Monday, December 06, 2010

சினிமா வன்முறை : மினிதொடர் (பாகம் 2)


முதல் பாகத்தில் பகிர்ந்த ச‌ம்ப‌வ‌ங்களையே இன்னும் கொஞ்சம் ஆழமாக‌ யோசித்துப்பார்த்தோம் என்றால்....  அச்சம்பவங்களில் சினிமாக்களின் தாக்க‌ம் அப்ப‌ட்ட‌மாக‌த் தெரிந்தாலும் அவற்றில் காணப்படும் கொடூரமான மற்றும் மூடமான செய‌ல்க‌ளின் மூல காரணமான மனதின் வக்கிரங்களை விதைத்ததில் சினிமா மற்றும் ஊடகங்களின் தாக்கம் இருப்பதாகத் தோன்றாது!!

மனித மனதின் வ‌க்கிரங்களும், சைக்கோத்தனங்களும், மூடத்தனங்களும் நிச்சியம் சினிமா மற்றும் ஊடகத் தாக்கங்களின் பிரதிபலிப்பில் தோன்றுவதோ அல்லது புதிதாக முளைப்பதோ இல்லைதான்.... ஆனால் அவ்வாறு தோன்றும் மிருக எண்ணங்களுக்கு இந்தத் தாக்கங்கள் ஓர் இன்ஸ்ட்ருமெண்டாகி விடுவதை நிச்சியம் எவராலும் மறுக்க முடியாது....!

அடுத்த கட்டம் செல்லுமுன் தனிமனித சைக்காலஜிகளைக் கொஞ்சம் புறம்தள்ளிவிட்டு நம் சமூகத்தின் பொதுவான‌ ம‌ன‌விய‌ல் கோணத்தில் வன்முறையின் ஆஸ்தானத்தை யோசிப்போம்...

* ஆக்ஷ‌ன் ப‌ட‌ங்க‌ளுக்கு என்றுமே மினிம‌ம் கியார‌ண்டி உள்ள‌து ந‌ம் சமுதாயத்தில்... ஃப‌ர்ஸ்ட் ஹாஃபில் ஒரு பொண்ணை நான்குபேர் கொடூர‌மாக‌ ரேப் செய்வ‌தைக் காட்டிவிட்டு அந்த‌ நாலு பேரையும் சாதார‌ண‌ ஹீரோ ச‌ட்ட‌த்துக்கும் போலீஸுக்கும் தெரியாம‌ல் புத்திசாலித்த‌ன‌மாக‌ அதே நேர‌ம் கொடூர‌மாக‌க் கொலை செய்துவிட்டால் இப்போது கூட‌ போட்ட‌காசுக்கு ப‌ங்க‌ம் இல்லாம‌ல் ப‌ட‌ம் ஓடக்கூடிய அளவு வெற்றி பெறும் ஃபார்முலாதான் இது...

* எம் ஜி ஆர் கால‌த்தில் ச‌ண்டைக்காட்சிக‌ள் க‌லையாக‌வும் வித்தையாக‌வும் அறிய‌ப்ப‌ட்டிருந்த‌தை ம‌ற‌ந்துவிட‌க் கூடாது...

* வில்லன் க‌டைசி சீனில் திருந்தினாலோ(!), அல்ல‌து "டுட்டுர்ர்ருட்டுட்டுட்டுர்ர்ர்ருட்டுர்ர்ர்" என்ற (சிரிப்புப்) போலீஸ் மியூசிக்குடன் மேலே சுட்டுக்கொண்டு "ஹேண்ட்ஸ் அப்" என்று க‌டைசி காட்சியில் காக்கிச்சட்டைகள் திடீரெனத் தோன்றி வில்ல‌ன்க‌ளை அரெஸ்ட் செய்தாலோ, அவ்வளவு பின்னோக்கிப் போவானேன்...ஹீரோ க்ளைமேக்ஸில் கொஞ்சம் சிம்பிளாக‌ வில்லனைக் கொன்றுவிட்டால் கூட ந‌ம‌க்கு இப்போதெல்லாம் டிக்கெட் வாங்கிய‌ காசுக்குப் போதுமாகிவிடுகிற‌தா?? "வில்ல‌னை சிம்பிளா கொன்னுட்டாங்க‌ப்பா.... அவ‌னை இன்னும் கொடூரமா அணுஅணுவா கொன்னுருக்க‌னும்" இதுபோன்ற‌ வார்த்தைக‌ளைப் பேசுவ‌து சாதார‌ண‌ ம‌னித‌ர்க‌ளான‌ ந‌ம்முடைய‌ வாய்க‌ள் தானே!!

