ஆனால் நீங்கள் பயப்படும் அளவுக்கு இதுவும் ஒரு விஜய் படம் அல்ல... சொல்லப்போனால் ஒரு நல்ல படம்.... கமலும் கௌதமும் கைகோர்த்த "வேட்டையாடு விளையாடு" -an another episode in a police officer's life!!
"குருவி"க்குக் கூடவந்த அதே பாசக்காரப் பட்டாளத்தோடதான் இந்தப்படத்துக்கும் கிளம்பினேன்....
2006.....மதுரை மதி தியேட்டர்...
"மதி"யில் புதுப்படம்னா ஏஏ ரோட்டில் கூட்டம் அம்மும்... மேட்னி ஷோவுக்கு டைம் வேற ஆச்சு...
நாங்க நாலுபேர்....
எங்களுக்கு பயம் இல்ல....
டிபார்ட்மெண்ட்ல எங்களை எல்லாரும் எங்களோட சொந்த பேர் சொல்லிதான் கூப்பிடுவாங்க!!! (என்ன டயலாக்னு புரியுதுதானே!!)
அதாவது எங்களுக்கு ஏன் பயம் இல்லன்னா..... ஏற்கெனவே டிக்கெட் வாங்கிவைக்க சொல்லி தியேட்டருக்குப் பக்கத்துல ஒரு டீக்கடைக்காரனுக்கு இருபது ரூபா குடுத்து வெச்சிருந்தேன்!!!
"க்யூல நின்னு டிக்கெட் வாங்கினா.... கவர்மெண்டுக்கு ரொம்ப செலவு.... ட்ராஃபிக் ஜாம் ஆகும்.... போலீஸ் பந்தபஸ்து தரணும்... இப்போ பாரு ரொம்ப சிம்பிள்... வெறும் இருபது ரூபா.... அதுவும் என் பணம்!!"
என்று நான் "காக்க... காக்க..." சூர்யா மாதிரி பில்ட்-அப் கொடுத்தபோது நண்பர்கள் யாரும் சிரிக்கவில்லை... :-(
"வாடா... படம் போட்டுற போறான்"னு விதியை நொந்து ஒருத்தன் சொல்ல...
தியேட்டருக்குப் போயிட்டோம்...
"என் கண்ணு வேணும்னு கேட்டியாமே!"
என்று "ராகவனாக"க் கமல் தன் கண்ணை விரித்து காட்ட.. தியேட்டரில் கமல் ஃபேன்ஸுக்கு எல்லாம் ஏகக்குஷி... என்னா மாதிரி ஓர் ஓபனிங் ஸீன் அது!!! செம பவர்ஃபுல்.... அப்படியே கண்டினியூ பண்ணி ஒரு சூப்பர் பாட்டு வேற...
Raghavannn...... Stay in process
Top dollar... Scurry lil's.... yeh ready come on....
Lets go go...go....go....
என்று "கற்க கற்க" பாடலில் ஹாரிஸ் ஜெயராஜ் மிரட்ட.... திரையில் கம்பீரமாக எழும் ராகவனைப் பார்த்து எங்களுக்கெல்லாம் "துடிக்குது புஜம்"னு கிட்டத்தட்ட செம ஆக்ஷன் எஃபெக்ட்..... படம் போற ஸ்பீட்ல எங்க ஹார்ட்பீட்டும் ஏறி படு ஸ்பிரிட்டா படம்பாத்துட்டு இருக்கும்போது வந்தானுங்க அந்த ரெண்டு வில்லனுங்க..... (படத்துலதான்...!!) "அமுதன்" "இளமாறன்".... அவனுங்க ஸ்க்ரீன்ல வர்ற ஓபனிங் ஸீன்லயே உள்ள புகுந்து அடி வெளுக்கணும்போல இருக்கும்... (அப்போ நான் "சினிமா வன்முறை" தொடர் எல்லாம் எழுதல!!) அந்த ரேஞ்சுக்கு ஃபீலாகியிருக்கும்போது வந்திச்சு இண்டர்வெல்....
