![]() |
| சூப்பர் கேம் சௌத் ஆஃப்ரிக்கா!! |
இந்த உலகக்கோப்பையில் முதன்முறையாக இந்தியாவின் பவுலிங்கும் ஃபீல்டிங்கும் ஓரளவு திருப்தியளித்த போட்டியிது! இது ஒரு தோல்விதான் எனினும் பவுலிங் ஃபீல்டிங் என்று ஓர் "ஊணம்" இல்லாமல் இந்திய அணியை நாற்பத்தி ஒன்பதாவது ஓவர் வரை துடிப்புடன் பார்க்கமுடிந்தது ஆறுதல்... ஆனாலும் அதனால் பலனிருக்கப் போவதில்லை என்பது வேதனை....
![]() |
| பந்தை விரட்டும் சச்சின் : சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு!! |
இந்தப் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டியது கேப்டன் தோணிதான்....! உலகக்கோப்பைக்குத் தயார் செய்கிறோம் என்று பரிசோதனை முயற்சி என்கிற பெயரில் கட்டாயம் அணியில் இடம்பிடிக்கப் போகும் வீரர்களை அலைக்கழித்த தேர்வுக்குழுவினர் இறுதியில் தேர்வு செய்துகொடுத்ததோ குறைபாடுள்ள அணியை! இது இப்படியிருக்க... இந்த வேளையில் இவரும் எதற்காக விஷப் பரிசோதனைகள் செய்து பார்க்கிறார் என்று விளங்கவில்லை... யூசுஃப் பதானை பேட்டிங் ஆர்டரில் ப்ரமோட் செய்வது "டிஸாஸ்டரஸ்" என்பது ஏற்கெனவே கண்கூடாக நிரூபணமானபின்னும்.... டூ டவுனில் எதற்கு இன்று யூசுஃப் பதானைக் களமிறக்க வேண்டும்... மேலும் மிகுந்த வலிமையானது என்று நாம் மார்தட்டிக்கொள்ளும் இந்த பேட்டிங் ஆர்டரில் ஒரு மாபெரும் அபத்தம் வெளிப்படையாக இருக்கின்றது.... அது காம்பீர், விராட் கோஹ்லி இருவரின் ஃபுட்டேஜ் பிரச்னை.... கம்பீரும் கோஹ்லியும் திறமையான "இன்-ஃபார்ம்" பேட்ஸ்மேன்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை இருப்பினும் அவர்கள் இருவரில் ஒருவர் ஒன் டவுனில் இறங்கலாமே தவிர இருவருமே ஓர் அணியில் இருக்கையில் பலன் பாதிக்கு மேல் கைகூடிவர வாய்ப்பில்லை என்பதுதான் சங்கடம்!.... கோஹ்லிதான் அணியின் நம்பிக்கை தரும் மிஸ்டர்.கன்ஸிஸ்டன்ஸி என்று தொடர்ந்து குறிப்பிட்டு வந்திருக்கிறேன்... ஆனாலும் டெத் ஓவர்களில் இவர் பேட்டிங் ஆர்டர் மாற்றிக் களமிறங்கும் பட்சத்தில் இவரது விக்கெட் டெயிலெண்டர்களுடன் ஒன்றாகத்தான் கணக்கில் போகிறது.... ஃபினிஷிங்கில் நன்றாக செயல்படக்கூடிய ரெய்னா (அவுட் ஆஃப் ஃபார்ம் என்றாலும்) வாய்ப்பே தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டுவிட்டதைக் கவனிக்க வேண்டும்! இன்றைக்கு பேட்டிங் பவர்ப்ளேவைத் திடீரென்று முப்பத்தியொன்பதாவது ஓவரில் கோரியதே வயிற்றில் சில்லடித்தது.... எதிர்பார்த்தவாறே சச்சினும் காம்பீரும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்... கோஹ்லி களமிறக்கப் பட்டிருந்தால் பவர்ப்ளே சொர்ப்பமாகப் போயிருந்தாலும் நிச்சியம் ஒரு முனை நிலைபெற்றிருக்கும்..... யுவ்ராஜ்-கோஹ்லி நிலைத்திருக்கவும் வாய்ப்புகள் அதிகம்.... அடுத்தடுத்து யூசுஃபும் தோணியும் சுமாராகக் காப்பாற்றியிருந்தால்கூட 330 ரன்களை சுலபமாக அடைந்திருக்க முடியும்...ஆனால் ஏற்கெனவே சூடுபட்டும் திருந்தாமல் மீண்டும் பேட்டிங் ஆர்டரைக் குழப்பி.... முந்நூறு ரன்கள்கூட இல்லாமல் ஆல் அவுட்டானது கேப்டன் தோணிக்கும் நம்ம பேட்ஸ்மேன்களுக்கும் ஷேம் ஷேம் பப்பி ஷேம்!
