Sunday, April 03, 2011

இந்தியா V இலங்கை : துடிக்கட்டும் புஜம்.. நாம் ஜெயித்தது நிஜம்!!!

The champions celebrate with the World Cup trophy

எட்டுத்திக்கும் எதிரொலிக்கின்ற‌து மும்பையில் நேற்றிர‌வு கொட்டிய‌ வெற்றி மேள‌ம்!

"உரித்துப் பார்த்தால் வெங்காய‌த்தில் ஒன்றும் இருக்காது" என்று சொல்லுவார்க‌ள் ஆனால் அதனை உரிக்க‌ உரிக்க‌க் க‌ண் எரிந்து க‌ண்ணீர் சொட்டும் அதேபோல‌த்தான் கிரிக்கெட்டும்....!! தோலுரித்துப் பார்த்தால் கிரிக்கெட்டில் எதுவும் இருக்காதுதான்.... இது "இந்திய‌" அணியே இல்லைதான்... பிசிசிஐ-யின் அணிதான் இது...விளையாடுப‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே இந்திய‌ர்க‌ள்...! ப‌ண‌ம் கொழிக்கும் பிசினஸ்தான்... ஃபிக்ஸிங் ஸ்காண்ட‌ல்க‌ள் வேறு! என்றெல்லாம் தோன்றும்தான்....ஆனால் நேற்று மேட்சைப் பார்த்தபோது உண‌ர்ச்சிப் பெருக்கில் கண்கள் கலங்கியிருக்குமே!!! அதுதான் கிரிக்கெட்!! :-))

என்மீது என் ந‌ண்ப‌ர்க‌ள் ப‌ல‌ரும் வ‌ருத்த‌ப்ப‌ட்டார்க‌ள் கிரிக்கெட்டைப் ப‌ற்றியே எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று... நேற்று அவ‌ர்க‌ளில் ப‌ல‌ரும்கூட‌ ஃபோன் செய்து நேற்று இந்தியா வென்ற‌த‌ன் ச‌ந்தோஷ‌த்தைப் ப‌கிர்ந்து கொண்டார்கள்.... வெல்... அதுதான் கிரிக்கெட்... இவ்வ‌ள‌வு நீளமானதொரு குழு விளையாட்டு வேறெதுவும் இருக்கின்ற‌தா என்று தெரிய‌வில்லை... கிரிக்கெட்டில் என்னை... ஸாரி.. நம்மை ஈர்ப்பது அந்த‌ உணர்ச்சிக் கதம்பமான பொழுதுகளை நாமும் வீரர்களுடன் சில மணித்துளிகள் "வாழ்வது"தான்!!.... Living the moments என்று சொல்லுவார்களே அதேதான்!!! உண‌ர்வுக‌ளை ம‌றைத்துக்கொண்டு வாழும் ஒப்ப‌னை ம‌னித‌ர்கள் உங்கள் வாழ்வில் இருந்தால் அவர்களைக் கூட‌ உட்கார‌வைத்து ஓர் இந்தியா மேட்ச் பாருங்க‌ள்.... ஒப்பனைகளெல்லாம் ஓப்பனாகி அவ‌ர‌து உண்மை நிற‌ங்க‌ளெல்லாம் பொங்கிடும் உண‌ர்ச்சிப் பிர‌வாக‌த்தில் பொங்கிப் பீறிட்டுவிடும்!! :-)))