"ஹேய் நீங்க எல்லாம் கேண்டீன்ல இருங்க... நான் போய் எல்லாருக்கும் கோன் ஐஸ் வாங்கிட்டு வந்துர்றேன்.... ரொம்ப கூட்டமா இருக்கும் ஸோ நீங்க எங்க இருக்கீங்கன்னு மொபைல்ல ஃபோன் பண்ணி சொல்லுங்க!!"ன்னு சொல்லிட்டு வேகமா கிளம்பிட்டேன்
(வேற ஒண்ணுமில்ல மொபைல்ஃபோன் வெச்சுருக்கோமாம்!!! அதான் என்னோட முதல் மொபைல்ஃபோன் ஸோ ஒன்ஸ் அகெய்ன் பில்டப்ஸ்!!)
என்னதான் ஃபவுண்டைன் பெப்ஸி, ஃப்ளேவர்ட் பாப்கார்ன்னு (அப்போ அதெல்லாம் புதுசு!) எவ்வளவோ வந்திருந்தாலும் இந்தக் கோன்-ஐஸுக்குக் கூட்டம் குறையுறதேயில்ல.... ஹ்ம்ம்ம் "ராகவன்" எஃபெக்டில் டி-ஷர்ட்டை இழுத்துவிட்டுக்கிட்டு கம்பீரமா கூட்டத்துக்குள்ள புகுந்து டோக்கன் வாங்கி.... நாலு கோன்-ஐஸை ஸ்லோ மோஷன்ல கையில் நான் வாங்கிட்டு இ...ரு...க்...கே...ன்...
திடீர்னு அங்கே ஒரே 'தள்ளுமுள்ளு'....! என்ன விஷயம் ஏதுன்னு தெரியல திடீர்னு ஒரு நாலுபேர் கோன்-ஐஸ் வாங்குற இடத்துல ஒரே கலாட்டா.... தேவையில்லாம மேல விழுறது... பிடிச்சு தள்ளுறதுன்னு..... ஒரு நாலுபேர் சும்மா தேவையே இல்லாம கலாட்டா பண்ண ஆரம்பிச்சு எரிச்சலக் கிளப்பிட்டு இருந்தானுங்க....
அவ்ளோதான்.... ஃபுல்ஃபார்ம்ல இருந்த எனக்கு உடனே "ரட்சகன்" நாகார்ஜுனா மாதிரி கையில நர நரன்னு நரம்பெல்லாம் கிராஃபிக்ஸ்ல மரமாய் முளைக்க.... ஹாரிஸ் ஜெயராஜ் போட்ட பபாய்ங்..பபாய்ங்..பபாய்ங்னு "ராகவன்" தீம் மியூசிக் கேட்க ஆரம்பிச்சிடிச்சு....
Raghavan...... Stay in the process
Top dollar Scurry lil's, ready come on....
Lets go go...go....go....
லெட்ஸ் கோஓஓஓஓன்னு களத்துல இறங்கிட்டேன்..... என்கூட இன்னும் ஒரு நாலு பேர் சேர்ந்துக்கிட்டாங்க (மதுரை!!) தேவையில்லாம தள்ளுமுள்ளு பண்ண அந்த நாலுபேரையும் அந்தக் கூட்டத்தில கரெக்டா குறிபார்த்து பிடிச்சு.... தள்ளிவிட்டு...ஷார்ப்பா லுக்கெல்லாம் விட்டு அப்புறப்படுத்திட்டோம்...
ஆரம்பத்துல் அந்த லுங்கி கட்டுன லோக்கல் கும்பல் "ஊய்ய்...ஓய்ய்ய்"னு சவுண்ட் விட்டாலும் கடைசியில "ஸாரி பாஸு" என்று அடங்கி அப்ரூவராகி அமுங்கிப்போனது!!!
திடீர் ஹீரோவாகிவிட்ட நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் பெருமையாய் சிரித்துக்கொண்டோம்.... ("ஒரு திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன்தானே..." என்று பேக்ரவுண்டில் அதே "கற்க கற்க" பாடல் ஃபுல் வால்யூமில் கேட்டுக்கொண்டிருந்தது!!)
சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் ஒரு பயம்கலந்த மரியாதையுடன் வெறித்தபோது.... கால்கள் தரைக்குமேல் இருந்தன......!!
அப்போதுதான் கவனித்தேன்..... அருகில் உருவாகியிருந்த அந்த இன்னொரு ஹீரோ கையெல்லாம் ஒரே கோன்-ஐஸ்.....!! கோன் உடைந்து ஐஸ் ஜாமாகியிருந்தது......!! பின்ன சண்டையில இதெல்லாம் ஜகஜம் தானே.....
