Tuesday, November 30, 2010

தப்பு : சிறுகதை

"ஏங்க‌ இப்படி ஒரு காரியத்த‌ செஞ்சீங்க??..."

"அவளுக்காகத்தான்...."

"இது என்ன பைத்தியக்காரத்தனமா இருக்கு... இதெப்படி உங்க மனைவிக்காகன்னு அர்த்தம் ஆகும்....! உண்மைய சொல்லுங்க இப்படி ஒரு காரியத்தை செய்ய எப்படி தோணிச்சு உங்களுக்கு??? என்னதான் காரணம்??"

"அவள பத்தி எனக்குத்தான் தெரியும்... அவ மனசு தாங்கியிருக்கமாட்டா..."

"ச‌ரி.... இப்போ இப்ப‌டி ந‌ட‌ந்திருச்சே இத‌ எதிர்பார்த்தீங்க‌ளா!"

"ச‌த்திய‌மா நின‌ச்சுப் பாக்க‌ல‌... நான் அவள நம்பினேன்..."

"சரி இந்த விஷ‌ய‌ம் உங்க‌ளைத் த‌விர‌ வேற‌ யாருக்காவ‌து தெரியுமா?"

"தெரியும்... எங்க‌ வீட்டுக்குத் தெரியும்..."

"வேற யாருக்குமே தெரியாதா??"

 "அவ வீட்டுக்கும் தெரியும்... சில நெருக்கமானவங்களுக்கும் தெரியும்..."

"ஏன் அவ‌ங்க வீட்டுல‌ சொன்னீங்க?"

"அவ‌ங்க‌ளுக்குத் தெரிஞ்சிருக்க‌ணும்..."

" அப்படின்னா...இப்போ ந‌ட‌ந்த‌த‌யும் அவ‌ங்க‌கிட்ட‌ சொல்லுவீங்க‌ளா....???"

".........."

"சொல்லுங்க‌... இதுவும் அவ‌ங்க‌ளுக்குத் தெரிஞ்சிருக்க‌ணும்தானே...."

"மாட்டேன் மேடம்..." கொஞ்ச‌ம் க‌ம்மிய‌ குரலில்.. அதுவ‌ரைக் க‌ல்லாகியிருந்த‌ உறுதி த‌ள‌ரத்துவ‌ங்கியது கண்ணீருடன் டாக்டரின் டேபிளில் முகம்புதைக்கிறான்...

                                                                    ***************************************

இண்டென்ஸிவ் கேரில் மெல்ல‌ ஆக்ஸிஜ‌ன் மாஸ்க்கை அவிழ்க்கிறார் சீனியர் டாக்டர்..... சுற்றிலும் பதற்றமாய் ஜுனியர் டாக்டரம்மாக்கள்... 

ஆக்ஸிஜன் அகன்றதும், துடிக்கும் தொண்டைக்குழியின் ஆழம்கூடி க‌ழுத்திலிருந்து சிவ‌ந்து புடைக்கும் ந‌ர‌ம்புவேர்க‌ள் நெற்றிவ‌ரை நீள்கிற‌து... சுவாச‌த்துக்குக் காற்றுகேட்டு ஈனமாய் க‌ணைக்கிறாள் க‌ண்க‌ள் விரிய‌....

"She couldn't breathe doctor..."

"ஷ்ஷ்ஷ்ஷ்....வெயிட் ப‌ண்ணுங்க‌...."

"............"

"............"

"பேஷ‌ண்ட் ஏஜ் என்ன‌ டாக்ட‌ர்..."

"32"

க‌ணைப்பின் ஸ்ருதி மாறுகிற‌து... மீண்டும் ஆக்ஸிஜ‌ன் மாஸ்க் பொருத்த‌ப்ப‌ட‌ இத‌ய‌த்துடிப்பு மீண்டும் ஓர‌ள‌வுக்கு இய‌ல்புநிலை மீளுகிற‌து....


                                                                     ***************************************

டாக்ட‌ரின் டேபிளில் முக‌ம்புதைத்து அழுது ஓய்ந்திருந்தான் வெங்க‌ட்...