ஐ.டி க‌ம்பெனி... ஆயிர‌மாயிர‌ம் பேர் க‌ணிணிக்குள் த‌லையைவிட்டுக்கொண்டு காதில் ஐ-பாட் மாட்டிக்கொண்டு ப‌க்க‌த்து கேபின் ந‌ண்ப‌னுக்குப் பிற‌ந்த‌ நாள் என்று க‌ம்பெனி மெயில் சொன்னாலும் அவ‌ன் ஃபேஸ்புக் வாலில் "ஹேப்பி ப‌ர்த் டே!" என்று எழுதி மற‌க்காம‌ல் இர‌ண்டு ஸ்மைலியும் வ‌ரைந்து விட்டு வேலையைத் தொட‌ரும் கலாச்சார‌ம்!!! இதுதான் எங்கள் Unity in Diversity அலுவலகம்!! வார‌நாளில் வ‌ந்துவிட்ட‌ இந்தியா - பாகிஸ்தான் மேட்சைப் பெரிய‌ ஸ்க்ரீனில் அன்று அலுவலகத்தில் ஒளிப‌ர‌ப்பினார்க‌ள்... பெயர் தெரியா கொலீக்குகள் எல்லாம் சேர்ந்து பார்த்துக் கொண்டாடினோம் அந்த உன்னத வெற்றியை....! அதைத் தொடர்ந்து.....வெள்ளிக்கிழ‌மை கேண்டீனுக்குப் போனால் யார் யாரோ "ஹாய்" சொல்லி சிரிக்கிறார்கள்.... " நாளைக்கு ஜெய்க்கிறோம் பாஸ்..BLEED BLUE!!!" என்று சொல்லிவிட்டு போறான் ஒரு ப‌ஞ்சாப்காரன்.... உற்றுப்பார்த்தால் முந்தாநாள் மேட்சில் சேர் மேல‌ ஏறி விசில் அடிச்சிட்டு இருந்த‌ப்போ ட‌ர்ப‌னை வெச்சு ஸ்க்ரீனை ம‌றைச்சிட்டு இருந்த முன்ஸீட்டு ப‌ல்லே.. ப‌ல்லே.. பல்லேலக்கா அவன்தான் என்று அடையாளம் தெரிந்தது!!! And that's cricket! It binds us....

நேற்றைய‌ உண‌ர்வுப்பூர்வ‌மான‌ ஆட்ட‌ம்... வீர‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌ நூறுகோடி இந்திய‌க்க‌ண்க‌ளையும் ந‌னைத்த‌து!‍!

We lived those precious moments thanks to our Men in Blue!!!! :-)
Thank You Dhoni and Boys... Thank you Sachin.... Thank you Yuvraj, Zaheer, Gambhir, Kohli... You did it for us... We lived your victorious moments!!!

                           ********************************************

ஓகே இப்போது மேட்சுக்கு வ‌ருவோம்!!

"Every coin has an another side" என்ப‌த‌ன் முழு அர்த்த‌த்தை நேற்று இர‌ண்டுமுறை டாஸ் போட்ட‌போதுதான் புரிந்துகொண்டேன்....!!! சீவி முடித்து சிங்காரிக்குமுன்பே க‌ன்ன‌த்தில் வெச்சுவிட்ட‌ க‌ருப்பு திருஷ்டிப் பொட்டைப்போல‌ இருந்த‌து நேற்றைய மேட்சின் ஆரம்பத்திலேயே அரங்கேறிய‌ ரீ-டாஸ் குழ‌ப்ப‌ம்!! காதுகேட்க‌த் தெரிஞ்ச‌வ‌ங்க‌ளை மேட்ச் ரெஃப்ரீயாக‌ ஐசிசி நிய‌மிக்க‌வேண்டும்....! ச‌ங்க‌க்கராவின் ஸ்போர்ட்ஸ்மென்ஷிப் உடல்மொழியில் ஸ்லைட்டாக‌ப் ப‌ல்லைக் காட்டிய‌து.... ஆனாலும் சிரித்து மழுப்பித் த‌ப்பித்துவிட்டார்.... அங்கே ந‌ட‌ந்தது என்ன என்று முனைக்குமுனை மாறுப‌ட்ட‌ த‌க‌வ‌ல்க‌ள்...விஷ‌ய‌ம் முழுதாய்த் தெரியாம‌ல் யாரையும் எதுவும் சொல்லக்கூடாது.... ஸோ அப்ப‌டியே விட்டுவிடுவோம்!!

