவு அழகாய்...விளக்கமாய் ...வெகு நடுநிலையாய் ..நேற்றைய போட்டி பற்றிய விளக்கம்...மிக்க அருமை சகோ..

    ReplyDelete
  3. நான் முன்னாடியே சொன்னேன்...எந்த அணிகளை பற்றியும் எந்த ஆருடமும் சொல்லவே முடியாதுன்னு...இந்தியாவை உசுப்பேத்தி விட்டு தான் ரணகளமாகி கிடக்காங்கலானு தெரியலை...:)) இப்ப வரைக்கும் எந்த ட்விஸ்ட் ம் காணோம்....ஏதோ லோக்கல் கவுண்டி மேட்ச் விளையாடும் கோதா மட்டுமே தெரிஞ்சது நம்ம பசங்ககிட்டே...

    ReplyDelete
  4. பட் யுவராஜ் பட்டையை கிளப்பிங்..:)) போன மேட்ச் இல் பிப்டி போட்ட பிறகு ஸ்டேடியம் இல் இருந்த தீபிகா படுகோனே பார்த்து தான் மட்டையை சந்தோஷமா உயர்த்தி காமிச்சதாய் படிச்சேன் நாளிதழில்( அப்படியா பிரபு) பட் மல்லையா பையனுடன் இருந்த :)) தீபிகா பாப்பா அதை கண்டுக்கவே இல்லைன்னு படிச்சேன்...நேத்தும் எதுவும் தீபுகுட்டி இருந்ததா...பையன் செம கலக்கல் பார்ம் மில் இருந்தானே...:))))

    ReplyDelete
  5. பதான் அடிச்ச அந்த சிக்ஸர் ஸ் மட்டுமே ஆட்டத்தின் போக்கை மாற்றியதுன்னு தான் சொல்லலாம்...ஒரு கட்டத்தில் நான் இந்தியா தோற்க்க கூட சான்ஸ் இருக்குனு கூட நினைச்சேன்...அந்த யூசுப் பதான் அதிரடி சிக்ஸர் ஸ் மட்டுமே டென்ஷன் ஐ குறைச்சதுங்கிறது உண்மை...

    ReplyDelete
  6. பட் அந்த பக்கம் சவுத் ஆப்ரிக்கா தோத்து போனதில் கொஞ்சம் வருத்தம்...:(( பட் நீ சொன்ன இந்த review ரொம்ப பக்காவா இருந்தது பிரபு...இன்னைக்கு ரிலீஸ் பண்ணிய நேற்றைய கிரிக்கெட் ஆட்டத்தை பற்றிய பதிவுகளில் உன் பதிவு தான் பெஸ்ட் அண்ட் பெஸ்ட் பிரபு....:)) அசத்து வழக்கம்போலே...

    ReplyDelete
  7. பிரபு...அமர்க்களம் விமர்சனம்.இப்போதும் கென்ய அணியின் விளையாட்டோடு வானொலியில் இணைந்திருக்கிறேன் !

    ReplyDelete
  8. இந்தியா V அய‌ர்லாந்து : ஒரு சாதாரண‌ வெற்றி....


    ...இது சாதாரண பதிவு இல்லை. சூப்பர் பதிவு!

    ReplyDelete
  9. நல்லா அடிச்சு ஆடுறியே மாப்ள.

    ReplyDelete
  10. என்னுடைய கருத்துக்கள் . டோனி பீல்டிங் செய்ததற்கு ஒரே ஒரு காரணம்தான். லீக் போட்டிகள் நடக்கும் பொழுதுதான் சோதனை செய்யமுடியும். அதை செய்து பார்த்தார். சேசிங் இனி அவர் எடுக்கமாட்டார்.

    ReplyDelete
  11. அடுத்து இந்த பிட்ச் பழைய மேட்ச்கள் நடைபெற்ற அதே பிட்சாக இருந்தாலும், பந்தை அடித்து ஆடுவது அவ்வளவு எளிதாக இல்லை. அதுவும் அயர்லாந்தின் அபாரமான பீல்டிங் வேற.