"உங்க‌ளுக்கு என்ன‌ வ‌ய‌சு?"

"36"

"க‌ல்யாண‌ம் ப‌ண்ற‌ப்ப‌ உங்க‌ளுக்கும் உங்க ஒய்ஃப்க்கும் என்ன‌ வ‌ய‌சு?"

"... என‌க்கு 30 அவ‌ளுக்கு 26..."

" நீங்க‌ சொன்ன‌ அந்த‌ ஆக்ஸிடெண்ட் எப்போ நடந்திச்சு..?"

" நாலு வ‌ருஷம் முன்னாடி..."

"அந்த ஆக்ஸிடெண்டுக்கு முன்னாடி ரெண்டு வ‌ருஷ‌த்துல‌ குழந்தை எதுவும்..??"

" அப்போதைக்கு வேண்டாம்னு இருந்துட்டோம்"

"ஏன்...???!!......ச‌ரி விடுங்க‌... ஆர் யூ ஓகே ந‌வ்?? ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்க... ட்ரை டு ரிலாக்ஸ் யுவர்செல்ஃப்"

"யெஸ் யெஸ்.. ஐம் ஃபைன்..." நிமிர்ந்து உட்கார்ந்து முக‌த்தைத் துடைத்துக்கொள்கிறான்....
"அந்த ஆக்ஸிடெண்ட்ல நீங்களும் இருந்திருக்கீங்க??"
"ஆமா.... ஆனா எனக்கு வெறும் ஃப்ராக்சர்ஸ்தான்... அவளுக்குத்தான்... ..."

கொஞ்சம் இடைவெளி....

"டாக்ட‌ர்..... அவ‌ பொழ‌ச்சுக்குவாளா??"

"அவ‌ங்க‌ பொழ‌ச்சுக்க‌ணும்னுதான் நெஜமாவே நென‌க்கிறீங்க‌ளா??"

"போதும் டாக்ட‌ர்... போதும்..... இவ்ளோ நேர‌ம் என்ன‌வோ நான் ஒரு குற்ற‌வாளி மாதிரி கேள்வியா கேட்டுத் துளைச்சுட்டு இருக்கீங்க‌.... நான் செஞ்ச‌ தியாக‌ம் உங்க‌ளுக்குப் புரிய‌வேயில்லயா?? ஒரு டாக்ட‌ரா யோசிக்காம‌ ஒரு சாதாரண‌ பொம்ப‌ள‌யா இருந்து  யோசிச்சுப் பாருங்க‌..... என்னோட தியாகமும் அதனால நான் தாங்கிக்கிட்ட வலியும் உங்களுக்குப் புரியும்..."

"ஒரு சாதார‌ண‌ பொண்ணாத்தான் கேக்குறேன்... இதுல "தியாகம்" எங்கயிருந்துங்க வந்திச்சு?? நீங்க‌ செஞ்ச‌து தியாக‌ம்னா இந்த‌ நால‌ரை வ‌ருஷமும் ஒரு குழ‌ந்தையும் இல்லாம "குறை"யுள்ள‌ உங்க‌ளையும் ஏத்துக்கிட்டு ம‌ற்ற‌ எல்லாவித‌த்துல‌யும் உங்க‌ளுக்கு ம‌னைவியா இருந்திருக்காளே... அவ‌ செஞ்ச‌தும் அப்போ தியாக‌ம்தானே...."

"ஏன்தான் ஆண்ட‌வ‌ன் உங்க‌கிட்ட‌போய் என்னை இப்ப‌டி ப‌தில்சொல்ல‌ வெச்சு வேடிக்கை பாக்குறானோ...?? என‌க்கு என்ன‌ டாக்ட‌ர்???? என‌க்கு எதுக்கு க‌வுன்சிலிங்??? என்ன‌ விட்டுடுங்க‌... அவ‌ள‌ த‌ய‌வுசெஞ்சு காப்பாத்திக் குடுங்க‌..... அவ‌ செஞ்ச‌ துரோக‌த்தையும் கூட‌ என்னால‌ தாங்கிக்க‌ முடியும்...."

