இது நெகடிவ் பதிவல்ல..... சர்ச்சை நாயகன் ஷேன் புதிதாக சர்ச்சை எதிலும் சிக்கவுமில்லை!! இது ஷேனின் ரோலர் கோஸ்டர் டைவ் அடிக்கும், ராண்டம் பெர்ஸனாலிட்டியின் ஒரு டைம்லைன் ரவுண்ட்-அப் அவ்வளவுதான்!!
பூமியின் சுழற்சியைக் கிரிக்கெட் பந்தின் க்ளோஸ்-அப் ஷார்ட்டில் காட்டிய இந்த சுழல் புயலின் பொதுவாழ்க்கைச் சுழற்சியோ வானிலை அறிக்கை கணித்துச் சொல்லிவிடும் புயலல்ல, சொல்லாமல் கொள்ளாமல் எழுந்து ஊரைக் கலக்கும் திடீர் சுனாமி!
"திமிரு", "தெனாவெட்டு" போன்ற மதுரை சீஸன் தமிழ்ப்பட டைட்டில்களுக்கு எப்போதுமே இயல்பாகப் பொருந்தும் ஆல்டைம் ஹீரோ இந்த ஆஸ்திரேலிய அண்னன்தான்!
நாற்பத்தியோரு வயதில் ராஜஸ்தான் ராயல்ஸுக்காக இப்போதும் ஐபிஎல்லில் மல்லுக்கட்டும் இந்த சூப்பர் சீனியர் மீடியாவின் வெளிச்சத்தில் ஒரு வித்தியாசமான ஆள் மட்டுமல்ல வில்லங்கமான ஆளும்கூட..... :-)
"Morality" , "Discipline" போன்ற வார்த்தைகளை அடிக்கடி உபயோகப்படுத்துபவர்கள் ஷேனின் வாழ்க்கையை விமர்சித்துக்கொண்டே இருக்கலாம்....... ஆனாலும் ஏகப்பட்ட அடல்ட் கண்டெண்ட்டுகளுடன் கூடிய (!) திறந்த புத்தகமான ஷேனின் வாழ்க்கையில் நமக்குத் தேவையான பக்கங்களை மட்டும் புரட்டிப் பார்ப்பது நிச்சியம் ஓர் அர்த்தமுள்ள சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும் சந்தேகமில்லாமல்!!
முதலில் நமக்கு மிகவும் பிடித்த ( ஆனால் நமக்கு பத்துகாசு பிரயோஜனம் இல்லாத!!) ஷேனின் தனிப்பட்ட வாழ்க்கைத் தகிடுதத்தோம்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்வோம்!
இவையெல்லாம் ரொம்ப ஃபேமஸ் தில்லாலங்கடிகள்.....
- புகையிலைக்கு எதிரான பிரச்சாரத்தில் தூதுவராக நியமிக்கப்பட்டு சில அதிகாரப்பூர்வமான சுற்றுப்பயணங்களின் இடையே சிகரெட்டும் கையுமாகக் கேமராவில் பிடிபட்டார்....... !
அதிகம் அசடு வழியாமல் "நான் "Non-Smoker"னு சொல்லவே இல்லையே" என்று எஸ்கேப் ஆக முயற்சித்தார்!
- நர்ஸ் ஒருவரிடம் தொடர்ந்து தொலைபேசியில் ஆபாசமாகப் பேசி சர்ச்சையில் சிக்கி சட்டத்தை எதிர்கொண்டார்...
சட்டம் தன் கடமையைச் செய்தது!! ஷேன் சைடில் நோ கமெண்ட்ஸ்!
- 2003 உலகக்கோப்பைக்கு முன்பாக ஊக்கமருந்து சோதனையில் சிக்குண்டு போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டு ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்....
