Monday, November 15, 2010

Very Very Special ல‌க்ஷ்ம‌ண்!!

V VS ல‌க்ஷ்ம‌ண்...

இந்திய‌ டெஸ்ட் அணியின் ஆல்டைம் ஆப‌த்பாந்த‌வான்!

இந்த செகண்ட் இன்னிங்ஸ் சூப்பர்ஸ்டாரை Very Very Special ல‌க்ஷ்ம‌ண் என்று தோணி** செல்லப்பெயரால் அழைக்க,அன்றைக்கு அதற்கு சற்றுமுன்னர் டெய்லெண்ட‌ர்க‌ளுட‌ன் இணைந்து கடைசி த‌ருண‌த்தில் ஆஸ்திரேலியாவுடன் இவர் ஆடிக்காட்டிய ஆடுபுலியாட்ட‌த்தைக் க‌ண்டுக‌ளித்த‌ ஆடுக‌ள‌மே அதிர்ந்த‌து!!

ஹ‌ர்ப‌ஜ‌ன்... இஷாந்த் ஷ‌ர்மா... என்று யாருட‌ன் வேண்டுமானாலும் பார்ட்ன‌ர்ஷிப் போட்டு அசத்தும் இந்த ஹைத‌ராபாத் ஹீரோவின் துர‌திர்ஷ்ட‌ம் என்ன‌வென்றால் இவ‌ர் ஓய்வை அறிவித்த‌ கொஞ்ச‌நாளிலேயே கிரிக்கெட் உல‌க‌ம் இவ‌ரை ம‌ற‌ந்துவிடும் என்ப‌துதான்!!

காரணம் கிரிக்கெட் இப்போதெல்லாம் வெறும் நம்பர் கேம் ஆகிவிட்டது.....
அந்த வகையில் பார்க்கும்போது இந்த ஒரிஜினல் மேட்ச் ஸேவரிடம் நல்ல நம்பர்கள் இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்!

ல‌க்ஷ்ம‌ணின் கிரிக்கெட் வாழ்க்கைப் பல ஏற்ற இறக்கங்கள் கொண்ட‌து...

தொண்ணூறுக‌ளின் ம‌த்தியில் ஐசிசி கிரிக்கெட்டை ஓர் ஒட்டுமொத்த கமர்ஷியல் பேக்கேஜாக உருவாக்க மட்டைவீச்சின் மந்தமுகத்தை மாற்ற சில விருவிருப்பான ஐயிட்டங்களை உள்ளிறக்கத் துவங்கியது.... ஃபீல்டிங்கில் கட்டுப்பாடுகள்.... ஆடுகளத்தில் பேட்டிங்கிற்கு ஏதுவான சில திருத்தங்கள் என்று மாறிய போக்கில்.. இந்தியா போன்ற பிரிட்டிஷாரின் பழக்கத்தில் கற்றுக்கொண்ட க்ளாஸிக்கல் விஷயங்களை லேசில் மாற்றிக்கொள்ளாத‌ நாடுகள் கிரிக்கெட்டில் தங்கள் நிலையைக் காத்துக்கொள்ளத் தடுமாறின... காரணம்... பிரிட்டிஷார்கள் சொல்லிக்கொடுத்த டிரெடிஷனல் கிரிக்கெட்...'வலுக்கவனமாய்ப் பந்துகளைத் தரம்பிரித்து பவுலர் வீசும் ஒரு தவறான பந்தைத் துல்லியமான டைமிங்கும், சரியான ஷார்ட் செலக்ஷனுமாய்க் கணித்து, ஃபீல்டர்களுக்கு இடையே பந்தைப் புகுத்தி பவுண்டரிக்கு விரட்டினால் பர்கரையும் ஷாம்பெய்னையும் ருசித்துக்கொண்டிருக்கும் ஆடியன்ஸ் பதினைந்துபேர் "குட் கிரிக்கெட்டிங் ஷாட்!!" என்று கைதட்டுவார்கள்' என்பதாகும்!!

