Tuesday, December 21, 2010

பாட்டி கதை (பாகம் - 5)

   முந்தைய பாகங்களுக்கு இங்கே சொடுக்கவும்.....                                                   
                                                        
                                                          பாட்டி கதை (பாகம் - 5) 

                                                                           15

அடுக்கடுக்காய் மின்னும் வண்ண விளக்குகளின் ஒளியை மெட்டாலிக் ரதங்கள் பிரதிபலிக்க, ரம்மியமாய் ஜொலிக்கும் அந்த கார் ஷோரூமுக்குள் பாட்டியும் ஜீவாவும் அவர்களை வரவேற்ற அந்த இளம் எக்ஸிகியூட்டிவ் சீதாராமனைப் பின்தொடர்ந்து சென்றனர்.....

அந்தப் புதிய உலகத்தின் பிரம்மாண்டத்தைப் பாட்டியின் கண்களும்.... புதிய பாட்டிலில் ஊற்றப்பட்ட பழைய ஒயினாக மினுமினுத்துத்  தளும்பும் பாட்டியை ஜீவாவின் கண்களும்.... விடாது உற்றுநோக்கிக்கொண்டிருந்தன!!

மார்க்கெட்டின் அதிரடி எண்ட்ரியான அந்த ஜெர்மன் டெக்னாலஜியில் உருவான அவர்களின் பெருமைக்குரிய காரின் அருகே பாட்டியையும் ஜீவாவையும் அழைத்துச்சென்ற சீதாராமன்.... மிகமிகத் தன்னம்பிக்கையாகத் தன் காரின் டெக்னிகல் ப்ளஸ்பாயிண்டுகளை "வெல் மிஸ்டர் ஜீவா.....யூ ஸீ...." என்று துவங்கியதுதான் தாமதம்.... ஜீவா அவரை உடனே இடைமறித்தான்......

"ஸாரி பாஸ்...... இங்கே என் பாட்டிதான் கஸ்டமர்.......!! நான் ஜஸ்ட் அவங்களுக்கு டிரைவர்தான்...... அவங்க பார்த்து ஓகே பண்ணப்போற காரைத்தான் வாங்கப்போறோம்.... ஸோ நீங்க டைரக்டா அவங்ககிட்ட பேசுறதுதான் கரெக்ட்....!!!" என்று நட்பாகச் செல்லிவிட்டு ஜீவா நகர.....

கிராமத்து நாணத்தால் சற்றுத் தள்ளி நிற்கும் பாட்டியம்மாவை எட்டி நோக்கிய சீதாராமனுக்கு அவர்களுக்கிடையே ஒரு தலைமுறையின் இடைவெளியே தெரிந்தது!!!!!

"இந்த‌க் காரைப் பார்க்க‌லாமா பாட்டிம்மா?!!" என பவ்வியமாய்த் தன் பாட்டியின் தோள்களைப் பற்றிக்கொண்டுப் பாட்டியைப் பாசமாய் முன்னிறுத்திவிட்டு ஜீவா சற்று ஓரமாகச் சென்று அமர்ந்துகொண்டான்...!!! :)

சற்றும் எதிர்பார்த்திராத அந்த அதிரடியான மண்வாசனை கமழும் புதுக் கஸ்டமரைப் (!) பார்த்துப் புன்னகைத்த சீதாராமன் ஒருமுறை த‌ன் ஷர்ட்டின் "டை"(Shirt tie)யை ச‌ரிசெய்துகொண்டார்!!
சிரித்த முகமாகத்  த‌ங்க‌ள் காரின் டெக்னிக்க‌ல் ப்ள‌ஸ்பாயிண்டுக‌ளைப் பாட்டிக்கு ஏற்ற‌ மொழியில் எடுத்துச்சொல்ல‌த் தன்னை தயார்செய்துகொண்டு......

 " ... நம்ம கார் ஸாலிட் பாடி பாட்டியம்மா...... அதுமட்டுமில்ல.....  ஹைட்ராலிக் ச‌ஸ்பென்ஷ‌ன்ஸ்.....  சென்ட்ரல் லாக்..... பவர் விண்டோ....ஏர் பேக்...ஜிபிஎஸ்...... " என்று தன்னுடைய வழக்கமான பாணியில் டெக்னிக்கலாக அடுக்க ஆரம்பித்த சீதாராமன்..... ஒருமுறை அழுத்தமாக எச்சில் விழிங்கிக்கொண்டு...." ஹ்ம்ம்ம்ம்.... எப்ப‌டிச் சொல்ற‌து!!" என்று த‌ன‌க்குள் மென‌க்கெடுவதையெல்லாம் எதுவுமே தெரியாதவன்போல அமைதியாகத் தூர நின்று ரசித்திருந்தான் ஜீவா....!!! அப்படியே அவன் தன் பாட்டியை நோக்கிப் பார்வையைத் திருப்ப‌.....