![]() |
| வெல்டன் ஜாகிர்! |
ஜாகிருக்கு இன்று ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஃப்ளையிங் கிஸ்ஸூம் பறந்திருக்கும்.... அற்புதமான கம்பேக்... பவுலிங்கின் முழுமையான ஆளுமை தெரித்தது ஆரம்ப ஓவர்களிலும், முக்கியமான அந்த 49வது ஓவரிலும்!! முப்பத்து ஏழு வயதில் பந்தை விரட்டிப்பிடிக்கும் சச்சினைப் பார்த்து நரம்பு புடைக்கிறபோது மறுமுனையில் நெஹ்ராவைப் பார்த்தால் ஹாஸ்பிடல் பென்டதால் வாசம் வீசுகிறது.....!! ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையையும் காயங்களால் பறிகொடுத்துவிட்டு சுத்தமாக ஃபிட்னஸ் இல்லாதனால் இளமை இருந்தும் டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ளமுடியாத வீரருக்கு மீண்டும் உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது என்றால் இவர் சோனியாகாந்திக்கு சொந்தக்காரரோ என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது!!! வேறு வழியில்லாத நிலையில் இவரையும் டிராவிட்டையும் இரண்டு வருடங்களுக்குமுன்பு அணிக்கு அழைத்தார்கள் சுமாராக செயல்பட்ட இவருக்கு அணியில் பெர்த் கன்ஃபார்ம் ஆக இஷாந்த், இர்ஃபான் போன்ற ஃபெயிலியர்களை மொத்தமாக நிராகரித்தார்கள்... விளைவு இன்றைய ஆட்டத்தின் கடைசி ஓவர்!!
![]() |
| க்ங்ராட்ஸ் சௌத் ஆஃப்ரிக்கா...! |
தென்னாப்பிரிக்காவின் வியூகம் இன்று அதகளம்.... தனது வீரர்களின் செயல்பாடுகளைச் சரியாக அறிந்து பொறுப்புகள் வழங்கப்பட்டு சொல்லியடித்த வெற்றி இது இடையில் தடுமாறினாலும்!! அசைக்கமுடியாத மலையாய் ஆம்லா இன்று தன்னுடைய பணியை முடிக்கும்வரை எந்த நிலையிலும் ரிஸ்க் எடுக்கவில்லை... ஸ்மித்தைப் பற்றிப் பிரச்னையில்லை ஏனெனில் ப்ரஷர் எதுவுமே இல்லாமல் பார்ட்னர்ஷிப் போடுவதற்குமட்டுமே அடுத்த விக்கெட்டாக காலிஸ் இருக்கிறார்.... இன்றைக்கு காலிஸ் இத்தனை அலட்சியமாக ரன்சேர்த்ததற்குக் காரணம் சேஸிங் அழுத்தம் அவர் தோள்களில் இல்லாததே காரணம்.... டிவில்லியர்ஸ் என்னும் "கில்லி"தான் இதுவரையிலான தொடரின் ஒரிஜினல் மேன் ஆஃப் தி ஸீரீஸ்.... எந்த லிஸ்டிலும் சேர்க்க முடியாத அந்த இரண்டு ரிவர்ஸ் ஸ்கூப்களும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றன... ஹர்பஜன் படாத பாடுபட்டு வெளியேற்றினார் டிவில்லியர்ஸை... ஆமலாவின் விக்கெட்டும் க்ளாஸ்.. ஹர்பஜனின் திடீர் எக்ஸ்ட்ரா