ம‌ன‌நிலையில் கோளாறு இருப்ப‌வ‌ர்க‌ளை நாம் ஒதுக்க‌க்கூடாது.... அவ‌ர்க‌ளை அர‌வ‌ணைக்க‌ வேண்டும்... அன்பு காட்டி ஆத‌ர‌வு த‌ர‌வேண்டும் என்பது மிகவும் ந‌ல்ல‌ விஷ‌ய‌ம்தான் ஆனாலும் அத‌ற்காக‌ ப‌ஜ்ஜியிட‌ம் உதைவாங்கியும் குண‌ம‌டையாத இந்தக் கடும்பித்து பிடிச்சவனை உல‌க‌க்கோப்பை ஃபைன‌லில் ப்ளேயிங் லெவ‌னில் சேர்த்ததையெல்லாம் ச‌த்திய‌மாக‌ ர‌சிக்க‌ முடிய‌வில்லை! மேக்க‌ப் மேன் ஸ்ரீசாந்தின் ம‌ண்டையும்... அந்த‌ ந‌கைக‌ளும் அருவருப்பான ஒப்பனைகளும் உல‌க‌ அர‌ங்கில் இந்திய‌க் கிரிக்கெட்டுக்கு ஓர் அவ‌மான‌ம் என்றால் சில்ல‌றை போடாம‌ல் செல்பவனை ச‌பிக்கும் ஒரு சிக்ன‌ல் பிச்சைக்காரனைப்போல, அவ‌ன‌து அப‌த்த‌ப் பந்துக‌ளை சித‌ற‌டித்த‌ அனுப‌வ‌ வீர‌ன் ஜெய‌வ‌ர்த‌னேவை நேர‌டியாக‌ அவ‌ன் ஏசிய‌து மொத்த‌ தேச‌த்துக்கும் த‌லைகுனிவு.... எத்த‌னைமுறை இவ‌னால் நாம் அசிங்க‌ப்ப‌ட்டாலும்.. அவமானப்பட்டாலும்... இவ‌னுக்கு டீம் ப‌ஸ்ஸில் விண்டோ ஸீட்டைத் தேர்வுக்குழு கண்டிப்பாக முன்பதிவு செய்யும்... ஒரு மேட்சில் ப‌வுலிங் செய்துவிட்டு ஒன்ப‌து நாள் ஹாஸ்பிட்ட‌லில் ப‌டுத்துக்கிட‌க்கும் நெஹ்ரா போன்ற "ஃபிட்னஸ் கிங்ஸ்" அணியில் இருக்கும்வ‌ரை ப்ளேயிங் லெவ‌னிலும் இவ‌ன் மீண்டு வ‌ர‌த்தான் செய்வான்... ச‌ரி விடுவோம்... ப‌த்துபேர் ம‌ட்டும் விளையாடியும் ஜெயிச்சுட்டோம்... தான் எடுத்த‌ முடிவுக‌ளுக்குத் தானே பொறுப்பேற்று சுமைசும‌ந்து வென்றுகாட்டிவிட்ட‌ வீர‌ன் தோணியைப் பேச‌ எதுவுமில்லை.... வ‌ழ‌க்க‌ம்போல் இந்த‌ வாய்ப்பையும் நாற‌டித்துவிட்டான் இந்த‌ _________( நீங்களே நிரப்பி உங்கள் கோபத்தையும் தணித்துக்கொள்ளுங்கள்!!). திறமை என்பது தோற்கும்போது அதைப்ப‌ற்றி விமர்சிக்க‌ எதுவுமில்லை.... ஜாஹிரின் ப‌ந்துக‌ள்கூட‌ நேற்றுக் க‌டைசியில் த‌க‌ர்க்க‌ப்ப‌ட்ட‌து... ஆனால் ஒரு த‌னிமனிதனின் ATTITUDE பொதுப்பார்வையில் என்றும் விம‌ர்ச‌ன‌த்துக்கு உட்ப‌ட்ட‌தே! ச‌ச்சின் உட்ப‌ட‌ அனுப‌வ‌ வீர‌ர்க‌ள் இவன் தோளில் கைபோட்டு பாந்த‌மாக‌ டிப்ஸ் கொடுத்துத் தேற்றியபோதும் இவ‌ன் வெளிப்ப‌டுத்திய‌ உதாசீன‌ உட‌ல்மொழிதான் இப்ப‌டி என்னை  _______ போடும்வ‌ரை வைத்த‌து!!! இருப்பினும் என் வ‌லைம‌னையின் சுத்த‌ம் க‌ருதி I'm sorry...

