அரங்கு நிறைந்த மைதானத்தில் ஆட்டம் நடக்க... அரவமற்ற மௌனத்துடன் ரசிகர்கள் அமர்ந்திருந்த கணங்கள் துணைக்கண்டக் கிரிக்கெட்டுக்குப் புதிது... என்றாலும் எப்படியோ அடங்காத ஆரவாரமாய் ஓர் அதிரடி வெற்றியின் ஆர்ப்பரிப்புடன்தான் ஆட்டம் முடிந்தது இன்று....இருந்தாலும் இனிதான் ஆட்டம் ஆரம்பம்..!! அடுத்ததே ஆஸ்திரேலியாவுடன் அடுபுலியாட்டம்.... அதிரடி வியாழன் அகமதாபாதில்!!!! :) கெட் ரெடி தோணி பாய்ஸ்... கேம் ஸ்டார்ட்டட்!!! :-)))
வெஸ்ட் இண்டீஸைப் பொறுத்தவரை.... அவர்களது முந்தைய இங்கிலாந்து போட்டியில் ஆயிரம்.. இரண்டாயிரம்... நாலாயிரம்... பத்தாயிரம்... என்று ஏகத்துக்க்கும் பில்ட்-அப் ஏற்றி இங்கிலாந்துக்குக் கிட்டத்தட்ட ரிட்டர்ன் டிக்கெட் புக் பண்ணிவிட்டுக் கடைசியில், சந்தடி சாக்கில் நாக்-அவுட் ரவுண்டில் நுழையத் தயாரான வங்கதேசத்துக்கு மொத்தமாக "மாமா பிஸ்கோத்து!!!!!" என்று ஆப்பு வைத்த போட்டியைப் பார்த்தபோதே தெரிந்துவிட்டது இந்தியாவுக்குச் சென்னையில் நல்லவொரு தொண்ணை டீம் காத்திருக்கிறது வெற்றியுடன் காலிறுதி க்ளாஷைத் துவங்க என்று!!! எதிர்பார்ப்புப் பொய்க்காததில் அவர்களுக்கே ஏமாற்றம் இல்லைபோல.. :-)))
"சேவக் இல்லையாமே!!!!" எப்புறமும் இதே அதிர்ச்சிதான் ஆட்டம் ஆரம்பிக்குமுன்பு... ஆனாலும் 'வைடு' வீசி இந்தியாவின் முதல் பந்து பவுண்டரி செண்டிமெண்டைத் தொடர்ந்தார் வெஸ்ட் இண்டீஸின் ராம்பால்!!! முதல்பந்து விக்கெட் கீப்பரைக் காம்ப்ளான் குடித்துக் வளரச் சொல்லிவிட்டு அந்தரத்தில் எகிறி பவுண்டரி தொட்டது! ஆனால் அதே ராம்பால் அசந்த நேரத்தில் அதே பவுன்சர் அஸ்திரத்தை மிகச்சரியாகப் பிரயோகிக்க இன்று எழுமுன்னே அடங்கிப்போனது பேட்டிங் பிரவாகம்.... சச்சின் அவுட்!! பவுலர் வீசப்போகும் அடுத்த பந்தையே கிட்டத்தட்டத் துல்லியமாய்க் கணித்துவிடும் ஜீனியஸ் இன்று எதிர்பாராத இந்தப் பவுன்ஸரை சமாளிக்க எடுத்து நின்ற ஆக்வார்ட் பொஸிஷன் (Awkward position), அம்பெயர் அவுட் கொடுக்காவிட்டாலும் நடையைக் கட்டிய நேர்மையைக் கூட சிலாகிக்க முடியாதபடி, அதிர்ச்சியில் ஆழ்த்தியது....