பவுன்ஸரும் தோணியின் ரிஃப்ளேக்ஸ் கேட்சும் சூப்பர்ப்!!! டுமினி, வான் வைக், போத்தா, பீட்டர்ஸன் என்று எல்லாருமே இறுதிவரை அடித்து ஆடக்கூடியவர்கள்தான்... பிரஷரையும் சரியான இடைவெளிகளில் சொல்லிவைத்து குறைத்துக்கொண்டே வந்து தெளிவாக வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்காவுக்குத் தொடர்ந்து துரதிர்ஷ்டவசமாகத் தகர்ந்து வரும் உலகக்கோப்பைக் கனவு இம்முறையேனும் நனவாகட்டும்!! :-)
சேவக், காம்பீர் மறக்காமல் பாராட்டப் படவேண்டியவர்கள்... குட் பேட்டிங்..... சச்சின்(111) சேவக் (73) கம்பீர் (69) இவர்களுக்குப் பிறகு அணியின் டாப் ஸ்கோரர் உதிரிகளின் எண்ணிக்கைதான் (Extras) (15)!!!! இந்த ஒரு டேட்டா போதும்... க்வார்ட்டர் ஃபைனல் வரை நாமெல்லாம் எதுவும் பேசாமல் மௌனமாய் மற்ற போட்டிகளை வேடிக்கைப் பார்க்க....
இந்திய அணி : இன்னுமாடா நம்மள நம்புது இந்த நாடு????!!!!!!
Pictures Courtesy: Cricinfo.com
Luv,
Prabu M




நேற்று நடந்த மேட்ச்சில் நிச்சயம் பாரட்டப்பட வேண்டியவர் சச்சின் தான். மனுசன் இன்னும் 4 உலககோப்பை விளையாடலாம் போல.
ReplyDeleteநல்ல விமர்சனம். ஆனால் தலைப்பு கொஞ்சம் மாத்தியிருக்கலாம். ” பிற்பகல் செய்தது இரவு விளைந்தது “ . னு
ஏன்னா?. நடந்தது day night match பாருங்க..
:)
இன்னுமாடா நம்மள நம்புது இந்த நாடு????!!!!!!
ReplyDeleteஅண்ணே! வெந்த புண்ணுல, கையை விட்டு ஆட்டுறீங்களே. நல்ல அலசல்...
ReplyDeleteஎனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!
This comment has been removed by the author.
ReplyDelete:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))).....,,,,,,,,,,,,,,,,,,,,,,
ReplyDeleteடோனி எதுவும் கையூட்டு வாங்கிருப்பாரோ?? #டவுட்டு...:)
ReplyDeleteநெஹ்ராவை டிரெஸ்ஸிங் ரூம் இல் பஜ்ஜு பையன் அடி பின்னிருப்பானா? #டவுட்டு :)
ReplyDeleteஸ்ரீசாந்த் வாட்டர் பாய் ஆ கூட நேத்து என் கண்ணில் மாட்டலையே # வருத்தம் :))
ReplyDeleteபிபாஷா பாஸு,தீபிகா,அபிஷேக் எல்லாத்தையும் பார்த்துட்டு நம்ம பசங்க பார்ட்டி மூட் வந்துட்டாங்களோ அந்த லாஸ்ட் ஓவர் இல் # டவுட்டு :)
ReplyDeleteசகோ டி வில்லியர்ஸ் ஐ அவுட் ஆக்கிட்டு பஜ்ஜு முகத்தில் தெரிஞ்ச ஆக்ரோஷம் # ரசிப்பு :))