ஆக ஒரு ச‌மூக‌மே வ‌ன்முறையை நேசிப்பதும் வன்முறையில் ஆசுவாசம் காண்பதும் க‌ண்கூடாக‌ இருக்கும்போது அதே சமூகத்தின் ஒரிஜினல் வன்முறைகளுக்கு "சினிமா" என்னும் கொழுத்த பணம் புரளும் "பிஸினஸ்" ஒரு ந‌ல்ல‌ இன்ஸ்ட்ருமெண்ட்டாகி இருப்பதில், சமூக அக்கறையும் கவனமும் கொஞ்சமும் இல்லாத நம் சமுதாயத்தில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது?
 
இவை அத்த‌னையும் விட்டுவிடுவோம்... குற்ற‌ங்க‌ள் ம‌ற்றும் வ‌ன்முறைக்குப் பின்னால் சினிமா இல்லை என்று க‌தறிக் காசுபார்க்கும் மீடியாக்க‌ளையும் விட்டுவிடுவோம்... ப‌ள்ளிக‌ளில் மாண‌வ‌ர்க‌ள் ஒருவ‌ருக்கொருவ‌ர் போட்டுக்கொள்ளும் "ச‌ண்டைக‌ள்" ச‌க‌ஜ‌மான‌வை.....
 என் அப்பா காலத்தில் எம் ஜி ஆர் ரசிகர்களான ஸ்கூல் மாணவர்கள், சுற்றி ந‌ண்ப‌ர்க‌ள் புடைசூழ‌ பாக்ஸிங் ஸ்டைலில் "குத்துவ‌ரிசை" போட்டு ப‌ல‌த்தின் ப‌ராக்கிர‌ம‌த்தை சோதித்துக் கொண்டார்களாம் வாத்தியார் கண்ணில் படாமல்........  நான் ப‌ள்ளியில் ப‌யின்ற‌ கால‌த்திலும் அதேதான், என்ன ஒரு வித்தியாசம்... ச‌ண்டையில் அடித்துக்கொள்ளும்போது "டிஷ்யூம்" ச‌த்த‌த்தை வாயால் கொடுத்து சேர்த்துக்  கொண்டோம்!!

ஆனால்....

 இப்போது ப‌ள்ளிக‌ளில் காணும் ச‌ண்டைக‌ளைப் பார்க்கும்போது விபரீத‌மாய் இருக்கிற‌து.... க‌ழுத்தைப் பிடித்து திருகுவதும்.. ப‌ற‌ந்து வ‌ந்து மூஞ்சில் உதைப்ப‌தும்... த‌ண்ணீரில் முக்குவதுமாய் ஆபத்தான வன்முறைகள்.... இதையெல்லாம் செய்வ‌து ப்ரைம‌ரி ஸ்கூல் பிஞ்சுகள்!!!