அதன்பின் ஆட்டம் மொத்தத்துக்கும் ஆர்க்கிடெக்டுகளாக அஸ்திவாரம் அமைத்துக் கட்டியெழுப்பியது இந்திய அணியின் இப்போதைய கன்ஸிஸ்டன்ட் கணபதிகள் யுவ்ராஜும் - கோஹ்லியும்தான்!! யுவ்ராஜின் சதம் இன்று பொறுமையும் சாதுர்யமும் கலந்து வெளிப்பட்ட அனுபவ ஆட்டமாய் மின்னியது.... கோஹ்லியின் அரைசதம்... ஸாரி கோஹ்லி உங்களைப் பாராட்டிப் பாராட்டி போர் அடிச்சுப்போச்சு! :-)))) பட் விடாதீங்க.. தொடர்ந்து கலக்குங்க... அடுத்த தலைமுறை கேப்டன் வேட்பாளரே அணியில் நீங்கதான்னு இப்பவே பேச்சு அடிபட ஆரம்பிச்சுடுச்சு.. இதே ஃபார்முல நிறைய ரவுண்டு வாங்க பாஸ்!!
இப்பொழுது நாம் பெருமை பேசுகிறோமே அசாத்தியமான பேட்டிங் ஆர்டர் என்று... அதுபோலத்தான் அசாதாரண பேட்டிங் லைன்-அப் ஒன்றை வைத்திருந்தது 1996-97 சமயங்களில் தென்னாப்பிரிக்கா அணி.... ஹான்ஸி குரோனியே தலைமையில் பலமுறை தோல்விகளை ஃபிக்ஸ் பண்ணி விளையாடிய துரதிர்ஷ்டக் காலகட்டத்தில் கூட அந்த அணி "ஆல் அவுட்" ஆனது அந்த வருடத்தில் ஒரே ஒருமுறைதான்!! (டைட்டன் கப் ஃபைனல் V இந்தியா) 96ஆம் வருடம் அவர்களின் கடைசி பேட்ஸ்மேன் ஆலன் டொனால்டு பேட்டைப் பிடித்த ஒரே போட்டி அந்த ஃபைனல் போட்டிதான் என்று பெருமையுடன் ஸ்லைடு போட்டார்கள் ஈ.எஸ்.பி.என்னில்!! எனவே மிரட்டுகிற பெயர்களையெல்லாம் வரிசையாக எழுதிவைத்தால் பேட்டிங் ஆர்டர் பலம்பெற்றுவிடாது... பதற்றமான இறுதி ஓவர்களில் இப்படிக் கொத்தாக சரிந்துவிடுகிற வரையில் நமது பேட்டிங் ஆர்டரைப் பற்றிப் பெருமை பேசிப் பலனில்லை என்பதுதான் திண்ணம்....
யூசுஃப் பதான் - ஸாரி -சொதப்பல்தான் பாஸ் நீங்க இதுவரைக்கும் :-((
ரெய்னா - கிடைச்ச வாய்ப்பை இப்படிக் கோட்டை விட்டுட்டீங்களே தல??!!
ராம்பாலின் ரிவர்ஸ் ஸ்விங்கை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஸம்மி இன்று கவனித்திருப்பார்.... பலரையும் கவனிக்க வைத்ததும் நிஜமே.... குட் பவுலிங் ராம்பால்!! "பச்சமண்ணு" பிஷுவின் சுழலும், அடிபட்டாலும் சிலிர்த்துக் கொண்டு எழமுனையும் தன்னம்பிக்கையும் இன்றைய போட்டியில் மிகவும் ருசிகரம்! வெஸ்ட் இண்டீஸைப் பற்றிப் பேச ஆர்வம் அறவே இல்லை.... பாகிஸ்தானைக் காலிறுதியில் வீழ்த்திக் காட்டட்டும் பிறகு பேசலாம்...!! ஒருநாள் கிரிக்கெட்டின் பிதாமகர்களெல்லாம் கோலொச்சியப் பாரம்பரியத்தில் இத்தனை அலட்சியமான வீரர்களைப் பார்த்தால் பற்றிக் கொண்டுதான் வருகிறது.... உலகக் கிரிக்கெட்டின் "ஜெண்டில் மென் அணி" யென்று பெயரெடுத்த அணியிது... ஆனால் இன்று யுவ்ராஜைக் குறிவைத்து அவ்வப்போது பொல்லார்டு விட்ட "லுக்"குகள் எல்லாம் அவரின் முதிர்ச்சியின்மையைத்தான் காட்டியது..... அவர்கள் தேசத்து ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் உட்படப் பலரால் தொடர்ந்து சபிக்கப் பட்டுவரும் பொல்லார்டு விளையாட்டில் ஆக்ரோஷம் காட்டினால்தான் உருப்படுவதற்கு வழிவகுக்கும்!
