Wednesday, December 15, 2010

பாட்டி க‌தை (பாக‌ம் 3)

பாகம்- 1
பாகம்- 2     

                                                          பாட்டி க‌தை (பாக‌ம் 3)                                            

                                                                             9

நெஞ்சம் நிறைய சந்தோஷம் நிறந்திருந்தாலும் தூக்கம் வரத் தாமதம் ஆனது ஜீவாவுக்கு...

"பாட்டி வீடு" என்று தனக்கொரு இடம் பூமியில் இன்னும் எத்தனை நாள் இருக்கும்?? இன்று நாள்முழுதும் கேட்ட‌ அந்த‌க் கணிந்த‌ குர‌ல் இன்னும் எவ்வ‌ள‌வு நாள் ஒலிக்கும்...??? தொடர்ந்த கேள்விகளால் இன்று உற‌ங்கிவிடுவ‌து அவ்வ‌ள‌வு எளித‌ல்ல‌ என்று புரிந்த‌து!

பாட்டிவீட்டுச் சுவ‌ரில் க‌ம்பீர‌மாய் சிரித்துக் கொண்டிருக்கும் தாத்தாவின் புகைப்ப‌ட‌ம் ம‌னதைக் காரணமின்றி வ‌ட்ட‌ம‌டித்துக் கொண்டேயிருந்தது... தான் புகைப்ப‌ட‌த்தில் ம‌ட்டுமே க‌ண்டிருக்கும் தன் தாத்தா, மிக‌க் க‌ம்பீர‌மாக‌த் த‌ன்னுடைய‌ பெருமித‌ அடையாள‌மான, அவருடைய‌ கார் அருகில் வைத்து எடுத்துக்கொண்ட அதே படம்தான்!!

அந்த‌க் கிராம‌த்து ம‌ண‌ல்வெளியில் முத‌ன்முத‌லில் கார் ட‌யரின் அச்சுப்ப‌தித்த‌ பெருமைக்குரிய‌வ‌ர் ஜீவாவின் தாத்தாதான்! அந்த‌ப் பெருமையை ஊருக்குள் இன்றும் ச‌ந்தோஷ‌மாய்ச் சும‌ந்துவ‌ருகிறார் பாட்டி! இன்றைய உலகில் சாதார‌ண‌மாகிப் போய்விட்டாலும்... டிராஃபிக், பார்க்கிங்.. என‌ ஆயிர‌ம் இன்ன‌ல்க‌ள் இருந்தாலும்... "கார்"... தேவையும் ஆசையும் ஒருங்கே ஈடேறும் ஓர் அழ‌கிய‌ முத‌லீடு!!

புகைப்ப‌ட‌த்தில் பார்த்த‌ அந்தப் ப‌ழைய‌ மெட்டாலிக் ர‌தம், தாத்தா முக‌த்தின் பெருமித‌ப் புன்னகையோடு, இன்றுவரைப் பாட்டியை அக‌ம‌கிழ‌ச்செய்கிறது!!

கம்பெனி காரில் சென்றதைவிட ஒருவேளை பாட்டிவீட்டு வாசலில் தன் சொந்தக் காரில் சென்றிருந்தால்....???  சொந்தமா ஒரு கார் வாங்கி தாத்தாவுக்குப் பேரனா அந்த ஊர் மண்ணுல பாட்டிவீட்டு வாசலில் போய் நின்றால்...??

பாட்டிக்காகவே ஒரு கார் வாங்கினால் என்ன என்று சின்னதொரு சிந்தனை மின்னல் அவன் மனதைப் பிரகாசமாக்கியது!!


வேக‌மாய் விடிந்துவிட்ட‌து பொழுது..... முதுகைத் த‌ட்டிக்கொடுத்து ஆமோதித்தார் ராஜ‌கோபால‌ன் தன் ம‌க‌னின் கார் வாங்கும் திட்டத்தை.... வங்கிகள் இந்த மிட்டாய்க்கடை மேனேஜருக்கு (!) எவ்வ‌ள‌வு வேண்டுமானாலும் லோன் த‌ர‌க்காத்திருப்ப‌தால் திரும‌ணச் செல‌வுக‌ளில் கார் குறுக்கிட‌ப் போவ‌தில்லை!


 அடுத்தக்க‌ண‌மே ஃபோன் கால் ப‌ற‌ந்த‌து அஞ்ச‌லிக்கு.... அம்முனையும் ஆன‌ந்த‌ம‌ழை!!