இங்கிலீஷ்கார‌ன் கொடுத்துட்டுப்போன‌க் க‌ல்விமுறையையே இன்றும் மாற்றிக்கொள்ளாத நம் இந்தியா... அவன் சொல்லிக்கொடுத்த‌ கிரிக்கெட் ஸ்ட்ராஜியையா மாற்றியிருந்திருக்கப் போகிற‌து!! அன்றைய‌ தேதியில் ஒட்டுமொத்த‌ இந்திய‌க் கிரிக்கெட் வ‌ர‌லாற்றிலேயே அதிர‌டியான‌ பேட்ஸ்மேன்கள் என்று கணக்கிட்டால் க‌பில்தேவ், ஸ்ரீகாந்த் ம‌ற்றும் ச‌ச்சின் டெண்டுல்க‌ர் ம‌ட்டும்தான்!!

அதே தொண்ணூறுக‌ளின் ம‌த்தியில் ர‌ஞ்சி டிராஃபி, துலீப் டிராஃபிக‌ளில் போதுமான‌ அள‌வு சாதித்துவிட்டு இண்ட‌ர்நேஷ‌ன‌ல் ஜெர்சி அணிய‌ ரெடியாக‌க் காத்திருந்த‌ ஷ்யூர்ஷாட் கில்லிக‌ளில் ல‌க்ஷ்ம‌ணும் க்ளாஸிக்கல் ஸ்டைலில் ஒரு கைதேர்ந்த‌ டெக்னிக்க‌ல் பேட்டிங் எக்ஸ்ப‌ர்ட்....

ல‌க்ஷ்ம‌ணின் ஸ்டைலிஷ் பேட்டிங் ஆர‌ம்ப‌ம் முத‌லே "A pleasure to watch!!" என்று புக‌ழ‌ப்ப‌ட்ட‌போதிலும் அப்போது உடனடி மாற்றம் வேண்டிய இந்திய‌ அணியில் இம்மீடியெட் வேக்கன்ஸிகள் இருந்த‌து அதிர‌டியான‌ பேட்ஸ்மேன்க‌ளுக்குத்தான்.... ஏற்கென‌வே டிராவிட் நிலைத்துஆடும் ஒரு வ‌லிமையான‌ விக்கெட்டாக அணியின் த‌விர்க்கமுடியாத‌ பேட்ஸ்மேனாகியிருக்க‌... அணியின் டெஸ்ட் டீமில் காலியாயிருந்த‌ ஒரே ஸ்லாட்டான‌ ஓப‌னிங் பேட்ஸ்மேனாக‌ சித்துவுட‌னும், ச‌ட‌கோப‌ன் ர‌மேஷுட‌னும் மாற்றி மாற்றிக் க‌ள‌மிற‌க்க‌ப்ப‌ட்டார் ல‌க்ஷ்ம‌ண்....
சிற‌ந்த‌ மிடிலார்ட‌ர் பேட்ஸ்மேனான‌ ல‌க்ஷ்ம‌ண் ஓப‌னிங் பேட்ஸ்மேனாக‌க் க‌ள‌மிற‌ங்க‌ அசௌக‌ரிய‌ப்ப‌ட்டு மீண்டும் ர‌ஞ்சிக்கே போய்விட்டிருந்தார்!

திடீரென‌ மீண்டும் வாய்ப்புக் கிடைத்து ஒரு தென்னாப்பிரிக்க‌த் தொட‌ரில் மிடில் ஆர்ட‌ரில்... அதில் சுமாராக செயல்பட்டு அடுத்த‌ ஆஸ்திரேலிய‌த் தொட‌ரில் த‌ன‌து பெர்த்தைக் க‌ன்ஃபார்ம் செய்துகொண்டார்...! ஆஸ்திரேலியத் தொட‌ரில் ஈட‌ன் கார்ட‌னில் ஃபாலோஆன் வாங்கித்தொட‌ர்ந்த‌ இர‌ண்டாவ‌து இன்னிங்ஸில் டிராவிடுடன் இணைந்து லக்ஷ்மண் நிக‌ழ்த்திக்காட்டியதோ வ‌ர‌லாறு!! 281 ர‌ன்க‌ள் எடுத்து அவுட் ஆன‌ ல‌க்ஷ்ம‌ண் இன்றுவ‌ரை நாட் அவுட்டாக‌வே தொட‌ர்கிறார் இர‌ண்டாவ‌து இன்னிங்ஸின் இதிகாச‌ நாய‌க‌னாக‌!