நேற்று ஃபைன‌லுக்கான‌ பிர‌த்யேக‌த் த‌யாரிப்பான‌ வான்க‌டே ஆடுக‌ள‌த்தின் முழுக்க‌ மொழுக‌ப்ப‌ட்ட‌ 'சிவ‌ந்த‌ம‌ண்'தான் டாஸில் தோற்று முத‌ல் பேட்டிங் வாய்ப்பை இழ‌ந்த‌ இந்தியாவுக்காக‌ அத்த‌னைபேரையும் ம‌ருக‌ வைத்த‌து! அந்த‌ முத‌ல் ப‌த்து ஓவர்களின் இலவச‌ பேட்டிங் வரம் கிடைக்க‌ப்போவ‌து சேவாக்கிற்கா? அல்ல‌து தில்ஷானுக்கா? என்னும் கேள்வியுட‌ன் காத்திருந்த‌ உற்சாக‌ ர‌சிக‌ர்க‌ளைத் த‌ன் வ‌ர‌லாறு காணாத‌ அற்புத‌ப் பந்துவீச்சால் தில்ஷானை முற்றிலும் அடக்கி த‌ர‌ங்காவையும் வீழ்த்திய‌ ஜாஹீருக்கு நேற்று கிடைத்த‌ ஆர‌வார‌ம் குறைவுதான்! முத‌ல் ஸ்பெல்லின் மூன்று ஓவ‌ர்க‌ள் மெய்ட‌ன்! (முத‌ல் ஓவ‌ரின் இர‌ண்டு ர‌ன்க‌ள் உதிரிக‌ள் (1b, 1lb)) தொட‌ர்முழுக்க‌ ந‌ம‌து அணிக்கு விக்கெட்டுக‌ளை வீழ்த்திக்கொடுத்த‌ வெற்றி நாய‌க‌ன் ஜாஹிர்தான்! இறுதி ஓவ‌ர்க‌ளில் லெங்த்தில் க‌வ‌ன‌ம் செலுத்த‌த் த‌வ‌றிவிட்டார் கார‌ண‌ம் அழுத்த‌ம்.... தோணியும் ஒரு கோண‌ங்கியை அணியில் சேர்த்த‌ பாவ‌த்திற்கு அவ‌ன‌து ஓவ‌ர்க‌ளைத் த‌ர‌ம்பிரிக்க‌ முடியாம‌ல் த‌வித்து ப‌வுல‌ர்க‌ள் தேர்வில் த‌டுமாற‌, அந்த‌ இடைவெளியில் அடித்த‌ள‌ம் அமைத்தார்க‌ள் ச‌ங்காவும் ஜெய‌வ‌ர்த‌னேவும்! (முதல் 5 ஓவர்களை ஜாஹீரை வீசச் செய்துவிட்டு அடுத்த ஸ்பெல்லை 36வது ஓவரில் கொடுத்தது ஒரு ர‌சிக‌னாக‌ என்னை ஈர்க்கவில்லை.... ஜாஹீர் ஒரு பார்ட்னஷிப் ப்ரேக்கர்... கடந்த போட்டிகளில் இதனை தோணியும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்!!)

ஜெய‌வ‌ர்த‌னேவின் ப‌க்குவ‌ப்ப‌ட்ட‌ ச‌த‌த்தை ர‌சித்தேன்.... "ட‌ச் ஷார்டுக‌ள்" எப்ப‌வுமே ஜெயா'ஸ் ட‌ச் என்றாலும்.... ஜுனிய‌ர்க‌ள் குல‌சேக‌ராவும், பெர‌ராவும் ந‌ம்பிக்கையுட‌ன் விளாச‌ எத்த‌னை வாஞ்சையாக‌ அந்த‌ ஹெல்மெட் ம‌ண்டைய‌ன்க‌ளை ஓடி ஓடிச் சென்று உச்சிமுக‌ர்ந்தான் இந்த‌ சீனிய‌ர் சிங்க‌ள‌ன்!! என‌க்கு இல‌ங்கை அணியின் எந்த‌வொரு வீர‌னையும் த‌னிப்ப‌ட்டமுறையில் பிடிக்காது (அர‌சிய‌ல், இன‌ப்பிரிவினை கார‌ண‌ங்க‌ள் ச‌த்தியமாக‌ இல்லை!)எனினும் நேற்று ப்ர‌ஷ்ஷ‌ரைத் தாங்கிய‌ அந்த‌ வெறிய‌ர்க‌ளின் க‌டைசி ஐந்து ஓவ‌ர் ர‌வுடித்த‌ன‌த்தை ந‌டுநிலையாக‌ ர‌சித்தேன்.. அப்போது கைத‌ட்டிய இலங்கை அதிபர் ராஜ‌ப‌க்ஷேவை ஏன் நாம் வென்ற‌பின்பு காட்ட‌வில்லை??? ஸ்டார் க்ரிகெட் சேன‌ல் மீது இன்னும் ஆறாத‌ கோப‌ம் அப்ப‌டியே உள்ள‌து!.. அவர‌து கோழிமுட்டைக் க‌ண்க‌ளின் ஓடு வெடித்து வாத்துக்குஞ்சுகள் ப‌ல்லிழித்து வெளிவருவதைக் காண‌ ஆவ‌லாய் இருந்தேன்...(வெல் இந்த‌ வெறிக்கு இலங்கை அதிபரின் இன‌வெறி அர‌சிய‌ல்தான் கார‌ண‌ம் என்பதைப் பெருமையுட‌ன் தெரிவித்துக்கொள்கிறேன் த‌மிழ‌னாய் அல்ல‌ வெறும் ம‌னிதனாய்!)