டிவோன் ஸ்மித்தின் நிதான ஆட்டமும், டேர்ரன் ப்ராவோவின் டைமிங் ஷார்ட்டுகளும் சமயத்தில் லாராவின் நகல்களாய் ஜொலித்தாலும் இவர்கள் முழுமையான பேட்ஸ்மேன்களாக உருவெடுக்க இன்னும் பலகல்தூரம் இருப்பதே நிஜம்.....
வெல்கம் அஷ்வின்..... ஆட்டத்தின் முதல் ஓவரை வீசியபோதே ஆட்டத்தைத் தன் ஆளுமைக்கு உட்படுத்த முடிந்தது இந்த இளம் தமிழனால்.... ரிவ்யூ கேட்டு வாங்கிய சூப்பர் "கேரம் பால்" எல்.பி.டபுள் யூவுக்கு சேப்பாக்கமே அதிர்ந்தது.... கடைசி பந்தில் க்ளீண் போல்டுடன் ஸ்டைலாக ஆட்டத்தையும் முடித்துக் கிளம்பிய அஷ்வினைத் தட்டிக் கொடுத்து மகிழ்ந்த தோணியிடம் ஒரே கேள்வி, "இத்தனை நாள் அஷ்வினுக்கு வாய்ப்புத் தராமல் நீங்கள் சாதித்ததுதான் என்ன??" இந்தக் கேள்வி தோணியின் வீழ்ச்சிக் காரணிகளில் பிரதானமான குற்றச்சாட்டாக நிலைத்திருக்கும் என்பது உறுதி.... தொடர்ந்து அஷ்வின் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எழுச்சி கண்டிருக்கும் ஜாஹிருடன் பவுலிங் ஏரியா கொஞ்சம் தேறும்.... இருந்தாலும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!!
திடீரென்று பாகிஸ்தானிடம் தோற்று பாண்டிங் தலைமையிலான ஆஸி உலகக்கோப்பையில் தன் விடாத வெற்றிப் பயணத்தை (34 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி!)சொற்பமாய்த் தவறவிட்டுவிட எதிர்பாராத ட்விஸ்டாக ஆஸ்திரேலியாவைக் காலிறுதியில் சந்திக்க வேண்டிய கடும் சவால் நமக்கு.... சாதிப்பார்களா நம்ம மென் இன் ப்ளூ?? நம்பிக்கையில்லை என்பதுதான் கசப்பான உண்மை.... :-((((
இனிமேல் நடக்கும் போட்டிகளில் திறமை ஒரு காரணியாக இருக்கப்போவதில்லை.... தன்னம்பிக்கையுடன் கூடிய துடிப்பும், சமயோசிதத்துடன் கூடிய எழுச்சியும்தான் கோப்பையை வசப்படுத்தும்.... எட்டு அணிகளுக்கும் சம வாய்ப்பு இருப்பதாகவே நம்புவோம்.....