நூறு டெஸ்ட் போட்டிக‌ளுக்கும் மேல் இதுவ‌ரை விளையாடியுள்ள‌ ல‌க்ஷ்ம‌ண் ஏழாயிர‌த்து சொச்ச‌ம் ர‌ன்க‌ள் எடுத்துள்ளார்... முப்ப‌த்துஆறு வ‌ய‌தாகிவிட்ட‌ இந்த‌ சின்சிய‌ரான‌ சீனிய‌ர் இனிமேல் ப‌த்தாயிர‌ம் ர‌ன்க‌ளைக் க‌ட‌ப்ப‌து க‌டின‌ம்... உல‌கில் யாரையும்விட‌ அதிக‌மாக‌ ப‌தினான்காயிர‌த்தையும் தாண்டிப் ப‌ற‌ந்து கொண்டிருக்கும் ச‌ச்சினுட‌ன் ல‌க்ஷ்ம‌ணை ஒப்பிட்டுப் பேசுவ‌தை ச‌ச்சின் ர‌சிகர்க‌ள் ம‌ட்டுமின்றி (என்னையும் சேர்த்து!) கிரிக்கெட் ர‌சிக‌ர்க‌ளும் ஏற்றுக்கொள்ள‌ மாட்டார்க‌ள்... ப‌தினோராயிர‌ம் தொட்டுவிட்ட‌ ராகுல்டிராவிட் ஏற்கென‌வே "கிரேட் வால் ஆஃப் இந்தியா" என்று பேர் வாங்கிவிட்டார்.... ல‌க்ஷ்ம‌ணின் 281 ர‌ன் ரெக்கார்டை இர‌ண்டுமுறை அனாய‌ச‌மாக‌ முந்நூறு ர‌ன்க‌ளுக்கும் மேலாக‌ ர‌ன்க‌ள் குவித்து சேவாக்கும் த‌ன் ப‌ங்குக்கு எக்லிப்ஸ் செய்து விட்டார்! ஆக... இப்போது ஆஹா ஓஹோ என்று புக‌ழ‌ப்ப‌ட்டாலும் "ல‌க்ஷ்மண்-னு ஒருத்த‌ன் இருந்தாம்பா!!" என்றெல்லாம் டீக்க‌டைக‌ளில் ம‌ட்டுமே நினைவுகொள்ள‌ப்ப‌டுவார் இந்த‌ மேட்ச் வின்ன‌ர்! "மேட்ச் வின்னிங் கெப்பாஸிட்டி"யை ம‌ட்டும் க‌ருத்தில் கொண்டு ஒப்பீடு செய்து பார்த்தால் மேற்க‌ண்ட‌ ஜாம்ப‌வான்க‌ளையெல்லாம்விட‌ இந்த‌ டெக்கான் சார்ஜ‌ர், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரொம்பவே கன்ஸிஸ்டென்ட் என்ப‌து என் க‌ருத்து...

கிரிக்கெட், சினிமா, அர‌சிய‌ல் என்று எங்கெங்கு காணினும் இப்போது வெறும் ந‌ம்ப‌ர்களின் ராஜ்ஜியம்தான்...
நிக‌ழ்கால‌த்தைக் க‌ட‌ந்த‌கால‌ நிக‌ழ்வுக‌ளுட‌ன் ஒப்பிட‌ ந‌ம்ப‌ர்க‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்துவதும்...
க‌ட‌ந்த‌கால‌ ந‌ம்ப‌ர்க‌ளை வைத்து எதிர்கால‌ நிக‌ழ்வுக‌ளைக் க‌ணிப்ப‌தும்... மீடியாக்க‌ளின் மாறாத‌ அணுகுமுறையாகத் (இரண்டுமே கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அபத்தங்கள்தான்!) தொட‌ர்ந்து வ‌ருகிற‌து.... செய்திப் ப‌ர‌ப‌ர‌ப்புக‌ள் பழகிப்போன பொழுதுபோக்குகளாகிவிட்ட நிலையில்...
எண்ண‌ற்ற‌ ரேட்டிங்குக‌ளும், க‌ருத்துக் க‌ணிப்புக‌ளுமாய் இந்த‌ ந‌ம்ப‌ர் கேம்க‌ள் போட்டுக் குழ‌ப்பினாலும் இவை அத்தனை மீடியாவிலும் ரொம்ப‌வே ஹாட் பிசின‌ஸ்!!!