சேவாக்... எல் பி ட‌புள்யூ ஆவ‌தும் உட‌னே அணிச்சையாய் அதுவும் தன்னிச்சையாய் ஒரு ரிவ்யூவை வீணாக்குவ‌தும் ஒருபுது ச‌ம்பிர‌தாய‌ம் ஆகிப்போன‌து.... வான்க‌டே மைதான ரசிகர்களின் ஓயாத‌ இரைச்ச‌ல் அட‌ங்கிப்போய் அருகிருந்த அரபிக்க‌ட‌லின் இரைச்சல் உள்நுழைந்து பாலைத்திணையில் சோககீதமாய் அலறியது ரிவ்யூவும் முடிந்து சேவ‌க் ட‌க் வாக் செய்த‌போது! :-((

ச‌ச்சின்... ம‌லிங்காவைத் த‌ன‌க்கே த‌ன‌க்கான‌ ஆன்டிசிப்பேஷ‌னுட‌னும் வேக‌மான‌ ஃபுட் வொர்க்குட‌னும் கையாண்டு பாயிண்டுக்கும் க‌வ‌ருக்கும் ந‌டுவே பந்தை அனாய‌ச‌மாக‌ப் புகுத்திய‌ அழ‌கை ர‌சித்த‌போதே த‌லையில் அபாய‌ம‌ணி அடித்த‌து ம‌லிங்காவிட‌ம்தான் ச‌ச்சின் வீழ்வார் என்று... "மும்பை இண்டிய‌ன்ஸ்" அனுப‌வ‌த்தில் ச‌ச்சின் ம‌லிங்காவைக் கையாண்ட‌தைப் போல‌வே சுதாரித்துக்கொன்ட‌ ம‌லிங்கா அதே த‌ன் பங்கு அனுப‌வ‌த்தில் ஒரு சேஞ்ச் ஆஃப் பேஸில் ம‌லையை ச‌ரித்தார்.... சொற்ப‌ ர‌ன்க‌ளில் மூன்றாவ‌து முறை உல‌க‌க்கோப்பையின் அதிக‌ ர‌ன்க‌ள் சேர்த்த‌ வீரர் (1996 & 2003) என்ற‌ இன்னுமொரு இமால‌ய‌ சாத‌னைக்கு மகுட‌ம் வைப்ப‌தை தில்ஷானிட‌ம் ச‌ச்சின் இழ‌ந்த‌தைத் தாங்க‌முடியாம‌ல் ம‌ட்டும‌ல்ல‌ தோல்வியின் சுவ‌டுக‌ளாலும் தேச‌ம் த‌வித்த‌து....

க‌ம்பீரின் கூர்மையான‌ விழிக‌ளும், தீர்க்க‌மான‌ நாசியும், உறுதியான‌ நெஞ்சும் நேற்று ஒரு இம்மையில் உழ‌ன்ற‌போது "க‌ம்பீர‌"க் க‌விதையுட‌ன் வ‌ந்து போராடி வென்றுகாட்டிய‌து...! க‌ம்பீரின் ம‌ன‌உறுதி ப‌ல்லைக் க‌டித்துக்கொண்டு வேக‌ம்கூட்டி அடித்த‌ ஸ்கொய‌ர்-க‌ட்டிலும், தாவிப்பாய்ந்து நெஞ்ச‌டிக்க‌ விழுந்து ரீச்சான‌ ர‌ன் ஓட்ட‌த்திலும் மிளிர்ந்த‌து.... கோஹ்லியுட‌னும், தோணியுட‌னும் க‌ம்பீர் போட்ட‌ பார்ட்ன‌ர்ஷிப்பை இன்னும் எத்த‌னை வ‌ருட‌ங்க‌ளானாலும் உல‌க‌ம் பேசிக்கொண்டேதான் இருக்கும் கார‌ண‌ம் இது உல‌க‌க்கோப்பை ஃபைன‌ல்!!!