உடனே டக்கென்று என் கையில் பார்க்கிறேன்... நாலு கோன்-ஐஸும் ஒரு சொட்டு கூட சிந்தாமல் அப்படியே இருந்தது!!!
"டேய்..பிரபு... எப்புடிடா?? உன்னால மட்டும்...!!!! என்னமோ போடா!!!"
என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு (!) நண்பர்கள் ஞாபகம் வந்து வேகவேகமாக தியேட்டர் கேண்டீனில் காத்துக்கொண்டிருந்த நண்பர்களை நோக்கி விரைந்தேன்....
"டேய்... எங்கேடா போயிருந்த இவ்ளோ நேரம்?? உன் ஃபோனுக்கு அடிச்சுட்டே இருந்தோம் நாட் ரீச்சபிள்னு வருது" என்று சொன்னான் நண்பன்....
சிந்தாத கோன்-ஐஸை நண்பனிடம் கொடுத்துவிட்டு பேண்ட் பாக்கெட்டைத் துழாவினேன்.... என் மொபைலைக் காணவில்லை!!!!!!!!
அடித்துப் பிடித்து கோன்-ஐஸ் கடைக்கு ஓடினால் அங்கே யாருமில்லை எல்லாம் செகண்ட் ஹாஃப் பார்க்க போயிட்டாங்க..... பக்கத்துல ஒரு சின்ன விசும்பல் சத்தம்...
திரும்பிப் பார்த்தால்... என் கூட முளைத்திருந்த அதே ஹீரோக்கள்.... அவர்களின் மொபைல்களையும் காணவில்லையாம் தியேட்டர் மேனேஜரிடம் புகார் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்!!! (அதுல ஒரு ஹீரோ இழுத்து இழுத்து அழுததுதான் பெரும் கொடுமை!!)
அப்புறம்தான் புரிந்தது எங்ககிட்ட சரண்டரான கூட்டம் விளையாட்டா ஒரு சண்டைய போட்டு செல்ஃபோனை வேட்டையாடிட்டு போயிட்டாங்கன்னு!!!!
நான் அமைதியா திரும்பிப் பார்க்க என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் தோள் மேல கைவெச்சு ஒரு லுக் கொடுத்தார்கள் (ஆறுதலாம்!!) அப்படியே திரும்பி மெதுவா நடக்கத்துவங்கினோம்.... மீண்டும் ராகவனைப் பார்க்க.....
இந்தமுறை பேக்ரவுண்டில் ஒலித்தது இளையராஜா குரல்....
ஆமா.. அதே பாட்டுதான்........
"தென் பாண்டிச் சீமையிலே.... தேரோடும் வீதியிலே..... மான்போல வந்தவனை... யாரடிச்சாரோ.... யாரடிச்சாரோ.... யாரடிச்சாரோஓஓஓஓ!!!!!......டொன்ட டொன்ட டொன்டடொய்ங் டொன்டடொய்ங்... :-(((
இதுதான் நான் தொலைச்ச மொபைல்.....அவ்வ்வ்வ்!!!!
பிரபு எம்


:)))
ReplyDelete//சுற்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் ஒரு பயம்கலந்த மரியாதையுடன் வெறித்தபோது.... கால்கள் தரைக்குமேல் இருந்தன......!!//
ReplyDelete:)
:))))))))
ReplyDeleteசத்தியமா சொல்றேன்...செமையா சிரிக்கிறேன் இந்த பதிவை பார்த்துட்டு...:)))
ReplyDelete//2006.....மதுரை மதி தியேட்டர்...