ReplyDeleteஜாகிர் கான் இன் அந்த 49 வது ஓவர் வரை சுமாராவது ஹோப் இருந்ததே # ஆதங்கம் :(
ReplyDeleteஅதெப்படி நம்ம பசங்க எதிர் அணி மட்டை ஆளுங்க ஓடி கிரீஸ் இல் அடைஞ்சு ஒரு மணி நேரம் :)) கழிச்சு அவளவு வேகமா :)) ரன் அவுட் பண்ணி அப்பீல் கேட்கிறாங்க :) # காமடி :))
ReplyDeleteகாம்பீர் ஏன் இவ்வளவு அழகாய் காட்ச் மிஸ் பண்றாரு:) # கலக்கல் :)))
ReplyDeleteஇன்னுமா நம்புறோம்...# இந்தியா மக்களின் பீலிங்க்ஸ்...:))
ReplyDeleteசச்சினின் ஸ்கோர் அதிக பட்சமாகும் மேட்ச் களில் ஏன் ஆபேரஷன் சக்சஸ்,பேஷன்ட் டைடு# வருத்தம் :((
ReplyDeleteஅந்த நாலு முட்டை வச்சு என்ன பண்ணுவாங்க பிரபு :) # சந்தேகம்...:)
ReplyDeleteபிரபு...உண்மையான கிரிக்கெட் ரசிகனின் ஆதங்கத்தை நல்லாவே இந்த கட்டுரையில் பிரதிபலிச்சிருந்த!!
ReplyDeleteநமது அணி எந்த அணியையும் 'பெரிய ஆள்" ஆக்கி விடுவார்கள். எங்கள் தெருவிலிருந்து ஒரு அணியை அனுப்பினாலும் அவர்களுக்கு நிகராக ஆடுவார்கள். வேதனை தான்.
ReplyDeleteபோன முறை அகர்கரை வைத்து டீமை சாகடித்தார்கள் இன்று நெஹ்ரா சாவ்லா ...... அரசியல் கட்சிகளும் இம்சை சிபாரிசுகளும் ஓடும்வரை இந்தியா அணி எவளவு தான் உயரே பறந்தாலும் இந்த இடை இம்சைகள் கிழே தள்ளிக் கொண்டு தான் இருக்கும் ...... நெஹ்ரா சாவ்லா இவர்களெல்லாம் எதற்காக எடுகபடர்கள் என்பது புரியாத புதிர்...... டோனி நல்ல கப்டன் தான் அனால் ஒரு க்ரிட்டிகல் நேரத்தில் இல்லை இந்த நேர செயல்பாடுகளை கங்குலியிடம் இருண்டு அவர் கற்றுக்கொள்ளவேண்டும் நேற்றைய போன்ற நிலைகளில் கங்குலி தோனியை விட பல மடங்கு சிறந்த கேப்டன்
ReplyDelete@ SaranR
ReplyDeleteமுற்றிலும் உண்மை நண்பா...
சச்சினின் உடல்தகுதி மற்றும் உள்ளதிடத்தை நேற்று பார்த்தபோது தேகம் சிலிர்த்தது....
சச்சின் இவ்வளவு கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் காட்டும்போது "சச்சினுக்கு உலகக்கோப்பை பெற்றுத் தருவோம்" என்று சூளுரைத்த இளம்வீரர்கள் மன உறுதியின்றி செயல்படுவது வேதனை.... காலிஸுக்கு தெஆ அணி ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் ப்ரஷ்ஷர் ஃப்ரீ களம் சச்சினுக்கு இறுதிவரை வாய்க்கவில்லை இந்திய அணியில்.... இன்னும் அழுத்தத்தையெல்லாம் அவர்தான் சுமக்க வேண்டியிருக்கிறது! :-(
@ சின்னப்பயல்
ReplyDelete:))))
நன்றி நண்பா...
