மத்தியில் நின்று சூரியன் சுட்டெரிக்கும் மத்தியாண வெயிலில் பழுப்பேறித் தகித்துக்கிடக்கிறது அந்த கரும்புக்காடு....
உச்சிவெய்யிலில் சோளக்காட்டு பொம்மைகள் மட்டுமே ஆடு மாடுகளுக்குக் காவல் காக்கும் ஆளரவமற்ற ஊரின் வெளிப்புறப்பாதை....
நேற்றுதான் பத்தாம் வகுப்புப் பரிட்சையோடு சேர்ந்து படிப்பும் முடிந்திபோயிருந்தது முருகனுக்கு.....
"உயிர் நண்பா".... "என்று சந்திப்போம் இன்று பிரியும் நாம்"... என்றெல்லாம் ஆட்டோகிராஃப் எழுதி நண்பர்கள் பிரிந்த பள்ளிவாழ்க்கை... அம்மாவும் வாத்தியாரும் அடிஅடியென்று அடித்தும், சோறு கிடையாதென்று மிரட்டியும் பள்ளிக்கூடம் போகவைத்த பள்ளிவாழ்க்கை முடிந்துவிட்டது...
ஏதேதோ புரிகிறது குத்தவைத்துப் பதுங்கியிருக்கும் இந்த நேரத்தில்... வியர்வை விரவிய கருத்த தேகத்தில் கரும்பு உரசித் தோல் எரிகிறது .... கையில் ஒரு சைக்கிள் மணி... கூப்பிடு தூரத்தில் தன்னைப்போலவே பதுங்கிக் காத்திருக்கும் சிநேகிதம்.... கொஞ்சம் பின்னால் அசிங்கமாக உடலிடுக்கி அமர்ந்திருக்கிறான் முருகனையும் செந்தில்,மணியையும் இங்கு கூட்டிவந்த கருவாயன்...கையில் அதே சைக்கிள் மணியுடன்...
கிட்டத்தட்ட சரியான நேரத்தில் தூரத்தில் தடதடக்கத் துவங்கிவிட்டது புல்லட் சத்தம்.....
புல்லட் சத்தம் கேட்டவுடன் கரும்புவயலில் அசைவுகள் தொற்றுவது காற்றினாலல்ல....
ராயல் என்ஃபீல்டின் பெட்ரோல் இஞ்சின் எழுப்பும் தட தட சத்தத்துக்கு இன்றுக் கரும்புக்காட்டிலிருந்து ஒரு பறவைகூட பறந்தோடவில்லை....
"கிணிங்... கிணிங்..." சைக்கிளின் முதல் மணி அடித்துவிட்டது.... புல்லட் வேகம் குறையவில்லை....
முருகனுக்குப் புல்லட் சத்தம் கொஞ்சம் கணமாகக் கேட்கிறது..... செந்தில் தன்னுடைய சைக்கிள் மணியில் இரண்டாவது மணியை அடித்துவிட்டான்.... முருகனின் கையில் லேசான நடுக்கம்.... புல்லட்டின் தட தட தட அதிர்வு இன்னும் நெருக்கமாய்க் காதில் விழ "கிணிங் கிணிங் கிணிங் கிணிங்" என்று பதற்றம் தொற்றியவனாய் ரெண்டு முறை கூட அடித்துவிட்டான்...... புல்லட் சத்தம் கடந்து சென்றும் நான்காவது மணி அடிக்கவில்லை....
"வாடா முருகா.... அப்படியே தவண்டு இங்க இருந்து ஓடிடலாம்.... சீக்கிரம் வாடா முருகா... நம்ப வேல முடிஞ்சதுடா.... வாடா சீக்கிரம்..... "
நான்காவது மணி இன்னும் அடிக்கவில்லை......
திரும்பிப் பார்த்த முருகனுக்கு தூரத்தில் கருவாயன் சைக்கிள் மணியைத் தூர எறிந்துவிட்டு கண்மாய் இருக்கும் திசைநோக்கி மூச்சிரைக்க ஓடுவது தெரிகிறது.....
செந்திலுக்கும், மணிக்கும் ஒன்றும் புரியாமல் திகைத்து நிற்க.... கண்மாயில் தொப் பென்று விழுகிறது கணத்த சத்தம்...
புல்லட்காரன் வேகம் குறைக்காமலேயே கண்மாய் பக்கம் திரும்பிப் பார்க்க.... முகம் மறைக்க மறந்த முருகன் தலைதெரிய கரும்புக் காட்டிலிருந்து வெளிவந்து... கையிலிருக்கும் சைக்கிள் மணியைத் தொடர்ந்து அடித்தவனாய் மோட்டார் ரூமை நெருங்குவதற்கும்... அங்கு நிலவும் சூழலின் அசாதாரணத்தை புல்லட்காரன் உணர்ந்து சுதாரிக்குமுன்பே, மோட்டார் ரூமிலிருந்து பெருங்குரலெடுத்துக் கையில் அரிவாளுடன் வந்து வளைப்பதற்கும் சரியாக இருந்தது....
கழுத்தறுந்து வெளிப்படும் ஈனமான குரல் அந்தக் கரும்புக்காட்டின் அமைதியைக் கிழித்தது...
"டேய் முருகா... ஓடிடலாம்டா..... நிக்காம ஓடிடுடா... ஓடிடுடா..."
ஏதேதோ பதற்றக் குரல்களின் முடிவில் கண்மாயில் தொப் தொப் பென்று கணமான சத்தம் தொடர்ந்து கேட்கிறது...
தொடரும்....
எடுத்தவுடன் சஸ்பென்சுடன் தொடங்கி உள்ளீர்கள். மண் மனம் வீசும் கிராம கதையா ? தொடருங்கள்
ReplyDeleteநன்றி எல் கே :)
ReplyDeleteஇது ஜஸ்ட் ஒரு துவக்கம்தான்...
கதை பயணிக்கப்போகும் களத்தில் கொலையும் சஸ்பென்ஸும் ரத்தமும் இருக்காது...
கிராமத்துக் கதை என்று சொல்லிவிட முடியாதுதான்... ஆனால் மண்வாசனை இருக்கும்..
தொடர்ந்து வாங்களேன்! :)
ஆரம்பமே அமர்க்களம்! இதே போல தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeleteரொம்ப நன்றி அக்கா :)
ReplyDeleteநல்ல தொடக்கம்.
ReplyDeleteவணக்கம் பிரபு.ஆரம்பமே கொஞ்சம் பயமாத்தானிருக்கு.இரத்தம்,கொலைன்னா நான் வரல.அலுத்துப்போச்சு !
ReplyDeleteவணக்கம் ஹேமா..
ReplyDeleteரத்தம் கொலைன்னா நானே வரல...
இந்த துவக்கத்துக்கும் கதைக்கும் சம்பந்தம் இருக்காது.
இது ஒரு குறும்படத்துக்காக வேறுமாதிரி உருவான கதை...
எப்படியோ இங்கு ஒரு தொடர்கதையாக உருவெடுத்திருக்கு...
சரியா வருமா என்கிற பயம் எனக்கே இருக்கு...
சரியா வராட்டி ஷிஃப்ட்+டிலிட் தான்!!
நன்றி அன்பரசன் :)
ReplyDelete