ReplyDelete"மதி"யில் புதுப்படம்னா ஏஏ ரோட்டில் கூட்டம் அம்மும்//
நாங்களும் மதி தான் போனோம்...நாங்க அண்ட் என் friend family :) பட் evening ஷோ போனோம்..:)) ஹலோ அது அம்மும் இல்ல..அப்பும்...ஓகே.:)))friend பாமிலி முன்னாடியே போயி டிக்கெட் வாங்கி எங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க...வழக்கம்போலே லேட் ஆ போயி திட்டி வாங்கினோம்...:)))
//சொல்லி தியேட்டருக்குப் பக்கத்துல ஒரு டீக்கடைக்காரனுக்கு இருபது ரூபா குடுத்து வெச்சிருந்தேன்!!!//
ReplyDeleteஇருவது ரூபாக்கு டிக்கெட் எல்லாம் மதி காப்பி பார் இல் எடுத்து தராங்களா...:))
//"டேய்..பிரபு... எப்புடிடா?? உன்னால மட்டும்...!!!! என்னமோ போடா!!//
ReplyDeleteஇது செம சூப்பர்..இன்னும் சிரிக்கிறேன்..ஜனகராஜ் ஏ நேரில் வந்து சொன்ன மாதிரி ...still i am laughing...:))))
//அப்புறம்தான் புரிந்தது எங்ககிட்ட சரண்டரான கூட்டம் விளையாட்டா ஒரு சண்டைய போட்டு செல்ஃபோனை வேட்டையாடிட்டு போயிட்டாங்கன்னு!!!!//
ReplyDeleteஹ..ஹா...மாப்பு...வச்சுட்டாண்டா ஆப்பா....அப்போ...ஹ ஹ....""
மதுரை மக்காஸ் கலக்கி போட்டனுன்களா...ஹ ஹ...இப்ப தான் பிரபு இந்த மாதிரி திருட்டை கேள்வி படுறேன்...செம clever ஆ திருடி இருக்கானுங்களே..பாராட்டி அவங்களுக்கு..ஒரு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்துட்டு வரணும் தோனிச்சா...வெரி bad சகோ நீங்க...ஹ ஹ...;))
ReplyDeleteசெம ரகளை சகோ...கலக்கி புட்டிங்க இந்த பதிவில்..நிஜமாவே ஜாலி பதிவு...கலக்கல்...:)))
ReplyDeleteபடத்தை பீலிங்க்ஸ் ஒரு பக்கம் - செல் போன் தொலைச்ச பீலிங்க்ஸ் ஒரு பக்கம்.... பாவம்ங்க நீங்க!
ReplyDeleteவிடுங்க பிரபு!! போன் போனா போயிட்டு போது! நமக்கு ஒரு பதிவு தேத்திட்டம்ல!!!
ReplyDeleteநேசமித்ரன் said...
ReplyDelete:)))
நன்றி அண்ணா :)
நன்றி வார்த்தை
ReplyDelete//அமுதா கிருஷ்ணா said...
ReplyDelete:))))))))
//
ரொம்ப நன்றி அக்கா..
//ஆனந்தி.. said...
ReplyDeleteசத்தியமா சொல்றேன்...செமையா சிரிக்கிறேன் இந்த பதிவை பார்த்துட்டு...:)))
//
ரொம்ப நன்றி சகோ :)
//இருவது ரூபாக்கு டிக்கெட் எல்லாம் மதி காப்பி பார் இல் எடுத்து தராங்களா...:)) //
டிக்கெட் பணம் தனி!! ;-)
மதி காபி பார்ல இருபது ரூபாய்க்கு டிக்கெட் எடுத்துத்தர எனக்கு ஆள் இருக்காங்கன்னு சொன்னேன்!! :-)
சகோவுக்கு வேணும்னா சொல்லுங்க கிட்டத்தட்ட பல தியேட்டர்கள்ல இப்படி ஆள் வெச்சுருக்கேன்.. ;-)
அதுசரி... நீங்க பெரிய இடம்ப்பா.... அஞ்சா நெஞ்சருக்கே மனுபோட்டு ஓபனிங் ஷோ டிக்கெட் வாங்குவீங்க... :-)))
//இது செம சூப்பர்..இன்னும் சிரிக்கிறேன்..ஜனகராஜ் ஏ நேரில் வந்து சொன்ன மாதிரி ...still i am laughing...:)))) //
ReplyDelete:-)))) ஜனகராஜோட எவர்கிரீன் காமெடி இது.... அண்ணாநகர் முதல் தெரு... கலக்கியெடுத்திருப்பார் மனிதர்....
ரொம்ப நன்றி சகோ....
//இந்த மாதிரி திருட்டை கேள்வி படுறேன்...செம clever ஆ திருடி இருக்கானுங்களே..பாராட்டி அவங்களுக்கு..ஒரு ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்துட்டு வரணும் தோனிச்சா...வெரி bad சகோ நீங்க...ஹ ஹ...;))//
ReplyDeleteமக்களே...