@தமிழ்வாசி
ReplyDelete//அண்ணே! வெந்த புண்ணுல, கையை விட்டு ஆட்டுறீங்களே. நல்ல அலசல்...//
நன்றி நண்பா... உண்மைதான்... நேற்று மேட்ச் பார்த்துவிட்டு இதனை எழுதியபோது எனக்கும் சேம் பிளட்தான்!! :)
உங்கள் அறிமுகம் கிடைத்தது மகிழ்ச்சி :)
@ஆனந்தி அக்கா
ReplyDeleteஎன்ன சகோ.... சுனாமி மாதிரி அடிச்சுத் தள்ளிட்டீங்க :))
நேற்று மேட்ச் முடிஞ்ச உடனே இந்தியாவிலேயே சந்தோஷமா தூங்கப்போற ஒரே ஆள் நீங்கதான்னு நினைச்சேன்... நீங்கதான் சௌத் ஆஃப்ரிக்காவின் தீவிர விசிறி ஆச்சே!! :))
//டோனி எதுவும் கையூட்டு வாங்கிருப்பாரோ?? #டவுட்டு...:) //
அய்யோ!! இப்படி வேற கிளப்பிவிட வேண்டாம்... தோணி ரொம்பப் பாவம்.... ஏற்கெனவே அடிமேல அடி வாங்கிட்டு இருக்காரு கேப்டன் கூல்!!! ஆக்சுவலி நேற்று சௌத் ஆஃப்ரிக்கா நம்ம இந்திய புக்கிகளிடம் எதுவும் வாங்க மறுத்துவிட்டார்களோ என்பதுதான் என் டவுட்டு!! (ஐபிஎல் ல பாத்துக்கலாம்னு திட்டம் இருக்குமோ!!)
//நெஹ்ராவை டிரெஸ்ஸிங் ரூம் இல் பஜ்ஜு பையன் அடி பின்னிருப்பானா? #டவுட்டு :)//
நெஹ்ரா மேல யாரும் கையை வைக்க மாட்டாங்க சகோ... காரணம் அவர் பாடி தாங்காது!! கொலை கேஸாகிடும்னு எல்லாருக்கும் தெரியும்!! :))
//ஸ்ரீசாந்த் வாட்டர் பாய் ஆ கூட நேத்து என் கண்ணில் மாட்டலையே # வருத்தம் :)) //
கடைசி டிரிங்க்ஸ் ப்ரேக்குக்கு உள்ளே வந்தானே... அவன் வந்த நேரம் ஆட்டம் திசை மாறிடிச்சுன்னு என் நண்பன் ஒருவன் சபிச்சான்.... ஸ்ரீ சாந்த்துடைய ஜாதகம் அவ்ளோ வாட்ஸ் பவர்ஃபுல்லா!! :))
//பிபாஷா பாஸு,தீபிகா,அபிஷேக் எல்லாத்தையும் பார்த்துட்டு நம்ம பசங்க பார்ட்டி மூட் வந்துட்டாங்களோ அந்த லாஸ்ட் ஓவர் இல் # டவுட்டு :) //
இது சரியான டவுட்டு!! யோசிக்க வேண்டிய விஷயம்!!! :))
//சகோ டி வில்லியர்ஸ் ஐ அவுட் ஆக்கிட்டு பஜ்ஜு முகத்தில் தெரிஞ்ச ஆக்ரோஷம் # ரசிப்பு :)) //
அந்த கேட்சைப் பிடித்துவிட்டு ஹிந்தியில் ________ எனத் திட்டிய கோஹ்லியின் ஆக்ரோஷத்தையும் ரசித்தேன்!!! பஜ்ஜி நேற்று ஆம்லாவை அவுட் ஆக்கியது சூப்பரோ சூப்பர்!!
//ஜாகிர் கான் இன் அந்த 49 வது ஓவர் வரை சுமாராவது ஹோப் இருந்ததே # ஆதங்கம் :(//
சூப்பர் ஓவர் அக்கா அது!!! கடைசி இரண்டு டாட் பால்களுடன் நம்பிக்கை 99% வரை எகிறியது நிஜம்தான்... நெஹ்ராவைப் பார்த்தவுடனே.... எல்லாமே புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)
iniyavathu aswina kondu varuvaangala maattangala
ReplyDeleteநல்ல அலசல். எனெக்கென்னவோ பிக்சிங் official ஆ நடக்குதுன்னு நினைக்க தோணுது. சச்சினை தவிர வேறு யாரையும் நம்ப முடியவில்லை.