உலகக்கோப்பை 2011 - கோடை சூட்டை மிஞ்சப்போகும் கோப்பை ஜுரம் இனிதான் ஆரம்பம்... ரெடி.. ஸ்டார்ட்!!! :-))
Pictures Courtacy: Cricinfo.com
அன்புடன்,
பிரபு எம்
வெஸ்ட் இண்டீஸைப் பொறுத்தவரை.... அவர்களது முந்தைய இங்கிலாந்து போட்டியில் ஆயிரம்.. இரண்டாயிரம்... நாலாயிரம்... பத்தாயிரம்... என்று ஏகத்துக்க்கும் பில்ட்-அப் ஏற்றி இங்கிலாந்துக்குக் கிட்டத்தட்ட ரிட்டர்ன் டிக்கெட் புக் பண்ணிவிட்டுக் கடைசியில், சந்தடி சாக்கில் நாக்-அவுட் ரவுண்டில் நுழையத் தயாரான வங்கதேசத்துக்கு மொத்தமாக "மாமா பிஸ்கோத்து!!!!!" என்று ஆப்பு வைத்த போட்டியைப் பார்த்தபோதே தெரிந்துவிட்டது இந்தியாவுக்குச் சென்னையில் நல்லவொரு தொண்ணை டீம் காத்திருக்கிறது வெற்றியுடன் காலிறுதி க்ளாஷைத் துவங்க என்று!!! எதிர்பார்ப்புப் பொய்க்காததில் அவர்களுக்கே ஏமாற்றம் இல்லைபோல.. :-)))
![]() |
| சச்சின் அவுட் : டெரர் பவுலிங் ராம்பால்! |
![]() |
| ஆட்டநாயகன்!! : யுவ்ராஜ் சிங் |
அதன்பின் ஆட்டம் மொத்தத்துக்கும் ஆர்க்கிடெக்டுகளாக அஸ்திவாரம் அமைத்துக் கட்டியெழுப்பியது இந்திய அணியின் இப்போதைய கன்ஸிஸ்டன்ட் கணபதிகள் யுவ்ராஜும் - கோஹ்லியும்தான்!! யுவ்ராஜின் சதம் இன்று பொறுமையும் சாதுர்யமும் கலந்து வெளிப்பட்ட அனுபவ ஆட்டமாய் மின்னியது.... கோஹ்லியின் அரைசதம்... ஸாரி கோஹ்லி உங்களைப் பாராட்டிப் பாராட்டி போர் அடிச்சுப்போச்சு! :-)))) பட் விடாதீங்க.. தொடர்ந்து கலக்குங்க... அடுத்த தலைமுறை கேப்டன் வேட்பாளரே அணியில் நீங்கதான்னு இப்பவே பேச்சு அடிபட ஆரம்பிச்சுடுச்சு.. இதே ஃபார்முல நிறைய ரவுண்டு வாங்க பாஸ்!!
இப்பொழுது நாம் பெருமை பேசுகிறோமே அசாத்தியமான பேட்டிங் ஆர்டர் என்று... அதுபோலத்தான் அசாதாரண பேட்டிங் லைன்-அப் ஒன்றை வைத்திருந்தது 1996-97 சமயங்களில் தென்னாப்பிரிக்கா அணி.... ஹான்ஸி குரோனியே தலைமையில் பலமுறை தோல்விகளை ஃபிக்ஸ் பண்ணி விளையாடிய துரதிர்ஷ்டக் காலகட்டத்தில் கூட அந்த அணி "ஆல் அவுட்" ஆனது அந்த வருடத்தில் ஒரே ஒருமுறைதான்!! (டைட்டன் கப் ஃபைனல் V இந்தியா) 96ஆம் வருடம் அவர்களின் கடைசி பேட்ஸ்மேன் ஆலன் டொனால்டு பேட்டைப் பிடித்த ஒரே போட்டி அந்த ஃபைனல் போட்டிதான் என்று பெருமையுடன் ஸ்லைடு போட்டார்கள் ஈ.எஸ்.பி.என்னில்!! எனவே மிரட்டுகிற பெயர்களையெல்லாம் வரிசையாக எழுதிவைத்தால் பேட்டிங் ஆர்டர் பலம்பெற்றுவிடாது... பதற்றமான இறுதி ஓவர்களில் இப்படிக் கொத்தாக சரிந்துவிடுகிற வரையில் நமது பேட்டிங் ஆர்டரைப் பற்றிப் பெருமை பேசிப் பலனில்லை என்பதுதான் திண்ணம்....
