சத்தம் தூக்கத்துக்கு எதிரி... அந்த சத்தத்தாலான இசையைக் கொண்டே மனங்களைத் தூங்கவைப்பது தாலாட்டென்றால் ஆராரோ ஆரீரரோக்கள் எத்தனை பெரிய அதிசியங்கள்!
கடலில் அலை இரைச்சல்தான்... ஆனாலும் தியாண அறையில் கிடைக்காததோர் அமைதி கடற்கரையில் கிடைக்கத்தானே செய்கிறது!!
சத்தத்துக்குள்ளும் ஓர் அமைதியிருக்கிறது.... சிந்தையின் மேற்பரப்பை இசையால் போர்த்திக்கொள்ளத் துள்ளத் துள்ளத் தட்டிக்கொடுத்துத் தூங்கவைத்திடும் தாலாட்டு மெட்டுக்கள் அதிசியங்கள்!
சின்னவயதில் ஒருமுறை குழந்தையான என் தங்கையை, அம்மாவிடம் அடம்பிடித்து சான்ஸ் வாங்கி, நானே ஒரு பாட்டுப்பாடி தொட்டிலாட்டித் தூங்கவைத்திருக்கிறேன்! இடையில் அவள் தூங்குகிறாளா... தூங்குகிறாளா... என்று பார்த்துப் பார்த்து... இறுதியில் அவள் தூங்கிவிட்டவுடன் எதையோ வென்றுவிட்டதுதொரு உவகை வந்து தூங்கவெச்சுட்டேன் என்று நான் கத்திய கத்தில் அவள் விழித்து அழுக நான் அடி வாங்கிய ஞாபகம் இருக்கிறது!!
(எனக்கு அப்போ ஆறு வயசு!)
குழந்தைகளைத் தூங்க வைக்கத்தான் பெரும்பாலும் தாலாட்டு வகைப் பாடல்கள் பயன்பாடு பெறுகின்றன... ஆனால் யோசித்துப் பார்த்தால் கள்ளமற்ற மனங்களை உறங்கவைக்க தாலாட்டுதான் எதற்கு!
தவமிருந்து பெறும் வரம்போல் ஆகிவிடுகிறது தூக்கம் வாழ்வில் ஓரளவிற்குப்பின்!
"என்னைக் கொஞ்சம் உறங்கவைத்தால் வணங்குவேன் தாயே...
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே.. !!"
என்று "புதிய பறவை" சிவாஜி ரேஞ்சுக்கு உருகுகிற நார்மல் மனிதர்களே நம்மிடையே இருக்கும்போது.... படுத்தவுடன் தூங்கிவிடுபவர்கள் பாக்கியசாலிகளே!
"தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே.. அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே.." என்று ஒரு ஐடியல் சாங் இருக்கிறது... இருப்பினும் எனக்கென்னவோ பெண்குரல் தூங்கவைப்பதில்லை! ஸோ... என்னுடைய தாலாட்டும் ப்ளேலிஸ்டில் முழுக்க முழுக்க மேல்வாய்ஸ்தான்!!
இதோ என்னுடைய ப்ளேலிஸ்ட்:
1) பாடல்: "வெள்ளி நிலா முற்றத்திலே.."
படம்: வேட்டைக்காரன் ( எம்.ஜி.ஆரின் வேட்டைக்காரன்!!)
இசை: கே.வி மகாதேவன்
வரிகள்: கண்ணதாசன்
குரல்: டி.எம்.எஸ்
Link : http://www.raaga.com/player4/?id=232781&mode=100&rand=0.3481711788045632
சின்னக் குழந்தையா இருக்கும்போதே இந்தப் பாட்டைப் பாடினால் நான் தூங்கிவிடுவேன் என்று எங்கள் வீட்டில் சொல்லுவார்கள்.... இந்தப் பாட்டில் என்னைத் தூங்கவைப்பது... தமிழா?? குரலா?? இசையா?? என்று யோசிக்க ஆரம்பித்தாலே தூக்கம் வந்துவிடும்!!
"முக்கனியில் சாரெடுத்து...முத்தமிழில் தேனெடுத்து... முப்பாலிலே கலந்து.."