"துரோகம்... ஹ்ம்ம்ம்...துரோகத்தைத் தாங்கிக்கிட்டு.... மறுபடி அவ‌ங்க‌ அப்பா அம்மாவையெல்லாம் கூட்டிவெச்சு ஊருக்கே அறிவிச்சு ஏற்கெனவே மனைவியுடைய குறையை தாங்கிக்கிட்ட புனிதரா இருக்குற‌ நீங்க... மனைவி செஞ்ச துரோகத்தையும் ஏத்துக்கிட்டு உங்க சுற்றுவட்டாரத்துக்கு தெய்வ‌மாக‌ப் போறீங்க‌ தானே???"

"..................."

" நீங்க‌ செஞ்ச‌து தியாக‌ம்னா.... உங்க‌ "குறை"யை ஒருத்த‌ர்கிட்ட‌யும் சொல்லாம‌ இத்த‌ன‌ நாள் குடும்ப‌ம் ந‌ட‌த்தியிருக்குற‌ அவ‌ செஞ்சது தியாகமில்லயா??..... அவ‌ செஞ்ச‌து துரோக‌ம்னா உங்களோட ஸோ‍‍-கால்டு தியாக‌ங்க‌ளையெல்லாம் ஊர்முழுக்க‌ச் சொல்லிவெச்சிருக்கீங்க‌ளே... அது துரோக‌மில்ல‌யா???.... ச‌ரி இதையும் ஒரு சாதார‌ண‌ பொம்பள‌யாத்தான் கேக்குறேன்.... "இந்த‌ நாலு வ‌ருஷ‌த்துல நீங்க‌ உங்க‌ ம‌னைவிக்கு உங்க‌ பாஷையில‌ "துரோக‌ம்" செஞ்ச‌தே இல்ல‌யா???" இந்த‌க் கேள்விக்கு என்கிட்ட‌ நீங்க‌ ப‌தில் சொல்ல‌ வேண்டாம்..... உங்க‌ள‌ நீங்க‌ளே கேட்டுக்கோங்க‌....


க‌த‌வைத் திறந்து விரு விரு வென‌ வெளியேறினான் வெங்க‌ட்.....


                                                                               ****************************************


ஆக்ஸிஜ‌ன் துணையோடு இத‌ய‌த்துடிப்பு மெல்ல‌ மெல்ல‌ சீராவ‌தாக‌ ஓர் உண‌ர்வு....

"இப்போ மாஸ்கை ரிமூவ் ப‌ண்ணிப் பார்க்க‌லாமா டாக்ட‌ர்?"

"ஹ்ம்ம்ம்... நோ.. லெட்ஸ் வெயிட்.. இப்போதான் கொஞ்ச‌ம் இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது...

வெல்... இவ‌ங்க‌ ஹ‌ஸ்பெண்ட் வெளிய‌தான் இருக்காரா?? ஃபார்மாலிடீஸ்ல‌ யெல்லாம் கையெழுத்து வாங்கிடுங்க‌...?? எனிடைம் ச‌ரிஜ‌ரிக்கு சான்ச‌ஸ் இருக்கு...."

"யெஸ் டாக்ட‌ர்... மேட‌ம்கிட்ட‌ க‌வுன்சிலிங் செஷ‌ன்ல‌ இருக்காரு... ஹி சீம்ஸ் டீப்லி டிப்ரெஸ்ட்"

"த‌ன்னால‌ தாம்பத்யத்தில் ஈடுப‌ட‌ முடியாது... தன்னோட உயிருக்கே ஆபத்துன்னு தெரிஞ்சிருந்தும் இந்த‌ப் பொண்ணு...ச்சே... இட்ஸ் பாதெடிக் டாக்டர்.."

"இல்ல‌ம்மா த‌ட்ஸ் ரிய‌லி வெரி எம்பராஸ்ஸிங்.... அந்த‌ப் பொண்ணுக்குத் த‌ன‌க்கு அப்ப‌டியொரு குறையிருக்குன்னு தெரியாது.... என்ன காரணமோ தெரியல அவ பாதிக்கப்பட்ட அதே ஆக்ஸிடெண்டுக்கு அப்புற‌ம் த‌ன‌க்குத்தான் அப்படியொரு 'குறை' வந்துட்டதா மாத்தி சொல்லியிருக்கான் அவ‌ ஹ‌ஸ்பெண்ட்..... தெரியாம‌ இந்த‌ப் பொண்ணு த‌ப்புப் ப‌ண்ணிட்டா....."