யூசுஃப் பதான் - ஸாரி -சொதப்பல்தான் பாஸ் நீங்க இதுவரைக்கும் :-((
ரெய்னா - கிடைச்ச வாய்ப்பை இப்படிக் கோட்டை விட்டுட்டீங்களே தல??!!
![]() |
| ஓவர் ஸீன் உடம்புக்கு ஆகாது!! : கீரான் பொல்லார்ட் |
ராம்பாலின் ரிவர்ஸ் ஸ்விங்கை வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஸம்மி இன்று கவனித்திருப்பார்.... பலரையும் கவனிக்க வைத்ததும் நிஜமே.... குட் பவுலிங் ராம்பால்!! "பச்சமண்ணு" பிஷுவின் சுழலும், அடிபட்டாலும் சிலிர்த்துக் கொண்டு எழமுனையும் தன்னம்பிக்கையும் இன்றைய போட்டியில் மிகவும் ருசிகரம்! வெஸ்ட் இண்டீஸைப் பற்றிப் பேச ஆர்வம் அறவே இல்லை.... பாகிஸ்தானைக் காலிறுதியில் வீழ்த்திக் காட்டட்டும் பிறகு பேசலாம்...!! ஒருநாள் கிரிக்கெட்டின் பிதாமகர்களெல்லாம் கோலொச்சியப் பாரம்பரியத்தில் இத்தனை அலட்சியமான வீரர்களைப் பார்த்தால் பற்றிக் கொண்டுதான் வருகிறது.... உலகக் கிரிக்கெட்டின் "ஜெண்டில் மென் அணி" யென்று பெயரெடுத்த அணியிது... ஆனால் இன்று யுவ்ராஜைக் குறிவைத்து அவ்வப்போது பொல்லார்டு விட்ட "லுக்"குகள் எல்லாம் அவரின் முதிர்ச்சியின்மையைத்தான் காட்டியது..... அவர்கள் தேசத்து ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் உட்படப் பலரால் தொடர்ந்து சபிக்கப் பட்டுவரும் பொல்லார்டு விளையாட்டில் ஆக்ரோஷம் காட்டினால்தான் உருப்படுவதற்கு வழிவகுக்கும்!
![]() |
| வெல்டன் ராம்பால் : 51/5 |
டிவோன் ஸ்மித்தின் நிதான ஆட்டமும், டேர்ரன் ப்ராவோவின் டைமிங் ஷார்ட்டுகளும் சமயத்தில் லாராவின் நகல்களாய் ஜொலித்தாலும் இவர்கள் முழுமையான பேட்ஸ்மேன்களாக உருவெடுக்க இன்னும் பலகல்தூரம் இருப்பதே நிஜம்.....
![]() |
| வெல்கம் அஷ்வின்!! |
திடீரென்று பாகிஸ்தானிடம் தோற்று பாண்டிங் தலைமையிலான ஆஸி உலகக்கோப்பையில் தன் விடாத வெற்றிப் பயணத்தை (34 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி!)சொற்பமாய்த் தவறவிட்டுவிட எதிர்பாராத ட்விஸ்டாக ஆஸ்திரேலியாவைக் காலிறுதியில் சந்திக்க வேண்டிய கடும் சவால் நமக்கு.... சாதிப்பார்களா நம்ம மென் இன் ப்ளூ?? நம்பிக்கையில்லை என்பதுதான் கசப்பான உண்மை.... :-((((
இனிமேல் நடக்கும் போட்டிகளில் திறமை ஒரு காரணியாக இருக்கப்போவதில்லை.... தன்னம்பிக்கையுடன் கூடிய துடிப்பும், சமயோசிதத்துடன் கூடிய எழுச்சியும்தான் கோப்பையை வசப்படுத்தும்.... எட்டு அணிகளுக்கும் சம வாய்ப்பு இருப்பதாகவே நம்புவோம்.....