தோணி.... எங்கிருந்து வ‌ந்தாய் நீ???
திடீரென‌ க‌ங்குலி த‌லைமையில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ ஆஜான‌பாகு விக்கெட் கீப்ப‌ர்.... தோள்வ‌ரை நீண்டிருந்த‌ த‌லைமுடியும், தேக்கும‌ர‌ தேக‌முமாய் ஸ்ரீல‌ங்காவின் பந்துவீச்சில் ஹெலிகாப்ட‌ர், ஏரோப்ளேன், ராக்கெட் ஷாட்டெல்லாம் ஆடிக்காட்டி அச‌த்தினாய்..... T20 அணிக்குக் கேப்ட‌ன் ஆனாய்... உல‌கக்கோப்பை வென்றும் வ‌ந்தாய்... இந்திய‌ அணியின் கேப்ட‌ன் ஆனாய்.... "கேப்ட‌ன்க‌ள் பிற‌க்கிறார்க‌ள்" என்று ந‌ம்ப‌வைத்தாய்.... பேச‌வேண்டிய‌ இட‌ங்க‌ளில் பேசினாய்..... மௌன‌த்தாலும் பேசினாய்..... இன்றும் உன் தேர்வுக‌ளும் முடிவுக‌ளும் புதிர்போட‌த்தான் செய்கின்ற‌ன‌... க‌ணிப்புக‌ளுக்கு அப்பாற்ப‌ட்ட‌வ‌னாக‌வே இன்றும் இருக்கிறாய்.... வெற்றியைப் பெற்றுத்த‌ந்துவிடுவாய் என்னும் ந‌ம்பிக்கையின் அடிப்ப‌டையிலான‌ க‌ணிப்பை ம‌ட்டும் பொய்க்காம‌ல் காப்பாற்றிவிடுகிறாயே... அதுவே போதும் கேப்ட‌ன் கூல்!!!! ந‌ன்றி தோணி!!

Disappointment and contentment. MS Dhoni and Kumar Sangakkara see the winning hit sail out of the ground

தோணியின் ம‌னஉறுதியை நேற்று ர‌சித்துக் குதித்த‌ப் ப‌ல‌கோடி இந்திய‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன்... தோணியின் "DHOSA SHOT"-ஐக் கிண்டலடித்து "பேட்ஸ்மேன் தோணி : When will you again Storm?" என்று கேட்டிருந்தேன் சென்ற‌ ப‌திவில்... தோணி த‌ந்த‌ ப‌திலில் வாய‌டைத்துப்போன‌தில் பெருமையே!!! க‌டைசி சிக்ஸ‌ரில் பேட்டால் வ‌ர‌லாறு எழுதிய‌பின்பும் ரீப்ளேவில் க‌வ‌னித்தீர்க‌ளா அந்த‌க் க‌ண்க‌ளை...... Everybody listen... listen... He's on a Mission... Mission... என்று பாடுவ‌தைப்போல‌... நேற்று ஐம்ப‌து ர‌ன்க‌ளைக் க‌ட‌ந்த‌போது அதை தோணி அறிந்திருக்க‌வேயில்லை.... அதேபோல‌ அந்த‌க் க‌டைசி சிக்ஸ‌ரில் வ‌ர‌லாறு ப‌டைத்த‌பின்னும் கோட்டைத் தாண்டிப் ப‌ந்து ப‌ற‌ந்த‌பின்னும் குத்திய‌ கூர் பார்வையை தோணி அக‌ற்ற‌வேயில்லை... ஆடிய‌ன்ஸ் ஏரியாவில் ப‌ந்து Land ஆன‌ பின்புதான் அஃபிஷிய‌லாக‌த் த‌ன் மிஷ‌னை முடித்துக்கொண்டு செல‌ப்ரேஷ‌ன் மோடுக்கு மாறலானார்.... இது சுத்த‌மான‌ வீர‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே வாய்க்கும் ப‌ண்பு.... மீண்டுமொருமுறை தோணிக்காக‌.... "கேப்ட‌ன்க‌ள் பிற‌க்கிறார்க‌ள்!" த‌லைமைப் ப‌ண்பு என்ப‌து கருவிலேயே வாய்ந்திருக்கிற‌து இந்த‌ க‌ணிக்க‌ முடியாத‌ த‌லைவ‌னுக்கு....

ச‌ச்சினுக்கும் யுவ்ராஜுக்கும் வெற்றியில் வார்த்தைக‌ள் த‌ழுத‌ழுக்க‌... கோப்பையை வென்றுவிட்டு.... நிதான‌மாக‌.... நிறைய‌ கேள்விக‌ளுக்கு நான் ப‌தில் த‌ந்திருக்க‌ வேண்டியிருந்திருக்கும்.... என்று ப‌க்குவ‌மே உருவாய் வேட்டைமுடித்து ப‌சிதீர்ந்த‌ சிங்க‌மாய் தோணி  நிதான‌மாய்க் க‌ர்ஜித்த‌தை வாழ்க்கையில் ம‌ற‌க்க‌மாட்டேன்.... It's a real Quotable Quotation by the Born Captain!