 சீதாராமன் தன் உயிர்நோக உச்சரித்தக் கார் சம்பந்தமான கலைச்சொற்களை யெல்லாம் புரிந்துகொள்ள‌ அதிக‌ம் முய‌ற்சிக்காத  பாட்டியம்மா.... அந்தக்  காரையே சுற்றிச் சுற்றிப் பார்த்து, நடையில் தளர்ச்சியும், விழியில் மிரட்சியுமாய் உற்றுநோக்கிக்கொண்டிருந்ததை கொஞ்ச‌ம் வில‌கியிருந்து க‌ண்டு ர‌சிக்கையில் ஜீவாவுக்குக் க‌விதைக‌ள் தோன்றிய‌து ம‌ன‌துக்குள்!!! மெல்ல மெல்ல அந்தக் காரின் அருகில் சென்று அதனை ஒருமுறைத் தன் மென்மையான விரல்களால் தொட்டுப்பார்த்தார் பாட்டி!!!

இறுதியில் சீதாராமன் "ஃபீல் ஃப்ரீ அம்மா...." என்று சிரித்துப் பாட்டியைக் காருக்குள் அம‌ர்ந்து பார்க்க‌ப் ப‌ணித்தான்........சீதார‌ம‌னுக்கு உத‌வ ஓர் அழகான, குட்டைப் பாவாடை இள‌ம்பெண்ணும் சேர்ந்துகொண்டாள்!! பாட்டிய‌ம்மாவைப் பாந்த‌மாய் அழைத்துக் காருக்குள் அம‌ர‌வைத்தார்க‌ள்... பாட்டிக்கு ஸீட்பெல்ட் பொருத்திக்காட்ட‌ அந்த‌ இள‌ம்பெண் உத‌வ, அவளின் மிக்ச் சிக்கனமான உடையை வித்தியாச‌மாக‌ப் பாட்டி பார்த்த‌ பார்வை தூர‌த்திலிருந்து பார்த்த‌ ஜீவாவுக்கு சிரிப்பை வ‌ர‌வ‌ழைத்த‌து!!!

பாட்டிய‌ம்மா இப்போது டிரைவ‌ர் ஸீட்டில்!!! ஓட்டுந‌ரின் வ‌ச‌திக்கேற‌ப‌ப் பொஸிஷ‌னிங் செய்துகொள்ளும் வ‌ச‌தியுள்ள‌ எல‌க்ட்ரானிக் ப‌வ‌ர்ஸ்டிய‌ரிங்கில் கைவைத்துக் கொண்டுக் க‌ண்ணாடி வ‌ழியே பேர‌னைத் தேட‌த் துவ‌ங்கினார்.... !! பாந்தமாய்க் கையசைத்த ஜீவாவைப் பார்த்துப் பாட்டி புன்னகைக்கக்...... க‌டைசியாக இந்தக் காரை ஒத்த‌ ம‌ற்ற  கம்பெனி கார்களுட‌னான‌ ஒப்பீடு ம‌ற்றும் ப‌ல‌ப்ப‌லத் த‌க‌வ‌ல்க‌ள் அட‌ங்கிய‌ ப‌ள‌ப‌ள‌ பாம்ப்ளெட்டுக‌ளைப் பாட்டியிட‌ம் கொடுத்து விடைபெற்றனர் அந்தக் கார் கம்பெனிகாரர்கள்..... பாச‌மாக!!!

                                                                           16

இரண்டொரு நாட்களில் ஜீவாவின் இல்லத்தில் அஞ்சலி - ஜீவாவுக்கு  நிச்சியதார்த்தம்..... இரண்டு குடும்பங்களும் ஏற்கெனவே நீண்டகால நட்பால் நெருங்கியவைதான் எனினும் சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்பட்டு பெண்வீடாக ஜீவா தங்கியிருக்கும் அபார்ட்மெண்டிலேயே அவர்கள் குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு நண்பர் வீட்டை அமைத்திருக்க, இன்று இரவு பெண்வீட்டார் விஜயம்!! இந்த நேரத்தில் ஜீவா வீட்டில் இல்லாமல், பாசத்தைக் கொட்டிக்கொடுத்தாலும் தட்டிக்கழிக்கும் தன் அம்மாவுடன் (பாட்டியுடன்) ஊர்சுற்றிக்கொண்டிருப்பதை ராஜகோபாலன் ரசிக்கவில்லை....