உலகக்கோப்பை 2011 - கோடை சூட்டை மிஞ்சப்போகும் கோப்பை ஜுரம் இனிதான் ஆரம்பம்... ரெடி.. ஸ்டார்ட்!!! :-))
Pictures Courtacy: Cricinfo.com
அன்புடன்,
பிரபு எம்

நல்ல விமர்சனம்....நம்பிக்கையோடு இருப்போம்...
ReplyDeleteஎனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
பாஸ் நல்ல கழல்கள் ரவுண்ட் அப். அச்வின்னை வெளியில் வைத்ததற்கு காரணம் இருக்கு,ஒரு சின்ன சர்ப்ரைஸ் எளிமென்ட் .
ReplyDelete//நம்பிக்கையில்லை என்பதுதான் கசப்பான உண்மை....
ReplyDelete:(((
எனக்கும்தான் .. சேவாக் சச்சின் இருவரும் பெரிய அடித்தளம் அமைத்து கொடுத்தால்தான் சாத்தியமாகும் ... அதுவும் கடைசி கட்டத்தில் யாராவது ஒருவர் நின்று விட வேண்டும் ... பௌலிங்கிலும் ஜாகிர் ஜொலிக்க வேண்டும் .. இதில் ஏதாவது ஒன்று சொதப்பினாலும் நடையை கட்டிவிட வேண்டியதுதான்
@ எல் கே
ReplyDeleteநன்றி பாஸ் :)
அஷ்வினை சர்ப்ரைஸ் எலிமெண்டாகப் பயன்படுத்த முனைவது நல்ல சாதுர்யம் என்பதை நிச்சியம் ஏற்கிறேன்... ஆனால் ஒட்டுமொத்த பவுலிங்கும் சோடை போய் சில உறுதியான வெற்றிகளையே நாம் இழந்த சூழ்நிலையிலும் நல்ல பவுலர் ஒருவரைப் பயன்படுத்தாமல் வைத்திருந்த ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறேன் நண்பா... :) அஷ்வின் தொடர்ந்து பிரகாசிக்கையில் நம் அனைவருக்குமே மகிழ்ச்சிதான் :)
@ தமிழ்வாசி - பிரகாஷ்
ReplyDelete//நல்ல விமர்சனம்....நம்பிக்கையோடு இருப்போம்...//
ரொம்ப நன்றி பிரகாஷ் :-)
காத்திருப்போம்!!!
@ ராஜா
ReplyDelete//எனக்கும்தான் .. சேவாக் சச்சின் இருவரும் பெரிய அடித்தளம் அமைத்து கொடுத்தால்தான் சாத்தியமாகும் ... அதுவும் கடைசி கட்டத்தில் யாராவது ஒருவர் நின்று விட வேண்டும் ... பௌலிங்கிலும் ஜாகிர் ஜொலிக்க வேண்டும் .. இதில் ஏதாவது ஒன்று சொதப்பினாலும் நடையை கட்டிவிட வேண்டியதுதான் //
ரொம்ப கரெக்ட் ராஜா... இந்தியாவுக்கும் கோப்பைக்கும் இனிமேல் சீரியல் கனெக்ஷன்தான் ஒண்ணு சொதப்பினாலும் ஆட்டம் க்ளோஸ்.... ஆஸ்திரேலியா மாதிரி தென்னாப்பிரிக்கா மாதிரி கோப்பைகளுக்கு பாரெலெல் கனென்க்ஷன் கொடுத்துக் கரெண்ட் பாஸ் பண்ணும் காலத்தை ஆயுள்காலத்தில் பார்ப்போமா என்பதே கேள்விக்குறிதான்! :-((