இந்த‌ விப‌ரீத‌ம்.... குற்ற‌மில்லை.... வ‌க்கிர‌மில்லை... சைக்கோத்த‌ன‌மும் இல்லை....சொல்லப்போனால் "குழ‌ந்தைத்த‌னம்" என்று தான் சொல்லவேண்டும்......  இத‌ற்குப் முழுப்பொறுப்பும், மூல‌கார‌ணமும் எல்லாமுமே சினிமாவும் அதில் ர‌சித்து ர‌சித்துக் காட்சிப்ப‌டுத்த‌ப்ப‌டும் அதீத கற்பனைகளுடன் கூடிய‌ வ‌ன்முறைக்காட்சிகளே..... இத‌னை எந்த‌ ச‌ர்வே கொண்டும் காப்பாற்ற‌ முடியாது......!!

ஆனாலும்..... ந‌ம்ம‌ ச‌முதாய‌த்தில் பிழை க‌ண்டுபிடிப்ப‌த‌ற்கும் நிரூபிப்பதற்கும் நெற்றிக்க‌ண் தேவையில்லை...ஏன் சாதார‌ண‌ ந‌ம் க‌ண்க‌ள்கூட அவசியமில்லை இங்கிருக்கும் குறைகள் காண!!  எனவே "சினிமாதான் கார‌ணம்" என்று கொக்க‌ரித்தாலும், கூக்குர‌லிட்டாலும்... அது அப்ப‌டியே எதிரொலித்து  மீண்டும் கேட்க‌த்தான் செய்யுமே த‌விர‌ எதுவும் மாறாது... ஆனால் ந‌ம்மை இந்த‌த் தாக்க‌ங்க‌ளிலிருந்து அப்புற‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ முடியும்.....

                                                                                                                                     (தொட‌ரும்...)

(இதேபோல ந‌ம் அனைவ‌ருக்கும் தெரிந்த‌ விஷ‌ய‌ங்க‌ளையே மீண்டும் மீண்டும் வ‌லியுறுத்தி நாளை மூன்றாம் பாக‌த்தோடு முடிவ‌டையும்)

18 comments:

  1. சினிமா வன்முறையை ரசிப்பது உள்மன ஆசையின் வெளிப்பாடு! எல்லோருக்கும் உள்ள சமூக கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த ரசிப்புத்தன்மை! ஆனா அளவோடு உள்ள இந்த ரசிப்புத்தன்மையை இன்னும் தூண்டிவிட்டு காசு பார்க்கும் கூட்டந்தான் இந்த திரைத்துறை!!

    ReplyDelete
  2. ஆனால் ந‌ம்மை இந்த‌த் தாக்க‌ங்க‌ளிலிருந்து அப்புற‌ப்ப‌டுத்திக்கொள்ள‌ முடியும்.....

    .....அதை பலர் உணர்வதே இல்லை. காட்சிகளை பார்த்து, மனது மரத்து போய் விடுகிறது. சின்ன குழந்தைகளுக்கும், இந்த வன்முறை காட்சிகளை காட்ட தேவை இல்லை என்பதை கூட மறந்து விடுகிறார்கள். :-(

    ReplyDelete
  3. வைகை குறிப்பிட்டதை போல்"சினிமா வன்முறையை ரசிப்பது, உள்மன ஆசையின் வெளிப்பாடு!" என்ற கருத்து எனக்கும் உண்டு.

    ஓவ்வொரு மனிதனுக்கும் யாரிடமும் சொல்லாத ஆள்மனது ஏக்கம் உண்டு.
    உதாரணமாக,
    1. தானே தலைவனா(வியா)க இருப்பது, தன் தலைமையை எதிர்ப்பவரை (அல்லது தலைமையை நிலை நாட்டுவதற்கு தடையாக இருப்பவரை) அடக்குவது அல்லது துன்புறுத்துவது.
    இதனால் தான் சண்டை காட்சிகளும், வன்முறையும், ஏன் காமெடியும் ரசிக்கப்படுகிறது.

    2. எதிர் பாலினத்தை தன்னிடம் மயக்குவது,
    இதனால் தான் நடனம், இசை வரவேற்கப்படுகிறது.

    3. செக்ஸ் ......
    இதை பற்றி உலகத்திற்கே தெரியும், நான் சொல்லவேண்டியது இல்லை.