"என்ன‌ கார் வாங்க‌லாம்??" என்ற‌ மில்லிய‌ன் டால‌ர் கேள்வியை அஞ்ச‌லியின் இஷ்ட‌த்துக்கு விட்டுவிட்டான் ஜீவா... ஆனால் த‌ன‌க்கு luxury கார் ப‌ற்றியெல்லாம் ஞான‌ம் அதிகம் கிடையாது என்று சொல்லிக் க‌ழன்றுகொண்ட‌ அஞ்ச‌லி த‌ன‌க்குப் பிடித்த‌ மெட்டாலிக் க‌ரும்ப‌ச்சை நிற‌ம் அமைந்தால் ம‌கிழ்ச்சி என்று ம‌ட்டும் கோரிக்கை வைத்தாள்!!!


"பாட்டிகிட்ட‌ சொல்லியாச்சா....??"


ஆர்வமாய்க் கேட்ட அஞ்சலியிடம்...


"நேர்ல‌ போறேன்.. என் பாட்டியோட‌ப் ப‌ல்விழுந்த‌ சிரிப்பு பார்க்க‌..!!"


சொல்லிக் கிள‌ம்பினான் ஜீவா!!!


                                                                            10


முன்கூட்டி சொல்லாம‌ல்தான் இம்முறையும் பாட்டியின் முன்னால் போய் நின்றான் ஜீவா....!  மீண்டும் பேரனைக் கண்ட அதிர்ச்சி வில‌காத‌ பாட்டியை அப்ப‌டியே தாத்தாவின் ஃபோட்டோவுக்கு அருகில் அழைத்துச் சென்று...

"உன் பேர‌னும் கார் வாங்க‌ப் போறான் பாட்டி!!!"

 என்று போட்டுடைத்தான்.....

என்னவொரு ஆனந்தமான‌ த‌ருண‌மது!! "ஏழைப்பேர‌ன்" லாட்ட‌ரி அடித்தது போல் திடீரென பாட்டியின் ம‌ன‌தில் உச்ச‌த்துக்குப்போய் வெற்றிக்கொடி நாட்டினான்!!! இந்த‌ ம‌கிழ்ச்சிப் பேர‌லைக‌ளை அந்த முதிய‌ இத‌யத்தால் தாங்கமுடியுமா?? என்று ச‌ந்தேகமே வ‌ந்துவிட்ட‌து ஜீவாவுக்கு.
...
ஆன‌ந்த‌மாய்த் தாத்தா ஃபோட்டோ ப‌க்க‌ம் திரும்பி கைகூப்பி ஏதோ முணுமுணுத்துப் பேர‌னின் நெற்றியில் ப‌க்தியுட‌ன் தில‌க‌மிட்டார் பாட்டி...

குழந்தையாய் சிரிக்கும் சந்தோஷப் பாட்டியிடம்.... என்ன கார் வாங்கலாம் என்று தேர்வு செய்வ‌த‌ற்காக‌ வைத்திருக்கும் மிக‌வும் விலையுய‌ர்ந்த‌ லேட்ட‌ஸ்ட் ஆட‌ம்ப‌ர‌ ம‌கிழ்வுந்துக‌ளின் ப‌ட‌ங்களையெல்லாம் தாங்கிய சில மோட்டார் இத‌ழ்களைக் காட்டிப் பாட்டியை மேலும் சந்தோஷப் பட வைக்க‌ ஜீவா வெளியே எடுத்துக் கொண்டிருந்தான்..... அப்போது திடீரென்று பாட்டி ச‌ற்று சீரிய‌ஸாக‌ ஜீவாவின் அருகில் வ‌ந்து....


"க‌ண்ட‌ காரை வாங்கி ஏமாந்துட‌க் கூடாது க‌ண்ணு..... தாத்தா வெச்சுருந்தாரு பாரு வெள்ளைக் க‌ல‌ர் அம்பாசிட‌ர் காரு... அதேமாதிரி காரையே நீயும் வாங்கிடுப்பா... ந‌ம‌க்கு ராசியான‌ காருய்யா அது!!!"

என்று பாட்டி சொல்ல‌ ஒரு நொடி திகைத்து நின்ற‌ ஜீவாவுக்கு கார் மீது லாரி மோதிய‌துபோல் இருந்த‌து!!

அப்ப‌டியே நின்றுவிட்ட‌ ஜீவாவிட‌ம் பாட்டி, இப்போது வ‌ந்திருக்கும் ப‌ல‌ கார்க‌ளைத் தான் பார்த்திருப்ப‌தாக‌வும்.. எல்லாம் "சோப்பு டப்பா" மாதிரி இருப்பதாகவும் (!) அந்த‌க் கால‌க் கார்க‌ளின் வ‌லுவான‌ உறுதி எதிலும் இல்லையென்றும்... காசுபோட்டுக் காரை வாங்கிக் காலை ம‌டக்கிக் குனிந்து அம‌ர்வ‌து அசௌக‌ரிய‌ம் என்றும் அடுக்கிக்கொண்டே போனார்!!! க‌வ‌ன‌மாக‌ ந‌ல்ல‌ அம்பாசிட‌ர் காராக‌ப் பார்த்துவாங்குமாறு பேரனுக்கு சீரிய‌ஸாக‌ அறிவுரை சொன்ன‌ பாட்டி ஜீவா சொல்ல‌ வ‌ந்த‌ எதையும் ஏற்ப‌தாக‌ இல்லை!!