ஊர்க்கார சகோதரன்... மொபைலைத் தொலச்சுட்டு வந்து புலம்பிட்டு இருக்கான்...
நாட்டுல கொஞ்சமாவது கவலப்படுறாய்ங்களா பாருங்க!!! :-))
ஆமாமா அந்த நண்பர்களைத்தான் தேடிட்டு இருக்கேன்... திரும்ப கிடைச்சான்னா... ஐஸ்கிரீம் என்ன... பாராட்டுவிழாவே வெச்சுடலாம் மை டியர் சிஸ்டர்...
//செம ரகளை சகோ...கலக்கி புட்டிங்க இந்த பதிவில்..நிஜமாவே ஜாலி பதிவு...கலக்கல்...:)))//
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி சகோ... :-))))))
//Chitra said...
ReplyDeleteபடத்தை பீலிங்க்ஸ் ஒரு பக்கம் - செல் போன் தொலைச்ச பீலிங்க்ஸ் ஒரு பக்கம்.... பாவம்ங்க நீங்க!
//
ஹஹஹா.... அது ஒரு நல்ல அனுபவமா இருந்திச்சு அக்கா....
லைஃப்ல முதன்முறையா ஒரு பொருளைத் தொலச்சது... அப்புறம் அதைத்தேடி அலைஞ்சு நான் பண்ணின அலப்பறை இருக்கே... சொல்லப்போனா அதை எனக்குத் தெரியாம கவனிச்சுதான் மொபைலுக்குப் பதிலா பைக் என்று மாற்றி "பொல்லாதவன்" படமே எடுத்தாங்களோன்னு ஒரு டவுட் இன்னும் இருக்குன்னா பாத்துக்கோங்களேன்!!!! ஹிஹிஹி... அடுத்த ரெண்டு நாள் தேடி அலைஞ்சு செஞ்ச அதகளத்தை விளக்க இன்னும் ரெண்டு பதிவு வேணும்...
பட் பயப்பட வேண்டாம் அப்படி ஒரு விபரீதத்தை நிச்சியம் பதிவுலகத்துக்கு நான் இழைக்க மாட்டேன்!! :)))
//விடுங்க பிரபு!! போன் போனா போயிட்டு போது! நமக்கு ஒரு பதிவு தேத்திட்டம்ல!!!//
ReplyDeleteஆஹா.... இதுல எதுவும் உள்குத்து இல்லையே!!! ;-)
hahahaa... உண்மைதான் நண்பா... அனுபவங்கள் பகிர்வதற்குத்தானே!!!
ரொம்ப நன்றி வைகை :)
உங்கள் எழுத்து நடை அருமையாக இருக்கிறது..
ReplyDeleteஅது சரி இப்ப எல்லாம் றால் போட்டு சுறா பிடிக்கிறது என்பதை மாற்றி போன் போன் போட்டு .... என்று மாற்றிட்டாங்களோ.. (ஹஹ...ஹஹஹ...ஹஹஹஹ)
நன்றி நண்பா :)
ReplyDeleteபுதுசா புதுசா கண்டுபிடிக்கிறாங்க!! :)
Rolling on the floor என்ற வார்த்தைக்கு இன்றுதான் அர்த்தம் தெரிந்துக்கொண்டேன்... அப்படி விழுந்து விழுந்து சிரித்தேன்...
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி நண்பா.... :-)
ReplyDeleteபிரபு..இப்போ தான் உங்களோட உன்னொரு ப்ளாக் பார்த்தேன்...உன்னொரு பிரபுவை பார்த்தேன் அதில்...வெரி இண்டரஸ்டிங் பிரபு...அந்த சிறுகதை ,கார்டூன்ஸ்...ம்ம்...சகோதரா...என்னை ஆச்சர்யபடுதிரிங்க...ஏன் அந்த ப்ளாக் கை அப்டியே விட்டுடிங்க??? என் சகோதரன் சொல்ல இன்னும் சந்தோஷமா இருக்கு...நிறைய அருமையான பதிவுகளை போடுங்க..அந்த கார்ட்டூன் திறமை ரொம்ப ஆச்சர்ய படுகிறேன்...கலக்கு பாஸ் ..ஓகே...:))
ReplyDeleteரொம்ப சந்தோஷத்துடன்,
அன்பு சகோதரி ஆனந்தி...:)))
//நான் அமைதியா திரும்பிப் பார்க்க என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் தோள் மேல கைவெச்சு ஒரு லுக் கொடுத்தார்கள் (ஆறுதலாம்!!)//
ReplyDeleteபாசக்காரங்களா இருப்பாங்க போலிருக்கு :-)))
அருமை.:-))))))))))
ReplyDeleteசெம பீலிங்க்ஸ் மாப்புள.