என்று ஒரு வரிவரும்...அது டி.எம்.எஸ் குரலில் இசையில் வழுக்கிக் காதில் விழுந்து கரைந்திடும் தமிழாக இனிக்கும்!!
2) பாடல்: "பிள்ளைக்குத் தந்தை ஒருவன்...."
படம்: பார்த்தால் பசி தீரும்
இசை: எம் எஸ் வி
வரிகள்: கண்ணதாசன்
குரல்: டி. எம். எஸ்
Link: http://www.raaga.com/player4/?id=124212&mode=100&rand=0.42749867011987935
இந்தப் பாடலை எனக்கு அறிமுகப்படுத்தியது என் அப்பா!
சாதாரணத்திலையும் சாதாரணமான பாட்டு இது...! :-)
இந்த வரிகளை சிந்திக்கத் தலையைக்குடையத் தேவையில்லை...
பாடலைப் பாடக் குரல்வளை நெறிக்கத் தேவையில்லை...
பின்னணியில் இசையே தேவையில்லை!!
கடவுள் பாட்டுப்பாடி சிவாஜி, குட்டிக் கமலைத் தூங்கவைக்கும் அழகே தாலாட்டும்...
"இல்லாத இடம்தேடி வருவான் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்"
என்று சிக்கனமான கச்சிதமான அரவணைக்கும் வரிகள் தரும் இன்ப அனுபவம் எனக்கு நிறைய தடவைக் கிடைத்திருக்கிறது!
3) பாடல்: "கண்ணே கலைமானே..."
படம்: மூன்றாம் பிறை
இசை: இளையராஜா
வரிகள்: கண்ணதாசன் (கவியரசரின் கடைசி பாடல்!)
குரல்: கே.ஜே யேசுதாஸ்
Link: http://www.youtube.com/watch?v=C5RCNJ2LJDs
சீணு, ஸ்ரீதேவியைத் தூங்கவைக்கும் காட்சிக் கவிதையிது!!
அவளிடம் காதலைச் சொன்னால் புரியவா போகிறது? இருந்தாலும் கமல், "காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்.." என்று காதல் சொல்லும் இரண்டாவது ஸ்டான்ஸா ஆரம்பிக்கும்போது சிந்தையில் குழந்தையான ஸ்ரீதேவி, கமலின் மடியில் விரலை சூப்பிக்கொண்டு முற்றிலுமாகத் தூங்கிப்போயிருப்பாள்!! அத்தனைக் கண்ணியமான கவிதையிது!
காதலின் தாய்மையைச் சொல்லும் தமிழை இளையராஜா இசையாலும் பாலுமகேந்திரா (வெறுமனே ஊட்டியின் மலைகளைப் படம்பிடித்து) ஒளியாலும், கமல் உணர்வாலும் மொழிபெயர்த்திருப்பார்கள்.... இந்தப் பாட்டைப் பிடிக்காதவர்கள் யாரும் உண்டோ!
"உனக்கே உயிரானேன்... எந்நாளும் எனை நீ மறவாதே!!" - தமிழகமே கண்கலங்கிய வரிகளல்லவா இவை..
4) பாடல்: "தேனே தென்பாண்டிமீனே..."
படம்: உதயகீதம்
இசை: இளையராஜா
வரிகள்: வாலி
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
Link: http://www.youtube.com/watch?v=wom6q1n-EnE
எஸ் பி பியின் குரலே ஒரு தாலாட்டுதானே!... இந்தப் பாடலைப் பொருளுணர்ந்து படித்தால் வாய் இனிக்கும்.. அத்தனை இனிமையான வார்த்தைகளால் நெய்திருப்பார் ஒரு தாயின் தாலாட்டைக் கவிஞர் வாலி...
"பால் கொடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே...
பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே..."
இது வளர்ந்த பிள்ளைத் தாயை நினைத்துப் பாடுவதாய் அமைந்ததுதான் கவிதை!! எஸ்.பி யின் குரலில் நனைந்துக் கோடையிலும் குளிரெடுத்துத் தூங்கியிருக்கிறேன் இந்தப் பாடலுக்கு!
5) பாடல்: "கொல்லையில தென்னை வைத்து"
படம்: காதலன்
இசை: ஏ ஆர் ரகுமான்
வரிகள்: வைரமுத்து
குரல்: ஜெயச்சந்திரன்
Link: http://www.youtube.com/watch?v=m26AEN7lNEU
வைரமுத்துவின் நாலுவரியில் ஒரு தாலாட்டு...!