ஜலதோஷம் பிடித்திருந்த போது தன் தாயார் கொடுத்த ஓர் அலோபதி மருந்தை உட்கொண்டதால்தான் ஊக்கமருந்து சர்ச்சை ஏற்பட்டது என்ற ஷேனின் விளக்கத்தை ஆஸ்திரேலிய போர்டும் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் "அலட்சியம்" என்று கடுமையாக விமர்சித்தார்கள்.... காரணம் ஆஸ்திரேலிய விளையாட்டுத்துறை 24 மணி நேர ஹாட்லைன் இணைப்பை வழங்கியிருக்கின்றது அந்நாட்டு வீரர்கள் தாங்கள் உட்கொள்ளும் மருந்துகள் அனுமதிக்கப்பட்ட இரசாயணங்களால் தயாரிக்கப்பட்டவைதானா என்று சோதித்துக்கொள்ள! ஆனால் அதற்கெல்லாம் நம்ம அஸால்டு ஆறுமுகத்துக்கு நேரமோ பொறுமையோ இருந்தால்தானே!!! அந்த உலகக்கோப்பை சமயத்தில் "காலம்னிஸ்ட்"ஆக எழுதிக்கொண்டு உல்லாசமாகப் பொழுதைக் கழித்தார் காஷுவலாக!!
- அர்ஜுனா ரணதுங்காவைத் தனக்கு என்றுமே பிடிக்காது என்று வெளிப்படையாக பத்திரிக்கையில் எழுதி ஆஸி மீடியாவை தர்மசங்கடத்தில் நெழியவிட்டார்!!!
- இவை தவிர பிரபல மாடல்கள் மற்றும் நம்ம ஐபிஎல் ஓனர்கள் (பெண்கள் மட்டுமே!) என்று பல பெண்களுடன் இவர் காணப்படுவதெல்லாம் சாதாரண வாடிக்கை நிகழ்வுகளாகிவிட்டன.....
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ஷேன் வார்னைப் பற்றி... :-))) ஸோ விட்டுட்டு மேட்டருக்கு வருவோம்.......
"End of an Era" என்று கிரிக்கெட் உலகத்தால் வர்ணிக்கப்பட்டது இவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஓய்வு அறிவிப்பு!
ஆஷஸ் தொடரில் 5-0 என்று இங்கிலாந்தைக் கழுவிக் காயப்போட்ட அந்த தொடரின் முடிவில் தனது ஓய்வை வார்ன் அறிவிக்க....... "சாதனைகளுடன் கூடிய சகாப்தமாகக் கிரிக்கெட் வாழ்வை முடித்திருக்கும் தங்களுக்கு இனிவரும் வாழ்வில் தேவைகளும் ஆசைகளும் என்ன?" என்று நிருபர்கள் கேட்டபோது "இப்போதைக்கு ஒரு கார்ட்டன் பியரும் ஒரு பேக் சிகரெட்டும்தான் என் உடனடித் தேவை!!" என்று யோசிக்காமல் சொன்னது இந்த சுழல் மன்னன்தான்! (டென்ஷனானால் இந்த இடுகையின் தலைப்பை ஒருமுறை வாசித்துக்கொள்ளவும்!!!)
ஷேன் வார்னின் வாழ்க்கை சொல்லும் மாரல் ரொம்ப சிம்பிள்.... மிக இளம்வயதிலேயே தன் வலதுகை மணிக்கட்டின் சுழற்சித் திறனின் மாயாஜால வித்தையை நன்கு அறிந்துவைத்திருந்த இந்த ஜாம்பவானுக்கு மிகவும் லேசான மனம்!!
சின்னச் சின்னத் தோல்விகளிலிருந்து மிக எளிதில் வெளிவந்துவிடுவது தன்னுடைய இணையற்ற பலம் என்பதை வேலைக்கு உதவாத கமெண்டேட்டர்கள் புரிந்துகொள்வதற்கு முன்பாகத் தானே தன் பலத்தை நன்கு புரிந்து வைத்திருந்தார்.... !