இதேவீட்டில் தன்னுடைய அம்மாவைப் பலமுறை தன்னுடன் தங்கிவாழும்படி சகலபிரயத்தனங்களுடன் ராஜகோபாலன் முயற்சித்தும் தன் பாசத்தை உதாசீனப்படுத்திவிட்டதான குற்றச்சாட்டு ஆழமாகத் தேங்கிப்போயிருந்தது அவருக்குள்.....

தன் மனைவியிடம் கொதித்துத் தீர்த்துக்கொண்டிருந்தார் ராஜகோபாலன்.... தன் மகனின் பாசத்தையும் இந்தக் கிழவி உதாசீனப்படுத்தத்தான் போகிறாள் என்று கட்டியம் கூறினார் முழு நம்பிக்கையுடன்!!!

அஞ்சலி குடும்பத்தினர்...... வந்திறங்கினர்.... மருமகள் தன் வீட்டிற்குள் வலதுகால் வைக்கும் நேரம் வராததால் (!) சாஸ்த்தரலு.... சம்பிரதாயலு......பெண்வீடாக அமைத்திருந்த வீட்டில் அவர்களை வரவேற்கும் பணியில் ஜீவாவின் அம்மாவும் அப்பாவும் பிஸியாகினர்......

                                                                         17

கார் ஷோரூமைக் கலக்கிய தன் "முத‌லாளிய‌ம்மா"வை ம‌ரியாதைப் புன்ன‌கையுட‌ன் காரில் மீண்டும் அலுங்காம‌ல் அம‌ர‌வைத்து ஜீவா வ‌ண்டியை செலுத்தினான் அடுத்த‌ ஷோரூமுக்குள்!!!

அடுத்த‌டுத்து மூன்று கார் ஷோரூம்க‌ளுக்கு ர‌க‌ளையான‌ அதிர‌டி விஜ‌ய‌ம் கொடுத்துவிட்டப் பாட்டிய‌ம்மா க‌ளைப்படைந்து விடும்முன்பாக‌வே த‌ன‌க்கு மிக‌வும் பிடித்த‌மான‌வ‌ர்க‌ளை எப்போதும் அழைத்துச் செல்லும் ரெஸ்டாரெண்டில் ஏற்கென‌வே 'புக்' செய்து வைத்திருந்த‌ டேபிளில் பாட்டியை அம‌ர‌வைத்து ஆர்ட‌ர் செய்த‌ ஸ்பெஷ‌ல் உண‌வுக‌ளையெல்லாம் தானே பாட்டிக்குப் ப‌ரிமாறினான்!! பல‌ ஆண்டுக‌ளுக்கு முன்பு கிராமத்தில், பாட்டிக்குக் குட்டிப் பேரனாய்க் க‌ழித்த எவர்கிரீன் பொழுதுக‌ளுட‌ன் இன்றைய நாளின் அனுபவங்களும், ஒரு பேரனாக அவ‌ன் ம‌ன‌ம் அடைந்த‌ திருப்தியும் சேர்ந்துகொண்ட‌து.....

தன்னுடைய  மென்மையான விரல்களால் இலையை வ‌ருடி வ‌ருடி பாட்டி சாப்பிடுவதைப்  பாட்டியம்மா கவ‌னிக்காத‌ பொழுதெல்லாம் க‌ண்கொட்டாம‌ல் பார்த்துக்கொண்டே இருந்தான்!!! அத்தனை திருத்தமாக..... அந்த வலிமை குறைந்த கரங்களால் இலைச்சோறைக் கையால் உருண்டை பிடித்து மீதமிருந்த பற்களால் பாட்டி  சவைத்து சாப்பிடுவதைப் போலவே ஜீவாவும் சாப்பிட முயற்சித்துத் தோல்வியடைந்தான்!!! :)

ம‌ண‌ம‌க‌ள் தான் விள‌க்கேற்றப்போகும்  வீட்டுக்கு வ‌ந்து சேர்ந்துவிட்ட‌தாக‌க் குறுந்த‌க‌வ‌ல் வந்தது அஞ்ச‌லியிட‌மிருந்து!!!

வீடுநோக்கி ப‌ற‌ந்தார்க‌ள் பாட்டியும் பேர‌னும்... கார்ஷோரூம்க‌ளில் கொடுத்த‌ க‌ண‌க்க‌ற்ற‌ ப‌ள‌பள‌ ஃபாம்ப்ளெட்டுகள், நோட்டீசுக‌ளையெல்லாம் ப‌த்திர‌ப்ப‌டுத்தி சிர‌த்தையாய்த் த‌ன் பையில் வைத்துக்கொண்டார் பாட்டி!!