                                                            
                                                                                11


வெள்ளையாக‌ விழுந்து விழுந்து ஃபோனில் சிரிக்கிறாள் அஞ்ச‌லி....!!!

ஜீவா ஃபோனைக் காதில் வைத்திகொண்டு அப்பாவியாய் பாட்டி சொன்ன‌தையெல்லாம் சொல்ல‌ச் சொல்ல‌ சிரித்து ர‌சித்த‌ அஞ்ச‌லி,

 "இப்போ என்ன‌ செய்ய‌ப் போறீங்க‌?? அம்பாசிட‌ர் கார் லேட்ட‌ஸ்ட் மாட‌ல் புக் ப‌ண்ணிடுவோமா!!"

என‌க் குறும்பாய்க் கேட்க‌ ஜீவாவும் த‌ன் பாட்டியின் உல‌க‌ம‌றியா குழந்தைத்த‌ன‌த்தை நினைத்து வாய்விட்டுச் சிரித்தான்.....!!

"பாட்டிக்காக‌த்தான் கார் வாங்குற கான்செப்டே ம‌ன‌சுல‌ வ‌ந்திச்சு அதுல இப்பவும் எந்த‌ மாற்ற‌மும் இல்ல‌... பாட்டியோட விருப்பப் படி வாங்கினால்தான் அதுல அர்த்தமே இருக்கு.... சின்ன வயசுல மிஸ் பண்ண ஒரு பெரிய விஷயம் இப்போ திரும்ப கிடைச்சிருக்கு... என்னோட அப்பாவி பாட்டிகூட சுவாரஸ்யமா ஒரு கார் விளையாட்டு விளையாட கொஞ்சம் லேட்டா ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு அவ்ளோதான்... இதை நான் மிஸ் பண்ணுறதா இல்ல.. !!.." ........

பாட்டியைத் த‌ன் தொழில்சார்ந்த‌ எம் பி ஏ பேச்சுத்திற‌னால்,  தான் வாங்க‌ எண்ணியிருக்கும் காரையே வாங்க‌ச் சொல்ல‌வைக்க தன்னால் மிக‌ எளிதில் முடியும் ... ஆனால் தான் அவ்வாறு செய்ய‌ப் போவ‌தில்லையென்று உறுதியாக‌ இருந்த‌ ஜீவாவிட‌ம் ..

"இதை எப்ப‌டி ச‌மாளிக்கப் போறீங்க‌னு நான் பாக்குறேன் பேராண்டீ !!!"

என்று அஞ்சலி ஃபோனில்  க‌லாய்க்க‌ ஆரோக்ய‌மான‌ இந்த‌ ச‌வாலை  ஏற்றுக்கொண்டான் ஜீவா!!


                                                                                                                     தொடரும்.......

அடுத்த பாகம் இங்கே!

6 comments:

  1. பிரபு, இன்னைக்கு ஆபீஸ் லீவா? அதற்குள் தொடரின் அடுத்த பாகம் ரிலீஸ் பண்ணிட்டீங்களே! :-)

    ReplyDelete
  2. ஏற்கெனவே எழுதிய கதைதான் அக்கா.... எடிட் பண்ணித்தான் பதிவிடுகிறேன்...
    ஆனால் எழுதுறதை விட அதுதான் அதிக நேரம் எடுக்குது!! :-(
    மதுரைக்குப் போற சந்தோஷத்துல நைட் ஃபுல்லா தூக்கமே இல்ல.... அதான் நைட் பூரா "பாட்டி கதை"யும் கையுமாவே உட்காந்துட்டேன்..... நாலாவது பாகமும் இன்றைக்குள்ள வந்திடும்.... இதை முடிச்சிட்டுதான் மறுவேலை!! ;‍) ஹஹஹா....

    ReplyDelete
  3. கதை எனக்குத் தெரிந்ததுதான்.இருந்தாலும் படிக்க சுவாரசியமாக இருக்கிறது.

    ReplyDelete
  4. நன்றி அண்ணா :)
    தொடர்ந்து எழுத தைரியம் தருது அண்ணா உங்க கருத்துரை!! :)

    ReplyDelete
  5. ஹ ஹா...அம்பாசிடர் கார் ஆ...பட் பாட்டியின் இந்த கால மாடர்ன் கார் பத்தி சொன்னது சூப்பர்....இந்த எபிசொட் டும் வெரி லைவ்லி..:) அஞ்சலி கலாய்க்கிறது கலக்கல்...:))

    ReplyDelete
  6. நன்றி சகோ.... :)

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)