ஆடுகளத்தில் இவரது படு அசமந்தமான பவுலிங் ஆக்ஷனைக் கவனித்திருக்கிறீர்களா? இரண்டு அடி மெல்ல நடந்துவந்து பந்துவீசும் வலதுகையால் தனது தோள்பட்டையை சுற்றும் அந்த நேரம் மட்டும் துரிதமாகக் கால்களை நகர்த்தி ஆட்டம் காட்டுவார்..... பின் சில நேரம் அதே வேகத்துடனோ அல்லது திடீரென்று காற்றில் வேகத்தைத் தேக்கி மெதுவாகவோ, பந்தை அநியாயத்துக்கு சுழற்றி வீசுவார்.... பேட்ஸ்மேனின் நாடியை அழுத்திப் பிடித்து கவனத்தையும் இப்படி படு நிதானமாக சிதறடிக்கும் ஷேன் வார்ன் என்றுமே ஓர் அச்சுருத்தும் சுழற்பந்துவீச்சாளராக விளங்கியதில் வியப்பேதுமில்லை....!
பொதுவாகவே ஒரு பவுலரின் கையை நோட்டம்பிடித்து அவர் வீசும் பந்தைக் கணிக்கும் சாதாரண யுக்தி நம்மாளிடம் செல்லுபடியாகாது.... காரணம் இவரது வேகமான டெலிவரி ஸ்டைல்!
ஒரு பவுண்டரியாகவோ அல்லது சிக்ஸராகவோ தன்னுடைய பந்துகள் சிதறடிக்கப்பட்டுவிட்டால் ஒரு பவுலராக வீழ்த்தப்பட்டத் தன் முனையின் அழுத்தத்தை ஒருவிதமான விஷமத்தனமான உடல்மொழியால் பேட்ஸ்மேனின் முதுகில் ஏற்றிவிடும் வித்தையில் சிறந்துவிளங்கிய வில்லன் இவர்!! இவரது பந்தின் சுழற்சியை வலுக்கவனமாய் சிந்தையில் இறுத்தி சரியான ஃபுட் வொர்க்குடன் ஃபீல்டரின் இடைவெளியில் பவுண்டரிகளாய்ப் புகுத்தி வெற்றிகண்ட டெக்னிக்கல் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே உண்டுதான்...... இருந்தாலும் அப்படி பவுண்டரி லைனுக்குத் தன் பந்து விரட்டப்பட்டால், மற்ற பவுலர்களைப்போல் பந்து விரட்டப்பட்ட திசையை வெறித்து நோக்கமாட்டார் ஷேன்..... தான் வீழ்த்தப்பட்ட அதே ஆடுகளத்தில் நடுநாயகமாக நின்றுகொண்டு, பேட்ஸ்மேனைப் பார்த்துப் படு அலட்சியமாகப் புன்னகைப்பார் ஓர் அரக்கனைப் போல!!!!
பேட்ஸ்மேனிடம் அடிபட்டவுடனேயே ஃபீல்டிங் வியூகத்தை மாற்றியமைத்து பேட்ஸ்மேனின் திறமையை அங்கீகரித்துவிடாமல் "இவன் அடுத்து என்ன அஸ்திரத்தை ஏவுவானோ?!!" என்று பவுண்டரி அடித்த பேட்ஸ்மேனைக் கூடுதலாக வியர்க்க வைப்பதுதான் ஷேனின் விசேஷமான வில்லத்தனம்!!! அடுத்த பந்தை வீசும்போது வீழ்த்தப்பட்ட பதற்றம் மருந்துக்கும் இல்லாமல் படு மெதுவாக அசைந்து கொடுத்து காற்றில் சற்று நிறுத்தி பந்தை சுழற்றிப் பல்ஸை எகிறவைப்பதுதான் இவரின் ட்ரிக்! (அஷ்வினிடம் இதே லாவகம் இயல்பாகவே அமைந்திருக்கிறது கவனித்து ரசிக்கலாம்!)
அப்படிப்பட்ட ஷேனையும் பந்தை வீசிவிட்டு தலையில் கையை வைத்து வீழ்ந்துவிட்டதோர் உடல்மொழியில் உலகை ரசிக்க வைத்தது வேறுயாருமல்ல நம்ம சூப்பர்ஸ்டார் டெண்டுல்கர்தான்...... இதே போன்றதொரு சச்சினின் பிறந்த நாளன்றுதான் ஷார்ஜாவில் ஷேனைப் புரட்டியெடுத்தார் சச்சின்!!! அன்றைக்கு தன்னுடைய மிகப்பெரிய பலமான தன்னம்பிக்கையிலேயே சச்சின் என்னும் ஜாம்பவானால் பேரிடி விழுந்தும்.... அதையும் பாஸிடிவ்வாகக் கையாண்டு, அன்று தான் அணிந்திருந்த ஜெர்ஸியைக் கழற்றி சச்சினிடம் ஆட்டோகிராஃப் வாங்கிப் பத்திரமாய் வைத்துக்கொண்டு தொடர்ந்து தன் தெனாவட்டு பாணியை ஷேன் தொடர்ந்ததும் ஒரு பாடம்தான்!