ரொம்பவே ரொமாண்டிக்கான காதல் தாலாட்டு இது... !!
அழகுத் தமிழில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி, வெறும் காதல் மட்டும் என்னிடத்தில் இருக்கு உனக்கே உனக்காக என்று சொல்லிக் காதலியை "அரண்மனைய விட்டுவந்த அல்லிராணி கண்ணுறங்கு" என்று செல்லமாய்த் தாலாட்டும் ரகுமானின் இசையில் wrap செய்த இனிப்புத் துண்டு இந்தக் குட்டிக் கவிதை.... காதல் சொல்லி உறங்கவைக்கும் விடியும்வரை நிம்மதியாய்!!
இந்த ப்ளேலிஸ்டை இதுவரை ஒருநாள் கூட முழுதாய் நான் கேட்டதில்லை என்பதுதான் நிஜம்... அதற்குள் தூங்கிவிடுவேன்!! :)
உழைப்பவன் மனதுக்குக் கட்டாய ஓய்வுதரும் தூக்கம் ஓர் அழகியசாபம்..!!
அன்றன்றைக்கு உண்டதை அன்றே எரித்துவிட்டு...
அன்றன்று நடந்ததை அப்போதே மறந்துவிட்டு...
தினம் தினம் புதிதாய்ப் பிறந்திட ஓர் இசையோ, வரியோ, குரலோ இரவில் உதவட்டுமே!
உங்களைத் தூங்கவைக்கும் கானங்களையும் பகிர்ந்துகொள்ளுங்களேன்....
நிம்மதியாய்த் தூங்கிவிழிப்போம்...
பதிவுலகுக்குக் குட் நைட்!! :-)
அன்புடன்,
பிரபு எம்

உழைப்பவன் மனதுக்குக் கட்டாய ஓய்வுதரும் தூக்கம் ஓர் அழகியசாபம்..!!
ReplyDeleteஅன்றன்றைக்கு உண்டதை அன்றே எரித்துவிட்டு...
அன்றன்று நடந்ததை அப்போதே மறந்துவிட்டு...
தினம் தினம் புதிதாய்ப் பிறந்திட ஓர் இசையோ, வரியோ, குரலோ இரவில் உதவட்டுமே!
......
இந்த வரிகள், நல்ல கருத்துக்களுடன் அருமையாக வந்து இருக்கின்றன. இப்படி இருக்க முடிந்தால், அது ஒரு வரமே!
உங்கள் தாலாட்டு பாடல்கள் அனைத்தும் நல்ல தேர்வுகள்.
ரொம்ப நன்றி சித்ரா அக்கா :)
ReplyDeleteஅனைத்தும் அருமையான தேர்வுகள் ..
ReplyDeleteரொம்ப நன்றிங்க :)
ReplyDeleteமூணு பாட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சது பிரபு..
ReplyDelete1) கண்ணே கலைமானே
2) தேனே தென்பாண்டி
3) கொல்லையில (ஜெயச்சந்திரன்.. சான்சே இல்ல)
மத்த ரெண்டும் கேட்டது இல்ல..கேக்குறேன்.. பகிர்வுக்கு நன்றி..
பாடல்: "தேனே தென்பாண்டிமீனே..."
ReplyDeleteபடம்: உதயகீதம்
இசை: இளையராஜா
வரிகள்: வாலி
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்//
எனக்கு பிடிச்சது
ஓட்டு போட்டாச்சிங்கண்ணா
ReplyDelete@ கார்த்திகை பாண்டியன்
ReplyDeleteவணக்கம் நண்பா :)
ரொம்ப நன்றி...
முதல் பாட்டு கேளுங்க ரெண்டாவது பாட்டு பாருங்க!!
உங்களுக்கும் பிடிக்கும்னு நம்புறேன்
@ சதீஷ்
ReplyDeleteரொம்ப நன்றி நண்பா...