    உலகம் முழுவதும், கலாச்சார வேறுபாடு இருந்தாலும், வன்முறையும், காமெடியும், இசையும், செக்ஸும் ரசிக்கப்படுவது இதனாலும் தான்.

    ReplyDelete
  4. குழந்தைகளையும் சினிமா வன்முறை பாதிக்கிறது தான். ஆனால் சினிமாவிற்கு முன் கார்ட்டூன் அதை செய்து விடுகிறது. உதாரணம், டாம் அன்ட் ஜெர்ரி, அதில் இல்லாத வன்முறையா?
    (என்ன, குழந்தைகள் ஒரு செயலுக்கு பிறகு ஏற்படும் விபரீதம் பற்றிய அறிதல் இல்லாதவர்கள். )

    ReplyDelete
  5. //சினிமா வன்முறையை ரசிப்பது உள்மன ஆசையின் வெளிப்பாடு!//

    முற்றிலும் உண்மை நண்பா...
    ஆக்ஷன் திரைப்படங்கள் அமோக வரவேற்பைப் பெறுவதன் ஒரே காரணம் இதுதான்...

    ReplyDelete
  6. //.....அதை பலர் உணர்வதே இல்லை. காட்சிகளை பார்த்து, மனது மரத்து போய் விடுகிறது. சின்ன குழந்தைகளுக்கும், இந்த வன்முறை காட்சிகளை காட்ட தேவை இல்லை என்பதை கூட மறந்து விடுகிறார்கள். :-( //

    கரெக்ட் அக்கா...

    அங்கேதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது...
    அக்கறையில்லாத சமுதாயத்தில் பெற்றோரும் ஆசிரியர்களும் மூத்தவர்களும்தான் அதிக பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  7. @ vaarththai

    வணக்கம் நண்பா....

    இந்தப் பாகத்துக்கும், முந்தைய பாகத்துக்கும் சேர்த்து வந்த பின்னூட்டங்கள் அனைத்துமே எனக்கு 100% ஏற்புடையவைதான்...


    //உலகம் முழுவதும், கலாச்சார வேறுபாடு இருந்தாலும், வன்முறையும், காமெடியும், இசையும், செக்ஸும் ரசிக்கப்படுவது இதனாலும் தான்//

    நீங்களும் வைகையும் காரணங்களை அழகாக அறுதியிட்டிருக்கிறீர்கள்....
    நான் அதான் ஏற்படும் நடைபெறும் விளைவுகளில் கவனம் செலுத்தியுள்ளேன்....

    //குழந்தைகளையும் சினிமா வன்முறை பாதிக்கிறது தான். ஆனால் சினிமாவிற்கு முன் கார்ட்டூன் அதை செய்து விடுகிறது//

    வீடியோ கேம்க‌ள் வெர்ச்சுவ‌லாக‌ கொலைவெறியையே உருவாக்கித் த‌ணிக்கிற‌து!!!
    சினிமா வ‌ன்முறை என்று சினிமாவை ம‌ட்டும் குறிவைப்ப‌து என் நோக்க‌ம‌ல்ல‌... கார்ட்டூன், சேன‌ல்க‌ள், எழுத்து மீடிய‌ம் எல்லாமும் இதில் அட‌ங்கும்தான்...


    அருமையான பின்னூட்டங்கள் கொடுத்து இந்தத் தொடருக்கு ஒரு வடிவம் கொடுத்திருக்கும் ஒவ்வொரு நட்புக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்...

    ரொம்ப நன்றி வார்த்தை :-)

    ReplyDelete
  8. அன்றைய அமைதியான உலக நடப்புக்களும் இன்று மாறியிருக்கிறதுதானே பிரபு.அதனால் மக்களின் மனநிலையும் ரசிக்கும் தன்மையும் மாறியிருக்கிறதோ !