இவருடைய "Ball of the century"யை யாரும் மறக்க முடியுமா??!! லெக் ஸ்டம்புக்கு வெளியே குத்தி பேட்ஸ்மேன் மைக் கேட்டிங்கின் இடுப்பைச் சுற்றி ஆஃப் ஸ்டம்பைப் பெயர்த்த இவரது அந்த மேக்ஸிமம் ஸ்பின்னரை இவர் வீசியபோது உலகம் இவரை மிகவும் unconvertional-ஆகப் பார்த்தது!! இன்றும் சரி... என்றும் சரி.... ஷேன் வார்ன் எந்த வரையறைக்குள்ளும் உலகம் பொதிந்துவிடமுடியாத Unconventional Genius தான்!!!!
நடந்து முடிந்த உலகக்கோப்பையின் இந்தியா Vs இங்கிலாந்து போட்டிக்கு முன்பாக இவர் ட்விட்டரில் "இன்று ஒரு மிகவும் கடுமையான போட்டி..... என்னுடைய கணிப்பு ஆட்டம் "டை"யில் முடியும்" என்று ட்வீட் போட்டிருந்தார்!!!!
அதேபோல் போட்டியும் "டை"யில் முடிய..... எப்புடிடா???? என்று உலகம் வாயைப் பிளக்க "அதுவா வருதுடா!!" என்று சைகை காட்டி நகர்ந்ததும் இதே அல்டாப்பு பேர்வழிதான்...!!
போட்டியை வேடிக்கைப் பார்க்கும் யாருக்கும் பந்துவீச வாய்ப்புக் கிடைக்கும் நெட் ப்ராக்டீஸில், தொழில்முறை விளையாட்டு வீரரே அல்லாத "ஸ்ட்ரீட் கிரிக்கெட்டர்" காமரான் கானின் திறமையைக் கண்டறிந்து, தன்னுடைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்த்துத் தைரியமாக ஐபிஎல்லின் சர்வதேச தரத்தில் தன்னுடைய கண்டுபிடிப்பாகக் களமிறக்கிய "தில்"லும் ஷேன் வார்னின் தனித்துவமான ஸ்டைலினால் மட்டுமே சாத்தியமான அதிசியம்!!
இந்த வில்லங்கமான பெர்ஸ்னாலிட்டியின் விடாப்பிடி விசேஷங்களை இன்னும் கூட அடுக்கிக்கொண்டு போக முடியும்...... வெற்றியை லட்சியமாக முன்மொழியும் வீரர்களின் மத்தியில் இந்த வெற்றியாளனின் வெற்றி ரகசியம் "அலட்சியம்!!!" ...... அது தன்மீது தூக்கியெறிப்படும் தோல்விகள் மற்றும் விமர்சனங்களின்மீது காட்டும் "அலட்சியம்"!!!!! ;-)
மொத்தத்தில்..........
வெற்றிக்கு எது வழி??? என்று அனைவரும் முகவரி தேடியலையும் உலகில் வெற்றிக்குத் தன் விசிட்டிங் கார்டை ஸ்டைலாகக் கொடுத்துவிட்டு "என் வழி.... தனி வழி" என்று சொல்லால் இன்றித் தன் செயல்களாலாயே "பஞ்ச்" வைத்து கலக்கும்.... ஜெயிக்கும் ஷேனும் ஒரு ஹீரோதான்..... அவரிடமும் நாம் காண கற்கப் பாடங்கள் உள்ளன!! :-)
ஒரு தனித்துவமான ஹீரோவான "சர்ச்சை மன்னன்" ஷேனுக்கு என் சல்யூட் ஒரு சாதாரண ரசிகனாய்! :-)
எவன்டா உன்னப் பெத்தான்.... பெத்தான்... பெத்தான்!!! :-)))))
அன்புடன்,
பிரபு எம்

பால் ஆப் தி செஞ்சுரி லைவாக பார்க்கவில்லை. இப்போது காணும் வாய்ப்பு கிட்டியது. எத்தனை சர்ச்சை இருப்பினும்..ஸ்பின் ராஜா என்றால் அது வார்னே தான், பிரபு!