//ஓட்டு போட்டாச்சிங்கண்ணா//
டபுள் நன்றி!! :)
//சத்தத்துக்குள்ளும் ஓர் அமைதியிருக்கிறது.... சிந்தையின் மேற்பரப்பை இசையால் போர்த்திக்கொள்ளத் துள்ளத் துள்ளத் தட்டிக்கொடுத்துத் தூங்கவைத்திடும் தாலாட்டு மெட்டுக்கள் அதிசியங்கள்!//
ReplyDeleteSuper
ரொம்ப நன்றி அன்பரசன் :)
ReplyDeleteஹையோ பிரபு.. எனக்கு தூக்கம் வருது.. :))
ReplyDeleteசரி ஃபுட் அலர்ஜி சரி ஆகிருச்சா.
ரொம்ப நன்றி அக்கா :-) :-)
ReplyDeleteசரியாகிடுச்சுக்கா தீபாவளியை ஹாஸ்பிடல்ல கொண்டாட வேண்டியதா போச்சு!! :)
இப்போ Perfectly alright..
Back to form :)
நல்லா marketing பண்ணுவீங்க போல இருக்கே...
ReplyDelete:)
nice collection.
my fav. is the second one.
நன்றி நண்பா...
ReplyDeleteஇது ஜஸ்ட் "யாம் பெற்ற இன்பம்...." வகையைச் சார்ந்தது!!
பிரபு...ரொம்பக் கோவம் வருது.பாட்டுத்தந்தா லிங்கும் தரவேணாமோ !
ReplyDeleteஇசைத்தரப்பி என்கிற வைத்திய முறையே இருக்குத்தானே.இசைபோல மனதைப் பக்குவப் படுத்தவும் அமைதிப்படுத்தவும் யாரலும் முடியாது.ஏன் காதலன் காதலியால்கூட !
T.M.S ன் பாடல்கள் அருமை.ஆனால் எல்லாமே நல்லாத்தானிருக்கு.நீங்க சொன்ன அப்புறம்தான் யோசிக்கிறேன்.பெண்குரலில் தாலாட்டுப் பாடல் இல்லையா !
T.M.S "எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில் பறக்கிறதா" இரவில் கேட்டுப் பாருங்களேன் ஒருதரம் !
தப்புதான் அக்கா :) லிங்க் தந்திருக்கணும்...!!
ReplyDelete"பிள்ளைக்குத் தந்தை ஒருவன்" யூ டியூபில் கிடைக்கவில்லை...
கண்டிப்பா முயற்சி பண்ணுறேன் லிங்க் தருவதற்கு :)
"எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா...." யெஸ் அக்கா இதுவும் தூங்கவைக்கவே வடித்த பாடல்.... டிஎம்எஸ் நாவைக் குழைத்து மயங்க வைத்திருப்பார்... ரொம்ப நன்றி இந்தப் பாடலைப் பகிர்ந்தமைக்கு என் ப்ளேலிஸ்டில் இன்னொரு அருமையான பாட்டு இணைந்திருக்கிறது :)
நன்றி அக்கா :)
பாடல்களுக்கு லிங்க் கொடுத்துவிட்டேன்.. :)
ReplyDeleteநன்றி பிரபு.பாடல்களை உடனுக்குடன் கேட்பது ஒரு சந்தோஷம்தானே !
ReplyDeleteஉண்மை அக்கா :)
ReplyDeleteஉங்களுக்குக் கோபம் வந்த வேகத்தில்தான் உடனே லிங்க்ஸைத் தேடி இங்கே பதிந்தேன் :)
மகிழ்ச்சியும் நன்றியும்.. :)
//5) பாடல்: "கொல்லையில தென்னை வைத்து"
ReplyDeleteபடம்: காதலன்
இசை: ஏ ஆர் ரகுமான்
வரிகள்: வைரமுத்து
குரல்: ஜெயச்சந்திரன்//
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று. பலருக்கு காதலன் படத்தில் இப்படி ஒரு பாடல் இருப்பதே தெரியாது
--
காதல் தேசத்தில் உள்ள “தென்றலே.. மெல்லவே தூங்கு” பாடலையும் கேட்டுப்பாருங்கள்
--
//
வைரமுத்துவின் நாலுவரியில் ஒரு தாலாட்டு...!//
வைரமுத்துவின் வைரங்களில் இதுவும் ஒன்று
ரொம்ப நன்றி புருனோ சார்..