ReplyDelete///ஸ்ரீசாந்த் வாட்டர் பாய் ஆ கூட நேத்து என் கண்ணில் மாட்டலையே # வருத்தம் :)) //
ReplyDeleteகடைசி டிரிங்க்ஸ் ப்ரேக்குக்கு உள்ளே வந்தானே... அவன் வந்த நேரம் ஆட்டம் திசை மாறிடிச்சுன்னு என் நண்பன் ஒருவன் சபிச்சான்.... ஸ்ரீ சாந்த்துடைய ஜாதகம் அவ்ளோ வாட்ஸ் பவர்ஃபுல்லா!! :))//
ஐயையோ சகோ.. நான் அந்த செல்லத்தை :)) பார்க்கலை..எனக்கு மொதல்ல இருந்து வெளையாட சொல்லு...:))
//அதெப்படி நம்ம பசங்க எதிர் அணி மட்டை ஆளுங்க ஓடி கிரீஸ் இல் அடைஞ்சு ஒரு மணி நேரம் :)) கழிச்சு அவளவு வேகமா :)) ரன் அவுட் பண்ணி அப்பீல் கேட்கிறாங்க :) # காமடி :)) //
ReplyDeleteநோ அப்படியெல்லாம் சொல்லக் கூடாது அது சூப்பர் த்ரோ அக்கா... த்ரோ பண்ணது யாரு?? சச்சின்!! ஸோ இப்படியெல்லாம் பேசக்கூடாது..... அவுட் ஆகியிருக்காதான்னு ஓர் ஆசை தான்!! :)
//காம்பீர் ஏன் இவ்வளவு அழகாய் காட்ச் மிஸ் பண்றாரு:) # கலக்கல் :))) //
இல்ல அக்கா காம்பீரைத் திட்ட முடியாது.... அது ஒரு துரதிர்ஷ்டவசமான கேட்ச் மிஸ்.... கரெக்டான பொஸிஷன்லதான் காம்பீர் பந்தைப் பிடிக்கத் தயார் ஆனாரு... ஆனால் சரியான தருணத்தில் அவர் கால் இடறிடுச்சு... பேலன்ஸ் இல்லாம கேட்சை விட்டுட்டாரு.... அது அன்லக்கி!!!
//இன்னுமா நம்புறோம்...# இந்தியா மக்களின் பீலிங்க்ஸ்...:)) //
எனக்கு நேத்துதான் ஃபர்ஸ்ட் டைமா இந்தியா மேல நம்பிக்கை வந்தது... அதுவும் கடைசியில் டோட்டல் டேமேஜ்... தோணி தான் வில்லன்.... எல்லா விமர்சனத்துக்கும் பொறுப்பு தோணிதான்.. :(
//சச்சினின் ஸ்கோர் அதிக பட்சமாகும் மேட்ச் களில் ஏன் ஆபேரஷன் சக்சஸ்,பேஷன்ட் டைடு# வருத்தம் :(( //
ஸேம் ஃபீலிங்ஸ் அக்கா... :-((((
//பிரபு...உண்மையான கிரிக்கெட் ரசிகனின் ஆதங்கத்தை நல்லாவே இந்த கட்டுரையில் பிரதிபலிச்சிருந்த!!//
ReplyDeleteதேங்க்யூ சகோ!
Cup நமக்குதான் don t worry brother
ReplyDeleteCup நமக்குதான்
ReplyDeleteCup நமக்குதான்
Cup நமக்குதான்
Cup நமக்குதான்
Cup நமக்குதான்
Cup நமக்குதான்
Cup நமக்குதான்
@Rathnavel
ReplyDelete//நமது அணி எந்த அணியையும் 'பெரிய ஆள்" ஆக்கி விடுவார்கள். எங்கள் தெருவிலிருந்து ஒரு அணியை அனுப்பினாலும் அவர்களுக்கு நிகராக ஆடுவார்கள். வேதனை தான். //
:-)
உண்மை ரத்னவேல் சார்...