இன்னும் இன்னும் இன்னும் எவ்வ‌ள‌வு வேண்டுமானாலும் எழுத‌லாம்..... இந்த‌த் தருண‌ங்க‌ள் ந‌ம் ஆயுள்கால‌ம் முடிந்தாலும் வ‌ர‌லாறாய் மீண்டும் மீண்டும் அசைபோட‌ப்ப‌ட்டுக்கொண்டே இருக்கும்... ப‌ழைய‌ த‌லைமுறையின் க‌பில்தேவின் வெற்றியை நாமும் கொண்டாடியிருப்ப‌தைப் போல‌..... தோணியின் இந்த‌ வெற்றியை அடுத்த‌ த‌லைமுறையின‌ரும் நினைவுகூர்ந்தும‌கிழ்வார்க‌ள் அப்போது இத‌னையெல்லாம் 'லைவ்'வாக‌ப் பார்த்த‌வ‌ர்க‌ள் என்று ந‌ம்மைப் பார்த்து பொறாமைப்ப‌டும் அடுத்த‌ த‌லைமுறை.... நாம் பெருமைப்ப‌ட‌!!! ;-))))

ஏதோ ஒரு ந‌ம்பிக்கையில் இந்தியா விளையாண்ட‌ அத்த‌னை போட்டிக‌ளுக்கும் ப‌திவெழுத‌த் துவ‌ங்கினேன்... காலிறுதி... அரையிறுதி என்று வந்து இதோ கோப்பையையும் இந்தியா வென்றுவிட‌.... இதோ ஃபைன‌லுக்கு இந்தப் பதிவை எழுதிய‌போது அடைந்த‌ பேருவ‌கைக்கு நிச்சிய‌ம் எல்லையில்லை...... தொட‌ர்ந்து உல‌க‌க்கோப்பை ம‌ற்றும் கிரிக்கெட் ப‌திவுக‌ளுக்குக் க‌ட‌ந்த‌ ஒன்ற‌ரை மாத‌கால‌மாகத் தொடர்ந்த தங்கள் வாசிப்பினாலும், அழ‌கான‌ பின்னூட்ட‌ங்க‌ளாலும் என்னை ஊக்குவித்த‌ அத்த‌னை ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் என் ம‌ன‌ப்பூர்வ‌மான‌ ந‌ன்றிக‌ள்!!!

மீண்டும் ச‌ந்திப்போம்......

துடிக்க‌ட்டும் புஜ‌ம்.... நாம் ஜெயித்த‌து நிஜ‌ம்!!!!

ஜெய் ஹோ இந்தியா...!!!!

வ‌ந்தே மாத‌ர‌ம்....!!

அன்புட‌ன்,

பிர‌பு எம்

20 comments:

  1. Anonymous2:49 PM

    Awesome dude

    ReplyDelete
  2. Thank you dude :-)

    ReplyDelete
  3. ப‌ஜ்ஜியிட‌ம் உதைவாங்கியும் குண‌ம‌டையாத இந்தக் கடும்பித்து பிடிச்சவனை உல‌க‌க்கோப்பை ஃபைன‌லில் ப்ளேயிங் லெவ‌னில் சேர்த்ததையெல்லாம் ச‌த்திய‌மாக‌ ர‌சிக்க‌ முடிய‌வில்லை

    ReplyDelete
  4. கோப்பை வென்ற மகிழ்ச்சியை விட நீங்கள் ஸ்ரீசாந்த பற்றி எழுதியது தான் எனக்கு மகிழ்ச்சி. எனது கருத்தும் அது தான்

    ReplyDelete
  5. துன்பக் கடலில் துவளும் இந்தியா!
    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்….
    http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html

    ReplyDelete
  6. Anonymous4:31 PM

    nice article...lets celebrate the historical victory..

    ReplyDelete
  7. Anna... Super na... I expected this post a lot... Unga style super na... Intha post a fulla quote pannalam... avlo nalla eluthi irukeenga...
    Ennoda asaiyala ketkuraen... Neenga itha IPL kum continue panna santhosha paduvaen...

    ReplyDelete
  8. அருமையான வெற்றி அலசல் நண்பரே... இந்தியாவின் வெற்றி உங்கள் எழுத்தில் தெரிகிறது,

    ReplyDelete
  9. @ Rathnavel

    நன்றி ரத்னவேல் சார்...