                                                                                             *********************************************
பிரபு எம்

20 comments:

  1. என்ன சகோ...!! ஒரே செண்டிமெண்ட் கதை...அடடா...நக்கல் பண்ணமுடியாதமாதிரி ஆய்டுச்சே...(((

    ReplyDelete
  2. அந்த கணவன் கதாபாத்திரம் நல்லா இருந்துச்சு...))) அதை கொண்டுபோனவிதமும் நச்ச்.....)))

    ReplyDelete
  3. எதிர்பார்க்காத முடிவு. நல்லாருக்குங்க நண்பா!!

    ReplyDelete
  4. நன்றி சகோ!! :)

    //என்ன சகோ...!! ஒரே செண்டிமெண்ட் கதை...அடடா...நக்கல் பண்ணமுடியாதமாதிரி ஆய்டுச்சே...(((//

    வேற காரணமே இல்ல.. சயனைடு சகோதிரிக்கு பயந்துதான்! :‍-)))

    ReplyDelete
  5. //எதிர்பார்க்காத முடிவு. நல்லாருக்குங்க நண்பா!! //

    ரொம்ப நன்றி MLA சார்... :-)

    ReplyDelete
  6. வித்யாசமான கதை பிரபு..

    ReplyDelete
  7. கொண்டு போன விதம் அருமை.

    ReplyDelete
  8. என்ன காரணமோ தெரியல அவ பாதிக்கப்பட்ட அதே ஆக்ஸிடெண்டுக்கு அப்புற‌ம் த‌ன‌க்குத்தான் அப்படியொரு 'குறை' வந்துட்டதா மாத்தி சொல்லியிருக்கான் அவ‌ ஹ‌ஸ்பெண்ட்..... தெரியாம‌ இந்த‌ப் பொண்ணு த‌ப்புப் ப‌ண்ணிட்டா....."


    ......அட பாவமே!

    .....ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  9. ரொம்ப நன்றி தேனக்கா :-)

    ReplyDelete
  10. நன்றி அண்ணா..
    நான் கொண்டுபோகல..
    கதை போன‌போக்கில் போனேன்....
    எங்கே நின்னுச்சோ அங்கே முடிச்சுட்டேன்!! :‍)
    நல்ல முடிவுன்னு சொல்லமுடியாது... ஏன்னா இது முடிவில்ல....
    ப்ரெசண்ட் பண்ணது ஓகேன்னு சொன்னது ரொம்ப சந்தோஷம்....
    Thanks அண்ணா! :)

    ReplyDelete
  11. //.....ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்!//

    ரொம்ப ரொம்ப ந‌ன்றி அக்கா :)

    இந்த‌க் க‌தையைப் பொறுத்த‌வ‌ரை வ‌ர்ற‌ ஒவ்வொரு க‌மெண்டையும் டென்ஷ‌னோட‌தான் ஓப‌ன் செய்து பார்த்தேன் .... ரொம்ப‌ ந‌ன்றிக்கா.... உங்க‌ளோட‌ பாஸிடிவ் க‌மெண்ட் ம‌கிழ்ச்சி த‌ருது.... :-)

    ReplyDelete
  12. கதையை இயல்பாய் அலங்கரிக்காமல் சொன்ன விதம் பிடிச்சிருக்கு பிரபு.அன்பின் மிகுதியால்தான் தியாகங்களோ !

    ReplyDelete
  13. த‌ன‌க்குத்தான் அப்படியொரு 'குறை' வந்துட்டதா மாத்தி சொல்லியிருக்கான் அவ‌ ஹ‌ஸ்பெண்ட்..//

    அப்ப தன் நிலை கணவனுக்கு தெரியவரும் னு ஏன் மனைவி நினைக்கல?..


    குழப்புதே..?