இது காலம்காலமாகத் தொன்றுதொட்டு துணைக்கண்டத்து கிரிக்கெட் வழக்கம்!! :)
ராஜ் அவர்களே,
ReplyDeleteCup நமக்குதான், ஆடுவதை பார்த்தா ல்(எந்த லகரம் என்று தெரியவில்லை)
ஆப்பு நமக்குதான்.
என் கையில் நேஹ்றவும் டோஹ்னிஉம் கிடைத்து இருந்தால், பிரித்து மேய்ந்து இருப்பேன்.
என் மதியத்தையும், மாலையும் வீண் அடித்து விட்டான்கள்.
நல்ல பதிவு நண்பா. தொடரட்டும் & வாழ்த்துக்கள்
muttal captain, overku 7 run vari valankuravankittae last over kodukiran evanuhaellam enna captain
ReplyDelete?, yuvaraj boul pannavitturukalam. india mulukka vunna thittuvangada ,nehra nee teama vittu cooli velakki poda
@Vijay Ramaswamy
ReplyDeleteஅதேதான்... அகார்க்கரின் இடம்தான் நெஹ்ரா மற்றும் சாவ்லாவால் நிரப்பப்பட்டுள்ளது....முனாஃப் இன்னுமொரு இம்சை... முதல்போட்டியிலேயே முடிவாகிவிட்டது ஸ்ரீ சாந்த் மொத்த தொடருக்கும் வாட்டர் பாய் என்று..... அஷ்வினை ஐபிஎல்லுக்காக தோணி பாதுகாத்து வைத்திருக்கிறார் போல... தோணியை நல்ல கேப்டன் என்று நம்பியவர்களுள் நானும் ஒருவன்... நேற்றைய போட்டிக்குப்பின் ஏதுமற்ற வெறுமைதான் நிலவுகிறது இந்திய அணியை நினைத்தால்....
//iniyavathu aswina kondu varuvaangala maattangala //
ReplyDeleteபைத்தியக்காரத்தனமா இருக்குது அஷ்வினை வீண் படுத்துவது.... பியுஷ் சாவ்லாவுக்கு வாய்ப்பு வழங்கி வீணானபின்னும் அஷ்வினைப் பயன்படுத்தாதது வியப்பை ஏற்படுத்துகிறது.... :(
@அஹோரி
ReplyDelete//நல்ல அலசல். எனெக்கென்னவோ பிக்சிங் official ஆ நடக்குதுன்னு நினைக்க தோணுது. சச்சினை தவிர வேறு யாரையும் நம்ப முடியவில்லை. //
நன்றி பாஸ்...
பிக்சிங் பற்றி இப்போதைக்கு எதுவும் புகையவில்லை என்றாலும் கிரிக்கெட்டும் ஃபிக்ஸிங்கும் பிரிக்க முடியாத அம்சம்தான்.... இந்தியா குறைந்தபட்சம் அரையிறுதி வரையாவது வந்தே ஆகவேண்டும் மீடியாவும் போட்டியமைப்பினரும் குறிவைத்திருக்கும் லாபம் பார்க்க.... இதுபோன்ற மார்க்கெட்டிங் டார்கெட்ஸ் இருக்கவே செய்கின்றன.... திடீரென்று இந்தியா க்வார்ட்டர் ஃபைனலில் கலக்கினால் கொஞ்சம் சந்தேகப்பட வேண்டியதுதான்! உண்மை சச்சினைத் தவிர யாரையும் நம்ப முடியவில்லைதான்... :(
@rajatheking
ReplyDelete//Cup நமக்குதான்
Cup நமக்குதான்
Cup நமக்குதான்
Cup நமக்குதான்
Cup நமக்குதான்
Cup நமக்குதான்
Cup நமக்குதான்//
வணக்கம் நண்பா...
நமக்குத்தான் என்கிறீர்களா? உங்கள் நம்பிக்கை பலித்தால் சந்தோஷம்தானே!!