த‌னிம‌னித‌ப் ப‌ங்க‌ளிப்பில் 'எத்த‌னை ஆட்ட‌ங்க‌ளைக் காத்திருக்கிறார்?' 'எத்த‌னை ஆட்ட‌ங்க‌ளை வென்றுகொடுத்திருக்கிறார்?' போன்ற‌ விஷ‌ய‌ங்க‌ள் ப்ரைம் அட்டென்ஷ‌னில் வ‌ராதவ‌ரைக்கும் ர‌ன் இல‌க்க‌ங்க‌ளும் அத‌ன் பின்ன‌ணியில் பரிசு மற்றும் பெட்டிங் தொகையின் இல‌க்க‌ங்க‌ளும் அடித்து ஏறிக்கொண்டேதான் போகும்...

ல‌க்ஷ்ம‌ண்.... இங்கும் ராம‌ர், ப‌ர‌த‌ர்க‌ளுக்குப் பிறகுதான் எண்ண‌ப் ப‌டுவார் :)

அன்புட‌ன்,
பிர‌பு எம்

** அன்றைய‌ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான‌ போட்டியில் தோணி அவ்வாறு அழைத்திருந்தாலும், VVS ல‌க்ஷ்ம‌ணை முத‌ன்முத‌லில் Very Very Special ல‌க்ஷ்ம‌ண் என்று பெய‌ர் கொடுத்த‌வ‌ர் இய‌ன் சேப்ப‌ல்!

9 comments:

  1. இந்த ஹைத‌ராபாத் ஹீரோவின் துர‌திர்ஷ்ட‌ம் என்ன‌வென்றால் இவ‌ர் ஓய்வை அறிவித்த‌ கொஞ்ச‌நாளிலேயே கிரிக்கெட் உல‌க‌ம் இவ‌ரை ம‌ற‌ந்துவிடும் என்ப‌துதான்!!/
    ம்ம்...இது முழுக்க உண்மை...நல்லா இருந்தது பிரபு இந்த கட்டுரை...ரொம்பவே அவரை ரசிச்சிருக்கிங்க...)))

    ReplyDelete
  2. அருமை!
    உண்மைதான்! லக்‌ஷ்மன் சிறந்த டெஸ்ட் மேட்ச் வின்னர்! ஆனால் தாங்கள் சொன்னது எண்கள் இல்லாததால் மறக்கப்படலாம்!

    ReplyDelete
  3. a very very special tribute to Laxman :)

    ReplyDelete
  4. அருமை நண்பா...நல்ல அலசல் தொகுப்பு..வாழ்த்துக்கள்...தொடருங்கள்..

    ReplyDelete
  5. நல்ல இடுகை, வாழ்த்துகள்

    ReplyDelete
  6. //நல்லா இருந்தது பிரபு இந்த கட்டுரை...ரொம்பவே அவரை ரசிச்சிருக்கிங்க...))) //

    ரொம்ப நன்றிங்க :)

    ReplyDelete
  7. நன்றி எஸ்.கே... உண்மை:)

    ReplyDelete
  8. அருமை ந‌ண்பர் ஹ‌ரிஸுக்கு ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள் :)

    ந‌ன்றி பால‌குமார் சார் :)

    ReplyDelete
  9. Thank you SO much Prasanna :)

    ReplyDelete

வருகைக்கும் வாசிப்புக்கும் ரொம்ப நன்றி... உங்க கருத்தையும் சொல்லலாமே.. :-)