                                                                            18

பார்த்த மாத்திர‌த்திலேயே அஞ்ச‌லியைப் பிடித்துப்போன‌து பாட்டிக்கு!! அஞ்சலியும்  த‌ன் சொந்த‌ப் பாட்டியைப் போன்றேதான் ந‌ம் பாட்டிய‌ம்மாவையும் ஏற்கெனவே உணர்ந்திருந்தாள் ஜீவாவின் "பாட்டி கதை"களை நாளும் அலைபேசியில் கேட்டுக் கேட்டு!!!!

அஞ்ச‌லியின் த‌ந்தையும் ஜீவாவின் அப்பா ராஜ‌கோபால‌னும் முன்பே ந‌ண்ப‌ர்களாதலால் சிர‌ம‌மின்றி எளிதில் ஒட்டிக்கொள்ள‌ முடிகிற‌து அஞ்ச‌லிக்கு!! அதிக‌ம் ப‌ரிச்சிய‌மில்லாத‌ ஜீவாவுட‌னும் இப்போது "ஃபோன் ஃபிரெண்ட்" ஆகிவிட்டாள் அல்ல‌வா!!!  சிறிது நேரம் பெண்வீட்டாருடன் பேசிவிட்டு , ஜீவாவின் குடும்பத்தினர் தங்கள் வீட்டுக்குத் திரும்பினர்........ பாட்டியுடன்  ராஜகோபாலன் பேசிக்கொள்ளவில்லை!!!  ஜீவாவின் அம்மா புன்னகைத்து வரவேற்றார் பல நாள் கழித்துத் தன் அத்தையை......கிராமத்து ஸ்டைலில் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் யதார்த்தமாய்!!!

 நேரம் அதிக‌மாகிப் போய்விட‌ பாட்டிக்கென்று ஏற்கெனவே ஜீவா த‌ன் வீட்டில் ஏற்பாடு செய்து வைத்திருந்த‌ அறையில் மெத்தையில் ப‌டுக்க‌வைத்துக் க‌ம்ப‌ளியால் பொதிந்து விட்டான்..... நிம்ம‌தியாக‌ப் ப‌டுத்துத் தூங்குமாறு ப‌ணித்த ஜீவா ஏற்கென‌வே பாட்டியிடம் திட்டவட்டமாக  சொல்லிவிட்டான்....... இப்போது பார்த்த கார்களானாலும் சரி... தாத்தாவின் அம்பாஸிடர் காரானாலும் சரி...... பாட்டி சொல்லும் காரைத்தான் தான் வாங்கப் போவதாக!!!!!!

பாட்டிக்கான அறையைப்  பார்த்துப் பார்த்து ஜீவா தயார் செய்ததை அறிந்திருந்த ராஜகோபாலன் த‌ன் ம‌னைவியுடன், ஜீவா சென்றபின்,  பாட்டியின்  அறைக்கு அருகே சென்றார்........த‌ன் தாயின் வறட்டு குண‌த்தைப் ப‌ற்றித் த‌ன‌க்கு ந‌ன்கு தெரியும் என்று த‌ன் ம‌னைவியிட‌ம்  சொன்னவர்.... ஜீவா சிர‌த்தையோடு ப‌ஞ்ச‌னையும் க‌ம்ப‌ளியும் கொடுத்துப் பாச‌மாய்ப் ப‌டுக்க‌வைத்த‌தை உதாசின‌ப்ப‌டுத்திவிட்டு நிச்சிய‌ம் இந்நேர‌ம்‌ த‌ன் தாய் த‌ரையில் ஒரு  பாயை விரித்துதான்  ப‌டுத்திருப்பார் என்று ம‌னைவியிட‌ம் "பெட்"(bet) வைத்துக்கொள்ளாத‌ குறையாய்ச் சொல்லி  பாட்டியை மெதுவாக‌ப் பார்த்தார்க‌ள்....

 ச‌ரியாக‌வே க‌ணித்திருந்தார் ம‌க‌ன் த‌ன் தாயை!!  ப‌டுக்கையில் பாட்டியைக் காண‌வில்லை!!

கீழே தரையில் ஒரு மெல்லிய‌ விரிப்பில்தான் போர்த்திப் ப‌டுத்திருந்தார் பாட்டிய‌ம்மா.....