ஆனால் இப்பொழுது ஒட்டுமொத்த தேசமும் வயிறெறிந்து கிடக்கின்ற நேரம் அதுதான் கொஞ்சம் சங்கடமா இருக்குது! :)
@ Hope
ReplyDelete//என் கையில் நேஹ்றவும் டோஹ்னிஉம் கிடைத்து இருந்தால், பிரித்து மேய்ந்து இருப்பேன்.
என் மதியத்தையும், மாலையும் வீண் அடித்து விட்டான்கள்.
நல்ல பதிவு நண்பா. தொடரட்டும் & வாழ்த்துக்கள் //
நிச்சியமாக... :)
நேரமெல்லாம் வீணாகித்தான் போனது பொறுப்பற்ற ஆட்டத்தினால்... நேர்லபோய் பார்த்த மக்களை நினைத்து ஆறுதல் பெற்றுக்கொண்டேன் நான் அவங்க ரொம்ப பாவம் இல்லையா! தோணி மேலதான் எனக்கு அதிகப்படியான எரிச்சல்...
நன்றி நண்பா....
//muttal captain, overku 7 run vari valankuravankittae last over kodukiran evanuhaellam enna captain
ReplyDelete?, //
அதேதான்... என்ன ஆச்சு தோணிக்கு??? என்பதுதான் இப்போதைய தேசிய கேள்வி!!
@ SaranR
ReplyDelete//நல்ல விமர்சனம். ஆனால் தலைப்பு கொஞ்சம் மாத்தியிருக்கலாம். ” பிற்பகல் செய்தது இரவு விளைந்தது “ . னு
ஏன்னா?. நடந்தது day night match பாருங்க..
:) //
அடடா.. இதைக் கவனிக்கலையே நான்!! :))
ஹஹா... கரெக்ட்தான் நண்பா.... பிற்பகல் செய்தது இரவு விளைந்தது!! சூப்பர்...
ஆனால் பழமொழியை மாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க அதுனாலதான்! :)) கேட்டா... பழமொழி சொன்னா அனுபவிக்கணுமாம்.. ஆராயக்கூடாதுன்னு சொல்லுறாங்க பெருசுங்க... ஹஹ்ஹா... வெரி நைஸ்... நன்றி நண்பா.... :)
அப்பாடி...விளையாடுறவங்க ஓய்ஞ்சு இருந்தாலும் பிரபு தூங்காம இருக்கீங்கபோல !
ReplyDeleteவணக்கம் ஹேமா அக்கா.. :)
ReplyDeleteஇவங்க இப்படி விளையாடும்போது எங்க தூங்குறது அக்கா :)))
மேட்சைப் பார்த்த எரிச்சலை எல்லாம் இங்கே இறக்கி வெச்சுட்டுதான் தூங்கப் போனேன் நிஜமா அன்னிக்கு!! :)
நன்றி அக்கா...
தங்கள் கதையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/03/blog-post_16.html
ரொம்ப நன்றி எஸ் கே!
ReplyDeleteகாலையிலேயே பார்த்துப் பின்னூட்டமும் போட்டுவிட்டேன்! :)
இப்பத்தான் பார்த்தேன்! மிக்க மகிழ்ச்சி! உங்கள் கதை மிக நன்றாக இருந்தது. நான் ரசித்ததை மற்றவரும் ரசிக்கட்டுமே என்று குறிப்பிட்டேன்!:-)
ReplyDeleteரொம்ப நன்றி நண்பா... :)
ReplyDeleteகாலையில் ஓர் இனிய ஆச்சர்யமாக இருந்தது வலைச்சரத்தில் என் கதையைப் பார்த்தபோது!
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
ReplyDeleteFuel Pump Manufacturers
Air Intake Manufacturers
Cold air intake Manufacturers
Manufacturer of Yoke in Chennai
Bastone Shaft manufacturers in Chennai
Adapter Plate Manufacturers
Gearbox Manufacturers
Pillow Block Bearing Manufacturers
Pipe Air Transfer Manufacturers in chennai
Induction Manifold Manufacturer
Intake Manifold Manufacturers
Elbow Fittings in Chennai
Aluminium Pipe Elbows manufacturers in Chennai