    ஆழமாகச் சிந்திக்கிறீர்கள் பிரபு.அன்றைய சினிமா ஏதோ ஒரு நல்ல விஷயத்தைச் சொன்னது...இன்று வியாபாரம்தானே !

    ReplyDelete
  9. //ஆக்ஷ‌ன் ப‌ட‌ங்க‌ளுக்கு என்றுமே மினிம‌ம் கியார‌ண்டி உள்ள‌து ந‌ம் சமுதாயத்தில்... ஃப‌ர்ஸ்ட் ஹாஃபில் ஒரு பொண்ணை நான்குபேர் கொடூர‌மாக‌ ரேப் செய்வ‌தைக் காட்டிவிட்டு அந்த‌ நாலு பேரையும் சாதார‌ண‌ ஹீரோ ச‌ட்ட‌த்துக்கும் போலீஸுக்கும் தெரியாம‌ல் புத்திசாலித்த‌ன‌மாக‌ அதே நேர‌ம் கொடூர‌மாக‌க் கொலை செய்துவிட்டால் இப்போது கூட‌ போட்ட‌காசுக்கு ப‌ங்க‌ம் இல்லாம‌ல் ப‌ட‌ம் ஓடக்கூடிய அளவு வெற்றி பெறும் ஃபார்முலாதான் இது//

    ஓவரா அர்ஜுன் படம் பார்க்க வேண்டியது...அப்புறம் இப்படி புலம்ப வேண்டியது...என்ன உலகமடா சாமி..:)))( அர்ஜுன் பட டிவிடி யும் குடுப்பேன்னு சொன்னால் பிச்சு புடுவேன் பிச்சு...:))) ))

    ReplyDelete
  10. //மேலே சுட்டுக்கொண்டு "ஹேண்ட்ஸ் அப்" என்று க‌டைசி காட்சியில் காக்கிச்சட்டைகள் திடீரெனத் தோன்றி வில்ல‌ன்க‌ளை அரெஸ்ட் செய்தாலோ//
    பிரபு...ஆக்சன் படத்திலேயே..அந்த காமடி தானே நமக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்...:)))

    ReplyDelete
  11. இதுல என்ன கொடுமைனால்...வன்முறை படம் எல்லாம் பெரும்பாலும் நம்ம மதுரைய சுத்தி நடக்குறமாதிரி தான் எடுக்கிறாங்க...) (ஏற்கனவே நம்ம ஊரு பயலுங்க சண்டியர் ரேஞ்சில் சுத்திட்டு இருக்காங்க...இது வேற கூட கொஞ்சம்...))இதை யாராவது எதிர்த்து கட்சி..கிட்சி..ஆரம்பிக்க மாட்டாங்களா ...:))

    ReplyDelete
  12. சினிமா ஒரு பக்கம் இருந்தாலும்...கம்ப்யூட்டர் கேம்ஸ் ரூபத்தில் வீட்டுக்குளேயே குழந்தைகளுக்கு வருது...நம்ம மதுரை சரவணன் சார் அவரோட ஒரு பதிவில் செமத்தியா இதை பத்தி சொல்லி இருந்தார் பிரபு....எத்தனை விஷயங்களில் நாம் முன்னேறினாலும் மனசளவில் இன்னும் நாகரிகம் நமக்கு வரலை...அதுல இன்னும் பின்னோக்கி தான் இருக்கோம்....

    ReplyDelete
  13. இப்போலாம் சினிமாவே எப்படி மாட்டிக்காமல் கொலை பண்றதுன்னு கூட சொல்லி தருது..உதாரணம் ஆசை,ஈரம் படங்கள்...