ReplyDelete//காதல் தேசத்தில் உள்ள “தென்றலே.. மெல்லவே தூங்கு” பாடலையும் கேட்டுப்பாருங்கள்//
சந்தேகமின்றி அற்புதமான தாலாட்டு இந்தப்பாடல்.... அடிக்கடி இந்தப் பாடலை ரசித்துக்கேட்பதுண்டு...
இந்த லிஸ்டில் குறிப்பிடாததன் காரணம்... எனக்குக் "கொல்லையிலே தென்னைவைத்து" இன்னும் சிறப்பாகப் பிடிக்குமென்பதுதான்!! :)
இளையராஜாவின் "பச்சமல பூவு"ம் ஓர் அற்புத கானம்... ஆர் வி உதயகுமாரின் வரிகளாம் அவை... நான் வைரமுத்துவோ வாலியோ என்றுதான் நினைத்திருந்தேன் அந்த வரிகளை....
அது என்ன பெண் குரல் தாலாட்டுக்களில் தூக்கம் வரல ??காரணம் தேவை..:))) முதல் பாட்டு எனக்கு தெரில..ஆனால் 80 s ஹிட்ஸ் இல் நிறையவே (அதுவும் இளையராஜா இசையில்) மெல்லிசை பாடல்கள் நம்மை சொக்கி உறங்கவைக்கும்...ப்ருனோ சார் சொன்ன பாட்டும் நல்ல சாய்ஸ்...
ReplyDeleteஅதானே பார்த்தேன் என்னடா இந்த வரியை எல்லாரும் இவ்ளோ ஈசியா விட்டுட்டாங்களேன்னு யோசிச்சேன்!!:)))
ReplyDeleteபெண்குரலின் இயல்பே இனிமைதான்... என்னவோ தெரியவில்லை பெண்குரல் பாடல்களுக்கு எனக்குத் தூக்கம் வருவதில்லை... என்னை விடுங்க.. ஹேமா அக்கா சொன்னபின்தான் நானே யோசிச்சேன்... பெண்குரலில் தாலாட்டுக்களே ரொம்ப கம்மிதான்.... நான் சொக்கி ரசிக்கும் பெண்குரல் மெலடிமெட்டுக்கள்...
* தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே.... (ஆலயமணி)
* தண்ணிலவு தேனிறைக்க.... (படித்தால் மட்டும் போதுமா)
* பார்த்த ஞாபகம் இல்லையோ.. (புதிய பறவை)
அப்படியே சித்ரா... சுவர்ணலதா என்று நீண்டுகொண்டே போகிறது இந்த ப்ளேலிஸ்ட்டும்!
(நான் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாம் என் அம்மாவின் ஃபேவரைட்ஸில் இருந்து சுட்டது... எனக்கும் இந்தப் பாடல்கள் பிடித்துப்போனதின் காரணம் எங்கம்மா என்னைத் தூங்கவைக்கச் சின்ன வயதில் இந்தப் பாடல்களைத்தான் பாடுவார்கள் நானும் அசந்து தூங்குவேன் ஸோ ஆனந்தி மேடம் நான் பெண்குரல் கேட்டும் தூங்கியிருக்கிறேன்!!... ) :)))
சார், எஸ் பி பி குரலில் ராஜா இசை அமைத்து எண்பதுகளில் வெளிவந்த பாடல்கள் பால் உங்களில் நன்றாக தாலாட்டும்
ReplyDeleteஉண்மைதான் நண்பா... மெல்லிசை மன்னரின் பாடல்களும் மனம் வருடித் தாலாட்டும்....
ReplyDeleteதாலாட்டுதே வானம்... தள்ளாடுதே பூமி...
ReplyDeleteநல்ல தெரிவுகள்.. லிஸ்ட் இன்னும் பெரிதாய் இருக்க வேண்டும்... ;-)
நன்றி RVS..
ReplyDeleteஇன்னும் பெருசாவா!! :))
புரியுது ;)
அருமையான தேர்வுகள்!
ReplyDeleteஇதில் எனக்கு மிகவும் பிடித்த அடிக்கடி ரசித்து கேட்கும் பாடல் மூன்றாவதாக இருப்பது.
ரொம்ப நன்றி அக்கா :)
ReplyDelete