    விளக்கம் பிலீஸ் . :)

    ReplyDelete
  14. ரொம்ப நன்றி ஹேமா அக்கா :-)

    ReplyDelete
  15. //அப்ப தன் நிலை கணவனுக்கு தெரியவரும் னு ஏன் மனைவி நினைக்கல?..//

    தன் நிலை அவளுக்குத் தெரிஞ்சிருந்தாதானே....

    ReplyDelete
  16. //அவ‌ செஞ்ச‌து துரோக‌ம்னா உங்களோட //

    அப்ப அவ செஞ்ச துரோகம் அவள் தெரிந்து செய்ததுதானே?..

    கணவந்தான் லாயக்கற்றவன் னு அவனே சொல்லியிருக்கும்போது , இது தெரிய வரும் சாத்தியம் உண்டுன்னு அவள் நினைக்கலையா?.அந்த துரோகத்துக்குமுன்... //

    கதையில் நான் சொல்லவர்ற விஷயம் துரோகமுமில்ல தியாகமுமில்ல...
    க‌ண‌வ‌னோட‌ "தியாக‌த்தை" மெச்ச‌வும் இல்லை..
    ம‌னைவியோட‌ "துரோக‌த்தை" நியாய‌ப்ப‌டுத்த‌வும் இல்லை...

    இங்கே "தியாக‌ம்" , "துரோக‌ம்"னு வார்த்தைக‌ள் பிர‌யோகிக்க‌ப்ப‌டுவ‌தைத்தான் சாட‌ முய‌ற்சித்தேன்...

    க‌ண‌வ‌ன் செய்த‌து "தியாக‌ம்" என்று புரித‌ல் ஏற்ப‌ட்டுவிட்டாலே... க‌தைக்கு தோல்விதான்....

    மனைவியின் செயல் சங்கடத்தின் உச்சம்... ஏன் இப்படியொரு சம்பவம் நடந்துத் தொலைக்க வேண்டும்?? என்று யோசித்தால் உங்குத்தமா எங்குத்தமா என்ற பாடல்தான் ஒலிக்கும்......

    தியாகத்துக்கு விளம்பரம் தேவையில்லை.... துரோகத்துக்குக் காரணங்கள் தேவையில்லை....

    Life is quite easy untill we ourselves make it complicated.... இதுதான் வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் என் நம்பிக்கை

    இது எம்ப‌ராஸ்ஸிங்கான ஒரு பரிமாணம்.... நான் சொன்ன‌வித‌ம் விஷயத்தை ச‌ரியாக‌ கன்வே செய்ய‌வில்லை என்று புரிந்துகொள்கிறேன்....

    ReplyDelete
  17. @ ப‌ய‌ண‌ங்க‌ளும் எண்ண‌ங்க‌ளும்

    ஸாரி... நீங்க‌ க‌மெண்ட் டெலிட் ப‌ண்ண‌தைப் பார்க்க‌வில்லை...
    ப‌தில் சொல்லிவிட்டேன்!!

    ReplyDelete
  18. மனைவியின் செயல் சங்கடத்தின் உச்சம்... ஏன் இப்படியொரு சம்பவம் நடந்துத் தொலைக்க வேண்டும்?? என்று யோசித்தால் உங்குத்தமா எங்குத்தமா என்ற பாடல்தான் ஒலிக்கும்......

    தியாகத்துக்கு விளம்பரம் தேவையில்லை.... துரோகத்துக்குக் காரணங்கள் தேவையில்லை....

    Life is quite easy untill we ourselves make it complicated.... இதுதான் வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் என் நம்பிக்கை

    இது எம்ப‌ராஸ்ஸிங்கான ஒரு பரிமாணம்..//


    Quite good explanation..

    ரொம்ப அழகா , ஆழமா சிந்திச்சிருக்கீங்க.?

    உங்க வயது என்ன னு அறிய ஆவல் இப்ப..

    ( Just Kidding )

    சிக்கலான விஷயத்தின் மறுபக்கத்தை புரிதலோடு விளக்கியதுக்கு சபாஷ்.

    ReplyDelete
  19. Nice to read.
    Very well driven towards conclusion.A different plot and a knot.
    Gd prabhu sir💐💐💐keep gng .

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)