    ReplyDelete
  14. //அன்றைய அமைதியான உலக நடப்புக்களும் இன்று மாறியிருக்கிறதுதானே பிரபு.அதனால் மக்களின் மனநிலையும் ரசிக்கும் தன்மையும் மாறியிருக்கிறதோ !//

    இதுவும் ஆழமான உண்மை அக்கா...
    திரையில் காணும் வன்முறைகளின் மனரீதியான பாதிப்புகளைப் பற்றி நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்...
    எத்தனை பிஞ்சுகள் நிஜ வன்முறையினால் எவ்வளவு மனஅழுத்தத்துக்கு ஆளாகியிருப்பதை நித்தமும் நீங்கள் கண்கூடாக பார்த்திருப்பீர்கள்.... உலக நடப்புகள் கொடூரமாக மாறியிருக்கிறதுதான் அக்கா.... தலைவணங்குகிறேன் உங்கள் கருத்துக்கு தலைகுனிவதற்கு பதிலாக ஒரு தமிழனாய் :-(

    ReplyDelete
  15. //அர்ஜுன் பட டிவிடி யும் குடுப்பேன்னு சொன்னால் பிச்சு புடுவேன் பிச்சு...:))) ))//

    அர்ஜுன் படம் வேணும்னா கூச்சப்படாம கேக்க வேண்டியதுதானே... :)))
    இப்படி கேட்டா நான் கண்டிப்பா வாங்கிடுவேன்னு தெரிஞ்சே எழுதுறதப்பாரு!!!

    "வல்லக்கோட்டை" ஓகேயா சிஸ்டர்???!! ;-)

    ReplyDelete
  16. //(ஏற்கனவே நம்ம ஊரு பயலுங்க சண்டியர் ரேஞ்சில் சுத்திட்டு இருக்காங்க...இது வேற கூட கொஞ்சம்...))இதை யாராவது எதிர்த்து கட்சி..கிட்சி..ஆரம்பிக்க மாட்டாங்களா ...:)) //

    அவ்ளோதான.... நம்ம ஆரம்பிச்சுடுவோம்!!! :)

    //சினிமா ஒரு பக்கம் இருந்தாலும்...கம்ப்யூட்டர் கேம்ஸ் ரூபத்தில் வீட்டுக்குளேயே குழந்தைகளுக்கு வருது...//

    கம்ப்யூட்டர் கேம்ஸ் ஒரு மேஜர் வில்லன்.... அடிதடி.. கொலை எல்லாத்துக்கும் கொலைவெறிக்கு ஒரு வெர்ச்சுவல் திருப்தியே கிடைக்குது இப்போ உள்ள மோஷன் டிடெக்டர் ஜாய்ஸ்டிக்குடன் கூடிய ப்ளேஸ்டேஷன்களில்.... யோசிச்சுப்பார்த்தா வீடியோகேம்களும் சினிமா வன்முறை விருப்பத்தின் தாக்கம்தான் சகோ...

    ReplyDelete
  17. //அர்ஜுன் படம் வேணும்னா கூச்சப்படாம கேக்க வேண்டியதுதானே... :)))
    இப்படி கேட்டா நான் கண்டிப்பா வாங்கிடுவேன்னு தெரிஞ்சே எழுதுறதப்பாரு!!!

    "வல்லக்கோட்டை" ஓகேயா சிஸ்டர்???!! ;-)//

    ஓகே..ஓகே...நம்ம அஞ்சா நெஞ்சன் அழகிரிக்கு ஒரு மனு குடுக்கணும் னு நினைக்கிறேன்...ஒரு பையன் டிவிடி கொடுப்பேன்னு மிரட்டுரானு...ஹ ஹ...தம்பி உடம்பு பத்திரம் பா....:)))

    ReplyDelete
  18. என்னது டிவிடி கொடுக்குறேன்னு மிரட்டுறானா??
    யாரு அவன்??? பிரபுவா அவன் யாரு?? அர்ஜுன்னா இந்த ஒருநாள் முதல்வரா இருந்தாரே அவரா????

    ஆளவிடு தங்கச்சி... நான் அடுத்தவாரம் மதுரைக்கு போகணும்!!!! போறதைவிட முக்கியம் போய்ட்டு உசுரோட திரும்பி வரணும்!!! :-)))

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)