ReplyDelete@சிவகுமார்
ReplyDeleteநன்றி நண்பா...
முற்றிலும் உண்மை... //ஸ்பின் ராஜா வார்னே தான்!//
This comment has been removed by the author.
ReplyDeleteHe is true Champion. Good article.
ReplyDelete//இவை தவிர பிரபல மாடல்கள் மற்றும் நம்ம ஐபிஎல் ஓனர்கள் (பெண்கள் மட்டுமே!) என்று பல பெண்களுடன் இவர் காணப்படுவதெல்லாம் சாதாரண வாடிக்கை நிகழ்வுகளாகிவிட்டன....//
ReplyDeleteமன்னிச்சுக்கோ பிரபு...ஹீ..ஹீ..அந்த வெள்ள உருண்டையை எனக்கு புடிக்காது....ஆனால் புடிக்கும்..:))).அப்புறம் ஷில்பா ஷெட்டியை ஜொள்ளு விட்டு,ஷில்பா ஆளு டென்ஷன் ஆன சுவாரஸ்ய நிகழ்வு உன் லிஸ்ட் இல் விட்டு போனதுக்கு கடுமையாக கண்டிக்கிறேன்...:)))
ஷேன் வான் விளையாடி இருந்து இருந்தால் ஒரு வேளை இந்த உலகக்கோப்பை நம் கைக்கு கிடைக்காமல் கூட போயிருந்து இருக்கலாம்:))...நன்றி ஷேன் அண்ணா...நீங்க அப்படியே ரூட் விட்டுட்டு இருங்க...:)))
சச்சின் பொறந்தநாளுக்கு சச்சின் பத்தி நேத்து போஸ்ட் போடமால் இந்த பையனை:)) பத்தி போஸ்ட் போட்டதுக்கு என் கண்டனங்கள்..:))))))
@ மனம் கொண்டவன்
ReplyDelete//மாப்ள டைட்டில் பயங்கரமா இருக்கு????? //
ஷேனும் பயங்கரமான ஆள்தானே மாப்ள!! :-))
@ Victor
ReplyDelete//He is true Champion. Good article. //
Thank you friend...
Yes he is :-)
@ ஆனந்தி அக்கா...
ReplyDeleteஹாய் அக்கா... எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகணும்... ஷேனை உங்களுக்குப் பிடிக்குமா பிடிக்காதா!! :-))
ஷில்பா மேட்டரா.... ஷில்பா ஷேன் ரெண்டு பேருக்குமே 'பொது வாழ்க்கை'யில் இது மாதிரி ஆயிரம் விழுப்புண்கள் இருக்கு!! அதான் எதுக்கு வெந்தப் புண்ணுல விரலப் பாய்ச்சிட்டுன்னு விட்டுட்டேன்.. அவங்களே ஃப்ரெண்ட்லியா எடுத்துக்கிறாங்களே! ஹிஹிஹி
சச்சின்தான் சாய்பாபா டெத்ல செம அப்செட்ல இருக்காரே! அதான் டிஸ்டர்ப் பண்ணாம ஃப்ரீயா இருந்த ஷேனை வம்புக்கு இழுத்தேன்... :-)))))
இன்னும் கிரிக்கெட் விளையாடிக்கிட்டா இருக்கீங்க பிரபு !
ReplyDelete@ ஹேமா அக்கா
ReplyDeleteஹாஹா..... திரும்பத் திரும்ப கிரிக்கெட்டுக்குள்ளே போயிடறேன் தான்!! :-)
நன்றி அக்கா.....