ஆனால் அவ‌ர் தூங்கியிருக்க‌வில்லை......  த‌ன் க‌ணிப்பு பொய்க்காத‌ப் பெருமித‌த்துட‌ன் ராஜ‌கோபால‌ன் இன்னும் கொஞ்ச‌ம் எட்டிப்போக....... பாட்டி த‌ன் க‌ண்ணாடியைப் போட்டுக்கொண்டு கார் ஷோரூம்க‌ளில் கொடுத்த‌ ஏடுகள் மற்றும் பள ப்ள பாம்ப்ளேட்டுகளை யெல்லாம் தரையில் விரித்துவைத்துக் கொண்டு மிகுந்த  சிர‌த்தையாய்த் தன் பேர‌னுக்குக் காரைத் தேர்வு செய்ய‌ மென‌க்கிட்டுக் கொண்டிருந்தார் ஏசி குளிருக்க்காகத் தன் உடலை இடுங்கிக் கொண்டு........!!!

பேச வார்த்தைகளின்றி மௌன‌மாக‌த் த‌ன் அறைக்குச் சென்றார் ராஜகோபாலன்..... இயல்பாய்க் கலங்கிய கண்களுடன்!

                                                                                                                                   (தொடரும்..... )    
அடுத்த பாகம் இங்கே!                                                          

7 comments:

  1. நல்ல சுவாரசியமாய் முன்னெடுக்கிறீர்கள்... இவ்வளவ தட்டச்சிட பொறுமையிருக்கிறதே அதே பெரிய அதிசயம்..

    மதி.சுதா.
    யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.

    ReplyDelete
  2. நன்றி மதி. சுதா :)
    தட்டச்சு அடித்தாலும் பொறுமையாகப் படிப்பதற்கு நன்றி நண்பா :)

    ReplyDelete
  3. வாங்க பிரபாகரன் :)

    ReplyDelete
  4. பிரபு...வடை சுட்ட பாட்டிக்கதையைத்தான் கேட்டிருக்கோம்.இந்தப் பாட்டிக்கதை மிகவும் வித்தியாசம்தான் !

    ReplyDelete
  5. ஹ..ஹா...so chweet sago..ரொம்ப அட்டகாசமாய் நகர்கிறது...i love this paatti...:))) சின்ன சின்ன சுவாரஷ்யங்களோட பட்டைய கிளப்புரிங்க சகோ..really love it...awaiting d next part..:))

    ReplyDelete
  6. //த‌ன் க‌ணிப்பு பொய்க்காத‌ப் பெருமித‌த்துட‌ன் ராஜ‌கோபால‌ன் இன்னும் கொஞ்ச‌ம் எட்டிப்போக....... பாட்டி த‌ன் க‌ண்ணாடியைப் போட்டுக்கொண்டு கார் ஷோரூம்க‌ளில் கொடுத்த‌ ஏடுகள் மற்றும் பள ப்ள பாம்ப்ளேட்டுகளை யெல்லாம் தரையில் விரித்துவைத்துக் கொண்டு மிகுந்த சிர‌த்தையாய்த் தன் பேர‌னுக்குக் காரைத் தேர்வு செய்ய‌ மென‌க்கிட்டுக் கொண்டிருந்தார் ஏசி குளிருக்க்காகத் தன் உடலை இடுங்கிக் கொண்டு......//
    //தன்னுடைய மென்மையான விரல்களால் இலையை வ‌ருடி வ‌ருடி பாட்டி சாப்பிடுவதைப் பாட்டியம்மா கவ‌னிக்காத‌ பொழுதெல்லாம் க‌ண்கொட்டாம‌ல் பார்த்துக்கொண்டே இருந்தான்!!! அத்தனை திருத்தமாக..... அந்த வலிமை குறைந்த கரங்களால் இலைச்சோறைக் கையால் உருண்டை பிடித்து மீதமிருந்த பற்களால் பாட்டி சவைத்து சாப்பிடுவதைப் போலவே ஜீவாவும் சாப்பிட முயற்சித்துத் தோல்வியடைந்தான்!!! :)//

    //பாட்டிய‌ம்மா இப்போது டிரைவ‌ர் ஸீட்டில்!!! ஓட்டுந‌ரின் வ‌ச‌திக்கேற‌ப‌ப் பொஸிஷ‌னிங் செய்துகொள்ளும் வ‌ச‌தியுள்ள‌ எல‌க்ட்ரானிக் ப‌வ‌ர்ஸ்டிய‌ரிங்கில் கைவைத்துக் கொண்டுக் க‌ண்ணாடி வ‌ழியே பேர‌னைத் தேட‌த் துவ‌ங்கினார்.... !! பாந்தமாய்க் கையசைத்த ஜீவாவைப் பார்த்துப் பாட்டி புன்னகைக்கக்.//

    cho..cho..chweet..awesome sago....it is so emotional and funny too...:))

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)