    இந்தியா V அய‌ர்லாந்து : ஒரு சாதாரண‌ வெற்றி.... இதுவே போதுமானது

    ReplyDelete
  12. @ எல் கே

    வணக்கம் எல் கே...
    தோணி ஃபீல்டிங் தேர்வு செய்தது பிழை என்று நான் சொல்லவில்லை... புத்திசாலித்தனம்தான்...
    டாஸில் வென்றால் ஃபீல்டிங் தேர்வு செய்யப்போகும் தன் முடிவைப் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மீடியாவில் அவர் அறிவித்ததைத்தான் நான் இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்... :-)


    //அடுத்து இந்த பிட்ச் பழைய மேட்ச்கள் நடைபெற்ற அதே பிட்சாக இருந்தாலும், பந்தை அடித்து ஆடுவது அவ்வளவு எளிதாக இல்லை. அதுவும் அயர்லாந்தின் அபாரமான பீல்டிங் வேற.//

    இது உண்மை ந‌ண்பா.... பிட்ச் ஸ்லோதான் தோணி எதிர்பார்த்த‌தைப்போல‌ அல்லாம‌ல் Under the lights Ball was not coming on to the bat so nicely.. என்னுடைய ஆதங்கம் ஓர் ஆளுமையுடன் கூடிய ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தாததன் ஏமாற்றமே.... இன்னும் உலகக்கோப்பைக்கான எழுச்சி நம்ம அணியிடம் காணப்படவில்லை... பவுலிங் வீக்னெஸ் நிதர்சனமாகத் தெரிவதைப் போல பேட்டிங் வலிமையையும் ஆதர்சமாக அறிவிக்க வேண்டும் மற்ற அணிகள் அச்சத்துடன் நம்மை அணுக....

    ReplyDelete
  13. @ கருணாகரசு

    ரொம்ப நன்றிங்க :)
    நம்பிக்கையுடனே இருப்போம்!! :)

    ReplyDelete
  14. @ ஆனந்தி அக்கா

    //வாவ்...அவ்வளவு அழகாய்...விளக்கமாய் ...வெகு நடுநிலையாய் ..நேற்றைய போட்டி பற்றிய விளக்கம்...மிக்க அருமை சகோ..//

    ரொம்ப நன்றி சகோ! :)

    //நான் முன்னாடியே சொன்னேன்...எந்த அணிகளை பற்றியும் எந்த ஆருடமும் சொல்லவே முடியாதுன்னு...//

    ரொம்ப கரெக்ட்.... அப்படியே ஏற்கிறேன்.. :)

    //நேத்தும் எதுவும் தீபுகுட்டி இருந்ததா...பையன் செம கலக்கல் பார்ம் மில் இருந்தானே...:)))) //

    இப்போதான் அவரே தொழிலில் கவனத்தோட கம்பேக் ஆகி வந்திருக்கிறாரு... இதுல இப்படி ஒரு பிரச்னையை வேற கிளப்பணுமா சகோ!!! ஹஹஹா...


    //பட் அந்த பக்கம் சவுத் ஆப்ரிக்கா தோத்து போனதில் கொஞ்சம் வருத்தம்...:(( //

    ஹ்ம்ம்... தெரியும் நேத்து தெஆ தோத்துப்போன‌ப்போ முத‌லில் உங்க‌ளைத்தான் நெனெச்சேன்!
    ஆக்சுவ‌லி சௌத் ஆஃப்ரிக்காவின் அதிர்ச்சித் தோல்வி இந்தியாவுக்கு சாத‌கமான‌து ச‌கோ!! குரூப் டேபிள்ல‌ ந‌ம்ம‌ டாப்ல‌ இருந்தாதான் க்வாட்ட‌ர் ஃபைன‌லில் ந‌ம‌க்கு நியூசிலாந்து கிடைப்பாங்க‌ கொஞ்ச‌ம் ந‌ம்பிக்கையுட‌ன் மோதுற‌துக்கு!! :)))

    ReplyDelete
  15. @ ஹேமா அக்கா....

    ரொம்ப நன்றி அக்கா.. :)
    வாவ்... அருமை அக்கா.... வானொலியுடன் உங்களுடைய‌ கிரிக்கெட் ஸ்நேகம்.... உங்க ஃபேவரைட் டீம் எதுக்கா இந்த உலகக்கோப்பையில்?

    ReplyDelete
  16. @ சித்ரா அக்கா....

    ரொம்ப ரொமப நன்றி அக்கா... :)

    ReplyDelete
  17. @ ஜெரி மாமா...

    // நல்லா அடிச்சு ஆடுறியே மாப்ள.//

    ரொம்ப ரொம்ப நன்றி மாமா... :)

    ReplyDelete
  18. Anonymous11:58 AM

    உங்கள் பதிவு 'சிக்ஸர்'

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)