ReplyDelete//பிரபு..இப்போ தான் உங்களோட உன்னொரு ப்ளாக் பார்த்தேன்...//
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றி சகோ...
அந்த ப்ளாக்ல இருக்குற எல்லா பதிவுகளையும் பின்னூட்டங்களோடு இந்தத் தளத்தில் இறக்குமதி பண்ணிவைத்திருக்கிறேன் :)
ஸோ... இதுதான் நம்ம பிரதான ப்ளாக் இப்போ!! :)
"வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே" பதிவில் இருந்த கார்ட்டூன் அடியேனின் கைவண்ணமே!!! :)
ரொம்ப ரொம்ப நன்றி சகோ :)
@ அமைதிச்சாரல்
ReplyDeleteஆமாங்க சும்மாவா.... நண்பேன்டா!! என்று நொடிக்கு நொடி சொல்ல வைக்கும் பாசக்காரப்பயலுகள்!! :)
//ஸ்ரீ said...
ReplyDeleteஅருமை.:-))))))))))
//
ரொம்ப நன்றிண்ணா :)
ஜெரி ஈசானந்தன். said...
ReplyDeleteசெம பீலிங்க்ஸ் மாப்புள.
ரொம்ப நன்றி மாமா... எப்படி இருக்கீங்க? :)
திரும்ப வேகமாக எழுத ஆரம்பத்ததில் மிக்க மகிழ்ச்சி மாமா..
பிரபு....உங்க பதிவுகளைப் பார்த்தால்,சினிமாவில் ஏதோ ஒரு ஈர்ப்பு அல்லது அதனால் நிறையவே பாதிப்பு அதன் போக்கில் இருக்கும் வேதனைதான் இத்தனை ஆதங்கமான பதிவுகளோ !
ReplyDelete@ஹேமா அக்கா..
ReplyDelete//பிரபு....உங்க பதிவுகளைப் பார்த்தால்,சினிமாவில் ஏதோ ஒரு ஈர்ப்பு அல்லது அதனால் நிறையவே பாதிப்பு அதன் போக்கில் இருக்கும் வேதனைதான் இத்தனை ஆதங்கமான பதிவுகளோ !//
ஆதங்கம்?? வேதனை?? என்னக்கா சொல்லுறீங்க....? நான் காமெடி பதிவுல்ல போட்டிருக்கேன்!! :-)
இது என் செல் மாதிரியே இருக்கே...யார் அந்த வெள்ளாடு?? என் பதிவுகளுக்கு கருத்து இடும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி, பிரபு!
ReplyDeleteஉங்கள் கருத்து கவர்ந்தது... கருத்துரை கூறினேன்.... நன்றியெல்லாம் எதற்கு நண்பா... :)
ReplyDeleteOK இதோ நானும் சொல்லிவிடுகிறேன்....
நன்றி சிவகுமார்!!!! :)
உங்கள் ஆதங்கம் கூட நகைச்சுவையாய் வந்திருக்கலாமோ என்னமோன்னு நின்னைச்சேன் பிரபு.ஏனென்றால் உங்களின் தொடர்ந்த சினிமா பற்றிய விபரங்கள் அப்படித்தான் இருக்கு !
ReplyDelete//ஏனென்றால் உங்களின் தொடர்ந்த சினிமா பற்றிய விபரங்கள் அப்படித்தான் இருக்கு !//
ReplyDeleteஉண்மைதான் அக்கா.. :)
தொடர்ந்து வந்த பதிவுகள் அப்படித்தான் அமைந்துவிட்டன ... தற்செயல் நிகழ்வுதான் :)
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா மீண்டும் வந்து கருத்தைத் தெரிவித்ததற்கு ... Very kind of you :)
சேம் பிளட், ஆன எனக்கு பஸ்ஸுக்குள்ளார நடந்தது.
ReplyDelete