    ReplyDelete
  10. @ ஹாஜா மொஹைதீன்

    //கோப்பை வென்ற மகிழ்ச்சியை விட நீங்கள் ஸ்ரீசாந்த பற்றி எழுதியது தான் எனக்கு மகிழ்ச்சி. எனது கருத்தும் அது தான் //

    இன்னும் எத்தனை முறை இந்த மேட்ச் வீடியோவைப் பார்க்க நேர்ந்தாலும் ஸ்ரீசாந்தின் மீது இதே வெறுப்பு மேலோங்கத்தான் செய்யும்...

    உங்களுடைய கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  11. @ ஊரான்

    வென்றுவிட்டோம்.. இது கொண்டாடும் நேரம்... :-)
    Lets be Positive friend....

    ReplyDelete
  12. //nice article...lets celebrate the historical victory..//

    Sure... :-)
    Thank you...

    ReplyDelete
  13. @ Sri

    Thank you Sri... :-)
    நிறைய கிரிக்கெட் பதிவுகள் தொடர்ந்து எழுதியாச்சு.... தொடர்ந்து IPLக்கும் எழுதினால் போர் அடிச்சுடும் இல்லையா... :-) IPL எப்படி போகுதுன்னு பார்ப்போம்.... :-)

    ReplyDelete
  14. @ Prakash

    //அருமையான வெற்றி அலசல் நண்பரே... இந்தியாவின் வெற்றி உங்கள் எழுத்தில் தெரிகிறது, //

    ரொம்ப நன்றி நண்பா... :-)

    ReplyDelete
  15. நம் வாழ்நாள் முழுக்க நினைவில் நிற்கும் தித்திப்பான வெற்றி. தோனியின் கர்ஜனை சிலிர்க்க வைத்தது. பதிவைப் படித்ததில் மீண்டும் போட்டியைப் பார்த்த திருப்தி. அருமையான இடுகை. வாழ்த்துகள்.

    மன்னிக்கவும், ஸ்ரீசாந்த் பற்றி சொன்னதை மட்டும் ரசிக்க முடியவில்லை.

    இந்த பதிவின் துவக்க பத்திகளைப் போலவே நானும் எனது இடுகையில் எழுதி இருந்தேன், இனிய ஆச்சர்யம் :)


    நீங்கள் எழுதிய அனைத்து 'கிரிக்கெட் இடுகை'களையும் ரசித்துப் படித்தேன். நன்றி பிரபு.

    ReplyDelete
  16. hmmm k na...
    waiting for ur next post.....

    ReplyDelete
  17. @ பாலா அண்ணா..

    //மன்னிக்கவும், ஸ்ரீசாந்த் பற்றி சொன்னதை மட்டும் ரசிக்க முடியவில்லை.//

    ஃபைனலில் ஸ்ரீசாந்தின் பவுலிங் மற்றும் செயல்பாடுகளுக்காக மட்டும் அத்தனை கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை அண்ணா.... தொடர்ந்து பலகாலமாய் சகவீரர்களை ஏசுவது போன்ற கேவலமான செயல்பாடுகளைப் பார்த்து வெறுத்துப்போய் இருந்த நேரத்தில் அதற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல இருந்தது இந்த ஃபைனல் போட்டியில் அவன் பௌலிங்கும் உடல்மொழியும்... எரிச்சலின் உச்சத்தில்தான் இதுபோல எழுதினேன்.... பதிவிலேயே அதற்கான வருத்ததையும் தெரிவித்திருக்கிறேன்... உங்களின் வாசிப்பை டிஸ்டர்ப் செய்திருக்கும்போது am sorry for that dear brother... :-)

    ஆஹா... இப்போதுதான் கவனித்தேன்... ரெண்டுபேரும் ஒரே கருத்தைத்தான் எழுதியிருக்கிறோம்... நிஜமாகவே ஓர் இனிமையான ஆச்சர்யம் ...

    //நீங்கள் எழுதிய அனைத்து 'கிரிக்கெட் இடுகை'களையும் ரசித்துப் படித்தேன். நன்றி பிரபு.//

    ரொம்ப‌ ரொம்ப‌ ந‌ன்றி அண்ணா... :-)

    ReplyDelete
  18. @ மாணவன்

    ரொம்ப நன்றி நண்பரே உங்களின் தொடர்ச்சியான ஊக்கத்துக்கும் அன்புக்கும் :-)

    ReplyDelete
  19. //@ பாலா அண்ணா..//

    'பாலா' என்றே அழைக்கலால், பிரபு :)

    ReplyDelete
  20. ஓகே பாலா... :-)))

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)